அலெக்ஸ் 13
Alex13

13 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
ஸ்ரீதேவி மகளை காணவில்லை என்று ஊரெல்லாம் தேடியவர்.. இத்தனை வருடமாக தனக்கு மன அமைதி கொடுத்த தெய்வத்தை தேடி ஓடி வந்தார்.. மனம் உருகி தன் மகளுக்காக தம்பிக்காக வேண்டிக் கொண்டவர் குங்குமத்தை பூசிக்கொண்டு படியில் இறங்கி வர .. காரில் சாய்ந்து நின்ற நல்லபெருமாளை கண்டு சற்று பதறிவிட்டார்
மகளை எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வது .. உன்னை நம்பித்தான் அனுப்பினேன் என் மகளை ஒழுங்கா பாத்துக்க தெரியாத நீ எல்லாம் ஒரு தாயான்னு கேட்டா , சொல்ல பதில் இருக்கிறதா?
இதற்காகவா இவ்வளவு அடித்து பிடித்து தன் தம்பிக்கு மகளை திருமணம் முடித்துக் கொடுத்தது கையை பிசைந்து கொண்டே அவரை காணாதது போல இறங்கி ஓடிவிட நினைக்க..ஸ்ரீதேவியை மறைத்தார் போல் வந்து நின்றார் நல்லெருமாள்...
"என் மக எங்க போனா? "
"அது
"நான் அங்க இருந்தாலும் இங்க என்ன நடக்குது என் பொண்ணு என்ன செய்றான்னு பார்க்கிறதுக்கு ஆளு வச்சிருக்க மாட்டேன்னு நீ எப்படி நினைச்ச..
என் தம்பி தேடிப் போய் இருக்கான், கண்டிப்பா நம்ம பொண்ணு கிடைச்சிருவாங்க.."
"கிழிச்சான், தம்பி தம்பி உனக்கு என்னையும் என் பிள்ளையையும் தவிர மத்த எல்லாரும் உயிர் அப்படித்தானே? ஆக்ரோஷம் வந்தவர் போல கத்தினார்
"என்னைக்கு தாண்டி உனக்கு நானும் என் பிள்ளையும் பெரிசா தெரிய போறோம்.. ஸ்ரீதேவி அறியாத பார்வை கணவனை பார்க்க ...
"நான் கெட்டவன் தான் ஆனா ஒரு நாள் கூட உனக்கும் , என் பிள்ளைக்கும் நான் துரோகமோ இல்ல அன்பில் குறையோ செஞ்சது கிடையாது.. ஆனா நீ என்னைக்குமே என்னை இரண்டாவதாக தான வச்சிருக்க... உனக்கு அன்னைக்கு உன் அம்மாவும் அப்பாவும் பெருசா தெரிஞ்சாங்க இன்னிக்கு உன் தம்பி பெருசா தெரியுறான்... நாங்க உனக்கு எப்பவும் போல வேண்டாத உறவு தானே, நாங்க இருந்தா என்ன தொலைஞ்சா என்ன.. இத்தனை வருட குமுறல் கத்தி விட்டார்
"நீ ஏம்மா கவலைப்பட போற, சீவி சிங்காரிச்சு கோவிலுக்கு வந்து கடவுளை சைட் அடிக்க ஆரம்பிச்சிட்ட... ஆனா நான் என் மகளை காணலன்னு இப்படி நாய் மாதிரி தெரு தெருவாக சுத்தி வர்றேன் , இப்போ உனக்கு நிம்மதியா இருக்கா..."
அது
இதுக்கு தானே என் பொண்ண இழுத்துகிட்டு வந்த ஏன் இவன் மகள் கூட சந்தோஷமா இருக்கான்.. அதுல மண்ணள்ளி போட்டுருவோம்னுதானே, அந்த வளந்து கெட்டவன அனுப்பிவிட்டு, என் மகளை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு வந்த .. இப்போ உனக்கு குளுகுளுன்னு இருக்குமே" கணவன் குற்றச்சாட்டில் கதி கலங்கி போய் ஸ்ரீதேவி கணவன் முகம் பார்க்க..
