ஏகாந்தம் இனிது உன்னோடு 11-15

ஏகாந்தம் இனிது உன்னோடு 11-15

அத்தியாயம் - 11

சற்றே அழுத்தமாய்

தடம்பதித்தாயடா

மனதிற்குள் மட்டுமல்ல

உயிருக்குள்ளும்...

அனிஷா கோவத்துல சத்தமா கேட்டாள் " யாரு இந்த அர்ஷாத் "

அப்போதுதான் உள்ள வந்த

அர்ஷாத்" நான்தான் என்ன"

அனிஷா " நீதான் இத எழுதுனியா.

என்ன தைரியம்டா உனக்கு " என எகிறினாள்.

அர்ஷாத் " நானே இப்போதான் உள்ள வர்றேன் எனக்கு எப்படித் தெரியும் உன்ன மாதிரிதான் நானும். எனக்கும் எதுவுமே தெரியாது "

அவனுக்குமே கொஞ்சம் பயந்தான் ஏற்கனவே ரத்தீஷ் விசயத்துல எந்தளவுக்கு பிரச்சனைனு தெரியும். அவங்கம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.

அனிஷா கொஞ்சம் நிதானித்தாள்.

மறுபடியும் பிரச்சனைனா எப்படி.

ஒன்னுமே செய்யாம டஸ்டர் எடுத்து அழித்துவிட்டாள். அங்கே அழித்தவளின் மனதில் அது நிரந்தர கல்வெட்டாக மாறியதை அறியவில்லை.

அனிஷா அன்று முழுவதும் சஞ்சலத்தோடவே இருந்தாள் அனிஷா பெயர் எங்கனாலும் நல்லவிதமாக தெரியனும். கெட்டவிசயத்துக்காக தெரியக்கூடாது எனதான் அதை அழித்தாள். வீட்டிற்கு சென்றும் சரியா தூங்கலை .

இது எட்டாவது படிக்கும்போது ஜீவா அவளுக்கு சொல்லிக்குடுத்தது.

அன்றைக்கு வீட்டுப்பாடம் எழுதும்போது

அண்ணனிடம் சந்தேகம் கேட்டாள் 

ஃபேமஸ் -நொட்டோரியஸ் வித்தியாசம் சொல்லுண்ணா.

ஜீவா " உன்னோட ஸ்கூல்ல உன்ன எல்லாருக்கும் தெரியும் எப்படி என கேட்க " 

அனிஷா" படிப்பேன் க்ஷஆனால் சேட்டைனு சொல்லுவாங்க "

ஜீவா "அதுதான் வித்தியாசம் நல்லபடிச்சி நல்ல குணத்துனால தெரிஞ்சா அது ஃபேமஸ்.

உன்ன மாதிரி சேட்டை ,தப்பு செய்து எல்லாருக்கும் தெரிஞ்சா அது நொட்டோரியஸ் புரியுதா " அதுலயிருந்துதான் அவள் சேட்டைய குறைச்சிகிட்டா.

அடுத்த நாள் காலை காலேஜ் வந்தவள் ரியாவை கூப்பிட்டாள் " ரியா தேவாங்குகிட்ட என்னனு லேசா விசாரி. அர்ஷாத் இத எழுதியிருக்க வாய்ப்பில்லை "

ரியா மெதுவா மதியம் வெளிய கேண்டீன் போன தேவாவ பிடிச்சி கேட்டாள்.அவனும் பதில் சொன்னான்.

ரியா" அனிஷா போர்டுல எழுதினது 

ரத்தீஷ்தானாம். தேவாகிட்ட அவனே சொல்லிருக்கான் "

அனிஷா இனி அவனபத்தி வீட்ல சொன்னா கண்டிப்பா பிரச்சனை பெருசாகும் என தெரியுமாதலால். அவன ஒன்னும் செய்யாம ஒதுங்கி போயிடனும்னு நினைத்தவள் அமைதியாகிட்டா.

மதியம் சாப்பிடும்போதுதான் சந்தியா கேட்டாள் எதுக்கு ரத்தீஷ் உன்னோட பேரையும் அவன் பெயரையும் எழுதாம அர்ஷாத் பேரு எழுதினான். இவளுக்குமே அதுதான் டவுட்.

சாப்பிட்டு முடித்து கிளாஸ் போனதுக்கு

பிறகு அர்ஷாத் கிளாஸ்க்கு வரல. ரெம்ப யோசித்தாள். காரணம் இல்லாம எழுதமாட்டான் பழிவாங்கறதுக்கா அப்படினாலும் அர்ஷாத் பெயரை எதுக்கு மாட்டிவிடனும் என யோசித்தவள் 

மறுபடியும் ரியாக்கிட்ட பேசியவள் " ஓய் என கூப்பிட்டாள் "

 

இப்போ அந்த கீதா மேம் கிளாஸ் சும்மாவே இவங்க இரண்டுபேரையும் பிடிக்காது. அதனால மெதுவா கூப்பிட்டாள்.

ரியா " என்ன "

அனிஷா " அந்த தேவாங்குகிட்ட கேளு அர்ஷாத் நேம் எதுக்கு இதுல ரத்தீஷ் இழுத்தான்னு கேட்டுச்சொல்லு "

ரியா " என்ன அர்ஷாத் மேல பாசம் பொங்குற மாதிரி இருக்கு குட்டியே இது சரியில்லயே "

அனிஷா " அடச்சி மீன்குழம்பு ரெம்ப சாப்பிடாதன்னு சொன்னேன் கேட்டியா. அரைத்தூக்கத்துல என்னவோ உளறாத. "

இவங்க பேசற சத்தம் கேட்டு கீதா மேம் இவங்க இரண்டுபேரையும் எழுப்பிவிட்டாங்க.

என்னபேசிட்டிருந்தீங்க இரண்டுபேரும்.

சும்மா நல்ல மினிக்கிகிட்டு காலேஜ் வர்றது என ரியாவ பார்த்து சொல்லவும்

அனிஷா " அதில்ல மேம் நீங்க அழகா , இல்ல பிரியங்கா சோப்ரா அழகா என பேசிட்டிருந்தோம் " என சொல்லவும் முழு கிளாசும் சிரிச்சிட்டாங்க. ஏன்னா காலேஜ்ல அவங்க வட்டபெயரு பிரியங்கா சோப்ரா. அதுதான் அவங்களுக்கு கோவம் வந்திட்டு..

அவங்களுக்கு கோவம் வந்து ரெண்டு பேரையும் எச்.ஓ.டி னயை பார்த்து பெர்மிஷன் வாங்கிட்டு என் கிளாசுக்குள்ள வாங்க என சொல்லவும் அனிஷாவும் ரியாவும் வெளியவந்து பார்த்தா தேவாவும் அர்ஷாத்தும் கேண்டின் பக்கம் மரத்தடில உட்கார்ந்திருந்தனர்.

இருவரும் அவர்கள் அருகில் செல்லவும்

தேவா " என்ன பிரியங்கா சோப்ரா  

உங்கள வெளியனுப்பிட்டாங்களா "

ரியா " ஆமா அதுக்கு எங்க ரெண்டுபேரையும் பார்த்தாலே பிடிக்காது "

தேவா " அவியளுக்கு வேற யாரும் கொஞ்சம் அறிவா அழகா இருந்திரக்கூடாது பிடிச்சாது "

அனிஷாவத்தான் அர்ஷாத் பார்த்தான். ஆனா ஏதோ பார்வையில வித்தியாசம்.

அனிஷா அதப்பார்த்திட்டு முன்னாடிலாம் இவன் இப்படி பார்க்க மாட்டனே. சம்திங்க் ஃபிஷ்ஸி என யோசித்தவள் ரியாவ பார்க்க தேவா என்ன சொன்னான் என தெரியல கொஞ்சம் சீரியஸ்ஸா இருந்தாள்.

இங்க இருந்தா சரியா இருக்காது என ரியாவ கூப்பிட்டு நடக்கத்தொடங்கியவள்

லேசா திரும்பி பார்க்கவும் அர்ஷாத் இடது புருவத்தை உயர்த்தி வலது கண்ணால் கண்ணடித்துவிட்டு தேவாவை நோக்கி திரும்பிவிட்டான்.

அனிஷாதான் இப்போ இவன் என்ன பண்ணான் கண்ணடிச்சான் டக்குனு நார்மலாகிட்டான் என்னடா இது என சீரியஸா யோசித்தாள்.

ரியாதான்அவளை உலுக்கின " குட்டியே என்ன யோசனை "

அனிஷா " பல்லைக்கடித்தவள் இப்படி உங்க ஊரு பாஷைல கூப்பிடாதன்னு சொல்லிருக்கேன் கேட்கமாட்டியா"

ரியா " அனி தேவாகிட்ட பேசினேன். நிறைய டைம் அர்ஷாத் உனக்காக ரத்தீஷ்கிட்ட சப்போர்ட் பண்ணினதுல அர்ஷாத்துக்கும் ரத்தீஷ்க்கும் கொஞ்சம் உடக்கு அதான்.சேர்த்து எழுதிட்டான் "

அனிஷா" ஓஓ ".

ரியா " ஓய் என்ன யோசனை அடுத்த ஹவர் HOD கிளாஸ் வா ".

இருவரும் கிளாஸ் வரவும் 

ஒரே அட்வைஸ் மழைதான் கீதா மேடம் போயி பத்த வச்சிட்டாங்க.

காலேஜ் முடிஞ்சி வீடுவந்தவள்.

ரெம்ப அமைதியாகவே இருந்து யோசித்தாள். எப்படி என்ன பார்த்து கண்ணடிச்சான். யாருக்கிட்டயும் சொன்னாக்கூட நம்ப மாட்டாங்க.

அடுத்தநாள் காலேஜ் போனா இவனா அவன் அப்படிங்கற ரேஞ்ச்ல இருக்கான். அனிஷா குழம்பித்தான் போனாள்.

இவங்க பிரண்ட்ஸ் எங்கயாவது போகும்போது தேவா சத்தமா கூப்பிடுவான் " டே மக்கா அர்ஷாத்து "

முதல்ல அனிஷா ஏதோ அனிச்சையான செயல்னு நினைச்சா.

அப்புறம்தான் தெரிஞ்சது அது இவா வந்தா மட்டும்தான் அப்படி கூப்பிடுறான் என தெரிஞ்சது.

கிளாஸ்ல இருக்கும்போது ஒரே யோசனை. சந்தியா வந்தவள் எதோ பேச இவள் பதில் சொல்லாம இருக்கவும் கேட்டாள் " அனிஷா என்னாச்சி " என.

இவளுக்கே தெரியல மனசு ஒரு நிலையில் இல்ல. அன்றைய தினம் இரவு சாரதாதான் கேட்டார் " அனி உடம்புக்கு எதுவும் பண்ணுதா. ஒரு மாதிரி இருக்க "

" இல்லம்மா ஒன்னுமில்லையே "

அவளுக்கு ஒரே யோசனை. அவன் பார்வையே சரியில்ல. ஆனா எல்லாரும் இருக்கும்போது நல்லபையன் மாதிரி இருக்கான்.

அடுத்த நாள் கல்ட்சுரல் டே கண்டிப்பா சாரிகட்டனும். அம்மாகிட்ட கேட்டு கட்டிக்கிட்டா. அடர்பச்சை கலரில் சேரியும் கட்டி பூ வச்சிட்டு பொம்மை மாதிரி இருந்தாள். அது அவள் நிறத்த இன்னுங்கூட்டிக் காட்டியது.

கார்லகொண்டு விடுறீங்களாப்பா நடக்க கஷ்டமா இருக்கு என சொல்லவும் கார்ல அழைத்து சென்றார்.

அனிஷா கிளாஸ் உள்ளே செல்லும்போதே அர்ஷாத் இருபுருவமும் தூக்கி வாவ் ரியாக்ஷன் காமிக்கவும் தடுமாறிட்டா . சேரி வேற கொஞ்சம் இறங்கிட்டு. லேசா வயிறு தெரியவும் 

ரியா " வாவ் வயிறு என்னா கலருல இருக்கு உனக்குனு" சத்தம்போட்டு சொல்லிட்டா.

அனிஷா சட்டுனு அர்ஷாத்ததான் பார்த்தா அவனோட பார்வையும் அங்கதான். படபடனு சேரிய சரிபண்ணிட்டு ரியாவ வருத்தெடுத்திட்டா.

அவா இப்படிலாம் உணர்ந்த்ததே இல்ல. படபடனு வந்திச்ச .என்ன பார்வைடா அவனோடது. அவள் அவளா இல்ல. ஏதோ ஒரு மாற்றம் புரியல. ஒருமாதிரியாவே இருந்தாள்.

அவளுக்கு வெல்கம் ஸ்பீச் வேற இருந்தது. எப்படி பேசினாள்னு கேட்டா தெரியாது முடித்து ஆடிட்டோரியத்திலிருந்து வெளியே வந்தவள். மெதுவாக நடக்கவும் பின்னாடி யாரோ வர்றமாதிரி இருக்க திரும்பி பார்த்தா அர்ஷாத்.

நெருங்கி வந்தவன் ஒன்னுமே சொல்லாம நகரவும் அவளுக்கு ஏமாற்றமா இருந்தது. திடீர்னு பக்கத்துல யாரோ வந்து நிற்கவும் அவன்தான் லேசான சிரிப்போடு பார்த்திருந்தான்.

என்ன என மறுபடியும் புருவத்தை ஏற்றி இறக்கி கண்ணடித்தான்.அவளுக்கு கண்ணு இரண்டும் தெரித்து விழறளவுக்கு ஆச்சர்யம்.

அர்ஷாத் "ஓய் ரௌவுடி என்ன முழிக்குற "

அவா இப்பவும் அப்படியேதான் இருந்தாள். இவன் இப்படிலாம் பேசுவானா 

அவள் கன்னத்தை ஒரு விரலால் லேசா அழுத்தி " டெய்லி குலாப்ஜாமூன் சாப்டுவியா என்ன " எனக்கேட்கவும்.

இவா இல்ல என தலையாட்டினாள்.

அதற்குள்ளாக ரியா தேடிவந்தாள் அனிஷாவை.

ரியா வந்ததும் அர்ஷாத் கொஞ்சம் விலகி நின்றான்.

ரியா " என்னப்பா நீ இங்க "

அவள் சந்தேகமா கேட்டாள். ஏன்னா தேவா சில விசயங்கள் ரியாவிடம் சொல்லிருந்தான். அனிஷா குடும்பத்தை பற்றி நல்லாத்தெரியும் அதுனால அவா எதையும் அனிஷாவிடம் சொல்லல.

ரியா அனிஷாவை கூட்டிக்கொண்டு போகவும் திரும்பி பார்த்தாள். அவன்தான் தலையாட்டினான் போ என.

