அலெக்ஸ் 10

Alex 10

அலெக்ஸ் 10

10 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!

ஒரு நாள் முழுவதும் அவளை தேடி அலைந்த நெப்போலியனை ரோமி வந்து வாலாட்டி அழைக்க 

எங்கடா , அதுவோ அடர்ந்த காட்டை நோக்கி ஓடியது 

அந்த நடுக்காட்டுக்குள் நெப்போலியனும் ரோமியும் யாமினியை தேடி அலைந்தனர்..

"உன் அண்ணிக்கு தைரியம் இருக்க வேண்டியதுதான்டா, ஆனா இப்படி நட்ட நடு காட்டுக்குள்ள சுற்றுலா வந்திருக்கா பாரு.. அவளை என்னைக்கு கட்டினேனோ ஒருவாய் சோறு நிம்மதியா சாப்பிட முடியலடா என்றதும் ரோமியோ அவனைப் பார்த்து முறைக்க 

"ஓஹோ உன் ஆளு அவ கூட்டாளின்ன உடனே எனக்கு எதிராளியா குரைக்கிறியா , சோறு நான் தான் வைக்கணும் , அதை நினைச்சுட்டு குரை .... எங்கு போய் தொலைஞ்சா, இருட்ட வேற ஆரம்பிச்சுடுச்சு இவளுக்கு அழகை அள்ளிக் கொடுத்த ஆண்டவன், அறிவை கிள்ளியாவது கொடுத்து இருக்கலாம் .. எதையுமே யோசிக்க மாட்டேங்கிறா , நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நின்னா கூட பரவாயில்லை, கையில குயில புடிச்சு வச்சுக்கிட்டு இது முயலுன்னு சொல்ற வீம்பு புடிச்சவளை தேடிப்போய் கல்யாணம் கட்டிக்கிட்டு என் வாழ்க்கையை சீரழிச்சுட்டு நிக்கிறேன் பாத்தியா , என்னதான் செருப்பால அடிக்கணும்.... "

"இங்க கூட என்ன நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு நினைச்சியா என்ற யாமினி குரலில் நெப்போலியன் நடையை நிறுத்தி ,அவள் சத்தம் வந்த திசை நோக்கி போக ...ஓடிய வெள்ளி ஆற்றம்கரையில் மட்டமல்லாக்க படுத்து கிடந்து பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள் அவன் இம்சை மனைவி ...

"ப்ச் இவள தேடி நாய் மாதிரி நான் அலைஞ்சுகிட்டு இருக்கேன் , படுத்துக்கிடக்குற ஜாடைப் பாரு , எட்டி மிதிச்சேன்னு வையி ஆத்தோட போய்டுவ

"திட்டுறதுக்காகவே அங்கிருந்து வந்தியா? இப்ப எதுக்கு என்ன தேடி வந்திருக்க ?

"ஹான் , உனக்காக பொங்கலும் வடையும் அக்கா செஞ்சு கொடுத்து விட்டா, அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. ஆளப் பாரு , எதுக்குடி இங்க வந்து உட்கார்ந்திருக்க ..

"உங்களையெல்லாம் பார்க்க புடிக்கல.. அதனால இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன், இங்கேயும் தொல்லை பண்ண வந்துட்டீங்கல்ல என்ன விஷயம் என்று எழும்பி அமர்ந்தாள் ..

"பச்சை நிற சுடிதார் ஆரஞ்சு நிற லெக்கின்ஸ் போட்டு இருந்தாள் கழுத்தில் குட்டியாக செயின் முடியை விரித்து விட்டு கேட்ச் கிளிப் சகிதம் வெகு அழகாக இருந்தாள்

மானம் கெட்ட மனசே அவ பின்னாடி போகாத எவ்வளவு காறி துப்பினாலும் ஏன் அவளை ரசிச்சு தொலையுற என்று தன்னை தானே திட்டி கொண்டான்... 

ஊர்ல எத்தனை பேர் உன்ன கட்டிக்கிறேன் அத்தான்னு வந்தாளுக என் தலை எழுத்து அக்கா மகன்னு தாலியை கட்டிட்டு சீரழியுறேன்... 

புலம்பியபடி அவள் அருகே போனான்..

அவள் பக்கத்தில் ஆங்கில நாவல், சிப்ஸ் பாக்கெட் தண்ணீர் பாட்டில் ப்ரீ ப்ளானோடுதான் ஆளு வெளிநடப்பு பண்ணி இருந்தது.... புரிந்தது...

சோவார போறவ சொல்லிட்டு போய் தொலையக்கூடாதாடி.. நீ எங்கயையோ காணாம போயிட்டியோன்னு பதறிப்போய் நானும் அக்காவும் ஊரெல்லாம் தேடுறோம் ..

