அலெக்ஸ் 18
Alex18

18 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
கோவில் வாசல் படியில் தகப்பனும் மகளும் இறங்க அவர்கள் அருகே வந்து ஆட்டோ நின்றது ..
அதிலிருந்து நெப்போலியனும் ஸ்ரீதேவியும் இறங்கினார்கள்...
"மனசே சரியில்லை நெப்போலியா கோவில் வரை போயிட்டு வருவோமா என்று இங்கே உள்ள கோவிலை அக்கா கூற
"சரிக்கா கிளம்பு போயிட்டு வருவோம் என்று இரவே இருவரும் கிளமபி சென்னை வந்து விட்டனர் ..
தகப்பனும் மகளும் வந்து இறங்கிய அவர்களை பார்த்து விட்டார்கள், அவர்களும் இவர்களை பார்த்து விட்டார்கள் , யாரோ அறியாதவர்களை கடப்பது போல இரண்டு ஜோடிகளும் கடந்து போனது ..
"கண்ணா பூஜைக்கு பூ வாங்கிட்டு வர்றேன் என்று நல்லபெருமாள் கூற
ம்ம் ஓகே டேடி ... செருப்பை கழட்டி போட்டுட்டு வர்றேன் என்று செருப்பு போடும் இடம் நோக்கி யாமனி நெப்போலியனை கடந்து தான் போனாள்.. அவன் ஓரக்கண்ணால் அவள் வயிற்றை பார்த்தான் அவள் கண்டுகொண்டது போல இல்லை ...
"அக்கா பூஜைக்கு பூ வாங்கிட்டு வா, நான் காலை கழுவிட்டு வர்றேன் என்று நெப்போலியன் கால் கழுவ போக ... ஸ்ரீதேவியும் ,நலலபெருமாளும் ஒரே பூக்கடையில் போய் நின்றனர் ...
"ஒரு முழம் பூ கொடுங்க "என்று இருவரும் ஒரே போல கூறிவிட்டு நிற்க ...
"சார் கடை மூடுற நேரம் பூ இவ்வளவு தான் இருக்கு என்று ஒரு முழம் பூவை கடைக்காரன் காட்ட
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...
"அவருக்கே கொடுங்க "
"அவளுக்கே கொடுங்க என்று ஒரு போல கூறிவிட்டு இருவரும் நாக்கை கடித்தனர்....
"இல்லை நீயே வாங்கிக்க
"நீங்களே வாங்கிக்கோங்க ,ஒன்னும் பிரச்சனை இல்லை, தம்பியை வாங்கிட்டு வர சொன்னா, வேற கடையில வாங்கிட்டு வருவான்
ஓஓஓஓஓ சுதி இல்லாது அவர் இழுவை இருந்தது
உன் தம்பி தந்தா வாங்குவ, நான் தந்தா வாங்க மாட்ட என்ற பின் பொருள் இழுவையில் இருக்க சட்டென்று நல்லபெருமாள் கையில் இருந்து பூவை பிடுங்காத குறையாக ஸ்ரீதேவி வாங்கி கொண்டு ...
"தம்பி பாதியா கட் பண்ணி தாங்க? வீட்டுல இருந்தே பூ வச்சிட்டு வர நினைச்சேன் மறந்துட்டேன்" என்று கொடுத்து ரெண்டாக வெட்டி பாதியை தலையில் வைத்தார்
புருசன் கையால் கடைசியில் பூ வைத்தது அதன் பிறகு பூ வைக்கும் பழக்கமே போய் விட்டது, இன்றுதான் மறுபடியும் வைக்கிறார்.. அது ஸ்ரீதேவிக்கு மட்டும் தான் தெரியும் கணவன் கை பட்டு வந்த பூவே அவை
"ஐம்பது ரூபாய் க்கா
"ஓஓஓ தம்பிட்ட காசு வாங்கி தர்றேன் எய்யா" என்று திரும்ப தம்பியை தேட அவன் இல்லை.. ஆனால் அதற்கு முன்னே நல்லபெருமாள் காசை நீட்டிவிட.. பர்சை திறந்து மூடும் கேப்பில் ஒரு பக்கம் இருந்த ஸ்ரீதேவி படத்தை பார்த்து விட்டாள்
என் போட்டோவா?? என்று ஆச்சரியம் வந்து போனது ... இன்னொரு பக்கம் இருவருக்கும் இடையே மகள் இருப்பது போல கிராபிக்ஸில் செய்து வைத்திருக்க கண் கலங்கி விட்டது ...
