தினம் தினம் 21
Thinam21

21 தினம் தினம்!!
எந்த பஸ் அந்த ஸ்டாப்புக்கு போகும்னு தெரியல, யார் கிட்டயாவது கேட்டு வீடு போய் சேர வேண்டியது தான் லதா ....
அண்ணன் கிட்ட போன் போட்டு கேட்க வேண்டியது தானே அஞ்சு
"எதுக்கு ரோட்ல போற எருமை மாட்டை நானே இழுத்து கொண்டு வந்து முன்னாடி விட்டு , முட்டு முட்டுன்னு முட்டு வாங்குறதுக்கா ...
"அண்ணே நல்லா தான் பேசுதுன்னு மதியம் தான் சொல்லிக்கிட்டு இருந்த , இந்த கோமா பேஷண்ட் ஃபோன் எல்லாம் போடுதுன்னு கிண்டல் வேற பண்ணின "
"அது வேற வாய் ,அவருக்கா மூட் வந்தா பேசுவாங்க அவங்களுக்கு மூடு வரலன்னா நம்மள திட்டுவாங்க பங்குச்சந்தை கூட எந்த லெவல்ல போகும்னு ஒரு கணிப்பு கொடுத்துடலாம் ... ஆனா, இந்த புருஷன் எப்போ எந்த பக்கம் சாடுவான்னே தெரியாது.. ரோட்டுல போற எருமை மாடு போல வலது பக்கம் திரும்புவான்னு நினைச்சா, இடது பக்கம் திரும்பி ஆக்சிடென்ட் ஆகி விட்ருவாங்க ... சோ அவரா வந்து பேசினா பேசிக்கணும் பேசலையா, கம்முனு இருந்துக்கணும்... அது நமக்கும் நல்லது நம்ம மனநிலைக்கு நல்லது
"அப்போ அண்ணன் இப்போ செம மூடுல இருக்காரு போல இருக்கே அஞ்சு
"ஏன் அப்படி சொல்ற ??
"அங்க பாரு "என்று லதா அஞ்சலி முகத்தை திருப்பி காட்ட பைக்கின் மீது உட்கார்ந்து அவளுக்காக சத்யா காத்துக்கொண்டிருந்தான்... மணி நாலரை தான் ஆகியிருந்தது ,
"என்னடி அதிசயமா இருக்கு இது உங்க அண்ணன் தானா
"தெரியலையே உன் புருஷனை நீ தான் அடையாளம் கண்டுபிடிக்கணும் ...
"எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்காரு, ஒரு நிமிஷம் இரு லதா அவர்கிட்ட பேசிட்டு வந்துடுறேன்" என்று வேலை முடித்து வெளியே வந்த அஞ்சலி கணவன் நோக்கி ஓட .... குழந்தைகள் நடுவே குழந்தை போல தன்னை நோக்கி ஓடி வந்த அஞ்சலியை கண்ட சத்யா சட்டென பைக் கண்ணாடியில் முகத்தை பார்த்தான்.. கலைந்த முடியை கோதி சரிசெய்து புதிய காதலன் அவதாரம் எடுத்தான் ..
அஞ்சு மணிக்கு தான் ஸ்கூல் முடியும்னு சொன்ன நாலரைக்கு வெளிய வந்துட்ட ??என்று தன் முன்னால் ஓடி வந்து நின்ற மனைவியை பார்த்ததும் பைக்கை கிக் செய்ய
"இல்ல பஸ் புடிச்சு வீடு வந்து சேர அரை மணி நேரம் ஆகும் அதையும் கணக்கு வச்சு சொன்னேன்..
என்ன கூப்பிடவா வந்தீங்க ... அதிசயமாக தன் கணவன் முகத்தை பார்த்தாள்
"ஏறவா வேண்டாமா? உன்னை எவன் கூப்பிட வந்தான்னு சொன்னா பல்பு வாங்க வேண்டியது இருக்கும் , அவனா சொன்னா எறிப்போம்.. தன் சொந்த வீட்டுக்காரர் தான், ஆனால் பல சமயம் அடுத்த வீட்டுக்காரன் போலவே அந்தியமாக செய்வான்....
"புது தெரு புது வீடு சரியா பஸ் புடிச்சு வீடு வந்து சேர்ந்திடுவியான்னு தெரியாதுல்ல அதான் வீட்ல சும்மா தானே இருந்தேன்... கூட்டிட்டு போகலாம்னு வந்தேன் பசங்க என்று அவன் கேள்வியாக மனைவியை திரும்பி பார்க்க
"ஆட்டோ சொல்லிட்டேன் , டியூஷன் முடிஞ்சதும் ஆட்டோ கொண்டு வந்து வீட்டில விட்டுரும்.
