அன்பே கொஞ்சம் காதல் கொடு 6-10

அன்பே கொஞ்சம் காதல் கொடு 6-10

அத்தியாயம்-6

நிலாவின் நினைவுகள் நான்கு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.

நிலா அப்போதுதான் பனிரெண்டாம் வகுப்பு முடித்து விடுமுறை என்பதால் அவளது தாய்மாமவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.மதுரைக்கு அருகில் ஒரு சின்னதான கிராமம்.

இப்போதுதான் முதல்முறையாகச் சென்னையிலிருந்து இங்கு வந்திருக்கின்றனர், தென்னவன் கொஞ்சம் பணத்தின் பெருமையைப் பார்த்து பழகுபவர், ஜோதிக்கு ஓரளவு நகைப்போட்டுத்தான் கட்டிக்குடுத்தனர்.

ஆனாலும் தென்னவனுக்கு இங்கு வந்து சொந்தம் பாராட்டுவதில் அவ்வளவு விருப்பமிருந்ததில்லை. அதனால் எப்போதும் எந்த நல்லதுக்கெட்டது எதுவாக இருந்தாலும் ஜோதி மட்டுந்தான் போயிட்டு வருவார்.

இந்த முறை அண்ணன் மணியரசு சில குறிப்புக்காட்ட அதனால வந்திருந்தார், நித்யா மற்றும் நிலாவுடன். நித்யா இஞ்ஜினியரிங்க் முடித்து விட்டு ஒருவருடமாக வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறாள் ஒரு பன்னாட்டுக் கம்பெனியில்.

நிலாவின் மாமாவிற்கு இரண்டு பெண்பிள்ளைகள் திருமணம் முடித்துக்கொடுத்துவிட்டார்.

மணியரசுவும் வேதநாயகமும் ஒரே சமுதாயம் என்பதால் தூரத்து உறவுமுறை.

மணியரசின் சில நிலங்களை வேதநாயகம் பார்த்துக்கொள்வார்.

வேதநாயகத்திற்கு உதவிகள் நிறையச் செய்வார், கதிர், மற்றும் இலக்கியாவின் படிப்பிற்கும் உதவியிருந்தார்.

வேதநாயகத்திற்கு எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது, நியாயமான மனிதர் அதனால் ஊருக்குள் அவருக்கு நல்லமதிப்பும் மரியாதையும் உண்டு. கம்பீரமாக இருப்பார் அநாவசியமான வம்பு வழக்குகளுக்கு இடங்குடுக்காத நியாயமான மனிதர்.

சித்ரா அவருக்குச் சொந்த முறைப் பெண்தான். அவருக்கேற்ற வெள்ளந்தி மனுஷி.

கதிருக்கு அவங்கப்பாவை ரொம்பப் பிடிக்கும். அவனது ஆஸ்தான ஹீரோவே அவர்தான், அவர மாதிரியே நடை உடை பாவனை கதிரிடமும் இருக்கும். நல்ல உழைப்பாளி.

ஆனால் என்ன நிறம் நம்ம திரவிட நிறம் ஆனால் கலையான அழகன் கதிர். சிறுவயதிலிருந்தே ஆசிரியர் ஆகனும் நாம்ம ஊர்லயே ஆசிரியரா இருக்கணும் என்ற ஆசையில் தான் கல்லூரியில் சேர்ந்தான் படிப்பின் ஆர்வமிகுதியில் எம்.எஸ்ஸி. எம்.ஃபில் முடித்து 

மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில் வேலை செய்தான்.

இலக்கியா இஞ்ஜினியரிங்க் சி.எஸ் முடித்துவிட்டாள். அவளுக்குத் திருமணத்திற்குப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இலக்கியா எப்போதும் போல மணியரசு வீட்டிற்கு வர அங்கு நித்யாவும், நிலாவும் இருக்க அப்படியே தோழிகளாகிவிட்டனர்.

நித்யாவும் இலக்கியாவும் ஒரே படிப்பு என்றதும் ஒட்டிக்கொண்டனர். அந்த ஊரு புதியது என்பதாலும் யாரையும் தெரியாது என்பதாலும் இலக்கியாவுடன் நல்லப்பேசி பழகிவிட்டானர்.

இப்படியாக ஒருநாள் வேதநாயகம் குடும்பம் முழுவதும் மணியரசு விட்டிற்கு வந்திருந்தனர். பெரியவர்கள் எல்லாரும் ஓரிடத்தில் அமர்ந்து பேச எப்போதும் ஓயாமல் வாய்ப்பேசும் நிலா வந்து இலக்கியாவிடம் பேச, அப்போது ஒருவருக்கொருவர் கேலிப்பேசியபடியே வெளியே வர அங்கு நின்றிருந்தக் கதிரைப்பார்த்து நிலா "யாரு இது, சாமி சிலை மாதிரி இவ்வளவு வளர்த்தியா மீசையெல்லாம் வச்சிக்கிட்டு" என்று கேட்க இலக்கியா முறைத்துப் பார்க்கவும்,

நிலா ஏன் முறைச்சிப்பார்க்கீங்க அக்கா என்று கேட்க, இலக்கியா "அவங்க எங்கண்ணன். இப்படிப் பேசினா முறைக்காமல் கொஞ்சுவாங்களா" என்றாள்.

நித்தயாவின் கண்களில் அவனைப் பார்த்து அலட்சியம் ஊர்நாட்டான் என்று. நிலாவிற்கோ பருவ வயதில் தோன்றும் ஆர்வக்கோளறு ஆவல் அவன் மீது. அவனது படிப்பு வேலை எதுவுமே தெரியாமல் இருவரும் அவனது யதார்த்தமான தோற்றத்தை வைத்து கணித்திருந்தனர்.

இது எதுவும் தெரியாது வெளியில் நின்ற ஊர்காரர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தான். அன்றே கதிரின் மேல் ஒரு ரசனையான எண்ணம் முளைவிட்டிருந்தது.

வீட்டினுள்ளோ பெரியவர்கள் கதிருக்குத் தெரியாமல் சிலபல தீர்மானங்கள் எடுத்திருந்தனர்.

கதிர் பேசிவிட்டு உள்ளே வரவும் தங்கையோடு நின்றிருந்த இரு புதிய பெண்களைக் கண்டவன் மரியாதையாக விலகி வீட்டினுள்ளே சென்று பெரியவர்களிடம் சென்று அமர்ந்து கொண்டான்.

நித்தியா,நிலா இருவருக்குமே ஆச்சர்யம். ஏனென்றால் அவர்கள் இருவரும் எங்குச் சென்றாலும் ஆண்களின் ஆர்வப்பார்வைகள் பின்தொடரும் அழகிகள் அவர்கள். நகரத்திலிருந்து கிராமத்திற்கு வந்திருக்கின்றனர். அவன் குறைந்தது திரும்பியாவது பார்ப்பான் என்று நினைத்திருக்க அவன் அப்படிச் செய்யாமல் கண்ணியமாக சென்றதும் நித்யாவிற்குத் திமிர்ப்பிடித்தவன் என்ற எண்ணத்தையும், நிலாவிற்கு ஒழுக்கமான ஆண்மகன் என்ற எண்ணமும் மனதில் ஆழமாக விழுந்திருந்தது.