ஒரு குடும்ப போட்டோ கூட எடுக்க முடியாத சூழ்நிலையில் தான் வாழ்ந்து இருக்கிறோம் என்று வருத்தம் தொண்டையை அடைத்தது
நன்றி என்று ஸ்ரீதேவி குனிந்து கொண்டே கூற
எதுக்கு ?
"இல்ல அன்னைக்கு உடம்பு முடியாம இருந்தப்போ தூக்கிட்டு வந்து காப்பாத்துனதுக்கு அப்புறம் கூடவே இருந்ததுக்கு, தம்பி உங்ககிட்ட நன்றி சொல்லணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான்... நான் தான் நானே சொல்றேன்னு சொல்லிட்டேன்...
"தம்பி பைத்தியம் வார்த்தைக்கு வார்த்தை தம்பி வருது என்று இப்போதும் செல்ல கோபம் வந்தது,
"என் புருஷன் என் புருஷன் என்று சொல்லணும் என்பதுதான் அவர் அதிகபட்ச ஆசை, மனைவிக்கு அதுவே இப்போதுதான் புரிந்து இருக்கிறது.. சிறுக சிறுக அதையும் பழகிக் கொள்ள நேரம் கொடுக்க வேண்டாமா ?
"ஓஓஓ நன்றி எல்லாம் எதுக்கு , இப்போ உடம்பு பரவா இல்லையா.... அவர்தான் இவ்வளவு நேரத்தில் மனைவி தலையிலிருந்து சுண்டு விரல் வரை ஓரக்கண்ணில் பலமுறை பார்த்து
"அப்பா நல்லா இருக்கா கொஞ்ச நேரத்துல என் உசுர எடுத்துட்டு போக பார்த்துட்டாளே, ரத்தத்தில் கிடந்த மனைவியை பார்த்த பிறகு தானே புத்தி தெளிந்திருக்கிறது, மறுபடியும் அந்த நிலைக்கு அவளை ஆளாக்கி விடக்கூடாது என்று சற்று வீம்பு கௌரவத்தை எல்லாம் குழி தோண்டி புதைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ...
"உடம்பெல்லாம் பரவால்ல வெயிட் தூக்க கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்கல்ல
"அதான் வானத்துக்கு வளர்த்து வச்சிருக்கியே தம்பி, அவனை வச்சு கனமான பொருட்கள் தூக்க வைக்க வேண்டியதுதானே" இருவருமாக பேசிக்கொண்டே படியில் ஏறினார்கள்...
மாலை வெயில் என்றாலும் சுள் என்று அடித்தது தரைச்சூடு ஏற்கனவே இருக்க.. ஸ்ரீதேவிக்கு கால் கொஞ்சம் சுடத்தான் செய்தது.. காலை நகட்டி நகட்டி வைத்து நடக்கும் மனைவி அவஸ்தை புரியாமல் இல்லை சட்டென தன் நிழல் விழ அவரோடு நல்லபெருமாள் நடந்தார்.. அவர் நிழல் விழுந்ததும் சூடு மட்டுமில்லை மனதில் இருந்த சூடு கூட குறைந்தது போல ..
எத்தனை வயதானால் என்ன காதலில் எப்போதும் ஒரு இன்பம் உண்டு , அதை அனுபவிக்க மனம் இருந்தால் போதும் அவ்வளவுதான் !!
"எப்போதும் அவன் வீட்டிலேயேவா இருக்க முடியும் அதான் வேலைக்கு கூட ரெண்டு ஆள் போட்டு விட்டு இருக்கான் வெயிட் எல்லாம் என்ன தூக்க விடுறதே இல்லை .."
மக்கும் பெரிய தம்பி என்று அவர் முனங்கிக் கொண்டே சொன்னாலும் மனைவிக்கு கேட்கத்தான் செய்தது
"அவனும் இல்லாமல் இருந்திருந்தா நான் செத்த இடத்துல புல்லுதான் முளைச்சிருக்கும், யார் செஞ்ச புண்ணியமோ அவனாவது என் கூட இருந்தான் என்றதும் நல்லபெருமாள் முகம் செத்துவிட ...
"அப்புறம் , என்ன திடீர்னு கோவிலுக்கு எல்லாம் வந்து இருக்கீங்க?? என்று ஸ்ரீதேவி அவர் முகம் போன போக்கில் பேச்சை மாற்றிவிட்டார் ..
