அலெக்சாண்டர் 4
Alex4

4 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
அப்பா எல்லாருக்கும் அம்மா இருக்கு , நம்ம அம்மா மட்டும் ஏன் இந்த வீட்டுக்கு வரல என்று குழந்தையாக தகப்பன் அருகில் படுத்து கிடந்த யாமினி கேட்டதற்கு .. மகள் கையில் சொடுக்கு விட்டுக் கொண்டே நல்லபெருமாள் ,
"அவளுக்கு உன்ன விட அவ குடும்பமும் அவ தம்பியும் தான் முக்கியம்னு சொல்லிட்டா... நான் வேணும்னா நம்ம குழந்தை வேணும்னா, அவங்களையெல்லாம் விட்டுட்டு வான்னு சொன்னேன்
"மம்மி என்ன சொன்னாங்க ..
"எனக்கு என் தம்பி தான் முக்கியம் அவனுக்கு தாய் தகப்பன் யாருமே இல்ல , நான்தான் அவனை அன்னை ஸ்தானத்தில் இருக்கேன், அதனால அவனை விட்டுட்டு வர முடியாதுன்னு சொல்லிட்டா
"ஓஓ அப்போ எனக்கும் அம்மா இல்லையே ஏன் அம்மா என்ன பத்தி யோசிக்கவே இல்ல,
" யோசிக்கலையே அவளுக்கு இந்த குட்டி பாப்பா வேண்டாம் போல இருக்கே ... அதான் எனக்கே எனக்குன்னு உன்னை வச்சுக்கிட்டேன்.. உனக்கு அம்மா வேணுமா அப்பா வேணுமா... அம்மா தான் வேணும்னா சொல்லு , நாளைக்கே கொண்டு போய் உன்ன அங்க விட்டுட்டு வந்துடறேன் என்று தகப்பன் அவள் காலில் முத்தம் கொடுக்க
"எனக்கு இந்த அப்பா போதும், இனிமே அம்மா வேணும்னு நான் கேட்கவே மாட்டேன் டேடி, அதுபோல அவங்க வந்தாலும் நாம சேர்த்துக்க கூடாது டீலா என்று குட்டி பெண்ணாகவே வஞ்சத்தை நெஞ்சில் விதைத்த தகப்பன் சொல்படி தலையாட்டிக் கொண்டது குழந்தை ..
எப்போதும் முதலாக இருக்க வேண்டும் என்று யோசிக்கும் அவளுக்கு தன் தாயின் அன்பு இரண்டாவதாக கிடைக்கும் என்றால் அப்படி ஒரு தாயே தேவையில்லை என்று தாயையே ஒதுக்கி வைத்து விட்டாள்..
களத்து மேடு போய்விட்டு வியர்வை வடிய உள்ளே வந்தான் நெப்போலியன் ...
அவன் மனைவி வீட்டில் இருக்கிறாளா என்பது அவ்வப்போது உள்ளிருந்து கேட்கும் அர்த்தமில்லாத ஐயோ அம்மா பாட்டுகளில் இருந்துதான் தெரியும், யாமினி சில நேரம் தன் நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு வெளியே வருவாள் , அப்போது பார்த்து இருக்கிறான்..மத்தபடி சொந்த வீட்டிலேயே தனி குடித்தனம் இருக்கும் புண்ணியவதியை பார்க்க விரும்புவது இல்லை.. ஆனால் ஸ்ரீதேவிதான் பாவம் ...
இத்தனை வருடம் கழித்து தன் மகளை கண் முன்னே பார்த்தும் அருகே கூட போக முடிவது இல்லை ...
முதல் நாள் மணக்க மணக்க சாப்பாட்டை செய்து கொண்டு யாமினி கையில் கொடுத்ததற்கு , எதிரே இருப்பது யார் யாமினி ஆயிற்றே...சாப்பாட்டு பறக்காமல் இருக்குமா?
"ஏன்டி கொஞ்சமாவது அறிவு இருக்கா, இந்த சோத்துக்காக தான் எல்லாரும் கிடந்து கஷ்டப்படுறது, இப்படி அறிவே இல்லாம சோத்து தட்ட தூக்கி போடுற "என்று தாயாக மகளைக் கண்டிக்க
என்ன இந்த சோத்துல விஷம் வச்சிருக்கியா மம்மி இல்ல மயக்க மருந்து ஏதாவது வச்சிருக்கியா ... என் அப்பாவை விட்டுட்டு, உன் கூட வந்தரணும்ங்கிறதுக்காக இதுல மயக்கம் மருந்து ஏதாவது போட்டு வச்சிருக்கியோ? அதான் அதை கொட்டுனதும் உனக்கு கோவம் வருதோ?