"அடேயப்பா நம்பிட்டேன், நான் செத்தா முதல்ல கேக் வெட்டுற கோஷ்டி தானே நீங்க" என்ற யாமினி பேச்சில் இவனுக்கு சுரீர் என்று மண்டைக்குள் வர

"ஏண்டி நீ சாகடிக்கணும்னு நினைச்சா உன்ன கொல்றதுக்கு பத்து நிமிஷம் ஆகாது, நீ வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசின முதல் நாளே கழுத்தை திருகி உடைச்சு உன் கையில தந்து இருப்பேன்...

"ப்ச் தோளை உலுக்கிய மனைவியை எரிச்சலாக பார்த்தவன் 

"எதிர்ல இருக்குற மனுஷங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிய வேண்டாம்டி, ஆனா அவங்களை நோகடிக்காம இருக்குறதுக்கு கூட உனக்கு தெரியாதா ...பெத்தவ உன்ன பத்து மாசம் சுமந்து பெத்தவ உனக்கு எதிரியா இருப்பாளா?

"ஏன் இருக்க மாட்டா, என் அம்மா இருப்பா.. தலையை வேதனையில் பிடித்தான். 

இவள் எல்லாம் சொல்லித் திருந்தும் ஆளே இல்லை..

"சரி கிளம்பு வீட்டுக்கு போவோம்... 

"முடியாது நான் வர மாட்டேன் என்று அடமாக நின்ற அவளை புருவம் உயர்த்தி பார்த்தவன் 

"இவகிட்ட பேசினா நாம பைத்தியக்காரனா சுத்த வேண்டியதுதான் விறுவிறு என்று நெப்போலியன் அவள் அருகே போய் யாமினியை தொடையோடு கைவிட்டு தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க

"டேய் விடுடா என்று அவன் தோளில் பிராண்டி வைத்தவள் பின்னழகில் ஒரு கிள்ளு போட

ஆவ்ஆஆஆஆஆ 

தொலைச்சுப்புடுவேன் கருக்கல் ஆகி போச்சு ராத்திரி கரடி நரி எல்லாம் சுத்துற காட்டுக்குள்ள வந்து படுத்துகிட்டு கனவு கண்டுகிட்டு இருக்கியா.. நீ செத்து தொலச்சா, உன் அம்மைக்கு எவன்டி பதில் சொல்றது..

"அம்மா அம்மா அம்மா எனக்கு அவளை பார்க்க பிடிக்காமதான். நான் வரல.. என்ன ஏன் டார்ச்சர் பண்ற" என்று யாமினி துள்ளி எழும்பி மறுபடியும் ஓட ஆரம்பித்தவள் , பின்னே இவனும் ஓட ஆரம்பிக்க.. மரத்தின் வேர் தட்டி மங்கையவள் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி வழுவி விழ ஆரம்பிக்க 

"கொடி "என்று அலறிக்கொண்டே இவனும் அவள் பின்னால் சறுக்க ஆரம்பிக்க, இருவரும் சேர்ந்து போய் ஒரு தாழ்வான அடர்ந்த காட்டில் போய் விழுந்தனர்.. இருட்டு மட்டும் தான் சுற்றி அடர்ந்த மரங்கள் நீர் ஓடும் ஓசை, மரக்கிளை நடுவே நிலா வெளிச்சம் என்று அந்த இடம் அவனுக்கே அடையாளம் தெரியவில்லை 

"எல்லாம் போச்சு இனி இந்த மேட்டுல ஏறி ஊருக்குள்ள போகணும்னா, ஒரு நாள் ஆகும் ..எல்லாம் உன்னால நாய "என்று நெப்போலியன் எழும்பி அவளுக்கு எழும்ப கை கொடுக்க.. அதை ஏன் இவள் பிடிக்க போகிறாள் அருகே இருந்த மரத்தை பிடித்து பேலன்ஸ் செய்தவள் 

"நான் ஊருக்கே வரல நீ வேணும்னா போ என்று எழும்பி தன் கையில் காலில் இருந்த மணலை தட்டி விட்டுக்கொண்டு ஒரு பாறை மீது போய் உட்கார்ந்து கொண்டாள்..  

சிறுது நேரம் அமைதியாக இருவரும் நேரத்தை கழிக்க அமானுஷ்ய சத்தம் கீச் கீச் ஊஊஊஊஊ ஆந்தை அகவும் குரலில் யாமினி அங்கும் இங்கும் பார்க்க... ஏதோ பின்னாடி விறிட்டென்று ஓட ...

மரத்து அடியில் தலைக்கு கை கொடுத்து மல்லாக்க படுத்து கிடந்த நெப்போலியன் அருகே நடந்து வந்து அவன் அருகே உட்கார்ந்து கொண்டவள் ..

