அலெக்ஸ் 19

Alex19

அலெக்ஸ் 19

19 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி !!

செருப்பை கழட்டி போட்டுவிட்டு நிழல் பார்த்து நின்று கொண்டிருந்த யாமினியை காலை கழுவிக் கொண்டே தலையை திருப்பி நெப்போலியன் பார்த்தான்

நான் உன்னை காதலிக்கிறேன் என்று யாராவது ஒருவர் முதலில் சொன்னால் போதும் .. ஆனால் அதை யார் முதலில் சொல்வது அவ்வளவுதான் இவர்களுக்கு இடையிலான பிரச்சனை...

போனை குனிந்து பார்த்தபடி நின்ற யாமினி கடைக்கண் போட்டு குனிந்து நின்று காலை கழுவி கொண்டு சென்ற கணவனை தான் பார்த்தது ..

அப்படி ஒன்றும் இருவருக்கும் இடையில் தலை போகிற சண்டையும் இல்லை , ஆனாலும் நீயே வந்து பேசு என்ற அவனும், ஏன் நீ வந்து பேசினா ஆகாதா என்று இவளும் ஆளுக்கு ஒரு கரையில் நின்று கொண்டிருந்தனர்... 

டேய் உன் பொண்டாட்டி கோவிலுக்கு வந்திருக்கா எப்படியாவது பேச்சு கொடுத்து சமாதானம் ஆகிடு என்று ஸ்ரீதேவி மகளைபார்த்ததும் தம்பி காதில் முணுமுணுக்க 

"நான் என்ன தப்பு பண்ணினேன் போய் அல கால்ல விழ.. அவதான் என்ன மனுசனா மதிக்காம பெட்டியை தூக்கிட்டு கிளம்பியது 

"டேய் நடந்தது நடந்து போச்சு, அதுக்காக ரெண்டு பேரும் முகத்தை தூக்கினா குடும்பம் உடைஞ்சு போகும்டா "

"அது அவளுக்கு தெரிய வேணாமா, நான் யாருக்கா அந்த பிள்ளைக்கு தகப்பன் மூணாவது மனுசன்,வந்து சொல்றான் உன் பொண்டாட்டி பிள்ளை உண்டாகி இருக்கான்னு ..

"ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கேட்டா உங்க கிட்ட நான் ஏன் சொல்லணும்னு கேட்கிற பொண்டாட்டி கால்ல போய் விழுந்து, அம்மா தாயே நான் உன் அடிமையா நாயா கிடக்கிறேன், சங்கலி போட்டு கட்டி கூடவே வச்சிக்கன்னு சொல்லவா அவன் குரலில் ஆற்றாமை இன்னும் இருந்தது 

அது 

ஆமா பிள்ளை உண்டாகி இருக்கேன்னு சொல்லி இருந்தா கூட மனசு ஆறி இருக்கும் அக்கா ,உன்கிட்ட தோணலைன்னு சொன்னா என்னக்கா கணக்கு அப்போ நான் அவளுக்கு யாரோவா?? 

"புரியுது நெப்போலியா நானும் இப்படி தான் நிறைய யோசிச்சு பிரிஞ்சு நின்னுட்டேன் அதனால போனது என்ன சொல்லு என் வாழ்க்கை வயசு அந்த நிலையை உனக்கும் வேண்டமான்னு தான் தாழ்ந்து போக சொல்றேன் "