ரியா " நேத்து தேவா சொன்னத பாதிதான் சொன்னேன் .அது அர்ஷாத்து எப்பவுமே உன்னையத்தான் பார்ப்பானாம். ரத்தீஷ்க்கு அது எரிச்சல்போல. பசங்களுக்கு அது தெரிஞ்சிருக்கு . இப்படி எழுதினா இரண்டுபேருக்கும் ஒரே நேரத்துல பிரச்சனை வரனும்னு எழுதியிருக்கான் " 

வீட்டிற்கு வந்ததும் சேரிய கழட்டவே மனசு இல்ல. அர்ஷாத்தோட ரியாக்க்ஷன் தான் மனசுக்குள்ள.

இவன பழம்னு நினைச்சா எப்படிலாம் பேசறான் என சிந்தனை. எப்படி தைரியமா என் கன்னத்தை தொட்டான் எவ்வளவு உரிமையா பேசறான். நா ஏன் பேயடிச்சமாதிரி நின்னேன்.

சாரதா அனிஷாவ கூப்பிடவும் சென்றாள் அங்கு அவர் அனுராதாவுடன் போணில் பேசிக்கொண்டிருந்தார்.பெரியம்மா உன்கிட்ட பேசனும்னு வெயிட் பண்றாங்க நீ என்ன இப்படி மெதுவா வர்ற என சொல்லவும்தான்

அவளுக்கு உறைத்தது.

எப்பவும் புது ட்ரஸ் போட்டா அனும்மாகிட்ட காமிக்க போவா இன்னைக்கு போகவே இல்ல.

அவங்கிட்டபேசி சமாதானப்படுத்தினால்.

எப்படி மறந்தேன் அனும்மாவ

இவன் என்ன மாற்றுரானே தலையபிடிச்சிட்டு உட்கார்ந்தாள்.

எப்போ தூங்கினானுத் தெரியல சாரதா எழுப்பவும்தான் எழும்பினாள். இன்னைக்கு பிராக்டிக்கல் எக்ஸாம்க்கான மாடலும் டவுட் கிளியரிங்கும் இருக்கு அவசரவசரமாக கிளம்பினாள்.

காலேஜ்க்கு போகும்போதே மனசுக்குள்ள நெருடல். இன்னைக்கு லேப்லதான் இருக்கனும்.

  இருக்கோ அந்தந்த கன்சர்ன் பிரஃபசர்ங்க கிட்ட கேட்கலாம் என ஸ்டுடண்ட்ஸ்கிட்ட சொல்ல சொன்னார்.

இவளும் சொல்லிட்டு பர்ஸ்ட் டேபிலில் இருந்த ஒரு ரெக்கார்ட் எடுத்திட்டுப்போயிட்டா.

ரியா " உன் ரிக்கார்ட் இங்க இருக்கு இது யாரோடது "

அனிஷா கையில இருந்த ரெக்கார்ட்ட பார்த்தா அது அர்ஷாத்தோடது

" ச்ச்ச நான் கையில ரெக்கார்ட்ட கொண்டுப்போண ஞாபகத்துல எடுத்திட்டு வந்திட்டேன் " என தலையில் கை வைத்துக்கொண்டாள்.

அவள் திரும்பி பார்க்கவும் அவன் இவளத்தான் பார்த்து லேசா வெட்கம் கலந்து சிரித்தான். அவன்கூட இருந்த பசங்க இதத்தான் சொல்லிக்காட்டி சிரித்தனர்.

அனிஷா மெதுவாபோய் ரெக்கார்ட் நோட்ட வைக்கறதுக்குள்ள

தேவா " உன்னோட உரிமை பொருள்தான் அதுக்குன்னு இப்படியா எடுத்திட்டுப்போவ. எக்ஸாம் முடிஞ்சி தருவான் வாங்கி பத்திரமா வச்சிக்கோ " என அவள கடுப்பேத்தினான்.

அனிஷா " வாய மூடுறா தேவாங்கு" எனஅந்த ரெக்கார்ட் நோட்டு வச்சே அவன் தலையில நாலு போட்டா.

இவங்க இரண்டுபேரும் ஒரு சந்தோஷ மனநிலையில் இருக்க. ஒருத்தன் மட்டும் மனசு நிறைய வஞ்சனையோட பார்த்திட்டிருந்தான்

மதியம் சாப்பிடும்போதுதான் கீர்த்தனா அவ பக்கத்துல உட்கார்ந்தாள். இவளுக்கு புரிஞ்சிது ஏதோ விசயம் இல்லாம கீர்த்தனா இப்படி வரமாட்டா. கீர்த்தனா கொஞ்சம் நேரம் அனிஷாவ பார்த்திட்டிருந்தாள். அனிஷா

தலையகுனிந்துக்கொண்டாள்.

கீர்த்தனா " முடிவு பண்ணிட்டியா. இது விளையாட்டு இல்ல. நீ அப்படி விளையாட்டா எதுவும் செய்மாட்டனு எனக்குத்தெரியும்.

அவனையும் நினைச்சி பார்த்துக்கோ பாதியில விட்டுட்டு போறதாயிருந்தா அவன் பாவம் எதுனாலும் யோசிச்சிக்கோ "

அனிஷா " சரியா தெரில.முடிவு அப்படின்னா உறுதியா இருப்பேன்.எனக்கும் யோசிக்கனும் "

எழும்பி திரும்பவும் லேப்குள்ள வந்தாள்.இப்போ எக்ஸாம் நல்லமுடிக்கனும் பிறகு யோசிக்கலாம் என தள்ளிவைத்தாள். கவனத்தை பிராக்டிக்கல்ஸ்ல திருப்பினாள்.

சிறிது நேரம் கழித்து எதுவோ புகையிர வாசனை அனிஷா உணரவேயில்லை.

அனி என சத்தமிட்டுக்கொண்டே அர்ஷாத் ஓடிவந்து டபுள் மேஜயை அநாயசமாக தாண்டி அவளை பிடித்து அவனோடு சேர்த்து இழுத்து விழுந்திருந்தான் ,எல்லாரும் சுதாரிக்கும் முன் .

அனிஷா பார்த்துக்கொண்டிருந்த சர்க்கியுட் வெடித்து சிதறியது அதில் அவளின் இடதுகையில் காயம். அவனின் முதுகுப்பகுதியில் சிதறிய சிறுசிறு காயத்தோடு வலதுகையில் காயம்பட்டது.

ஆட்டோமேடிக் ஷாக் சிஸ்டம் இருந்ததுனால கரண்ட் தானாக கட் ஆனது. அர்ஷாத் அவளை பிடித்து இழுக்கவும்

என்வென்று புரியாமலயே அவனை இறுக்கமாக பிடித்திருந்தாள். வெடித்து சிதறியதும் தான் வீரியம் உணர்ந்தவள் அப்படியே அவனுக்குள்ளாகவே ஒடுங்கினாள்

எப்படி பருந்தைக்கண்ட கோழிக்குஞ்சு தன் தாயின் சிறகுக்குள் ஒடுங்குமோ அதுபோல அவள் உடம்பு பயத்தில் வெடவெடவென நடுங்கியது.

அதை உணர்ந்தவன் அவளை இன்னும் தனக்குள் இறுக்கினான்.

அவனுக்குமே அதிர்ச்சித்தான் அவன் கொஞ்சம் கவனக்குறைவா இருந்திருந்தாலும் அனிஷாவின் நிலை யோசிக்கவே பயம்.

மாணவர்கள் எல்லோரையும் வெளியேற்றிருந்தனர் இப்போது.

அவள் இன்னும் அவன் கையில்தான்.

அர்ஷாத் அவளை ஆசுவாசப்படுத்தி அவனிடமிருந்து விலக்கிப்பார்த்தான் முடியல. இன்னும் பயத்தில் நடுங்கி நிற்கவே முடியல கண்ணை இறுகமூடியிருந்தாள்.

எல்லாரும் வரவும் இப்படியே நிக்கமுடியாதே. அவன் அவள மெதுவா வெளிய தூக்கிட்டு வந்து உட்கார வைக்கவும் ரியாதான் ஓடிவந்தாள் அங்க தண்ணிக்கேட்டு குடிக்க குடுத்தான். தண்ணியக்கூட பிடிச்சி குடிக்கமுடியல அதையும் இவன்தான் வாயில் குடுக்க .ம்ஹம் ..

ரியா ஒருபக்கம் அர்ஷாத் ஒருபக்கம் அவ இடது கையில இரத்தம் வந்திட்டுருந்தது. அர்ஷாத் வலதுகையின் பின்பக்கம் காயத்தை அவ இன்னும் கவனிக்கல.

பர்ஸ்ட் எய்ட் குடுத்து பக்கத்துல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க.

இவங்க இரண்டுபேருக்கு மட்டுந்தான் காயம். அனிஷா,அர்ஷாத் வீட்டிற்கு தெரியபடுத்திருந்தனர்.

காலேஜ்ல எல்லாரும் கூடியிருந்தனர்

ஈ.சி.ஈ. டிபார்ட்மண்ட் எச்.ஓ.டி .பேசினார் இது தற்செயலாக நடந்தது இல்ல. ஏன்னா அனிஷா ரொம்ப கவனமா இருக்ககூடிய பொண்ணு.

என்னவோ நடந்திருக்கு...

 நடந்தது என்ன?

அத்தியாயம் - 12

உன் வாசத்தையும்

சுவாசத்தையும்

ஒரு முறையேனும் என்

நுரையீரலில் முழுவதுமாக

நிரப்பிக் கொள்ள வேண்டும்!

ஆனந்தராஜியும்,ஜெயராஜிம் விசயம் கேள்விபட்டு உடனே கிளம்பி ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர் .அவங்களப்பார்த்த உடனேதான் ரெம்ப அழுதா. அர்ஷாத் பக்கத்து பெட்ல படுத்திருந்தான்.

அவனுக்கு இப்போ இவா பக்கத்துல போக முடியாது. அவளுக்கு வலி அதையும்விட பயம் .

எதாவது ஆகிருந்தா. இப்படி நினைச்சு நினைச்சுத்தான் அழுகை.

 கல்லூரி முதல் நாளிலிருந்தே அனிஷா எங்கயிருந்தாலும் அர்ஷாத் பார்வை அனிஷாகிட்டதான் இருக்கும். அது யாருக்கும் அவ்வளவா தெரியாது. ரத்தீஷ் பிரச்சனை செய்ததிற்கு அப்புறந்தான் அது லேசா பசங்களுக்கு தெரிய ஆரம்பிச்சது. இப்போதான் அது எல்லோருக்கும் தெரிஞ்சது.

விசாரனையில் ரத்தீஷ்தான் எல்லாரும் சாப்பிடபோன நேரத்தில் மொத்தமா யாருக்கும் தெரியாம சர்க்யூட் கனக்க்ஷனை மாத்திவிட்ருக்கான்.

கல்லூரி நிர்வாகம் அவனை கல்லூரிய விட்டே நீக்கியது.

இடையில் ஒரு மாதம் அனிஷா காலேஜ்க்கே வரலை. ஏன்னா அனிஷா வீட்டில் பயந்தார்கள் ரத்தீஷ்னால எதாவது பிரச்சனை வந்திருமோவென.

அர்ஷாத்துதான் அவள பார்க்கம ரெம்ப கஷ்டப்பட்டான். அனிஷாக்கு என தனியா போன் இல்லை, போன் செய்தும் கேட்க முடியாது.

எக்ஸாம்ஸ்க்கு மட்டுமே வந்தவள், அவங்கப்பா கூடவே வந்து கூட்டிட்டு போயிடுவாங்க. இதனால பார்த்து பேசறதுக்கும் வாய்ப்பில்லை.

இரண்டு மாத கல்லூரி விடுமுறை முடிந்து மூன்றாமாண்டு முதல் நாள் அர்ஷாத் அனிஷாவத் தேடினான் வரல. ரியாகிட்ட கேட்டா தெரியாது பைத்தியம் பிடிக்காத நிலைதான் அவனுக்கு.

அடுத்தவாரம் வகுப்பிற்கு உள் நுழையவும் அங்கு அனிஷா உட்கார்ந்திருந்தாள் அர்ஷாத்க்கு அவ்வளவு சந்தோஷம்.

 

கண்ணுலயே கேட்டான் எப்படி இருக்க என. அவளும் தலையசைத்து கண்ணாலே பதில் சொல்லவும் பக்கத்துலயிருந்த ரியா " என்னடா நடக்குது இங்க " என கேட்கவும் இரண்டுபேருமே சிரித்திருந்தனர்.

இரண்டுநாள் இப்படியே போனது.

மூன்றாம் நாள் மதியம் அர்ஷாத் கை காமிச்சி வெளியே வா என அனிஷாவிடம் சொல்லவும்.

அவதான் " தன் கைகளை விரித்து எதுக்கு என சைகை செய்தாள் "அர்ஷாத் ஒன்னுமே சொல்லாம போயிட்டான்

இவளுக்குதான் என்ன செய்யவெனத் தெரியாமல். சிறிது நேரங்கழித்து வெளியே சென்று அவனைத்தேடினாள் எங்கப்போனான் எனத்தெரியல .

திரும்பிபோக எத்தனித்தவள் காதுல பேசினான் " ஓய் ரௌடி "

பயந்து திரும்பியவளை பார்த்து பின்னாடியே வா என சொல்லி ஆடிட்டோரியத்தின பின்பக்கம் சென்றவனை பின் தொடர்ந்து சென்றாள்.

இரண்டுபேரும் கொஞ்சநேரம் அமைதியா இருந்தனர் 

அர்ஷாத்" கிட்டதட்ட இரண்டு மாசத்திற்கு மேலாகுது உன்ன பார்த்து ரியாகிட்ட கேட்டா உனக்கு போன் இல்லனு சொல்றா "

அனிஷா " அம்மா ஃபோன் யூஸ் பண்ணுவேன் "

அர்ஷாத் " உங்க அம்மா ஃபோன்ல எப்படி உனக்கு நான் கால் பண்ணமுடியும் "

அனிஷா " நீ ஃபோன் செய்தா அம்மா என்கிட்ட குடுப்பாங்க "

அர்ஷாத் தன்னோட நெத்தில அடிச்சிட்டு " படிப்புல மட்டுந்தான் புத்திசாலி போல. மத்ததெல்லாம நம்மதான் சொல்லிக்குடுக்கனுமா ஐயோ லூசாப்பா நீ. நான் உங்க அம்மா நம்பருக்கு கால் பண்ண முடியாதுமா "

அனிஷா " நீ பண்ணலாம் நான் அம்மாகிட்ட சொல்லி வைக்கிறேன்க்ஷ"

அர்ஷாத் " எப்படி சொல்லி வைப்ப என்னோட லவ்வரு இல்ல இல்ல உங்க மருமகன் எனக்கு கால் பண்ணுவாங்கனா சொல்லுவ "

அனிஷா " ஐய "

அர்ஷாத் " என்ன ஐய அப்போ நான் யாரு உனக்கு . பிரண்ட்னு சொன்ன கடிச்சிவச்சிருவேன் பார்த்துக்கோ "

அனிஷா குனிஞ்சிக்கிட்டே 

" பிரண்ட்லாம் இல்ல"

இதக்கேட்டவுடனே அர்ஷாத் இன்னும் கொஞ்சம் நெருங்கிவந்தவன் அவளை இடித்துகொண்டு நின்றான்.

