அலெக்ஸ்14

Alex14

அலெக்ஸ்14

14 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!

இங்கே ஹால் சோபாவில் உட்கார்ந்து நாய்க்கு உடுப்பு போட்டுக் கொண்டிருந்த மனைவியை என்ன முயன்றும் முறைக்காமல் இருக்க முடியவில்லை... வீடு வந்து சேர்ந்த நெப்போலியன் பக்கத்து வீட்டு அக்கா வந்து ஸ்ரீதேவிக்கு நடந்ததை கூறவும் பதறி அடித்து மருத்துமனை ஓடினான் ... இரவு நல்லபெருமாள் பொறுப்பில் அக்காவை விட்டு விட்டு வீடு வரும் போது தான் மனைவி நியாபகம் வந்தது .... உள்ளே போக அவள் கேஷூவலாக உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்.. 

சரி வீண் வாதம் வேண்டாம் என்று குளித்து வந்து படுக்கையில் படுத்தான் அவனை கட்டி அணைத்து கொண்டு காலை போட்ட மனைவினை என்ன செய்ய .. 

அவளைப் பெற்றெடுத்த தாய் உடல் நிலை முடியாது மருத்துவமனையில் இருக்கிறாள், ஒரு தடவை வந்து பார்த்தால் கூட போதுமே , அத்தனைக்கும் வர்றியா கூட்டிட்டு போறேன் என்று கேட்க 

நான் எதுக்காக வரணும் நீங்க உங்க அக்காவ பாக்க போறீங்க, என்னால வர முடியாது என்று அவன் மார்பில் சுருண்ட அவளை சப் என்று பின்புறத்தில் அடிக்க ..

"ப்ச், இப்ப எதுக்கு அங்க அடிச்சீங்க?

"உடம்பு முழுக்க எல்லாம் கொஞ்சம் தூக்கிதான் இருக்குடி அதான் அடிச்சு சரி பண்றேன் என்ற நெப்போலியன் மீசையோடு விழுந்து கடித்து விட்டாள் பழிக்கு பழிவாங்க அவன் மனைவிக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?

"உன் அம்மாடி ஒரு தடவ வந்து பார்த்தா கொறஞ்சா போவ ? அப்படி என்ன உனக்கு அகங்காரம் ..

"எனக்கு அட்வைஸ் எல்லாம் பண்றது சுத்தமா பிடிக்காது திமிராக வந்தது வார்த்தை 

"பிள்ளையா வளர்த்து வச்சிருக்காரு நல்லபெருமாள்...

"ஏன் என்னை நல்லாத்தான் வளர்த்திருக்கார் உங்கள மாதிரி ஆட்களை எல்லாம் ஹேண்டில் பண்ண இப்படி இருந்தா தான் சரி ...

"நான் உன் புருஷன்டி

"புருசன்னா கொம்பா இருக்கு எனக்கு எல்லாரும் என் அப்பாவுக்கு ஒருபடி கீழத்தான் என்றவளை பல்லை நரநரத்து பார்க்க 

"உங்களுக்கு உங்க அக்கா வேணுமா நான் வேணுமான்னு கேள்வி கேட்டா உங்க பதில் என்ன 

"இது என்னடி கிறுக்குத்தனமா கேட்கிற ..

"ப்ச் அன்சர்..

"ரெண்டு பேரும் வேணும் 

"ஆப்சனா இருக்க எனக்கு எப்பவும் பிடிக்காது 

"அப்படின்னா 

"இந்த யாமினிக்கு இணையா யாரை வச்சாலும் பிடிக்காது... என் டேடிக்கு நான் மட்டும்தான் பிடிக்கும் , சோ எனக்கும் என் டேடி மட்டும் தான் பிடிக்கும் 

அப்போ நான் என்று கேட்க நெப்போலியனுக்கு துருதுருவென்று வந்தது..கேட்டு நீ யாருன்னு கேட்டா அது இன்னும் பெருத்த அவமானம் , மூடிடு வாயை என்று மூடி கொண்டான்... 

