அலெக்ஸாண்டர் 6

Alex6

அலெக்ஸாண்டர் 6

6 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி !!

தன் எதிரே வழியை மறித்து கொண்டு நின்ற கணவனை ஆழ்ந்த மூச்சு எடுத்து பார்த்தார் ஸ்ரீதேவி

இப்ப எதுக்கு வழியை மறைக்கிறீங்க? 

"என் வழியை அக்காவும் தம்பியும் மறைக்கிறீங்களே, 

"ப்ச் வழியை விடுங்க உங்க மகளை பார்க்க வந்தா அவளை பார்த்துட்டு கிளம்புங்க, என்கிட்ட வம்பு பண்ணுனீங்க என் தம்பிகிட்ட சொல்ல வேண்டி வரும் 

"ஹான் அவன் அப்படியே கிழிச்சிடுவான் இப்ப மீசை முளைச்ச நாயை வி்ட்டு என்ன அழிக்க பார்க்கிறியா ??

"யார் யாரை அழிச்சா என் அம்மை அய்யனை கொன்னு சொத்தை புடுங்கி என் தம்பியை அனாதையா ஆக்கி அவனையும் கொல்ல நினைச்சவர் தான நீங்க , உங்க சொத்துக்கு ஒன்னும் கேஸ் போடலையே... என் தம்பிக்கு வர வேண்டிய சொத்துக்கு கேஸ் போட்டேன் , எதா இருந்தாலும் கோட்ல பேசிக்கிறேன்.... 

"அந்த நாலணா சொத்து வச்சி தான் வாழணும்னு அவசியம் இல்லடி ஆனா அதை உங்களுக்கு தர மாட்டேன் , தர விடவும் மாட்டேன் ... நான் தோற்க கூடாது "

"எப்ப தான் இந்த ஆளு திருந்துவானோ" என்று முனங்கி கொண்டு ஸ்ரீதேவி நகர 

"விவகாரத்தே ஆகி நான் புருசன் இல்லேன்னு கோட் தீர்ப்பு சொன்ன பிறகு என்னத்துக்கு நான் கட்டுன தாலியை போட்டிருக்க நான் வேண்டாம்னு உன் தம்பியை இழுத்துகிட்டு போனியே, இப்போ அந்த தாலியை அத்து வீசிட்டு போடி, நீ பெரிய இ‌வன்னு ஒத்துக்கிறேன் 

"இது என் அப்பா காசுல வாங்கின தாலி மறந்து போனா நியாயபடுத்திக்கோங்க.... என்ன பொறுத்தவரை இதுவும் சாதாரண ஆபரணம் தான் , உறவுக்கே மரியாதை இல்லாம ஆன பின்னே இதுக்கு மட்டும் என்ன மரியாதை வாழுது... 

"வயசானாலும் திமிர் குறையலடி" என்று சிகெரெட்டை ஊதி ஸ்ரீதேவி முகத்தில் விட 

"கிழவன் ஆனாலும் உமரு திமிர் குறையாவா செஞ்சிருக்கு... ச்சை கோவிலுக்கு வந்தா கூட நிம்மதி இல்லை போல" என்று திட்டி கொண்டே ஸ்ரீதேவி போக ...தலையை திருப்பி போகும் மனைவியை நல்லபெருமாள் பார்த்தார்...

ஆயிரம் குற்றச்சாட்டு அவர் மேல் உண்டு ...

ஆம் பணத்துக்காக மகளுக்காக கெளரவத்துக்காக என்று எத்தனையோ தவறு இப்ப வரை செய்கிறார் இனியும் செய்வார்.. ஆனால் அவர் செய்யாத ஒரு தவறு உண்டு ,  

இன்றுவரை ஸ்ரீதேவியை தவிர ஒரு பெண்ணையும் தொட்டது கூட இல்லை.. அவ்வளவு ஏன் விவாகரத்து ஆகும் போது அவருக்கும் இளம் வயது தான் மறுமணம் செய்ய அவர் தாய் தகப்பன் கேட்ட போது கூட பதில் கொடுத்தார் இல்லை ..ஸ்ரீதேவி இடத்தில் மனைவியாகவும் வேறு ஒருத்திக்கு இடம் இல்லை அதே சமயம் எதிரியாகவும் வேறு யாரும் வர முடியாது ... 

"கிழவி ஆனாலும் அழகாதான் இருக்கா 

"என்ன டேடி பொண்டாட்டியை சைட் அடிக்கிறியா?? "என்ற மகளை கண்டு அசடு வழிய சிரித்த தந்தை வாழ்க்கையை கெடுத்த தாயை பார்க்கும் போதெல்லாம் கோவம் தான் வருகிறது..

