தினம் தினம் 28

Thinam28

தினம் தினம் 28

28 தினம் தினம் !!

எபிலாக் !! 

அப்பா என்னவோ நீ குழந்தை பெக்க போற மாதிரி இப்படி நடுங்குற, குழந்தை பெத்துக்க போற அம்மாவே பயம் இல்லாம லேபர் வார்டுக்குள்ள போயிட்டாங்க ... வெளியே நிக்கிற நீ கை கால் குளிர்ந்து போய் நிக்கிற ... உங்கள அம்மா கூப்பிடுறாங்க இல்ல உள்ள போப்பா என்று விஷ்ணு லேபர் வார்ட் வெளியே படபடப்பாக இருந்த தகப்பன் முதுகில் கை வைத்து உள்ளே தள்ள

போடா அவதான் அறிவு இல்லாம பேசிக்கிட்டு இருக்கான்னா... நீயும் உள்ள தள்ளி என்ன கொல்ல பாக்குற, உள்ள இருந்து வர்ற சத்தத்தெல்லாம் கேட்டா ஈரக் கொலயே நடுங்குதுடா... 

ப்ச் , அம்மா என்ன சொல்லுச்சு.. இந்த "பிரசவத்துக்கு நீயும் அம்மா கூட நிக்கணும்னு சொல்லிச்சா இல்லையா... போப்பா 

"சும்மா இருடா நானும் சரி சரின்னு தலையாட்டிட்டேன், இங்க வந்த பிறகு தானே தெரியுது அப்பா, என்னம்மா கத்துறாங்க நான் போகல என்று சத்யா மறுக்க ...  

 

"சத்யா யார் சார் உள்ளிருந்து நர்ஸ் வர 

"டேய் நான் இல்லைன்னு சொல்லிடு" என்று சத்யா யூடர்ன் அடித்து ஓட பார்க்க, விஷ்ணு அவன் சட்டையை பிடித்து இழுத்து

"இவர்தாங்க அந்த மாமனிதர்!! எங்க அம்மாவுக்கு புருசர் இவர்தான் , கூட்டிட்டு போங்க, மாட்டேன் வெளியே விடுங்கன்னு அலறினாலும் விடாதீங்க என்று விஷ்ணு சிரிக்க 

"டேய் உனக்கு பயமாவே இல்லையா மகனை பிரமித்து பார்க்க 

"பாப்பா பிறக்கும் போது மெண்டலி மம்மி என்ன தயார் படுத்தீட்டாங்க டேடி ,இவ்வளவு தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது கடவுள் கொடுத்த வரம் .. வலிக்கும்தான் பட் அதை கடக்க தைரியம் இருந்தா போதும்னு சொல்லி இருக்காங்க யூ நோ ஓன் திங்க் டேடி 

ம்ம் 

"பாப்பாவை எப்படி பேம்பர் பண்ணணும்னு கூட ஐ நோ ... மகன் தலையை கோதி விட்ட சத்யா .. ஐதோ வாயை திறக்க போக 

"வேண்டாம்பா ஆரம்பிச்சு காதுல ரத்தம் வர வச்சிடாத உள்ள போ ....

"அப்படியே அம்மா வாய்டா உனக்கு 

"சத்யா வாங்க சார் 

"ப்ச் இதோ வர்றேன்" என்று அவன் உள்ளே நுழையும் முன் மாமனார் மாமியார் வந்து விட ... 

"பசங்களே பார்த்துகோங்க மாமா நான் போயிட்டு வந்துடுறேன்...

"சரி மருமகன் பார்த்துகோங்க... இது என் கர்சீப் என் மக கையில கொடுக்கிறீங்களா... அவன் புரியாது பார்க்க 

"அம்மா போன ரெண்டு முறையும் ஒரு கையில தாத்தா கர்சீப்பும், இன்னொரு கையில உங்க கர்சீப்பும் வச்சிக்குவாங்களாம்.. உங்க ரெண்டு பேர் கையையே பிடிச்சிட்டு இருக்கிற மாதிரி தைரியம் வருமாம் என்று விஷ்ணு சொல்ல எத்தனை அருமையானவள் என் மனைவி!! என்று பெருமூச்சு விட்டவன் மனைவி முனங்கும் சத்தம் கேட்டு உள்ளே ஓடினான் .. 