நிலா அந்த வயதிற்குரிய ஆசைகளோடு சும்மா கதிரைப் பார்த்து வைத்தாள் அவ்வளவே பெருசாக எண்ணம் வரவில்லை அப்போது.

வேதநாயகம் குடும்பத்தார் சாப்பாடெல்லாம் முடிந்து வீட்டிற்குச் சென்றதும், மணியரசு தங்கையிடம் அபிப்பிராயம் கேட்டு பேசினார்.

ஒரு பத்து நாளில் மூவரும் கிளம்பிச் சென்னை வந்துவிட்டனர். பின்பு ஆறுமாதம் கழித்து அவனைத் தன் வீட்டுச் சொந்தமாகப் பார்த்தாள், அதற்குப்பிறகு அவளது நிஜ ஹீரோவாகவே மாறிப்போனான்.

இப்படியாக நினைவுகளை அசைப்போட்டு வந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள்.

தூங்கி அவனது தோள்மீதே சரிந்துவிழவும் அவளைத்தன் மடியில் தாங்கிக்கொண்டான்.

திடீரென வண்டி நிற்கவும் தூக்கம் கலைந்தவள் ஊர் வந்திட்டு என்று எல்லோரும் இறங்கவும் தானும் இறங்கி சுற்றி சுற்றித் தேடினாள். கதிர்தான் ஹேய் என்ன உன்னை நீயே சுத்திக்கிட்டிருக்க என்று கேட்கவும், நம்ம வீட்டைத்தேடுறேன் என்றதும் எல்லாரும் சிரித்துவிட்டனர். வேதநாயகம் உட்பட.

அவளது பக்கத்தில் வந்தவன் அறிவுக்கொழுந்தே, சென்னையில் இருந்து நாலு மணி நேரத்துல நம்ம ஊரு வந்திருமா, மத்தியான சாப்பாட்டுக்கு ஹோட்டல் போகலாம்னு நிறுத்தினோம் என்றதும் அசடு வழிந்தவள் தூக்கிட்டேன் என்க. அதுதான் எங்களுக்குத்தெரியுமே என்று அவளிடம் பேசியவன்.

அப்படியே தன் தகப்பனை ஒற்றையாளாகத் தூக்கியவனை வாய்ப்பிளந்துப் பார்த்தாள். 

வீட்டில் நடப்பதுதான் ஆனால் ஒரு பொதுவெளியில் எந்தவித நாகரீகப்பூச்சும் 

இல்லாமல் என் தகப்பனுக்கு நான் செய்கிறேன், அது என்கடமை என்று செய்பவனை இன்னும் அதிகமாகப் பிடித்தது அவளுக்கு.

நிலாவும் சித்ராவும் கதிரின் பின்னே சென்று அமர்ந்திருந்தனர் உணவு வரவழைத்து எல்லாரும் சாப்பிட கதிர்தான் அவனது அம்மாவை சாப்பிடச் சொல்லியவன், தான் தன் தகப்பனுக்குப் பார்த்துப் பார்த்து ஊட்டி விட்டான்.

நிலாவிற்குத் தன் தகப்பனும் தமையனின் ஞாபகம்.வயசானக்காலத்தில் சித்தார்த் தென்னவனை இப்படிப் பார்த்துக்கொள்வானா என்ற சந்தேகம் அவளுக்கு எழும்பியது.

சாப்பிட்டு முடித்து வாயெல்லாம் துடைத்துவிட்டவனின் தகப்பன் பாசம் தெள்ளத்தெளிவாக விளங்கியது.

உணவை முடித்துக்கொண்டு மறுபடியும் பயணம் தொடங்கியது .

அவர்கள் ஊருக்குவந்து சேரும்போது மாலையாகிவிட்டது. இறங்கியதும் பார்த்தாள் அவர்கள் வருவார்கள் என்று தகவல் தெரிந்து ஊரின் சொந்தங்கள் எல்லாம் திரண்டிருந்தது, மணியரசு உட்பட.

நிலா இதை எதிர்ப்பார்க்கவில்லை. சற்று மிரண்டவள் கதிரை ஒட்டி நிற்க பார்ப்பவர்களுக்கு நிலா கதிரின் ஜோடி பாந்தமாக இருப்பதாகவே காட்டியது.

வேதநாயகத்தைக் கதிர் தூக்கிக்கொண்டு உள்ளே சென்று படுக்கையில் படுக்க வைத்தவன் வெளியே வர ஊரில் ஒருத்தன் சத்தமாகக் கேட்டான்.

என்ன கதிர் மாப்பிள

முதல்பொண்டாட்டி உன்னால ஒன்னும் முடியாது என்று உன் இலட்சணம் தெரிஞ்சு அடுத்தநாளே ஓடிப்போயிட்டா, இவ எத்தனை நாளைக்கு மாப்பிள, பார்த்து நல்ல சிட்டுக்குருவி லேகியமா சாப்பிடுடே என்று சத்தமாகச் சொல்லவும், அவனது கூட்டாளிகள் சிலபேரும் சிரித்திருந்தனர்.

அவனைக் கல்யாண வாழ்க்கைக்கு சரியில்லாதவனாக சித்தரித்திருந்தனர்.

அவனுக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது மணியரசும் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்தான், நம்ம வீட்டுப்பிள்ளை செய்தத் தப்பிற்குப் பாவம் கதிருக்குத் தலைகுனிவு, ஒரு ஆண்மகனுக்கு இது எவ்வளவு பெரிய தலைகுனிவு.

அதைச் சொல்லியது வேறு யாருமல்ல கதிரின் சொந்த அத்தை மகன்தான். பகை கண்ணை மறைத்தது அவனுக்கு.

அப்படியே மனங்குன்றி தன் வண்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

நிலாதான் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே வாசலிலேயே நிற்கவும், சித்ரா அவளைக் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்று கதிரின் அறைக்குள் விட்டுச் சென்றார். காரில் இருந்த அவளது பொருட்களையும் கொண்டு வந்து வைத்தார்.

எவ்வளவு பெரிய அவமானம் சொந்த ஊருக்குள்ளே அவனுக்கு, சென்னையில எவ்வளவு பெரிய பேராசிரியர் அவன்.

எல்லாம் நம்மக் குடும்பத்திலிருந்து வந்தவளாளதான் என்று நினைத்து நினைத்து அவளுக்கு அழுகை, 

அப்படியே தன்னையறியமல் தூங்கிவிட்டாள்.

இதை எல்லாம் எதிர்பார்த்ததுதான் என்று சித்ரா சமையல் செய்து கணவருக்கு உணவளித்தவர், நிலாவிற்குக் கொண்டுவந்தார் அவள் தூங்கியது தெரிந்ததும் அப்படியே திரும்பிப் போய்விட்டார்.

மணியரசு வந்தவர் சூழ்நிலை சரியில்லாததால் வேதநாயகத்திடம் மட்டும் இருந்து பேசிவிட்டுச் சென்றார்.

சட்டென்று விழிப்பு வந்து பார்த்தவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை, தன்னைச் சமன்படுத்திக்கொண்டு தன் கைப்பையில் வைத்திருந்த செல்போன் எடுத்து மணியைப் பார்க்க அது நள்ளிரவு ஒன்றைக் காட்டியது.

