தெள்ளழகே-1

தெள்ளழகே!-1
கிரஸன்ட் ஷிப்பிங் கம்பெனி
தனது சிஸ்டத்தின் முன் உட்கார்ந்து அன்றைய நாளின் முக்கியமான அக்கவுண்டஸ்ஸை டேலி பண்ணிக்கொண்டிருந்த ராதாவின் பின்னால் யாரோ நிற்பது போன்று தோன்றவும் திரும்பிப் பார்த்தாள்.
அவளோடு அக்கவுண்ட்ஸ் செக்ஷனின் அசிஸ்டன்ட் மெனேஜராக வேலைப் பார்க்கும் மோகன் நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் “என்ன மோகன் சார்?மேனேஜர் எதுவும் சொல்லி விட்டாங்களா?”என்று கேட்டாள்.
“இல்லை ராதா நேரமாகிட்டுதே இன்னும் கிளம்பாம இருக்கிறியேன்னு பார்த்திட்டிருந்தேன். வேறென்னுமில்லை”
“ஓஓஓ கொஞ்சம் வொர்க் பெண்டிங் இருக்கு முடிச்சிட்டு போயிடலாம்னு உட்கார்ந்திருக்கேன்.அப்புறம் நாளைக்கு வந்து இதை டேலி பண்ண உட்காரமுடியாதே.மண்டை காஞ்சிடுமே!”என்று பேசியவாறே அவளது வேலையைத் தொடர்ந்தாள்.
அவனோ சிறிது நேரம் நின்றிருந்தவன் ஒரு சேரை எடுத்து அவளருகில் போட்டு உட்கார்ந்து கொண்டான்.
அது அவளுக்கு நெருடலாக இருந்தாலும் நம்ம ஏதாவது கேட்கப்போய் அவரு ஏதாவது சொல்லிடுவாரோ என்று அமைதியாக தனது வேலையில் கவனமாக இருந்தாள்.
அவள் வேலையை முடித்துவிட்டுத்தான் திரும்பிப் பார்த்தாள் மோகன் அங்கே உட்கார்த்திருந்தான்.
“மோகன் சார் இன்னுமா இங்கயே இருக்கீங்க? நீங்க வீட்டுக்குப் போகலையா?” என்று கேசுவலாக எழுந்து தனது பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.
அதைப்பார்த்தவன் மனசுக்குள் “அதுதான் உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்னு தெரிதுல.அப்புறம் என்ன கேள்வி வேண்டிக்கிடக்கு.என்னை காக்க வைக்கிறதில் உனக்கு அவ்வளவு சுகமாடி!”என்று மனதிற்குள் எரிந்துவிழுந்தவன் அதை அவளிடம் காட்டிக்கொள்ளாது அவளோடு நடந்தான்.
ராதாவோ அவனோடு எதுவுமே பேசாது லிப்டிலிருந்து இறங்கி வழக்கம்போல வேகமாக நடந்தாள்.அவள் பின்னாடியே வந்த மோகன்”ராதா கொஞ்சம் நில்லு”என்று சத்தமாக அழைத்தான்.
“என்ன மோகன் சார்”என்று நளினமாகத் திரும்பி அவனைப் பார்த்தவளின் அழகில் சொக்கிப்போய் அப்படியே நின்றிருந்தான்.
அவன் என்ன சார்னு கேட்டபிறகும் அவளையே பார்த்திருந்தவன் பதில் சொல்லாது அமைதியாக நின்றிருந்தான்.
அதைப்பார்த்தவள் “இவரென்ன லூசா?”என்று புருவம் சுருக்கிப் பார்த்துவிட்டு திரும்பி தனது வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டு கிளம்பவும்தான் உணர்வுக்கு வந்தவன் ஓடிப்போய் அவளது வண்டிக்கு முன்பு மூச்சு வாங்க நின்றிருந்தான்.
உடனே சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தியவள்”என்ன பண்றீங்க சார்? இப்படித்தான் வண்டியை மறிச்சு நிப்பாங்களா? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? ஏற்கனவே நீங்க என்கிட்ட பேசுறதுக்கே ஆயிரத்தெட்டு கண்ணுமூக்கு வைச்சுப் பேசிறாங்க.இதுல இப்படி வந்து வழியை மறிச்சு நின்னா என்ன பேசுவாங்க?வழியை விடுங்க சார்.ஆபிஸ் சம்பந்தமா பேசணும்னா உள்ளயே வைச்சுப்பேசுங்க கேளுங்க.வேறெதுவும்னா உங்கக்கிட்ட எனக்குப் பேச எதுவும் இல்லை”என்று எப்போதும் இல்லாமல் இப்போது கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு விர்றென்று வந்துவிட்டாள்.