நீதான் அது மேல பைத்தியமா இருக்க, அது பண்றது எல்லாம் உனக்கு சகுனி வேலை" 

"விடு விடு ஏனோ என்னையே அவளுக்கு பிடிக்கல எப்பவும் அவளுக்கு நம்மள விட அவ வீடு தான் உசத்தி அவ தம்பி தான் உசத்தி... 

"ஆனா நீ அப்படி இல்லையே டேடி , உனக்கு எப்பவும் நான்தான் பெருசு , மம்மியையும் இப்படி தான வச்சிருப்ப, உன்ன பத்தி தெரியாம விட்டுட்டு போனவளுக்காக நீ வருந்தாத உடம்பை கெடுக்காத என்ற மகளை பார்த்து கேலியாக நல்லபெருமாள் சிரித்தார் 

மகள் களிமண்!! கையில் எடுத்து எப்படி குலைத்தால் தன் பக்கம் நிற்பாள் என்று தெரிந்தே அவளை தன் இஷ்டம் போல குலைத்து ராட்சச பெண் பொம்மை ஆக்கியது கண்ணை மூடி கொண்டு தகப்பன் பின்னே நிற்பதற்கு தானே ... 

விக்க விக்க அந்த வெயிலில் நடந்த ஸ்ரீதேவிக்கு பல வருடங்களுக்கு முன்னால் நடந்த காட்சிகள் எல்லாம் அப்படியே கண்ணில் ஓடியது...

தாய்த்தகப்பன் இறந்து கிடக்கும் பொழுது நான் வேணும்னா என் கூட கிளம்பு என்று சொன்ன கொடூர புருஷன் கையை விட்டு விட்டு தகப்பன் தாய்க்கு கடைசி காரியம் செய்ய ஓடிய நாள் மறக்குமா ?? எட்டு வயது நெப்போலியன் பிஞ்சு கையில் கொல்லிக்கட்டையை கொடுத்து தகப்பன் தாய் சிதைக்கு நெருப்பு வைத்த நாள் மறந்து போகுமா?? அத்தனை சொத்தையும் தன் பெயரில் இரவோடு இரவாக மாற்றிக் கொண்ட கணவனின் இழிசெயல் மறக்குமா?? தாய் தகப்பன் போய் சேர்ந்த கவலையே இன்னும் தீராத எட்டு வயது தம்பியை தன்னோடு அழைத்துக் கொண்டு அப்போதும் கணவன் வீட்டு முன்பு தானே போய் நின்றாள்...

 நிறைமாத கர்ப்பிணி என்று நினைத்தாரா? அவளுக்கு யாருமே இல்லையே என்று யோசித்தாரா, கருணையற்ற செயல் அல்லவா செய்தார்

நெப்போலியனை எட்டி உதைத்தவர் ,இந்த நாய் வீட்டுக்குள்ள வரக்கூடாது 

அத்தான் , அப்பா அம்மாவும் உயிரோட இல்ல சொத்தும் உங்க கைக்கு மாறிடுச்சுன்னு தாசில்தார் சொன்னார் , என் தம்பி யாருமே இல்லாம என்ன செய்வான் ..மனசாட்சி இல்லாம பேசாதீங்க அத்தான் என்று அழுத மனைவியை பார்த்து மனம் இறங்கினானா அந்த பேய் ...இல்லையே,  

அனாதை இல்லத்தில கொண்டு போய் சேரு உன் தம்பிக்கு சாப்பாடு போட, இங்க ஒன்னும் சத்திரம் மடம் நடத்தல, நீ மட்டும் உள்ள வர்றதா இருந்தா வா இல்ல இத்தோடு உனக்கம் எனக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு என் மகளை பெத்து என் கையில தந்துட்டு நீ போயிட்டே இரு என்று சொன்ன கணவனை முறைத்துக் கொண்டே , கீழே விழுந்து கிடந்த தம்பியை அணைத்து பிடித்துக் கொண்டு நெப்போலியன் பெயரில் ஆற்றங்கரையில் கிடந்த அந்த ஒற்றை வீட்டில் போய் தனியாக கிடந்து பிள்ளையை பெற்று எடுத்து பால் மனம் மாறாத குழந்தையை தூக்கிக் கொண்டு போன தகப்பன் இவனாகத்தான் இருக்கும்...