யாருக்கிட்ட கேட்க இந்த நேரத்தில் என்று மெதுவாக அறைக்கு வெளியே வந்தவள் அங்குக் கண்டது மாமியாரைத்தான் தனக்காகப் பார்த்து

படுத்திருக்கிறார், எவ்வளவு பாசம் என் மேல் என்று நினைத்தவள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, கணவனுக்குப் போனில் அழைக்க, அழைப்பு ஏற்கப்படவேயில்லை .

திரும்பத் திரும்ப அழைப்புவிடுக்க ஒரு கட்டத்தில் அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்தான் வந்தது, கண்களில் கண்ணீர் தன்னையறியாமல் வர துடைத்துக்கொண்டே இருந்தாள்.

திருமணமாகி மூன்றாம் நாளிலயே தன் தலைவிதியை நொந்துக்கொண்டு அழுதாள். தனக்குப் பிடித்தவருடனான வாழ்க்கை அது வாழமுடியாம அல்லாடுறேனே!

தன்னைத்தானே அரற்றியவள், அந்த இருக்கையில் அமர்ந்தவாக்கிலயே மறுபடியும் துங்கிவிட்டாள்.

யாரோ தன்னைத் தட்டி எழுப்ப உணர்ந்தவள் கணவன்தான் என்று விழித்துப் பார்க்க, அவனில்லை. 

சித்ரா தான் எழுப்பிருந்தார் கைகால் வலிக்கும் உள்ளேக் கட்டிலில் போய் படும்மா என்க.

" கதிர் மாமா எங்கத்தை நேத்து எங்க போயிருந்தாங்க, இன்னும் வீட்டுக்கு வரவில்லை எனக் கண்களில் கண்ணீர் முட்டக்கேட்டாள்"

சித்ராவுக்குமே அவளைப்பார்த்துக் கஷ்டமாக இருக்க, அங்க தோப்பு வீட்டிலயே படுத்திட்டானாம், போன் பண்ணி சொன்னான். உன்கிட்ட சொல்ல வந்தேன் அதுக்குள்ள நீ தூங்கிட்ட...

காலையில வந்திருவான் நீ உள்ளப்போயிப் படு என்று நிலாவை அனுப்பியவர். கதிருக்கு அழைக்க எடுக்கவேயில்லை.

அவனுக்காகப் பரிதவித்தார்.

எந்தப் பிரச்சனைக்கும் போகாத என் பிள்ளைக்கு மட்டும் வாழ்க்கையில ஏன் இவ்வளவு சோதனை என்று கலங்கியவர்.

சாமியறைக்குச் சென்று அந்த அதிகாலை வேளையிலும் வேண்டிக்கொண்டார். கடவுளே என் பிள்ளைங்களும் பிள்ளைங்க வாழ்க்கையும் நல்லாயிருக்கணும் என வேண்டிக்கொண்டு வெளியே வந்தார்.

இந்தக் கலக்கம் எப்போ தீருமோவென்று எண்ணிக்கொண்டே வெளியே சென்றவர், 

வயலுக்குச் சென்றுக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பையனை அழைத்துக் கதிர் எங்கு இருக்கான் என்று பார்த்துவரச் சொன்னார்.

பத்தே நிமிஷத்தில் அவன் தோப்புவீட்டில் இருப்பது உறுதியாகியதும்.

சமையல் வேலையைச் சிக்கிரம் முடித்துக் கணவருக்கும் கொடுத்தவர், சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஓடினார் மகனுக்குக் குடுக்க....

அங்குச் சென்றதும் அவர் கண்டது நன்றாகக் தன்னையறியாமல் தூங்கிக் கொண்டிருந்தான், அவர் யூகித்தார் எப்படியும் குடித்திருப்பான் இல்லனா இப்படித் தூங்கமுடியாது நினைத்தவருக்கு மனது வலித்தது, அழுகையோ அழுகை யார் கண்ணுபட்டுதோ என் பிள்ளைக்கு. எந்தக்கெட்டப் பழக்கமும் இல்லாத என் பிள்ளை இப்படி அனாதைப்போலக் கிடக்கானே என்று புலம்பியவர், இந்த நிலையில என்னைப்பார்த்தால் அதுக்கும் 

வருத்தப்படுவான் என்று சாப்பாட்டை அங்கு வைத்தவர் வீடடிற்கு வந்து எதுவும் நடவாததுப்போல இருந்துக்கொண்டார்.

வேதநாயகம் பத்து நிமிடத்திற்கு ஒரு முறையும் கதிர் எங்கேயெனக் கேள்விக்கேட்டே மனைவியைத் திணறடித்தார்.

சித்ரா எவ்வளவோ சொல்லியும் நிலா மாமா வந்தபிறகு சாப்பிடுறேன் எனப் பட்டினியாக இருந்தாள்.

இதற்கு மேல் தாங்காது என்று நினைத்தவள் சித்ராவினிடம் சென்று

"என்னைத் தோப்பு வீட்டிற்குக் கூட்டிட்டுப் போங்களேன் எனக்கு மாமாவ பார்க்கணும்” என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

இதற்குமேல் சரிவராது என்று நிலாவை அழைத்துக்கொண்டு அங்குச் செல்ல, இன்னும் கதிர் விழித்தபாடில்லை, நல்ல தூக்கத்தில்.

நிலாவிற்கு அவனைக் கண்டதும் ஓடிப்போயி அவனருகில் அமர்ந்து கொண்டு அவனை எழுப்ப ஆரம்பித்தாள்,

சித்ராதான் "அவன் தூங்கட்டும் எழும்பினா இன்னும் மனசு வலிக்கும், கொஞ்ச நேரமாவது எல்லாம் மறந்து தூங்கட்டும் என்றவர் அவளை வீட்டிற்கு அழைக்க, நீங்க வீட்டிற்குப் போங்க மாமா தனியா இருப்பாங்க. இங்க நான் இருந்துப்பேன் என்றதும் மனதேயில்லாமல் அவளைவிட்டுச் சென்றார்.

ரொம்ப நேரமா அவன் பக்கத்திலயே அமர்ந்து இருந்தவள் முடியாமல், அவனது முகத்தை வருடிக்கொடுத்தவள் அப்படியே அவன் மேல் படுத்துக்கொண்டாள்.  

மதியத்திற்கு மேல் மெதுவாகக் கண்ணைத் திறந்தவனுக்கு, அவன் மேல் பாரமாக உணர்ந்தான், நிலாவைக் கீழ இறக்க முற்பட அவள் அசையவில்லை, அவன் திரும்பவும் முயற்சி செய்ய அவன் கழுத்தோடு கையைப் போட்டு இன்னும் வாகாய் படுத்துக்கொள்ளவும்,

நிலா இறங்கு நான் கட்டில்லயிருந்து இறங்கணும் என்றதும், 

அவள் உடல் குலுங்கியதிலிருந்து தெரிந்தது அழுகின்றாளென்று, மெதுவாக முதுகை வருடிக்கொடுத்தவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்

நிலா அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து "நம்ம இப்பவே சென்னைக்குப் போயிடுவோம் இங்க இருக்கவேண்டாம்" என்றவள் ஏங்கி ஏங்கி அழுதாள். அவளது ஹீரோவான கணவனைக் கேவலமாக பேசும் இந்த ஊர் அவளுக்கு பிடிக்கவில்லை.

