அலெக்ஸ் அல்லி8
Alex8

8 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி !!!
நெப்போலியன் மனதில் இப்படி ஒரு கோணம் இருக்கும் என்று ஸ்ரீதேவியே அறியவில்லை...
" நீ அவளை முறைச்சு முறைச்சு பார்த்த உடனே உனக்கு என் மகளை பிடிக்கல போலன்னு நினைச்சேன்... ஆனா நீ அவளை ஒருநாளும் ரசிச்சு பார்த்ததே இல்லையேடா"
"ம்க்கும், உன் பொண்ண ரசிச்சு பார்க்கிற மாதிரியா வேலையெல்லாம் பண்றா... அப்படியே ரசிச்சு பார்த்தாலும் உன் முன்னாடியா பாப்பாங்க அதெல்லாம் வேற மாதிரி பார்த்துப்பேன் எ ன்று தலையை குனிந்து கொண்டு சொன்ன நெப்போலியன் வெட்கம் கூட அழகோ அழகுதான்!!
கண்ணை மூடி கிடந்த அவளுக்கு திபுதிபுவென வந்தது.. நேற்று நாய்க்குட்டியை குனிந்து தடவி விட்டபடி நின்ற அவளை நெப்போலியன் ஒரு தினுசாக பார்த்தபடி
"என்ன ரோமியோ குட்டி போடாமலே கொழுத்து கிடக்குது; குட்டி போட்டா லோட் தாங்காது போலவே .. எப்போ குட்டி போடுற ஐடியாவுல இருக்க?? என்று அவளை கடந்து தன் நாயை கிண்டல் பண்ணி கொண்டு போக
பட்டிக்காட்டான், ஆம்பள நாய் எப்படி குட்டி போடும் .... என்று குனிந்து கிடந்தவளுக்கு ஏதோ தோன்றி தன் ஆடையை பார்க்க.. முன் பக்கம் விட்டு கொழுத்த கறி எட்டி பார்த்து கொண்டிருந்தது
ஒருவேளை இதை பார்த்துட்டு சொல்றானோ என்று யோசித்தவளுக்கு வேறு எதோ வேலை வந்துவிட போனை எடுத்து கொண்டு உள்ளே போய் விட்டாள்.
டவுட்டே இல்ல அப்போ என்னத்தான் இந்த இடியட் பார்த்து இருக்கான் .... என்று அவள் கோவம் வேறு திசை போனது... ஒருநாள் பின்னிருந்து இடித்து விட்டு போனான்
வாசல்ல நான் இருக்கேன் கண்ணு தெரில
"வாசல்ல நான் வந்துட்டு இருக்கேன் உனக்கு கண்ணு தெரில ,தள்ளி நின்னு இருக்கணும் , இப்படி வேலைக்கு போறவன் வழியை மறிச்சு நின்னா இடிக்கத்தான் செய்வேன்டி என்று லந்து பண்ணியது எல்லாம் காதல் சேட்டையா??
அவனுக்கு வேணும்னா நான் வாழணுமா நோ வே வாழ்க்கை நான் என் இஷ்டப்படி அமைச்சிக்கிறதா தான் இருக்கணும் அரக்கி பேய் மனம் காதலுக்கு தடா போட்டது ...
"அட உண்மையாவா நெப்போலியா ? என் கண்ணுக்கு மறைச்சு உன் பொண்டாட்டிய அப்ப நீ சைட் அடிச்சி இருக்க"
"அதெல்லாம் நிறைய அடிச்சிருக்கேன் அரைகுறையா அலையும் போது கூட உன் மகளை பார்க்க ஆசை வராது ...ஆனா, எப்பவாவது சுடிதார்ல வெளியே வருவா பாரு, அப்பா கொள்ள அழகா இருப்பா.. அதுவும் அந்த விரிச்சு போட்ட முடிக்கும் அவ சிவப்பு நிற உதட்டுக்கும் அப்படி ஒரு அழகு
"இவ்வளவு ரசிச்சு பார்த்து இருக்கியா?