புள்ள வேணும்னா வீட்டுக்கு வா, ஆனா நீ மட்டும் ஒத்தையா தான் வரணும் என்று கொடூர சட்டம் போட்ட அரக்கன்

மகளா தம்பியா என்று பரிதவித்து நின்ற நாள் மறக்குமா? தன் அக்காவின் கையைப் பிடித்துக் கொண்ட நெப்போலியனை 

அக்கா நான் கொஞ்ச நாள் அனாதை விடுதியில் இருக்கேன் நீ போய் பாப்பாவை பார்த்துக்கோ என்னால உங்களுககு இடையை சண்டை வேண்டாம் என்று சொன்ன நெப்போலியனை கட்டிக்கொண்டு கதறிய ஸ்ரீதேவி மகளுக்காக மீண்டும் இவரோடு வந்து சேர்ந்த பிறகு ஒவ்வொரு நாளும் அனுபவித்தது வலி மட்டுமே ...

இதற்கு மேல் முடியாதடா சாமி என்ற பிள்ளையை தூக்கிக் கொண்டு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வந்த பிறகும் கூட விடாது குழந்தை எனக்குத்தான் வேண்டும் என்று சட்டத்தை தன் பக்கம் வளைத்து மகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்...

அப்படி நாங்கள் என்ன செய்து விட்டோம் என்று இதுவரை ஸ்ரீதேவிக்கு தெரியவில்லை ..

இளம் வயது இழந்து, வாழ்க்கை இழந்து, சொத்து இழந்து, சந்தோஷம் இழந்து, மகளை இழந்து எல்லாவற்றையும் இழந்த பிறகும் கூட இன்னும் அவர் கொண்ட ஆத்திரம் தீரவில்லையா??

மறுபடியும் என் நிம்மதியை கெடுக்க வந்து நிற்கிறானே ராட்சசன் என்றவருக்கு அழுகைதான் கொட்டியது ...

ஏன் அவர் கேட்டதும் இந்த தாலியை என்னால் தூக்கி அவர் முகத்தில் விட்டு எறிய முடியவில்லை என்று கழுத்தில் பல வருடமாக ஏன் கிடக்கிறது என்று தெரியாமல் கிடக்கும் தாலியை தூக்கி பார்த்தார்..

தன் புருஷனை நினைத்தாரோ இல்லையோ? கழுத்தில் கிடக்கும் தாலிக்கு ஏன் தினமும் குங்குமம் வைக்கிறார் ஏன் தினமும் இந்த நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைக்கிறார.. விவாகரத்து ஆன பிறகும் புருஷன் பெயரை சொல்லி ஏன் வகட்டில் குங்குமம் வைக்கிறார் ...

அவருக்கு வேண்டுமானால் நான் மனைவியாக தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் என் உடல் கட்டையில் ஏறும் வரை அவர்தானே என் கணவன் அதனால் அவன் பெயரை தானே சொல்லி வைக்க வேண்டும் என்று அவளை சமாதானம் செய்து கொண்டாலும் உள்ளே ஒரு குரல் ...

தேவி 

ம்ம்  

அத்தான் செத்து என் உடம்பு தீயில எரிஞ்ச பிறகுதான் இந்த தாலியை கழட்டனும் .. இது என் மேல சத்தியம் என்று அவள் உதட்டில் முத்தமிட்டு என்றோ ஒரு நாள் கணவன் சொன்ன செய்தி இன்று வரை அவர் காதில் ஒலிக்க காரணம் என்ன ?

எங்கோ காதல் இன்னும் மறைந்து கிடந்து இருவரையும் ஆட்டம் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது...

நரை வந்தாலும் சில காதலை அழிக்க முடிவதில்லை .. 

யாமினி காலையில் கண் முழிக்கும் பொழுது ஹாலில் நிறைய சத்தங்கள் கேட்டது...

தலை முடியை கோதிக்கொண்டே வெளியே வந்த யாமினி வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்த தன் நண்பர்கள் பட்டாளத்தை பார்த்து கண்ணைச் சுருக்கி தாயைப் பார்க்க... அவர்களுக்கு பரபரப்பாக சமையல் செய்து கொண்டிருந்தார் ஸ்ரீதேவி..

உள்ளே வந்த நெப்போலியன் இளநீர் நுங்கு என்று அவர்களுக்கு வெட்டி பட்டுவாடா செய்து கொண்டிருக்க ... நகத்தை கடித்துக் கொண்டே அவர்கள் நோக்கி நடந்தாள்

" அடடே யாமி வந்துட்டா" என்று அவர்கள் இவளை சுற்றி வட்டமடித்து விட்டனர்..