அவ்வளவு அழுகை அவளைச் சமாதனப்படுத்தக்கூட முடியவில்லை அவனால், அவனுமே நான்கு பேரோட வாயில் அவலாக வேண்டாமே என்றுதான் இவ்வளவு நாள் இங்கே வராமல் இருந்தான்.

எங்குச் சென்றாலும் வேர் இங்குதானே, வந்துதான ஆகனும் எத்தனை நாள் இப்படியே இருக்க முடியும்?

அதற்குள்ளாகச் சித்ரா போனில் அழைத்தார் எடுத்துப் பேசியவன். 

அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டவன். “நான் குளிச்சிட்டு வர்றேன், சாப்பிட்டுக் கிளம்புவோம்

அப்பா இரண்டுபேரையும் தேட ஆரம்பிச்சிட்டாங்களாம், வீட்டுக்குப் போகலாம்,” என்று அவளையும் சமாதானப்படுத்தி, தனது மனதையும் சமன்படுத்தி அழைத்துச் சென்றான்.

அத்தியாயம்-7

கதிரும் நிலாவும் கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், கதிர் தன் தகப்பனது அறைக்குள் செல்ல வேதநாயகம் அவனுக்காக காத்திருந்தார், அவரின் அருகில் சென்று அமர்ந்தவனது கையை பிடித்துக்கொண்டவர் மகனது முகத்தை வாஞ்சையாகப் பார்த்தார்.

கதிர் தலைக்குனிந்து அப்படியே அமர்ந்திருந்தான். 

"கதிர்" என்றழைத்ததும்

அவன் நிமிர்ந்து பார்த்தான்.

" நீ ஒரு சமுதாயத்துல நல்லதொரு வேலையில இருக்க, நம்ம ஊரில் வேதநாயகம் பையனப்பாரு அவனை மாதிரி இருக்கணும்னு சொல்லும்போதெல்லாம் பெருமையா இருக்கும், நான் கதிரின் தகப்பனென்று, இனியும் அப்படித்தான்யா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

நீ நாலுபேருக்கு புத்திசொல்ற ஸ்தானத்துல இருக்கய்யா, நீயே பார்த்து நடந்துக்க.

ஒரு கெட்டதை உன் வாழ்க்கையிலிருந்து விலக்கிட்டு, இப்போ நல்லதை இந்த வாழ்க்கைத் தந்திருக்கு.

உனக்கான வாழ்க்கையை நீதான் வாழணும், எதிர்த்து போரடணும், ஓடிலாம் ஒளியக்கூடாது, என்று பேசி முடிக்கவும் அவருக்கு மூச்சு வாங்கியது.

அவருக்கு சூடாக தண்ணிக்குடிக்க குடுத்தவன், அவரது நெஞ்சினைத் தடவிக்கொடுத்தான்.

இப்போது கதிர் புரிந்துக்கொண்டான். தன்னையும் தன் வாழ்க்கையையும் குறித்து அவர் கலங்குகிறார் என்று.

எல்லாவற்றையும் பொருமையாக கேட்டுக்கொண்டிருந்தவன் "சரிப்பா, இனி கவனமாக நடந்துக்கேறேன்பா" என்றதும்

வேதநாயகம் வெளியே நின்றிருந்த நிலாவை அழைத்தார்.

அவள் அருகில் சென்றதும் அவளதுக் கையைப் பிடித்து கதிரின் கையில் கொடுத்தவர்.  

நீங்க இரண்பேரும் நல்லா வாழணும், அதுதான் எங்களோட ஆசை என்றார்.

நிலாவும் கதிரும் அவரிடம் பேசிவிட்டு வெளிய வரவும் அவன் அறைக்குள் வந்து கட்டிலில் சாய்வாக அமர்ந்து யோசித்தவன், அப்பா வருத்தப்படுறளவுக்கு நான் நடந்திட்டனே என்று வருந்தினான்.

சித்ரா கதிரின் அறைக்குள் நுழைந்தார் அவரது கையில் மகனுக்குப் பிடித்த சுக்கு காப்பி, அவன் கையில் அதைக்கொடுத்துவிட்டு பேசித்தொடங்கினார்

"இப்போது நிலா, உன் மனைவி அதுதான் இனி நிஜம். நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தா நீ உன் வாழ்கையை நிம்மதியாக வாழமுடியாது, கடந்தகால வாழ்க்கையை இப்போ உள்ள வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தாதப்பா.

அப்பாவுக்கு அங்க சென்னையில் வீட்டுக்குள்ளவே இருக்க பிடிக்கலை,

இங்கனா நாலு சொந்தங்கள் வந்துபேசிட்டு இருப்பாங்க, மணியரசு பெரியப்பா வருவாங்க, வெளிய உட்கார்ந்துக்கலாம்.

நம்மவூரு காத்துதான் அப்பாக்கு ஒத்துப்போகுது. அதனால சென்னைக்கு நாங்க வரவில்லை. நீங்க இரண்டுபேரும் போங்க சரியா” என்றார் சித்ரா.

திருமணம் முடிஞ்சதும் நீங்க இரண்டுபேரும் என்கூடத்தான் இருக்கணும் என்று சொல்லித்தான் அவர்களை சென்னைக்கு அழைத்தான். இப்போது அப்பாவின் உடல்நிலை அவனுக்கு முக்கியமாகப்பட சரியெனத் தலையாட்டியவன் வாடகை காருக்கு அழைத்து சொல்லிவிட்டான்.

வெளியே வந்தவர் நிலா எதோ யோசனையோடு இருப்பதைப் பார்த்து, தனியா என்னம்மா செய்ற வா என்று அழைத்து மெதுவாக பேசிக்கொண்டே வீட்டின் பின்பக்கத் தோட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார்

அங்கிருந்த கல்பெஞ்சில் அமர்ந்து, அவளை பக்கத்தில இருத்தி பேசத் தொடங்கினார்.

அவளது நாடியைப்பிடித்து "கதிர் மேல உனக்கு எதுவும் வருத்தமிருக்காமா? என்றுக்கோட்கவும், அவசரமாக தலையைசைத்து இல்லை.

என்னத்தை இந்தக் கேள்வி? 

உன்கிட்ட சொல்றதுக்கு என்னம்மா . கதிருக்கு உன்மேல ஆசை உண்டு, ஆனாப்பாரு உனக்கும் அவனுக்கும் வயசு வித்தியாசம், நீ சின்னபிள்ளை, அதைவிட பெரிய விசயம் நீ அந்தக்குடும்பத்துல உள்ளப் பொண்ணு, அதனாலதான் எதுவும் வெளியக்காண்பிக்காம இருந்திருப்பான் போல. அவனோட போன்லதான்மா உன்னை பார்த்தோம்"

மாமா போன்லயா என்னையவா. எப்படி என நிலாவிற்கு ஆச்சர்யம். சித்ராவிடம் கேட்டாள் “பழையக் கல்யாணத்துல உள்ள போட்டோவா அத்தை"

"இல்லடா அது எதோ உங்க காலஜ்ல உள்ளதுபோல, சேலைக்கட்டிருந்த அந்த போட்டோல"

நிலாவிற்கு புரிந்தது. அது எப்போ எடுத்தது என்று, சரிதான் ஐயா கீழவிழுந்தபிறகும் மீசையில மண் ஒட்டலைனு கெத்தா நிக்குறீங்களா. மாம்ஸ் இனி நானா நீங்களானுப் பார்த்துக்குறேன் என்று மனதில் நினைத்தவள்.