"ம்ம் ம்மா வலியில் முனங்கி கொண்டு அஞ்சலி கிடந்தாள் .. அத்தனை வலியிலும் உள்ளே வந்த சத்யாவை கண்டு அஞ்சலி முகம் பூரிப்பாக 

"அப்பா வந்தாராங்க 

"ம்ம் இந்தா என்று தகப்பன் கர்சீப்பை கொடுக்க அஞ்சலி அதை வாங்கி கொண்டு இன்னொரு கையை விரிக்க அவள் விரல் உள்ளே தன் விரலை நுழைத்த சத்யா....

"பயப்படாத அஞ்சும்மா நான் இருக்கேன்" என்று அவள் தலையை தடவி கொடுக்க 

"அம்மாஆஆஆஆஆ "அவள் அலற அலற இவன் கண்ணீர் துளி அவள் குருதியோடு கலந்து ஓடியது 

எனக்காக என்னை ஆணாக்க அவள் படும் வேதனையை என்னவென்று சொல்ல ... 

நான் தொடை நடுங்க காமம் அனுபவித்தேன் அவளோ தொடை நடுங்க வலியை அனுபவிக்கிறாள் .. 

சாபமும் வரமும் சேர்ந்ததுதான் மகப்பேறோ??!

ஹேஏஏஏஏஏஏஈஈஈஏஏ அலறல் சத்தத்தோடு அவன் காதல் மகளாக வந்து பிறக்க அவன் சுற்றும் மறந்து மனைவி உச்சந்தலையில் இச் வைக்க , மயக்க நிலையில் கிடந்த அஞ்சலி கண்களை திறந்து சத்யாவை பார்க்க வலியில் கூட அவள் இதழ் சிரித்தது...   

படுக்கையில் ஒரு பக்கத்தில் குட்டி குழந்தை காலை கையை அடித்து விளையாடிக் கொண்டிருந்தது அஞ்சலி மடியில் இன்னொரு மகள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.. அவள் கால் நகத்திற்கு நெயில் பாலிஷ் அடித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு... அஞ்சலியோ நாவல் புத்தகத்தை புரட்டிக் கொண்டு இருந்தாள்

"பாருடா உங்க அம்மைக்கு வந்த யோகத்தை, எவ்வளவு கெத்தா உட்கார்ந்து கால் ஆட்டிக்கிட்டு இருக்கான்னு என்றதும் நாவல் புத்தகத்திலிருந்து தலையை தூக்கி உள்ளே நுழைந்த கணவனை பார்க்க... கையில் இளநீரை தூக்கி கொண்டு உள்ளே வந்தான் சத்யா... 

அப்பவே என்ன ஒழுங்கா பார்த்து இருந்தா இப்ப ஏன் நான் உங்களை தொல்லை பண்ண போறேன்.. அப்ப பாக்கல இப்ப பாருங்கன்னு வச்சிருக்கேன்... இதுவும் கிட்டதட்ட ஒரு பழிவாங்கல்தான் சத்யா...

என்னடி தனியா இருக்கும்போது அப்பப்போ சத்யான்ன, இப்ப அடிக்கடி சத்தியாங்கிற அதுவும் புள்ளைங்க முன்னாடி வச்சு 

"உங்க பேரு அதுதானே ஏன் நான் சத்யான்னு கூப்பிட்டா குறைஞ்சு போவீங்களா...

