யுகம்7

Yu7

யுகம்7

7 யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா?? 

புலவா  காலையிலேயே எழில் அழைத்து விட்டதாக புலவன் வந்து எழில் முன்னால் நின்றான்..  எப்போதும் ஒரு  லோடு கல்லை மூணு நேரம் விழுங்கிய பார்வை தான் இருக்கும்..

பேசினா வாய் வலிக்கும்னு அதிசய நோயோ என்னவோ..  வாயை தாண்டாது நாலு வார்த்தை வரும்  என்ன கண்டு அவள் மயங்கினாள் என்றே புரியவில்லை..

தாலி கட்டியது தெரிந்து விட்டது போல என்றுதான் நினைத்தான் .. பயந்து ஓட அவன் எந்த தவறும் செய்ய வில்லையே அடாவடியாக குறுக்க விழுந்து தாலி வாங்கியது இவன் தங்கை...  அவன் ஏன்,பயம் கொள்ள வேண்டும் கேட்டால் உண்மையை உள்ளபடி சொல்வான் 

அரிச்சந்திர வகையறா அதனால் தான் எழில் இவனை நம்புவது ... 

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் புலவா...

"ம்ம் 

"மிலாம்மா காலேஜ்ல ஏதாவது வித்தியாசமா இருக்குதா ??என்று எழில் தன் முன்னால் நின்ற புலவனை கூர்ந்து பார்க்க .. அவன் கையில் வைத்திருந்த சாவியை சுழட்டிக் கொண்டு நின்றான்

"உன் கிட்ட தான் கேட்கிறேன்!!!  அவளை பத்திரமாக பார்த்துக்கன்னு  அனுப்பிவிட்டு இருக்கேன் அங்கே ஏதாவது வித்தியாசமா இருந்தா உடனே வந்து சொல்லு.."

"உங்களுக்கு டிரைவர் வேலை பார்க்கிறது மட்டும்தான் என்னோட வேலை,  அவங்களுக்கு பாடிகார்ட் வேலை எல்லாம் என்னால் பார்க்க முடியாது ... நாளையில் இருந்து கந்தப்பனை கூட்டிட்டு போக சொல்லுங்க "என்று விட்டு புலவன் எழில் பதில் பேச நேரம் கொடுக்காது வெளியே போய்விட்டான்

"எழில் அவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும் பாத்தியா நம்ம முன்னாடியே திமிரா பேசிட்டு போறான்..அனல் பல்லை கடிக்க 

 டேய் அவன் திமிரா பேசலடா ,"அவன் பேச்சே இவ்வளவுதான் 

"ப்ச் நீதான் மெச்சிக்கணும் அவனும் அவன் பார்வையும்... 

"சும்மா இருடா, புலவா,  நாளைக்கு நைட் மிலாம்மாவுக்கு பிறந்தநாள் பார்ட்டி இருக்கு ,  எல்லாத்தையும் கொஞ்சம் நின்னு பாத்துக்கோ என்று போகும் புலவனுக்கு எழில் சத்தம் கொடுக்க திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு போய்விட்டான்... 

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என இருந்து கொண்டு நாலு குவாட்டரை மிக்சிங்கே இல்லாமல் குடித்துவிட்டு பயம் இருந்தாலும்,  அவனை சைட் அடிப்பதையும் மறக்காமல் செய்து கொண்டிருக்கிறாள் புலவனின் மனைவி

மிலானி , அவன் பார்க்கிறான் என்று தெரிந்தே துணிந்து ஜன்னல் அருகே நின்று அவனை சைட் அடித்தாள் .... 

அவள் தொல்லை தாங்காது புலவன்  கதவை அடைத்தால்..  ஜல்லிக்கல்லை வைத்து அவன் கதவை உடைத்தாள்...  மேலிருந்து ஜல்லி கல்லை ஒவ்வொன்றாக அவன் கதவின் மீது வீசி புலவன்  தூக்கத்தை நிம்மதியை அமைதியை கலைக்க.. இரவு ஒரு குட்டி கல்லை வைத்து புலவன் அறையை நேக்கு பார்த்து கொண்டு மிலானி நிற்க ... அறையை திறந்து கொண்டு சைந்தவி உள்ளே வர ..  பதறி கல்லை போட்டு விட்டு அசடு வழிய திரும்பி 

அண்ணி 

என்ன பண்ணிட்டு இருக்க ?