"இத்தனை தப்பு செஞ்ச நான், சொடுக்கு போடுற நேரத்துக்குள்ள உனக்கு துரோகம் செய்யவோ இல்ல உன் மகளை தூக்கி போட்டுட்டு இன்னொரு பிள்ளைய பெத்துக்கவோ தெரியாம இல்ல.. என்னால முடியாதுன்னு நினைக்கிறியா? ஆனா இன்னவரைக்கும் நீ சாய்ஞ்ச இந்த நெஞ்சில இன்னொருத்தி சாய விட்டதில்லை .. இனியும் சாயம் மாட்டேன் .. என் உடம்பு கட்டையில போற வரைக்கும் நீதான் என் மனைவி, அவதான் என் பிள்ளைன்னு வாழ்ந்து கிட்டு இருக்கேன் .. ஆனா உன் அன்பும் நேசமும் எங்களுக்கு என்னைக்காவது தந்து இருக்கியா??
உன்ன கல்யாணம் பண்ணும் போது, நீ மட்டும் போதும்னு உன் வீட்டுக்கு வீட்டோட மருமகனா வந்த நான் இன்னைக்கு இப்படி நிக்கிறேன்னா.. அதுக்கு காரணம் உன் மேல வச்ச காதல்டி... என் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் ... உன்ன மட்டும் காதலிக்காம இருந்திருந்தா, எவளையோ கட்டிக்கிட்டு நிம்மதியா நானும் வாழ்ந்து இருப்பேன்... ச்சை என் கிரகம் உன் கண்ணுல மயங்கி தொலைச்சுட்டேன்" என்று காரில் அடித்த நல்லபெருமாளை ஸ்ரீதேவி எச்சில் விழுங்கி பார்த்தார்...
"அது சரி வாழ்க்கையே முடிஞ்சு போச்சு இனி நாங்க பெருசா தெரிஞ்சு எதுக்கு தெரியலன்னா எதுக்கு எனக்கு என் புள்ள கிடைக்கல ;உன் கழுத்துல கிடக்குதே அந்த தாலி அது இருக்காது"
அத்தான்..
"ச்சீ உன் வாயால என்ன அப்படி சொல்லாத நீ செத்தா தான் எனக்கு நிம்மதி போல போய் தொலை என்றவர் வாய் முகூர்த்தம் பலித்ததோ?? கோவில் காளை ஒன்று கட்டை விட்டு கழண்டு தறிகெட்டு தெருவில் ஓட அத்தனை பேரும் பதறி சிதறி அதன் வழியை விட்டு தெறித்து ஓட...
தெருவின் நடுவே காரை வி்ட்டு வழியே மறைத்தார் போல முதுகு காட்டி நின்று நல்லபெருமாள் ஸ்ரீதேவியோடு பேசி கொண்டிருக்க ஓடி வந்த காளை நல்லபெருமாளை முட்டி தூக்க போக
அய்யோ அத்தான் என்று ஓடி வந்த காளையின் செயல் புரிந்த ஸ்ரீதேவி , என்ன செய்கிறோம் என்று புரியாது அவரை காப்பாற்றினால் மட்டும் போதும் என்ற நிலையில் ஐம்புலனும் உந்த .. சட்டென்று தன் எதிரே மாடு முட்டும் இடத்தில் நின்ற நல்லபெருமாளை ஓங்கி பிடித்து ஸ்ரீதேவி தள்ள, அதே சமயம் ஓடி வந்த காளை எதிரே நின்ற ஸ்ரீதேவியை முட்டி தூக்கி வீச
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று ரத்தம் தெறிக்க பறந்து போய் விழுந்த மனைவியை அதிர்ந்து போய் பார்த்த நல்ல பெருமாள் செயலற்று நின்றார்
நடந்த செயலில் கூட்டம் கூடவும்
அய்யோ ஓடி வாங்க யாராவது என்று கூட்டம் ஸ்ரீதேவியை காப்பாத்த அரக்க பறக்க ஓட, தன்னிலை வந்தவர்
தேவிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ என்று கத்தி கொண்டு கூட்டத்தை விலக்கி கொண்டு ஓடியவர் ... ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை குழந்தை போல தூக்கி கொண்டு வந்து காரில் போட்டவர் கைகள் காரை விமானம் போல செலுத்த மருத்துவமனையில் வந்து தான் நின்றார் ...
