அலெக்சாண்டர் 2

Alex2

அலெக்சாண்டர்  2

2 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!

கார்க் கீயை இங்க தான வச்சேன், எங்க போச்சு என்று வெளியே வந்து நின்ற யாமினி தன் கார் சாவியை தேட ... கார் சாவி சத்தம் பின்னே கேட்டு திரும்பிப் பார்க்க .... வேட்டியை கட்டிக் கொண்டே சாவியை ஆட்டிக் கொண்டு நின்றான் அவள் கணவன் நெப்போலியன்... 

ப்ச் கொடு என்று கையை நீட்ட 

 "பரவாயில்லையே பொஞ்சாதி, புருஷன் ஒரு வார்த்தை சொன்னதும் அப்படியே கேட்டுகிட்ட எழும்பி வெளியே போன்னு சொன்னதும் அடுத்த வார்த்தை பேசாம வெளியே வந்துட்ட பாத்தியா உனக்கு சிலையே வைக்கலாம்.. ஆனா, உன் புருஷன் கிட்ட அவ்வளவு பணம் இல்லாத காரணத்தினால், வேணும்னா ஒரு குச்சி மிட்டாய் வாங்கி தரவா?"என்று நக்கலாக சிரித்தான் ... 

ப்ச் கார் சாவியை கொடு ...கையை நீட்டினாள்

"கொடுத்திடலாம் , ஆனா அதுக்கு முன்னாடி கொடுக்க வேண்டியதையும் கொடுத்துடுறேன் பொஞ்சாதி...  

வாட் 

"பளீர் என்று சத்தம் அனலை கிளப்ப அவள் பஞ்சு கன்னம் நெப்போலியன் கை வண்ணத்தில் சிவந்து போனது ... 

"வாட் த __க் ஆன் யூ" என்று யாமினி அவனை அடிக்க பாய அவள கையை அழுத்தி பிடித்த நெப்போலியன் 

"நல்லபெருமாள் மக எப்படியும் கூத்தடி, ஆனா என் பொஞ்சாதி என் தாலிக்கு சொந்தக்காரி இன்னொரு வரட்டி குடிச்சுட்டு கும்மாளம் போட்ட வக்காளி கீறி உப்பு மிளகாய் போட்டு புடுவேன் ஜாக்கிரதை "

"யூ என்ன அடிக்கிறியா , உன் பாடி கூட ஊர் போய சேராது 

"அதான் நான் பாடியே போடுறது இல்லை வேணும்னா உனக்கு வாங்கி தர்றேன் பொஞ்சாதி அச்சோ நீ அது கூட போட மாட்ட போயிருக்கே; என்றவனை எரிச்சலாக பார்த்தவள்...

"உன்ன கொல்லாம விட மாட்டேன்டா 

"அந்த விளையாட்டை அப்பறம் வச்சிக்கலாம் இப்ப என்ன பண்ற வீட்டுக்கு போய் துணி மணியை எடுத்துகிட்டு என் கூட கிளம்பு 

"வாட் எங்க எதுக்கு ..

"நீ எம்புட்டு கிளாஸ் படிச்சிருக்க .. போட்டிருக்க உடுப்பை பார்த்தா நீ நிறையதேன் படிச்சிருப்ப, இந்தா நீதிபதி எழுதி தந்ததை படி .... என்று நெப்போலியன் அவள கையை இழுத்து நீதிமன்ற தீர்ப்பை வைத்தான் ... காலை நீதிமன்றத்தில் நெப்போலியன் போட்ட வழக்கு நடந்தது அதற்கு கூட அம்மையார் வரவில்லை நல்லபெருமாள் தான் வந்து நின்றார் 