"விஷ்ணு உன் அம்மா கிட்ட சொல்லி வை, வாய் ரொம்ப நீளுது பழைய சாட்டையை எடுத்தேன்னு வை

எங்க எடுங்க பாப்போம் என்று மனைவி தன் அருகே வந்த அவன் சட்டையில் பிடித்து இழுக்க... அவள் பக்கத்தில் பொத்தென்று அமர்ந்த சத்யா தோளில் சாய்ந்து கொண்டவள்....

டேய் விஷ்ணு நான் உங்க அப்பா கிட்ட கோவமா இருக்கேன்

ஏன்மா வேலையை செய்து கொண்டே தாயையும் தகப்பனையும் பார்த்தான்..

எத்தனை வயது ஆனாலும் அவர்கள் இருவரும் கணவன் மனைவியும், எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் தான் இணைகள்.. என் மனைவி என் கணவன் என்ற உரிமையை பிள்ளைகளிடம் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது அதை பிள்ளைகள் புரிந்து நடக்க ஆரம்பித்தாலே அவர்கள் காதல் புரிந்து விடும்... 

தோள் சாய்வதும் கை பிடித்துக் கொள்வதும் ஒருவர் அணைப்பில் ஒருவர் இருப்பதும் காமம் இல்லை அது அழகான காதல்!! என்று பிள்ளைகளுக்கு இவர்கள் காதலை சொல்லிக் கொடுக்காமல் அவர்களுக்கு எப்படி காதல் இதுவென தெரியும்??

விஷ்ணு எப்போதும் தெளிந்த எண்ணம் கொண்டவன்,,அவர்கள் காதலுக்கு காதலிக்கப்படுவதற்கு சுதந்திரமாக இடம் கொடுத்து அதை ரசிக்கக் கூடிய அளவு பக்குவம் கொண்டவன்... 

முதலில் சத்யா இப்படி எல்லாம் அவள் வந்து சாய்ந்தால் சங்கடப்படுபவன், தன் மகனின் பக்குவமான பேச்சு பார்வையில் இயல்பாகிவிட்டான்... ஒருவரை ஒருவர் செல்லமாக அணைத்துக் கொள்வது விளையாடிக் கொள்வது அடித்துக் கொள்வது என்று இவர்களின் உலகமே தனி!! 

நான் ஆண் நான் இப்படித்தான் இருப்பேன் இப்படித்தான் குடும்பத் தலைவனாக முகத்தை வைத்திருப்பேன் ..எனக்கு தலையில கிரீடம் இருக்கு அந்த கிரீடத்தை கழட்டி கீழே வச்சா , என் கௌரவம் என்னாகிறது என்று இருந்த சத்யா, இப்போதெல்லாம் குடும்பத் தலைவன் என்பதையே மறந்து அவர்களோடு அவர்களாக கேலி பேசுவது வேடிக்கை பார்ப்பது என்று தனக்கான வாழ்க்கையையும் இப்போதுதான் அவனும் வாழ ஆரம்பித்தான்.... 

என்னடா உங்க அம்மா முகம் சரியில்ல...

தன் தோளில் சாய்ந்து கிடந்த மனைவியை எட்டிப் பார்த்துக் கொண்டே கேட்க...

அதை ஏன் கேக்குறீங்க தாத்தா ஊர்ல திருவிழா வருதாம்.. சித்தி வந்து இருக்காங்களாம் அம்மாவுக்கு போக ஆசை...

இங்க பாரு இந்த ஆசை எல்லாம் வச்சுக்கிட்டு அலையாத அஞ்சு.. உங்க அப்பா அம்மாவை வேணும்னா இங்க ஒரு பத்து நாள் வந்து இருந்துட்டு போக சொல்லு... என்னால எல்லாம் உன்னை அனுப்ப முடியாது, நீ போன என்னால இங்க நிம்மதியா ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு தெரியாதாடி என்று கொஞ்சம் கோபமாக ஆரம்பித்து அமைதியாக முடித்தான்

"நீங்களும் வாங்களேன் ஒரு நாளாவது போயிட்டு வந்துடலாம் ... 

