அலெக்ஸ் 20
Alex20

20 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
முனியா அந்த கார்டன் எல்லாத்தையும் கொஞ்சம் சரி பண்ணு , நிறைய ரோஸ் செடி வாங்கிக்கொண்டு வச்சிருக்கேன், எல்லாத்தையும் கார்டன் முழுக்க நிரப்பி வை.. அதுலேயும் அந்த மஞ்சள் ரோஸ் அதிகமா வை.... லுங்கி கட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு மேல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் தன் தகப்பனை கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் யாமினி..
நல்லபெருமாள் நல்ல தகப்பன் என்பதையும் தாண்டி இந்த உலகத்தில் மிக மிக பிடித்த ஒருவர், பொண்டாட்டி சரியில்ல என்று மனம் போல் வாழும் மக்களுக்கு மத்தியில் பொண்டாட்டி கூட சண்டைதான் அவள பிடிக்காது விவாகரத்தும் பண்ணிட்டேன் ..ஆனா அவ இருந்த இடத்துல இன்னொருத்தி வந்து விடவே கூடாது என்பதில் இந்த நாள் வரை சரியாக இருப்பார்.
மகள் குடித்துவிட்டு வந்து நின்றாலும் சிரித்து கொண்டு வழி விட்டு இருக்கிறார்.. குடி ஸ்ரீதேவிக்கு பிடிக்காது என்று அதை தொடவே மாட்டார் ...
ஏன் டேடி இதெல்லாம் தப்புன்னு எனக்கு சொல்லவே இல்ல என்று சில நாட்களுக்கு முன்புதான் தகப்பனிடம் கேட்டாள் சிரித்துக் கொண்டே மகள் தலையை தடவிக் கொடுத்தவர்
"நான் இதெல்லாம் தப்புன்னு சொன்னேன்னா, எங்க அப்பாவ உனக்கு பிடிக்காம போயிடுமோன்னு பயந்தாம் , உனக்கும் என்ன புடிக்காம போயிடுச்சுன்னா இந்த உலகத்துல வாழ்றதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும் பாரு என்று உனக்கும் என அவர் சொன்ன அந்த வார்த்தையில்..
ஓ அப்படி என்றால் தன் தாய்க்கு தகப்பனை பிடிக்கவில்லை என்ற வருத்தம் இன்று வரை அவருக்கு மனதில் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டாள்
நேசங்களின் சுவடு எவ்வளவு இன்பத்தை கொடுக்குமோ அதைவிட அதிகம் துன்பத்தைக் கொடுக்கும் என்பதை சில நாட்களாக தான் உணர்கிறாள்.. ஊரை சுற்றி திரிந்த நாட்களில் இதன் அருமை எல்லாம் தெரியவில்லை, சில நாட்கள் தான் என்றாலும் குடும்பத்தின் ஒய்யார கவனிப்பிலிருந்து, கணவன் காதலின் சிலிர்ப்பில் அடங்கியவளுக்கு தகப்பனை அகல விரித்த கண்களோடு இப்போதெல்லாம் பார்க்கிறாள்
காதலித்திருக்கிறார், தன் தாயை உயிருக்கும் மேலாக காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிய அகராதி எல்லாம் தேவையில்லை... தானும் காதலித்தாலே போதுமே!! தாய் வீட்டிற்கு வருகிறார் என்று அறிந்த நேரத்திலிருந்து நல்லபெருமாள் செய்யும் சேட்டைகளை எல்லாம் பார்த்து யாமினிக்கு சிரிப்பு தான் வந்தது..
அவளுக்கு பூஜை அறை வேணும், காலையில் எழும்பின உடனே பூஜை தான் பண்ணுவா , அந்த பூஜை அறையை நல்லா தொடச்சி வைங்க ...கன வருடமாக பூட்டிக் கிடந்த பூஜை அறை திறக்கப்பட்டது...
கிச்சன்ல எல்லாம் வாங்கி வச்சாச்சா, அம்மா வந்தாங்கன்னா அவங்க கைப்படவே தான் சமைச்சு சாப்பிட பாப்பாங்க , எத்தனை வேலை ஆட்கள் இருந்தாலும் அவங்களுக்கு அவங்க கையால சமைச்சா தான் பிடிக்கும்" அப்டேட் மகளுக்கு உடனே வந்தது ..