அய்யா என் மனைவியை என்னோட வாழ விடாம இழுத்துட்டு வந்துட்டார் நல்லபெருமாள், அதோட எனக்கு கொலை மிரட்டல் வேற பண்றாங்க... நாங்க அன்றாட காட்சி, பயமா இருக்கு வாழ விட சொல்லுங்க அய்யா , என் பொஞ்சாதியும் அவுக அப்பா சொல்றதை கேட்டு அம்போன்னு விட்டிருச்சு ... என் கூட வாழ்ந்து பார்த்தா தானய்யா நான் எப்படின்னு தெரியும்... ஆறு மாசமாவது என் கூட இருக்க சொல்லுங்க அய்யா அப்பவும் பிடிக்கலைன்னா தாராளமா விவாகரத்து கொடுக்கிறேன் அய்யா என்று நெப்போலியன் கூற 

"இல்ல அய்யா, என் பொண்ணுக்கு இவன் கட்டாய தாலி கட்டி இருக்கான் என்று நல்லபெருமாள் கூற 

"அய்யோ அய்யோ ரெண்டு பேரும் காதலிச்சு முறைப்படி தான்யா கல்யாணம் பண்ணினோம், என்று அவளோடு திருமண அலங்காரத்தில் தாலி கட்டியது போல புகைப்படம் திருமண சான்றிதழ் அனைத்தையும் வைக்க நல்லபெருமாள் கண்ணை விரித்தார் ..

"என்ன மாமோய் ,இத்தனை வருசம் கழிச்சு சந்திக்கிறோம் .. பழைய நெப்போலியனா வந்தா நீ என்ன கொன்னுபுட மாட்ட, உன் கோட்டை உள்ளேயே வந்து உன் மக போதையில கிடக்கும் போது நானே கைபட சேலை கட்டி , இந்த போட்டோ அம்புட்டையும் கிளுக்கி புட்டேன், என்ன புள்ளை வளர்த்து வச்சிருக்க ஒரு மண்ணு சூதானம் இல்லை... இதுல கையெழுத்து போடுடின்னு நீட்டின இடத்துல எல்லாம் கையெழுத்தை போடுறா குடிகாரி என்று குனிந்து சிரித்த படி மீசையை திருகி கொண்டவன்...

"என்ன பண்ணினாலும் சும்மா இருப்பான்னு நினைச்சியா புலி பதுங்கினது பாய மாமோய்" 

"டேய் என்று நல்லபெருமாள் தன் துப்பாக்கி எடுத்து அவன் நெற்றிப் பொட்டில் வைக்க 

"மிஸ்டர் நல்ல பெருமாள் வாட் இஸ் திஸ்?? 

"அய்யோ அய்யோ பார்த்தீங்களா சாமி; இத்தனை பேர் முன்னாடியே என்ன கொல்ல பார்க்கிறார்... எனக்கு ஒன்னும் வேண்டாம் சாமி, என் பொஞ்சாதியை என் கூட வாழ அனுப்பி வைங்க அது போதும் என்று நெப்போலியன் கேலியாக நல்லபெருமாளை பார்த்து கொண்டே பயந்தவன் போல நடிக்க 

"சார் இது எல்லாம் இவன் நாடகம் நம்பாதீங்க 

"மிஸ்டர் பதவியை வச்சி பயம் காட்டுறீங்களா 

"சார் 

"இவ்வளவு நடக்குது உங்க மக எங்க??

அது வந்து 

"அவ எப்படி வருவா சாமி, பாருங்க குடிக்க அனுப்பி விட்டிருக்கார் என்று அதற்கும் நெப்போலியன் ஆதாரம் கொடுக்க ..

"இல்லை என் மக .. 

"ஷட் அப் , அவர் மனைவி அவர்கூட ஆறு மாதம் வாழ்ந்து தான் ஆகணும் அதுக்கு பிறகும் ரெண்டு பேருக்கும் ஒத்து வரலைன்னா டைவர்ஸ் அப்ளை பண்ணட்டும்... இவங்களுக்கு இடையில நீங்க போனாளோ இல்லை இவருக்கு கொலை மிரட்டல் விட்டாளே உங்க வேலைக்கே உலை வைக்க வேண்டி இருக்கும் நல்லபெருமாள் ... நல்லபெருமாள் பல்லை கடித்து காலை தரையில மிதிக்க 