"ஓஓஓ நீயும் அந்த ஆட்டோலையே வந்து இருக்கலாமே அஞ்சு
"பிள்ளைங்க சேர்ந்து வந்தா காசு கம்மி, அதனால ஷேர் ஆட்டோவிலதான் பிள்ளைங்களுக்கு சொல்லி இருக்கேன் .. நானும் வந்தா எக்ஸ்ட்ரா 500 ரூபாய் ஆயிடும், அதுவே பஸ்ல வந்தா 500 ரூபாய் குறையுமில்ல...
"ஓஓஓஓ
நேர்த்தி அவளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்..
"உட்கார் பக்கத்தில் ஏதாவது கடையில் காபி குடிச்சிட்டு வீட்டுக்கு போலாம்
"ஏன் ஏதாவது செய்தா??? என்று அவன் நெத்தியை உடனே தொட்டு பார்க்கும் காதலுக்கு சொந்தக்காரியைதான் கொஞ்சம் கொஞ்சமாக வதைத்து அவள் வயதையும் தொலைக்க வைத்து விட்டான்..
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல உனக்கு பீரியட்ல, வீட்ல போய் காபி போட்டு குடிச்சு எதுக்கு , இங்க குடிச்சிட்டு போயிட்டா அங்க கொஞ்சம் போய் படுத்துக்கலாம் இல்ல...."
"எப்படி உங்களுக்கு தெரியும் ??தடுமாறி பார்த்தாள் ...
குப்பையில் கவர் கிடந்தது பார்த்தேன் உட்காரு தன்னை முதல் முதலாக கவனிக்கிறான்...
"அவன் காதலிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது ...அது குருகி, என்ன கவனிக்கயாவது செய்யேன் என்று நலிந்து போனது
தன்னை கவனித்து இருக்கிறான் என்ற நினைவே சக்கரை பொங்கலாக இனித்தது.. காலை போலவே கம்பி பிடுத்து ஏறப்போன மனைவியின் கையை பிடித்து தன் தோளில் வைத்துக் கொண்டவன்..
"இந்த ரோடும் சரி கிடையாது அஞ்சு , இனி நீ தோள்லேயே பிடிச்சுக்கோ என்று சத்யா கூற அவன் முகத்தை உத்துப் பார்த்தாள்
"என்ன என்று சத்யா தன் முகத்தை சாய்வாக திருப்பி அவளை பார்க்க
"இல்ல ரோடு நல்லா தான் இருக்கு,
"உன் புருஷனுக்கு வயசாகி போச்சு போல, சின்ன சின்ன பள்ளம் கூட கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது... எதுக்கு ரிஸ்க் தோளையே பிடிச்சுக்கோ என்று ஊமையாக சிரித்துக்கொண்டு பைக் ஸ்டார்ட் பண்ணினான்..
"ஆஹா என் புருஷன் லவ் பண்ண ட்ரை பண்றானோ! ச்சே நம்பி சந்தோஷப்படக்கூடாது.. நாலு நாள் ஆகட்டும் , அதுக்கு பிறகு தான் நிலவரம் தெரியும் என்று அவள் நினைத்தாலும் ... இந்த புதிய பேச்சு பார்வை எல்லாம் தான் இழந்ததை கூட மறக்க வைத்தது....
"என்னடி வேணும் ? குட்டி,ரெஸ்டாரண்டில் வந்து உட்கார்ந்தார்கள்
"எதாவது
"எதாவதா உனக்கு என்ன வேணும்னு கேட்டேன்
"அது அது" அஞ்சலி மிரண்டு முழித்தாள்..
"ப்ச், என்ன பிடிக்கும்னு தானடி கேட்டேன், அதுக்கு எதுக்கு தாய்லாந்து கொடி கலர் கேட்ட மாதிரி திருதிருன்னு முழிக்கிற..
"இல்ல என்ன பிடிக்கும்னு தான் யோசிக்கிறேன்... உங்களுக்கு பிடிச்சது எதாவது வாங்கிட்டு வந்துடுங்க..." பல வருட பழக்கம் இது, அடுத்தவர்கள் பிடித்தம் படி வாழ்ந்து பழகி விட்டாள்... தீடீரென அவள் பிடித்தம் கேட்கும் போது தடுமாறினாள்,.
"ப்ச் கூட வந்து பார் என்ன வேணும்னு சொல்லு வாங்கி தர்றேன்....
ம்ம் தலையாட்டி அவன் பின்னே நடந்தாள் ...
