அலெக்சாண்டரின் அல்லி 5

Ale5

அலெக்சாண்டரின் அல்லி 5

5 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!

யாமினிக்கு,   நேற்று மயங்கி விழுந்தது தான் நியாபகம் இருந்தது...விழிக்கும் போது தன் படுக்கை மீது கிடந்தாள்.. 

வேறு யார் தூக்கி வந்து  இருப்பார்கள் அவள் கணவன் தான் தூக்கி கொண்டு வந்து படுக்கையில் போட்டு இருந்தான்..

"டேய் நெப்போலியா அவதான் வீம்பு பிடிச்சு நிக்கிறான்னா, நீயும் மயங்கி கிடக்கிற புள்ளைய அப்படியே விட்டுட்டு போற என்று ஸ்ரீதேவி அவனை பிடி பிடி என்று பிடித்து விட்டார்

"என்ன மகளுக்கு வக்காலத்தா

மகளுக்கு வக்காலத்து தம்பிக்கு வக்காலத்துன்னு இல்ல,  மனுஷியா இருக்கேன் .. அதனால சொல்றேன்... அவதான் அப்படின்னா நாமளும் ஏன்டா இப்படி இருக்கணும்.. யாரா இருந்தாலும் கஷ்டப்படும்போது பார்த்துட்டு நாம கடந்து போக மாட்டோம்.,உனக்கு நான் அப்படி சொல்லித் தரவும் இல்லயேடா...  உன் சொந்த பொண்டாட்டி கிட்ட இப்படி கோபத்தை வன்மத்தை காட்டுற ... வா வந்து தூக்கு

"ப்ச் ,  அவ என்ன பேச பேசுறான்னு பாத்துட்டுதானே இருக்க...

"இவ்வளவு பேசவான்னு  தெரிஞ்சு தானடா நாம அவளை இங்க கூட்டிட்டு வந்தது ... கையில அழுக்கு படாத புள்ளையை  சாணி அள்ள வச்சா சும்மா இருப்பாளா??

"சாணி அள்ளுனாலும் உன் மகளுக்கு திமிரு குறையுதா பாத்தியா,  மூக்கை புடிச்சுகிட்டு அத அள்ளித் தட்டுனா பாத்தியா, அங்க இருக்கா உன் மக..

"பின்ன அந்த ஆளு வளர்ப்பு சும்மாவா இருப்பா, 

"அப்படியே கிடக்கட்டும் விடு 

"டேய், உன் பொண்டாட்டியா பார்க்க வேண்டாம்,  என் பொண்ணா பாருடா ... பாரு எப்படி விழுந்து கிடக்கிறான்னு  கீழே விழுந்து கிடந்த மகளை பரிதாபமாக பார்த்தார்..

"உனக்காக தான் இவளை எல்லாம் வி்ட்டு வைக்கிறேன் ,  இல்ல இந்த மூட்டை பூச்சியை காலால நசுக்கி போட்டு இருப்பேன்.. அவ்வளவு கோபம் வருது , வார்த்தைக்கு வார்த்தை வார்த்தை டா போட்றா அக்கா..

"டேய் யோசிச்சு பாரு மூணு வயசுல இவ உன்ன  டேய் மாமான்னு கூப்பிடும்போது நீ வந்து அக்காகிட்ட என்ன சொன்ன,  அக்கா உன் மக என்னை டேய்  மாமான்னு கூப்பிடுறான்னு ஊருக்கெல்லாம் சாக்லேட் வாங்கி கொடுத்தல்ல,  இப்போ அதே மகதான டேய் மாமான்னு சொல்றது, இப்போ  உனக்கு வலிக்குதாக்கும்..

"ம்ம் ,  அது அப்போ இது இப்போ 

ஆனா  அப்பவும் இப்பவும் உன் பொண்ணு கிட்ட மாறாதது எது தெரியுமா??