"ஏண்டி இப்படி கொடுக்கு மாதிரி என்ன சொன்னாலும் மனசு நோகுற மாதிரி பேசுற ...
"நான் அப்படித்தான் பேசுவேன்னு தெரிஞ்சும் எதுக்கு நீ என்கிட்ட வந்து பேசுற
"சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தது தப்பா ?
"நான் எதுக்கு சாப்பிடாம கிடக்கணும், மூணு நேரமும் பிரெட் பட்டர் ஜாமுன்னு சாப்பிடுவேன் எனக்கு அது போதும்..
"அதை தின்னுட்டு என்னடி உயிர் வாழ முடியும் இதுல விஷம் வைக்கல மயக்கம் மருந்தும் வைக்கல வாய்க்கு ருசியா சாப்பிடலாம்தானே "மகளுக்காக ஆசையாக செய்து வைத்ததை திங்கவில்லை என்றாலும் பரவாயில்லை ,இப்படி மனம் நோக பேச பெத்த மனம் வலிக்காமல் இருக்குமா?
"எனக்கு உன் கையில இருந்து அமிர்தமே வந்தாலும் விஷம்தான், நீ தந்து சாப்பிட்டு, நான் உயிர் வாழணும்னு அவசியம் இல்ல.. இனிமே சாப்பாடு தண்ணின்னு கொண்டுட்டு வந்து என் கதவை தட்டாதே ... எனக்கு என்ன வேணுமோ அத செஞ்சுக்க எனக்கு தெரியும்; எனக்கு உங்க உதவி தேவை இல்லை என்று முடித்து விட ஸ்ரீதேவி அழுது கொண்டே ஓடி விட்டார்..
வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் அப்படியே இந்த தகவலை கொண்டு போய் வயற்காட்டில் நின்ற நெப்போலியன் காதில் போட்டு விட....
இவளை சாட்டை எடுத்து விளாசினாதான் அடங்குவா என்று அவன் கோபத்தில் வந்து இவள் கதவை உடைக்க ..
"ப்ச் எதுக்கு இப்ப கதவை தட்டி டிஸ்டர்ப் பண்ற என்றவள் கையில் மது கோப்பை இருக்க
"நீ எல்லாம் பொம்பளையாடி
"கழட்டியா காமிக்க முடியும், அப்படியே இருந்தாலும் உன் கிட்ட காட்ட முடியாது" என்றவளை அவன் அடிக்க பாய
"எய்யா எய்யா மண்வெட்டி பிடிச்ச கை அடிச்சா செத்து போவா என்று ஸ்ரீதேவி ஓடி வந்து பிடித்து கொள்ள...
"ஓஓஓ, என்ன உன் அக்காக்காரி பொத்துனாப்பா உன் காதுல போட்டு விட்டுட்டாளோ, என்ன அடிச்சு பொளந்து நான் ஆம்பளதான்னு காட்ட வந்தியோ? என் மேல கை வச்சு பாரு ...அப்ப தெரியும் யாமி யாருன்னு
"என்னடி செஞ்சிடுவ ஹான், உன் மேல கை வைக்க முடியாம கிடையாது, உன் மேல கை வச்சு என் கைய அழுக்காகிக்க கூடாதுங்கிறதுனால, நான் பல்ல கடிச்சுட்டு போறேன் நாய, இல்ல தலை தனியா முண்டம் தனியா இங்க கிடக்கும் தாயிங்குற மரியாதை வேண்டாம் வயசுக்கு கொடுக்கிற மரியாதை கூட உன்னால கொடுக்க முடியாதா??
கொடுக்க முடியாது என்று கையை கட்டிக் கொண்டு திமிராக நின்ற அவள் கழுத்தை நெரிக்கும் ஆத்திரம் வந்தது....
ஏன் அக்கா உனக்கு புத்தி கெட்டு போச்சா ,இப்படி ஒரு எருமைக்கு நீ சாப்பாடு போடணும்னு என்ன அவசியம், தின்னா திங்கிறா திங்கலைன்னா செத்துட்டுப் போறா, இனிமே அவளுக்கு சோத்த கொடுத்தேன் காப்பிய கொடுத்தேன்னு எதையாவது செஞ்ச, உன்னைய தான் திட்டுவேன் பாத்துக்க என்று அக்காவை திட்டி விட்டு குளிக்க போனான் ...