"ம்ம் , இன்னும் ரசிச்சு பார்த்தது ஏராளம் அக்காக்காரி கிட்ட இவ்வளவுதான் சொல்ல முடியும்... அவ முழிச்சதும் எனக்கு போன் போட்டு சொல்லு, நான் வயக்காடு வரைக்கும் போயிட்டு வரேன் "என்றவன் படுக்கையில் படுத்து கிடந்த அவள் நெற்றியை மெல்ல தடவி கொடுத்து
"நீ லட்சத்துல ஒருத்திடி , தறிகெட்டு அலைஞ்சாலும் உன் அனுமதி இல்லாம ஒருத்தரும் உன்ன தொடவோ பார்க்கவோ கூட விட்டிருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் ... உன்ன பத்தி எனக்கு தெரியும் ஆனா என்ன பத்தி புரிஞ்சுக்க முயற்சி செய்டி, இந்த உலகத்துல நாம ரெண்டு பேரும் சேர்ந்து எப்படியாவது வாழ்ந்து காட்டிருவோம்...ஆனா பிரிய மட்டும் நெனைக்காத கொன்னே போட்டிருவேன் என்றவன் விரல் அவளை முடியை ஒதுக்கி போட்டது
கண்ணை மூடி கிடந்த அவள் உடல் கட்டையாக விரைத்து போய் கிடந்தது ... மேல் மூச்சு கீழ் மூச்சு மட்டும் தாறுமாறாக அடித்தது....
நெப்போலியன் தன் மனதில் கிடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு போய்விட்டான் ஆனால் அதை மனதில் வாங்கிய இவளுக்கோ எதுவும் பிடிக்கவில்லை ..
"இவனுக்கு பிடிச்சா இவனுக்கு வேணும்னா நான் இவன் கூட வாழனுமா மாட்டேன்" என்று இருதய கதவை இன்னும் இரண்டு கதவு போட்டு அடைத்தாளே தவிர அதை அவனுக்காக திறக்க மனமில்லை ..
"ஒருத்தர் வேணுமா நான்தான்,முடிவு பண்ணுவேன் வேண்டாமா அதையும் நான்தான் முடிவு பண்ணுவேன் என் வாழ்க்கையில முடிவு எடுக்க இவுங்க ரெண்டு பேரும் யாரு?? நோ இவங்கள ஜெயிக்க விட மாட்டேன் என் கூட வாழ்ந்திடலாம்னு கனவு காண்றியா விட்டாதான வாழ்வ? அரக்கி போல பல்லை நரநரக்க கிடந்தாள்..
ஆனால் தன்னை பற்றி புட்டு புட்டு ஆராய்ச்சி செய்து விட்டான் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது ... தன்னைப் பற்றி தகப்பன் கூட அறியாத சிலவும் நெப்போலியன் நாடி பிடித்துவிட்டான்.. இவன் சற்று ஆபத்தானவன் என்பதை புரிந்து கொண்டாள்.. இன்னும் தன்னை சுற்றி வேலி போட்டுக் கொண்டு அடைத்து கொள்வாளே தவிர அவர்களுக்கு அன்பை கொடுக்க வாய்ப்பே கொடுக்கக் கூடாது என்று நினைத்தாள்...
மகள் கண்ணை திறக்க ஸ்ரீதேவி காத்திருக்க ..கண்ணை திறந்த யாமினி எதிரே அழுகையை துடைத்து கொண்டிருந்த தாயை ஒரு நிமிடம் வெறித்து பார்த்தாள்.. அவர் கைகள் யாமனி வயிற்றில் இருக்க , தன் மீதிருந்த ஸ்ரீதேவி கையை வெடுக்கென்று தள்ளி விட்டாள்
பாப்பா .. இப்ப எப்படி இருக்க?
ப்ச் ஏன் சாகாம இருக்கேன்னு கேட்கிறியா மம்மி "
"என்னடி நீ எது பேசினாலும் வலிக்க பேசுற ..