"இது நல்லா இருக்குமாங்க.. இது இது... " அவன் மகளை கடைக்கு அழைத்து போனால் , இப்படி தான் கையை நீட்டி அது இது என்பாள் ..இன்று மனைவியை பார்க்க அப்படியே தான் தெரிந்தது ..
தாயைப் போல மனைவி வேண்டும் என்று யோசிப்பவர்கள் வரும் பெண்ணுக்கு தகப்பனின் அரவணைப்பை கொடுக்க வேண்டும் என்று ஏனோ நினைக்கவே முடிவதில்லை...
"ப்ச் எதாவது ஒன்று சொல்லுடி....
"சுடச்சுட காப்பி அந்த சமோசா கிரின் சட்னி...
"போதுமா?
"ம்ம் உங்களுக்கு பிடிச்ச பருத்தி பால் வாங்கிக்கோங்க...
"இல்ல இதே எனக்கும் போதும், அண்ணன் ரெண்டு காப்பி ரெண்டு சமோசா" என்று அவளுக்கு பிடித்ததை அவனும் ஆர்டர் போட்டு விட்டு மேஜையில் அமர்ந்தான் .. அவசரமாக சூடோடு சூடாக காப்பியை உறிஞ்சிய அஞ்சலியை பார்த்தவன்
"ஏன் அவசரம் ..
"இல்ல லேட்டானா திட்டுவீங்களே"
"ப்ச் பொறுமையா குடி ... அங்க ஒன்னும் வெட்டி முறிக்கிற வேலை இல்லை .. "
"ம்ம் அனுபவித்து காப்பியை உறிஞ்சும் மனைவியை பார்த்தபடி அவனும் காப்பியை உறிஞ்ச தேனீர் இடைவெளியில் அருமை தெரிந்தது ....
தொண்டையில் தேனீர் இதமாக அஞ்சலிக்கு போனதோ இல்லையோ கணவன் அரவணைப்பு இதம் தந்தது ..
இப்படியே என் காலம் போயிடுமோ?? என்று அஞ்சி அஞ்சி வாழ்ந்த அவளுக்கு விடிவுகாலம் இப்போதாவது வந்ததே என்றுதான் பெருமூச்சு வந்தது ... லதா சொன்ன கடையை போய் இருவரும் பார்த்தனர் ... நல்ல இடத்தில் இருந்தது கொஞ்சம் உழைப்பை போட்டால் வருமானம் பார்க்கலாம் அவனுக்கு தெரியாத தொழில்தான், மனைவியே திரும்பி பார்த்தான்
என்னங்க ..
உனக்கு பிடிச்சு இருக்கா பாரு "
எனக்கா??
ம்ம் உனக்கு ஓகேவான்னு பாரு அட்வான்ஸ் கொடுத்து முடிச்சிடுவோம்
"எனக்கு என்னங்க தெரியும் நீங்க பார்த்து முடிங்க
"உனக்கும் பிடிச்சா செய்யலாம் இல்ல வேற பார்க்கலாம்....
"சார் என்ன சொல்றீங்க?? என்று லதா கணவன் சத்யாவை பார்க்க
"என் மனைவிக்கு பிடிச்சா அட்வான்ஸ் போட்டிரலாம் என்று சத்யா கூற இவள் தன் கையை கிள்ளி பார்த்து கொண்டு
"ஆவுச் வலிக்குது நான் கனவு காணல ...என்று அவள் முனங்க
நிஜம்தான் கனவு இல்லை ஓகேவான்னு சொல்லு என்று சத்யா அவள் அருகே குனிந்து கேட்க ..
"எனக்கு பிடிச்சு இருக்குது.. என்றவள் கையில் கட்டு பணத்தை வைத்த சத்யா
"நீயே அட்வான்ஸ் பணத்தை கொடு " அவள்தான் திகைத்து போய் புருசனை பார்த்தாள்
"என்னடி கொடு "என்று கிசுகிசுப்பாக கூற அவள் கையோடு தன் கையையும் வைத்து பணத்தை நீட்டினான்
உடலோடு பாதியாக பிணைவது தாம்பத்தியம் இல்லை
உயர்விலும் தாழ்விலும் பாதியாக பிணைந்து செல்வதே தாம்பத்திய பந்தம் என்று இன்று தெளிந்தான் ..
ஏதோ கனவில் வாழ்ந்த உணர்வு தான் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என புரியவில்லை... கொஞ்ச நேரம் தூங்கு பிறகு வேலை பார்த்துக்கலாம் நான் கதவை பூட்டிட்டு போய் கடைக்கு என்ன தேவைன்னு பார்த்துட்டு வர்றேன் ...அவள் அப்படியே அவனை பார்த்து கொண்டே நிற்க
என்னடி இஇஇஇஇஇ
ம்ஹூம்...