ம்க்கும் பெரிய பாசக்கார அக்கா தம்பி , இதுக நடிப்பை பார்த்துதான் பாசமலர் எடுத்திருப்பானுக போல என்று ஹால் சோபாவில் தொடை ஆட கால் மீது கால் போட்டு உக்கார்ந்து தன் லேப்டாப்பை திறந்து வைத்தபடி மதுவை விழுங்கும் மகளை வெறிக்க ஸ்ரீதேவி பார்த்தார்...
மகளை ஐந்தில் வளைக்க நினைத்து தோற்று இப்போதும் வளைக்க வழி தெரியாது ஸ்ரீதேவி நின்றார் ...
இது எல்லாம் முதுகில் போட்டு திருத்த வேண்டியது என்று நெப்போலியனுக்கு தெரியுமே .. குளித்து விட்டு வெளியே போனவன் மனைவி திமிரை அடக்க மாமனாருக்கு ஸ்கெட்ச் போட்டு வைத்து விட்டு வந்துவிட... அங்கே போட்ட பாலுக்கு இங்கே பவுண்டரி விழுந்தது...
கயித்து கட்டிலில் நெப்போலியன் லுங்கியும் வெள்ளை பனியனோடு குப்புற படுத்து கிடக்க... அவன் வளர்க்கும் ஆளுயர நாய் ரோமியோ அவன் மீது படுத்து கிடந்து வாசலில் குட்டி டிரஸ் போட்டு வாலை ஆட்டி கொண்டு நின்ற யாமினியின் வெளிநாட்டு பொம்மேரியன் நாயை முறைத்தது...
ஜூலியட் இங்க என்ன பண்ற கம் "யாமினி குரல் கேட்டு அதுவும் இதை முறைத்து விட்டு உள்ளே ஓட ...
என்னடா ஆளு கலரா இருக்குன்னு மயங்கிட்டியா" என்ற நெப்போலியனுக்கு அவன் சிநேகிதன் வாலை ஆட்ட
அரளிவிதைடா ரெண்டும், அழகா இருக்குன்னு வாய்ல போட்ட செத்த என்றவன் கண்ணை திறக்க பளீர் தொடை தான் அவன் கண்ணில் பட்டது
இவ என்ன எப்ப பார்த்தாலும் காட்டிட்டு அலையுறா ச்சை இப்படியே காட்டுனா எவனுக்கு ரசிக்க தோணும் என்று தலையை தூக்கி என்ன என்று புருவம் உயர்த்த.... யாமினி சிலிவ்லெஸ் டாப் டவுசரில் பளீர் என்று நின்றாள்..
மனைவி என்ற எண்ணம் அவனுக்கும் வரவில்லை கணவன் என்ற சிந்தை அவளுக்கு வரவே இல்லை .. எலியும் பூனையுமாக ஒரே வீட்டில் முறைத்து கொண்டே சுற்றினர், இவர்களை பார்த்து ஸ்ரீதேவிக்கு தான் அய்யோ இதுக்கு அவ அங்கேயே எவனையாவது கட்டிட்டு இருந்திருக்கலாம் போல என்று வருத்தம் வந்து விட்டது ....
ஏய் ஏய் உன்னத்தான் ... என்ற யாமினி அழைப்பில் மறுபடியும் படுத்து கண்ணை மூடி கொண்டான்
ப்ச் உன்னத்தான்"
டேய் ரோமியா உன்னத்தான் கூப்பிடுறா போல என்னன்னு கேளு என்றான் கண்ணை மூடியபடியே
ப்ச் அதை இல்லை உன்னைத்தான் கூப்பிட்டேன்..
மரியாதை தெரியாத நாய்கிட்ட எல்லாம் என் நாயே நிக்காது ...
"உங்களத்தான், அப்பாவை அரெஸ்ட் பண்ண போறாங்களாம் ?
"பின்ன ஒவ்வொரு டிரான்ஸ்பருக்கும் கோடி ருபாய் வாங்கின மாலை மரியாதையா பண்ணுவாங்க
"ப்ச் கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சது நீ ?
"ஆமா நான்தான் ..
"ஏன் ஏன் ஏன் ??
"ஏன்னா உன்ன சாணி அள்ள விடணுமே பொண்டாட்டி என்றான் அவள் கத்தியதால் கீர் என்ற காதை குடைந்து கொண்டே
"அப்பா அரெஸ்ட் ஆக கூடாது
"ஓஓஓ என்று நெப்போலியன் ஆர்வமாக எழும்ப நாயும் எழும்பி அவன் மடியில் அமர ..