"அப்படி நாங்க என்னடி ராங்கித்தனம் பண்ணினோம்னு இப்படி பேசுற, நீயும் உன் அப்பனும்தான் ராங்கித்தனம் பண்ணிக்கிட்டு சுத்துனீங்க , நாங்க எல்லாத்தையும் இழந்துட்டு உங்களுக்கு பயந்து மறைஞ்சு மறைஞ்சுதான் வாழ்ந்தோம் .. உன் அப்பன் என்ன மூணு தடவ கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்கான் அது உனக்கு தெரியுமா ? உடனே வெடுக்கென்று அவனை விட்டு நகர்ந்து படுத்தவள்

"என் அப்பாவை பத்தி பேசுறதுக்கு யாருக்கும் உரிமை இல்லை அவர் கொலை பண்ண ட்ரை பண்ணிணா நீங்களும் பதிலுக்கு கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்கனும்.. அத விட்டுட்டு பேச கூடாது 

"ஏண்டி நான் என்ன இந்தியா பாகிஸ்தான் எல்லையிலேயா இருக்கோம் , மாத்தி மாத்தி சண்டை போட்டுக்க .. சரி சமாதானமா ஒதுங்கி போவோம்னு நினைச்சா நீ என்னன்னா பதிலுக்கு பதில் சண்டை போட சொல்ற 

தூக்கம் வருது என்று யாமனி குப்புற படுத்து தூங்க ஆரம்பித்தாள் மனைவியை ஒன்றும் செய்ய முடியாமல் இவன்தான் விலகி படுக்க வேண்டியது ஆகிப் போனது

இரவு நான் தங்கிக் கொள்கிறேன் என்று நெப்போலியன் ஸ்ரீதேவியிடம் கூற ... அவள் தலைக்கு தலையணையை சரியாக வைத்துக் கொண்டு இருந்த நல்லபெருமாள் விரல்கள் ஒரு நிமிடம் மனைவி பதிலுக்கு காத்து நிற்க..

"அது வந்துடா பாத்ரூம் எல்லாம் தூக்கிட்டு போக வேண்டியது இருக்கு நீன்னா" என்ற அவர் சங்கடமாக வார்த்தையில் கடித்து மென்ன..

"ஓஓ புரிந்து கொண்டவன் 

"சரிக்கா 

"என்னதான் அன்னை போல் தன் தமக்கையை பார்த்தாலும் பிள்ளை போல் தன் தம்பியை பார்த்தாலும் இருவரும் வேறு தான் என்று புரிந்தது கணவன் என்னும் ஸதானம் நல்ல பெருமாளுக்கு மட்டுமே உரியது.. தன்னை தொட்டு தூக்கி தடவி பார்க்கக்கூடிய உரிமையும் முழுதாக அவருக்குத்தான் கொடுத்திருக்கிறார் என்பதை சொல்லாமல் சொன்னது அந்த வார்த்தை... இது போதும் நல்லபெருமானுக்கு உஜாராக தலையணையை மனைவிக்கு வைத்து அவள் தலையை பாந்தமாக அதில் வைத்து போர்வையை எடுத்து மனைவி நெஞ்சு வரை போட்டுவிட்டார் ..

இதே கேள்வியை நீங்க வேணும்னா போங்க அத்தான் சான் நான் அக்காவை பார்த்துக்கிறேன் என்று டீ குடிக்கும் பொழுது நெப்போலியன் அவரிடம் கேட்க..

"உன் அக்கா சொல்லட்டும் போறேன்" என்று முடித்து விட்டார் இப்போது மனைவி இரு என்பதை நாசுக்காக சொல்ல.. குழந்தை போல துள்ளினார்..

நெப்போலியன் பொறுத்தவரை ஸ்ரீதேவி வெளியே திடமாக கம்பீரமான பெண்ணாக குடும்பத்தை நிர்வகித்தாலும் , மனதளவில் தன் கணவனுக்காகவும் பிள்ளைக்காகவும் அதிகமாக ஏங்கினார் என்பதை அறிந்த ஒருவன் நெப்போலியன் மட்டும்தான்...

கடைசியாக இருவருக்கும் விவாகரத்து ஆகும்பொழுது நீதிமன்றத்தில் அந்த கையெழுத்தை போட்டுவிட்டு வெளியே வந்து தன் தம்பியை கட்டி அணைத்து தேம்பி தேம்பி அழுதாள்

"அக்கா என்னால தான் இந்த பிரச்சனைன்னா நான் எங்கேயாவது போய்டுறேன் என்று அந்த வயதிலும் அக்காவிற்கு அவன் ஆறுதல் சொல்ல..