நான் வந்துட்டா இந்த கடைய யாரு பார்ப்பா, டெய்லி 10 கார் வந்து வரிசையில நிக்குது. நான் கடையை பூட்டிட்டு வந்தா சரியா இருக்குமா?

" நான் வேணும்னா விஷ்ணுவை கூட்டிட்டு போகவா 

சொல்லிட்டே இருக்கேன் , இந்த பேச்ச விடு அஞ்சு... போக கூடாது அவ்வளவுதான் ... 

ப்ளீஸ் 

"முடியாது, போனவாட்டி தங்கச்சி அத சொன்னா இத சொன்னான்னு வந்து ஒப்பாரி வச்சுக்கிட்டு இருந்த என்றதும் அஞ்சலி முகத்தை சுருக்கி 

"இதுக்கு தான்டா உங்க அப்பன் கிட்ட எதையுமே சொல்றது இல்ல.... நான் ஒரு மூளை கெட்டவ , இந்த மனுசன் சிரிச்சு பேசின உடனே , அங்க என்ன நடந்ததுன்னு ஒன்னு விடாம வந்து இவன்கிட்ட சொல்லிட வேண்டியது.... கடைசியில் அதை மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு, பாரு நேரம் பார்த்து லாக் பண்றார் என்று விஷ்ணுவுக்கு கேட்க முணுமுணுக்க ...

நாம எப்பவும் புள்ள பெப்போம், அவளுக்கு என்ன வந்தது அஞ்சு , இந்த வயசுல பிள்ளை ஒரு கேடா வாலிப பையன வச்சுக்கிட்டு இப்போ குழந்தை பெத்து வச்சிருக்க, எல்லாரும் சிரிக்கிறாங்க என் மாமியார் கூட நக்கல் பண்ணுதுன்னு உன் தங்கச்சி சொன்னான்னு சொன்னல்ல.. 

அவ சொன்னா சொல்லிட்டு போறா நான் என்ன அவளை பாக்கவா போறேன் ... எங்க அம்மா அப்பாவ தானே பார்க்க போறேன்

அதான் அத்தையும் , மாமாவும் ஒரு வாரத்துக்கு முன்னாடி தானே இங்க இருந்து போனாங்க... திருவிழா முடிஞ்சதும் திருப்பியும் வர்றேன்னு தானே சொல்லி இருக்காங்க ...பிறகு என்ன ? என்று சத்யா எழும்பி போய் விட்டான்... அஞ்சலி முகத்தை சுருக்கி கொண்டு தன் மகனை பார்க்க

டாடி சொல்றதுதாம்மா கரெக்ட், முன்னெல்லாம் சித்தி இப்படி பேசாது.. இப்போ உன்ன ரொம்ப அண்டரெஸ்ட்மெட் பண்ணி பேசுது, நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கிறது அவங்களுக்கு புடிக்கல அவங்க பேச்சிலேயே அது நல்லா தெரியுது... இந்த வயசுக்கு மேல என்ன கொஞ்சல் வேண்டி இருக்குன்னு என்கிட்டயே கேட்டாங்க

அப்படியா 

ம்ம் , ஏன் அவங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா உங்களுக்கு என்ன செய்யுதுன்னு நேரடியாவே கேட்டுட்டேன் .. தாத்தா பாட்டிய பாக்கணும்னா அவங்க இங்க வருவாங்க, இல்லையா சித்தி இல்லாத நேரம் போய் பாத்துட்டு வருவோம் , சும்மா எப்பவும் கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்காங்க ...

இல்லடா மனசுல எதுவும் வச்சிருக்க மாட்டா

உன் வீடுன்னு உடனே பூசி மொழுகாத மம்மி,  

பாப்பா போட்டிருக்க நெக்லஸை புடிச்சு பார்த்துட்டு இது வைரமா தங்கமா, எப்ப பண்ணுனாங்க, இன்னும் என்னென்ன எல்லாம் வச்சிருக்கேன்னு நீங்க இல்லாத நேரம் அவளை புடிச்சு கேட்டு இருக்காங்க...

ஹான்ஆஆஆ

ம்ம் தேவையா சொல்லு நம்ம அப்பாவே இப்பதான் நமக்கு பிடிச்ச மாதிரி இருக்கார் அதுக கண்ணு பட்டு மறுபடியும் மாறிட்டா என்ன செய்ய ஒன்னும் வேண்டாம் நாம இங்கேயே இருப்போம்

ப்ச், ஊரை சுத்தி எல்லாரும் அப்படிதாண்டா இருப்பாங்க, அதுக்குன்னு நாம ஓடி ஒளியவா முடியுமா விஷ்ணு ... உங்க அப்பன்தான் என்னை அனுப்ப மாட்டேங்குறார்.. நீயும் அவர்கூட கூட்டு சேர பார்க்கிற 

ம்மா அப்பா உன் சமாதானம் கெட்டுடக்கூடாதுன்னு தான் இப்ப எல்லாம் நினைக்கிறார், அதை புரிஞ்சுக்கோ.. நானும் அதைத்தான் நினைக்கிறேன் எங்களுக்கு யாரை பத்தியும் கவலை இல்ல அம்மா முகம் சுருங்க கூடாது அப்படிதான டேடி 

நல்லா நாலு போடு போட்டு புரிய வை இந்ந பைத்தியக்காரிக்கு என்று குட்டியை தோளில் தட்டி கொடுத்து தூங்க வைத்து கொண்டிருந்த சத்யா குரல் கொடுக்க. யோசித்த அவளுக்கும் அதுதான் சரி என்று பட்டது ...

அன்று என் புருஷன் நல்லா பாத்துப்பான், என் புருஷன் என்ன அப்படி வச்சிருக்கார் என்று வாய்க்கு வாய் சொன்ன தங்கை , இன்று இவளை வயசு என்ன ஆகுது ,இப்போ புள்ள பெத்து வச்சிருக்க , எப்ப பார்த்தாலும் புருஷன் புருஷன்னு கொஞ்சிக்கிட்டே இருக்க என்று அப்படியே உல்டாவாக பேச ... இவள் எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள் 

"நானே இப்பதான் காதலிக்க ஆரம்பிச்சு இருக்கிறேன் போங்கடா, எவன் என்ன சொன்னா என்ன என்று நினைத்தாலும் வாய் சும்மா இருக்க மாட்டாது இவனிடம் வந்து அங்கே நடந்ததை சொல்லிவிட... அதில் சற்று வருத்தம் இருப்பதை அறிந்து கொண்ட சத்யா, 

 இந்த வருத்தம் கூட இனி உனக்கு வர வேண்டாம் என்று அதற்கான வாய்ப்பை கொடுக்காமல் முடிந்த மட்டும் தடுத்து விடுவான் .... அவன் கையிலையே தன் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வான் ... 

அதே இடத்தில் வீடு கட்டி விட்டான் , சூப்பர் மார்க்கெட் அருகே இருந்த இடத்தில் கடை கட்டி ஜாம்ஜாம் என்று வியாபாரம் நடக்கிறது.... கோடி கோடியாய் அள்ளினானோ இல்லையோ ... ஆனால் நிறைவாக இருக்கிறான், மனம் நிறைந்து கிடக்கிறது.....

சாப்பாடு கொண்டுட்டு நீ ஏன்டி வந்த என்று சத்யா மனைவியை கண்டு விட்டு வெளிய வர விஷ்ணு தான் காரை ஓட்டி கொண்டு அழைத்து வந்திருந்தான் 

வீட்டுல இருக்க போர் அடிச்சது அதான் வந்துட்டேன்...

சரி சரி பிள்ளைக்கு முகத்துல வெயில் அடிக்குது பாரு உள்ள வா என்றவன் யாரோ தன்னை பார்ப்பது உணர்ந்து திரும்பி பார்க்க ... மங்களம் தான் ஊன்று கோலை ஊன்றி நடந்து வந்து கொண்டிருந்தார்.... ஆள் பாதியாக மெலிந்து போய் விட்டார்.... தன்னை பார்த்து கொள்ள ஆள் போட்டிருப்பதாக கேள்வி பட்டான் , அந்த ஆள் இல்லாத நேரம் பெரும் சிரமம் தான் ....

எய்யா தனியா கிடக்க முடியல சேர்த்துக்க சாமி என்று கெஞ்சாத குறையாக மகனுக்கு தூது வந்தது மருமகள் பேரன் என்று யாரையும் விடாது கூப்பாடு போட்டவர் இளகாது நின்ற மகனை இப்படி தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் நிலைக்கு ஆளாகி விட்டார்... மகள் அங்கேயே செட்டில் ஆகி விட்டாள் , தன் வாழ்க்கை போயிடுமோ என பயந்தே மங்களம் பக்கம் எட்டி பார்க்க மாட்டாள்... 

பார்க்க பாவமா இருக்குங்க என்ற அஞ்சலி பரிதாபப்பட ..

உன் வாழ்க்கையை வாழ் போதும் நல்ல மருமகளா இருந்தா உனக்கு யாரும் சிலை வைக்க போறது இல்லை ... அவங்களுக்கு பாவம் பார்த்து தலையில இழுத்து போட்டுக்காத மாசம் ஐயாயிரம் கொடுக்கிறேன் அவங்களுக்கு தேவை காசு தான அது சரியா போகும் , அது போக சூப்பர் மார்கெட் வாடகை பத்தாயிரம் போகுது வேறென்ன வேணும் ஜாலியா தான் இருக்காங்க நீ மூடிட்டு உள்ள வா என்று கண்டும் காணாது மகன் போக ....

காலம் கடந்து திருந்தி என்ன பயன்?

அஞ்சலி முதலாளி சீட்டில் மனைவி உட்கார்ந்து நாவல் புத்தகத்தை படித்து கொண்டிருக்க, மேஜை மீது பெரிய மகள் அவன் கணக்கு புத்தகத்தில் கோலம் போட , விஷ்ணு சரக்குகளை எண்ணி உள்ளே வைத்து கொண்டு இருக்க, சத்யா குட்டி மகளை தோளில் போட்டு கொண்டு வேலை நடக்கும் கார்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தான்.... புத்தகத்தில் ஹீரோயினை ஹீரோ தாங்கு தாங்கென்று தாங்க ... உதட்டில் மெல்லிய சிரிப்பு ... 

அஞ்சு இந்தா காப்பி என்று காப்பியை சத்யா நீட்ட அதை வாங்கி ஆற அமர ரசித்து குடித்தாள்... அவள் முதல் அத்தியாயத்தில் கனவாக கண்ட சுதந்திரம் இன்று அவள் கை மீது கிடைத்தது... 

சிலது சொல்லி திருந்தும் 

இந்த புருசன் மேக் எல்லாம் டங்குவார் கிழிய வாங்கிதான் திருந்தும்... 

என்ன அதுவரை பொறுமை அவசியம் குமாரு..

ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் மட்டும் போதாது 

அந்த ஒருத்தியை எங்கே வைத்திருக்கிறோம் என்பதில் தான் உன் வாழ்க்கை எது என்று தெரியும்!! 

மனைவி என்ற உரிமையை கொடுத்து 

அவள் தனி உரிமையை பறிப்பது 

இல்லறம் இல்லை

இதை புரிந்து கொண்டால் சொர்க்கம் தேடி போக வேண்டாம் , சொர்க்கம் குடும்பம் வாயிலாக நம்மோடேவேதான் இருக்கும் !! 

நன்றி !

வாழ்க வளமுடன் !

வாழ்க தமிழ் !

வளர்க தமிழ்நாடு !!