ஒட்டுமொத்த வீட்டையும் தன் மனைவிக்கு எப்படி பிடிக்குமோ அப்படி பார்த்து பார்த்து தயார் செய்யும் தகப்பன் ஏன் அந்த காதலை ஒதுக்கி வைத்து விட்டார் ஏன் இத்தனை வருடத்தை வீணாக்கி விட்டார் யோசனையாக உட்கார்ந்திருந்தாள்
நெப்போலியனும் வருவான் அவனோடு தீர்க்கப்படாத சண்டைதான், இருந்தாலும் நாளை எப்போது விடியும் என்று அவளும் ஆர்வமாக காத்திருக்கிறாள் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.. தூக்கம் வராது தான் இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்
ரோஜா வனமாக தோட்டம் மாறிவிட்டது,
"அவளுக்கு மூட்டு வலி இருக்கு கண்ணா அதனால மாடி ரூம் எல்லாம் ஏறி போய்க்க மாட்டா,"
"பரவால்ல டேடி, நான் மாடி ரூமுக்கு ஷிஃப்ட் ஆகிக்கிறேன்..
"இல்ல அது உன் பக்கத்துல
"உங்க மருமகனுக்கு ரூம் ரெடி பண்ணி வச்சிருக்கீங்களோ,
" பிறகு வெளியே தங்கிக்கோங்கன்னு அவர மட்டும் சொன்னா நல்லா இருக்காதுல்ல பாப்பா, அதான் என் தகப்பன் தலையை சொரிய
"பரவால்ல உங்க பொண்டாட்டி கூட நீங்க ரொமான்ஸ் பண்றதுக்காகவே அந்த வளர்ந்த ஜந்துவை சமாளிச்சுக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல
அப்படியெல்லாம் இல்லை கண்ணா நம்ம வீட்டுக்கு வராங்க நாம கூப்பிட்டதுனால தான வராங்க சோ என்று அவர் இழுக்க
"உங்கள நம்பிட்டேன்" என தகப்பன் மீசையை பிடித்து இழுத்து விளையாடிவிட்டு..
" நான் என்ன நினைப்பேன், வளர்ந்த பொண்ணு இருக்கே கல்யாணம் முடிஞ்சிடுச்சு அப்படியெல்லாம் யோசிக்காத டேடி... அம்மாவ பத்தி பேசினாலே உன் முகம் அவ்வளவு சந்தோஷமா மாறிடுது விடு என்ன நடந்திருந்தாலும் விட்ரு.. உனக்கு அம்மாவை புடிக்கும்ல தகப்பன் விரைவாக தலையாட்ட..
"பிறகு என்ன ஒழுங்காக என் கூட வாழுடின்னு சொல்லி பாருங்க , ஒத்துக்கலையா துப்பாக்கிய வச்சு மெரட்டியாவது கூட வாழ வச்சிடுங்க... அதுக்கும் ஒத்துக்கலையா கட்டி போட்டு வாழுங்க டேடி, நமக்கு ஒன்னு வேணும்னா அதை எப்படியாவது அடைஞ்சிடனும் எதுக்காக நாம கஷ்டப்படணும் சொல்லுங்க என்ற மகள் தலையை வருடிவிட்ட நல்லபெருமாள்
"காதலிக்க தெரிஞ்ச எனக்கு அதை தக்க வைக்க தெரிலையே கண்ணா , நீயும் அந்த தப்பை பண்ணிடாத...
"டேடி
"நான் அனுபவிச்ச வலி , அவளுக்கு கொடுத்த வலியை நீயும் அவனுக்கு கொடுத்து ,நீயும் வலியை அனுபவிச்சிடாத .நீதான் எனக்கு வேணும்னு வாயை திறந்து சொன்னா அந்த காயம் ஆறும்.. வலி போகும்னா வீம்பை விட்டுட்டு சொல்றது தப்பு இல்லைன்னு நினைக்கிறேன்..உனக்கு சொல்ற அளவு நான் காதலுக்காக எதையும் செஞ்சது இல்ல ஆனா சொல்லணும்னு தோணுச்சு.. என் மக சந்தோசமா இருக்கணும் அவ்வளவு தான் ....
