தினம் தினம் 22
Thinam22

22 தினம் தினம்!!
டேய் அம்மாவை எதுக்குடா போய் எழுப்புறீங்க, அஞ்சலி தூக்கத்தில் கிடைக்கவில்லை கிறக்கத்தில் கிடந்தாள் படுக்கை எப்போதும் அவளுக்கு முள்ளாக தான் இருந்திருக்கிறது... இன்று மலர் அல்லவா தூவி சென்றிருக்கிறான் கண்ணை திறந்தால் இது எல்லாம் கனவு என்று சொல்லி விடுவார்களோ என பயந்து கண்ணை மூடியே கிடந்தாள் ..
உள்ளே வந்த பிள்ளைகள் வழக்கம் போல அம்மா இது எங்க அது எங்க என்று தாயை பிய்க்க வர சத்யா பிள்ளைகளை நகட்டி விட்டான்
ப்பா ட்ரவுசர் வேணும்
ப்ச் நான் எடுத்து தர்றேன் அஞ்சுவை எழுப்பாத, உடம்பு சரியில்லை
ஓஓஓஓ இன்னைக்கு பத்தாம் தேதில்ல மம்மிக்கு வயிற்று வலி வரும்ல என்ற விஷ்ணுவை சத்யா தலையை உயர்த்தி பார்க்க
ஐ நோ டேடி அம்மா எல்லாம் சொல்லி தந்து தான்,வளர்த்து இருக்காங்க.. இந்த டைம்ல அம்மாவை நான் தொல்லை பண்ண மாட்டேன் நான் பார்த்துக்கிறேன் என்று போன விஷ்ணு முன்னே அவன் குறுகி போன உணர்வு
ச்சீ என்ன வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறேன் என்று அவமானம் தாங்க முடியவில்லை ... இனி ஒரு அஞ்சலி இந்த குடும்பத்தில் வரவிட மாட்டாள் .. தூங்கும் மனைவியை பார்த்து பெருமூச்சு விட்டான்
டேடி அம்மா ஸ்நாக்ஸ் பண்ணி தா, எனக்கு பசிக்குது என்று மகள் வயிற்றை தடவ
அம்மா தூங்கட்டும் அப்பா கடையில வாங்கி தரவா
ம்ஹூம் செஞ்சு கொடு , அம்மா புது புதுசா செஞ்சு தான்,தரும் என்று மகள் அடம் பிடிக்க
மகனை ஒழுங்கா வளர்த்து இருக்கா, உன்னையே ஏன் இப்படி வளர்த்து இருக்கா ?
டேடி அது உங்க ப்ராடெக்ட் , சோ ரிஸ்க் எல்லாம் உங்களை சேர்ந்தது என்று விஷ்ணு கத்த ...
ப்ச் ஆமால்ல , அது என்னடா எங்கிட்ட ரெண்டு நாளா ஒழுங்கா பேசுற....சத்யா மகன் பக்கம் தலையை திருப்ப ..
நீங்க ஒழுங்கா இருக்கீங்க நானும் ஒழுங்கா இருக்கேன் ...
டேய் இத்தனை வருஷமா உங்களுக்கு தேவையானது எல்லாம் செஞ்சது நான்தாண்டா, பெத்தது தான் அவ, நீ போட்டிருக்க டிரஸ் இருந்து படிக்கிற படிப்பு வரைக்கும் , நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உங்களுக்கு போட்டதுடா என்று மகனை சத்யா செல்லமாக முறைக்க
கடமையை செய்ததுக்கும், அன்பு செலுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கு டேட்... அம்மாவுக்கும்தான் நீங்க இத்தனை வருஷம் செஞ்சீங்க.. ஆனா அதுல புருஷன் என்கிற கடமை தகப்பன் என்கிற கடமைதான் இருந்ததே தவிர, இன்னைக்கு தான் என் புள்ள என் பொண்டாட்டிங்கிற எண்ணனத்தோடு செய்றீங்க என்ற மகன் மெச்சூரிட்டியான பேச்சில் சத்யாவௌ வாயை பிளந்து விட்டான்..
அம்மா என்கிட்ட நீ படிச்சு கலெக்டர் ஆகு டாக்டராகுன்னு சொன்னதே கிடையாது... அம்மா என்கிட்ட என்ன தெரியுமா சொல்லுவாங்க, உனக்கு வர்ற பொண்ண மதிக்க கத்துக்க , உன்னை சுத்தி இருக்கிற பொண்ணுங்கள பாதுகாப்புக்க கத்துக்கன்னுதான் சொல்லிக் கொடுத்திருக்காங்க?.