"சும்மா சொல்லு ... எப்படியும் மனுசுல எதாவது நெனைச்சு நாலு மானே தேனே போட்டிருப்பியே சொன்னா நானும் தெரிஞ்சுப்பேன்" என்ற கணவன் கேலி கிண்டல் புதிதோ புதிது ....
"அய்யய்ய, நான் அப்படி எல்லாம் பேச மாட்டேங்கே , புருசனுக்கு மதிப்பு கொடுக்கிறதுல எனக்கு ஆஸ்கார் குடுக்கலாம்" என்று திருதிருவென முழித்த மனைவி அழகை ரசிக்க தவறி விட்டான்
"அடியேய் நீ யாருன்னு ஆல் ட்டெயில் ஐ நோ ... சும்மா சொல்லு .."
"அது
"சும்மா சொல்லு அப்படி என்னதான் நினைச்சி இருக்கேன்னு பார்ப்போம்..
"புத்தருக்கு போதி மரத்துக்கு கீழ ஞானம் வந்துச்சு என் புருசனுக்கு எந்த புளியமரத்துக்கு கீழே உட்கார்ந்து ஞானம் வந்துச்சோ தெரிலயே செமையா பெர்பார்ம் பண்றார்னு
"மரியாதை கொடுத்து இருக்க மாட்டியே
"பண்றானேன்னு நினைச்சேன்...
"அவ்வளவு தான் நினைச்சியா
"ம்ம் அவ்வளவு தான்
"இல்லையேல் புதுசா தாலி கட்டி இருக்கான் புதுசா பஸ்ட் நைட் வாய்ப்பு இருக்கான்னு யோசிச்ச மாதிரி இருக்குதே என்றதும் அஞ்சலி வாயை பிளக்க
நினைச்சதான "
"இல்ல இல்ல...
"நீ நினைச்ச நினைக்கலன்னா இனி நினை.. ஆனா மனசுக்குள்ள பேச வேண்டாம் , இனி மனசு விட்டு என்கிட்டேயே பேசிக்கலாம் .... நான் கேட்கிறேன் என்று திரும்ப போன அவன் சட்டையை பின்னோடு இழுத்த அஞ்சலியை அவன் என்ன என்று திரும்பி பார்க்க ....
அம்மா தங்கச்சி வந்தா எங்கள மறுபடியும் ஏங்க விட்டிர மாட்டீங்களே... நீங்க தர்ற அன்பை வாங்க கூட பயமா இருக்குங்க... ஏன்னா எங்கள போல பொண்ணுக்கு அழுகை, கண்ணீர் நிரந்தரம்... ஆனா , அன்பு காதல் எல்லாம் எப்பவாவது கிடைக்கிறது... மறுபடியும் காத்து கிடக்க வைக்க மாட்டீங்களே என்றவள் கண்ணில் கண்ணீர் கொட்ட தயாராக அவள் தந்தை கட்டை விரலால் அவள் கண்ணீரை துடைத்து விட்டது போல அஞ்சலி கண்ணை தன் கட்டை விரல் கொண்டு துடைத்து விட்ட சத்யா
தினம் தினம் அனுபவிச்ச வலிக்கும்
சேர்த்து தினம் தினம் காதலை கொடுக்க மாட்டேன் பட், உன்ன புரிஞ்சிக்க ட்ரை பண்றேன் போகவா?
ம்ம் போயிட்டு வாங்க
அப்படியே அந்த பஸ்ட் நைட் சமாச்சாரம் என்னைக்கு வச்சிக்கலாம்னு யோசிச்சு வை , நைட் ரொம்ப நேரம் பேசலாம் தூங்கிடாத இப்ப தூங்கிடு .. அப்ப தான் நைட் தூக்கம் வராது என்றுவிட்டு போன கணவனை மறந்து எப்படி தூங்க?? ...
காதல் அலுப்பது இல்லை
காதலர்கள் மீது அலுப்பு உண்டாகிறது
நேசம் தேய்வது இல்ல
நேசம் வைத்தவர்கள் மீது பழைய நேசம் இருப்பது இல்லை
நேரம் இல்லாமல் இருப்பது இல்லை
நேரத்தை செலவிடும் இடத்தில் நம்மை வைப்பது இல்லை ...
நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை
வாழ்வதும் வாழாது போவதும் அவரவர் புரிந்து கொள்வதில் உள்ளது ..
வாழும் போது வாழ தெரியாதவன்
அவள் இறந்த பின்பு வெள்ளை மலர்கள் கொண்டு கல்லறையை அலங்கரித்தானாம்!!