"என்ன?? மகளை தூக்கிக்கொண்டு நடக்கும் நெப்போலியன் பின்னே ஸ்ரீதேவியும் நடந்து கொண்டே கதை பேசினார் 

"அன்னைக்கு போட்ட உடுப்ப இன்னைக்கு வரைக்கும் அவ மாத்தவே இல்ல போல இருக்கு அதை குட்டி உடுப்புல அலையுறா... எப்படி அக்கா இப்படி வளர்த்து வச்சிருக்கார்... 

"அவர் கண்ணுக்கு அவர் மக இன்னும் பச்சை குழந்தையாகவே தெரியுது போல இருக்கு...

"அதுக்கு பால் டப்பா கொடுக்குறதுக்கு பதிலா பீர் டப்பா கொடுத்துல்ல வளர்த்து வச்சிருக்கார் ... அந்த மனுஷன் என் கையில கிடைச்சாருன்னு வச்சுக்கோ வர்ற ஆத்திரத்துக்கு இவளுக்கு பதிலா அவருக்கு இரண்டு வாங்கு வாங்கணும் "என  நெப்போலியன் அவளை படுக்கையில் போட .. அவன் சட்டையை பிடித்து இழுத்த மனைவியை என்ன என்று பார்த்தான்

டேய் ,  உன்னை பழி வாங்காம விடமாட்டேன் டா என்னைய சாணி அள்ள விட்டுட்டல்ல" என்ற அவள் உதடுகள் முணுமுணுக்க ஆளோ மயக்கத்தில் கிடந்தது. 

பார்த்தியா மயக்கத்துல கூட எனன பழிக்கு பழி வாங்க உன் மக  வெறிகொண்டு நிற்கிறா..  ஸ்ரீதேவி மகள் காலைத் தடவிக் கொண்டே கண்ணில் வடிந்த தன் கண்ணீரைத் துடைக்க அக்காவின் தோளில் கை வைத்து அழுத்திய நெப்போலியன் 

விடுக்கா எல்லாம் மாறும் மாறலன்னா உனக்காக மாற்றி தரேன்,  என் பொண்டாட்டி என்ன புரிஞ்சிக்கிறலோ இல்லையோ? உன் மக உன்ன கண்டிப்பா புரிஞ்சுப்பா...  புரிஞ்சுக்க வைக்கிறேன் சும்மா அழுது கரையாத..

ம்ம்

இத்தனை நாள் மகளை பார்க்கணும்னு ஆசைப்பட்டல்ல, இப்போ பக்கத்திலேயே இருக்கா நல்லா பாரு..  நீ அழுதா நான் தாங்க மாட்டேன்னு தெரியாதா?   என்றதும்  கண்ணை துடைத்துக் கொண்ட ஸ்ரீதேவி தம்பியின் கையைப் பிடித்து முகத்தில் வைத்து பொத்திக் கொண்டவர்

நீ மட்டும் இல்லன்னா என் வாழ்க்கை எப்படி எல்லாம் போயிருக்கும்டா ரொம்ப நன்றிடா""

"என்னக்கா நீ,  நீ வேற நான் வேறயா ? இப்படி நன்றி சொல்லி பிரிச்சு விடுறியே,  உனக்காக கல்யாணம் மட்டும் இல்லை எது வேணாலும் செய்வேன் .. அவ கைய கால எல்லாம் தொடச்சு படுக்கப் போடு பின்ன முழிச்ச பிறகு இதுக்கும் கிடந்து குதி குதின்னு குதிப்பா என்று வெளியே போக தன் தம்பியை பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது..

வாழ வேண்டிய புள்ளையை இப்படி ஒரு பெண்ணிடம் சேர்த்து வைத்து விட்டோமே என்று சற்று வருத்தம் தான் ..ஆனால்,  தம்பி மீது அதிக நம்பிக்கை இருந்தது எப்படியும் இவளை தன் வழிக்கு கொண்டு வந்து விடுவான் என்ற நம்பிக்கை தான்...