சார் ஸ்டெக்சர்ல ஏத்துங்க" என்று மருத்துவர் கூறியது எல்லாம் அவர் காதில் கேட்ட மாதிரி இல்லை தன் மனைவியை கையிலேயே தூக்கி கொண்டு ஓடி வந்தார்....
தேவி தேவி எப்படியாவது அவளை காப்பாத்துங்க டாக்டர்" என்ற உடைந்த குரல் மட்டும் ஸ்ரீதேவி காதில் கேட்டு கொண்டே இருக்க ... ஸ்ரீதேவி கைகளை பிடித்த அவர் கைகள் விடவே இல்லை....கண்ணை திறந்து பார்க்கும் அளவு உடலில் வலு இல்லை ஆனால் உடைந்து வந்த நல்லபெருமாள் குரல் இன்னும் நீ என் உயிர்தானடி !! என்று சொல்லாது சொன்னது
வரட்டு வீம்பும் உணரப்படாத காதலும் தங்கள் காதலை கெடுத்து வாழ விடாது ஆக்கி விட்டதோ என்ற வலிதான் ஸ்ரீதேவி கண்ணில் கண்ணீராக உடைப்பெடுக்க ஓடியது
ஒன்னும் இல்லை தேவி , நான் இருக்கேன் உன்ன விட்டிர மாட்டேன் என்று அவர் கைகள் கண்ணீரை துடைக்க...
"சார் கர்ப்பப்பை கிழிஞ்சு இருக்கு
"ஓஓஓஓ பிழைச்சுக்குவாள்ல..
"அதை ரிமூவ் பண்ணிடுவோம்
"ம்ம்
"வெளிய வெயிட் பண்ணுங்க சார் ... இது அவங்க கழுத்துல கிடந்த தாலி என்று அவர் ஆசையாக கட்டிய தாலியை கழட்டி நல்ல பெருமாள் கையில் கொடுக்க.. அந்த முரட்டு ஆண் கை நடுங்கியது அதை வாங்கி பத்திரமாக நெஞ்சுபக்க பாக்கெட் உள்ளே போட்டு கொண்டார்
"சார் வெயிட் பண்ணுங்க மூச்சு திணறும் மனைவியை விட்டு நகர மனம் இல்லை
"ஹான் .... என்று குழந்தை போல முழித்தார்...
"ஆப்ரேசன் பண்ணணும் சார்
ஒரு நிமிசம் அவளை பார்த்துட்டு போறேனே என்ற நல்லபெருமாள் குனிந்து நிற்க .. மிருகம் கூட கண் கலங்குமா?? கலங்கியது அவர் கண்ணீர் துளி வந்து ஸ்ரீதேவி உதட்டில் விழுந்தது.... தயங்கி தயங்கி முதல் முத்தம் போல அவர் நெற்றியில் முத்தம் வைத்தவர்
"திரும்பி வந்துடு தேவி என்று கூற
"ம்ம் முனகல் மட்டும் வந்தது
போய் ஐசியு வாசலில் சேரில் அமர்ந்தார்..
"சார்
ம்ம்
கர்ப்பப்பை ரிமுவ் பண்ணியாச்சு மேடம் நல்லா இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்தில ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க மேடமை பார்க்க யாராவது வந்திருக்காங்களா, நீங்க யார் ?"
"நான் அவளோட புருசன் ... அதற்குள் ஆபரேஷன் செய்து ஸ்ரீதேவியை ஸ்டக்சரில் வைத்து தள்ளி கொண்டு வர ...