"என்ன இந்த பக்கம் என்ற தோழியை அத்தனை பேரும் சுத்தி நின்று கொண்டு ..

"நீ இல்லாமல் அங்கு செம போர் யாமி, பார்ட்டி பப் எதுவுமே போகத் தோணல , அதான் உங்க டாடி கிட்ட போயி அவளை எங்கன்னு கேட்டோம்... அவளுக்கும் அங்க போர் அடிக்குது போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டார் , நாங்களும் ஏன் எதுக்கு அங்க போனான்னு கேட்காம நீ வந்த இடத்துக்கே எல்லாரும் வந்துட்டோம் ... இனிமே உன் கூட தான் ஆனா , சும்மா சொல்ல கூடாதுடி ... இந்த இடம் கூட நல்லா தான் இருக்கு ... இனிமே நீ போகும் போது தான் நாங்களும் போவோம் "என்று கூறிய நட்புகளை கண்ணைச் சுருக்கி பார்த்துக் கொண்டே

"அப்பாவுக்கு அறிவே இல்ல இதுகளை எதுக்கு இங்க அனுப்பிவிட்டார் .... ஏற்கனவே ரெண்டு தொல்லையை தாங்க முடியல, இதுல மொத்த தொல்லையையும் பின்னாடி அனுப்பி விட்டிருக்கிறார்" என முனங்கியபடி வீட்டை விட்டு வெளியே வந்து இளநீரை சீவிக் கொண்டிருந்த நெப்போலியன் அருகே வந்து நின்றாள்..

இளநீர் வேணுமா ? என்று அவன் ஒரு இளநீரை அவள் பக்கத்தில் நீட்ட அவள் ஏதோ சொல்ல வாயைத் திறக்க

"வேணுமான்னு கேட்க மாட்டேன் ..இது உள்ள வந்திருக்கிற அந்த பொண்ணுங்களுக்கு... அப்புறம் நான் தான் உன் புருஷன்னு அவங்களுக்கு தெரியாது ,நான் சொல்லவும் மாட்டேன்...

ப்ச் கேலியாக உதட்டை வளைத்த யாமினி 

"என்ன நான்தான் உன் புருஷன்னு அவங்க கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டி மிரட்டி என்ன வேலை ஏவ பாக்குறியா...

"ஓஓஓ இப்படியும் பண்ணலாமா? 

"எனக்கு அந்த பயமே இல்லை, முழுக்க நனைஞ்ச பிறகு இனிமே என்னத்துக்கு முக்காடு போட்டுக்கிட்டு நான் தான் உன் புருஷன்னு தாராளமா போய் சொல்லிக்கோ, எனக்கு ஒன்னும் பயம் இல்லை .... ஓசி குடிகாரிக நாலு எலும்பு துண்டை போட்டா வாயை மூடிட்டு போவாளுக

"எவனுக்குமே மதிப்பு கொடுக்க மாட்ட போல ...

"ப்ச் என்று தோளை உலுக்க 

"நெப்ஸ் இங்க உள்ள இளநீர் செம சூப்பரா இருக்கு என்று பெண்கள் அவனை சுற்றி வட்டமடிக்க...

"இது உரம் போடாம நாங்களே பார்த்து பார்த்து வளர்க்கற தென்னந் தோப்புல இருந்து வர்ற இளநீர் அதனால ருசி கூடத்தான் அதோட அன்பையும் சேர்த்து போட்டு இருக்கோம்ல" என்று வெட்டி நீட்ட ஒருத்தி அவன் முறுக்கு மீசையை பிடித்து லேசாக இழுத்த ஒருத்தி 

"ஹல்க் மாதிரி செமையா இருக்கீங்க அதுவும் இந்த மீசை சூப்பரா இருக்கு சொல்லுங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? கல்யாணம் ஆகலைன்னா நானே கல்யாணம் பண்ணிக்கவா என்று கிண்டலாக அவனை கேட்க..

"அதுக்கு என்ன எல்லாரும் கூட வாங்க ஆளுக்கு ஒரு தாலியை கட்டிப்புடுறேன், அடிச்சுக்காம பங்கு போட்டு வாழுங்க ..

"ஐ இது கூட நல்லாத்தான் இருக்கு , வேற வேற வீட்டுக்கு போயி வாழ வேண்டாமில்ல,, இங்கேயே ஒரே வீட்ல சந்தோசமா கும்மி அடிக்கலாம் என்று அவனோட ரகளை பண்ண அவனும் கேலி பண்ணி சிரித்தான் இவளுக்கு ஆகாதே, பத்தி கொண்டு வந்தது ...

