அலெக்சாண்டரின் அல்லிக்கொடி 1
Alex1

1 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
முதல் பாகம் ஆல்பா காதலன்
ரெண்டாவது பாகம் அகநக நேசமே
இம்சை இன்ஸ்பெக்டர் செளதிரி மற்றும் கான்ஸ்டபிள் வர்ணா... இதன் அடிப்படை கதை செளதிரியை திருமணம் செய்து கொள்ள வரும் யாமினி, செளதியே ஒரு அலட்டல் பேர்வழி, அவனையே சுற்றலில் விட்ட யாமினி.. போதும்டா சாமி, என்னை விட்டுடு என்று சவுத்ரி கான்ஸ்டபிள் வர்ணாவை கரெக்ட் செய்துவிட , இந்த இடைப்பட்ட காலத்தில் அகம் பிடித்த யாமினி என்ன ஆனாள் என்பதே கதை...
வாழ்க்கை யாருக்கும் அவர்கள் விருப்பம் போல அமைவது இல்லை போல, நல்லவனோ தீயவனோ மேல இருப்பவன் கையில இருக்கும் பொம்மைகள் தான் மாந்தர் அனைவரும் ..
வெல்வெட் படுக்கை மீது விரிந்த தலை முடியோடு குப்புற கிடந்தது ஒரு உருவம்
க்ரீச் என்று கதவை திறந்து கொண்டு நல்ல பெருமாள் உள்ளே வர
'நான் யாரையும் பார்க்க விரும்பல கெட் அவுட் "என்று கையில் கிடைத்த பொருளை தூக்கி அந்த உருவம் ஏறிய
"கண்ணா நான் அப்பாடா" என்றதும் முடி நடுவே இருந்த முகத்தை ரெட்டை விரல் கொண்டு விலக்கி காட்டிய மகள் கண் சிவப்பை கண்டு அவரே பயந்து போனார் ...
அவள் அகம் பிடித்த
யாமினி அல்லிக்கொடி !! வயது 22 ...
தங்க தொட்டிலில் பிறந்து, வைர கட்டிலில் வளர்ந்த செல்வச் சீமாட்டி , செருக்கு அவள் அழகு!! திமிர் அவள் பேரழகு!! நான் என்ற கர்வம் கொண்ட அழகி அவள்!! உலகம் அவளுக்கானது என்று வாழும் தனி ஒருத்தி..
தகப்பன் தகாத வளர்ப்பில் தறிகெட்டு திரியும் பெண்மான் அவள் , ஆடம்பர தேவதை அவள், அழகும் ஆபத்தும் ஒருங்கே வாய்க்க பெற்றவள் இந்த அல்லிக்கொடி ...
மதுபாட்டில் படுக்கையில் சிதறி கிடந்தது.. ஹை சொசைட்டி வாழ்க்கை வாழும் தன் மகள் ஒரு நாளும் இப்படி குடித்து வெறித்து நின்றது இல்லை .. பணக்காரி என்றால் பகட்டான ஆடை , பஃப் , ஆடம்பர வாழ்க்கை என்று வாழ்வாள்.. இப்படி எதற்காகவும் முடங்கி விடும் ஆள் இல்லையே ... மகளை பார்த்து நல்லபெருமாளுக்கு மனம் பொறுக்க வில்லை .. இதற்கு காரணம் ஆன அவனை என்று பல்லை கடித்தார்...
ஆனால் எதுவும் செய்ய முடியாது நின்றாரே...இவருக்கே தினுசு தினுசாக மருமகன் ஆப்பு வைத்து விட்டானே .எங்கே திரும்பினாலும் கன்னிவெடி தோண்டி புதைத்த அவனை நினைத்து கோவம் தான் வந்தது ...