"படுக்கையில் கிடந்த மனைவியை பார்த்தபடி சேரில் அமர்ந்தார்..
இவள் மீது என்ன பகை ?
ஒன்னுமில்லை...நான்தான் எல்லாம் என்று சொல்லவில்லை , என் குடும்பம் என் தம்பி என்று சொன்னதுதான் தவறு!! தம்பிக்காக தன்னை எதிர்த்து நின்றது தவறு நீ அப்படி செய்றியா நான் இப்படி செய்றேன் என்று தன் வீம்பு காட்ட என்ன கிடைத்தது ஒன்றும் கிடைக்க வில்லை...
வாழ்ந்தது கொஞ்ச காலம் அதில் கூட நீ நான் உன் வீடு என் வீடு என்று அத்தனை பிரிவினை அத்தனை சண்டைகள் அதில் காதல் தொலைந்தே போய்விட்டது நீயா நானா என்று போட்டா போட்டி போட்டு அத்தனையையும் இழந்தாயிற்று, இனி இழக்க இருவருக்கும் என்ன இருக்கிறது...
கண் முழித்த மனைவியை பார்க்காது நல்ல
பெருமாள் தலையை குனிந்து உட்கார்ந்து இருக்க ....
ஒற்றை கையில் குளுக்கோஸ் ஏறியது இன்னொரு கையில் காயம் வதங்கி கிடந்த அவர் முடிகள் முகத்தை மறைக்க
சார் கொஞ்சம் பேண்ட் போட்டு விடுங்க , நைட் தூங்கிடாதீங்க மருந்து இறங்குது கவனமா பார்த்துக்கோங்க.. என்று விட்டு நர்ஸ் போக
ம்ம் என்று எழும்பி வந்த நல்லபெருமாள் தயங்கி ஸ்ரீதேவி முகத்தை மறைத்த முடியை வருடி எடுத்து கொண்டை போட இருவர் கண்ணும் ஒன்றை ஒன்று வருடியது..
உங்களுக்கு எதுக்கு சிரமம் , தம்பியை என்று தொடங்கிய ஸ்ரீதேவி வாயை மூடி கொள்ள
"தம்பியா இருந்தாலும் அவனும் வேற ஆம்பளத்தான்.. அவன் எங்கன போய் தொலைஞ்சானோ வர்ற வரை இருந்து தொலைக்கிறேன் எதாவது வேணுமா?? என்ற கணவன் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தாலும் .. என்ன அடுத்து பேச என்று புரியவில்லை
ம்ஹூம்
"ம்ம் எதாவது வேணும்னா சொல்லு" என்று மீண்டும் சேரில் போய் அமர்ந்த நல்லபெருமாள் போனை நோண்டுவது போல குனிந்தாலும் ஓரப்பார்வையில் மனைவியை இரவு முழுவதும் தூங்காது உட்கார்ந்து பார்த்தார்...
மருந்து வீரியத்தில் தூங்கி விட்ட ஸ்ரீதேவி தன் கையில் ஏதோ வருடுவது போல உணர்ந்து கண்ணை திறக்க நல்லபெருமாள் தான் அவள் கையை வருடி கொண்டிருந்தார்.. சட்டென்று ஸ்ரீதேவி கண்ணை முழிக்கவும் கையை வி்ட்டு கையை வெடுக்கென்று எடுத்து கொண்டவர்
"அது எறும்பு அதான் தட்டி விட்டேன் என்று காரணத்தை சொல்லி விட்டு போய் தொலைவில் அமர்ந்து கொள்ள.. இப்போது ஓரக்கண்ணால் பார்ப்பது ஸ்ரீதேவி முறை ஆயிற்று ..
உடைந்த காதலை எப்படி ஒட்ட வைக்க ??
கடந்த காலத்தை எப்படி சரி செயய ? இருவருக்கும் தெரியவில்லை..
யோசித்து இருக்கலாமோ?? என்று யோசிக்க வைத்து விடுகிறது பல இழப்புகள் ..