"எனக்குத் தெரிஞ்சு நீங்க இரண்டுபேரும் இன்னும் வாழவே ஆரம்பிக்கலை அப்படித்தானடா?"

நிலா தலைக்குனிந்து ஒன்றுமே சொல்லாம அமர்ந்திருந்தாள்.

சித்ரா அவளது கன்னத்தை தடவி 

“இலக்கியாவும் நீயும் எனக்கு ஒன்னுதான்மா. நீ எங்கவீட்டிற்கு வாழ வந்தப்பொண்ணு, எங்க குலந்தழைக்க வைக்க வந்தவள், அவளைவிட இங்க உனக்குத்தான் உரிமையும் பாசமும் அதிகம். வீட்டிற்கு வாழவந்தப் பொண்ணு கண்ணீர் வடித்தோ, மனம் நொந்தோ வாழக்கூடாது.

ஒன்னு மட்டும் நியாபகம் வச்சுக்கம்மா உன் வாழ்க்கை அவன் கையில் இல்லை. கதிர் வாழ்க்கைதான் உன் கையில, உனக்குப்புரியும்னு நினைக்கிறேன்.

உன்மேல மட்டுந்தான் நம்பிக்கை வைத்து மாமா இந்தக் கல்யாணத்தை நடத்தினாங்க.

இன்னொரு விசயம் கதிரால உன்னை வெறுக்கவே முடியாது காரணம் உனக்கேத் தெரியும், அதனால பார்த்து வாழ்க்கையைத் தொடங்குங்க என்னம்மா” என்று சித்ரா சொல்லிமுடித்தவர்.

பின்பக்க தோட்டத்தில் உள்ள பூவை பறித்து தொடுத்து அவளது தலையில் வைத்தும் விட்டார்.

உடனே எப்பவும்போல அவரது கன்னத்தில் முத்தம் வைத்து சரி அத்தை என்று தலையாட்டிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டாள்.

அதற்குள்ளாக கார் வரவும் எல்லாம் எடுத்துவைத்துவிட்டு, இருவரும் வேதநாயகத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வெளியே வரவும், நேத்து அவனைக் கேலிப்பேசிய கதிரின் அத்தைமகன் வண்டியில் வந்தவன்

"என்ன மாப்பிள அதுக்குள்ள ஊருக்கு கிளம்பிட்ட, நான் நல்ல மாப்பிள்ளை விருந்து தர்றேன் இருந்து சாப்பிட்டுட்டுப் போங்க அப்போதான தெம்பு வரும் பொண்டாட்டிய சமாளிக்கனும்ல” என்றதும் தான். கதிர் தன் சட்டையை மடித்துவிட்டுக்கொண்டே அவனருகில் சென்று வண்டியிலிருந்தவனை செந்தூக்காக அவன் கழுத்தைப் பிடித்து தூக்கியவன் கீழபோட்டு மிதிக்கவும் அவன் அரண்டுவிட்டான்.

நம்ம இன்னைக்குச் செத்தோம்டா என்று பயந்து ஓடத் துவங்கியவனின் சட்டையைப் பிடித்து தூக்கினான் அவனது கால்கள் இரண்டும் அந்தரத்தில், சித்ரா பயந்துப்போய் ஓடிவந்துக் கதிரைப்பிடிக்க அவரால் முடியவில்லை. 

அய்யனார் போல் வீறுகொண்டு நிற்பவனை பிடிப்பது யார்?

" பொறம்போக்கு பைத்தியக்காரன், என் தங்கச்சி விசயத்துல உன்னை கொன்னுப் புதைச்சிருந்தா இன்னைக்கு இப்படி பேசியிருக்கமாட்ட, சொந்த அத்தை மகன்னு விட்டுவச்சது தப்பாகிட்டது.

என் முன்னாடி நின்னுப் பேசக்கூடத் தகுதியில்லாத நீ, என்னையப் பார்த்து நையாண்டிப் பேசுற. 

கதிர் ஆம்பிள்ளைடா, எனக்குத் தெம்பிருக்கு இரண்டாவதென்ன மூணாவதுக்கூட கல்யாணம் செய்வேன் எனக்குப் பிடிச்சிருந்தா என்று மீசையை முறுக்கியவன்.

அமைதியாப் போனா தலையில ஏறி ஆடுவியோ?

இனி நான் ஊருக்கு வரும்போது என் கண்ணுமுன்னாடி வந்த, அதுக்கப்புறம் நீ உயிரோடவே இருக்கமாட்ட, நியாபகம் வச்சுக்க" என்று உக்கிரமாக நின்றவனைப் பார்த்து சிறிது பயந்தாலும் அவளோட மாம்ஸ் ஹீரோயிசம் பார்த்து, கதிர்மேலுள்ள கிறுக்கு இன்னமும் கூடிப்போச்சுது நிலாவிற்கு.

ஊருக்கு போகும் இவர்களைப் பார்க்கவந்து மணியரசுதான் ஓடிவந்துப் பிடித்தார்.

கதிரின் அத்தை மகனுக்கு இப்போது நன்றாக புரிந்தது.

அடிப்பட்டாலும் சிங்கம் சிங்கந்தான் என்று.

ஒரு விசயத்தில் லேசாக சறுக்கியதும், அவனைக்கீழாக நினைத்துப் பேசிவிட்டான். இப்போது அடிவாங்கியதும், வண்டியைக்கூட எடுக்காமல் ஓடிவிட்டான்.

சித்ராதான் கண்டித்தார் "என்ன ராசா நீ அவங்கூடெல்லாம் சண்டை போட்டுகிட்டு, துஷ்டன்னு தெரிந்தால் தூர விலகிடனும்"

" ம்மா, இவனையெல்லாம் சும்மாவிடக்கூடாது. நல்லவங்களுக்குத்தான் மரியாதைக் குடுக்கனும். இவனையெல்லாம்” என்று மறுபடியும் கை முஷ்டியை முறுக்கித் தன் கோபத்தை அடக்கினான்.

ஊருக்கு கிளம்பும்போது பிரச்சனையப்பாரு என்றவர், வா வந்து தண்ணியக்குடிச்சிட்டுப்போ என அவனை அழைத்து திண்ணையில் அமர்த்தி தண்ணிக் குடுத்தார். சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

நிலா நின்ற நிலையிலயே கண்ணெடுக்காமல் கணவனையே பார்த்திருந்தாள். ஹப்பா என்னவொரு ஆக்ரோஷம் 'கதிர் மாம்ஸ் இஸ் பேக்'.

அவளது முகத்தில் சந்தோசம் .

சித்ரா அவனை சமாதானப்படுத்தியப் பின்பே அனுப்பிவைத்தார்.

இருவரும் காரில் ஏறியமர்ந்த பின் மறுபடியும் நிலா இறங்கி வீட்டிற்குள் ஓடியவள் மாமனாரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தாள்.

