தெள்ளழகே-3

தெள்ளழகே!-3
மோகன் தனது தங்கச்சி வீட்டு மொட்டை மாடியில் நல்ல தண்ணி அடிச்சுட்டு உருண்டு புரண்டு புலம்பிக் கொண்டிருந்தான்
அவனருகில் படுத்திருந்த அருணோ “ஐயோ! சுமி உங்கண்ணன் புலம்பல் தாங்கலைடி.என்னனு வந்துக்கேளு” என்று அவன் தனியாக பொண்டாட்டியிடம் புலம்பிக்கொண்டிருந்தான்.
“என்னடா பிரச்சனை?” என்று மேல வந்தவள் தனது அண்ணனைப் பார்த்ததும் கடுப்பாகிவிட்டாள்.
“இவன் ஒருத்தன் அம்மாவையும் சமாளிக்கத் தெரியாது.அந்த ராதாகிட்டயும் காதலைச்சொல்லி புரியவைக்கத் தெரியாதுன்னு உருண்டுட்டுக் கிடக்கான்.வாழ்க்கையில் என்னதான் செய்யப்போறானோ தெரியலை?”என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
“நீ எதுக்கு சுமி தலையில் அடிச்சுக்கிற நம்மை பெத்த மகராசி என் வாழ்க்கையில் நல்லா விளையாடிட்டா?நான் காதலைச் சொல்லிட்டேன்னு ராதாவே கோபத்துல இருந்தாள். இந்த ருக்குமணி வந்து மொத்தமாக எனக்கும் மித்ராவுக்கும் கல்யாணம்னு கவுத்துவிட்டுடுச்சு.என் காதல் போச்சு”என்று மீண்டும் பாட்டிலை எடுத்துக்குடித்தான்.
“அண்ணா இது ஓவரு.அம்மா ஏதாவது செய்தாங்கன்னா அது உன் நல்லதுக்காகத்தான் இருக்கும்.பேசாமல் அந்த ராதாவை மறந்துட்டு அம்மா சொல்லுற பொண்ணைக் கட்டிக்க” என்று சுமி தனது அண்ணனுக்கு நல்லது செய்கிறவன் என்று அட்வைஸ் செய்து கொண்டிருந்தாள்.
“யம்மா தாயே உங்கம்மா செய்தததுக்கு நன்றி.போதும் நல்ல தாயாக இருந்தால் அவளுக்கும் எனக்கும் கல்யாணத்தை பேசி முடிச்சிருப்பாங்க.அவங்க செய்கிற நல்லது எல்லாமே அவங்களுக்குத்தான் நல்லதாக இருக்கு எனக்கில்லை. உங்கம்மாகிட்ட சொல்லி புரியவை.இனி நான் அந்த வீட்டுக்குப்போகமாட்டேன்”என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.
சுமி நேரடியாக அவளது அம்மாவுக்கு போன் பண்ணினாள்”அம்மா என்னம்மா இப்படி பண்ணி வைச்சிருக்க அண்ணா இங்க வந்துக் குடிச்சிட்டுப் படுத்துக்கிடக்கிறான்.ஒரே புலம்பல் காது கொடுத்துக் கேட்கமுடியல நீ இங்கவந்து அவனை சமாதானப்படுத்து.இல்லையா அந்த ராதாவையே பொண்ணுக்கேட்டுக் கட்டிவை”என்று போனை வைத்துவிட்டாள்.
அதைக் கேட்ட ருக்குமணி உடனே கிளம்பி சுமி வீட்டிற்கு வந்தார்.
“எங்கடி அவன்?உங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் அவர் வேலையை வைச்சு உங்க இரண்டுபேரையும் கஷ்டப்பட்டு வளர்த்து படிக்கவைச்சதுக்கு ஒரு கல்யாணத்தை முடிவு பண்ணக்கூட எனக்கு உரிமை இல்லையா என்ன?அந்தப்பொண்ணு வேண்டாம் அவ்வளவுதான்னு சொன்னா இங்கவந்துக் குடிச்சிட்டு ஆட்டம் போடுறானா? அவன் குடிச்சிட்டு புலம்பினாலும் சரி,என்ன பண்ணாலும் சரி, எங்க போய் விழுந்து கிடந்தாலும் சரி நான் என்ன முடிவு எடுக்கிறேனோ அதுதான் சரி. அதைத்தான் கேட்கணும்” என்று கோபத்தில் மேலே வந்தவர் தண்ணி எடுத்து மோகன் மீது கட கட என்று ஊற்றி விட்டார்.
நானே மனசுநொந்துக் கஷ்டத்துல படுத்துக்கிடக்கிறேன். இந்த நேரத்திலயா மழை வரணும்” என்று போதையில் புலம்பியவாறே மோகன் உருண்டு திரும்பி படுத்தான்.