ம்க்கும் 

ம்க்கும் 

"ஏய் மிஸ்டர் உன்னத்தான்... 

"ப்ச் உங்களத்தான் என்று அவனை சுரண்ட 

"என்னயா நீ ஏதோ நாய் நரியை கூப்பிடுறேன்னு நினைச்சேன் என்ன காத்து இந்த பக்கம் அடிக்குது பவ்யமாக ஆள் இருந்தது... அவள் அங்கும் இங்கும் கண்ணை உருட்டுவதிலேயே சத்தம் கேட்டு பயந்து விட்டாள் புரிந்தது ....  

"ஓஹோ ஆளு மனுசனை பார்த்தா ஏகிறும் மிருகத்தை பார்த்தா பம்முமா, இது போதுமே நெப்போலியா உன் பொஞ்சாதியை ட்ரில் எடுக்க நாலு புலியை வாங்கி வீட்ல போட்டு வளர்த்தாவது இந்த எருமையை கட்டி மேச்சிடலாமே" என்று உள்ளுக்குள் அவள் முழியை கண்டு எள்ளல் செய்தவன் 

"என்ன ?

"இல்லை கரடி நரி எல்லாம் இங்க வருமா என்ன? சுற்றி முற்றி பார்த்து கொண்டே கேட்க 

"ம்ம் வருமே புலி கூட வரும் .... 

"ஓஓஓ புலியுமா ?

"சிங்கம் கூட வரும்.. ஏன் உனக்கு பயமா இருக்கா ? அவள் பயம் கண்டு வேடிக்கையாக இருந்தது ... 

"ச்சே ச்சே வந்தா பார்த்துட்டு போகலாமேன்னு ஒரு எக்ஸைட்மெண்ட் தான்" என்ற மனைவி கெத்து பேச்சில் நெப்போலியனுக்கு முதல் முறை சிரிப்பு அரும்பியது... 

"ஓஓஓ அப்போ உன் பின்னாடி தான் புலி நிக்குது பார்த்துட்டு கிளம்ப எல்லாம் வேண்டாம் , அதுவே உன்ன நேரே பரலோகம் ம்ஹும் உன் வாய்க்கு நீ,நரகம் தான்டி போவ, அதுவே கூட்டிட்டு போயிடும் போ   

"வாட் புலியா?? என்று யாமினி வாயை பிளக்க ..

"சத்தம் போடாதம்மா, நேரா தலையை கவ்விடும் .. பிறவு உன் அப்பன் உன் பொணத்தை கூட அடையாளம் காண முடியாது .... பின்னே எதோ சத்தம் உண்மையாவே கேட்டு யாமினி அவனுக்கு தன் பயத்தை காட்டாது... 

"நீங்க பொய் சொல்றீங்க..

"நான் ஏன் பொய் சொல்ல போறேன், திரும்பி பாரு ...பொய்யா உண்மையான்னு தெரியும் .. ஏதோ மிருகத்தின் காலடி சத்தம் உண்மையாகவே கேட்டது ... முயல் ஒன்று இவர்கள் சத்தத்தில் புதர் மறைவில் இருந்து பயந்து ஓடியது ..

"திரும்பி பாரு

ம்ஹூம் தேவையில்லை...

"புலி அண்ணா எங்க போறீங்க , என் பொண்டாட்டி உங்ககிட்ட பேசணுமாம் வாங்க என்று அவன் கத்த, ஓடி வந்து அவன் வாயை பொத்திய யாமினி 

ப்ச் அதான் போகுதுல்ல எதுக்கு கூப்பிடுறீங்க? என்று கையை எடுக்க

"நீதான பார்க்கணும்னு சொன்ன 

"இன்னைக்கு மூட் இல்லை, இன்னொரு நாள் பார்த்துக்கிறேன் .. 

"அப்போ சரி போயிடுச்சு என்ற நெப்போலியன் தன் அருகே வெகு நெருக்கமாக , அவன் மீது படுத்து கிடப்பது போல கிடந்த மனைவியை ஓரக்கண்ணால் பார்க்க .. சட்டென்று அவனை விட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டவள்..

"எனக்காக எல்லாம் யாரும் இங்க கிடக்க வேண்டிய தேவையில்லை நீங்க போங்க, நான் வந்துடுறேன் என்று யாமனி மறுபடியும் நடக்க ஆரம்பித்தாள் .. அவன் அடித்து போட்டு விட்டு போய் விட்டான் ஸ்ரீதேவி அழுது கொண்டே வந்து அவள் காயத்தை வருடி எண்ணெய் தடவ தாயின் கண்ணீரை வெறித்து பார்த்தவள்.... 

