அலெக்ஸ் 15
Alex15

15 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
பத்து நாள் நல்லபெருமாள் நகரவே செய்யாது மனைவி கூடவே இருந்து பார்த்தார்
நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் சார்
"ஓஓஓ "டிஸ்சார்ஜ் ஆனா அவரை பார்க்க முடியாதே என்று அவளுக்கும் இனி எப்போ இவளோடு இருப்பது என்று அவருக்கும் மூச்சு அடைத்தது..
"பில் கட்டிட்டு வரேன் என்று நல்ல பெருமான் வெளியே போய்விட்டு உள்ளே வரும் பொழுது முகம் கோபத்தில் சிவந்து போய் இருந்தது..
" உன் தம்பி என்னடி நெனச்சுக்கிட்டு இருக்கான், ஏன் உனக்கு நான் பில் கட்டக்கூடாதா? எனக்கு முன்னாடி அவன் கட்டிட்டு போய் இருக்கான்
"என்ன ஆச்சு அத்தான்..
"நான் நிம்மதியாக இருக்கக் கூடாதுன்னு உன் குடும்பம் முழுக்க சதி பண்ணுமோ? நேத்து கேட்டல்ல என்ன காரணம்னே தெரியாம ஏன் என்னை பிரிஞ்சீங்கன்னு .. உன் குடும்பம் தான்டி காரணம் !!
"ஹான்
"உன்னை பிரிஞ்சு போக உன் கேடுகெட்ட குடும்பம்தான் காரணம் .... அன்னைக்கும் என்ன நிம்மதியா வாழ விடல இன்னைக்கு இவன் " என்று சேரில் உட்கார்ந்த கணவன் கோபத்தை புரியாது ஸ்ரீதேவி பார்த்தாள்..
ஸ்ரீதேவி அந்த ஊரின் பண்ணையார் மகள், 15 வருடம் கழித்து பிறந்தவன் நெப்போலியன் , அவனுக்கு தாய் ஆகி போனாள்.. தாய் ,தகப்பன் அன்பை விட தமக்கை அன்பில் தான் அவன் வளரவே செய்தான் ...
ஊரையே வளைத்து போட்டு வைத்திருந்தார் ஸ்ரீதேவி தகப்பன் குருபிரசாத்....பணம் பணம் என்று அலையும் மனைவியும் கூட்டு சேர , ஏழைகளை கண்டால் ஏளனமாக பேசும் குணமும் அதிகம் ....
ஊரே அவர்கள் சொல்படி தான் கேட்கும்...
நல்ல பெருமாள் இவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர் மகன், எப்படியோ தகப்பன் படிக்க வைத்து விட்டார்... இவரும் படிப்பில் கெட்டி பண்ணையார் மகளைப் பார்ப்பதற்காகவே பல விடலை பசங்க கோவில் வாசலில் காத்துக் கிடப்பார்கள் ..
நமக்கெல்லாம் இது எட்டா கனி என்று நல்லப்பெருமாள் நினைத்தாலும் கோழிக்குண்டு கண்ணும் அதில் பூசிய கண்மையும், பாவாடை தாவணியில் தங்க கொலுசு போட்டு கொண்டு படியில் ஏறி வரும், இந்த காதல் தேவதையின் தரிசனம் காண வெள்ளிக்கிழமையானால், அவர் பாதம் சொல் பேச்சு கேட்காமல் கோவிலுக்கு சென்று விடும்...தம்பியை தூக்கி கொண்டு யாரையும் எட்டி பார்க்காது வைர அட்டியல் போட்டு மினுங்கும் அவளை கடைசி வரை நின்று ரசித்து ரசித்தே சாகும் பித்தன் ஆனார்..
நமக்கெல்லாம் எங்க இவ கிடைக்க போறா என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டார் .. ஆனால் அரண்மனை அன்னக்கிளி தன் கையில் வந்து கிடைக்கும் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை ..
ஸ்ரீதேவிக்கு செவ்வாய் தோஷம் என்று வந்த வரன்கள் எல்லாம் தட்டிப் போக...