"உங்க மருமகன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை நீங்க அவரை கொல்ல பார்க்கிறீங்கன்னு நம்ம ஆபிஸ்லேயே கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கார் சார் "
"ப்ச் கிழிச்சு போடு அவனை கொல்லாம விட மாட்டேன்
"முடியாது சார் ஒரு கம்ளைண்ட் காப்பியை சிஎம் செல்லுக்கும் அனுப்பி இருக்கார், என்ன ஏதுன்னு அங்க இருநது விசாரிக்கிறாங்க ? நாம எதாவது செஞ்சா நமக்கே ஆப்பாகி போகும்"
ஆஆஆஆ இவனை என்று கத்த தான் முடிந்தது ... இவர் நிலை இது என்றால் மகள் நிலை மிகவும் மோசம் ...செளதிரி பத்திரிக்கை முன்னே யாமனிக்கும எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி விட ... அப்போ அவள் கணவன் யார் என்ன நடந்தது என்று அத்தனை பேரும் அவளை நச்சரிக்க...
ஐசியுவில இருக்கும் போது அவளை ரொம்ப வருசமாக காசலிச்ச லண்டன் பிசினஸ் மேன் கல்யாணம் பண்ணிட்டார் .. சில காரணங்களால மகக்கிட்ட அதை சொல்ல முடியல , சீக்கரம் அவரை இன்ட்ரோ பண்றேன்" என்று நல்லபெருமாள் சப்பை கட்டு கட்டி வைத்திருக்க... தன் எதிரே நின்ற தாயின் முகத்தில் கழுத்தில் கிடந்த தாலியை விட்டெறிய போன அவள் கை எலும்பு உடைந்தே போனது
இது கீழ இறங்கிச்சு உன் உசுர் மட்டும் இல்லை , உன் அப்பன் உயிரையும் சேர்த்து எடுத்து புடுவேன் என்ற ரத்த சிவப்பு கண் கொண்ட அவன் பார்வைக்கு பதில் பார்வை கொடுத்து கொண்டே வந்தவள் , வந்த நேரத்தில் இருந்து குடித்து வெறித்து கிடக்கிறாள்..
"கண்ணா" தன் தகப்பனை ஏறிட்டு பார்த்த யாமினி கண்கள் தன் கழுத்தில் கிடந்த தாலியை வெறிக்க
"அப்பா எனக்கு தெரியாது இந்த தாலி அவன் செத்தா தான் இறங்கும் னா
"கொன்னுடுறேன்மா
ம்ம் உறுமினாள்
அதுக்காக நீ இப்படியே அடைஞ்சு கிடக்காத கண்ணா, அப்பா நான் இருக்கேன்.. இன்னைக்கு நைட்டே அவன் கதையை முடிக்கிறேன் என்ன தகப்பனுக்கு மெலிதான புன்னகையை கொடுத்தவள்
"தட்ஸ் மை டேட் ... நான் பார்ட்டிக்கு போறேன்
"இந்தாம்மா காசு என்று பணக்கட்டை மகளுக்கு கொடுக்க
ம்ம் என்று பணத்தை அள்ளி ஹேண்ட் பேக்கில் திணித்து கொண்டு தன் வெளிநாட்டு காரை எடுத்து கொண்டு அடங்கா பெண்குதிரை பப் நோக்கி போனது ...
கீர் கீர் என்று வாயில் ஒலி எழுப்ப
வேகமா போ செவலை என்ற குரலில் அந்த மண் ரோட்டில் செவலை நாலு காலில் சிலுப்பி கொண்டு ஓடியது ...
மாட்டி வண்டி மீது தொடை தெரிய வேட்டி கட்டி பின்னால் வரும் வண்டிளுக்கு வழி கொடுக்காது தன் வண்டியை விரைந்து ஓட்டி கொண்டு போனான் அவன் ...
வண்டி ஓடி கொண்டு இருக்கும் போதே நிலத்தில் குதித்து இறங்கி வேட்டியை இறுக கட்டியவன் தொடையில் ஒரு தட்டு தட்டி
"வக்காளி !!என் ஊரு பிள்ளைகளை கிண்டல் அடிச்சிட்டு, இந்த நெப்போலியனை தாண்டி போயிட முடியுமாவே?? என்றவன் முகம் மறைத்த தன் முறுக்கு மீசையை முறுக்கி கொண்டே இறங்கி வந்த அந்த பத்து நபரையும் அடித்து வானில் பறக்க விட்டான் ...
அவன் அலெக்சாண்டர் நெப்போலியன் 29 வயதுக்காரன் ..