"சந்தோஷமா இருக்கணும்னு உன் மருமகனுக்கு தோணணும் டேடி .. அன்னைக்கு கூட கோவில்லை என்கிட்ட சண்டை போடுறான்... வரட்டும் நான் பேச மாட்டேன் ... என்று முகத்தை திருப்பிய மகள் கண்டு சிரிப்பு தான் வந்தது ...
ஓஓஓ அப்போ காலம் முழுக்க தகப்பன் வீட்டுல தான் இருக்க போறியா
ம்ம் ..
அப்போ உன் புருசன் வேண்டாமா
வேண்டாம் வேண்டாம் ...
அப்போ உன் ரூம்ல அவன் போட்டோவை எதுக்கு போட்டு வச்சிருக்க... அவள் நகத்தை கடிக்க
டேடிபார்ததுட்டேனே "
"என் ரூமுக்குள்ள நீ ஏன் டேடி வந்த ??என்று தகப்பனிடம் சண்டைக்கு போக ...
ஹாஹா நானும் இப்படிதான் ம்மா காதல் மலையளவு இருந்தாலும் உள்ள வச்சிக்கிட்டு மோதிக்கிட்டே சுத்தினேன், என் பொண்ணுல்ல அதுல கூட இருப்பல்ல நேரம் ஆகுது பாரு போய் தூங்கு ...
நீங்க ?
"மர ஊஞ்சல் கொண்டு வர சொன்னேன் அதையும் மாட்டிட்டு தான் தூங்க போகணும் எங்க தூங்க ... எப்போ விடியும்னு இருக்கு கண்ணா
"காதல் ஓவர் ப்ளோ ஆகுது டேடி .
"வயசு கெட்ட காலத்துல இது எல்லாம் தேவையான்னு கேட்டகிறியா
"உனக்கு என்ன டேடி யூ ஆர் ஆல்வேஸ் யேங் ஒன்னுக்கு ரெண்டு கூட கட்டிக்க டேடி
"ஆத்தாடி!!! ஒன்னே போதும் வில்லங்கம் வேண்டாம் வேணும்னா உன் புருசனுக்கு கட்டி வை
"ம்க்கும் , ஒரு பொண்டாட்டியையே ஒழுங்கா வச்சிக்க தெரியல இது ரெண்டு வேற ... என்று எழும்பி போகும் மகளை கண்டு பெருமூச்சு விட்டார்..
தான் செய்த காதல் தவறை அவள் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது ...
இன்றுதான் விடியல் அழகாக இருந்த உணர்வு ..
"டேய் இந்த சேலை நல்லா இருக்கா... காரை விட்டு இறங்கிய ஸ்ரீதேவி தம்பியிடம் கேட்க
"தெரிலையே அக்கா
"இதுவே உன் பொஞ்சாதி கட்டி இருந்தா பார்த்து சொல்லி இருப்ப
"ப்ச் அவதான் சேலையே கட்ட மாட்டாளே....
"ஓஓஓ வருத்தமா வேற இருக்கோ
"பின்ன ஆசை இருக்காதா, சேலை கட்டி பூவெல்லாம் வச்சி பொண்ணா அவளை பார்க்க ஆசைதேன் எங்க எப்பவும் சுடிதார் நைட்டிதான் ....
"எய்யா நெப்போலியா.. கணவன் வீடு நெருங்கும் தம்பி கைது பிடித்து கொண்டாள்..
"அக்கா உனக்கு என்ன தோணுதோ அதை செய் நான் நீ என்ன முடிவு எடுத்தாலும் தலையாட்டுவேன் அத்தான் கூட இங்கேயே இருக்கேன்னாலும் சரிதேன் நீ கண்ணு கலங்காம இருக்கணும் ...
இனியாவது நான் எடுக்கிற முடிவு எல்லாருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கணும்... அத்தான் எதாவது பேசினா
என்னைக்கு அவரை எதிர்த்து பேசி இருக்கேன் பேசிட்டு போறார்.... ஆனா உன் மக வாயை நீட்டினா ஓங்கி அப்பிபுடுவேன் பார்த்துக்க ,அவக்கூட இன்னும் வாய்கால் தகறாறு தான்தேன்...