"இல்லடா அத்தான் மேல எனக்கு அவ்வளவு நேசம் உண்டு, அவர பிரிஞ்சு என்னால வாழவே முடியாதுன்னு இருந்தேன் .. ஆனா அவருக்கு என்னோட பிரிவு தான் சந்தோஷம் போல , இந்த விவாகரத்து தான் அவருக்கு தேவைன்னா அத கொடுக்கிறதுதானடா நல்ல காதலுக்கு அழகு ??ஏதோ அவருக்கு என்ன புடிக்கல , இருந்துட்டு போகட்டும் அவர் கேட்ட விவாகரத்தையாவது கொடுத்திடுவோம்.. ஆனா ஒன்னு என்ன காரணம்ன்னே தெரியாம பிரியிறோமேன்னு வருத்தம் தாண்டா .. சரி விடு உனக்காக வாழப் பழகிக்கிறேன் என்று தன் தம்பி கையைப் பிடித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறிய நரக நாட்கள் கண்முன்னால் வந்தது..

அக்காவிற்காக மட்டும்தான் நல்லபெருமாள் செய்யும் செயல்களை எல்லாம் பொறுத்து போனது என்றைக்காவது ஒரு நாள் இருவரும் சேர்ந்து விட மாட்டார்களா என்று ஏங்கிய நாட்களும் உண்டு...அதற்காக அவர் முன் போய் கெஞ்சிய நாட்களும் உண்டு 

"அக்காவை சேர்த்துக்கோங்க அத்தான் நான் உங்க வாழ்க்கைக்குள்ள குறுக்க வரமாட்டேன் என்று இரண்டு முறை வந்து கூறியும் இருக்கிறான்... 

ஆனால் அவரோ நாயை விரட்டாத குறையாக விரட்டி விட்டு விடுவார், நீ சொல்லி நான் என் பொண்டாட்டிய சேர்க்கணுமா, நீ பிச்சை போட்டு நான்,வாழணுமா போடா வெளியே" என்று திட்டி விட்டு விடுவார் 

இன்று அக்காவும் நல்ல பெருமாளும் மருத்துவமனையில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பதை பார்க்கும் பொழுது நிம்மதியாக இருந்தது..

இப்படியே சேர்ந்து விட்டால் நன்றாக இருக்குமே என்றுதான் தோன்றியது... அதனால்தான் அவர்களை அங்கே விட்டுவிட்டு இங்கே வந்து விட்டார்.. மனைவி சந்தோஷமாக தன்னோடு கூடி களித்தால் என்று சந்தோஷப்படவா? 

இல்லை இவள் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பாள் என்று தெரியலையே என்று பதறவா ஒன்றும் தெரியவில்லை ... இவள் பேச்சு நடத்தையை பார்த்தால் காதல் நேசம் இதெல்லாம் அவள் பக்கத்திலேயே எட்டிப் பார்ப்பது போல் இல்லை. விட்டுவிட்டு எப்போது வேண்டுமானாலும் கம்பியை நீட்டி விடுவாள் புரிந்தது. ஆனால், வாழ்க்கை என்பது அதுவல்லவே தன் அக்காவின் பிரிவு காதல் அனைத்தையும் பார்த்தவனுக்கு தனக்கும் இந்த கதி நேர்ந்து விட்டால் என்ன செய்ய கெதக் என்று தான் இருந்தது... 

நல்லபெருமாள் மருத்துவரோடு நின்று பைலை வைத்து பேசி கொண்டிருந்தார் .. ஸ்ரீதேவி கண் தட்டாது கணவனை வச்ச கண் வாங்காது பார்த்தார்

ட்ராக் பேண்ட் மேலே டிசர்ட் சகிதம் நின்றார்.... 

அத்தானுக்கு ரெண்டாவது கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து இருக்காங்க அக்கா என்று விவாகரத்து ஆகி ரெண்டு மாதத்தில் வந்து நெப்போலியன் சொல்ல , ஸ்ரீதேவிக்கு ஜீரணிக்க முடியவில்லை

"பொண்ணு சென்னையில டாக்ட்டர் போல , அத்தான் வேற இப்ப பெரிய ஆபிசர் ஆகிட்டாராம், அதனால நீ நான்னு பொண்ணு கொடுக்க காத்தி இருக்காங்க போல பேசி முடிச்சிட்டாங்களாம்... முடிஞ்சு போன வாழ்க்கையில் இனி என்னத்த செய்ய ... 

ஓஓஓ அவர் படிப்புக்கும், திறமைக்கும் ஏற்றவள் நான் இல்லைன்னு நெனைச்சு தான் என்கிட்ட எரிஞ்சு விழுந்தாரோ, அதான் என்ன கைகழுவிட்டு போயிட்டாரோ இரவு எல்லாம் அழுது அழுது தலைவலி எடுத்து காலையில் வாசல் பெருக்க வர..