"அதுக்கு நீ என்ன போற புருவம் உயர்த்த
"என்ன பண்ணணும் ?
"ஒன்னும் பண்ண வேண்டாம் , பின்னாடி பச்சை கலர்ல ஒன்னு குவிஞ்சு கிடக்கும், அதை எடுத்து வட்டம் வட்டமா சுவத்துல தட்டணும் ... நூறு எண்ணம் தட்டிட்டு வா , உன் அப்பனை காப்பாத்திறேன் யாமினி அவனை எரிச்சலாக பார்த்தாள்.. ஏசியில் வாழ்ந்த அவளை இப்படி ஆற்றங்கரை ஓட்டு வீட்டில் போட்டு வதைக்கிறானே.. அவளுக்கும் இறங்கு திசை வரும் என்று கனவா கண்டாள்....
"என்ன ? நீ இங்க நிக்க நிக்க உன் அப்பன் எண்ண வேண்டிய கம்மி கூடுமே பொண்டாட்டி
"ப்ச் ஹண்ட்ரட் தானே ??
"தமிழ் தமிழ் உன் அளவு உன் புருசன் படிப்ஸ் இல்லை...
"ப்ச் நூறு தானே
ம்ம் சதம் போட்டுட்டு வா ... ரோமியோ உன் அண்ணியை கூட்டிட்டு போய் இடத்தை காட்டுலே என்றதும் ரோமியோ பாய்ந்து பின்னே போக .....
"இங்க ஏன் இப்படி குமட்டுது, இந்த களிமண்ணை எடுத்து எதுக்கு சுவத்துல அடிக்க சொல்றான் ச்சை லூசு என்று குனிந்து எடுத்தவள் .... அதை உருட்டி கொண்டு நிற்க....
"காமாட்சிக்கு தண்ணி வச்சியா? என்று ஸ்ரீதேவி பின்னால் வந்தவர் மகளை கண்டு அதிர்ந்து விட்டார்
"இவ இங்க என்ன பண்றா ,. அதுவும் சாணி அள்ளிட்டு இருக்கா நெப்போலியன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க..
"ஹாஹா உன் வேலை தானா , பரவாயில்லையே என் மகளுக்கு சாணி தட்ட எல்லாம் என் தம்பி சொல்லி கொடுத்துட்டான் போல... என்று மகள் அருகே போக
"வாட் சாணி?? என்றாள் புரியாது தோளை உலுக்கி கொண்டே...
"சாணின்னாவே என்னன்னு தெரியாதா அக்கட சூடு என்று நெப்போலியன் அவள் கழுத்தை திருப்பி மாடு போடும் சாணியை காட்ட
"நீ கையில ரசனையா உருட்டி உருட்டி தட்டுறியே அதான்டி சாணி என் அல்டாப்பு சுந்தரி "என்று நெப்போலியன் சிரிக்க
"சீசீ என்று பதறி யாமினி அதை கீழே போட்டு விட்டு
உவாக் உவாக் என்று வாந்தி எடுக்க , அவளை பிடிக்க கூட ஆள் இல்லை ...
"100 வரட்டி போட்டா உன் அப்பன் வெளிய இல்லை உள்ள ..உள்ளே வெளியே விளையாட நான் ரெடி, நீ ரெடியா பொண்டாட்டி என்ற நெப்போலியனை முறைத்து கொண்டே யாமினி மீண்டும் போய் சாணியில் கை வைத்தவள் ...
"என்ன என்ன செஞ்சாலும் என் திமிரை உன்னாலையும் இந்த பொம்பளையாலும் குறைக்க முடியாது ..நான் நல்ல பெருமாள் மகடா உங்க முன்னாடி தலைகுனிவேன்னு மட்டும் நினைக்காத என்றவள் மூச்சே விடாது தம் கட்டி கொண்டு அந்த வாடை மூக்குக்குள் நுழையாது சாணியை உருட்டி நூறு வரட்டி தட்டியவள்
"நூறு "என்று மூச்சி திணறி முடித்தவள் அதற்கு மேல் முடியாது மயங்கி சரிய ஸ்ரீதேவி பதறி மகளை பிடிக்க போக அவள் அருகே நின்ற நெப்போலியனோ தோளை உலுக்கி கொண்டு கீழே பொத்தென்று விழுந்து கிடந்த மனைவியை தாண்டி உள்ளே போய் விட்டான் ...
வீம்பு பிடித்தவள் அவள்
வீம்புக்கே பிடித்தவன் அவன்
அடிபணிந்து போவது சாத்தியம் இல்லாதது...