" அப்போ யாரு? என்ன பார்த்து சொல்லு "

அவனது நெருக்கம் அவளை என்னவோ செய்ய. அவனது நெஞ்சினில் அவள் கைவைத்து தள்ள முயற்ச்சிக்க அவளை பிடித்து தனக்குள் இறுக்கி கொண்டான்.

அர்ஷாத் " ஓய் ரௌடி உனக்கு நான் யாரு " அனிஷா ஒன்னுமே சொல்லாம அவனிடம் இன்னும் ஒன்றினாள்.

பதில் சொன்னாதான் விடுவேன்.

அனிஷா நிமிர்ந்து அவன பார்த்தவள்

" என்னோட லைஃப் அண்ட் சோல் "

அவ்ளோதான் அர்ஷாத்துக்கு இருந்த கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடும் விடுபட்டுப்போச்சிது

அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தி இதழ்களில் தன் காதலை சொல்ல ஆரம்பித்தான்.

அவள் மூளை வேண்டாம் என்க அவள் உடலோ அவனோடு பசையாக ஒட்டிக்கொண்டது.

இளம்பருவமல்லவா அர்ஷாத் தன்கரங்களால் இன்னும் இன்னும் அவளை தனக்குள் கொண்டுவர முயற்சி செய்தான்.

அனிஷாவோ இப்போது மாயலோகத்தில் இருப்பதுபோல உணர்ந்தாள்.

என்னமாதிரியான உணர்விது. தன் கரங்களை அர்ஷாத்தின் முதுகோடு அவனது தோளையும் சேர்த்து பிடித்துக்கொண்டாள்.

சிறிதுநேரம் சென்று அவள் உடல் தோய்வதை உணர்ந்தவன் அவள் இதழ்களை விடுத்து அவளைப்பார்க்க. அனிஷவோ கண்களை திறவா நிலையில்.

காதல்கொண்ட மனது ,முதல் தொடுகை மூளை சொல்வதை உடல் கேட்கவில்லை.

அர்ஷாத் மீண்டுமாக அவள் கன்னங்களை கடித்து முத்தமிட்டான்.

இரு கன்னங்களையும் மாற்றி மாற்றி முத்தமிட்டான்.

உடல் இன்னும் தேடலை அவளில் தொடங்க அவன் கைகள் அவள் பெண்மையை முற்றைகையிட அனிச்சைசெயலாக தடுத்து பிடிக்கவுமே அர்ஷாத் மூளை உணர்ந்து மெதுவாக அவளை விடுவித்தவன்.

 " அனிமா இங்கப்பாரு " என அழைக்கவும். அவள் உடல் அவனிடம் இன்னும் நெருங்கியது.

அர்ஷாத் தெளிந்தான். சும்மா இருந்த பச்சைபிள்ளைய இப்படியாக்கிட்டியடா (ஆமா அனிஷாவை விட அர்ஷாத் மூன்று வயது பெரியவன்.) என மூளை உணர்த்த அனிஷாவின் கன்னத்தை தட்டி " அனிமா வா கிளாஸ் போகலாம் " என அழைக்கவும் கண் திறந்தவளை பார்த்தவன் புரிந்தான் அவள் இன்னும் தெளியவில்லை என.

தன் பின்னங்கழுத்தில் கைவைத்து அழுத்தி என்னடா செய்துவச்சிட்ட என நினைத்து அவளை விடுவிக்க அவள்விடவில்லை.

அவனுக்குத்தான் கஷ்டமா போச்சுது.

அவள் இன்னும் அவனிடமிருந்து கையை எடுக்கவில்லை.

இங்கப்பாரு என சொல்லவும் அவ பார்த்தாள். அவள் பார்வையிலயே தெரிஞ்சது அவனுக்கு அவ்வளவு காதலையும் கண்ணுல தேக்கியிருந்தாள்.

போனவாரம் ரியாகிட்ட கேட்டேன் உங்க வீட்ல வேற காலேஜ்க்கு மாத்தப்போறங்கன்னு சொன்னாங்கனு சொன்னா. உன்ன இனி பார்க்கவே முடியாதோனு நினைச்சேன்டா.

அதுதான் இன்னைக்கு தனியா பேசனும்னு கூப்பிட்டேன்.

அனிஷா " ஆமா நான்தான் இங்கதான் படிப்பேனு பிடிவாதம் பிடிச்சு வந்துட்டேன் "

அர்ஷாத் " எனக்காகத்தான " எனச்சொல்லி அவள் கண்களில் முத்தமிட்டவன்.

இருவருக்கமிடையே நாடகத்தனமான எந்த உளறல்களும் இல்லை அதைவிட புரிதல் இருந்தது.

நீ கிளஸாசுக்குப்போ நான் பின்னாடி வர்றேன் என சொல்லவும். தலையை ஆட்டியவள் கிளம்ப என்ன நினைத்தானோ மறுபடியும் அவளை இழுத்து அனைத்து அவள் இதழ்களில் அழுத்தமாக முத்திரை பதித்தேவிட்டான்.

அவள் செல்லவும் தீர்மானம் பண்ணிக்கொண்டான் இனி தனியா பேசக்கூடாது. கைகாலெல்லாம் நம்மள மீறி செயல்படுது என சொல்லிக்கொண்டவன் கிளாஸ்க்கு சென்றான்.

காலேஜ் முடிஞ்சி வீட்டுக்கு சென்று நின்றது ஜீவாகிட்டதான் " டாக்டரு ".

ஜீவா " என்ன பாப்பா "

அனிஷா " எவ்வளவு சம்பளம் வாங்குற "

ஜீவா திரும்பி என்னடா சம்பளம்லா கேட்குற.

அனிஷா " எனக்கு ஒரு செல்போன் வாங்கனும் அதுதான் "

ஜீவா "ச ரி வாங்கித்தர்றேன் வீட்ல கேட்டுட்டு சரியா "

அனிஷா " ம்கும் அப்போ வாங்கின மாதிரித்தான் “

அனிஷா " நீயா வாங்கித்தா. யாருக்கிட்டயும் கேட்க வேண்டாம்."

ஜீவா " சரி நாளைக்கு சாயங்கலம் போயி வாங்கிக்கலாம் "

அனிஷா வாயெல்லாம் பல்லாக சரி எனத்தலையாட்டினால். கள்ளத்தனம்

மனதில் வந்திட்டு.

செல்போன் வாங்கியதும் தினமும் தொடர்ந்தது தகவல் பரிமாற்றம்.

இரவு நேர கொஞ்சல்கள் கெஞ்சல்கள் என நாட்கள் சென்றது.

மூன்றாம் ஆண்டில் புதியதாக ஒரு ப்ரஃபசர் அர்ஜீன் வந்து சேர்ந்தார் எச்.ஓ.டி மாணவராம். வந்த முதல் நாளே ரியா அவர் கிளாஸ்ல உட்கார்ந்து அவரத்தான் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள்.

அனிஷா " ரியா என்னது இப்படி பாக்குற."

ரியா " நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்க கிழபோல்டுலாம் வெரி போரு.இவர் அழகா இருக்காரு சைட்டு அடிக்கிறேன் என சொல்லி. தினமும் அவரை பார்த்து பார்த்து ஓட வைக்குறதே இவளோட வேலையா இருந்திச்சி.இவங்க எல்லோரட நட்பும் இப்போ ரெம்ப ஸ்ட்ராங்க் ஆகிட்டு.

இப்படியே சந்தோஷ மனநிலையிலயே

மூன்றாம் ஆண்டும் கடந்து இறுதியான நான்காம் ஆண்டும் வந்தது.   

நான்காம் ஆண்டு இறுதியில் இருந்தனர் இப்பொழுது. படிக்கறதில் அர்ஷாத்திற்கு உதவியது முழுவதும் அனிஷாதான். ஏனெனில் ஏற்கனவே மூன்று வருடம் .பி.எஸ்.சி படித்திருந்தான் அதுல அவ்வளவு பாடத்திலயும் கோட்டைய விட்டிருந்தான்.

அவனுக்கு இஞ்ஜினியரிங்க் தான் விருப்பம். அவங்க அப்பா தொழில் பார்க்க இது போதும் என சொல்லி பி.எஸ்.சி சேர்த்துவிட்டிருந்தார்.

சிறியதாக செங்கல் சூளை இருந்தது பின்னாடி அத இவன்தான் எடுத்து நடத்தனும் என அவர் நினைத்திருந்தார். 

அவனுக்கு பிடிக்கலைன்னா சண்டையெல்லாம் போடமாட்டான் அமைதியா இருந்தே சாதிப்பான்.

அவனோட அப்பா அர்ஷாத்தின் பிடிவாதம் தெரிந்து அவனை இந்த கல்லூரியில் அவனுடைய விருப்பத்தின்படி சேர்த்துவிட்டார்

அதனால அவனுமே இப்போழுது படிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கினான் பிற்கால வாழ்க்கைக்கு என.

 தனியா சந்திக்கவில்லை ஆனாலும் அடிக்கடி பக்கத்தில் யாரும் இல்லையென்றால் அவளுக்கே தெரியாமல் மெதுவாக கன்னத்தில் ஒரு மென்னொற்றல் கொடுத்து மீண்டுவிடுவான். அவள்தான் அதனிலிருந்து மீள பாடாய்படுவாள்.

இந்த நேரத்தில் தான் ஜெபா திருநெல்வேலிக்கு வேலைமாற்றமாகி வந்தவன் அடிக்கடி ஊருக்கும் ,காலேஜ் வர ஆரம்பித்தான்.

திடீரென அர்ஷாத் ஒரு ஒருவாரம் காலேஜ்க்கு வரவும் இல்லை எந்த தகவலும் இல்லை.

போன் செய்தா அது ஸ்விட்ச்டு ஆஃப்.

ரெம்ப கலங்கிப்போயிட்டா யாருக்கிட்ட கேட்க.

சந்துருவிடம் சென்ற அனிஷா " சந்த்துரு எனக்கு ஒரு உதவி. அர்ஷாத் ஏன் வரலனு கேட்டு சொல்லமுடியுமா " அதுக்குள்ளாகவே அவளுக்கு கண்ணீர் முட்டி வந்தது.

 அடுத்த நாள் அவன் வந்து " அர்ஷாத்துக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை .அவனோட போன் அவங்க அம்மாகிட்டயிருக்காம்.அடுத்த வாரம் வந்திருவான்"

அவளுக்கு மனசே சரியில்லை. அவளுக்கே தெரியல அவளை சுற்றி என்ன நடக்கு என.

ஒருவாரம் கழித்து கல்லூரிக்கு வந்தவனது முகமே சரியில்லை.அவளும் வந்தவுடனே அவன் முகத்தைதான் பார்த்திட்டிருந்தாள்.

அவன் கண்ணை காமிச்சு பிறகு பேசலாம் என சொன்னாலும் இவளுக்குத்தான் மனதிற்குள் ஏதோ பிரச்சனைனு தோணுச்சிது.

லஞ்ச் பிரேக்ல வெளியபோயி அவன்கிட்டப்போனாள். அவன் பக்கத்துல உட்கார்ந்தவள்.அவன் முகத்த முகத்த பார்க்கவும்.

அர்ஷாத் " அனிமா எனக்கு ஒன்னுமில்ல கொஞ்சம் உடம்பு சரியில்லடா சந்த்துருகிட்ட சொல்லிவிட்டனே "

அனிஷா ஒன்னுமே பேசவே இல்லை அவனை இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள். அவனுக்கே அவள பார்க்க பாவமா இருந்தது. ஒழுங்கா இருந்த பிள்ளைய இபபடி ஆக்கிட்டோம் என சங்கடப்பட்டான்.

" ரௌடி இப்போ என்னாச்சினு இப்படி இருக்க ரெம்ப பக்கத்துல வராத .பிறகு கடிச்சி வச்சிருவேன் என அவளை நார்மலாக்க முயற்சித்தான். உண்மையில் பிரச்சனைதான் 

" அனிமா நான் உனக்கு போன் பண்ணமாட்டேன். மெசேஜ் செய்யமாட்டேன் இங்கயும் நம்ம அடிக்கடி பார்த்துக்க வேண்டாம் சரியா நம்ம படிப்புல கவனம் வைப்போம் " சொல்லிமுடிக்கல

அனிஷா " என்ன " அவளுக்கு அதிர்ச்சி 

" ஏன் ஏன் எதுக்கு என்னாச்சி " என பதற்றமானாள்.

அர்ஷாத் " ஒன்னுமில்லடா நல்ல படிச்சி எனக்கு வேலை கிடச்சாதான.நம்ம லைஃப்க்கு நல்லது அதுதான்டா சொன்னேன் "

எப்படியோ சமாளிச்சி அனுப்பிவச்சான்.

சந்த்துரு உண்மைய சொல்லவேண்டியதுதான எனக்கேட்க.

அர்ஷாத் " இப்போ வேண்டாம் பயந்திடுவா. பார்க்கத்தான்ட தைரியமா இருக்கா.உள்ள நொறுங்கிடுவா, தாங்கிக்கமாட்டா பார்க்கலாம். நீயும் எதுவும் சொல்லவேண்டாம் "

வீட்டிற்கு போனவள் அப்படியே தூங்கிவிட்டாள். பேச்சு சத்தம் கேட்கவும் எழும்பிவந்தவள் பார்த்தது ஜெபா ஹாலில் இருந்தான். அவள் போன் அவன் கையில்.

ஜெபா " வா பாப்பா என்ன படிக்க ஒன்னுமில்லையா, தூங்கிட்ட "

அனிஷா " எல்லாம் படிச்சிட்டேன் ணா "

ஜெபா " பாப்பா இதுதான கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட் எங்க பண்ணப்போற. சென்னை போறியா அங்க பண்ணு. நான் பெர்மிஷன் வாங்கித்தர்றேன் "

அனிஷா "அவசர அவசரமாக இல்ல நான் இங்கயே பண்றேன் "

ஜெபா " உன் ஃபோனை நா எடுத்துட்டு போறேன் எக்ஸாம் முடிஞ்சித் தர்றேன் "

அனிஷாக்கு நல்லத்தெரிந்தது என் விசயம் எதுவோ அண்ணனுக்கு தெரிஞ்சிருக்கு.

  

அடுத்த நாள் ஜெபாதான் அவளை காலேஜ்ல இறக்கிவிடவும் அர்ஷாத் அந்தப்பக்கமா வரவும் சரியாக இருந்தது.

ஜெபா அர்ஷாத்தை பார்த்த பார்வையிலயே அவ்வளவு வெறுப்பைக் கண்டாள் அனிஷா.

இவளுக்கு இப்போ உறுதியாகிட்டு

அண்ணா ஏதோ செய்து வச்சிட்டான் என.

அனிஷாவுக்கு கிளாஸ்ல இருக்கவே முடியலை. இரண்டு மணிநேரம்கூட கடந்திருக்காது. தலைவலி ரெம்ப யோசிக்கவும் முடியல அப்படியே பெஞ்சில் படுத்துவிட்டாள்.