"அய்யா கல்யாணம் பண்ணி வச்சாலும் , அமோகமாக வாழ்வாங்கன்னு சொல்ல முடியாது
"என் கெளரவமே அவளை கல்யாணம் பண்ணி வைக்கிறதுலதான் இருக்கு ...இவ்வளவு பணம் இருந்தும் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பிடிக்க முடியலைன்னு முதுகு பின்ன பேசுறான் "
"அய்யா பெரிய பெரிய இடமா பார்த்தா அமையாது வேணும்னா எதாவது அன்னக்காவடியா பார்த்து கட்டுடா தாலியைன்னா கட்ட போறான் ...
"அய்யா போலீஸ் ட்ரைனிங்குக்கு, டவுன் போக என் மகனுக்கு கொஞ்சம் செலவுக்கு பணம் வேணும் என்று நல்லபெருமாள் தகப்பன் தலையை சொரிய தம்பதிகள் கண்கள் ஜாடை பேசி கொண்டது ...
" ஒன்னும் இல்லாத அவனை கல்யாணம் கட்டி நம்ம வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்கிட்டா, நம்ம மகளும் வீட்டோட இருப்பா, நெப்போலியனையும் அவளே வளர்த்துடுவால்ல "என்ற மனைவி பேச்சு நியாயமாக தெரிய
"ம்ம்
"நம்ம சொத்து பத்தும் வெளியேவே போகாது அதோட இல்லாதவன் நம்ம காலுக்குள்ள அடங்கி கிடப்பான், மாப்பிள்ளை முறுக்கு காட்டினா குறுக்க உடைச்சு புடலாம் என்ற மனைவி சொல் மந்திரம் என்று நல்லபெருமாள் தகப்பனிடம் கூற
ஏற்கனவே எட்டாக்கனி என்று ஏங்கிப் போய் கிடந்த நல்லபெருமாள் வந்து மாட்டினார்...மகளை உன் வீட்டுக்கு அனுப்ப முடியாது வீட்டோடு மாப்பிள்ளை ஆகத்தான் வரவேண்டும் என்று கேட்கும் பொழுது நல்லபெருமாளுக்கு முதலில் தயக்கமாக இருந்தாலும்... அவரை பார்த்து கண்ணை கண்ணை உருட்டிய ஸ்ரீதேவியை விட மனசே இல்லை இதை விட்டால் வாய்ப்பு இல்லை என நினைத்தவர் சரி என்ற தலை ஆட்டிவிட்டார்.. திருமணமும் முடிந்தது ..
மனைவி ஒன்றும் குறை வைக்கவில்லை, ஆனால் அந்த வீட்டில் மனைவி தவிர , மற்றவர்கள் எல்லோரும் அவரை தரக்குறைவாக நடத்த ஆரம்பித்தார்கள் ..
என்ன பெருமாள் இன்னும் உங்க மாமனார் வந்து சாப்பிடல அதுக்கு முன்னாடி வந்து சாப்பிட உட்கார்ந்து இருக்க"
"இல்லை அத்தை வொர்க்கவுட் பண்ணணும் சாப்பிட்டா தான் பாடி மெயின்டெய்ன் பண்ண முடியும் "
"ஓஓஓ ஓசி சோறுன்ன உடனே ஓய்யாரமா உட்கார்ந்துடீங்க போல , இதுக்கு தான் இல்லாதப்பட்ட ஆட்களை மருமகனா எடுக்க கூடாதுன்னு சொல்றது .... அவர் வந்து சாப்பிட்ட பிறகு வந்து சாப்பிடுங்க" என்ற சாப்பிட்டுக் கொண்டிருந்த நல்லபெருமாள் தட்டை பிடுங்கி வைத்துவிட்டு போக ... முதல் அவமானத்தில் இடிந்து போய் நின்றார்
மனைவியிடம் இதைப் பற்றி சொன்னால் அவர்கள் வீட்டில் சண்டை சச்சரவு வந்து விடுமோ என்று வலியை விழுங்கிக் கொண்டார் ..
ஆனால் மீண்டும் மீண்டும் சாட்டையடி போல அவர் தரத்தை குறைத்து பேசுவதும் , உன்னை ஒன்னும் என் மகளுக்கு புருஷனா கூட்டிக்கிட்டு வரல இந்த வீட்டுக்கு அந்த நாய் எப்படியோ அப்படித்தான் நீயும்... என்று மகள் காது படாது திட்டிய மாமனார்...
சாக்கடை அடைச்சு இருக்கு அதை சுத்தம் பண்ணு பெருமாள் .. மக முழிச்சு வரும் முன்ன அதை கொஞ்சம் சரி பண்ணிடு..."