பக்கா கிராமத்தான் என்று பார்த்ததும் கிராமத்து முரட்டு களை .. டேய் வானத்தை இடிச்சுட்டு போயிடாத என்ற அளவு உயரம், நல்ல நிறம் ஆனால் வெயிலும் மழையும் சற்மு கருக்க வைத்திருந்தது... அழகன் இல்லை , பேரழகன்டா என்று கூறும் காட்டு அழகுதான்... நான் விவசாயி என மார்தட்டி சொல்வான்.. செம்மண் பூமி அவன் சொர்க்கம் தன் தமக்கை அவன் தெய்வம் ... ஊர் அவன் உல்லாச பூமி.. உறவுகளுக்கும் ஊருக்கும் மதிப்பு கொடுக்கும் ஒருவன் ...
"இந்த ஊருக்கு எல்லை சாமி வேண்டாம்டே நெப்போலியன் ஒருத்தன் போதும் ஆயிரம் யானைக்கு சமம், இனி இங்கன தலையை வச்சி படுத்திய பொணம் ஆக்கி புடுவேன்" என்று தன் வேட்டியை தொடை வரை ஏத்தி கட்டியவன், போன் மணி அடிக்க , வேட்டியை நகட்டி பட்டாபட்டி டவுசர் உள்ளே கைவிட்டு பட்டன் போனை எடுத்தான் ரெண்டு ரப்பர் பேண்ட் போட்டு அதை இறுக்கி வைத்திருந்தான்... அதை எடுத்து காதில் வைக்க.. கண்ணை சுருக்கினான் ..
அந்த பீத்த சிறுக்கி இன்னும் உசுரோட தான் இருக்காளா, வர்றேன்டி உன் பவுசு எல்லாத்தையும் புழுதியாக்க என்று மீசை நடுவே பல்லை அரைத்தான்....
உன் ஹீரோவை இன்ட்ரோ கொடுக்கிற ஐடியாவுல இருக்கியா இல்லையா ?பிரபல பப்பில் ஆண் பெண் பேதம் இல்லாது ஆடி கொண்டிருக்க..
கருப்பு நிற தொடை தெரிய ஆடையில் கால் மேல் கால் போட்டு யாமினி உக்கார்ந்து , குட்டி கண்ணாடி குடுவையில் இருந்த தங்க நிற திரவத்தை விழுங்கி கொண்டிருந்தாள்... அவள் தோழி அருகே இருந்து நச்சரிக்க எரிச்சல் பட்டாள்.. செள்தரி பிரஸ்மீட் வைத்து இது தான் என் மனைவி வர்ணா என்று கூற அப்போ யாமினி என்று கேட்க அவங்க புருசன் பத்தி அவங்க சொல்வாங்க, யாமினி மேடமை லவ் பண்ணி அவரே கட்டி இருக்கார் , ஒரு இக்கட்டான சூழ்நிலையில என்னால இதை அப்ப சொல்ல முடியல, நான் அவங்களுக்கு தோழன் மட்டுமே என்று முடித்து விட ... இவளை நண்பர்கள் யாருடி அது நீயே லவ் பண்ணின ஆளுன்னா செம பார்ட்டியா இருப்பாரே என்று கேட்டு தொல்லை பண்ண .. தகப்பன் சொன்ன பொய்யை ஆமோதிக்க...
எதிலும் தோற்க விரும்பாதவள் சிரித்து வைத்தாள்..
நீதான் வேணும்னு கட்டி இருக்காரே செம பார்ட்டி வைடி என்று ஓசி சரக்குக்கு அலைய இவளும் வந்தாச்சு..
"
சொல்லுடி என் அவர் பார்ட்டி வரல
" ப்ச் அவர் லண்டன் பிசினஸ் ட்ரீப் போயிருக்கார் , வந்ததும் இன்ட்ரோ கொடுக்கிறேன் ...
"அவரை பார்க்கணும்னு டெம்ட் ஆகுதுடி .. என்று அனைவரும் அவளை டார்ச்சர் செய்ய
"இது உனக்கு கல்யாணம் ஆனதுக்காக பார்ட்டி அதுக்கு கூட சார் வரலையா ??