"எவ்வளவு திமிரு இருக்கணும் என்ன தொட்டு தூக்கி இருக்கான், லோ கிளாஸ் எருமை  என்று யாமினி உதட்டை சுழித்தவள் முதல் வேளையாக போய் அவன் தொட்டு தூக்கிய உடலை குளித்து சுத்தம் பண்ணி விட்டு தன்னை காண ஊர் வாசலில் நிற்பதாக சொன்ன தகப்பனை பார்க்க கிளம்பினாள்.. 

"கண்ணா அப்பாவுக்காக நீ இப்படி எல்லாம் கஷ்டப்படணும்னு அவசியமே இல்லை..  என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் , நீ முதல்ல வீட்டுக்கு வா நீ மயங்கி விழுந்துட்டேன்னு சொன்ன உடனே என்னால் அங்க இருக்கவே முடியல,  உடனே கார் எடுத்துட்டு ஓடி வந்துட்டேன் ... அந்த வீட்டுக்கு வர எனக்கு மனசு இல்ல அதான் உன்ன இங்க வர சொன்னேன்...  ஊர் எல்லையில் நல்ல பெருமாள்  மகள் கையைப் பிடித்துக் கொண்டு நிற்க .... தகப்பன் நெஞ்சில் சாய்ந்து இருந்த யாமினி

"அட விடுங்க டேடி , இங்க வரும்போது இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியும்..  இவங்க எல்லாம் இந்த யாமினிய தப்பா கணக்கு போடுறாங்க இப்படி எல்லாம் செஞ்சா பயந்துடுவேனா? இல்ல மிரண்டு போய் அவன் கூட வாழ்ந்துடுவேனா..  கோடீஸ்வரனாவே  இருந்தாலும் நான் சொடுக்கு போட்டு கூப்பிட்டா ஓடி வர்ற புருஷன்தான் எனக்கு வேணும் ... நாய்க்குட்டி போல என்ன சுத்தி வரணும்,  இப்படி ஒருத்தன் கூட நான் அடிபணிஞ்சு வாழ்றதா,  நெவர் ஆறு மாசம் அதுக்கு பிறகு இந்த லோ க்ளாஸ் கூட்டத்தை விட்டு நான் வந்துடுறேன் எனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து எனக்கு புடிச்ச மாதிரி கட்டி வைங்க டேடி..

திருமணம் அவளை பொறுத்தவரை சந்தையில் விற்கும் காய்கறி போல,  இவன் பிடிக்கவில்லையா அவன், அவன் பிடிக்கவில்லையா இன்னொருவன் என்ற எண்ணத்தில் இருக்கும் மகளிடம் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்..  அது ஒரு முறை நட்டு விட்டால் பிடுங்க ஆயிரம் அல்ல லட்சம் முறை யோசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய தகப்பன் 

"உன் இஷ்டம் போல பண்றேன் கண்ணா, எனக்கு என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான் இதுக்காகத்தானே நான் இந்த உலகத்துல வாழ்றது,  நீ மட்டும் எந்த காரணத்துக்காகவும் அவங்க ரெண்டு பேருக்கும் பயந்துடவே செய்யாத... 

அப்பா உன் பொண்டாட்டி எல்லாம் டம்மி பீஸ்,  சும்மா மெரட்டினாலே பயந்து அழுகுது..  இந்த  கேம்கூட  விளையாட நல்லா தான் இருக்குது என்ன அவன் தான் ஆனா ஊனா அடிக்க கை ஓங்குறான்    இனி , அடிச்சு பாக்கட்டும் என் துப்பாக்கிக்கு வேலை வந்துடும்.."

"ஹாஹா இது என் பொண்ணு ,  என்ற நலலபெருமாள் சிகரெட்டை எடுத்து வாயில் வைக்க யாமினி  லைட்டர் எடுத்து தகப்பன் சிகரெட்டுக்கு நெருப்பு வைக்க  ...