அத்தை நான் போய் "
"ஏன் பண்ண மாட்டீங்களோ உங்க மேல் படிப்புக்கு மாமாதான் காசு சுளையா தர்றார், இந்தாங்க பிடிங்க... "
"அப்படி எல்லாம் என்னால தரம் தாழ்ந்து போக முடியாதுங்க நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு கிளம்புறேன் ...
எங்க , போயிடுவியா போய்தான் பாரேன் , பிச்சைக்காரன் நீ, திமிரா, அடங்கி கிடக்கல பொண்டாட்டியும் இல்லை வாழ்க்கையும் இல்லை என்று மாமனார் கேவலமாய் அவரை நடத்த..
என்ன ஆனாலும் நல்லப்பெருமாளும் ஆண்மகனே அடக்கி அடக்கி வைக்கும் கோபங்கள் எல்லாம் ஆழ் கடல் சீற்றம் போல் அவருக்குள் அடைந்து கிடந்தது.. மனைவி வேறு முழு நேரமும் தன் குட்டி தம்பியை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவதும் அவளுக்கு அன்னையாக மாறி விட ..இவர்கள் அவர் மனதை நோகடிக்க பொறுத்து பொறுத்து பார்த்தவர் மனைவியிடம் ஒருநாள் சண்டையும் போட்டு விட்டார்
நான் வேணும்னா என் கூடவா தேவி, கூழோ கஞ்சோ என் வீட்டுல உனக்கு ஊத்துறேன்..
"என் தம்பி நான் இல்லன்னா சாப்பிட்டுக்க மாட்டாங்க... இப்போ இந்த வீட்ல உங்களுக்கு என்ன குறை வச்சிருக்காங்க பாருங்க நல்ல துணிமணி சாப்பாடு அவ்வளவு ஏன் உங்களுக்கு மேல்படிப்புக்கு வேலை எடுக்க எல்லாம் செலவு பண்றேன்னு அப்பா சொல்லி இருக்காங்க அப்பா எவ்வளவு நல்லவர்? நீங்க இப்படி சொன்னது அவர் காதுக்கு போச்சுன்னா என்ன நினைப்பார்... தன் தகப்பன் பற்றி அறியாது ஸ்ரீதேவியையும் வெள்ளந்தியாக புருஷன் மனம் தெரியாது பேச..
"அப்போ உனக்கு என்ன விட உன் அப்பன் உன் தம்பி உன் அம்மா இவங்க தான் முக்கியமா..
"இப்ப எதுக்கு கோபப்படுறீங்க அத்தான்,
"என் கூட வர முடியுமா முடியாதா கல்யாணம் முடிந்து இரண்டு மாதத்தில் பெண் என்ன முடிவு எடுக்க முடியும் கையை பிசையய்தான் முடிந்தது...
காலை தம்பியோடு முற்றத்தில் விளையாடி கொண்டு நின்ற ஸ்ரீதேவி சினமாக உள்ளே போன புருசன் கோவம் புரியாது பின்னாடியே ஓட நலலபெருமாள் ஸ்ரீதேவி தகப்பன் சட்டையை பிடித்து இழுத்து கொண்டு நின்றார்
அவருக்கு வேலைக்கு வந்த ஆர்டரை புருஷனும் பொண்டாட்டியும் தீயில் போட்டு கொளுத்தி விட்டனர்
வேலை கிடைச்சா இன்னும் ஆடுவான் அவனுக்கு வேலை கிடைக்க விட கூடாது என்று இருவரும் வில்லங்கமாக செய்ய விஷயம் அறிந்து வந்த நல்ல பெருமாள் மாமனாரை அடிக்க ஓங்க
அய்யோ அத்தான் என்று ஓடி வந்து ஸ்ரீதேவி பிடிக்க
கிளம்பு தேவி "
"ஏன் அப்பா கிட்ட இப்படி நடந்துக்கிறீங்க..
"அது ஒன்னும் இல்லம்மா , வீட்டுல காசு திருடி இருக்கார் அதை கண்டுபிடிச்சுட்டேன்னு இப்படி நிற்கிறார்.... அதுக்கு தான் பணம் உள்ளவனை பார்த்து இருக்குணும் பணம் இல்லாத பிச்சைக்காரன்ல
யோவ் ஊஊஊஊஊஊஊஊ
அத்தான்
"அப்பா அவர் அப்டி எல்லாம் இல்லை.... என்னன்னு தெரியல அவருக்கு உங்களை பிடிக்கல நான் வேணும்னா அத்தான்கூட தனியா போகவா என்றதும் நல்லபெருமாள் அப்பாடா என்று நெஞ்சை பிடிக்க அதற்குள் ஸ்ரீதேவி தகப்பன் நெஞ்சை பிடித்து கொண்டு நாடகம் போட ..