“டேய் மோகன் எழும்புடா!”என்று ருக்கு அவனைத் தட்டி எழுப்பினார்.
“ஹாய் ருக்கு என்ன என்னைத்தேடி வந்திருக்க?நான் உயிரோடு இருக்கனா?இல்லை செத்துட்டனான்னு பார்க்க வந்தியா?உயிரோடுதான் இருக்கேன்.இன்னும் சாகலை.கூடிய சீக்கிரம் செத்திருவேன்” என்று நெஞ்சில் வேகமா அடித்துச்சொன்னான்.
ருக்கு அவனை யோசனையோடு பார்த்திருந்தார்.இந்த விசயத்தை வேறமாதிரி டீல் பண்ணிருக்கணுமோ?என்று மெதுவாக யோசித்தவாறே அவனின் அருகில் உட்கார்ந்தார்.
“யம்மா ருக்கு நீ எதுக்கு ஈரத்துல உட்கார்ந்திருக்க.எழும்பி வீட்டுக்குப்போ” என்று அவரது கையைப்பிடித்து விரட்டினான்.
“நான் உன்னைப் புரிஞ்சிக்காமல் அந்தப்பொண்ணுக்கிட்ட அப்படி பேசிட்டேன்டா.நீ அவளை இவ்வளவு காதலிக்கிறன்னு நினைக்கவேயில்லை.ஏதோ சும்மா அந்தப்பொண்ணு பின்னாடி சுத்துறியே உனக்கும் மித்ராவுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிட்டா எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன்”
“நல்ல நினைச்சபோ”
“ப்ச்ச் வா நான் ராதாகிட்ட பேசி உனக்கும் அவளுக்கும் கல்யாணம் பேசுறேன். அவங்க வீட்டுக்குப் போய் பொண்ணு கேட்கிறேன்.உங்கக் கல்யாணத்தை நான் முடிச்சு வைக்கிறேன்”என்று சத்தியம் பண்ணாத குறையாகச் சொன்னார்.
அதைக்கேட்டதும் அவனுக்கு ஏறிய போதை எல்லாம் இறங்கி சாதாரணமாக எழுந்து உட்கார்ந்தவன் அவனது அம்மா கையைப் புடிச்சு நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா அப்படி பார்க்கிற?”
“உண்மையிலயே நீ எங்கம்மா ருக்குமணிதானா?இல்லை எனக்குத்தான் போதையில ஆள் மாத்தி தெரியுதா?”என்று கேட்டு யோசனையோட பார்த்தான்.
“ஏன்டா உங்கம்மா நான்தனடா.போதையில உனக்கு கண்ணுகிண்ணு தெரியாமப் போயிடுச்சா?”என்று அவனிடமே கேள்விக்கேட்டார்.
சுமிக்கும் அருணுக்குமே ருக்குமணி பேசியதை நம்ப முடியவில்லை.
“என்னடி உங்க அம்மா திடீர்னு அந்தர்பல்டி அடிக்கிறாங்க? ஏதோ விஷயம் இருக்கும்போலயே?”என்று அருண் சுமியின் காதைக்கடித்தான்.
“ஆமாங்க எனக்கும்தான் நம்ப முடியலை.எங்கம்மா இப்படியெல்லாம் இறங்கிவந்து பேசாதே!என்னவோ உள்குத்து இருக்கும்போலங்க”என்று இருவரும் சந்தேகத்துடனே ருக்குமணியைப் பார்த்திருந்தனர்.
ஆனால் மோகனோ அவரை நம்பி ‘நம்ம அம்மா உண்மையில் நமக்காக மனமிறங்கி வந்துட்டாங்களே!இதுதான் அம்மா பாசம் அப்படிங்கிறதோ?எப்படியும் நம்ம காதலைச் சேர்த்து வைச்சுக் கல்யாணமும் பண்ணி வைச்சிடுவாங்க’ என்று இருந்த மதுபோதையெல்லாம் இறங்கியதும் அவனுக்கு இப்போ சந்தோச போதை ஏறிக்கொண்டது.
“ருக்கு!ருக்குமணி!உண்மையாவம்மா சொல்லுற?அப்போ நாளைக்கே அவ வீட்டுக்குப் பொண்ணுக் கேட்டுப் போகலாம்மா” என்று முப்பத்திரண்டுப் பல்லையும் காண்பித்தான்.