இனி அவரை வலிக்க வைக்க கூடாது என்று ஸ்ரீதேவியும் இவளை வலிக்க வைக்க கூடாது என்ற அவரும் நல்ல முடிவு எடுத்திருக்கிறார்கள்..
"கண்ணா வரணும்னு சொன்னா
"ஓஓஓஓ
"எனக்கும் ஏனோ வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு நைட் ட்யூட்டி அதான் வந்துட்டு போகலாம்னு யூனிபார்ம்ல வந்துட்டேன்"
அவர் கம்பீர உடல் தோற்றத்துக்கு எப்போதும் காக்கி சீருடை அழகாக இருக்கும் ..
"இன்னைக்கு அழகா இருக்கார் ;வெள்ளை முடியே வரலையா இல்லை டை எதுவும் அடிச்சிருக்காரா என்று மனைவி கடைக்கண் பார்வையில் புருசன் அழகை ரசிக்க
"ரெண்டு முடி காது பக்கம் நரைச்சு போச்சு , அது கூட அவளுக்கு அழகுதான்" மனைவி நரை முடியை கூட அவர் ரசிக்க....
"யாமி கண்ணா வரட்டும் நீ வேணும்னா போய் வேண்டிட்டு வா என்று அவர் திண்டில் அமர
"அவனும் வரட்டும் வந்த பிறகு அர்ச்சனை பண்றேன் என்று இடைவெளி விட்டு ஸ்ரீதேவி அமர்ந்தார்..
அப்பறம் ஒன்னு கேட்கணும் என்று இருவரும் ஒரு போல கூறிவிட்டு மெலிதாக சிரித்தனர்....
"என்ன நீ சொல்லு
"நீங்க சொல்லுங்க
ப்ச் நீயே சொல்லு என்ன ?? நாம ஏன் சேர்ந்து வாழ கூடாது என்று ஒரு வார்த்தை மனைவி கேட்டால் போதுமே ஓகே சொல்ல தயார்
"என் கூட மறுபடியும் வாழ வர்றியா என்று புருசன் ஒரு வார்த்தை சொன்னா போதும் வர்றேன் என்று கைபிடிக்க ஸ்ரீதேவிக்கு ஆசை.. பல முறை கல்யாண அரசியலில் தன்மானம் இழக்க நின்றவருக்கு.. தானாக கேட்டு மறுபடியும் வாழ்க்கையை வாங்க தன்மானம் இடம் கொடுக்க வில்லை
நானா வேணாம்னு சொன்னேன்.. அவர்தான டைவர்ஸ் வேணும்னு அடம் பிடிச்சார்
"நான் அடம் பிடிச்சா கொடுப்பியா உன் கூடதான்டா வாழ்வேன்னு என் சட்டையை பிடிக்க அவளுக்கு உரிமை இல்லையா? நான் கேட்டதும் கொடுக்கிறான்னா நீ இல்லன்னாலும் நான் வாழ்வேன்னு திமிர் தானே..
"வேண்டாம்னு சொல்றவனை பிடிச்சு வச்சி ரெண்டு பேரும் வேதனை படுறதுக்கு நீயாவது போய் வாழுண்னு அனுப்பினா நீயும் வாழாம கிடந்து வாழ்க்கை போச்சே ..என்று இருவரும் அவரவர் நினைவில் இருந்தாலும் முகம் இணையை விட்டு நகர வில்லை ...
"ஏதோ கேட்கணும்னு சொன்னியே என்ன விஷயம்?
"இல்ல , கழுத்து தாலி இல்லாம மொட்டையா இருக்கு , அன்னைக்கு டாக்டர் ஆபரேஷன் பண்ணும் போது தாலியை கழட்டி உங்க கையில கொடுத்ததா சொன்னார்.. அதான் என்று தயக்கமாக ஸ்ரீதேவி கணவன் முகம் பார்க்க..