உண்மையாவே என் மேல உனக்கு பாசம் உண்டா மம்மி ?

"என்ன செஞ்சா ஒத்துக்குவ பாப்பா... உன் அப்பாதான் என்ன ஒதுக்கி வச்சார், நான் உங்கள ஒதுக்கி வைக்கல.. இதுக்கு மேல எப்படி புரிய வைப்பேன்னு தெரில .... 

"சிம்பிள் இந்த துப்பாக்கியை வச்சி சுடுங்க ஒத்துக்கிறேன் நீங்க பாசம் உள்ள ஆளுன்னு"மகள் நீட்டிய துப்பாக்கியை யோசிக்காது ஸ்ரீதேவி வாங்கி சுட காற்று தான் வந்தது... 

"சாரி புல்லட் போட மறந்துட்டேன் அடுத்த வாட்டி போட்டு விளையாட தர்றேன் அடிச்சு வச்சிட்டு போன உன் தம்பிக்கு நான் யாருன்னு காட்டுறேன்" என்று தான் கிளம்பினாள்... 

உயிரை கொடுத்த தாய் துணிந்து உயிரை விட நிற்க இவர்களின் அன்பில் ஆயில்கைதி ஆவது போல உணர்வு ஓடி வந்து ஒளிந்து கொண்டாள்... 

"நான் வர மாட்டேன் உனக்கு தேவைன்னா போ "

"அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் நீ இருந்து காட்டெல்லாம் சுத்தி பார்த்துட்டு, உனக்கு எப்போ தோணுதோ அப்ப வீட்டுக்கு வா... எங்க வீட்டுக்கு வர?? எந்த புலிக்காவது கரடிக்காவது இரையாகு.. நான் வாழ வேண்டிய பையன் ஏற்கனவே உன்னை கல்யாணம் கட்டி வாழ்க்கை போச்சுன்னு நொந்துகிட்டு இருந்தேன்.... ஆனா கடவுள், எனக்கு ஒரு மறு வாய்ப்பு தந்திருக்கிறார் போல இருக்கு... புலி தெய்வமே இவள ஒரே கடியில கொன்னுடு நான் இவள தலை முழுகிட்டு , எனக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் கட்டி சந்தோஷமா வாழ்றேன் .... அப்படி வாழும் போது மொத பொண்டாட்டி உன் பேர தான் என் குழந்தைக்கு வைப்பேன் சரியா?? அதனால நீ இங்கேயே இரு நான் போறேன் என்று அவன் எழும்ப போக... அவனை மறைத்துக் கொண்டு வந்து நின்ற யாமினி..

பெருசா பொண்டாட்டிய நோக விடாம பார்த்துப்பேன்னு , என்ன கோர்ட்ல சொல்லி கூட்டிட்டு வந்த, இப்படி நடு காட்டில விட்டுட்டு போற.. நீ எல்லாம் ஆம்பளையா?

நான் ஆம்பளையா இருந்திருந்தாதான் நீ இப்போ இப்படி எதிரில் நின்னு பேசிகிட்டு இருக்க மாட்டியே ரெண்டு மாசம் பிள்ளையைல்ல சுமந்து இருப்ப.. உன்னை நாலு அறை போட்டு என் பொண்டாட்டி ஆக்கி இருக்க மாட்டேன்... நான் ஆம்பளையே இல்ல ஒத்துக்கிறேன் வழியை விடு கிளம்புறேன்

"ப்ச் , உன் அக்காவுக்கு என்ன பதில் சொல்லுவ என் பொண்ண காணோம்னு கேட்பாங்க இல்ல .."

"கேட்டா ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்டி ஆனா நீ மட்டும் இனிமே என் வாழ்க்கையில் வந்திராத நீ இங்கேயே இரு" என்று மறுபடியும் நகர போனவன் முதுகு சட்டையை பிடித்து இழுத்தவள்..

பின்னாடி ஏதோ சத்தம் கேட்குது , போன புலி வந்துடுச்சுன்னு நினைக்கிறேன் ... ஏதாவது பேசி அதை அனுப்பி விடுங்களேன் என்றவளல் கிசு கிசு பேச்சில் 

அய்யடா ஆணுக்கும் வியர்க்கும் என்று கண்ட நொடிகள் அவை..

மனைவியின் கிசுகிசு பேச்சில் கூட கணவனுக்கு மோகம் வருமா என்ன? வந்ததே!! அவள் பட்டு இதழ்கள் அவன் காது மடலில் உரசிய உரசலில் உச்சாணி கொம்பில் தேன் அல்லவா உதிரத் துடித்தது...

அந்த நவீன அரக்கிக்குள்ளும் ஒரு குழந்தை மறைந்து கிடப்பதை அவன் அறிவானா??