ரியா " அனிஷா வா கேண்டீன் போயி காஃபி குடிச்சா கொஞ்சம் சரியாகும் வா " என அழைத்து வர்திருந்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் அர்ஷாத் வந்து நின்றான்.

" என்னாச்சிடா "

அனிஷா " முடியல தல வலிக்கு "என சொல்லவும். வாட்ச்மேனிடம் சொல்லி மாத்திரை வாங்கிக்கொடுத்தவன் அருகே அமர்ந்த்து " என்ன ரெம்ப யோசிக்கியா "

அனிஷா " ம்ம்ம் "

பெரியவங்கன்னா அப்படித்தான் விடு.

நம்மதான் பார்த்து நம்ம சைடு ஸ்ட்ராங்கா நின்னு சாதிக்கனும்.

ரெம்பலாம் யோசிக்காத இந்த வருஷ படிப்பை முடிச்சிடுவோம் சரியா "

அடுத்து அவா கேட்ட கேள்வியில அர்ஷாத் மட்டுமில்ல ரியாவும் கொஞ்சம் ஆடிப்போயிட்டா.

அர்ஷாத்" என்ன சொன்ன " திரும்பவும் கேட்டான்.

அனிஷாதான் அவங்க இரண்டுபேரையும் லூசாயா நீங்க என்ற ரேஞ்சில் பார்த்திருந்தாள்.

ரியா " இந்தக்குட்டிக்கு என்னமோ ஆகிப்போச்சிது. இப்படிலாம் யோசிக்கா.

உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும். யோசிச்சியா "

அர்ஷாத் அனிஷாவை பார்த்திருந்தான் ரெம்ப டிஷ்டர்ப்டா இருந்தா.

திரும்பவும் அதேதான் கேட்டாள் 

" நம்ம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா " என

அதுதான் இருவரும் அதிர்ச்சியிலிருந்தனர்..

         அத்தியாயம் - 13

உன்னை கட்டிக்கொண்டு

உன்னோடு ஒட்டிக்கொண்டு

இப்படியே உறைந்துவிட

பேராவல்.....

அனிஷா " நம்ம இரண்டுபேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா "

அர்ஷாத் " என்ன பேசறடா நீ ,எதுக்கு இப்போ இப்படிலாம் யோசிக்குற "

அனிஷா " ஒரு வாரம் எங்கபோயிருந்த. உன் ஃபோன் எங்க "

அர்ஷாத்" அதான் சொன்னனே உடம்பு சரியில்லனு ஃபோன் அம்மாகிட்ட இருக்கு "

அனிஷா அவன் கண்ணபார்த்துட்டே கொஞ்சம் அழுத்தமா " அப்படியா "

அர்ஷாத் என்ன சொல்ல எனத் தெரியாமல் அமைதியா இருந்தான்.

அனிஷா " எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இது எங்க அண்ணனோட வேலையினு நினைக்கிறேன் "எனச்சொல்லி அவன் முகத்தைப்பார்க்கவும். அவன் அமைதியா பார்த்திருந்தான்.

அர்ஷாத் " வீட்டுக்கு ஒரே பொண்ணு. அதுல நீங்க வசதியான வீடு, வேற சமூகம் படிக்க வந்த இடத்துல நான் உன்ன வேற மயக்கிட்டேனாம் (சிரிச்சான்).

போனவாரம் உங்கப்பாவும் உன் போலிஸ்கார அண்ணனும் வீட்டுக்கு வந்தாங்க கூட நான்கு போலாஸ்காரங்களையும் கார்ல கூட்டிட்டு வந்தாங்க.

அனிஷா இப்பம் ஓடிவந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்

" அண்ணனும் அப்பாவுமா "

அர்ஷாத் " என்னோட செல்போன் எடுத்து எல்லாம் பார்த்திட்டு தூக்கிப்போட்டு உடைச்சிட்டாரு.

அப்பா வீட்ல இல்லை அம்மாதான் பேசினாங்க. உங்க அண்ணனோட மொபைல்ல நம்ம இரண்டுபேரும் சேர்ந்திருக்கற போட்டோ யாரோ அனுப்பிருக்காங்க "

அனிஷா "என்ன வீட்ல தெரிஞ்சிட்டா. என்கிட்ட யாருமே காமிச்சிக்கல.நேத்து என்னோடஃபோன் அண்ணா எடுத்திட்டு போனதுக்கு பிறகுதான் கொஞ்சம் டவுட் வருது"

அனிஷா " அதுக்காகவா ஒருவாரம் வராமா இருந்த "

அர்ஷாத் "அம்மா ரெம்ப பயந்திட்டாங்க. உங்க அண்ணா கொஞ்சம் கைநீட்டிட்டான்.சித்தப்பா பிள்ளைங்கலாம் வந்திட்டாங்க.ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு.

கன்னத்துல உங்க அண்ணன் அடிச்ச தடம் வேறயா அதான் வரல "

அனிஷா ஒன்னுமே பேசாமல் அவன் தோள்ல சாய்ஞ்சி அழ ஆரம்பிச்சிட்டா.எனக்காக அடிவாங்கியிருக்கான் என.

அர்ஷாத் சமாதனம் படுத்தினாலும் முடியல. " இப்படியே அழுதிட்டு இருந்தன நான் போறேன் சொன்ன பேச்சக்கேளு "

" நான் வர்றதுக்கு முன்னாடியே வீட்டுக்குள்ள பிரச்சனைய கொண்டுவந்துட்டேன் இல்ல " எனக்கேட்க.

அர்ஷாத் " காதலிச்சா பிரச்சனை வரத்தான் செய்யும்.இதுக்கெல்லாம் டென்சன் ஆனா எப்படி. அவங்க பக்கமும் நியாயம் இருக்கு. அம்மா என்னையதான் சத்தம் போட்டாங்க. நம்ம வீட்ல உன் தங்கச்சி இப்படினா நீ விட்டுவைப்பியா அப்படினு. "

அனிஷா " திரும்பவும் அதத்தான் கேட்டா. நம்ம ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம். "

அர்ஷாத் " லூசா நீ ,இப்போ கல்யாணம் பண்ணிக்கற வயசா நமக்கு உனக்கு 21 முடிஞ்சிருக்கு ஹான் எனக்கு 24.இப்போ சரிவராது கல்யாணம் முடிஞ்சி என் பொண்டாட்டிக்கு எல்லாமே நானே பார்த்துக்கனும் அப்பா அம்மாவை எதிர்பார்த்து கேட்கமுடியுமா. முதல்ல படிப்ப முடிப்போம்.

இது சின்னபிள்ளைங்க விளையாட்டு இல்ல. பார்க்கலாம் ரெம்ப பிரச்சனை முத்திட்டு அப்படினா.நீ சொல்றமாதிரியே பண்ணிக்கலாம்.

இப்போ கொஞ்சம் பொருமையா இருடா எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் செய்ய முடியாது."

அனிஷா " படிக்குற வயசுல காதல் மட்டும் பண்ணலாம். அப்புறம் வேற எல்லாம் பண்ணலாமோ " எனக்கேட்கவும். அவனுக்கு புரிஞ்சது என்ன சொல்ல வர்றானு பார்வையாலே கண்டித்தான் பேச்சு சரியில்லை என.

தலைகுனிந்து கொண்டாள்.ரியா அங்கயிருக்கவும் அவளைப்பார்த்து அர்ஷாத் " இவள கூட்டிட்டுப்போ பார்த்துக்க " என சொல்லி சென்றுவிட்டான்.

அனிஷாவுக்கு அப்படி ஒரு அழுகை. வீட்ல எதிர்த்து பேசமுடியாது. பயம் என சொல்ல முடியாது எதிர்த்து பேசி சண்டபோட்டு ஆர்ப்பாட்டம் வீட்ல பண்ணது கிடையாது. எப்படி வீட்ல பேசி சம்மதிக்க வைக்க. வேண்டாம்னு நம்மகிட்டயே சொன்னா என்ன பண்றது.

இப்படி கல்யாணம் செய்தாதான் உண்டு. அதனாலதான் ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டா எதுவும் செய்யமாட்டாங்கனு நினைச்சித்தான் கேட்டாள்.

இவன் என்னனா இவ்வளவு பொறுப்பு பருப்பா பேசறான் எனக் கோவம் வந்திச்சி.

அனிஷாவுக்கு உறுதியாகத்தெரியும்.

எப்படியும் வீட்ல அனும்மாவும்,

ஜீவாவைத்தவிர யாரும் இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க.

அர்ஷாத் வீட்டு நிலையும் தெரியும்.

ஜீவாக்கு பொண்ணு பார்க்குறாங்க

அதுக்கே அக்கவும் தங்கச்சியும் இப்படி பாக்குறாங்க நமக்குன்னா அவ்வளவுதான்.

எழுந்து கிளாஸுக்கு போனார்கள்.

இரண்டு வாரமா இரண்டும் கோவத்துல பேசாம சுத்திச்சுங்க.

அவனுக்கு இவள குடும்பத்தவிட்டு எப்படி இப்படி பிரிச்சி கூட்டிவரமுடியும்னு யோசனை.

இவளுக்கு குடும்பத்துல சம்மதிக்க மாட்டாங்கனு இந்த யோசனை. ஆக மொத்தம் பிரச்சனை அவர்கள் எண்ணங்கள்தான்.

இந்த நேரத்தில்தான் ஜெயராஜின் அக்கா ரெமியின் கணவர் தவறிட்டாருன்னு செய்தி வர.

சாருவும் ஜெயராஜிம் புனே போயிட்டாங்க.அனிஷா அனுராதா வீட்ல இருந்துதான் காலேஜ் சென்றுவந்தாள்.

அனுராதா இவ லேசா சுனங்கினாலும் கண்டுபிடிச்சிடுவார். எதுவுமே பேசாம அமைதியாவே இருந்தாள். அர்ஷாத் பேசவும் இல்ல பார்க்ககூட இல்லை. அதுவும் சேர்த்து காலேஜ்ல இருந்து வந்ததும் சோர்ந்து தூங்கிட்டா.

லேசா யாரோ பேசற சத்தம் கேட்கவும் கவனமா கேட்க ஆரம்பித்தாள்.

ஜெபாவும் அனுராதாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

" ம்மா பாப்பாக்கு 21 வயசு முடிஞ்சிட்டுலாம்மா . இன்னும் இரண்டு மூனுமாசத்துல படிப்பு முடிஞ்சிடும்.

அவளுக்கு கல்யாணத்துக்கு பார்ப்போமா "

அனுராதா " பைத்தியம் மாதிரி பேசாத சின்னபிள்ளை இப்பவே கல்யாணம் பேசுறான். "

ஜெபா " நானும் அதுதான் சொல்றேன் சின்னபிள்ளைம்மா. நம்மளே சீக்கிரம் பார்த்து கட்டிக்குடுத்துருவோம் ஏற்கனவே காலேஜ்ல ஒருத்தன் இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே பிரச்சனை செய்தான் நியாபகம் இருக்கா. "

(அவனுக்கு எதையாவது சொல்லி அவ கல்யாணத்தை நடத்தனும் அதுக்கு பிளான் போட்டுட்டான்)நான் ஜெய்ப்பாகிட்டயும் சாரும்மாகிட்டயும் பேசிட்டேன் "

அனுராதா " ஏன்டா இவ்வளவு அவசரம் பிள்ளை மேல படிக்கனும்னு சொன்னாடா "

ஜெபா " பி.ஈ போதும்மா. இப்போ பார்க்க ஆரம்பிப்போம் படிப்பு முடிஞ்சி அடுத்தவருஷம் கல்யாணம் வைக்கிறமாதிரி பார்ப்போம் "

இதற்குமேல் பொருமையா இருக்கமுடியாது என எழும்பினாள் அவங்க பேச்சை நிறுத்தியும் விட்டனர்.

ஜெபாதான் அனிஷாவை பார்த்தவன் தலையைதடவி ஒன்றும் பேசாமலயே சென்றுவிட்டான்.

இராத்திரி தூங்காம இருந்து அழுதாள். அடுத்து என்ன செய்ய அர்ஷாத்கிட்ட பேசனும் என முடிவு செய்து தூங்கினாள்.

அடுத்தநாள் நாள் கல்லூரிக்கு சென்றவள் அர்ஷாத் முகத்த முகத்தைப்பார்த்தாள். 

திடீரென எல்லா வகுப்பிற்கும் நோட்டிஸ் வந்தது கல்லூரி நிர்வாகம் சார்பாக விடுமுறை விடபட்டிருந்தது.

 

எல்லாருக்கும் செம குஷி. வீட்டிற்கு போக ஆயத்தமானவர்கள் பசங்கள்ல சந்துரு ,தேவா,அர்ஷாத் என எல்லோரும் ஏதோ டிஷ்கஷன் செய்துட்டு இருந்தவங்க பிள்ளைங்க இருக்குற பக்கமா வந்து .

 

சந்த்துரு " அர்ஷாத் ஒரு பிளான் சொன்னாப்பா இப்போ எல்லாரும் பீச் போயிட்டு மதியம் எங்கவீட்ல சாப்பாடு அரேஞ்ச் பண்றோம் சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம். போற வழியில அர்ஷாத் வீட்டுக்கும் போயிட்டு போகலாம். இது எங்களோட ஐடியா ."

ரியா " ஹேய் !சூப்பர்ப்பா.இந்தா இருக்குற பீச்சுக்குகூட போகாம நம்ம நாழு வருஷம் இங்க படிச்சிருக்கோம். போவோம்பா எல்லாரும் சொல்லவும் 25 பேரு வர்றோம்னு சொல்லி பீச்சிக்கு நடக்க ஆரம்பித்தார்கள்.

ரியாவும் அனிஷாவும் கடைசியாக மெதுவாக நடந்து செல்லவும் பின்னாடி அர்ஷாத் அவர்களுடன் சேர்ந்து நடந்தான்.

மெதுவாக எல்லோரும் அவர்கள் இருவருக்கும் தனிமைகொடுத்து விலகி நடந்தனர்.

அர்ஷாத் வந்து அனிஷாவின் வலதுகைககுள் தன் இடது கையோடு கோர்த்துபிடித்தான். அவள் நிமிர்ந்து பார்க்கவும் வழக்கம்போல கண்ணடித்தவன் அவளை இடித்துகொண்டே நடக்க ஆரம்பித்தான்.

இதிலே அவளோட மனசஞ்சலம் கொஞ்சம் குறைந்து சநதோஷமாக அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.

பீச்சில கால் நனைக்கிறேன்னு விழுந்துப்புரண்டு மேலலெல்லாம் ஈரம்.

கொஞ்சம் தள்ளி பாறையின் அருகில் நின்று காயவைத்துக் கொண்டிருந்தாள்.

திடீரென அவள் இடையோடு சேர்த்து இருகரம் அனைத்து கொண்டதும். அப்படியே பின்பக்கமாக அவனோடு சாய்ந்துக்கொண்டாள்.