“ஆமா உனக்கு எது நல்லதோ எது சந்தோசம் தருதோ அதைத்தானடா அம்மா இதுவரைக்கும் செய்திருக்கேன்.இனிமேலும் செய்வேன்.உங்க இரண்டுபேரோட வாழ்க்கையைத் தவிர எனக்கு வேற என்னது முக்கியமாக இருக்கும் சொல்லு!நாளைக்கு ராதாகிட்ட பொண்ணு பார்க்க வர்றோம்னு முதல்லயே தகவல் சொல்லிட்டு வந்திடு.நாளான்னைக்கு புதன் கிழமை.பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க.நம்ம ஒரு நல்லகாரியத்துக்குப் பேசப்போறோம் புதன்கிழமையே போயிடுவோம்.நீ எழும்பி இப்போ வீட்டுக்குவா.என்னதான் அருண் உன் மாமன் மகனாக இருந்தாலும் பொண்ணுக் கொடுத்தப்பிறகு இப்படிவந்து நிக்கக்கூடாது. புரியுதா”என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
அங்கே படியிலே சுமியும் அருணும் நின்றுக்கொண்டு ருக்குமணியை ஒரு மார்க்கமாக நக்கலாகப்பார்த்தனர்.
“என்னடி அப்படி பார்க்கிற?”
“இல்ல உன் மனசாட்சியைத் தொட்டு சொல்லுமா நீ உண்மையாகவே ராதாவை அண்ணனுக்காகப் பொண்ணுக்கேட்டுப் போறீயா என்ன?”
“ஏன்டி இப்படி நம்பிக்கை இல்லாமல் கேள்விக்கேட்கிற?நான் என் பிள்ளைங்களுக்கு எது நல்லது கெட்டதுன்னு பார்த்துப் பார்த்து செய்யமாட்டனா என்ன?இல்லை இதுவரைக்கும் செய்யலையா? இப்படி மாப்பிள்ளை முன்னாடி என்னைக் கேவலமாக கேள்விக் கேட்கிற?”என்று வருத்தப்பட்டு கண்ணைத் துடைத்தார்.
“யம்மா ருக்குமணி இதுவரைக்கும் எனக்கு இதுல சந்தேகம் மட்டும்தான் இருந்துச்சு.இப்போ நீ பேசினதுலதான் உண்மையே புரிஞ்சுது”என்று தலையை ஆட்டி நடத்து நடத்து என்று சொன்னாள்.
“நீ வேறடி அவனே பாவமா பெணாத்திட்டு இருக்கான்.அவனுக்குப் பிடிச்ச பொண்ணையே கட்டிவைக்கலாம்னுதான் ராதாவைப் பொண்ணு கேட்கப்போறோம்.நீ வேற கண்டதையும் கற்பனை பண்ணிக்காத.உன்னால் அருணும் என்னைத் தப்பா நினைச்சிக்கப்போறான்டி”என்று திட்டிவிட்டு சென்றுவிட்டார்.
“எனக்கென்னமோ உங்க அம்மா மோகனோட வாழ்க்கையில மொத்தமா ஏதோ பிளான் பண்ணி தலையில் குண்டு தூக்கி போட போறாங்கன்னு தோணுது உங்க அம்மாவை கொஞ்சம் கவனமா பாத்துக்கோ ராதா வீட்டுக்கு போய் பேச போறாங்களா? சண்டை போட போறாங்களா?எனக்கு சந்தேகமா இருக்கு. மேக்சிமம் ராதா மோகன் பிரச்சனை ஏன் இழுத்துக்கிட்டு இருக்கோம்னு அதை மொத்தமா வெட்டி விடலாம் போறாங்கன்னு தோணுது” என்று அருண் ருக்குமணியின் குணத்தை வைத்துச் சரியாக நடக்கப்போறதைக் கணித்துச் சொன்னான்.
“அது இல்லங்க அண்ணன் அந்த ராதா பொண்ணை உண்மையவே ரொம்ப விரும்புது. இந்த அம்மா மித்ராவை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஒத்த கால்ல நிக்குது. இந்த பிரச்சனை இப்படி போயிட்டு இருக்கும்போது அண்ணன் குடித்திருக்கிறான் வீட்டுக்கு போக மாட்டான்னு தெரிஞ்சுட்டு.அதானல் அம்மா தானாகவே வந்து ராதாவை பொண்ணு கேட்க போறேன்னு சொல்லுது. எனக்கும் அது நெருடலாகத்தான் இருக்கு.ஆனால் இந்த அண்ணன் நம்ம சொல்றதெல்லாம் நம்பாது அம்மா சொல்றதைத்தான் நம்பும். ஏதோன்னு இந்த பிரச்சனை ஏதாவது ஒரு விதத்தில் முடிவுக்கு வந்துட்டா அவனது வாழ்க்கையாவது எந்த திசையில போகுதுன்னு தெரிஞ்சிடும்ல”
“பார்க்கலாம் பார்க்கலாம்.முதல்ல இருட்டைப்பார்த்து பல்லைக் காண்பிச்சிட்டிருக்கிற உங்கண்ணனை உங்க வீட்டுக்கு விரட்டிவிடுடி.இங்க வந்து நம்மளைத் தூங்கவிடாமல் பண்ணிட்டிருக்கான்”
“நான் எதுக்கு அவனை விரட்டி விடணும் நீங்க தானே அவனுக்குப் பிரண்டு உயிர் நண்பன்.உங்கக்கிட்டத்தான பேசுறதுக்குன்னு வந்து உட்கார்ந்தான்.அவனை நீங்க போய் விரட்டிவிடுங்க போங்க” என்றவள் கீழே சென்று விட்டாள்.