"தாழ்ந்து போக நான் தயார் தான் அக்கா, முதல்ல என்ன புருசனா அவளை பார்க்க சொல்லு , பிள்ளை பெக்க மட்டும் நான்னா, அசிங்கமா இருக்குக்கா... சரி உன் மேல கோவம்னே வச்சுக்கோ.. நான் என்னக்கா பண்ணுனேன், எல்லாத்தையும் விட்டுட்டு அவளுக்காக பொறுத்து தான் போறேன், நான் ஒரு அடி அடிச்சா உன் மக தாங்குவாளா?அதே இடத்தில் விழுந்து செத்துட மாட்டா, ஊருக்குள்ள என்ன பார்த்திருப்பாதானே, நான் எவ்வளவு பெரிய கோவக்காரன்னு, அதே கோபத்தை அவகிட்ட காட்டுனா தாங்குவாளா, நான் ஆம்பளன்னு என்னைக்காவது அவகிட்ட வீரத்தை காட்டி இருக்கேனா.. அப்போ அவ மட்டும் எனக்கு பொண்டாட்டியாக இருக்க மாட்டேன், நீ சொல்றத கேட்கவும் மாட்டேன் ... உனக்கு மதிப்பும் தர மாட்டேன், ஒரு புருஷனுக்குரிய எந்த ஒரு அங்கீகாரத்தையும் நான் உனக்கு தர மாட்டேன்னா.. அப்போ அவ என் கூட இருந்து என்ன பிரயோஜனம் அதுக்கு அவ , அவ அப்பா வீட்டிலேயே ராணியா இருக்கட்டும்... என் பொண்டாட்டியா என்கிட்ட வந்தா நெப்போலியன் பொண்டாட்டியாதான் அவ இருக்கணும்... நல்லபெருமாள் மக அந்தஸ்து இருக்கிற வரைக்கும் அவ நம்ம வீட்டுக்கு செட்டாக மாட்டா, விட்டுத்தொலை .. அவளா வந்து மாமான்னு பேசினா பேசுறேன் இல்லை விடு எதுவரை இதை கொண்டு போறாளோ போகட்டும் 

"இதனால பாதிகப்பட போறது உன் பிள்ளைடா எங்களால பாதிகப்பட்ட நின்னது யாமினி தான் அதே நிலை உன் பிள்ளைக்கு வேணுமா சொல்லு 

"ஏன் அவளுக்கு அந்த அறிவு இல்லை , வாய் கிழிய வியாக்கியானம் பண்றாள்ல, அவளுக்கு தெரியாது தன்னை போல தன் பிள்ளையும் ஆகிடும்னு யோசிக்க முடியாத அளவு மூளை கெட்டவளா உன் பொண்ணு ...

"ப்ச் என்னவோ சொல்ல தோணுச்சு சொன்னேன் பூ வாங்கிட்டு வர்றேன் 

"ம்ம் நான் காலை கழுவ போறேன் ... என்று நகர்ந்து போனவனுக்கு அவள் பாரா நடத்தை இன்னும் கோவம் கொண்டு வந்தது ...

"உலக அழகின்னு நினைப்பு போடி நீயா வந்து மாமா ன் வீட்டுக்கு வரவான்னு கேட்டா வா, இல்லை எத்தனை நாள் ஆனாலும் அங்கேயே கிட .... உங்ககிட்ட எல்லாம் திமிரை காட்டினாதான் வாழ முடியும் என்று நெப்போலியன் போன் பேசி கொண்டே தன்னை கடந்து படிக்கட்டு ஏறிய மனைவி உப்பிய வயிற்றை ஆசையாக பார்த்தான்... 

எட்டாவது மாசம் அவன் மனைவிக்கு , அவளுக்கு வலிக்கிறதா தெரியாது இவனுக்கு பிள்ளையும் எங்க வீம்புக்கு கிடந்து படுதே என்று வலித்தது ... ஆனால் அவள் போக்குக்கு விட்டால் பிள்ளையையும் நாளைக்கு இதே போல் வளர்த்து அதுவும் குட்டி அல்லிக்கொடியாக ரவுசாக வளர்ந்து நிற்கும் தேவையா? இவளுக்கு போடும் சூட்டில் பிள்ளை தானாக வளர்ந்து விடும் என்று தான் அவளை அவனும் கண்டுகொள்ளாத பார்வை பார்த்தான்.. அவள் முன்னே நடக்க இவன் அவனுக்கு பின்னே நடக்க.... யாமினி போனை பேசிக்கொண்டே அதில் கவனத்தை வைத்திருந்தவள். சட்டென்று கீழே கிடந்த எலுமிச்சை பழத்தை பார்க்காது அதில் கால் வைத்து விட, அவளையே பார்த்துக் கொண்டு நடந்த நெப்போலியன் அதைப் பார்த்து விட 

ஆஆஆஆஆஆஆஆ என்று அவள் படியில் சறுக்கி விழப் போகவும், பின் இருந்து இவன் அவளை படார் என்று கட்டி தூக்கி கொள்ளவும் சரியாக இருந்தது ....