"அய்யா இந்த ஊர்ல இருக்கவே எனக்கு பயமா இருக்கு ..என் பொஞ்சாதியை என்ற ஊருக்கு கூட்டிட்டு போக அனுமதி தந்தா...என்று இழுக்க 

"கூட்டிட்டு போறது பிரச்சனை இல்லை அவங்க பாதுகாப்பு உங்க கையில மிஸ்டர் 

"அய்யா தன்னை நம்பி வந்த பொஞ்சாதியை உதைச்சு காய படுத்திற ஆம்பள நாய் நானில்லைய்யா "என்று நல்ல பெருமாளை முறைத்து கொண்டே கூறினான் ... 

யாமினி அல்லிக்கொடி ஆறு மாதம் தன் கணவன் கட்டுபாட்டில் தான் இருக்க வேண்டும், அதற்கு பிறகு மனக்கசப்பு உண்டு என்றால் விவாகரத்து வழக்கு போட்டு கொள்ளட்டும்.. இந்த காலங்களில் நல்லபெருமாள் மகள் அவர்கள் இடையில் போவது , அவர் மகள் இங்கே வருவதோ கூடாது , அவர்கள் தனிபட்ட வாழ்க்கையை வாழ கோர்ட் உத்தரவு இடுகிறது என்று கூறி முடிக்க.... 

யாமினி கையில் இருந்த கோர்ட் ஆர்டரை யோசனையாக பார்த்து கொண்டு நின்றாள் ..

என்ன பொஞ்சாதி அதிர்ச்சி ஆகிட்டியா? என்ன பேச்சு வரல 

ஹாஹா என்று சிரித்தவள் 

பாவம் உன் கெட்ட நேரம் என்கிட்ட மாட்டணும்னு இருந்திருக்கு , ஒன்னுமே செய்யாதவனையே விட்டு வைக்கல.. நீ என்ன அடிச்சு, தாலி வேற கட்டி வச்சிருக்க உன் நிலைமையை நினைச்சா தான் பாவமா இருக்கு நெப்ஸ் என்று கையில் இருந்த பேப்பரை நெப்போலியன் முகத்தில் வீசிய யாமினி 

ஆறு மாசம் என்ன , ஆறு நாள்ல நீயே கொண்டு வந்து இஙக என்ன விடுவ , ம்ஹூம் விட வைப்பேன் என்றவள் போனை எடுத்து தகப்பனிடம் பேச ...

"நோ டேடி ஐயம் ஆல்ரைட், இந்த வில்லேஜ் பெல்லோஸ் எல்லாம் நம்மள என்ன செய்ய முடியும் பார்த்துக்கலாம் டேட் ,உங்க மகளை பத்தி உங்களுக்கு தெரியாதா ... 

கண்ணா அப்பாவால இப்ப எதுவும் பண்ண முடியாம லாக் ஆகி இருக்கேன் .. அவனை கொலை பண்ண ஆள் அனுப்பினேன் , அப்ரூவர் ஆகிட்டானுக ஆதாரம் ஆள் எல்லாம் அவன்கிட்ட இருக்கு அதே வெளியே விட்டான் என் வேலை போச்சு.. இத்தனை நாள் செஞ்ச அத்தனையும் வெளிய வந்திடும் ..கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்க நான் எப்படியாவது எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்?.

"இட்ஸ் ஓகே டேட் .... அவனுக்கு என் கையால தான் சாவுன்னா என்ன செய்ய முடியும் ?

"அவளை மட்டும் நம்பாத கண்ணா ..

"பெத்தது வேணும்னா அவங்களா இருக்கலாம் டேட் எனக்கு எல்லாம் நீங்க தான் , தம்பிக்காக சொந்த புருஷனை , பெத்த புள்ளைய வேண்டான்னு விட்டுட்டு போன அவங்கள விட... பெத்த பிள்ளைக்காக எல்லாத்தையும் இழந்துட்டு என் மக மட்டும் போதும் அவ சந்தோஷம் மட்டும் போதும்னு எனக்காக எல்லாத்தையும் செய்ற என் டேட் தான் எனக்கு எல்லாம் என்றதும் நல்லபெருமாள் முகத்தில் கர்வச்சிரிப்பு ..