அதுவும் அந்த மாலைப்பொழுதில் எல்லோரும் வீட்டுக்கு போவதற்காக வந்து வண்டியையும் காரையும் எடுத்துக்கொண்டு போகும்நேரம் என்பதால் மோகனையே எல்லோரும் ஒருமாதிரி பார்த்தனர்.
அதில் கடுப்பானவன் இரண்டு வருஷமா இவ பின்னாடி சுத்துறதுக்குப் பதிலாக வேறெருத்தியைத் தேடிக் கல்யாணம் முடிச்சிருக்கலாம். கொஞ்சமே கொஞ்சம் அழகை வைச்சிக்கிட்டு நம்மளை சுத்தல்ல விடுறாளோன்னு கோபம் வந்தாலும் அவள்மேல்தான் காதலும் வந்தது என்ன செய்ய? என்று தனது காரை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிச் சென்றான்.
அவன் வீட்டிற்குள் நுழையும்போதே அங்கே அவங்கம்மாவும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தனர்.
மாமாவைப் பார்த்ததும் ராதாமேல் இருந்தக் கோபம் அவர்மேல் திரும்பிற்று .அவரை வாங்க என்றுகூட சொல்லாமல் அவன் ரூமுக்குள்ள போய் கதவை அடைத்துக்கொண்டான்.
அவருக்கு அதைப்பார்த்ததும் அப்படியே முகம் மாறியது .அதைக் கண்டுக்கொண்ட மேகனின் அம்மா
ருக்மணி சுதாரித்து”அவனே இப்போதான் ஆபிஸ்ல இருந்து டென்சன்ல வந்திருக்கான்.அதுல உன்னைக் கவனிச்சிருக்கமாட்டான் தம்பி.நான் அவன்கிட்ட எல்லாம் ஏற்கனவே பேசிட்டேன்.வர்ற தை மாசமே மித்ராவுக்கும் கல்யாணத்தை முடிச்சிடுவோம். நீ தைரியமாக இரு” என்று தனது தம்பி சங்கரனுக்கு வாக்குக் கொடுத்தார்.
சங்கரனும் “ம்ம்ம் உன்னை நம்பித்தான் வர்ற நல்ல நல்ல வரனையெல்லாம் வேண்டாம்னு தட்டிக்கழிச்சுட்டு வர்றேன்.என் பொண்ணு என் அக்கா வீட்டுலயே வாழப் போறான்னு நினைச்சிட்டிருக்கேன். ஆனால் உன் மகன் நடந்துக்கிறதைப் பார்த்தால் அப்படி நடக்காதுன்னு மனசுக்குள்ள தோணுது”என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.
“என்னடா தம்பி இப்படிச் சொல்லிட்ட.அவனுக்கு வாழ்க்கையைப் பத்தி என்ன தெரியும்.இந்த வாலிபவயசுல என்னத்தையாவது கற்பனை பண்ணிக்கிட்டு சுத்திட்டிருப்பானுங்க. அப்புறம் நல்லபொண்ணா நம்மளே பார்த்துக் கட்டி வைக்கிறதுல வாழ்க்கையைப் புரிஞ்சுப்பானுங்க. இள இரத்தம் அப்படித்தான இருக்கும்.நீ செய்யாததையா உன் மருமகன் செய்திட்டான்.உன் மகள்தான் எனக்கு மருமக நீ கவலைப்படாமல் போ”என்று தம்பியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இதையெல்லாம் ரூமுக்குளயிருந்துக் கேட்டுக்கொண்டிருந்த மோகன் மாமா போயிட்டாருன்னு தெரிஞ்சு கதவை வேகமாகத் திறந்துக்கொண்டு கோபத்தில் அம்மா முன்னாடி வந்து நின்றான்.
“அம்மாஆஆ உன் தம்பிக்கு யாரைக்கேட்டு அவரு மகதான் இந்த வீட்டு மருமகன்னு வாக்குக் கொடுக்கிற?வாழப்போறது நான்.நான் சொல்லணும் எனக்கு யாரு பொண்டாட்டியாக வரணும்னு.என் வாழ்க்கையை நீங்க எதுக்குத் தீர்மானிக்கிறீங்க?. நான் ஒன்னும் உன் தம்பி மகளைக் கட்டமாட்டேன்.இதை உன் தம்பிக்கிட்ட சொல்லிடு”
“அவளைக் கட்டாமல் வேற எவளைக் கட்டிட்டு வரலாம்னு மனக்கோட்டைக் கட்டிட்டு இருக்க?நீ நினைக்கிறதெல்லாம் நடக்காது”
“அதெப்படி நான் நினைக்கிறது நடக்காதுன்னு சொல்லுவீங்க? எப்படி அப்படி சொல்லுவீங்க.உங்க மகனுடைய ஆசை விருப்பத்தை விடவும் உங்க தம்பிமேலயும் அவரு பெத்த மக மேலையுமாதான் ஓவர் பாசமோ?”என்று அவரிடம் தனது வாழ்க்கைக்காக வாதடிக் கொண்டிருந்தான்.