"பின்ன நான் இப்படி எல்லாம் கஷ்ட படணும்னு தானே நீயும் , அந்த வளர்ந்த ஓட்டகமும் என்ன தூக்கிட்டு வந்து இந்த பொட்டல் காட்டுல போட்டு இருக்கீங்க பாம்பாவது தானா கடிச்சுச்சா, இல்லை இந்த சீன் போட பாம்பை விட்டு கடிக்க விட்டீங்களா .. அதையும் செய்ற ஆளுக தான நீங்க .... "
"யாமிஇஇஇஇஇ
"கத்தாதீங்க ஐ நோ உங்க ரெண்டு பேர் பத்தியும் தெரியும் டிராமா விதவிதமாக போடுவாங்க நம்பாதன்னு டேடி சொல்லி தான் அனுப்பினார் பட் இவ்வளவு நல்லா ட்ராமா போடுவீங்கன்னு தெரியாம போச்சே .... "
"சரிடி நான் நடிக்கிறதாவே இருக்கட்டும் மூணு நாள் நீ ஓய்வு எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க
"யாரோ சொன்னா நான் கேட்கணுமா" என்று எழும்ப போன யாமினி தலை கிறுகிறுக்க படுக்கை மீதே உட்கார
"சொன்னேல்ல மூணு நாள் மட்டும் ஓய்வு எடு அம்மா உன்ன பார்த்துக்கிறேன்
"என்ன யாரும் பார்க்க வேண்டிய தேவை இல்லை.. இத்தனை நாளா பார்த்துக்க தெரிஞ்ச எனக்கு இப்பவும் என்ன பார்த்துக்க தெரியும்.. லீவ் மீ கெட் அவுட் "என்று கத்தும் மகள் அருகேயே போக ஸ்ரீதேவிக்கு பதறியது ... இயற்கை உபாதைக்கு யாமினி எழும்ப பார்க்க முடியவில்லை அவள் ஒரு பக்கம் இழுத்தால், உடல் ஒரு பக்கம் தள்ளாட மகள் படும் பாடு தாய்க்கு மரண அவஸ்தை கொடுத்தது...
"பாப்பா உன் வீட்டுல எத்தனை வேலைக்காரங்க உனக்கு வேலை சொய்றாங்க ... அதுல ஒருத்தியா என்ன இந்த மூணு நாளும் நினைக்க கூடாதா...கெஞ்சும் தாயை மேலும் கீழும் பார்த்தவள்
ஓஹோ என் சர்வெண்ட்டை நான் அடிப்பேனே பரவாயில்லையா மெலிதாக சிரித்த ஸ்ரீதேவி
"மூணு வயசுல நீ என்ன அடிச்சிட்டு சிரிப்ப அப்போ அதை ரசிச்சேன்... இப்பவும் அதை ரசிப்பேன் உனக்கு அதுல சந்தோசம்னா சரிடா...
ப்ச் என் சர்வண்டை நான் திட்டுவேன்
உன் மழலை பேச்சை அன்னைக்கு கேட்க ஆசைப்பட்டேன் .. இன்னைக்கும் நீ எனக்கு மழலை தான் திட்டிக்க..
"மூணு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வேணும் செக்கா காசா??? என்ற மகளை உணர்வு இல்லாது ஸ்ரீதேவி பார்த்தார்...
"எனக்கு யாரும் ஓசியா செய்ய வேண்டாம் செய்ற வேலைக்கு காசை போடுறேன் எடுத்துக்கோங்க எவ்வளவு வேணும் ???
"தாய்பாசத்துக்கு உனக்கு என்ன விலை கொடுக்க தோணுதோ அதை கொடு...
"டெய்லி பத்தாயிரம் வச்சி வாங்கிக்கோ.... இப்ப பார்த்ரூம் கூட்டிட்டு போங்க
வா அம்மா தோளை பிடி கொண்டு போய் பார்த்ரூம்ல விடுறேன்
"இரு இரு வேலைக்காரி மட்டும் தான் நீங்க பின்ன ஏன் அம்மா இடையில வருது ஹான்...
"தப்பு தான் மன்னிச்சிடு
"ம்ம் மேடம் சொல்லுங்க.. குச்சி எடுத்து பாடம் எடுக்கும் ஐந்து வயது குழந்தை போலத்தான் தன் மகள் தெரிந்தாள்...
"ம்ம் சரி மேடம் வாங்க ..என்று ரெண்டு கையை விரித்து மகளை தூக்கி தன் தோள் வளைவில் அவளை அணைத்து பிடித்து பார்த்ரூம் கொண்டு விட்டு அழைத்து வந்து படுக்கையில் உட்கார வைக்க ....
இரு முகம் சோர்வா கிடக்கு எதாவது சாப்பிட எடுத்துட்டு வர்றேன்
ஐ நீட் பீட்ஸா...
ஹான் அப்படின்னா ?
அவ எதையாவது கேட்பா ஏரோப்ளைன்ல தான் கொண்டு வந்து வீட்டு கூரையில இறக்கணும் என்று அறைக்குள் நுழைந்தான் நெப்போலியன்...
"ப்ச் உடனே யாமனி முகத்தை திருப்பி கொள்ள
"உன் மக எப்போ முழிச்சா ???
"இப்ப தான்டா .. அதான் சாப்பிட எதாவது வேணுமான்னு கேட்டேன் ஏதோ விளங்காத ஒரு பேர் சொல்லி கேட்கிறா அதுக்கு எங்கன போக?