ஒரு நிமிடம் அவளுக்கு மூச்சே நின்று விட்டது , தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவள் ஆசுவாசம் அடையும் முன் அவளை இழுத்து நிறுத்தியவன் 

அப்போதான் உனக்கு அடக்கம் ஒடுக்கம்னா என்னன்னு தெரியல, இப்போ வயித்துக்குள்ள முழு பிள்ளை இருக்குடி , பார்த்து நடக்கக்கூடாது... இப்போ இங்க இருந்து கீழே விழுந்துருந்தேன்னா சிதறு தேங்காய் மாதிரி சிதறி இருப்ப... என் பிள்ளையும் போய் சேர்ந்திருக்கும் அறிவு கெட்டவளே" என்று நெப்போலினன் திட்டிக்கொண்டே அவளை சரியாக நிறுத்தி விட ... அவனை மேலும் கீழும் பார்த்தவள்..

"சாகணும்னு விதி இருந்தா புல் தடுக்கி கூட சாவேன் கையை எடுங்க என்று தன் கையில் வைத்திருந்த அவன் கையை தள்ளி விட்டுவிட்டு, யாமனி விறு விறுவென்று கோயில் சன்னதி நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்

"திமிர் பிடிச்ச நாய் இது கொழுப்பு குறையவே செய்யாது கதி கலங்க வச்சிட்டாளே...இவனுக்கு நெஞ்சு டமடமவென அடித்து கொண்டது,.

என்னவோ அவள் வேண்டும் என்றே காலை வைத்து சறுக்கி விளையாடுவது போல இவன் திட்ட,யாமினி பதிலுக்கு பதில் கொடுத்து விட்டு வந்து விட்டாலும் கீழே விழுந்து இருந்தால் என் நிலைமை என்ன என்று நினைத்தவள் பதட்டம் இன்னும் அடங்கவில்லை அப்படியே திண்டில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்

"இந்தா தண்ணீ குடி "என்று தெப்போலியன் தண்ணீரை நீட்ட அவளுக்கும் தேவைப்பட வாங்கி கடகடவென குடித்த அவள் உதட்டை தன் வேட்டி எடுத்து துடைத்து விட்டவன் 

"ஒன்னும் இல்லையே குழந்தை துடிக்குதா பாத்தியா, டாக்ட்டரை போய் பார்ப்போமா, எங்கேயும் அடி பட்டிருக்கா, வயித்துல அடி படல தானே உன்கிட்ட தான்டி கேட்டுட்டு இருக்கேன் வாயை திற..

"உங்க பிள்ளை நல்லா தான் இருக்கு" என்று பாட்டிலை தூக்கி வீசிவிட்டு போக 

"அய்யோ பாவம்னு வந்து பேசினா வெடுக் வெடுக்குன்னு போறா ; போயிடு நானாவது நிம்மதியா இருப்பேன் என்று அவளுக்கு கேட்க கூறினாலும் அவன் நிம்மதி தான் அவள் போனதோடு போச்சே .... 

அப்போ நான் செத்தா இவருக்கு பரவாயில்ல ,அவர் பிள்ளை மட்டும் தான் வேணுமா இவளுக்கு விக்கு விக்கென்று வந்தது ... 

கடவுளே!!! என் பொண்டாட்டி பிள்ளைக்கு எந்த சேதமும் வராம பார்த்துக்க என்று எதிரே நின்ற மனைவியை பார்த்து கொண்டே தெய்வத்திடம் முணுமுணுக்க...

அவருக்கு அவர் பிள்ளை மட்டும் போதுமாம் அதை எப்படியாவது நல்ல படியா பெத்து கொடுக்க பலன் கொடு கொடுக்கணும்... என் பிள்ளைக்கு எதாவது ஆச்சு உன்னையும் விட மாட்டேன் என்று தெய்வத்தையே மிரட்டினாள்.. பிள்ளை உண்டாகி இருப்பதை அறிந்த யாமனி பெண் மருத்துவரை வரவழைத்து செக் செய்ய 

"ஒன்னும் சொல்ல முடியாது மேடம் உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கு நாலு மாசம் ஆனாதான் பேபி நிலைமை தெரியும்" என்றதும் பேச்சு இல்லாது நின்றாள் ... புது நேசம் கண்ட அவளுக்கே இச்செய்தி வலிக்கிறதே கணவன் உயிரே குடும்பம் தான் ..பிள்ளைக்கு எதாவது ஆகி போனால் வருந்தி விடுவானே என்று தான் பிள்ளை உண்டானதை கூறாது விட்டது.. பேபி நல்லா இருக்கு என்று அடுத்த முறை மருத்துவர் கூறிய பின்பு கணவனிடம் கூற நினைக்க... எல்லாம் தலைகீழாக மாறி போனது இருந்தாலும் இதுவும் நண்மைக்கே என்று தான் அவள் நினைத்தாள்..  