அவளுக்கு இது தேவையாக இருந்தது இப்போது.மனம் தேடுவது இதைத்தான

எப்பவும் பிடிச்சவங்க பக்கத்துல இருக்கும்போது வேற அநாவசிய சிந்தனைகள் வராது.

இருந்த ஈரத்திற்கு அவனின் அனைப்புமே கதகதப்பாக இருந்தது.

அப்படியே இருவரும் சிறிது நேரம் நின்றனர்.

அனிஷா சட்டெனத்திரும்பவும் அவன்தான் நிலைக்குலைந்தான். ஈரமான ட்ரஸ் வேறு உடலோடு ஒட்டி இருக்க அவன் கண்கள்தான் வேறுபாடம் படித்தது.

" மெதுவா திரும்பினா என்னப்பா "

அவள் பெண்மை முழுவதும் அவன்மேலே. அவன்தான் கிறங்கிப்போனான் "

அவன் ஒன்னும்பேசாமல் நிற்க. அவள் இவனிடம் இன்னும் நெருங்கி என்னவென்று கேட்க. அவனும் ஒன்றுமில்லை என தலையசைத்தவன்.

இளமைபித்தம் தலைக்கேற அவள் உதடு லேசாக குளிரில் நடுங்க அவளை இடையோடு இழுத்தனைத்து அவள் உதட்டோடு தன் உதட்டை பூட்டினான். தவித்துப்போனாள் அவளின் உடலில் ரசாயன மாற்றங்கள்.

மெதுவாக அவளை விடுத்தவன் " வார்த்தகளை கவனமா பேசு சரியா. அன்னைக்கு ரியா முன்னாடி எப்படி பேசுற. நமக்கான ரகசியம் நமக்கு மட்டும். இப்போ இல்ல எப்போனாலும் சரியா. அடுத்தவங்கள காயப்படுத்தறது ரெம்ப சுலபம். ஆனா திரும்ப அந்த காயம் மாற கஷ்டம் சரியா "

சரி எனத் தலையசைத்து

கொஞ்சம் தெளிந்தவள் " உங்கவீட்டுக்கு நான் வரனுமா இப்போ. உங்கம்மா எதுவும் சொல்லமாட்டாங்களா,இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு "

அர்ஷாத் "அது ஒன்னுமாகாது உன்ன அம்மாவுக்கும் வீட்ல உள்ளவங்களுக்கும் காமிக்கனும் அதுதான் "

அனிஷா " சரி " எனத் தலையசைத்தாள்.

அர்ஷாத் " ரௌடி இப்படிலாம் என் பக்கத்துல வந்து நிக்காத கடிச்சி திங்கனும் போல இருக்கு உன்ன. பிறகு நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல பார்த்துக்கோ "

அனிஷா " ஹான்" என விழிக்கவும் இப்படி முழிக்காத என கண்களில் முத்தமிட்டவன்

என்ன ஹான் இருக்கற பிரச்சைனையில இது வேற கூடுதலாகிடும் பாரு. அப்பறம் பிள்ளக்குட்டியோடத்தான் கல்யாணம் பண்ணிக்கனும். ஏற்கனவே உங்க நொன்னனுக்கு என்மேல ரெம்ப நல்ல அபிப்பிராயும். இதுல இப்படின்னா அவ்வளவுதான் என சொல்லி சிரித்தான் 

இப்போதுதான் வீட்ல நடந்த பேச்சுக்களை சொன்னாள்.

அர்ஷாத் சொன்னான் உங்க அண்ணன் உன்ன பயமுறத்ததான் அப்படி பேசிருப்பான். கண்டிப்பா இப்போலாம் உனக்கு கல்யாணத்துக்கு பார்க்க மாட்டாங்க பயப்படாத.

அனிஷா " எப்படி சொல்ற "

அர்ஷாத் " பேசறவங்க சரியா உன் ரும்ல வந்துதான் பேசவாங்களா.நீ இப்படி யோசிச்சா நாங்க வேற மாதிரி செய்வோம்னு உன்ன பயப்படுத்துறாங்கடா. விடு பயப்படாத சொல்லிட்டேன்ல பார்த்துக்கலாம் "

விலகிப்போனாள் "ஏய் ஏன் விட்டுப்போற என மறுபடியுமாக அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்தான் "

அதற்குள்ளாக பிரண்ட்ஸ் எல்லோரும் வரவும் கிளம்பி அர்ஷாத் வீட்டிற்கு வந்தனர்.

எல்லாரும் உடனே உள்ளே செல்லவும்.

அனிஷா சிறிது பின்தங்கினாள்.

அர்ஷாத் திரும்ப வந்து அவளை வரச்சொல்லி இருவரும் ஒன்றாகவே வீட்டிற்குள் நுழையவும் பிரண்ட்ஸ் எல்லோரும் சத்தமாக இருவரின் பெயரைச்சொல்லி சந்தோசப்பட்டனர்.

உள்ளே இருந்து வந்த கவிதா இவர்கள் இருவரையும் பார்த்தே நின்றார். கவிதாவின் பார்வை முழுவதும் அனிஷாவின்மேல.

அனிஷா தனக்குள் கொஞ்சம் ஒடுங்கி அர்ஷாத்தின் கைளைப்பிடித்துக்கொண்டாள்.

அர்ஷாத்தின் தங்கையும் அம்மாவும் அனிஷாவைத்தான் பார்த்த பார்வையே சரியில்ல.

கொஞ்சநேரங்கழித்து அவனோட சித்தப்பா இரண்டுபேரோட பிள்ளைங்களும் மெதுவா வீட்டுக்கு வர்றமாதிரி வந்து அனிஷாவைத்தான் பார்த்திருந்தனர்.

எல்லோருக்கும் குடிக்க சூடா கஃபி கொண்டுவந்து குடுக்கவும் அனிஷாவுக்கு குடுக்கும்போது மட்டும் அவனோட தங்கை கோவத்துல இருந்தமாதிரி இருந்தது.

அனிஷா அர்ஷாத்தைதான் பார்த்திருந்தாள். இவளுக்குத்தான் சகஜநிலை வரல. இப்படியே அமைதியாக இருக்கவும்.

அர்ஷாத் மெதுவாக வந்து அவளருகில் அமர்ந்தவன் அவளது காதில் மெதுவாக " அம்மாகிட்ட பேசலையா "

அனிஷா " பயமாயிருக்கு "

அர்ஷாத் " ச்ச் என்ன பயமா. இந்த ரௌவுடிக்கா பயம், சரிதான் " என சொன்னவன். அனிஷாவின் கையப்பிடித்து எழுப்பி கவிதாவிடம் கூட்டிச்சென்றான்.

அர்ஷாத் " ம்மா இதுதான் அனிஷா. நல்ல பார்த்துக்கோங்க பிறகு மருமகள சரியா பார்க்கலன்னு என்கிட்ட சொல்லக்கூடாது " என சிரித்துகொண்டே சொன்னான்.

கவிதா அவளைப்பார்த்து பேருக்குத்தான் சிரிச்சார். அனிஷாவிற்கு அவர்களது பார்வையே ஒரு பயத்தை குடுத்தது.

சிரித்துக்கொண்டே அங்கிருந்து வந்து ரியா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு மனசுக்குள்ள நெருடல் படபடப்பு அவங்க கண்டிப்பா சம்மதிக்கமாட்டாங்க என தோன்றியது.

சாப்பாட்டுக்கு நேரமாகவும் சந்த்துரு எல்லோரையும் அழைத்துக்கொண்டு அவங்க வீட்டுக்கு போனான்.

அங்க அவ்வளவு சந்தோஷமா எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டாட்டமாக இருந்தது அவர்களுக்கு.

சந்த்துருவின் அம்மா அப்பா தங்கை என எல்லோரும் அன்பா பார்த்துக்கிட்டாங்க

ஒரு மூன்று மணி அளவில் எல்லோரும் கிளம்பவும் . அனிஷாவுக்கு காலேஜ் பஸ் வராது. பஸ்ல போறேன்னு சொல்லவும். அர்ஷாத் சொன்னான் இரு நான் வண்டில கொண்டுவிடுறேன்னு சொல்லவும்.

அத்தனைபேரும் அர்ஷாத்த பார்த்து இன்னைக்கு லீவே அனிஷா அர்ஷாத்துக்குதான் போல. நீ நடத்து நடத்து என அவங்க இரண்டுபேரையும் செமயா கிண்டல் பண்ணாங்க.

அர்ஷாத் வண்டியிலதான் அனிஷாவைக் கூட்டிக்கொண்டு போனான்.

போகும்போதே அனிஷா ஏன்னுத் தெரியமலயே அவன அவ்வளவு இருக்கமா கட்டிக்கிட்டு அமர்ந்த்திருந்தாள். அவ்வளவு சந்தோஷம் அவங்க இரண்டுபேருக்கும்.

அனிஷா " என்ன பார்வதிபுரம் பஸ்டாண்ட்ல விட்ரு நான் சர்குளர் பஸ் பிடிச்சி வீட்டுக்கு போயிடுவேன் "

அர்ஷாத் " ஆமா அதுவரைக்கும் வர்றவனுக்கு உங்கவீட்ல கொண்டுவிடத்தெரியாதா. வழி சொல்லு என் மாமனார்வீடடுக்கு.

கொண்டுவிடுறேன் நாளை பின்ன வந்திட்டுப்போகவேண்டிய இடம் தெரிஞ்சிவச்சிக்கறது நல்லது "

அனிஷா " மாமனார் உன்ன மாமியார் வீட்டுக்கு அனுப்பாம இருந்தா சரி "

அவள் வீட்டிற்கு சிறிது தள்ளி வண்டியநிறுத்தி போகச்சொன்னான்.

 இரண்டு பேருக்கும் அவ்வளவு சந்தோசம் மனசுக்குள்ள

ரெம்ப சிரிச்சி சந்தோஷமா இருந்தா பெரியவங்க சொல்லுவாங்க.

' ரெம்ப சிரிச்சீங்கன்னா பின்னாடி பெரிய துக்கமும் வரும் என '

அதேதான் இங்கயும்.

ரெம்ப ரெம்ப சந்தோஷமான மனநிலையில் வீட்டிற்கு சென்றவள்.

அனுமாக்கிட்ட ரெம்பநேரம் பேசிட்டிருந்தாள்.

சாயங்காலம் ஜெபா வந்தவன் எனக்கு லீவ் முடிஞ்சிட்டு நான் ட்யூட்டிக்கு கிளம்பறேன் கிளம்பினான்.

  

ஒருவாரம் கழித்து புனே செல்லும் பிளைட்டில் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள்.

                    அத்தியாயம் - 14

அனைத்து உறவுகளும்

எனைச் சூழ்ந்திருக்க

வெறுமையாய் உணர்கிறேன்

உன்னால்!!

அனிஷா புனேக்கு போகிற ஃபிளைட்ல உட்கார்ந்திருந்தவள் அழுதுகொண்டிருந்தாள்.

அன்று ரெம்ப சந்தோஷமான மனநிலையில் இருந்தவளிடம் ஜெபா வந்தான்.

வந்தவன் அவனோட மொபைல்ல இருந்த சில படங்களை அனிஷாவிடம் காமிக்கவும் பார்த்து பதறியவள் அண்ணனைத்தான் பார்த்தாள்.

எப்படி இது யாரு எடுத்திருப்பா. அதுவும் அண்ணனுக்கு இத அனுப்புற அளவுக்கு எதிரி யாரு. அவளுக்கு அவளை நினைத்து பயமில்லை.

அர்ஷாத்த இவங்க எதாவது பண்ணிடுவாங்களோ என பதறியவள்.

" அவன் மேல தப்பில்லை ணா நான் நான்தான் அங்கபோனேன் "

ஆம். அந்த போட்டோ பீச்ல அர்ஷாத்து அனிஷாவிற்கு முத்தம் கொடுக்கும்போது எடுத்தது.

முன்பும் இதே மாதிரி வந்த போட்டாவாலதான் அர்ஷாத் வீட்டிற்கு சென்று எச்சரித்தது.

ஜெபா கண்டுபிடிச்சிட்டான் அது யாரு என்று. இருந்தும் எதுவும் செய்யாம விடடான் என்றால் அனிஷா விசயமா இவனுக்கு நீயூஸ் தேவைப்படுது.

பாப்பா படிப்பு முடியட்டும் அவன பார்த்துக்கலாம் என விட்டுவிட்டான்.

அதே நம்பர்ல இருந்துதான் இப்போ போட்டோஸ் வந்திருக்கு. அடக்கபட்ட கோவத்துல வந்தவன் அனிஷாவிடம் அதை காண்பித்தான்.

வீட்ல யாருக்கும் தெரியாது இனியும் தெரியக்கூடாது. இவ்வளவு தூரம் நடந்தும் நீ அவன்தான் வேணும்னு போற அப்படித்தான.

நாங்க இது உன்கிட்டயிருந்து இத எதிர்பார்க்கல. நீ காலேஜ்க்கு போகவேண்டாம் நான் எல்லாம் பேசிட்டேன். எக்ஸாம்க்கு மட்டும் வந்தா போதும். எனக்கு இன்னைக்கு ட்யூட்டி போகனும் என கிளம்பிட்டான்.

அனுராதவிடமும் ஜீவாவிடமும். அந்த ரத்தீஷ் பையன் திரும்பவும் பிரச்சனைக்கு வர்றான். அதனால இவ காலேஜ்க்கு போகவேண்டாம் என சொல்லி ஒருவாரம் கழித்து புனேக்கு டிக்கட் புக் பண்ணி இன்றைக்கு அனுப்பிவிட்டான்.

புனே போயி இறங்கியதும் ஜெய்தான் வந்தாரு கூப்பிட. ஜெய்ராஜ்க்கு விசயம் தெரியும் எதுவுமே அவளிடம் பேசவேயில்லை.

அங்க ரெமி கணவர் இறந்த பிறகு தனியாகத்தான் இருக்கின்றார். குழந்தையில்லை. அங்க எல்லாக்காரியங்கள் முடிஞ்சி கொஞ்சம் லீகல் வேலைக்காக ஜெயராஜ் அங்கேயிருந்தார்.

அனிஷாவிற்கு போன் கிடையாது.

யாருக்குமே பேசமுடியாது. இங்க வருவதற்கு முன்னாடி ரியாக்கு எல்லா விசயத்தையும் அனுராதாவின் ஃபோனிலிருந்து அனுப்பியிருந்தாள் அவ்வளவுதான்.

எப்படி மூன்று மாதம் கடந்தது எனத்தெரியலை. எக்ஸாமுக்கு வந்தாள் எக்ஸாம் ஹாலில் தான் அர்ஷாத்த பார்த்தாள்.

இரண்டுபேருக்குமே என்ன பேச எனத் தெரியவில்லை. ரியாகிட்ட சொல்லி எக்ஸாம் முடிஞ்சி நிக்க சொல்லி சொல்லிருந்தாள்.

முடிந்ததும் ஓடி வந்தவள் அவன் முன்னாடிதான் நின்றாள்.

அனிஷா " ரியா நீ வெளிய போகாத நான் வந்தப்பிறகு போகலாம் "

இரண்டுபேரும் தனியாக பேசட்டும் என தள்ளி நகன்றிருந்தாள்.