"அது ஒன்னும் இல்லையே 

"ஆமா என்னத்துக்கு வீட்டுக்கும் சுடிதார் ஷால் போட்டு சுத்துற அதுவும் கழுத்தை சுத்தி வேற..   அடிக்கிற வெயிலுக்கு எதுக்கு இத்தனை டிரெஸ் என்று அவள் அறையில் நோட்டம்  விட ..

மிலானி எச்சில் விழுங்கினாள் 

இரண்டு அண்ணியும் டிடெக்டீவ்...  சந்தேகம் வந்துச்சு செத்தோம் என தெரியுமே...  புலவன் காதலிச்சா துணிவு வரும் ... அவனே  தாலி கட்டிய பொண்டாட்டியை ரெண்டு நாளா கண்டுக்கவே இல்லை  , முத்தம் வேறு வெட்கம் கெட்டு கொடுத்துட்டு வந்தும் கூட ,  இரும்பு குண்டை விழுங்கிய புது புருஷன் .. இவள் பக்கம் திரும்பாது சோதனை பண்ணுகிறான்..,  இதன் இடையில் மிலானி மாட்டினாள் ... கருணையே இல்லாது குடும்பம் இவளை தூக்கி உத்திரத்தில் மாட்டி விடும் என அறிவாளே...

"ஆமா,  இங்க எதுக்கு இவ்வளவு கல்லு தூக்கி வெச்சி இருக்க வீட்டுக்குள்ளேயே எதுவும் குட்டியா வீடு கட்ட போறியா என்ன?? என்று சைந்தவி அவள் மேஜை மீது  குவித்து வைத்திருந்த குட்டி கல்களை புரியாது தலையை சொரிந்து கொண்டே பார்க்க..

"அதுவா , அண்ணி இந்த கல்லை பத்தி உங்களுக்கு தெரியாது..  அதிசய கல்

"அதிசய கல்லா ??

"ம்ம் இந்த கல்லை பத்து நாள் ரூமில் வைச்சு  பூஜை பண்ணிட்டு அது கிட்ட வரம் கேட்டா கேட்டதெல்லாம் அப்படியே கொடுக்குமாம்....  என் பரெண்டு சொன்னா...  அதான் ட்ரை பண்ணி பாக்கலாமேன்னு கொண்டுட்டு வந்தேன்..

"ஏதே,  வரம் கொடுக்கிற கல்லா..  அப்படி ஒரு கல்லு இருக்கா என்ன,  லூசா நீ ??என்று சைந்தவி தலையில் அடிக்க...

"சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம்னு நினைத்தேன் ஒருவேளை, ஒர்க் அவுட் ஆயிடுச்சுன்னா??" மிலானி புத்தகத்தை வைத்து படிக்கிறேன் என்ற பேரில்  புத்தகத்தில் ஒரு கண்ணும் ஜன்னல் அருகே ஒரு கண்ணையும் வைத்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்திருக்க..

"அது இருக்கட்டும் இப்போ எதுக்கு பெட்ட தூக்கி ஜன்னல் பக்கத்துல போட்டு இருக்க ???என்றதும் திக்கித் திணறியவள் ..

"இந்த அதிசயகல்ல இப்படி கிழக்கு மேக்க  போட்டாதான் வேலை செய்யுமாம் அண்ணி ...  அதுவும் என் பிரெண்டு சொன்னா , எவ்வளவு நேரம் தான் ஜன்னல் அருகேயே நிற்பது...  கால் வலிக்கும்ல .. அதான் பெட்டையே ஜன்னல் அருகே  இழுத்து போட்டு முழு நேர காதல் வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள் ...