கார் கிளம்பி ஊர் எல்லையைத் கடந்ததும்

கதிர் நிலாவிடம் கேட்டான். அப்படி என்ன வண்டிலயிருந்து இறங்கிப்போய் அப்பாகிட்ட பேசிட்டு வந்த?.

குனிங்க சொல்றேன் என்றவளிடம் குனிந்து காதைக்குடுக்க. அது எனக்கும் என் மாமாவிற்கும் உள்ள ரகசியம் என்று ரகசியக் குரலில் சொல்லக் கடுப்பாகிட்டான் கதிர். (எப்பவும் அவக்கிட்ட மொக்கை வாங்கிட்டு இருந்தா கடுப்பாகுமா? ஆகாதா?) அவளை முறைத்துப் பார்த்தவன், அப்படியே திரும்பி வெளியே வேடிக்கைப் பார்க்கலானான்.

நிலா அவனை சைட்டடிக்கும் வேலையை சரியாகச் செய்தாள். யதேச்சையாக திரும்பியவன் அவளைப் பார்த்து என்னவென்று கேட்க.

" இல்ல இன்னைக்குத் தூக்கிப்போட்டு மிதிச்ச மிதியை நேற்றே அத்தனைப்பேருக் கூட்டத்துலையும் தூக்கிப்போட்டு மிதிச்சிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்"

கதிர் "என்னச் சொல்ற" என்று கேட்வனிடம்.

“கூட நாலு மிதி மிதிப்பீங்கனு பார்த்தேன், அதுக்குள்ள அத்தை வந்து தடுத்திட்டாங்க” என்றதும்.

ஓ அப்போ நீ என்ன பிடிக்கவரலையா?

நா எதுக்குபிடிக்கனும் மணியரசு மாமவும், அத்தையும்தான் உங்களைப்பிடிச்சாங்க.

உனக்கு பயமா என்ன?

சேச்ச, இன்னும் அடிவாங்கட்டும் என நின்னேன். நேத்து உங்கள எப்படி அவமானப்படுத்தற மாதிரிப் பேசினான்.

அதான் நீங்க இன்னும் நல்ல அடிங்கன்னு பார்த்திட்டிருந்தேன்.

அவனுக்கு சிரிப்பு வந்தது அவள் முன்பு சிரிக்ககூடாதென்று வெளியேத்திரும்பி சிரித்தான்.

காரில் அமைதியாக வந்தவள், கதிர் திரும்பிப் பார்க்கும் போது தன் உடலைக் குறுக்கி இருக்கையில் அமர்ந்தவாறே தூங்கியிருந்தாள்.

அப்படிப் படுத்திருப்பதைப் பார்த்து அவளது தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டான். அவளது தலையில் இருந்த பூவெல்லாம் அவனது மடியில் உதிர்ந்தது.

அப்படியே அவனும் தலையை சாய்த்து படுத்திருந்தான், சரியான உடல்வலி அவனுக்கு அசந்து தூங்கிவிட்டான்.

வண்டி திடீரென நிற்கவும் கண்விழித்த கதிர் ட்ரைவரிடம் விசாரிக்க, சாப்பிட நிறுத்தியிருந்தான்.

அவளை மெதுவாகத் தட்டி எழுப்பவும், கட்டிலில் படுத்திருக்க நினைப்பில அவன் வயிற்றுப் பக்கமா திரும்பிப் படுத்து அவன் வயிற்றோடுக் கையைப் போட்டுப் பிடித்துக் கொண்டாள்.

அவன்தான் திண்டாடிப்போனான், மெதுவாகத் தட்டி எழுப்பினான்.

அவளைத்தான் ரசித்துக்கொண்டிருந்தான் இப்போது. நான்கு வருடத்திற்கு முன்பிருந்த அதே முயல்குட்டித்தான்.

என்னக் கொஞ்சம் வளர்ந்திருக்கா

அதே முயல்குட்டி துள்ளல்தான், வாய்தான் இப்பவும்.

மாமியாருக்கு முத்தங்குடுக்கறது மாறவேயில்லை, மாமானார நல்ல ஒரு நண்பனா மாத்திவைச்சிருக்கா, துறுதுறு முயல்குட்டி அவளை ரசித்தவன்.

ட்ரைவர் இவங்கப் போகலைன்னா சாப்பிடப்போக முடியாது என்று உணர்ந்தவன் அவளது இடுப்பில் கிள்ளி வைக்கவும் துள்ளி எழுந்தவள் தூக்கத்தில் என்ன? ஏது? என்று தெரியாமல் விழித்து அமர்ந்தவளைப் பார்த்து கார்ல இருந்து இறங்கு சாப்பிட போகணும் என்று சொல்லவும்.

ஏன் எழுப்பினீங்க இப்போ, நேத்து இராத்திரி உங்களை காணும்னு பயந்து தூக்கமே வரலை, அழுகையா வந்துச்சு இப்போ தூக்கமா வருது என்று அரைத்தூக்கத்தில் சொன்னவளைப் பார்த்து அவனின் மனது இளகியது.

தண்ணிப்பாட்டிலைக் கையில் கொடுத்து முகங்கழுவச்சொல்லி சாப்பிட அழைத்துச் சென்றான்.

சாப்பிடுற இடத்தை சுற்றிப்பார்த்தவள் அப்படியே அமைதியாக இருக்க" ஓய்,மொசக்குட்டி சாப்பிட என்ன வேணும் சொல்லு"

அவள்"உங்களுக்குப்பிடிச்சத சொல்லுங்க"

என்று அமைதியாக தூக்கக் கலக்கத்துலயே இருந்ததுனால அவன் என்ன சொல்லி அழைத்தான் என்று கவனிக்கவில்லை.

சாப்பாடு வந்தப்பிறகும் அவள் அமைதியாக இருக்கவும் "சாப்பாடு முன்னாடியிருந்து தூங்காத, சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு பாவம் நமக்காக ட்ரைவர் காத்திருப்பான்"

"தூங்கிட்டிருந்தவளை எழுப்பி சாப்பிடு சாப்பிடு சொன்னா, எப்படி மாம்ஸ்"

இப்போ சாப்பிடலைனா நாளைக்கு நீ விட்டுக்கு போனதுக்கு அப்பறமா சமைச்சித்தான் சாப்பிடனும். உனக்கு எது வசதி என்று கேட்டு நிறுத்தினான்.

ஐயோ! நேத்திலயிருந்து இன்னைக்கு மதியம் வரைக்கும் பட்டினிதான் நீங்க சாப்பிடும்போது கொஞ்சமா சாப்பிட்டது என்றவள் மெதுவா சாப்பிட ஆரம்பித்தாள்.

பட்டினியா இருந்திருக்கிறாள் என்று கேட்கும்போதே, என்னடா நீ நேத்து இப்படி நடந்திருக்க என்று அவனது மனசாட்சியே உறுத்தியது.

அவள் சாப்பிடுறேன் பேர்வழினு கொறிச்சுட்டு இருந்தாள்.

"இதுதான் உங்க ஊர்பாஷைல சாப்பிடறதுனு பேரோ, என்று அவளது தட்டை காண்பித்துக் கேட்க"

ஆமா, உங்கவூருல இதுக்குபேரு என்னவாம்?