"இந்தா தாயி குங்குமம்..என்று குருக்கள் நீட்ட

"நோ என்ற மனைவியை எரிச்சலாக பார்த்தான்

பிள்ளைதாச்சு பொண்ணு குங்குமம் வேண்டாம்னு சொல்லாதம்மா "

"ப்ச் வேண்டாம்னா விடுங்க சாமி" என்று நகர போன அவள் கையை இழுத்து பிடித்த நெப்போலியன் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி முழுக்க தடவ குமட்டி கொண்டு பின்னால் நோக்கி ஓடினாள் ..

"என்னாச்சுடி.... 

"இந்த டைம்ல எனக்கு அந்த ஸ்மெல் ஒத்துக்கல ...என்று கிறுகிறுக்க நின்ற யாமனி முதுகை தடவி விட்டான் .மசக்கையில் சிலருக்கு சில பொருள் வாசனை பிடிக்காது போகும் அப்படிதான் யாமினிக்கும் குங்கும மணம் பிடிக்கவில்லை ..

"ப்ச் சொல்லி இருக்கலாம்தான...

"ஆமா மைக் செட் வச்சி எனக்கு குங்கும ஸ்மெல் பிடிக்காது எது பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்லிட்டு தான் வரணுமா... நான் நானா இருக்க கூட உரிமை இல்லையா, எல்லாத்துக்கும் உங்க தலையீடு உங்க இஷ்டம் போலத்தான் பண்ணணுமா? உங்க விருப்பம் போல எல்லாம் எனக்கு வாழ தெரியாது ... நான் அடங்காபிடாரி தான் போதுமா ஒத்துக்கிறேன், எனக்காக எல்லாம் நீங்க காத்து இருக்க வேண்டாம், வேற அடக்கமான பொண்ணு பார்த்து கட்டி வாழுங்க விடுங்க: என்று திமிரி கொண்டு யாமினி இறங்கி போய்விட .. 

"இப்ப என்ன பண்ணினேன்னு இந்த ஆட்டம் ஆடிட்டு போறா... "

"இவருக்கு பெருசா என்னபத்தி தெரிஞ்ச மாதிரி பேசுறான் அவன் மணம் மட்டும் தான் எனக்கு பிடிச்சிருக்குன்னு மயிராண்டிக்கு தெரியுமா?? வந்துட்டான் எல்லாத்துக்கும் குறை கண்டுபிடிக்க போ போ உனக்கு இந்த அல்லிக்கொடி கிடையாது" உதட்டை குழந்தை போல பிதுக்கி கொண்டு கார் கதவை டமார் என உடைத்து திறந்து உள்ளே ஏறி அமர்ந்து கொண்டாள்...

அவன் எப்போதாவது இழுக்கும் சிகரெட் மணமும் , வயற்காடு போய் உள்ளே வந்து அவளை இடையோடு தூக்கும் போது அவன் மீது இருந்து வரும் துளசி மணமும் அவளின் போதை பொருள் ஆகி போனது என்று அவள் சொல்ல போவது இல்லை ... 

இங்கே ஒரு ஜோடி அடித்துக் கொண்டு கிடக்க இன்னொரு ஜோடியோ அய்யய்யோ பிரிய வேண்டுமே போக வேண்டுமே என்ற நிலையில் அடிமேல் அடி வைத்து வழி இல்லாமல் கோவிலை விட்டு இறங்கி வந்தனர்..

நெப்போலியன் கைகாட்டிய ஆட்டோவும் அந்த காருக்கு பின்னால் வந்து நின்றது... நெப்போலியன் ஆட்டோவில் சாய்ந்து நின்று தன் அக்காவிற்கு காத்திருப்பது போல மனைவியைத்தான் ஓர கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தான்..