"இந்தா இதுல கறி இருக்கு தோசை போட்டு கறியை வச்சி கொடு தின்பா திங்கலைன்னா பிடிச்சு வச்சி வாய் உள்ள குத்த நான் வர்றேன் .... தடபுடலாக ஸ்ரீதேவி மகளுக்கு உணவை சமைத்தாள் யாமினி விவரம் தெரிந்த பிறகு இன்றுதான் தாய் கையில் சாப்பிட போகிறாள்...
"என்னக்கா நோவ பேசி புட்டாளா
"விடுறா அப்படியாவது என்ன பக்கதுல சேர்த்தாளே ...
"எவ்வளவு சம்பளம் தர்றாளாம்
"நிதமும் பத்தாயிரம்...
"ம்ம் நல்ல வேலை தான் எனக்கும் எதாவது கிடைக்குமா கேளு என்ற தம்பி கன்னத்தில் ஸ்ரீதேவி இடித்து கலகலவென சிரிக்க.. நகத்தை கடித்து கொண்டே அவர்கள் சிரிப்பை வயிறு எரிந்து போய் பார்த்து கொண்டிருந்தாள் யாமினி
நமக்கு கிடைக்காத ஒன்று பிறர்க்கு கிடைக்கும் போது தோன்றுமே வலி அதுதான் அவளை ஆட்டி படைக்கும் சைத்தான் ...
அது நல்லா இல்லை இது நல்லா இல்ல என்று குறை சொல்லி சொல்லி ஒரு தோசையை தின்றாள் ... இரவு தனியா படுக்காத பாப்பா நான் வந்து படுத்துக்கிறேன்"
"என் பெட்டுல யாருக்கும் இடம் இல்லை
"கீழே படுத்துக்கிறேன்
"உன் இஷ்டம் என்று தோளை உலுக்கினாள்
"யக்கா நீ படு ...
"இல்லடா ராவு தூங்க வைக்க வேண்டாம்னு வைத்தியர் சொன்னார்
"ப்ச் நீ மாத்திரை போடுவல்ல தூங்காம கண் முழிக்காத போ படு நான் பார்த்துக்கிறேன் கைலியை முடிச்சு போட்டு கொண்டு யாமினி அறைக்குள் பாயோடு நெப்போலியன் வந்தான் ..படுக்கையில் யாமினி நாவல் புக்கை புரட்டி கொண்டிருந்தாள் .... அருகே கிறக்கத்தில் ஜூலியட் கிடந்தது .. அதன் பார்வையோ இன்று முழுவதும் மாஞ்சு மாஞ்சு அதை பார்த்து கொண்ட ரோமி மீது ... அதுவும் அறை வாசலில் தலை வைத்து படுத்து கிடந்து அதை தான் பார்த்து கொண்டிருந்தது..
சொடுக்கு சத்தம் கேட்டு அக்காவும் தம்பியும் ஒரே நேரத்தில் யாமினிவை திரும்பிப் பார்க்க..
புத்தகத்தை வாசித்துக் கொண்டே இருந்தவள் சொடுக்கு போட்டு அவர்களை தன் பக்கத்தில் வர சொல்ல நெப்போலியன் பல்லை கடிக்க...
ஸ்ரீதேவி என்ன மேடம் ஏதாவது வேணுமா என்று கேட்க
"உங்களை தான் வேலைக்கு வச்சிருக்கேன் , இந்த ஆள் எதுக்கு உள்ள வர்றார் ...
"இல்ல ராத்திரி
"ராத்திரி ஷிப்ட் பகல் ஷிப்ட் எல்லாம் பார்க்க வேண்டாம் மூணு நாளைக்கு உங்களுக்கு தான் சம்பளம் கொடுத்து இருக்கேன் ...
"சம்பளத்தில பாதி பாதி எடுத்துக்குறோம்னு சொல்லுக்கா... காலையில அவங்க பார்ப்பாங்க ராத்திரி நான் தான் பார்ப்பேன், அப்படி பார்க்க கூடாதுன்னா நீயே ஒத்தையா எழும்பி பாத்ரூமுக்கு போடி , முடியாது இல்ல பொத்திகிட்டு படு நல்லா சொடுக்கு போட்டு கூப்பிடுவா உடம்பு முடியாம கிடைக்குற ஏன்னு பாக்குறேன் இல்ல சொடுக்கு போட்ட கை இருக்காது..