உங்கவூரா, என்னோட ஊருதான்டி உன்னோட ஊரும் இனி. இப்போ நீ சென்னை வாசி.

சென்னைக்காரியில்ல புரியுதா, சீக்கிரம் சாப்பிட்டுக் கிளம்பு என்று அவளை அவசரமாக சாப்பிடவைத்து மறுபடியும் காருக்கு வந்து சேர, பாவம் ட்ரைவர் காத்திருந்தான்.

மறுபடியும் தூங்கப்போனவள் சட்டென்று நியாபகம் வந்தவளாக.

"சாப்பிடும்போது என்னவோ சென்னீங்களே, அது என்னக்குட்டி"

" ஹான், ஆட்டுக்குட்டி"

" ஓஓ..அப்படியா"

உண்மையில் அது என்னனு அவளுக்குத் தெரியவில்லை.

கதிருக்கு சிரிப்பை அடக்கமுடியாமல் நல்ல சத்தமாக சிரிக்கவும்,.

"சிரிக்காதிங்க, எனக்குத் தெரியாமத்தானக் கேட்டேன், ஏன் சிரிக்கீங்க"

அவன் சிரிப்பை நிறுத்தாதிறுக்கவும், எம்பி அவன் வாயை தனது கையால் மூடினாள்

"இனி சிரிச்சீங்க கொன்றுவேன்" என்று மிரட்டியவள் இப்போதுதான் பார்த்தாள், அவன் கண்களில் வேறுயெதோ இருந்தது.

அமைதியாகியவள் இப்போது தான் உணர்ந்தாள், அவனின் மடியில் அமர்ந்துக்கொண்டிருக்கிறாள் என்று.

அதைவிட கதிர் அவளது இடுப்பை சுற்றித்தன் கைகளை படரவிட்டிருந்தான்.

மெதுவாக அவனிடமிருந்து விலகியவள்.

அமைதியாக நல்லபிள்ளையாக அமர்ந்திருந்தாள்.

"தூக்கம் வருதுன்னு சொன்ன, தூங்கு

நாளைக்கு காலையிலதான் சென்னைப் போய்ச்சேரப் போறோம். படுத்து தூங்கு என்றவன் அவள் படுக்கவும் மறுபடியும் அவள் தலையை தன் மடியில் தாங்கி அவனும் தூங்கினான்.

அதிகாலையில் சென்னை வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

உள்ளே வந்தவளைக் காணவில்லை என்று அவன்தேட, அவளோ நன்றாக முன்னறையின் இருக்கையில் சரிந்து நல்ல நித்திரையில்.

அப்படியே அவளைத் தூக்கினான், நிலாவிற்கோ எதோ அந்தரத்தில் மிதக்கின்ற கனவு.

சிறிது நேரத்தில் கதிரின் மஞ்சத்தில் நிலா.

அத்தியாயம்-8

கதிர் தனது கரங்களில் அவளையேந்திக்கொண்டு படியேறும்போதே நினைத்தான் பொம்மையத் தூக்கிட்டுப்போற மாதிரி காற்றுப்போல இருந்தாள்...

தூக்கத்தைப் பாரு, ஒருத்தன் தூக்கிட்டுப்போறானேனு ஒரு உணர்வுமில்லாமல், தூங்குமூஞ்சி வெளியயிருந்து எவனாது தூக்கிட்டுப்போனாலும் தெரியாது....

இப்படியே படியில உருட்டிவிட்ருவோமா என்றுதான் சிந்தனை...

மொசக்குட்டி... தூங்கும்போதுக்கூட புன்னகையோடு தூங்குது பாரு என சிரித்தவன் அறைக்குள் சென்று கட்டிலில் போடவும், விழித்து சுற்றி பார்த்தவள், தங்களது அறையென்றதும், ஹய்யா இங்க எப்படி வந்தேன்?

நா கீழதானப் படுத்திருந்தேன்... என்று யோசித்தவள் " மாம்ஸ் நீங்களா என்னை தூக்கிட்டு வந்தீங்க! என ஆச்சர்யப்பட்டவள்,

அப்படியே கட்டிலிலயே எழுந்து நின்று

தூக்கத்தில் நீங்க தூக்கினது தெரியல மாம்ஸ்..ப்ளீஸ் ப்ளீஸ் இப்போ என்னைய தூக்குங்க” என நின்றிருந்தாள்...

அவளை கட்டிலில் விட்டவன் உடைமாற்ற ஆரம்பித்து, தன் சட்டையைக் கழற்றியிருந்தான்.

அவள் கேட்கவும் பெண்ணவளின் வெகுளித்தனமான செய்கையில்...

தன் கைகளில் தூக்கினான், இப்போது கணவனின் கைகளில் இருந்துக்கொண்டு கழுத்தைசுற்றி கையைப் போட்டுப் பிடித்துக்கொண்டவள்...

என்னைத் தூக்க உங்களுக்கு கஷ்டமா இல்லையா? 

மொசக்குட்டி மாதிரி இருக்க உன்னைத் தூக்குறது சுலபம்தான். என்றவனது வெற்றுமார்பில் கைவைத்து தடவியவள் அப்படியே அவனது தோளை அழுத்தி செம ஸ்ட்ராங்க், நீங்க சரியான நாட்டுக்கட்டை மாம்ஸ் என்று பேசியபடியே அவன் கண்களைப் பார்க்க அது எப்பவும்போல் இல்லாமல் அதில் சுவாரஷ்யம் இருந்தது...

அவள் கண்களைத்தான் பார்த்திருந்தான். அவளும்..

கண்கள் என்ன செய்தி பரிமாறிக்கொண்டதுவோ?

அவளை இறக்கிவிட முற்பட, அவள் கைகள் மாலையாக அவன்கழுத்தில், அப்படியே அவளின் முன்னழகு பெட்டகம் அவன் மார்போடு அழுந்த, இதற்குமேல் தாங்காதென உணர்ந்தவன்...

தனது இருகரத்தாலும் பெண்ணவளின் முகத்தினைப் பற்றி, குனிந்து மெதுவாக அவளது இதழ்களை உதட்டினால் மூடியிருந்தான், அவளுக்கு வலிக்குமோவென்று பூவிதழை தன் நாவினால் திறந்தவன் முத்தச்சுவையோடு, அறுசுவையையும் அவளது உதட்டில் அறியமுற்பட்டான்...

பாவம் அவன் இப்போது பித்தாகி அறுசுவையல்லாமல், அவளது இதழமுதமும் சேர்ந்து...

தென்னங்கள்ளோ! முக்கனிச்சாறோ!

தேனின் சுவையோ! இன்ப பாலின் சுவையோ!

இல்லை இல்லை இன்பத்துப்பாலின் சுவையென்றுணர்ந்து ....

வாயோடு வாய் வைத்து உயிரோடு உறிந்து எடுத்தானவன்...

அவள் மூச்சிற்காக ஏங்கி அவனது திரண்டத்தோள்களை அழுத்திப்பிடிக்க, அவளது நெஞ்சுக்கூடும் ஏறியிறங்கியதை வைத்து அவளை விடுவித்தவன், கட்டிலில் அமர்ந்து தனது மடியில் மனையாளை இருத்திக்கொண்டான்.