"ஏன் தாலி இல்லாம மொட்ட கழுத்தா இருக்கேன்னு கேட்கத்தான் நானும் நெனச்சேன், நீ என்னைக்காவது கேட்பேன்னுதான் தாலிய என் பர்ஸ்லேயே வைச்சிருந்தேன்..என்று நல்லபெருமாள் எடுத்து அவள் புறம் நீட்ட அதை வாங்கி ஸ்ரீதேவி தன் கழுத்தில் மாட்ட போக
செத்த நாழி இருங்கோ, அம்மா சந்திதியில வச்சி தாலியை போடுறேள் , ஆம்படையான் எங்க அவரை வச்சி போடுங்கோ என்று குருக்கள் வர ஸ்ரீதேவி தயக்கமாக கணவனை பார்க்க... அவரும் அவரைத்தான் பார்த்தார் கண்ணில் சம்மதம் இருந்தால் போட்டு விட தயக்கம் இல்லை
"இவர்தானா உங்க புருஷன் வாங்கோ தாலியை சந்திதியில வச்சி எடுத்து தர்றேன்; போன முறை எதுக்காக இது கீழ இறங்கிச்சோ.. இனி இறங்க கூடாதுன்னு ரெண்டு பேரும் வேண்டிண்டு நில்லுங்க ...
"இல்லை வேண்டாம்" என்று நல்லபெருமாள் சும்மா மனைவி நாடிதுடிப்பை பார்க்க வாயை திறக்க அவர் கையை அழுத்தி பிடித்த ஸ்ரீதேவி , அவருக்கு முன்னே தாலியை குருக்கள் கையில் கொடுத்து
"வச்சி தாங்க சாமி" என்று எழும்பி போக வயது மறந்து துள்ளி எழுந்தவர் முகம் முழுக்க நிறைவு சந்தோசம்...
இருவருமே கண்ணை மூடி
இனியாவது வாழ விடேன் என்று தான் வேண்டி கொண்டனர்...
"இந்தாங்க சார் மனைவி கழுத்துல போட்டு விட்டு இந்த குங்குமத்தை வகட்டிலும் தாலியிலும் வச்சி விடுங்க என்று கொடுக்க..
முதல் முறை காதலி கழுத்தில் தாலி கட்டும் போது எத்தனை ஆசையாக அதை கையில் வாங்கினாரோ அதை விட பல நூறு மடங்கு சந்தோசம் .. அத்தோடு பயம் , பயபக்தி, என்ற கலவை உணர்வில் தாலியை கையில் வாங்கிய நல்லபெருமாள் மனைவியை நோக்கி திரும்ப அன்று எப்படி தலைகுனிந்து நின்றாரோ அப்படியே இன்றும் ஸ்ரீதேவி தலையை குனிந்து நிற்க கண்ணீர் மட்டும் விழுந்து கொண்டே இருந்தது அழுகிறார் என புரிந்தது...
மக்கும் போட்டு விடவா? என்று நல்லபெருமாள் கிசுகிசுக்க
ம்ம் வரவும் அவர் கழுத்தில் தாலியை போட்டு விட்டு குங்குமத்தை நெற்றியிலும் தாலியிலும் வைத்து விட்டு பூரணமாய் தன்னை நிமிர்ந்து பார்த்த மனைவியின் கண்ணில் வடிந்த கண்ணீரை துடைக்க கை பரபரத்துக் கொண்டு வந்தாலும் அதற்கு இன்னும் சற்று கால அவகாசம் தேவையோ..
அவரை கட்டி கொண்டு குமுற ஸ்ரீதேவிக்கு தோன்றினாலும் நெருங்க அவருக்கும் சற்று நாட்கள் ஆகுமோ ஒருவர் முகத்தை பார்த்து கொண்டே நின்றனர்..
மகள் கொஞ்சம் லேட்டா வந்தா நல்லா இருக்குமே எதாவது பேசிட்டு இருக்கலாமே "என்று புதுக்காதலன் போல நல்லபெருமாள் யோசிக்க
"தம்பி லேட்டா வந்தா அதுவரை புருசன் முகத்தை ஆசை தீர பார்த்துட்டே இருக்கலாமே, இந்த வாய்ப்பு இனி எப்ப கிடைக்குமோ தெரியலையே" என்று ஸ்ரீதேவியும் ஏங்கி போனார்கள்...
ஆயிரம் தான் மகன் தாய் தகப்பன் என்று சுற்றி இருந்தாலும் பெண் விரும்புவது ஆதரவாக சாய கணவன் நெஞ்சு தான்
எத்தனை பேருக்கு ராஜாவாக இருந்தாலும் ஆண் கண் அயர விரும்புவது மனைவி அருகே தான் இது புரிந்தும் ஏன் பிரிவினைவாதம்...
உலகில் நேசம் தான் முக்கியம் அதை தொலைத்து விட்டு தேடும் அத்தனையும் ஒருநாள் வெறுத்து போகும், இந்த உண்மை அறியும் போது நேயங்கள் தொலை தூரம் போயிருக்கும் ....