"ப்ச் அவர் பிக் ஷாட் இந்த மாதிரி லோகிளாஸ் சரக்கு எல்லாம் குடிக்க மாட்டார்... அவன் பழக்கம் எல்லாம் வேற லெவல் என்று பல்லை கடித்தாள்
"ஓஓஓ அவ்வளவு பெரிய ஆளாடி ஆளை காட்டவே காட்டவே மாட்டைக்கிறயே
"ம்ம் அவர் அவ்வளவு பிசிடி, வெளிநாட்டு கார்ல ஊருக்குள்ளேயே சுத்துவார் வெளிய போனா சொந்த ஜெட்...
"வாவ் !!" என்று அனைவரும் வாயை பிளக்க அவள் வயித்தெரிச்சல் அவளுக்கு தான் தெரியும் கழுத்தில் கிடந்த தாலியே முறைத்து கொண்டு பார்த்தாள்
தாலி மேல கை வச்சி பாருடி பீத்த சிறுக்கி தாலி மேல வச்ச கையை வெட்டி தந்துட்டு போயிடுவேன் என்று ரத்த கண்ணோட மிரட்டிய நெப்போலியன் உருவத்தில் தலையை உதறினாள்..
"சூப்பர்டி அப்போ பெரிய திமிங்கலம்தான் போல
"ம்ம் அவர் வீட்டுக்கு பின்ன நீச்சல் குளம் ஒரு ஊருக்கு இருக்கும் அதுல தான் சொகுசு காரை கழுவுவாங்க "
"அடிபொலி
"யா , அப்பறம் அவர் வச்சிருக்க ஃபோன் இன்னும் லாஞ்ஜே ஆகல .... முதல் பீஸ் அவர்தான் வச்சிருக்கார் பத்து லட்சம் போன் மட்டும்
"எம்மாடி ...
"அவர் பார்ட்டி கொண்டாட சரக்கு வெளிநாட்டுல இருந்து தான் வரும் , அப்படி ஆளு இங்க எல்லாம் வருவாரா ஏதோ என்ன உங்க கூட பழக விடுறதே பெரிசுடி,
ஜெம் "
"ம்ம் அவர் ப்ரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப பெரிய ஆட்கள்டி .. எப்பவும் பிசியா தான் இருப்பார்...அடித்து விட்டாள்...
"சூப்பர்டி , அப்போ நாம பார்ட்டி தொடங்குவோம் என்று சரக்கு பாட்டிலை பொங்க விட யாமினி வயிறு திபுதிபுவென பொங்கியது...
ப்ச் சலித்து கொண்டு யாமினி நடனம் புரியும் இடம் போய் கலர் கலராக விளக்கு எரியும் இடத்தில் போய் ஆடை வழுவி விழுவது கூட போதையில் ஆட ஆரம்பிக்க
பளீர் என்று கண்ணாடி பாட்டில் உடையும் சத்தத்தில் அத்தனை ஆட்டம் பாட்டமும் சட்டென்று நின்று ஆஆஆஆஆஆ என்ற அலறல் சத்தம் வந்த திசை நோக்கி திரும்பி பார்க்க ... வாசலில் விளக்கு ஒளி திரும்ப ,
அங்கே நெட்டநெடு உயரத்தில் வேட்டியை ஏத்தி கட்டி சிகரெட் இழுத்த படி நின்றான் அலெக்சாண்டர் நெப்போலியன் .... அடி பட்டு கிடந்தவன் நெஞ்சில் தன் நீண்ட காலால் ஏறி மிதித்து உள்ளே வர ..
சார் சார் நீங்க எல்லாம் உள்ள வர கூடாது" என்று பவுன்சர் போய் அவனை தடுக்க தன் மீசையை முறுக்கி விட்டவன் கண்ணை ஏன் என்று ஏற்றி இறக்க
"வேட்டி கட்டி உள்ள வர அனுமதி இல்லை
"ஓஹோ, அப்போ இப்படி அரைகுறையாக வந்தா தான் உள்ள அனுமதிப்பிகளோ?? அரைகுறையாக நின்ற இளைஞர்களை அவன் காட்ட ..