“அதெல்லாம் இல்லை.என் மகன் மீதுதான் எனக்கு ரொம்ப பாசம்.அவன் வாழ்க்கை இரண்டாந்தாரமா போயிடக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுதான் மித்ராவை இந்த வீட்டு மருமகளாக கொண்டு வர நினைக்கிறேன். இதுல என்ன தப்பிருக்கு மோகன்”
“அம்மாஆஆஆ என்ன பேசுறீங்க.ராதாவை எனக்குப் பிடிச்சிருக்கு அவ்வளவுதான். அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.இதுக்கு எதுக்கு என்னென்னமோ பேசறீங்க.ச்சை” என்று கையில் இருந்த போனைத் தூக்கி சோஃபாவில் போட்டுவிட்டு பைக்க எடுத்தவன் வெளியே சென்றுவிட்டான்.
அவன் சென்றதும்தான் ருக்குமணி கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டமோ? என்று நினைத்தவர் ஹ்ஹான் இது கூட பேசலைன்னா என் மகன் வாழ்க்கை என்னாகுறது? பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம் என்று அசால்ட்டாகத் தோளைக் குலுக்கிவிட்டு அப்படியே கிச்சனுக்குள் சென்று இரவு உணவுக்கான வேலையைச் செய்ய தொடங்கினார்.
அதற்குள் மோகன் வேகமாக தனது நண்பனும் தங்கையின் கணவருமான இன்னொரு மாமா மகன் அருணின் வீட்டுக்குச் சென்றான்.
மோகனைப் பார்த்ததும்”வா மாப்பிள்ளை”என்று அழைத்தான் அவனது நண்பன் அருண்.
“க்கும் என்ன உங்க மாமியார் உடனே போன் பண்ணி சொல்லிட்டாங்களா என்ன?வரவேற்பு பலமா இருக்கு”
“விடுறா அதுதான் அத்தை தினமும் பேசறதுதானே.வா வா உட்காரு ஏதாவது சாப்பிடுறியா”என்றவன் சுமி உங்க அண்ணன் வந்திருக்கான் பாரு என்று தனது பொண்டாட்டிக்கு தகவல் இங்கிருந்தே சொன்னான்.
அவளும் அண்ணன் வந்திருப்பதைக் கேட்டதும் டீயோடு வந்துவிட்டாள்.
“என்ன அண்ணா இன்னைக்கும் அதே பிரச்சனைதானா!”என்று கேட்டவாரு டீயை அவன் கையில்கொட்த்தாள்.
“ப்ச்ச் உங்கம்மாவுக்கு என்ன இவ்வளவு பிடிவாதம்.என் விருப்பத்துக் சம்மதிச்சு பொண்ணுக் கேட்டு வந்தா ப்ராப்ளம் சால்வ்டு. அதுக்கு எதுக்கு இவ்வளவு பிரச்சனை பண்றாங்க?”
“முதல்ல ராதாகிட்ட உன் விருப்பத்தைச் சொன்னியா என்ன?”
“ப்ச்ச் இல்லை”
“ஏன்டா?”என்று அருண் அவனது தோளைத் தட்டிக் கேட்டான்.
“அவக்கிட்டக் கேட்டு ஒருவேளை அவ வீட்டுக்கு வந்துப் பேசச்சொல்லிட்டானா நான் என்ன பண்ணுவேன்.அதுதான் நம்ம பக்கம் எல்லாம் சரிபண்ணிட்டு அவக்கிட்ட பேசுவேன்”
“ஒருவேளை அவ வேண்டாம்னு சொல்லிட்டான்னா?ஏன்னா அவ சூழ்நிலையையும் நம்ம யோசிக்கணும்ல”
“அதுதான் நானும் சொல்லுறேன்.அவ சூழ் நிலையை யோசிச்சுத்தான் நான் இவ்வளவையும் சொல்லுறேன்”என்று மோகன் சொன்னதும் அருண் முழித்தான்.
“என்னடா முழிக்கிற?”
“இல்ல மாப்ள காடைசியில் செய்ய வேண்டியதை முதல்ல செய்யுற.முதல்ல செய்யவேண்டியதை கடைசியில் செய்யுறியேன்னு யோசிக்கிறேன்”
“என்ன உளறிட்டிருக்கீங்க?” என்று சுமி அருணை அதட்டினாள்.