யாமி உன் மாமா சோ ஸ்வீட் என்று முடிக்க வில்லை 

 அவ்வளவுதான் கெட் அவுட் என்ற யாமினி சத்தம் காதை பிளந்தது 

அத்தனை பேர் கழுத்தையும் பிடித்து வெளியே தள்ளிய யாமினி..

"ஓசி குடிகாரிகளா, ஒழுங்கு மரியாதையா ஊர் போய் சேருங்க 

"என்னடி யாமி இப்படி பேசுற ..

"எனக்கு பிடிக்காத அவன் கூட உங்களுக்கு என்னடி பேச்சு அதுவும் இடிச்சு இடிச்சு வேற பேசுறீங்க ,இப்படி ஒரு ஃபிரண்ட்ஸ் எனக்கு தேவையே இல்லை... இனிமே இந்த பக்கமே தலை வச்சு படுக்காதீங்க வெளிய போயிடுங்க என்றவள் அவமரியாதையான நடத்தையில் நெப்போலியன் தான் முகம் கருத்து போனது... விருந்தோம்பல் அவர்களின் உயிர் அல்லவா?

"ஏய் கிறுக்கி என்னடி பண்ணிட்டு இருக்க வீட்டுக்கு வந்தவங்கள இப்படி விரட்டி அடிக்கிற??

"ஓஹோ உன்கிட்ட கொஞ்சி பேசின உடனே அவங்க விருந்தாளி ஆயிட்டாங்களோ? எனக்கு தான அவங்க பிரண்ட்ஸ் உனக்கு இல்லல்ல, நான் என்ன வேணும்னாலும் சொல்லுவேன்.. என்னடி இங்க பாத்துட்டு இருக்கீங்க நடையை கட்டுங்க என்று

"நீ என்னடி சொல்றது நாங்க அவர் வீட்டுக்கு வந்திருக்கோம் அவருக்கே ஒன்னும் பிரச்சனை இல்ல நாங்க இங்கதான் இருப்போம் என்று ஒருத்தி வாயை விட .. 

"எது அவர் வீடா, இது என் வீடு இதோ இந்த தாலியை கட்டுனது இவன்...

"ஹான் அத்தனை பேரும் வாயை பிளக்க

"புருஷன் வீடு பொண்டாட்டிக்கு தான் சொந்தம் ... சோ இந்த வீடு எனக்கு சொந்தம், இங்கே யார் வரணும் வரக்கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும் போறீங்களா என்றவள் பேச்சில் அத்தனை பேரும் அரண்டு நெப்போலியனை பார்க்க தலையில் அடித்துக் கொண்டு தன் அக்காவை பார்த்தான் ..

"ஒரு வாய் சாப்பிட்டு அனுப்பிவிடுடி 

"பட்டினி கிடக்கட்டும் நாய்க ;என்கிட்ட வாங்கி தின்னுட்டு அவனுக்கு வால் ஆட்டுதுக என்ன அக்காவும் தம்பியும் சோத்தை போட்டு கூட்டம் சேர்க்குறீங்களோ? என்று ஸ்ரீதேவி கொண்டு வந்து வைத்த உணவுகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டு போன மனைவி செயலில், இதுக்கு மேல் பொறுக்க முடியாத நெப்போலியன் அவள் பின்னே போய் முடியை இழுத்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வெளியே போட்டவன்..

கொட்டுன சோத்துல ஒன்னும் மிச்சம் இருக்க கூடாது அத்தனையும் அள்ளி பானையில் போடல உன் குறுக்க ஒடச்சிடுவேன் ராஸ்கல்..

ப்ச் என்று கை காலை உதறி கொண்டு போய் திண்ணையில் அமர்ந்தாள்.. ஊரே நின்று வேடிக்கை பார்க்க அவளோ காலை ஆட்டி கொண்டு அதே இடத்தில் உட்கார்ந்து நாயோடு விளையாடி கொண்டிருந்தாள் 

காலையிலிருந்து இரவு வரை அந்த திண்ணையிலேயே உட்கார்ந்து இருந்தாளே தவிர மருந்தும் மறந்தும் அவன் சொன்ன வேலையை அவள் செய்யவே இல்லை என்பது அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய ஒன்று

அவளை அடக்குவது, அடக்கி அடிபணிய வைப்பது முடியவே முடியாது... நீ சொன்னா நான் கேட்கணுமா கேட்க மாட்டேன் என்ற திமிர் எள்ளளவும் குறையாமல் உட்கார்ந்திருந்தாள் அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!