மானே தேனேன்னா இவள் கேட்க மாட்டாள் ஆடை தொடை தெரிய போடாதே என்றால் அதை தாண்டி போடுவேன் என்பாள்
இவனோ பச்சையாக அவளுக்கு தெரிந்தே பார்வையில் அவளை தின்ன ஆரம்பித்து இருக்க இவள் கைகள் தானாக நைட்டி தேடி அதை உடுத்தி கொண்டது ...
அந்த பயம் இருக்கட்டும் தொடைக்கு உடுப்பு போடு கறியை கடிச்சு இழுத்திடுறேன் என்று ரோமியிடம் கூறுவது போல காலை இவளுக்கு சாடை வர...
இத்தனை நாள் ஆண்களை கடக்கும் போது உண்டாகாத சங்கோஜம் அவன் மீசை திருகி கொண்டே முலாம்பழம் பார்க்கும் போதும் தொடை பார்க்கும் போது வர ஆடையை அங்கம் மறைக்க போட ஆரம்பித்து விட்டாள்...அத்தோடு டபுள் மீனிங் பேச்சும் அக்கா இல்லாத நேரம் அதிகம் வந்தது...
ஆடு போல மேய போலையே அப்பதான் ஆட்டம் குறையும்
இப்ப யாரை சொன்னீங்க ?
உன்கிட்ட மனுசன் பேசுவானா, நான் ரோமிக்கிட்ட பேசினேன் என்று சொல்லி சொல்லி மனைவியை பச்சையாக வர்ணித்து விட்டு போனான் .. வரம்பு மீறும் அவன் செயலில் முகம் சிவக்க நிற்பாள்..
யக்கா அவதான் பேசுறான்னா, நீயும் மேடம்ங்கிற
சும்மா இருடா "
"என் வாயையே அடை ..போ போய் தூங்கு
"நான் இங்கேயே பாயை விரிச்சு படுத்திக்கிறேன்டா
"என்னவோ செய் ஆனா தூங்கு நான் உன் மொவளை பார்த்துக்கிறேன்
"ம்ம் என்று ஸ்ரீதேவி ஒரு பக்கம் பாயை விரித்து படுக்க சட்டையை கழட்டி போட்டு விட்டு நெப்போலியன் ஒருபக்கம் பாயை விரிக்க போக கரெண்ட் கோவிந்தா
"ஹலோ மீண்டும் சொடுக்கு சத்தம்
"இவள , என்னடி ?
"வந்து காத்து வீசு ஃபேன் இல்லாம என்னால இருக்க முடியாது ...
"நான் வீசறேன் நீ படுய்யா
"யக்கா ஆஆஆஆஆ
"படுத்துட்டேன்யா என்று ஸ்ரீதேவி படுத்து கொள்ள விசிறியை எடுத்து கொண்டு அவள் அருகே வந்து நெப்போலியன் அமர போக
"வேலைக்காரன் சரிக்கு சமமாக உட்கார கூடாதுன்னு இவ்வளவு வளர்ந்து இருக்கியே உனக்கு தெரியாதா....
"சரிதான் தெரியாம போச்சே எசமானி
"ம்ம் நின்னே வீசு என்று கட்டிலில் விளிம்பில் யாமனி சாய்ந்து அமர அவன் காற்றை வீச யாமினி கண் சிறுது நேரத்தில் சொக்க
ப்ச் ஒரு கிள்ளு வைத்தான் அவ்வளவு தான் பஜாரி சண்டைக்கு பாய்ந்து விட்டாள்... அவள் கண் அயரும் போதெல்லாம் தலையில் தட்டுவது எதாவது இம்சை செய்ய இவள் தூக்கம் போய் அவனோட சண்டை போட ... சிறுது நேரத்தில் எப்படியோ அவளும் கண் அசந்து விட்டவள் தீடீரென கண்ணை விழித்தாள்...
என்ன வளர்ந்து கெட்டவன் சத்தத்தை காணல என்று நிமிர்ந்து பார்க்க , நெப்போலியன் நின்று கொண்டே அவளுக்கு காத்து வீசியபடி தூங்கி கொண்டிருக்க இன்னொரு பக்கம் குறை தூக்கத்தில் அமர்ந்து ஸ்ரீதேவி மகளுக்கு காற்று வீச ...
இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்து கொண்டே இரவை கழித்தாள்...
மிருகங்களுக்கு கூட உண்மை அன்பை புரிந்து கொள்ள முடிகிறது ,மனிதன் ஏனோ உண்மை அன்பை புரிந்து கொள்வதில் தடுமாறத்தான் செய்கிறான் ..