“ப்ச்ச் உங்க அண்ணனுக்கு வாழ்க்கையைப் பத்தியும் முன் யோசனை இல்லை.ராதா பத்தியும் எந்த யோசனையும் இல்ல போலிருக்குடி அதுதான் சொன்னேன். உங்க அண்ணன் முதல்ல ராதாகிட்ட பேசணும்.அவங்க என்ன சொல்லுறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டுத்தானே உங்கம்மாகிட்ட பேசிருக்கணும். அதைவிட்டுட்டு எல்லாத்தையும் தலைகீழா செய்து வைச்சிருக்கான். அதைச்சொன்னா நொய்யின்னு கடிக்க வர்ற”
“ப்ச்ச் என் நிலமை புரியாமல் பேசாதடா”
“அண்ணா அவரு சொல்லுறதும் சரிதானே.நீ முதல்ல ராதாகிட்ட பேசிடேன்.அதுக்கப்புறம் உனக்கு என்ன செய்யணும்னு ஐடியா கிடைக்கும்”
“க்கும் எங்கிருந்து பேச?அவளே மோகன் சார் அப்படிங்கிறதோட இரண்டுவருஷமா நிறுத்திடுறா. அதுக்குமேல பேசப்போனாலும் நிக்கிறதில்ல.பேசுறதுமில்லை. இதுல எங்கிருந்து பேச?”என்று தலையில் கையைக்கொடுத்து அமர்ந்துவிட்டான்.
அதைப்பார்த்த அருண் “டேய்!காதலிச்சா என்ன மாதிரி தைரியமாக இருக்கணும்.உன் தங்கச்சிக்கிட்ட நான் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கிட்டுத்தான் வீட்டுலயே சொன்னேன்”
“அத்தை மகக்கிட்ட காதலைச் சொல்லுறதுக்கே உனக்கு அவ்வளவு வருஷமாகிருக்கு.இதுல இவன் எனக்கு அட்வைஸ் சொல்ல வந்துட்டான்.போடா டேய்”
“அதுசரி உனக்கெல்லாம் அட்வைஸ் பண்ணேன் பாரு என்ன சொல்லணும்!”
“சுமி நீ அம்மாகிட்ட சொல்லிடு.அண்ணன் ராதாவைத்தான் கல்யாணம் பண்ணிப்பானாம்.வேற யாரையும் கட்டிக்க மாட்டானாம்னு சொல்லிடு.அவங்க தம்பிப் பொண்ணையெல்லாம் கட்டிக்க முடியாதுன்னு சொல்லிடு”
“சும்மா இருண்ணா!அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்லும். அம்மா பேச்சைக் கேளு”
“முடியாது.நாளைக்கு இதுக்கு ஒரு தீர்மானம் பண்ணிட்டுத்தான் எதுனாலும்.நான் நாளைக்கு எப்படியாவது ராதாகிட்ட பேசிட்டு வர்றேன்”என்று எழுந்துப்போனவன் அப்படியே வெளியே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போனவன் ருக்குமணியிடம் பேசாமலே போய் படுத்துவிட்டான்.
அடுத்தநாள் காலையில் எழுந்தும் அவர் செய்து வைத்த எதையும் சாப்பிடாமல் கோபத்திலயே ஆபிஸிற்குக் கிளம்பி வந்துவிட்டான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ருக்குமணி நக்கலாகச் சிரித்தவர் சுமிக்குப் போன் பண்ணி விபரம் கேட்டார்.
அவள் சொன்னத்தகவலைக் கேட்டவர் “ஓஹோ அப்படிப்போகுதா கதை.இதுக்கு நானே ஒரு முடிவெடுக்கிறேன்” என்று மனதிற்குள் நினைத்தவர் வேகவேகமாக சமையலை முடித்துவிட்டு நேராக மோகனின் ஆபிசிற்குப் போய் நின்றார்.
ஏற்கனவே மோகன் அன்று ஒரு முடிவோடுதான் ஆபிஸிற்கு சென்றிருந்தான்.
காலையில் போனதுமே ராதாவிடம் போய்தான் நின்றான்.
“என்ன சார்?” என்று கேட்டுவிட்டு அவனது பதிலுக்குக் காத்திருந்தாள்.
அவனோ தனது தொண்டையில் எச்சிலை முழுங்கியவன் “எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு.கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” என்னு பட்டென்று உடைத்துக் கேட்டுவிட்டான்.
ராதாவால் ஒன்றும் பேசமுடியாது பதிலும் சொல்லமுடியாது ஒரு சில நொடிகள் அப்படியே அதிர்ந்து எழுந்து நின்றவள், பின் தன்னைச் சுதாரித்து தனது சீட்டில் உட்கார்ந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
அவளது அந்த செயலில் மோகன் ஒருமாதிரி இன்சல்ட்டிங்காக உணர்ந்தவன் அவளைக் கோபத்தில் முறைத்துப் பார்த்தவாறே அங்கயே நின்றிருந்தான்.
அவளது மனது கல்லாகி வருடம் மூன்றாகிவிட்டது.அந்தக் கல்மனது உருகிக்கரையும் என்று காத்திருப்பவன் முட்டாள் அல்லவா!