அர்ஷாத் கொஞ்சமா தாடி வச்சி கண்ணெல்லாம் உள்ள போயி ஒருமாதிரியா இருந்தான்.

அவளை பார்த்தவண்ணமே நின்றிருந்தான். ஒன்னுமே பேசவில்லை அவள் கன்னத்தை தொட்டுதடவி 

" எப்படிடா இருக்க " எனக்கேட்கவும் அவள் தலையமட்டுமே ஆட்டினாள்.

அர்ஷாத் " நிலைமை ரெம்ப மோசமா போயிட்டுல. அடுத்த என்ன பண்ணப்போறோம் "

அனிஷா " தெரியல எக்ஸாம் முடிஞ்சி திரும்பவும் புனே பேயிடுவேன் அங்க எம்.ஈ படிக்கபோறேன். எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க. எனக்கு உன் போண் நம்பர் தா. அங்கயிருந்து PCOல இருந்து கால் பண்றேன்.

அர்ஷாத் "என்னைய விட்டுப்போயிடுவியா நீ "

அனிஷா இல்லை எனத்தலையசைத்து " அப்படியான நிலைமைனா செத்துபோயிடுவேன்"

இரண்டு பேருக்கும் வார்த்தையே வரவில்லை. ரியா கூப்பிடவந்திட்டாள்.

அர்ஷாத் " நீ போ பொருமையா இருடா வேற தப்பா எதுவும் யோசிச்சிறாத. பிளீஸ் இங்க ஒருத்தன் உனக்காக இருக்கேன்னு நியாபகம் வச்சிக்கோ. சரியா இப்போ கிளம்புடா "

அனிஷா அவனைத்தான் பார்த்திருந்தாள்.

அவள் கன்னத்தை தட்டி " கிளம்புடா " என சொல்லவும் மனசேயில்லாம சென்றாள்.

அடுத்தநாள் அர்ஷாத் வந்தவன் ஒரு சின்ன நார்மல் சைஸ் பேசிக் போன் வாங்கி புது சிம்கார்டு போட்டு வந்து குடுத்தான்.

அனிஷா " இதப்பார்த்தா பிரச்சனை வரும் "

அர்ஷாத் " மறைச்சி வை இப்போதைக்கு சவிட்ச் ஆஃப் பண்ணிடு.தேவைனா எடுத்து பேசு சரியா. டெய்லி லேட்னா உங்கப்பா கண்டுபிடிச்சிட போறாங்க போ "

அனிஷா " ம்ம்ம். உன்ன ரெம்ப மிஸ் பண்றேன் "

அர்ஷாத் லேசாக அவளை அனைத்து விடுவித்தான். அவ்வளவுதான் எக்ஸாம் முடிஞ்சி இரண்டுமாசம் இங்க இருந்தவள் மீண்டும் புனே சென்றாள்

எம்.ஈ. முதல் நாள் காலேஜ் உள்ளபோகவுமே ஊரில் முதல் நாள் காலேஜ் அனுபவம்தான் வந்தது.

அங்க கிளாஸ்ல எல்லோரும் வேறவேற மொழி பேசறவங்கதான். திடீர்னு நீங்க தமிழா என கேட்கவும் அவ்வளவு அதிர்ச்சி. திரும்பி பார்த்தாள்நல்ல வடநாட்டு கலருல தமிழ் பொண்ணு.

அனிஷாவுக்கு அவள ரெம்ப பிடிச்சிது.

இரண்டுபேருமே நல்ல பிரண்ட்ஸாகிட்டாங்க.

இவளோட சோகக் கதையெல்லாம் மோனலுக்கும் தெரியும். அவ ஹாஸ்டல்ல இருந்து படிக்கறாள்.ஒரு மாசம் கழித்து அர்ஷாத்துக்கு போன் செய்தாள்.

அவனும் எமா.ஈ படிக்கறாத சொன்னான்.

நிறைய பேசுவாங்க வாரத்துக்கு ஒருதடவை பேசிப்பாங்க.

மோனல்கிட்ட தான் அடிக்கடி ஃபோன் குடுத்துவைப்பா இங்க இருந்து தெரிஞ்சிட்டா திரும்பவும் பிரச்சனையாகிடும் என நினைத்தாள். இப்படியே நாட்கள் சென்றது.

முதல் வருட விடுமுறைக்கு வந்து ஒரு மாதம் இருந்தாள் அப்போதுதான் ஜீவாவிற்கு பொண்ணு அமைந்து கல்யாணம் ஒரே தங்கச்சி . இவா இல்லாமலா பொண்ணை விடவும் அதிக நகை இவாதான் போட்ருந்திருப்பா.

சிலவேளையில இப்படி விசேஷத்துலதான் பொண்ணு பாக்கறதும் சத்தமில்லாம நடக்கும். அதனால அம்மாக்கள் இரண்டுபேரும் கண்டிப்பா நகைபோட்டே ஆகனும்னு பிடிவாதம்பிடிச்சி போட்டுவிட்ருந்தாங்க.

அப்போ அவளை பார்த்தவன்தான் வில்பர் சாமுவேல். அர்ஷாத்த பார்க்க முடியல கொஞ்சம் வருத்தமும்கூட.

ஜீவா கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள்

எப்பவும் போல ஜீவா ரூமுக்கு அனிஷா சென்றுவிட சுனிதாவிற்கு அது பிடிக்கல.

சுனிதா " ரூமுக்குள்ள இப்படி சட்டுன வந்திட்ட .எங்களுக்கு பிரைவைசி வேண்டாமா என் சொல்லிவிட்டாள் "

அனிஷாஸ" சாரி அண்ணி "

ஒரு வார்த்தையில வந்திட்டா.

அவங்க அவங்களுக்கு என ஒரு ஃபேஸ் இருக்கு. நம்ம எப்படி உள்ள போனோம் என தன்னையே நொந்து போயிட்டா. இதை அவனிடம் சொல்லவேயில்லை.

ஜீவா கொஞ்சம் தூரமா போயிட்டதா

நினைச்சவள். இப்போ ரெம்ப ரெம்ப அர்ஷாத்த தேடினாள்.

இரண்டாம் வருடம் முதல் செமஸ்டர் லீவுக்கு வந்திருந்தாள்.ஏற்கனவே அர்ஷாத்திற்கு தகவல் சொல்லிருந்தாள்.

ஊருக்கு வந்து இண்டு நாள் கழித்து அனுராதா அனிஷாக்கு போன் செய்து வீட்டுக்கு வா எனச்சொல்லவும். அங்க போனவள் ரெம்ப அமைதியாகவே இருந்தா.

ஜீவா தானாக வந்து பேசவும்தான் திரும்ப பேசினாள். அவனுக்கு ஒருமாதிரி இருந்தது.

ஜீவா " ம்மா இவ நம்ம பாப்பா இல்லமா.

நான் ரெமி அத்த வீட்டுக்கு போன் பண்ணேன். எங்கிட்ட பேசவேயில்லமா.

இப்பவும் எங்கிட்ட பேசலா.நானாதான் பேசுறேன் எங்கிட்ட கோவம்போல."

அனிஷா " அப்படிலாம் ஒன்னுமில்லண்ணா "

ஜீவா அவனுக்குமே ஃபீலிங்க்தான் .நம்ம கல்யாணத்திற்கு பிறகுதான் இவ ரெம்ப மாறிட்டா என. யாருகிட்டயுமே ஒட்டாமல் இருந்தாள்.

அமைதியா அவளுக்குள்ளாகவே யோசித்து கொண்டிருந்தாள் எங்க போனாலும். ஒரு வெறுமையை உணர்ந்தாள்.

போனெடுத்து ஆன் பண்ணவும் மெசேஜ் வந்தது அர்ஷாத்திடமிருந்து.

திரும்ப போன் செய்யவும் பேசியவன் உன்னோட ஒரிஜினல் பெர்த்சர்டிஃபிகேட் எல்லாம் எடுத்திட்டு தக்கலைக்கு வா. எல்லாம் வந்த பிறகு சொல்றேன் சரியா.

எப்படி போகலாம் என யோசித்தவள்.

அனிஷா " ம்மா கொஞ்சம் திங்கஸ் வாங்கனும் .கடைக்குபோகனும் "

சாரதா " அப்பாகிட்ட சொல்லிட்டுப்போ "

அனிஷா " ம்மா எனக்கு இன்னர்ஸ்லாம் வாங்கனும் நான் போறேன் .அப்பா வரதுக்குள்ள வந்திடுவேன் " என பொய் சொல்லி தக்கலைக்கு சென்றாள்.

அங்கு சென்றபிறகுதான் தெரியும் அவன்கூட்டிட்டு போனது ரிஜிஸ்டர் ஆஃபிஸ் . ஏன் என அவனை ஏறிட்டுப்பார்த்தாள் தப்புதான் இப்படி பண்றது வேற வழியில்லாமதான் .

எனக்குத் தோனுது இப்பவே பண்ணிக்கலாம் .கொஞ்சம் பிரச்சனைய சமாளிக்கலாம் இதவச்சி.

அர்ஷாத்தோட பிரண்ட்ஸ் மட்டும்தான். தேவாவும் இருந்தான். எல்லாரும் கையெழுத்திட்டு சாட்சிக்கையெழுத்தும் முடிஞ்சபிறகு

அனிஷா " முடிஞ்சது கல்யாணம். சர்ச்ல நோட்டிஸ் வாசிக்கல யாருக்கும் சொல்லல. அப்பா கைப்பிடிச்சிக்குடுக்காமலே" ஒரேஅழுகை அவனை கட்டிப்பிடிச்சிட்டு.

அர்ஷாத் " ஏன் அழற நீ சொல்லும்போது சீரியஸா நினைக்கலை. அதுதான் நீ அழாதடா. இன்னும் ஆறு மாசம் படிப்ப முடிச்சிட்டுவா வீட்டுக்கே கூட்டிட்டுப்போயிடுறேன்."

அனிஷா " இப்பவே கூட்டிட்டு போயேன்."

அர்ஷாத் " இல்லடா ஒரு தைரியத்திற்கு.

இனி என்ன வந்தாலும் பரவாயில்லைனுதான். இப்போ கல்யாணம் ஓகேவா "

அனிஷா "மீதியிருக்க படிப்ப முடிச்சிடுவோம். கேம்பஸ்ல எதாவது ஒரு வேலை கிடைக்கும் அதான் .அப்போ சமாளிச்சிடலாம் "

அனிஷா " அரைகுறை மனசுல வீட்டுக்கு வந்துவிட்டாள் "

இன்னும் இரண்டு நாள்ல திரும்ப போகனும். அவளுக்கே இப்படி இருக்கறது பிடிக்கலை புனே சென்றுவிட்டாள். ஒரு மாதம் கழித்து காலேஜ் ஆட்ரஸ்க்கு பார்சல் வரவும்தான் வாங்கிப்பிரித்து பார்த்தவளுக்கு அவ்வளவு சந்தோசம். அது அவங்க மேரேஜ் சர்டிஃபிகேட் அவளுக்கும் ஒரு காப்பி அனுப்பிருந்தான்.

அங்க தனியா இருக்கறது கஷ்டமா இருந்தது. என்னடா வாழ்க்கை என நினைத்துக்கொண்டாள்.

திரும்பவும் அதே புனே வாழ்க்கை.

மோனல் மட்டுந்தான் ஆறுதல் .

இரண்டுவருட படிப்பு முடியவும் அவளுக்கு அவ்வளவு சந்தோசம்.

அர்ஷாத் எதாவது பிளான் செய்திருப்பான். அதைவிட வீட்டுக்கு போறோம் என செம குஷி அவளுக்கு.

ஜெயராஜ் வந்து அவளை ஊருக்கு கூட்டிக்கொண்டு வந்தார். சாரதாவிற்குமே ரெம்ப சந்தோசம்.

சாரதா " உன்கூட படிச்ச அந்தபிள்ளை ரியாவுக்கு கல்யாணமாம் வீட்டுக்கு வந்து கார்டு வச்சிட்டு போயிருக்கா "

அனிஷா " கல்யாணத்துக்கு நான் போகட்டாம்மா. அப்பாகிட்ட கேட்டு சொல்லுங்களேன். பிளீஸ் மா "

சாரதா " சரி அப்பாகிட்ட கேட்டுச்சொல்றேன். இன்னும் ஒரு நாள் இருக்குலா பார்க்கலாம்"

அனிஷா " சரி "

அடுத்நாள் காலையில அவ தம்பிக்கிட்ட வம்பிழுத்துக்கொண்டே சாப்பிட்டாள்.

அப்போது ஜெயராஜ் வந்தார்.

சாரதா " அந்த பிள்ளையோடக் கல்யாணத்திற்கு போகவான்னு பாப்பா கேட்டா "

சாரதாவுமே இப்பொழுது அறிந்துக்கொண்டார் அப்பாவும் மகளுக்கும் பிரச்சனை என.

அதனால அவரே கேட்கவும்.

ஜெயராஜ் " சரி நம்ம வீட்ல இருந்து யாராவது கூடப்போங்க." அனிஷாவுக்கு குஷி கல்யாணத்திற்கு போக சேரி எடுத்து வைத்தாள்.

இராத்திரி மெதுவா ஃபோன் எடுத்து அர்ஷாத்திற்கு மிஸ்டு கால் குடுத்தாள். இவளது நம்பர் வரவும் .

மெசேஜ் செய்தான் எப்படி இருக்க.

எங்க இருக்க என. ஊருக்கு வந்துட்டேன் நம்ம பார்க்கலாமா எனக்கேட்டாள்.

அவள் திரும்ப ரியா கல்யாணம் அவள் போகப்போறதா சொல்லவும்.

எனக்கும் கார்டு வந்திருக்கு. நீ வருவன நானும் வர்றேன் என அவனும் சொன்னான்.

அடுத்த நாள் காலை அனிஷா கல்யாணத்திற்கு கிளம்பி ரெடியானவள் "ம்மா என்ன யாரு கூட்டிட்டுபாபோறா "

சாரதா " நானும் அக்காவும் ஹாஸ்பிட்டல் போறோம். சுனிதாவுக்கு வயிறு வலிக்குதுனு அட்மிட் பண்ணிட்டாங்க "

அனிஷா " எங்க .அண்ணா ஹாஸ்பிட்டல்லயேவா "

சாரதா" ஆமா நீ போயிட்டு வா. பஸ்ல போயிருவியா எப்படி "

அனிஷா " சேரி கட்டிட்டு எப்படி.

இந்த தடியனையாவது கொண்டுவிடச்சொல்லுங்க " எனத் தன் தம்பிய சொல்லிட்டிருந்தா.

சாரதா " மக்களே நல்லபிள்ளலா அவள கொண்டுவிட்டுட்டு வா. அப்பா யாராவது போயி கூப்பிட்டு வருவாங்க. "

பிரேம் வண்டில கொண்டுபோயி விடடான். அவளோட பழைய பிரண்ட்ஸ் பார்த்ததும் ஓடிப்போயி எல்லாருக்கிட்டயும் ஒட்டிக்கிட்டா.