ஓ அதனாலதான் அய்யா பொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா வெகுண்டு எழுந்திடுவியோ ..பெயில் மார்க் வாங்குறதுக்கு காரணம் வேற சொல்றியாடா
அப்பா நீ பத்தாப்புல ரெண்டு தடவை ஃபெயில் அம்மா பார்டர் பாஸ், உங்க ரெண்டு பேருக்கும் மகனா பிறந்த நான் இவ்வளவு தான் இருப்பேன்னு அம்மாவே சொல்லி இருக்கு... இருக்குறத வச்சு ஹேப்பியா இருக்கேன் டாடி.. பறக்குறதுக்கு ஆசைப்படாத ... எப்படியாவது 12 பாஸ் ஆகிறேன் அன்று தாயோடு சகஜமாக பேச பழகியவன் இன்று தகப்பனோடு சகஜமாக பேசுகிறான் என்றால் தகப்பன் சரியான வழியில் நடக்கிறான் என்று அர்த்தம் ...
"அப்பா பசிக்குது ஏதாவது செஞ்சு கொடு" என்று மகள் மறுபடியும் வந்து சத்யாவின் லுங்கியை
இழுக்க
அஞ்சலிக்கு சத்தம் எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது ... அப்படியே பிரம்மையில் படுத்து கிடந்தவள் போல அந்த சத்தத்தை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு அஞ்சலி சுருண்டு படுத்து கிடந்தாள்
அப்பா நான் சப்பாத்தி மாவு பிசையுறேன் நீங்க இந்த காயை மட்டும் வெட்டுங்க
"டேய் எனக்கு கத்தி எல்லாம் பிடிக்க தெரியாதுடா கத்தி கத்தி பேசும் போது பதறாதவன் காய் வெட்ட கத்தி கொடுத்த போது பதறினான்..
"அப்ப அம்மாவை எழுப்பவா என்று மகள் சுரண்ட
"இரு இரு அவளை இப்ப எதுக்கு எழுப்பி விடுற கொஞ்சம் தூங்கட்டும்" என்று சத்யா காயை நறுக்க முயற்சி செய்ய மகன் சப்பாத்தியை பிசைய, மகள் உட்கார்ந்து தொண தொணக்க... இதற்கு மேல் இந்த காட்சியை பார்க்காமல் அவளால் கண்ணை மூடி கிடக்க முடியாது...
பெரிய பெரிய காதல் எல்லாம் அவளுக்கு வேண்டாம்.. அவள் பாதம் பிடிக்க வேண்டாம் அவளைக் கொஞ்சி தீர்க்க வேண்டாம் , அவளுக்கு அடிமையாக இருக்க வேண்டாம் ..
சிறிய சிறிய கவனிப்புகள் தான் பெரிய பெரிய நேசத்தை பிரதிபலிக்கும் ...
சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் நாய்க்கு தெரியாது அது சிறைவாசம் தான் இருக்கிறது என்று... ஆனால் முதலாளியின் ஒரு குரலுக்கு தன் வாலை ஆட்டும்...
அப்படித்தான் மனிதர்கள் சிறை வாசமே இருந்தாலும் , ஒரு சின்ன கவனிப்பு அவர்களை மகிழ்ச்சியாக்கிவிடும்...
அஞ்சலி கொட்டாவி விட்டுக் கொண்டே அவர்களை நோக்கி நடந்து வந்தாள் அந்த அழகான காட்சியை கலைக்க விரும்பாதவள் ... அப்படியே கதவில் சாய்ந்து தன் கணவன் காய் வெட்டும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்
இது போதுமாடா இப்படித்தான் வெட்டணுமா?? என்று சத்யா தன் மகனை நோக்கி திரும்ப , அவனை ரசித்துக்கொண்டிருந்த மனைவியை பார்த்துவிட்டு தடுமாறிப் போனான் ... இதுகாதும் இப்படி ஒரு பார்வை அவள் பார்த்ததே இல்ல ... அது காதல் பார்வை !!
"என்னடி தூங்கல
"நிறைய தூங்கிட்டேன், நகருங்க நான் பண்றேன்
"இவ்வளவு பண்ணியாச்சு மீதியும் பண்ணிடுறேன்...அப்படி சமையல்ல என்னதான் கொம்பு சுத்துற வேலைன்னு பார்த்துடுறேன்
"டேடி இதை தோசை கல்லுல போட்டு எடுங்க முடிஞ்சு நான் போய் குளிச்சிட்டு வர்றேன், சேர்ந்து சாப்பிடலாம் என்று விஷ்ணு ஓட..
இப்போது , அவனும் அவளும் மட்டும் அந்த சமையல் அறையில்
ஸ்ஊஊஊஊ அடுப்பில் கை சுட்டு மாவு கன்னத்தில் ஒட்டி பதட்டமாக சமைக்கும் கணவனை கன்னத்தில் கை வைத்து அஞ்சலி பார்த்து கொண்டே இருக்க ...
"என்னடி எதுக்கு இப்போ இப்படி பார்க்கிற ?
"அப்படியே பிடிச்சு உதட்டில பட்டு இருக்க மாவை என் உதடு வச்சு தேய்ச்சு எடுத்தா என்னென்ன யோசிச்சிட்டு இருக்கேன் ... அஞ்சலி, தன்னை மீறி மனதில் பேசுகிறோம் என்று நினைத்து வாய் விட்டே சொல்லிவிட..
சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்த சத்யா அதிர்ந்து போய் அவளை திரும்பிப் பார்த்து
"என்ன சொன்ன??? மகன் மகள் எங்கே இருக்கிறார்கள் என்று தான் முதலில் அசப்பு பார்த்தான் ...
அய்யய்யோ!! தன் வாயில் அடித்துக் கொண்டவள்
"சாரி சாரி மனசுல பேசுறேன்னு நினைச்சு வெளியே பேசிட்டேன் போல இருக்கு ,
"ஓஓஓ அப்போ மனசுல நினைச்சி இருக்க,
"ம்ம் ம்ஹூம் இரண்டு பக்கமும் தலையாட்ட
"உன் பொண்ணு டிவியில பிஸியா இருக்கா, உன் மகன் குளிக்க போயிட்டான்.. இந்த குட்டி கேப் போதுமா...
சும்மா சொன்னேன் விடுங்க என்று அஞ்சலி ஓட பார்க்க ... அவள் முந்தானையை பிடித்து இழுத்த சத்யா
இவ்வளவு ரொமான்டிக்கா எல்லாம் ,நீ பேசுவியாடி..
மனைவி இப்படி பேசுவது இதுதான் முதல் முறை..
விஷ்ணு வந்திடப்போறான் விடுங்க
"இவ்வளவுதான் நினைச்சியா இல்ல வேறு எதுவும் நினைச்சியான்னு சொல்லு
"ஹிஹி ,இவ்வளவுதான் நினைச்சேன்
"பொய் உன் கண்ணு திருதிருன்னு முழிக்குதே வேற என்ன நெனச்சேன்னு சொல்லு..
"சப்பாத்தி தீஞ்சிட போகுது அத பாருங்க நான் போறேன்" என்றவள் உதடு பக்கம் தன் உதட்டை கொண்டு வந்த சத்யா
"ஒழுங்கா உதட்டில இருக்கிற மாவை, உன் உதட்டை வைத்து தேய்ச்சு எடுத்துட்டு போ.
"பிள்ளை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாண்ட கதையா இருக்கு உங்க கதை,
வயசு இருக்கும் போதெல்லாம் விட்டுட்டு இப்போ கசமுசா கேக்குதா உங்களுக்கு என்று அவன் இடையில் இடித்த மனைவி கையை பிடித்து இரண்டு பக்கமும் அழுத்திக்கொண்ட சத்யா
சரி இப்பவாவது வாழனும்னு புத்தி வந்திருக்குல்ல..
"இது ட்யூப்லைட் கூட இல்லை குண்டு பல்ப் மாமா எத்தனை வருசம் கழிச்சு பிக்கப் கொடுக்குது" என்று கூறிவிட்டு அஞ்சு நாக்கை கடிக்க..
"ஹாஹா , ஆனா நல்லா இருக்குடி .. நீ இந்த வீட்டுக்கு குடும்பத் தலைவன் , நீ இப்படித்தான் இருக்கணும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்லி ஒரு மாதிரி கெத்தா நம்ம தலையில பாரத்தை தூக்கி வச்சு ஏமாத்தி வச்சுட்டாங்கன்னு தோணுது....
"தோணுதா ,அதான்டா உண்மை...
"ம்ம் , இப்படி பேசி சிரிச்சு குழந்தைகளோட குழந்தைகளா விளையாடி பொண்டாட்டியோட கொஞ்சி பேசி சிரிச்சு ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு அஞ்சு.. ஆனா புதுசா இருக்கு , புடிச்சிருக்கு ரொம்ப இழந்துட்டோம்னு ஒவ்வொரு நொடியும் யோசிக்க வைக்குது.. நிறையா கில்ட்டியா இருக்கு என் பிள்ளைங்க கிட்ட எப்படி மன்னிப்பு கேட்கணும்னு தெரியல என் மனைவி கிட்ட எப்படி மன்னிப்பு கேட்கணும்னு புரியல என்றவன் தயங்கி அவளை கண்ணோடு கண் பார்த்து
"மன்னி "என்று தொடங்க போக, அவன் உதடு அவள் உதட்டால் மூடப்பட்டது ..
அவன் மன்னிப்பு அவளுக்கு எப்போதும் தேவையில்லை ... அவன் உதட்டில் இருந்த மாவை தன் உதடு வைத்து துடைத்துவிட்டு அஞ்சலி ஓடிவிட்டாள்
அவள் உள்ளம் சிலிர்க்க தந்து விட்டுப் போன முத்தத்தில் உடல் சிலிர்க்க நின்றான் உற்றவன்!!
அப்படி வாழ வேண்டும் இப்படி வாழ வேண்டும் என்ன ஆசை எல்லாம் இல்லை, அவனோடு கை பிடித்து, தோள் சாய்ந்து வாழ வேண்டும் அவ்வளவு தான்
இளமையில் அவன் தோளும், முதுமையில் அவன் கையும் கொடுக்கும் சந்தோஷத்தை , நிம்மதியை அவன் சம்பாதித்து தட்டும் பணமும் செல்வமும் மனைவி அந்தஸ்தும் கூட கொடுத்து விடாது !!