உன் புருசனுக்கு ரெண்டாவது கல்யாணம் பேசி இருப்பாங்க போல , அவங்க அம்மா அப்பாவை பிடிச்சு வகை தொகை இல்லாம திட்டிட்டு அவர் மகளை தூக்கிட்டு சென்னை போயிட்டாராம் என்று உறவின் முறை கிழவி அப்டேட் கொடுக்க அப்பாடா என்று மூச்சடைத்த உணர்வு நீங்கியது 

ஏன் கட்டிக்கலையாம் என்று நெப்போலியன் தமைக்க கேட்க துடித்து கேட்காது விட்ட கேள்வியை கேட்க..

"என் புள்ளைக்கு அம்மாதான் வேணும்னா அவளையே அட்ஜெஸ்ட் பண்ணி வாழ்ந்து இருக்க மாட்டேனா.. எனக்கும் என் மகளுக்கும் யாரும் வேண்டாம் என் புள்ளையை எனக்கு பாத்துக்க தெரியும் . 

ஆமா உன் பிள்ளையை பையில போட்டு ஸ்டேசன் கொண்டு போவியோ பொம்பள இல்லாம எப்படி டா வளர்ப்ப என்று தாய்க்கு பதில் கொடுக்க வில்லை ..ஆனால் மகளை கையில் தூக்கி கொண்டே வேலைக்கு போன தகப்பன் அவராகத்தான் இருக்கும் .... 

நான் இருந்த இடத்தை யாருக்கும் கொடுக்க வில்லை ஏன் எனக்கும் இடம் மறுக்கப்பட்டது என்று லைட்டாக புரிந்தது.. எனக்கு நீயே சர்வமும் என்ற மனைவி வேண்டும் என்று அவர் நினைத்தாரோ... அப்படின்னா இதை பேசி சரி பண்ணி இருக்கலாமே ஏன் இப்படி ஒரு விரிசல்..பேச்சின் நடுவே நல்ல பெருமாள் மனைவியை எட்டி பார்க்க அவர் பார்வை அவரையே நோக்கி இருக்க என்ன என்று புருவம் உயர்த்தி கேட்க பதறி போன ஸ்ரீதேவி

ச்சீ இப்படி பார்த்துக்கிட்டு இருந்திருக்கேன் என்ன நெனைச்சாரோ தெரியலையே" என்று வெட்கப்பட்டு விட... அதன் பிறகு நல்லபெருமாளுக்கு சிந்தனை மருத்துவர் அருகே போகவில்லை .. மனைவியை ஓரக்கண்ணால் பார்ப்பதும் அவர் பாராத நேரம் இவள் பார்ப்பதும் என்று பார்வையில் பக்கம் நெருங்கினர்..

எதாவது வேணுமா ?என்று நல்ல பெருமாள் பைலை அருகே வைக்க ..

ம்ம்ம் தண்ணீ வேணும் அதான் பார்தேன் 

ஓஓஓ ... தண்ணீரை ஊற்றி அவர் வாயில் கொடுக்க 

ஏன் அத்தான் என்ன விட்டுட்டீங்க" என்ற மனைவி கேள்விக்கு பதில் சொல்லாது அவர் பார்க்க 

"என்ன விட்டுடீங்களேன்னு வலிச்ச வலியை விட என்ன ஏன் விட்டுட்டு போனீங்கன்னு காரணம் தெரியாம வலிச்சதுதான் அதிகம்.. நான் என்ன தப்பு பண்ணினேன்னு இவ்வளவு பெரிய தண்டனை அத்தான் ... எனக்கு இவ்வளவு பெரிய காயம் தரணும்னா நீங்க எங்க காயப்பட்டீங்க...யார் உங்களை காய படுத்தினது என்ன கூட வெறுக்க வைக்கிற அளவு உங்களை நோக வச்சது யாரு அத்தான் இப்பவாவது அந்த காரணத்தை சொல்லுங்களேன் என் வாழ்க்கை போச்சு.. ஆனா இது தான் என் வாழ்க்கை போக காரணம்னாவது தெரிஞ்சிப்பேனே அதுக்கு தான் கேட்டேன் "என்ற மனைவியை விட்டு விறுவிறுவென நல்லபெருமாள் வெளியேறி விட்டார்..

போகும் கணவனை கண்ணீர் ததும்ப ஸ்ரீதேவி பார்த்தாள் ...