சைந்தவி சிறிது நேரம் அங்கேயே நின்று யோசனையாக குறுக்கும் நெடுக்கம் நடந்தவள் மெல்ல மிலானிக்கு தெரியாது 4 கல்லை எடுத்துக்கொண்டு  கீழே ஓடிப்போனவள்.. மாதுரியிடம்  விஷயத்தை சொல்லி,   அவள் கையில் இரண்டு கல்லை கொடுத்து

"அக்கா எத்தனை நாள் தான் நாமளே புருஷன் கால அமுக்கறது,  ஒரு நாளாவது நம்ம கால புருஷனை அமுக்க வைக்கணும்..

அதுக்கு ?

"இந்த கல்ல வச்சு நாமளும் 10 நாள் வேண்டுவோம் ...  புருஷன் ஒரு நாளாவது நம்ம பின்னாடி நாய்க்குட்டி மாதிரி சுத்த,  இந்த கல்லு கிட்ட வரம் கேட்கிறோம் என்ன சொல்றீங்க ?

"ப்ச் , அவதான் லூசு மாதிரி ஏதோ சொல்லி இருக்கான்னா...  நீயும் அதைக் கேட்டுகிட்டு கல்லை களவாண்டுட்டு  வந்து இருக்க...  வரமே கேட்டாலும் உன் புருஷனும் என் புருஷனும் நமக்கு அடங்கி போற ஆட்கள் கிடையாது... ஏதோ தாலி  கட்டுன பாவத்துக்கு மூணு வேளை சோறு போட்டுக்கிட்டு இருக்காங்க.  நீ எதையாவது கிறுக்குத்தனம் பண்ணி மொத்தமா மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு பிறந்த வீட்டுக்கு போறதுக்கு ரெடி ஆகிடாத.. 

"இல்ல அக்கா சும்மா ட்ரை 

"செருப்பு ,  உனக்காவது பரவாயில்லை ஒரு தங்கச்சி தான் இருக்கு , எனக்கு ரெண்டு அண்ணன் போனா இருக்குறதுக்கு கூட இடம் கிடையாது சொல்லிட்டேன் என்று மாதுரி வேலையை பார்க்க போய்விட

"ப்ச் போங்க நான் வேண்டுறேன் அந்த அனல கால்ல விழ வைக்கிறேன்" என்று கல்லை கொண்டு போய்  தன் படுக்கை கீழே வைத்தாயிற்று... 

புலவன்...  மாலை அறைக்குள் வர,  கல்போய் அவன் நெஞ்சில் விழுந்தது..  புலவன் மேலே எட்டிப் பார்த்து முறைத்து விட்டு ... மறுபடியும் உள்ளே போக நுழைய..  அவன் முதுகில் வந்து அடுத்த குட்டி கல்  விழுந்தது ... பல்லை கடித்தவன்...  குனிந்து பெரிய கல்லை எடுக்க ..

அச்சச்சோ!! கோவம் வந்துடுச்சு என்று இவள் பயந்து தலையை குனிந்து கொள்ள..

கிரிச் என்ற சத்தத்தோடு அவள் ஜன்னல் கதவு சில்லி சில்லியாக நொறுங்கி விட்டது... 

அப்பாடி  !! என் புருஷனுக்கு என்னா கோவம் வருது என்று சிரித்தவள் அவன் கைப்பட்டு  வந்த கல்லை எடுத்து இச்  என்று அந்தக் கல்லின் மீது முத்தம் வைக்க ... புலவன் கழுத்தில் நரம்புகள் கோபத்தின் மிகுதியில் புடைத்துக் கொண்டு வந்தது..  மீண்டும் மீண்டும் அவள் இச்  வைக்க..  உள்ளே போய் டொம் என்று கதவை மூடிவிட்டான்....

 நீ வேலையை விட்டு போனா என் பிணம் விழும் என மிரட்டி வைத்திருக்க செத்து போ என்று அவனால் போக முடியவில்லையோ ?? 

கட்டிய தாலிக்கு கட்டுப்பட்டு நின்றானா,  இல்லை அவள் அன்புக்கு கட்டுப்பட்டு நின்றானா?? ஆனால் அவள் நிழலுக்குள் அடங்கி நின்றான்...