மீண்டும் ஒரே வீட்டில் கீரியும் பாம்பும் போல நின்றனர் தன் மனைவிக்காக மட்டும் தான் பல்லை கடித்தார் அவரோடு தனியாக இருக்க ஆசையாக வந்தால் நெப்போலியன் துணை கொடுக்காக கட்டிலில் நடுவே கிடப்பான்
"ப்ச் அவனை தூக்கி உன் அம்மா ரூம்ல போடுடி
"பாவம் அத்தான் பாதி ராத்திரில அக்கா அக்கா ன்னு அழுறான்..."
"நாம தான் புது ஜோடி அதுக இல்லை" அவனை அழ அழ இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி கதவை அடைத்தார் ...
"ஏன் இந்த அத்தான் குணம் இல்லாம நடந்துக்கிறார் பச்சை பிள்ளைக்கு என்ன தெரியும் ராத்திரி அழுது அழுது காய்ச்சல் கண்ட தம்பியை ஓடி போய் ஸ்ரீதேவி தூக்க பார்க்க... இவர் கோவம் எல்லை மீறி மனைவியோடு தினம் தினம் வாதம் நடக்க...
உங்க சொத்து சுகம் எல்லாம் மருமகனா வந்திருக்க நல்லபெருமாள் கைக்கு தான் போகும்னு கட்டம் சொல்லுதே என்று கோவிலுக்கு வந்த பெரியவர் ஒருவர் சோவி உருட்டி ஸ்ரீதேவியின் தகப்பனுக்கு கூற....
நல்ல பெருமாளும் இந்த பணம் எல்லாம் இருப்பதினாலே தானே என்னையும் என் மனைவியையும் வாழ விடமாட்டேன் என்று திமிர் தனம் செய்கிறீர்கள்.. ஒன்னு இந்த சொத்தை அழிக்கிறேன் இல்ல இந்த சொத்த முழுக்க என் பேர்ல எடுத்துகிறேன். உங்க எல்லாரையும் வெளியே தள்ளி என் பொண்டாட்டிய மட்டும் நான் கூட்டிக்கிட்டு போயிடுவேன், இவர்கள் ஒரு செயலை செய்தார்கள் அவரும் அதற்கு பதில் செயலை செய்தார் அவ்வளவுதான்
சொத்து பத்திரங்களை தன் மனைவி பேருக்கு பத்திரம் போட முடியுமா என்று நல்லபெருமாள் சுற்றுவது அறிந்த மாமனார்..
நீ உயிரோட இருந்தா தானே இதெல்லாம் நடக்கும் என்று மகளை அழைத்து , உன் புருஷனுக்கு காசு ஆசை வந்துடுச்சு என்னைக்காவது எங்களை கொன்னுட்டு சொத்த சுருட்டிட்டு போயிடுவான்..
அப்படியெல்லாம் அத்தான் கிடையாது
"நீ தான் நம்பிகிட்டே இருக்க, இது நம்ம ஊர் தாசில்தார் , கேட்டுப்பார் சொத்த என் பொண்டாட்டி பேர்ல மாத்த முடியுமான்னு போய் கேட்டு இருக்கான்.. அவரும் ஆம் என்று தலையாட்ட உள்ளே வந்த நல்லபெருமாள் முன்னே போய் நின்றாள் ஸ்ரீதேவி...
"என்ன அத்தான் இது, சொத்தை எதுக்கு என் பேர்ல மாத்த சொல்லி இருக்கீங்க ..
"உன்ன கல்யாணம் கட்டுனதுக்கு வரதட்சணை எதுவும் வாங்கலல்ல அந்த சொத்தை எல்லாத்தையும் என் பேர்ல எழுதி வைக்க சொல்ல இல்ல உன் பேர்ல எழுதி வைக்க சொல்லு என்ற புருஷனை அதிர்ந்து போய் ஸ்ரீதேவி பார்த்தாள்
"ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க நிறைமாத கர்ப்பிணியாக நின்றவர் தகப்பனா கணவனாக என்று தெரியாது திகைத்து நின்றார் காலை கட்டி கொண்டு அக்கா அக்கா என்று பற்றிய தம்பியையும் விட முடியாது பாசப்போராட்டத்தில் கைதி ஆகி போனாள்..