நிலாவின் பின்பக்கமாக தோளில் தன் முகத்தைவைத்து அழுத்தி, அவளது கரத்தோடு தனது கரத்தைப் பிணைத்து, விரல்களோடு விரல்கோர்த்து அப்படியே அமர்ந்திருந்தான், அவனுக்கு இன்னும் சிறுதயக்கம் இருந்தது அதை உணர்ந்தவள்...

"மாம்ஸ்"

"ம்ம்ம்"

எனக்கு எத்தனை வயசாகுது?

அவன் பதிலுரைக்காது அமைதியாக இருக்கவும்...

"எனக்கு 21 வயது முடிந்து 22 தொடங்கியாச்சு, சட்டப்படியான திருமணவயது தாண்டிட்டு, நீங்க சொல்றமாதிரி நான் ஒன்னும் சின்னபிள்ளையில்லை" என்றதும் சடுதியில் அவன்பக்கம் திரும்பினவள், அடர்த்தியான பெரிய மீசைக்குள் ஒளிந்திருக்கும் அவனது கீழுதட்டை கடித்திழுத்திருந்தாள்.

என் முத்தங்களின் எண்ணிக்கை 

உன் மீசைக்குள்...

என் ரகசிய கனவுகளின் திறவுகோல் 

உன் உதட்டிற்குள்!!!

அவ்வளவுதான் கதிரின் கட்டுபாடுகள் மொத்தாமா அறுந்துபோயின இப்போது. அவள் தொடங்கியதை அவன் தொடர்ந்தான்.

நிலாவின் அதரங்கள் கதிரின் பருத்த உதடுகளுக்குள் சுவிங்கமாக அரைபட்டது.

அவளது பின் கழுத்தில் கைவைத்து அழுத்திப்பிடித்திருந்தவன், ஒரு கட்டத்திற்கு மேல் அவனது கைகள் தனது வேலையை அவளுடலில் காண்பிக்க துடித்து நெளிந்துக் கொடுக்க,

அவளது பெண்மையின் செழுமை பாறைப்போன்ற அவனது நெஞ்சில் பஞ்சாக அழுந்தபதிந்தது.

இனிதாங்காதென்று அவளது இடையைப்பிடித்து மெத்தையிலிட்டவன், அவளோடு தானும் சரிந்து கன்னங்களை வருடிக்கொடுத்து,

கண்களில் அவ்வளவுக் காதலைத் தேக்கிப் பார்த்தவன், எல்லாத்தடைகளையும் மனதிலிருந்தகற்றி பெண்ணவளைத் தன் பெண்டாகப் பார்த்தான்...

கணவனுக்கான பார்வை சிறிவளைத் துண்டாடக் காத்திருந்தன, சட்டென்று சேலை முந்தானையை முற்றிலும் நீக்கி அவளது கண்ணிமைகளை பிடித்திருந்தான், இதை எதிர்பாரதவள் கைகள் கொண்டு தடுக்கும் முன் காளையவன் கடித்திழுத்திருந்தான்,

" ஹான் மாமா " என்று வாய்பிளந்தவள்தான், அதன்பின் அவனது கையின் ஆளுமைக்குள் அவளது மார்புகள் அடங்கிவிட, பெண்ணவளுக்கு உணர்வுகள் தாங்காது அவனது கேசத்தைப் பற்றியிருந்தாள்...

கதிர் நிமிர்ந்துப் பார்த்தான், அவளோ உணர்வுகளைக் கையாளத்தெரியாமல் தன் உதடுக்கடித்து தலைசாய்த்து அவனுக்கு தன் பெண்மையை விட்டுக்கொடுத்திருந்தாள்.

நிலா இப்போது தன் வயிற்றை எக்கி மூச்சு உள்ளிழுக்க, உணர்வு செல்கள் ஒவ்வொன்றும் வெடிக்க பிடிமானம் இல்லாமல் அவனது தலையை பிடித்திக்கொள்ள, பெண்ணவளின் உந்திச்சுழியினை தன் நாவின் ஈரத்தால் , நாயகனவன் அதன் ஆழத்தையும் சுற்றளவையும் அளந்துக்

கொண்டிருந்தவன், சட்டென்று மேலறி அவளது பெண்மையை இருகரத்தாலும் பிடித்திருந்தான்...

அவனது செயல்கள் எல்லாம் அவனது காதலையும் அன்பையும் உடல்மொழிவழியாக அவளிடம் கடத்த நினைத்து மென்மையாக தொடங்கினான்

தன் ஆண்மைக்கான தேடலை..

அவனது அழுத்தம் அவளது அல்லிமொட்டுக்களில் சிறிதானதொரு வலியோடு சேர்ந்த சுகத்தைதர கைககளைப்பிடித்து "வேண்டாம் மாமா" என்றவளின் காதில் ரகசியக்குரலில் 

" 21 வயசு முடிஞ்சு சட்டப்படி தயராயிருக்கேன்னு சொன்னதான மொசக்குட்டி, இப்போ என்ன வேண்டாம்? ம்ம்ம், இப்படி மிரண்டுப்பார்க்குற, இனிதான் உண்மையான திருமண வாழ்கையின் அரிச்சுவடியேயிருக்கு எப்படித் தாங்குவ" என்றதும் நிலாவின் கண்கள் இரண்டும் பயந்து நர்த்தனமாடியது...

வாய் மட்டுந்தான் அப்படித்தான என்று பேச மீசைமுடி அவளது காதில் குறுகுறுப்புக் காட்ட, கூச்சத்தில் நெளிய அவளின் அங்கலாவண்யங்கள் அவனை இன்னும் மயக்கம் கலந்து கிறங்கச்செய்தது...

பூவையவளின் கன்னங்களை வருடி, காதுமடல் தன் பற்களுக்கிடையில் பிடித்து அப்படியே பேசி சகஜமாக்கியவன்..

பெண்மைக் கோளங்களை கையில் அழுந்தப்பிடித்து, தன் கரங்களால் அளவெடுக்க, அதனைத் தன் இளைமைப்பசிக்கு உணவாக, கடித்து, பிழிந்து,சுவைத்து பசியாற உண்டுக்கொண்டிருந்தான்...

இளமைபசியெங்குத்தீர, அது அதிகமாகியது.

கதிரென்னும் காளை தன் கட்டவிழ்ந்து கன்னியவளை முட்டிக்கொண்டிருந்தான்.

கதிரின் ஒவ்வொரு அசைவிற்கும் ஆயிரம் பூக்கள் நிலாவின் பெண்மையில் பூத்திருக்க, அவளது ஒவ்வொரு இரத்த நாளங்களும் துடித்து வெடித்து அவனது எச்சில் முத்தத்திற்காக ஏங்கின...

கண்களோ காளையவனின் மேல் அவளுக்கு எவ்வளவு பித்தென்று, அவனது ஒவ்வொரு செயலுக்கும் கிறங்கி, மயங்கி,விழிகளிலே ஆயிரம் பாவனைகளைக்காட்ட, விழிமொழி படித்தே உறவில் முன்னேறினான்.

இப்போது அவனது உதடுகள் நிலாவின் இதழ்களை கடித்துப் பற்கள் இடிபட, ