தெள்ளழகே-4

தெள்ளழகே-4

தெள்ளழகே!-4

ராதா காலையில் குளித்து முடித்து ஆபிஸிற்கு 

கிளம்பி வந்தவள் சமயலறைக்குப்போய் சாப்பிட எடுத்துக்கொண்டு டைனிங்கில் வந்து உட்கார்ந்தாள்.

அவங்க அம்மா தாமரை”எங்கடிக் கிளம்பிட்ட பத்து பதினைஞ்சு நாளைக்கு லீவு போடு ஊருக்குத் திருவிழாவுக்குப் போகணும்னு சொல்லிருந்தேன்ல. இப்போ ஆபிஸிற்குப் போறேன்னு கிளம்பினா என்ன அர்த்தம்?”

“எனக்கு லீவு கிடைக்கல”

“லீவு கிடைக்கலையா? நீ எடுக்கலையா?”

அந்தக்கேள்வி எதுக்கு வந்துச்சுன்னு அவளுக்குத் தெரியுமே! அதனால் அமைதியாக இட்லியை பிச்சு வாயில் வைத்தாள்.

“நீ என்ன நினைச்சு லீவு எடுக்காமல் இருக்கன்னு எனக்குத் தெரியும். உன்னையும் கூட்டிட்டுத்தான் ஊருக்குப்போறோம். உனக்கு லீவு கிடைக்கலைன்னா மொத்தமா வேலையை விட்று”என்று அலுங்காமல் அவள் தலையில் குண்டைத்தூக்கிப்போட்டார்.

“அம்மாஆஆ நீங்க நினைக்கிறது நடக்காது. ஏற்கனவே எல்லாமே கோர்ட்ல முடிஞ்சு போச்சு. இதுக்கு அப்புறம் ஊருக்குவா திருவிழாவுக்கு வான்னு கூப்பிட்டுக் கழுத்தறுக்காதிங்க”என்று சாப்பிடாமல் எழுந்தவள் முன்பு அவளது அண்ணன் மணிகண்டன் வந்து நின்றான்.

“என்ன பிரச்சனை சாப்பாட்டை இப்படி எடுத்துட்டுப் போற?”

“எனக்கு சாப்பிட பிடிக்கலை”

“சாப்பிட பிடிக்கலையா?இங்க சாப்பிட பிடிக்கலையா? கேண்டின்லதான் சாப்பிட பிடிக்குமோ என்ன?”

“என்ன சொல்லுறண்ணா?”என்று அவனை முறைத்துப் பார்த்தவள் இதுக்குமேல இங்க நின்னா சண்டைதான் வரும் என்று அவனைக் கண்டுக்காது விலகிப்போனவளின் கையைப்பிடித்து நிறுத்தினான்.

“கைவிடுண்ணா வலிக்குது”கத்தினாள்.

அதற்குள் அவன் அவளை அடித்திருந்தான்.அதை அவள் எதிர்பார்க்கவில்லை.அவளது அம்மா தாமரையும் இதை எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் அடிவாங்கட்டும் அப்பதான் வாழ்க்கையில் உருப்படுவா என்று கோபத்தில் நின்றிருந்தார்.

இப்போது அடிவாங்கிக்கொண்டு அமைதியாக அழுதுக் கொண்டிருந்தவளை அவளது அண்ணி மைத்திலி நக்கலாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதற்குள் இரண்டாவது அண்ணன் செல்வமும் வந்துவிட்டான்.அவன் பின்னாடியே அவன் மனைவியும் குழந்தைகளும் வந்து என்ன நடக்கிறது? என்று பாவமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.

“எதுக்கு அடிச்ச?” என்று மணிகண்டனிடம் ராதா எதிர்த்து கேள்விக்கேட்டாள்.அவளுக்கு வலிதாங்க முடியவில்லை. கன்னத்தில் கைவைத்தவாறே கேட்டாள்.

“என்ன சம்பாதிக்கிறோம்னு எதிர்த்து கேள்வி எல்லாம் கேக்குறியா? நீயே இங்க வந்து ஒண்டிகிட்டு இருக்க. அது ஞாபகம் இருக்கட்டும். உனக்கும் நாங்க தான் சோறு போடுறோம். நாங்களும் மானத்தோட வாழணும் அது ஞாபகத்துல இருக்கா என்ன? நேத்து கேண்டின்ல யாருக்கூட நின்னு பேசிட்டு இருந்த? என்பிரண்டு பார்த்துட்டு வந்து என்கிட்ட கேட்கிறான். இதுக்குத்தான் உன் தங்கச்சி இப்படி இருக்காளான்னு.கேவலமா போச்சுது. அவன் மூலமாகத்தான் உனக்கு வேலைவாங்கித் தந்தேன் ஞபகமிருக்கட்டும்”

“நான் எவன் கூட நின்னு பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எவனாவது நாதாரி வந்து குறுக்கமா மறுக்கா பேசினால் அதுக்கு நான் பொறுப்பு இல்ல. உன் கண்ணுக்கும் உன் பிரண்டு கண்ணுக்கும் எது நல்லது எது கெட்டதுன்னு இன்னும் தெரியலைபோல. நீ உன் பொண்டாட்டி சொல்றதெல்லாம் கேட்டு என்கிட்ட வந்து இப்படி ஆடாத தள்ளிப்போ” என்று அவன் அடித்த அடியில் கன்னம் வலிக்க கைகழுவிவிட்டு பேக்கினை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“பார்த்தீங்களா அத்தை உங்க பேச்சையும் மீறி ஆபிஸிக்குப் போறா.அப்போ நம்ம வேண்டாம்போல. உங்க மகன் சொன்னமாதிரி அங்க யாருக்கூடவோ பழக ஆரம்பிச்சிட்டா போல. எங்க குடும்ப மானத்தையும் சேர்த்து வாங்கப்போறாள். அதுதான் நடக்கப்போகுது. ஏற்கனவே இவ செய்ததுக்கு எங்க வீட்டுப்பக்கம் தலவைச்சுப் படுக்கமுடியல. நல்லா வளர்த்திருக்கீங்க பொம்பள பிள்ளைய” என்று அவரது கிராமத்து பாஷையில் நீட்டி முழங்கி ராதாவை குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.

ராதா திரும்பி அவளை எரிக்கும் பார்வை பார்த்தவள் “நான் என் வாழ்க்கையை போராடித்தான் வாழ்ந்திட்டிருக்கேன். உங்களை மாதிரி புருஷன் சம்பாத்தியத்தில சோறு சாப்பாடுற வேலையை நான் பார்க்கவில்லை புரியுதா? இதுக்கு மேல எல்லாம் ஏன் விஷயத்துல நீங்க தலையிட்டீங்க அப்புறம் நடக்கிறதே வேறயாக இருக்கும்” என்று கோபத்தில் கத்தினாள்.

அதைக்கேட்ட மைதிலி உடனே மணிகண்டனிடம் திரும்பி “பார்த்தீங்களா பார்த்தீங்களா நீங்கள் இருக்கும் போது உங்க தங்கச்சி எப்படி எல்லாம் பேசுறா.நீங்க இல்லாதப்போ எப்படி எல்லாம் பேசுவா? எவ்வளவு வாய் பேசுறா! அதுதான் அவ வாழ்க்கை இப்படி இருக்கு.அவளைக் கொஞ்சம் அடக்கி வைங்க” என்று எரியும் தீயில் எண்ணெய்யை அல்ல நெய்யை குடம் குடமாக ஊற்றினாள்.

அதைக் கேட்ட செல்வமும் கோபத்தில் தங்கையைப் பார்த்தான் மணிகண்டனோ ராதாவினை மறுபடியும் அடிப்பதற்காக அருகில் சென்றான்.

அதற்குள் அவளது அப்பா நல்லதம்பி வெளியே போயிருந்தவர் வண்டியைக் கொண்டு விடும் சத்தம் கேட்டதும் அமைதியாகிவிட்டனர்.

ராதா வாசலிலே பேக்குடன் நிற்பதைக் கண்டவர் “என்ன நீ ஆபீஸ்க்கு போகலையா” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

ராதா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கண்ணீரோடும் பதில் சொல்லாது அழுதுக் கலங்கிய கண்களோடும் அப்படியே நின்றிருந்தாள்.

ஏதோ வீட்டின் சூழல் சரியில்லையே என்று உணர்ந்தவர்”என்ன பெரியவனே உன் முகமே சரியில்லையே சண்டை போட்டியா? உன் பொண்டாட்டி எதுவும் சொல்லி ராதாகிட்ட சண்டை போட்டியா என்ன? என்று அங்கு என்ன நடந்திருக்க கூடும் என்பதை யூகித்துக் கேள்வி கேட்டார்.

“அதென்ன எப்பவும் நான் சொல்லிக் கொடுத்துதான் இந்த வீட்டில் சண்டை வருமா என்ன? எதுக்கெடுத்தாலும் என் பேரையும் என் தலையையும் உருட்டுகிறீங்க” என்று ஆளுக்கு முன்னாடி முந்திரிக்கொட்டை மாதிரி மைதிலி வரிந்துக் கட்டிக் கொண்டு தன் மாமனாரிடம் எதித்துப் பேசினாள்.

அதைக்கேட்டதும் “ஆக இங்க ஒரு பிரச்சனை நடந்திருக்கு அப்படித்தானே?”என்று நல்லத்தம்பி தனது பொண்டாட்டி தாமரை முறைத்துப் பார்த்தார்.

“நான் ஒன்னும் உங்க மகளை எதுவும் சொல்லல. இன்னைக்கு வேலைக்கு போக வேண்டாம். பத்து நாள் லீவு போடு ஊருக்கு போறோம்” என்று சொல்லிட்டு இருந்தேன் உங்க மகள் வேலைக்கு போகணும்னு பிடிவாதம் பிடிச்சிட்டு கிளற்பினாள். அதுக்குத்தான் பெரியவன் சத்தம் போட்டான் என் அங்கு நடந்த விஷயங்களை அப்படியே அவர்களுக்குதக்கதாக மாற்றி சொன்னார்.

“அதுதான் அவள் வரலைன்னு சொல்லுறாள்னா விட்டுற வேண்டியதுதானே.வெட்டிவிட்டது வெட்டிவிட்டதுன்னு ஆகிப்போச்சு. அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்க வேண்டியதுதானே .முடிஞ்சுப்போனதையே குத்திக்கிட்டிருந்தா இரத்தம் தான் வரும் பாசம் வராது” என்று தனது மருமகள் மைதிலிக்கு மறைமுகமாக ராதாவின் முடிவை எடுத்துச் சொன்னார்.

“நாங்க எதுக்கு முடிஞ்சு போனது ஒட்ட வைக்க நினைக்கிறோம். என் தம்பிக்கும் வேற பொண்ணை எல்லாம் பார்த்தாச்சு. அவனுக்கு அந்த திருவிழாவோடு தான் தான் நிச்சயதார்த்தம் வைச்சிருக்கு. அதுக்கு 

தான் ஊருக்கு நாங்கக்கூட கிளம்பிட்டு இருக்கோம். இங்க ஒட்ட வைக்கலாம் யாரும் நினைக்கல. அவங்களா வந்து ஒட்டிக்காம இருந்தா சரிதான்” என்று சொல்லிவிட்டு மணிகண்டனின் கையைப் பிடித்து உள்ளே இழுத்துச்சென்றுவிட்டாள்.

நல்லதம்பி ராதாவிடம் திரும்பியவர் “ பத்து நாள் ஊருக்கு போயிட்டு வா எல்லாரையும் எதிர்கொண்டுதான் ஆகணும். அப்போதான் நம்ம எடுத்த முடிவு சரின்னு தோணும்.எதுக்கு பயந்து ஓழியணும்” என்று மகளுக்காக பேசினார்.

ஆனால் தாமரையோ “ஆமா இப்படியே கருத்தா சொல்லிச் சொல்லியே அவ வாழ்க்கையை முடிச்சுவிட்டாச்சு. அடுத்து என்ன கூத்த நடத்தபோறாளோ. அதற்கு உங்க மகள் என்ன திட்டத்தோடு இருக்காள்னே தெரியல. மணிகண்டன் வேற அதுதான் சத்தம் போட்டுட்டு இருந்தான்.அவ ஆபீஸ்ல ஏதோ பையன்கூட பேசிட்டு இருந்திருக்காள். நமக்கே இருக்க பிரச்சனை போதாதுன்னு இவ கூடுதலா இழுத்திட்டு வந்துட போறா.அவக்கிட்ட சொல்லி வைங்க” என்றவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே போய்விட்டார்.

நல்லதம்பி “என்னாச்சு என்று நேரடியாக அவளிடம் கேட்டார்.

ராதவோ பதிலே “எதுவும் சொல்லாத யாரோ என்னவோ சொல்லட்டும். நம்ம நம்ம வேலையை சரியா பார்த்துட்டு போகணும். நான் வேலைக்கு போயிட்டு இருக்கேன் இதுலயும் இத்தனை இடைஞ்சல்.நான் இன்னைக்கு வேலைக்கு போறாது அவ்வளவுதான் முடிஞ்சுபோச்சு” என்று பேக்கைத் தூக்கி போட்டவள் வேலைக்கு போகாது உட்கார்ந்து விட்டாள்.

சிறிது நேரம் யோசனைக்கு பின்பு நேராக அப்பாவிடம் போனவள் சுதந்திரமாக “நீங்க எல்லாரும் ஊருக்கு போயிட்டு வாங்கப்பா. நான் ஊருக்கு வரல. நான் தனியாகவே இங்கே இருக்கேன்.இவ்வளவு நாள் சமாளிச்சிட்டேன்.இனி என் வாழ்க்கையில தனியாதானே எல்லாத்தையும் பார்த்துக்கணும்.அதனால் பழகிக்கிறேன்” என்று அழுகை வந்தாலும் கண்ணீரை அடக்கிக் கொண்டு பேசினாள்.

“உன் இஷ்டம்.நான் உன் கடந்துப்போன வாழ்க்கையில் முடிவெடுக்க மட்டும்தான் சுதந்திரம் தந்திருக்கேன்.இனி உள்ள வாழ்க்கைக்கு இல்லை. மணிகண்டன் ஏதோ சொன்னானே நீ யார்கிட்டயோ பேசிட்டு இருக்கான்னு. கவனமா இரு அது பிரச்சினையா வந்துச்சுன்னா உனக்கு சாதகமான முடிவு எடுக்க மாட்டேன்”என்று எச்சரிக்கை செய்துவிட்டு உள்ளே போனார்.

அதைக் கேட்டதும் ராதாவுக்கு நேத்து மோகன் செய்ததும் அவங்க அம்மா பேசுனதும் ஞாபகத்துக்கு வந்தது.

என்னை இந்த முட்டா பீசுங்க வேற இந்த பாடுபடுத்துதே என்று கோபத்தில் அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் அங்கு அலுவலகத்திற்குச் சென்ற மோகன் ராதா வந்திருக்கிறாளா? இல்லையா? என்று நூறு முறை எட்டி பார்த்திருப்பான்!

 அவள் வரவில்லை என்றதும் லீவ் அப்ளிகேஷன் கொடுத்திருக்காங்களா என்று மேனேஜரிடம் கேட்டான். அப்பொழுதுதான் மெயிலில் அன்று ஒரு நாளுக்கு மட்டும் லீவு எழுதி கொடுத்து இருக்கிறாள் என்று தெரிந்தது.

ச்சை நேத்து ருக்குமணி மட்டும் வராமல் இருந்ததா அப்படி இப்படின்னு பேசி அவகிட்ட ஏதாவது சொல்லி இருக்கலாம். ஒருவேளை நம்ம பேசினதில் தான் கோவத்துல வராம இருக்காளா அப்போ நம்ம அவளுக்கு பிடிக்கலையா இல்ல ஆயிரத்தெட்டாவது முறை இதையே மாலை வரைக்கும் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு தலைவலி வந்துவிட்டது.

சாயங்காலம் வரைக்கும் தலைவலியோடு இருந்தவனுக்கு ருக்குமணி மேலே கோபம் கோபமாக வந்தது. அதைக் காண்பிக்காது அமைதியாக அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தவனின் அருகில் ருக்குமணி வந்து உட்கார்ந்தார்.

“என்னடா ராதா இன்னைக்கு ஆஃபீஸ் வரலையா? என்று எல்லாம் தெரிந்தவர்போல கேள்வி கேட்டார்.

அதற்கு மோகன் “நீங்க செய்து வச்சிருக்க வேலைக்கு அவள் வந்தாதான் அதிசயம்? நம்ம நாளைக்கு அவள பொண்ணு பார்க்கப் போறதை எப்படி அவளுக்குத் தகவலா சொல்ல முடியும்?நான் போன் பண்ணாலே எடுக்க மாட்டாள்.என்கிட்ட பேசவும் மாட்டாள். என்ன செய்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். நீங்க வேற வந்து வெந்த புண்ணில் வேல பாய்ச்சிட்டிருக்கீங்க” என்று வேதனையோடு சொன்னான்.

“அதுக்கு எதுக்குடா இவ்வளவு வேதனையோடு பேசுற. அதுதான் நாளைக்கு ராதா வீட்டுக்கு போறோமே. எல்லாம் பிளான் பண்ணிட்டோமே! அவளுக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ நம்ம போயி பொண்ணு கேட்ருவோம்.அவங்க அப்பா அம்மாக்கு சம்மதம் என்றால் அவளை கேட்டு தந்திடப் போறாங்க. ஈசியா வேலை முடிஞ்சிடும். நீ லவ்வா சொல்லி அவள் வேண்டாம்னு சொல்லி அது பிரச்சினையாகி, எதுக்கு இப்படி ஜவ்வுமாதிரி இழுக்கணும்? சிம்பிளா அவங்க வீட்டுக்கு போய் பொண்ணுகேட்டுட்டா அவங்க சம்மதிச்சிட்டா உன் காதலும் கைக்கூடிரும் உன் கல்யாணமும் முடிஞ்சிடும். எந்த வித பிரச்சனையும் இருக்காது. இதுதான் நல்லவழி நாளைக்கு போறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்திருக்கேன். அருணையும் சுமியையும் நான் கூப்பிட்டிருக்கேன். ராதா வீட்டுக்கு நேரடியாக போறோம் பொண்ணு கேக்கிறோம்.. அவ்வளவுதான். உன் கல்யாணத்துக்கு என்னென்ன பண்ணனும்னு இப்பவே எல்லாம் யோசிச்சு ரெடி பண்ணதுக்கு பாரு. எதுக்கு வேண்டாத கவலை எல்லாம் உனக்கு? என்று மகனைத் தேற்றி கட்டிப்பிடித்துவிட்டு சென்றார்.

ஆனால் நடக்க போகும் விபரீதங்கள் எதுவும் தெரியாது மோகன் தனது எதிர்கால வாழ்க்கைக்காக நிறைய திட்டங்கள் போட்டுவிட்டு தூங்கப்போனான்.