கொஞ்சநேரம் கழித்து அர்ஷாத் வந்தான் முன்னாடிய விட இப்போ கொஞ்சம் சதைவச்சி அழகா இருந்தான்.

வந்தவன் அவ பக்கத்துல வந்து இருந்து

" ஓய் பொண்ட்டாட்டி என்ன இப்படி சைட் அடிக்கற "

அனிஷா " ஹான் "

அர்ஷாத் " வாய இப்படித் திறக்காத அப்பறம் கடிச்சிவச்சிருவேன் "

அனிஷா மலர்ந்து சிரித்தாள். அவன்கிட்ட இன்னும் நெருக்கமா அமர்ந்தாள்.

இரண்டுபேருக்கும் மனசுநிறைய சந்தோசம்.கிப்ட்ஸ் கொடுத்திட்டு வீட்டுக்கு கிளம்பபோக.

அர்ஷாத் " வண்டியில ஏறு போகலாம் "

அனிஷா " உண்மையாவா நீ கூட்டிட்டு போறியா "

அர்ஷாத் " வா போகலாம் "

வண்டியில உட்கார்ந்தவள் வழிய பாரக்கல கொஞ்சநேரம் கழிச்சி வண்டி நாகர்கோவில் போகல. வேற எங்கனு பாரத்தா அவன் வீட்டுக்கு போகிற வழி.

அனிஷா " த்தான் எங்கப்போறோம் "

அர்ஷாத் வண்டிய நிறுத்தி " என்ன சொன்ன அத்தானா. நல்லாயிருக்குடா அப்படியே கூப்பிடுடா "

வண்டிய திரும்பவும் கிளப்பி வீட்டுக்கு வரவும் மழை லேசாகத் தூறல் போட்டது.

" அத்தை என்ன சொல்லுவாங்க. பயமா இருக்கு " அவன் அதுக்கு பார்த்துக்கலாம் என்று முடித்துவிட்டான்.

வண்டிய வீட்ல விட்டு உள்ள போகவும்தான் பார்த்தாள் யாருமே விட்ல இல்ல.

" கள்ளன்,வீட்ல யாருமே இல்லனு என்ன இங்க கூட்டிட்டு வந்திருக்க. இல்ல எனக் கேட்டு கையை இடுப்பில் வைத்து செல்லமிரட்டல் விடுத்தால் "

இதப்பார்த்து லேசா தலையை சாய்த்து அவளைப்பார்த்து மோனச்சிரிப்பு சிரித்தான்

" உள்ள வா வெளியே நிக்க வேண்டாம். அதுவேற பிரச்சனையாகும் சீக்கிரம் வா. "

உள்ளப்போகும்போது அவனை கையைபிடித்து நிறுத்தி இரண்டுபேருமே ஒன்னா வலது கால் வச்சி உள்ளப்போகவும்.

என்னடா அனி செம அறிவாளி ஆகிட்டப்போ என கிண்டல் செய்யவும்.

அனிஷா" அது இல்ல. நம்ம வாழப்போற வீடு அதான் வலது கால் எடுத்து வச்சி வந்தேன் "

அர்ஷாத்" நல்ல பேசுற "

அனிஷா " எதுக்கு வீட்டுக்கு கூப்பிட்டு வந்த "

அவன் ஒன்னும் சொல்லாம பிரிட்ஜல இருந்த பால் எடுத்து. வா கஃபி போடுவோம். உனக்கு காஃபி போடாத்தெரியுமா.

அனிஷா " சமையலே தெரியும் அங்க அத்தவீட்ல சமைக்க படிச்சிட்டேன்.நானே போடுறேன் "

அவள் காஃபி போடவும் பின்னாடி செவர்ல சாய்ந்து நின்றான்.

அவன் யோசனையெல்லாம் இனி என்ன ஆனாலும் அவள விட்டுகுடுக்கமுடியாது.

அவன் எல்லாம் தெரிஞ்சித்தான் அழைச்சிட்டு வந்திருந்தான்.

கஃபி போட்டு அவனுக்கும் கொடுத்தவள் கிட்சன்ல நின்னே குடிக்கவும். அவன் பார்வை அவளைத்துளைத்தெடுத்தது.

அனிஷா தலை தன்னால குனிந்தாள்.

" என்ன பொண்டாட்டி வெட்கமெல்லாம் படுற "

எனக்கிட்ட வந்தான் .

அதற்குள்ளாக யாரோ கதவைத்தட்டும் சத்தம் கேட்கவும். அர்ஷாத் " நீ மேல தட்டுக்கு போ. நான் யாருன்னு பார்த்திட்டு வர்றேன்."

                 அத்தியாயம் - 15

இரு உயிரும்

இடமாறியதை அறியாது

உடலை மட்டும்

பிரித்தென்ன இலாபம்..

யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டதும். அர்ஷாத் அனிஷாவை பார்த்து நீ மேலப்போ.நான் யாருன்னு பார்த்திட்டு வர்றேன்.

நான் கூப்பிட்டா மட்டும் கீழே வா.

என அவளை மாடிக்கு அனுப்பி வைத்தவன்.

கதவைதிறக்கவும் அங்க வந்திருந்தது அவனோட சித்தப்பா

" வாங்க சித்தப்பா சொல்லுங்க "

உங்க அம்மா ஃபோன் பண்ணிருந்தாங்க.

இங்க வந்திருக்கியா இல்லையானு பார்க்க சொன்னாங்க.

நீ இல்லாம எப்படி .அண்ணி வருத்தப்படுறாங்க.

அர்ஷாத் " அதெல்லாம் எப்படி.அவங்க நினைக்கிறது நடக்காது. நான் அனிஷாவதான் லவ் பண்றேன். அது உங்க எல்லாருக்கும் தெரியும். பிறகு ஏன் "

அவங்க சித்தப்பா பேசினார். அதுதான் முடியாதே அந்த பிள்ளை வீட்லதான் பிரச்சனை செய்றாங்களே.

அர்ஷாத் " அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்களா எதையாவது குட்டைய குழப்பாதிங்க. "

  " அப்போ நீ அங்க போகமாட்டியா. அத நிறுத்த சொல்லவா "

அர்ஷாத் " அங்க போகமாட்டேன். அவங்க நினைக்கறது நடக்கவே நடக்காது சொல்லிடுங்க "

 

அவங்க சித்தப்பா கிளம்பி செல்லவும்.

மேல அவனோட ரூமுக்கு வந்துப்பார்த்தான் யாருமே இல்ல. எங்க போயிட்டா என பதறி தேடியவன் மேல தட்டுக்கு செல்ல.

அங்க அனிஷா பரிதாபமாக சேரிலாம் கிளிஞ்சி அழுதிட்டிருந்தா. பார்த்தவன் ஓடிப்போயி அவளத்தூக்கி என்னாச்சிடா எனக்கேட்டான்.

அனிஷா " யாரவது வந்திருவாங்களோனு மேல வந்தேன் தண்ணி பைப்பை கவனிக்கல தட்டி விழுந்திட்டேன் "

அர்ஷாத் " உன்ன மேல ரூம்ல இருப்பேன்னு நினைச்சேன் இங்க டெரஸ்க்கு வருவன்னு நினைக்கல " எனப் பேசிக்கொண்டே அவளைத் தூக்கியவன் அவன் ரூமிற்கு கொண்டுவந்து விட்டான்.

அனிஷாவின் சேரி நல்ல கிழிந்திருந்தது. இன்ஸ்கேர்ட்டும் மேல பின் குத்துற இடம் எல்லாம்.

காலில் லேசா சிராய்ப்பு வேற.

வீட்டுக்கு கூட்டிட்டு வந்த முதல் நாளே ஒழுங்கா பார்த்துக்க முடியல என அவன் கண் கலங்கியது.

அர்ஷாத் " ச்ச் .இரு மெடிசின் எடுத்திட்டு வர்றேன். எங்க அடிபட்டிருக்கு என ஆராய்ந்தான். வலது கால் முட்டுல நல்ல உரசிருந்திச்ச இரத்தம் வந்தது.

கீழப்போயி மெடிசின் எடுத்திட்டு வந்து அவள் முன் மண்டியிட்டு மருந்துபோட ஏதுவாக சேரி நல்ல மேல ஏத்திவிட்டான். மெதுவா மருந்து போட்டு ஊதிவிட்டான் காயங்களில்.

ஒரு முக்கியமான விசயம்டா கீழே போவம் வா என அவளை சாமி ரூமுக்கு முன்னாடி கூட்டிவந்தவன் தன் பேண்ட் பாக்கெட்ல இருந்த பாக்ஸ்ச எடுத்து திறந்து அதிலிருந்த ஒரு சங்கிலியை எடுத்தான்.

அனிஷா " ஹை .சூப்பரா இருக்கு 

எப்போ வாங்கின "

அவனுக்குமே ரிஜிஸ்டர் மட்டும் பண்ணது உறத்திச்சி. அதுதான் யோசித்து வாங்கியிருந்தான்.

அர்ஷாத் " நேத்து உன்கிட்ட பேசினதுக்கு பிறகு போயி வாங்கிட்டேன். பக்கத்துல வா சாமி முன்னாடி கட்டிவிடுறேன் என அழைத்து சிறிது நேரம் வணங்கி அவள் கழுத்தில் பூட்டினான் அந்த தங்கத்தாலியை அவள் கழுத்தில் "

அனிஷா எப்பவும்போல் வாயைதிறந்து பார்த்திட்டிருந்தா. அனிஷா " நீயாவே எல்லமே யோசிச்சி செய்ற நான்தான் எதுவுமே உனக்கு செய்யலல "

அர்ஷாத் " அப்டிலாம் யோசிக்காத நீ மட்டுமே எனக்கு எல்லாம இருந்தா அது போதும் "

ட்ரஸ் மாத்துறியா என சொல்லவும்.

எனக்கு எப்படி இங்க ட்ரஸ் இருக்கும்.

மாத்துறது எப்படியாம்.

அர்ஷாத் " ஓய் பொண்டாட்டி.நீ இருக்கறது உன்னோட புருஷன் வீட்ல. இங்க உனக்கு ட்ரஸ் இருக்கும் "

அனிஷா " வாங்கி வச்சிருக்கியா அப்போ தா மாத்திக்கறேன்.அப்படியே எனக்கு கொஞ்சம் தண்ணித்தர்றியா குடிக்க "

அர்ஷாத் கிழே போனவன் தண்ணி எடுத்துட்டு வர்றதுக்கு முன்னாடியே

அவா ட்ரஸ் மாத்த ட்ரை பண்ணா முடியல.

உனக்குத்தான் வலிக்குதே. ஏன் விடு இங்க நம்ம மட்டுந்தான.என தண்ணிய கையில் கொடுத்தான்.

அனிஷா " ஈரமா இருக்குலா " எனச்சொல்லி பின் எல்லாத்தையும் எடுத்தாள். மேல இருக்குற இரண்டு பின்னும் வளைஞ்சிப்போச்சுது கழட்டவே முடில. பரிதாபமாக முழித்தாள்.

ஏற்கனவே அவளோட அருகாமை இவனை என்னவோ செய்தது முன்பாவது பரவாயில்லை.

கல்யாணம் செய்தபிறகு இந்த மனசு அவன் சொல்றதுகேட்கமாட்டுக்கு.

அதுல எங்கம்மா பண்றதுவேற.

அவளோட வாழ்ந்திரனும்னு தீவிரமா இருக்கான்.

தன்னை சிறிது கட்டுப்படுத்தியவன்.

அவனோட ஷெல்ஃப்ல இருந்து புது நைட் ட்ரஸ் எடுத்து அவள் கையில் தந்தான்.

நான் கீழே இருக்கேன் நீ மாத்திட்டு சொல்லு எனக் கீழே சென்றவன் மனசுபூராவும் வேற சிந்தனைதான்.

அவள் மேலயிருந்து கூப்பிடவும் சென்றவன் அப்படியே உறைந்தான் .

" த்தான் சேரில பின் வரலனு பிளவுசோட கழத்துனேன் அதுவும் வரமாட்டுக்கு என நின்றாள்."

இவா ஒரு முடிவோடத்தான் இருக்கா. இவா தெரியாம செய்யறதே இப்படி நம்மள பாடாய்படுத்துதே.

" ஊப்ஸ் என்ன செய்யனும் "

அனிஷா " பின்னாடி இழு கழட்டனும் முடியல "

அர்ஷாத் கிட்டபோனவன்.அவள் பின்பக்கமாக கையிலிருந்த சேரி பிளவுஸ் இரண்டுமே கழட்ட முயற்சிக்க. எங்க அது அவனையும் அவன் இளமையையும் சேர்த்தே சோதித்தது.

அர்ஷாத் " அனிமா.நான் வேற ஐடியா பண்ணட்டா "

அனிஷா " ஈரத்தோட இருக்கேன் குளிருது வீட்டுக்கு வேற போகனும் ட்ரஸ் சேஞ்ச பண்ணிட்டா கொண்டு விட்ருவல .அம்மா தேடுவாங்க. "அர்ஷாத் ஒன்னுமே சொல்லல

அவளின் பின்னே சென்று நின்றவன் மொத்தமாக கழட்டிட்டான்.

அவனுக்குத்தெரியும் இனி அடுத்தகட்டம் முன்னேற வேண்டிய நேரம் இது இனி முடியாது என.

அனிஷா" என்ன செய்யற நீ எனத்திரும்பவும் அவள் உடல் அவனோடு ஒட்டி நின்றது. அவன் பார்வை கணவனுக்கான பார்வை.

அப்பொழுதுதான் உணர்ந்தாள் வெறும் உள்ளாடை மட்டுமே மேலே மறைத்திருக்க. கைகொண்டு மறைத்துக்கொண்டு திரும்பி நின்றாள்.அவளுக்குமே இதயம் படபடவென அடித்துக்கொண்டது.

அர்ஷாத் மெதுவாக அவளின் தோள்களை பற்றி தன்பக்கமா திருப்பினான்.இன்னும் தலைகவிழ்ந்து நின்றவளின் முகம்பற்றி முத்தங்களை முத்துக்களாக தெளித்தான் அவள் முகமெங்கும்.

"அனிமா என அவள் கன்னத்தை தாங்கி இதழ்களில் கவிதையாக முத்தமிட்டவன் ஒரு கட்டத்தில் சுவைக்க தொடங்கினான்.

மங்கையவளின் மனதிலிருப்பவன். கொண்டவன் அவனோடு உயிராக இழைந்து நின்றாள்.

அவள் வெற்றிடையில் தன் கரங்களால் இதம்கொடுத்து " அவள் காதில் மெதுவாக கேட்டான். அனிமா நம்ம வாழ்க்கைய இப்போதிருந்து தொடங்குவோமா. உனக்கு சம்மதமா எனக்கேட்டான் "

அவள் " த்தான் " என தலையசைத்தாள்.

அவ்வளவுதான் அர்ஷாத் அவளை தன்கரங்களில் ஏந்தினான்.