“அதுசரி குடிகாரனுக்கு நண்பனாக இருக்கிறதும் குஷ்டம்தான் போலயே!: என்று மெதுவாக மோகன் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.
“டேய் மாப்ள அத்தை உன் காதலுக்கு பச்சைக்கொடிக் காட்டிட்டாங்க போல” என்று கேட்டான்.
“ஆமாடா மச்சான் எனக்கே ஆச்சர்யமா இருக்குடா.எப்படி அம்மா மனசு மாறினாங்கன்னு தெரியலடா?எல்லாம் மிராக்கிளா இருக்கு.நாளைக்கு ராதாகிட்டப்போய் பேசணும்”
“அவதான் உன்னை மதிக்கவேயில்லையாமே அத்தைச் சொன்னாங்க”
“அதை ஏண்டா இப்ப ஞாபகப்படுத்துற? அம்மா பேசினத கேட்ட அவளுக்கு கோபம் வந்துட்டு. ஏனென்றால் அதுக்கு முன்னாடி தான் என் காதலேச் சொல்லியிருக்கேன். அதுக்குள்ள அம்மா வந்து எனக்கு மித்ராவுக்கும் கல்யாணம்னு சொன்னா கோவம் வருமா வராதா.அதுதான் ராதா கோபத்தில் போயிட்டா?”
“ஓஓ அப்படிங்கிற?”
“ஆமாடா நாளைக்கு நேரா போய் ராதா கிட்ட காதல் சொன்னது எதுக்கு கோவப்பட்ட. இப்போ உன்னை நான் நேரடியா பொண்ணு கேட்டே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன கோபப்பட மாட்டாள்.இந்தத் தகவலை அவளிடம் சொல்லிட்டு அவங்க வீட்டுக்கு எப்ப வருவோம், என்னன்னு டீடைல் சொல்லிட்டு வந்துருவேன். அப்புறம் நம்ம எல்லாரும் சேர்ந்து புதன்கிழமை பொண்ணு பாக்க போய் பெண்ணு கேட்டு பேசிக்கலாம்”
“ஓஹோ அப்போ எல்லாம் பக்காவா இந்த பத்து நிமிஷத்துல ப்ளான் போட்டுட்ட அப்படித்தானே!”
“ஆமாடா மச்சான்” என்று வெட்கம் கலந்தச்சிரிப்பு சிரித்தான்.
அதைப் பார்த்தால் அருணுக்கும் கடுப்பா இருந்தது. “அடே மச்சான் உன்னை பெத்தவங்க என்ன மனசுக்குள்ள நினைச்சுகிட்டு இதெல்லாம் பண்றாங்கன்னு தெரியாமலேயே சிரிக்கிறியேடா! சத்தியமா உங்க அம்மா ராதாவை உனக்கு கட்டி வைக்க பிளான்ல இல்லடா. வேற ஏதோ பிளான் வச்சிருக்காங்க. இதை சொன்னா நீ இப்ப என்னை அடிக்க வரபோற சரி எதுனாலும் ரெண்டு நாள்ல தெரிஞ்சிரும்’ என்று மனதுக்குள் பேசியவன் அமைதியாக மோகனைப் பார்த்து சிரித்து வைத்தான்.
மோகன் உடனே எழுந்து “சரிடா மச்சான் நான் எங்க வீட்டுக்குப்போறேன்.புதன்கிழமை ஆபிஸிக்கு லீவு போட்டு ரெடியாக இரு ராதா வீட்டுக்குப் போகணும்.குட்நைட்டுடா மச்சான்” என்றுவிட்டு சந்தோசமாகப் போனவனின் வாழ்க்கை இரண்டே நாளில் மொத்தமாக தலைகீழாக மாறிடும் என்று அவன் கனவிலும்கூட நினைக்கவில்லை.
பாறை மீது முட்டிக்கொண்டாள் தனதுக்குதான் சேதாரம்.அப்படித்தான் ராதாவின் மனசு மட்டுமல்ல அவளது குடும்பமும் அப்படித்தான் அவளது காதலும் பாறைப்போன்றதுதான்.