"இதுதான் வீடுக்கா
" நிறைய ஆட்கள் இருப்பாங்க இல்ல நான் யாருன்னு கேட்டா என்னடா சொல்றது .. எனக்கு சங்கடமா இருக்கு கூப்பிட்டாரு வந்தாச்சு இனி அவர் பாடு, நீ ஏன் கண்டதைப் பத்தி வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க..
கோலாகலமாக கூட்டம் இருக்கும் என்று நினைத்து இரண்டு பேரும் தயங்கி தான் உள்ளே வந்தார்கள்..
அவர்கள் ஊராக இருந்தால் மடக்கி கட்டிய வேட்டியோடு சுத்தி வந்து விடுவான்... இது அவள் வீடு கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்தது ஆனால் உள்ளே ஒரு ஈ காக்கா இல்லை..
வீடு முழுவதும் அலங்காரம் பண்ணப்பட்டிருந்தது ஸ்ரீதேவி உள்ளே நுழைந்ததும் பார்த்தது தோட்டத்தை தான், மஞ்சள் நிற ரோஜாக்கள் கொத்துக்கொத்தாய் மலர்ந்து கிடக்க.. அதன் நடுவே ஊஞ்சல் என்று ஆடிக் கொண்டிருந்தது பார்த்ததுமே தெரிந்தது அது புது ஊஞ்சல் என்று
பாருடா , உன் புருஷனுக்கு காதல் ஊத்து ஊத்துன்னு ஊத்துது.. அவர் பெத்த புள்ள மட்டும் எப்படி இருப்பா?? 50 வயசுல தான் காதலிக்க ஆரம்பிப்பான்னு நினைக்கிறேன் ... என் பாடு ரொம்ப கஷ்டம்தான் போல" என்று அக்காவை கேலி செய்து கொண்டே வீட்டுக்குள் இருவரும் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வந்தனர் ... இருவரும் ஒருவர் மாதிரி ஒருவர் பார்த்துக் கொள்ள...
"அவதான் யாரும் வேண்டாம் அம்மா அப்பா அவர் மட்டும் போதும்னு சொல்லிட்டா" என்று மாடி படியில் இறங்கி ஓட்டமும் நடையுமாக நல்ல பெருமாள் இருவரையும் நோக்கி வந்தார்...
எல்லாவற்றுக்கும் பார்ட்டி கொண்டாடும் ஆள் இப்போதெல்லாம் யாரையும் விரும்புவது இல்லை தனிமை தான் இந்த காதல் தந்த பரிசு.. ஒத்தையாக புருசன் நியாயங்களை சேகரித்து வைத்து கொண்டே அதையே அசைபோடும் காதல் தரும் சுகத்தை வேறு யார் தர இயலும் ...
நெப்போலியன் ஆர்வமாக தலையை தூக்கி மனைவியை தேட தங்க கொலுசு ஒன்று தெரிந்தது ..
சல் சல் என்ற சத்தம் தாறுமாறாக இதயத்தை அடிக்க செய்ய அவன் இன்னும் கண்களை அகல விரித்து படியில் இறங்கி வந்த மனைவியை கண்டு சொக்கி போனான்
பச்சை பட்டு உடுத்தி மல்லிகை மலர் சூடி அவன் கட்டிய தாலி மட்டும் நெஞ்சில் ஊஞ்சல் ஆட மங்களகரமான அவன் ஆசைப்பட்ட கோலத்தில் அவன் மனைவி யாமனி இறங்கி வந்தாள்... அவள் பார்வையும் அவனைத்தான் மொய்த்தது
கட்டம் போட்ட கருப்பு சட்டை காட்டன் பேண்ட் அணிந்து வந்து நின்றான்.. வேட்டி தாண்டி எதையும் கட்டாதவன் புதிதாக மாறி வந்து நின்றான்...
நம் இஷ்டத்துக்கு வளைப்பது காதல் இல்லை.. அவர்கள் இஷ்டத்துக்கு கொஞ்சம் வளைந்து போவதும் காதல் என்று அறிந்து கொண்டார்கள் போல