" நான் இப்படித்தான் பண்ணுவேன், ஒன்னு இன்னைனக்கு ராத்திரியே நீ மட்டும் இந்த குடும்பத்தை தலை முழுகிட்டு என்கூட வர்றதா இருந்தா வா , இல்ல இந்த சொத்தை எல்லாம் என் பேர்ல எழுதி வைக்க சொல்... இனி, என்ன பண்ணனுமோ அதை நான் பண்றேன்...
இரவோடு இரவாக நல்ல பெருமாளை கொல்லுவதற்காக மின்சார கம்பிகளை நல்லபெருமாள் வரும் வழியில் ஈரத் தரையில் போட்டு வைத்துவிட்டு, புருஷனும் மனைவியும் மருமகன் சாவை பார்த்து ரசிக்க காத்திருக்க..
கடவுள் ஒருவன் இருக்கிறானே, அவர்கள் தலை மேல் இருந்த மெயின் கரண்ட் பாக்ஸில் சொருகி இருந்த வயர் ஸ்ரீதேவி தகப்பன் மீது விழுந்து மின்சாரம் தாக்க .. தன் கணவனை காப்பாற்ற போன அவர் மனைவியும் கரிக்கட்டையாகிவிட ..
சரியாக நல்லப்பெருமாள் உள்ளே வர , தீயில் கரிக்கட்டையாக அலறிய அவர்கள் அலறல் சத்தத்தில் ஊரே அங்கே கூடி விட்டது
சொத்துக்காக நல்லபெருமாள் மாமனார் மாமியாரை கொன்னுட்டான் என்று ஊரே பேச கையில் வைத்திருந்த வேலைக்கான ஆர்டர்ரை மனைவி கையில் கொடுத்து மகிழ நினைத்தவர் தன்னை குற்றம் சாட்டும் பார்வையோடு நின்று கொண்டிருந்த மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு அருகே போக , மகளை ஒரு கையில் தம்பியை ஒருகையில் பிடித்து கொண்டு நின்ற ஸ்ரீதேவியோ,
"உங்களுக்கு என்ன விட இந்த பணமும் சொத்து தான் முக்கியமா இப்படி பண்ணிட்டீங்களே அத்தான் என்ற ஒற்றை கேள்வியில் சுக்கு நூறாக உடைந்து போய் நின்றார்..
நம்பிக்கை எல்லாம் தானாக வரவேண்டும், என் கணவன் இவ்வளவு பெரிய கொடூர செயல்களை செய்ய மாட்டான் என்று நம்பி இருக்க வேண்டும் தன் தகப்பனும் தாயும் கெட்டவர்கள் இல்லை என்று நம்பினாளே, புருஷனை மட்டும் ஏன் நம்பவில்லை என்ற ஈகோ
"ஆமாடி எனக்கு இந்த பணம்தான் முக்கியம் சொத்துல கையெழுத்து போடு என்று மனைவி கையைப் பிடித்து கைநாட்டு வைத்து சொத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்..
இந்த பணம் எல்லாம் இருக்கிறதுனால தான் உங்க எல்லாருக்கும் கண்ணு தெரியல .. இனி நானும் இதே போல பண்றேன் என்று ஏற்கனவே கல்லாக இருந்தவர் தன்னைத் தேடி மனைவி வருவாள் என்று காத்திருந்து காத்திருந்து களைத்துப் போனவர் .... வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.. மகளை எனக்கு தர சொல்லுங்க என்று ... விவகாரத்து நோட்டீஸ் அடுத்து வந்தது .. மகளை அபரிகரித்து மனைவியை தன் பக்கம் இழுக்க நினைத்தார்...
ஸ்ரீதேவி, தன் தம்பியை தூக்கிக் கொண்டு அவன் பெயரில் உள்ள வீட்டிற்கு போகவும்.. போறியா எப்படி தனியா வாழ்வது என்று பார்க்கிறேன் என்று இல்லாத குடைச்சல் எல்லாம் கொடுக்க ஆரம்பித்தார்...
மொத்தத்தில் வாழ்க்கையை தொலைத்து விட்டு நின்றார் ...