அவளை தனது உயிராக்க முயற்சி செய்தான் .அவளின் மேல் படர்ந்த்தவன் 

பலநாள் பட்டினியில இருந்தவன்போல் அவளை பிய்த்துதின்று கொண்டிருந்தான்.

அனிஷா இதில் தன்னை அவனுக்கு விட்டுக்கொடுத்தாள். அவளின் மேலான நேசத்தை தன் உடல்மொழியில் பேசுகிறான்.

" த்தான் "

நிதானித்தவன் "ம்ம்.கஷ்டமாயிருக்காடா" 

"அன்னீஸியா இருக்கு "

" ஒன்னுமில்லடா அப்படித்தான்டா இருக்கும் சரியாகிடும். அவள் கண்ணைப்பார்த்து கொஞ்சியவன் சரியா "

அவள் கன்னங்களில் முத்தமிட்டு முத்தமிட்டு முத்தெடுத்தவன் அவளைத்தேற்றி. அவள் உடலில் தன் உதடுகளால் ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தவன் முடிவுரை தெரியாமல் தொடர்ந்துகொண்டிருந்தான்.

அவளுக்கே தெரிந்தது அவன் இன்னைக்கு ஒரு முடிவோடத்தான் இருக்கான்போல என தலையாட்டினாள்.

ஒரு கட்டத்தில் வலிதாங்கமல் அனிஷா கண்களில் கண்ணீர். எல்லாத் தேடல்களையும் முடித்து

அர்ஷாத் அவளை தன் நெஞ்சினில் தாங்கிக்கொண்டான்.

திடீரென எங்கோ ஃபோன் சத்தம் கேட்கவும் அர்ஷாத் விழித்து பார்த்தான் மணி மாலை 5 மணி.

பக்கத்துல அவள் நல்ல தூக்கத்துல.

எழும்பி என்ன சொல்லப்போறாளோ என நினைத்தான்.

அவள் முகம் அவ்வளவு நிர்மலமாக கள்ளம் கபடில்லாது தெளிவாக இருந்தது.

அவளின் நெற்றியில் முத்தம் வைத்தவனை இன்னும் நெருங்கிப்படுத்து கட்டிக்கொண்டாள்.

அவள் உடம்பில் லேசாக சூடு தெரியவும்  

காய்ச்சல் போல தெரிய.

" அனிமா எழும்பு " கண் திறந்தவள்

என்ன என பார்க்க.

" உனக்கு உடம்புசூடா இருக்கு காய்ச்சல் மாதிரி. நா மாத்திரை எதாவது வாங்கிட்டு வர்றேன் .உனக்கு சாப்பிட எதாவது வேணுமா வாங்கிட்டு வர்றேன் "

அவள் எழுந்து மணியபார்த்தாள் 5மணி.

தலையில் கைவைத்து " அய்யோ இவ்வளவு நேரமாயிட்டு. அம்மா தேடுவாங்க நான் போகனும் என்ன கொண்டுவிடு என எழும்பினாள்.

அர்ஷாத் அசையாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளோ எந்த ட்ரஸ் போட்டுட்டு போக. சேரி கிழிஞ்சிட்டு இந்த நைட் ட்ரஸோடவா. அப்பவும் பதில் வராதிருக்கவும் தலைநிமிர்த்தி பார்த்தாள்.

அவன் அவளை பார்த்துக்கொணடு

" புருஷனவிட்டு போறேன்னு சொல்ற "

அவள் " நான் எப்போ சொன்னேன் "

அவன் " இப்போ அம்மா தேடுவாங்க நான் போறேன்னு "

அனிஷா லூசுமாதிரி பேசாத என முறைத்தாள்.

 

அவபக்கத்துல போயி உட்கார்ந்து நா என் பொண்டாட்டியோட குடும்பம் நடத்திட்டிருக்கேன் நீ என்ன லூசுங்கற ஹான்.

" அனிமா நீ எங்கயும் போகப்போறதில்ல.இங்கதான் இருக்கப்போற இதுதான் உன் வீடு "

அனிஷா " வீட்ல தேடுவாங்க பாவம் நான் காலையிலயே கிளம்பிட்டேன்.

கல்யாணவீட்டுக்கு போனவள காணலன்னு தேடுவாங்க "

அர்ஷாத் " இனி அங்கப்போனா எனக்கு நீ இல்லனு ஆக்கிருவாங்க. நம்ம பிரிஞ்சித்தான் இருக்கனும். நீயே யோசி என்ன செய்யவென " அனிஷா எதுவுமே சொல்லாம அவனத்தான் பரிதாபமாகப்பார்த்தாள்.

அவன் சொல்றதும் உண்மைதான என அமைதியா இருந்தாள். நீ படுத்துக்கோ நான் வெளியபோயிட்டு எதுக்கும் மாத்திரை ,சாப்பிட எதாவது வாங்கிட்டு வர்றேன். என வெளியே சென்று வாங்கி வந்தான்.

உடம்பு வலி அப்படியே படுத்திருந்தாள் வெளியேசென்று வந்தவன். அவள் பக்கத்தில் அமைதியாக வந்து அமர்ந்தவன் ஒரு பெரிய சாக்லேட் எடுத்து அவளிடம் தந்தான்.

அதவாங்கியவளுக்கு அவ்வளவு சந்தோசம். எப்பவுமே வாங்கித்தர்றதுதான் இப்போ கணவனா முதல் தடவையா வாங்கித்தர்றது ஸ்பெஷல். சாப்பிடாமல் அப்படியே வச்சிருந்தாள். அர்ஷாத் யோசனையில் இருந்தான்.

அனிஷா " என்ன யோசனை செய்ற "

அர்ஷாத் " ஒன்னுமில்லடா நீ தூங்கு "

எழும்பி அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து " பொய் சொல்லாத என்னவோ இருக்கு.இல்லனா நீ இவ்வளவு அவசரமா என்னைய இப்படி கூட்டிட்டு வந்திருக்கமாட்ட , அவசரமா இந்த மாதிரிலாம் நடந்துக்கமாட்ட "

என அவன் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்

அர்ஷாத் " இந்த மாதிரினா என்னடா "

அனிஷா " பேச்ச மாத்ததா த்தான் "

அர்ஷாத்" நாளைக்கு தாய்மாமாவோட பெரியபொண்ணுக்கு கல்யாணம். இப்போ நிச்சயதார்த்தம் அதோட சேர்த்து என்னோடதும். அவங்க சின்ன பொண்ணுக்கு எனக்கும்"

அனிஷா " என்னது உனக்கா " அவன் நெஞ்சில அடிக்க ஆரம்பிச்சிட்டா.

அவள் கையைப்பிடித்தவன் " சொல்றத ஒழுங்கா கேளு. நான் இல்லாம எப்படி நடக்கும் பிடிக்கலன்னு மாமாகிட்டயே சொல்லிட்டு வந்திட்டேன் போதுமா "

அனிஷா " நமக்கு மட்டும் ஏன் சுத்தி சுத்தி பிரச்சனை வருது " எனக் கண்கள் கலங்க கேட்டாள்.

இதுக்கே இப்படி அழறா .ஐயோ இவங்க வீட்லயிருந்து வந்து பிரச்சனை செய்வாங்க சமாளிக்கனும்.என்ன பண்ணுவாளோ என நினைத்தவன்.

"வா கீழப்போவோம் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன்.கால் வலி எப்படி இருக்கு. என காலை பார்த்தான் நல்ல வீங்கியிருந்திச்சு நடக்கமுடியுதா பாரு"

" நடக்க முடியுது கொஞ்சம் வலியிருக்கு வேற ஒன்னுமில்ல "

" விடு நான் தூக்கிட்டுப்போறேன். என்ன கொஞ்சம் ஓவர் வெயிட்டுடா நீ சமாளிக்குறேன். " அனிஷா முறைத்து பார்த்தாள்.

என்ன முறைக்குற தக்காளி மாதிரி தளதளன்னு இருக்க. பின்ன ஜீரோ சைஸ்னா சொல்லமுடியும் என அவளை சமந்துக்கொண்டே பேசினான்.

" தூக்க முடியலன்னா கீழவிடு.

நான் நடக்குறேன். ரெம்ப பேசற உன்னலாம் போயி பழம்னு நினச்சேன் பாரு.என்ன சொல்லனும் "

அவளை கீழ இறக்கிவிட்டவன் " எப்போ அப்படி நினைச்ச "

" அது காலேஜ் பர்ஸ்ட் டே அறிமுகப்படுத்தும் போது "

அர்ஷாத் " இப்போ இந்த அத்தான பத்தி என்ன நினைக்க. என புருவம் இரண்டும் ஏத்தி இறக்கி கண்டித்துக்கேட்டான் "

அனிஷா தலையக்குனிந்து வாய்க்குள்ளவே முனங்கினாள்

" கள்ளன் "

சிரித்துக்கொண்டே என்ன என குனிந்து கேட்டான்.

" போடா " என எழும்பவும்.  

அவளைப்பிடித்து உட்காரவைத்தவன்.

அவளுக்கு பிடிச்ச பரோட்டாவும் சிக்கன் 

என வாங்கிருந்தான்.

சாப்பிடுவோம் என அவனுக்கு வாங்கிய இட்லியை எடுத்து பிரித்து சாப்பிட ஆரம்பிக்கவும் 

அனிஷா பேச ஆரம்பித்தாள் " த்தான் நீ எப்போ என்னய மாதிரி சாப்பிடுவ. இப்படி வெஜ் மட்டும் சாப்பிட போரடிக்கலயா உனக்கு "

" உனக்கு சாக்லேட்ஸ் சாப்பிட போரடிக்குதா,இல்லல அப்படித்தான் இதுவும் "

அனிஷா " நம்ம பிள்ளைங்களையெல்லாம் இப்படி பழக்கமாட்டேன்பா.என்னய மாதிரி எல்லாம் சாப்பிட வச்சிருவேன் "

அர்ஷாத் "அதுசரி இப்போதான் குடும்பம் நடத்த ஆரம்பிச்சிருக்கு அதுக்குள்ள பிள்ளைங்களா. நீ செம ஸ்பீடுல போறடா "

இரண்டுபேரும் இப்படியே பேசி சிரித்து உண்டுமுடித்தனர்.

கீழயே இருக்கியா இல்ல மேலப்போவாமா எனக்கேட்டான்.

அவளுக்குத்தான் இங்க கொஞ்சநேரம் இருப்போம். மனசுக்கு ஒரு மாதிரியாவே இருக்கு என சொல்லவும். டீவி ஆன் செய்தவன் அவளருகில் உட்கார்ந்தான்.

அவள் தலையை தன் நெஞ்சில் சாய்த்து " அனிமா நம்ம இரண்டுபேரும் இன்னும் நிறை பிரச்சனைகளை சமாளிக்கவேண்டியதிருக்கு

இரண்டுபேரோட வீட்லயும்.அப்பறம் நம்ம எதிர்காலம்,

எதுக்கெடுத்தாலும் அழாம சமாளிக்கனும். அம்மா எதாவது சொல்லுவாங்க அவங்களுக்கு பதில் சொல்லப்பழகு. ஒரு நாள் அம்மாவ பார்த்ததுக்கே பயந்த. இனி இங்கதான் வாழப்போற சரியா "

அனிஷா " ம்ம்ம் "

அர்ஷாத்" என்ன தூக்கம் வருதா.அது என்ன அட்வைஸ் பண்ணாமட்டும் உனக்கு தூக்கம் வந்திருமாடா"

அனிஷா " அது அப்படித்தான்"

அர்ஷாத் " ரூமுக்கு போவோம் வா இப்பவே மணியாகிட்டு. நாளைக்கு என்னென்ன வரப்போகுதோ. இன்னைக்கு நல்லத் தூங்குவோம். வா "

அனிஷா " நீ கூப்பிட்ற அழகப்பாத்த தூங்கறதுக்கு இல்லயேனு தோனுது."

அர்ஷாத் " ஆமா வாடி என் பொண்டாட்டி" என அவளை தூக்கிக்கொண்டு மாடியேறினான். அனிஷா கேட்டாள் டி போட்டு பேசற என்ன.

ரூமுக்கு போயி இறக்கிவிட்டவன் " சும்மா சொல்லிப்பார்த்தேன் உனக்கு பிடிக்கலன்னா அப்படி பேசல "

மாத்திரை எடுத்து தந்து சாப்பிட சொன்னவன் வலி குறையும். இல்லனா காலையில ஹாஸ்பிட்டல் போகலாம் சரியா.

அனிஷா அவன் கொடுத்த சாக்லேட் எடுத்து பாதியா பிரிச்சி அவனுக்கும் கொடுத்தவள் தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.

அர்ஷாத் அப்படியே உட்கார்ந்திருந்தான் அவளப்பார்த்திட்டே

அவதலையசைத்து சாக்லேட்ட கண்ணால காமிக்கவும் அப்படியே மெதுவாக அவளை நெருங்கி அவள் வாயோடு தன் வாயை பொருத்தி சாக்லேட் எடுத்துக்கொண்டான்.

அனிஷா " ஐய என் சாக்லேட்ட நீ எடுத்துட்ட "என சினுங்கவும்.

அர்ஷாத் தலையில அடிச்சிட்டே 

" சாக்லேட்தான் உன் பிரச்சனையா மனுஷன் எவ்ளோ ஃபீல் பண்ணேன். இந்தா இதையும் நீயே தின்னு என அவள் கையில் கொடுத்தான் "

அனிஷா " அவன் கையயை லேசா தொட்டு கோவமா என கேட்க " இல்லை என தலையசைத்தவன்  

 மீதி சாக்லேட்ட அவன் வாயில போட்டு அவளுக்கு இடமாற்றினான். அவன் மூச்சிலும் உடலிலும் அனிஷா கலந்து கரைந்துப்போனாள். அவளது ஆடையாக அவனும் அவனது ஆடையாக அவளும்.

நல்லதூக்கம் இரவு இரண்டு மணி இருக்கும். வீட்டின் கதவு அடுத்தடுத்து தட்டப்படும் சத்தத்தில் அர்ஷாத் எழும்பவும் அனிஷாவும் எழுந்தாள்.

கதவு தட்டும் சத்தம் பலமாக இருக்கவும் அனிஷாதான் ரெம்ப பயந்தாள்." அனி ட்ரஸ் போட்டுக்கோ யாரு வந்திருக்கானு தெரியாது எது நடந்தாலும் என்கூட நில்லு சரியாடா" என் தலைய தடவிட்டு போனான்.

கொஞ்சம் டென்சன் ஆனவன் அவளது கலக்கத்தைப்பார்த்து நம்ம தெளிவா இருக்கனும் என கீழே சென்றவன் கதவைத்திறக்கவும் அங்கே கவிதா அர்ஷாத் அப்பவும் நின்றார்கள.

கதவை திறந்ததும் வேகமாக உள்ளே வந்தவர் யாரையோ தேடினார்.

சிறிது நேரத்தில் போலிஸ் வேன் ஒன்றும் அதின் பின்னே ஒரு காரும் வந்து நின்றது.