"அது
"அவ்வளவு தான என்று வேட்டியை கழட்டி தோளில் சுற்றி போட்டு கொண்டவன், பட்டாபட்டி டவுசரில் இருந்து பணத்தை அள்ளி அவன் முகத்தில் வீசி
"அது என்னது ஹான் டிப்சு வச்சிக்க "என்று கூட்டம் நடுவே அவன் தாலி கட்டிய அடங்காப்பிடாரியை தேடி போனவன்
"நெப்போலியன் ஒரு பாட்டில்" என்று அவன் சத்தம் கொடுக்க
"சார் அதெல்லாம் இங்க இல்ல
"பின்ன என்ன மயிக்குடா கடை நடத்துற, இப்பவே நெப்போலியன் வரணும் இல்லை கடையை அடிச்சு உடைச்சு போட்டுட்டு போயிடுவேன்.. தேடி புடுச்சு நெப்போலியன் வாங்கிட்டு வா, நான் குடும்ப பஞ்சாயத்தை முடிச்சுட்டு வர்றேன்" என்று யாமினி உட்கார்ந்து இருந்த மேஜை மீது ஏறி உட்கார.. அவள் தோழிகள் எல்லாரும் இவன் நடத்தையில் முகத்தை சுளிக்க முறைத்த மேனியாக கண்ணை விரித்து கொண்டிருந்த யாமினியை பார்த்து விசில் அடித்தவன்... அவள் காது பக்கம் கீழே விழுந்த வண்டி சாவியை எடுப்பது போல குனிந்து
நான் யாருன்னு உன் தோழிக கிட்ட சொல்லவா பொண்டாட்டி.. அவள் முகத்தில் தாறுமாறான ரேகை ஓட...
"எப்படியும் நான்தான் உன் புருசன்னு நீ வாயை திறக்க போறது இல்ல , ஆனா நான் அப்படி இல்லடி வீடு வீடா நீதான் என் பெண்டாட்டின்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிருவேன்....
இடியட் "
"இருந்துட்டு போகட்டும்..
"மேனஸ் இல்லை இப்படியா வருவ என்று டவுசரை காட்ட
"நீ இப்படி வரலாம் நான் இப்படி வர கூடாதா.. அவள் ஆடையை காட்ட
"ப்ச் ..
"இப்ப என்ன பண்ற , அப்படியே எழும்பி வெளிய போற, இல்லைன்னு வை அந்த மைக்கை வாங்கி அய்யா அம்மா நீங்க ஆவலோடு எதிர்பார்த்த அல்டாப்பு ராணி புருசன் நான்தானுங்கோன்னு கத்தி கத்தி சொல்லுவேன், சொல்லவா" என்றான் மீசையை உதட்டை வைத்து உயர்த்தி..
சொல்லிக்க ஐ டோன்ட் கேர் என்றவளை பார்த்து கொண்டே நெப்போலியன் கூட்டம் நடுவே போய் மைக்கை பிடுங்கி
அதாவது பட்டது என்ன வென்றால் ,நீங்க காண ஆவலோடு காத்திருக்கும் தங்கம் , மதுரையின் சிங்கம் , அல்டாப்பு ராணியின் புருசன் யாருன்னா??" என்று யாமினியை கூர்ந்து பார்க்க , யாமினி சட்டென்று கிளாஸை கீழே வைத்து விட்டு விறுவிறுவென எழும்பி போய் விட்டாள் ..
இனிமே இங்கிட்டு வா , மானத்தை வாங்கி புடுறேன் என்று முகத்தை சுளித்து கொண்டே நெப்போலியனும் அவள் பின்னே போனான் ...
இவன் தான் புருசன் என்று காட்ட அவளுக்கு அருவருப்பு
இவள் தான் என்று மனைவி என்று வாழ அவனுக்கு அருவருப்பு
அவள் பெண்ணாக மாறாது காதல் என்ற ஒன்று இவர்கள் நாட்டுக்குள் படையெடுக்க போவது இல்லை ...
அலெக்சாண்டர் அல்லிராணியை சிறை எடுப்பானா??