யாமினியோ சீட்டில் பின் இருக்கையில் சாய்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டு படுத்து கிடப்பது போல் படுத்துக் கொண்டாள்

சரி அப்போ கிளம்புறோம்" என்று ஸ்ரீதேவி நல்லபெருமாளை சங்கடமாக நெளிந்து கொண்டே பார்க்க..

இரு என்று சொல்ல அவருக்கு வாய் வரவில்லை, போகாதே என்று தலையாட்டவும் முடியாது அவர் நாலா பக்கமும் தலையாட்டி வைக்க.. பொலிவு இழந்த முகத்தோடு ஸ்ரீதேவி ஆட்டோவை நோக்கி நடக்கப் போக ..

"தேவி என்ற கணவன் ஒற்றை அழைப்பில் ஸ்ரீதேவி திரும்பி தன் கணவனை பார்க்க ..

"நில்லு

எ.ன்..ன??

"அது வந்து உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நெனச்சேன் மறந்துட்டேன்"

"என்ன?

"இல்ல பாப்பாவுக்கு வளைகாப்பு நடத்தலாம்னு இருக்கேன்.."

"ஓஓஓ

" நீ என்ன நினைக்கிற

"எட்டாவது மாசத்துல வளைகாப்பு நடத்த தான் செய்யணும் நடத்திடுங்க.."

" நான் மட்டும் நடத்துனா நல்லா இருக்காது. அதான் வர்ற புதன்கிழமை இங்கேயே வளைகாப்பு வைக்கலாம்னு இருக்கேன்... நீயும் உன் தம்பியும் ஒரு எட்டு வந்துட்டு போறீங்களா? சொந்த தாயை அழைப்பு விடுக்கும் லட்சணம் பார்த்து நெப்போலியன் தலையில் அடித்துக் கொண்டான்

"இவர் பெத்த புள்ள மட்டும் எப்படி இருப்பா இதே மாதிரி கோக்குமாக்காதான் இருப்பா..

"இல்ல இன்னைக்கு ராத்திரி ரெயில் இருக்கே...

"ஒரு விஷயத்துக்கும் நீ அவளுக்கு கூட மாட நின்னது இல்ல..

"நீ,நிக்க விட்டது இல்லைடா" என்று வாய் வரை வந்தாலும் வேண்டாம் பிணக்கு என்று வாயை கட்டி கொண்டார் 

"இந்த வளைகாப்புல நீ அவ கூட நின்னா, புள்ள சந்தோஷப்படும் ..

"ஆமா பச்சை புள்ள , அப்படியே எல்லாத்தையும் பார்த்து புல்லரிச்சு போயிடும்" என்று இவன் முணுமுணுத்துக் கொண்டு கல்நெஞ்சகாரியான தன் மனைவியை முறைத்துப் பார்த்தான்...

"உங்க மகளுக்கு சரின்னா நானும் தம்பியும் வர்றோம்...

"அவதான் வளைகாப்புக்கு அம்மாவையும் கூப்பிடுங்கன்னு சொன்னா... நான் ஃபோன் போட்டு கூப்பிடனும்னு நெனச்சேன்.. ஆனா கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி நீயே கோவிலுக்கு வந்துட்ட, புதன்கிழமை வந்துருவீங்க தானே, எல்லாத்தையும் தயார் பண்ணவா ஸ்ரீதேவி தம்பி முகத்தை பார்க்க .. அவன் சரி என்று தலை ஆட்டவும் சரி என்று விட்டு மனமே இல்லாமல் ஆட்டோவில் ஏறினார்..

ஆட்டோ தடதடவென்று அந்த காரை தாண்டி நகர ஆரம்பிக்க கண்ணை திறந்த யாமினி கார் கண்ணாடியை திறந்து வேகமாக தலை விட்டு போகும் ஆட்டோவை திரும்பிப் பார்க்க... ஆட்டோவின் பின்னால் இருந்த கண்ணாடி மறைப்பு வழியாக நெப்போலியன் காரை பார்க்க... சட்டென்று இருவரும் ஒரு சேர திரும்பி கொண்டனர்..

காதலில் உண்டாகும் காயங்களுக்கு காதல்தான் மருந்து!!