"ஜூலியை காணல நான் போய் தேடிட்டு வர்றேன் எங்கேயும் போயிடாத டேடி  "

"நீ வாம்மா நான் இதை இழுத்து முடிக்கிறேன்" என்று கார் பேனட்டில் துள்ளி ஏறி அமர்ந்தார் கமிஷனர் நல்லபெருமாள் 

இவரின் தனிப்பட்ட கெளர பிரச்சினையில் அத்தனை பேர் வாழ்க்கையையும் கேள்வி குறி ஆக்கி விட்டார் .. 

நல்லபெருமாள் ஐம்பது வயது இருக்கலாம்,  ஆனால் முடி கூட நரைக்காத உருவம் தேகம் தேக்கு கட்டை போல இருக்கும் ..  ஹாட் அட்டாக் நாடகம் போட்டு  மகளை தாயோடு அனுப்ப சொல்லி ஸ்ரீதேவி போட்ட வழக்கை உடைத்து விட்டார் .. 

பொண்ணு அம்மாக்கிட்ட தான் வளரணும் என் பொண்ணை எனக்கு தர சொல்லுங்க என்று  ஸ்ரீதேவி வழக்கு கொடுக்க 

அவள அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் 18 வயது பூர்த்தியான பெண் அப்பாவோடு இருக்க  விருப்பம் என்றதாலும் தாயோடு அனுப்ப முடியாது என்று வழக்கை முடிக்க வைத்த மூளைக்காரன்... 

உன் நிம்மதி என் மகன்னா அவளை கடைசி வரை நான் தர மாட்டேன்டி என்று சிவந்த கண்ணோடு புகையை ஊதி விட , அந்த புகை நடுவே ஒரு உருவம் நடந்து வர கண்ணை சுருக்கினார்...அந்த உருவம் நெஞ்சை விட்டு மறைந்து போகாத உருவம் அல்லவா 

"என்ன ஸ்ரீதேவி அக்கா கோவிலுக்கா போய் வர்றிங்க "என்று எதிரே வந்தவர் கேட்க 

"ஆமா காஞ்சு வெள்ளிக்கிழமைல்ல அதான் போய் தம்பி பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வர்றேன் என்று பேசி கொண்டு வந்தவர் கண்ணை சுருக்கி சூரிய ஒளி நடுவே அந்த கம்பீர உருவத்தை பார்த்து ஒரு நிமிடம்  அதிர்ந்து போய் நின்று விட்டார் ..

விவகாரத்து ஆன அன்று கோட்டில் கணவனை கடைசியாக பார்த்தது அதன் பிறகு இன்று தான் நல்லபெருமாளை பார்க்கிறார்..நம்ம ஊர் பய உன்னை நல்லா பார்த்துப்பான்  காசு இல்லன்னாலும் கெளரவமா வாழ வைப்பான் என்று அவர் கரத்தில் தன்னை கொடுக்க .. அவர் பண்ணின வேலைகளை நினைத்து பார்க்கவே நெஞ்சு முட்டியது .. மகள் பிறந்தது  மட்டும் தான் இவரை கட்டி கொண்டு கிடைத்த ஒரே பரிசு....  சண்டை சண்டை சண்டை வாக்குவாதம் இல்லாத நாட்களே இருக்காது.. 

எதிரே காட்டன் புடவையில்  நின்ற மனைவி கழுத்தில் கிடந்த தாலியை நல்லபெருமாள் கண்கள் இடுங்க  பார்த்தபடி சிகெரெட்டை இழுக்க.... 

துஷ்டனை கண்டால் தூர விலகு என்ற பழமொழி தான் ஸ்ரீதேவிக்கு தோன்றியது ... சட்டென்று அந்த இடத்தை விட்டு குனிந்து கொண்டே நடக்க போக காரை வி்ட்டு குதித்து இறங்கி அவரை மறைத்தபடி நின்றார் நல்லபெருமாள்....

விவாகரத்து கூட சில காதலுக்கு முடிவு இல்லை  ...அதுவும் ரெண்டாம் தொடக்கமாக இருக்கலாம் ..