"ஆனா அவ இதையெல்லாம் மாத்தி சொல்லுவா கண்ணா ,,நான் தான் தப்பு செஞ்சவன் மாதிரி உன்கிட்ட தப்பா சொல்லிக் கொடுப்பா 

"யார் என்ன சொன்னாலும் என் காதுல விழாதுப்பா என் அப்பா தப்பாவே இருந்தாலும், எனக்காக என் கூடவே இருந்த நீங்கதான் எனக்கு வேணும்.. அவங்க ரைட்டாவே இருந்தாலும், என் கூட இல்லாத அம்மா எனக்கு எப்பவும் தேவையில்லை.. அவங்களுக்கு எப்பவும் அவங்க தம்பி தான் முக்கியம் .. சோ எனக்கும் அவங்க எப்பவும் முக்கியம் இல்ல , நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்கப்பா என்னை யாரும் என்ன சொல்லியும் ஏமாத்த முடியாது நான் உங்க பொண்ணு பா என்ற மகளை வளர்த்த விதத்தில் பெருமை கொண்டார் அவருக்கும் இதுதானே வேண்டும்... 

"தட்ஸ் மை கேர்ள்... அங்க என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்லிட்டே இரு 

"ஓகே டேட் 

"யாருக்கும் அடி பணிஞ்சு போகாத 

"உங்களுக்கு யாமினி பத்தி தெரியாதா டேட் 

"தெரியும் கண்ணா , உன் நிம்மதியை கெடுக்க நினைக்கிற அவங்க 

"நிம்மதியாகவே இருக்க விட மாட்டேன்ப்பா , என் பாட்டுக்கு என் வழியே போனேன் குறுக்க வந்து விழுந்தது அவங்க, இனி நான் யார்னு அவங்க பார்ப்பாங்க உங்க வளர்ப்பு என்னன்னு அவங்க பார்க்க வேண்டாம் 

"அழுது ஒப்பாரி வச்சு மயக்குவாடா 

"ஹாஹா அதெல்லாம் என்கிட்ட செல்லாது டேட் , உங்க பொண்டாட்டிக்கு நீங்க கூட மயங்கலாம் பட் நான் நோ வே... பெத்தா மட்டும் தாய் இல்லை எனக்கு எல்லாமும் நீங்க தான் என்று மகள் பேச புல்லரித்துப் போனது ...

"உன் இஷ்டம் போல இருடா கண்ணா யாருக்காகவும் உன் திமிரை விட்டு கொடுத்துடாத நீ தோத்தா அப்பா நானும் தோத்து போவேன் 

என் உயிர் போனாலும் போகுமே தவிர, அவங்க முன்னால என் ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது டேட் 

என் பொண்ணு வாழணும், அவ இஷ்டம் போல வாழணும் அதுக்கு தான் நான் உசரை பிடிச்சு கையில வச்சிருக்கேன் 

"வாழ்வேன் டேட் யூ டோன்ட் வொர்ரி.. ஓகே டேட் இப்ப காரை எடுத்தா தான் காலையில அங்க எண்ட்ரி கொடுக்க முடியும் பாய்" என்று போனை வைத்தவள் கார் மதுரை சொக்கன்பட்டி கிராமத்தை நோக்கி புழுதி பறக்க பறந்தது .. 

சொக்கன்பட்டியை அலற விட அவள் ஹீல்ஸ் மாட்டிய கால்கள் அந்த புழுதி காட்டில் தடம் பதித்தது...

பெண்ணுக்கு அழகு வெட்கமும் நாணமும் 

இவளுக்கு மட்டும் அழகு கர்வமும் செருக்கும் என்று பிரம்மன் எழுதி வைத்தானோ??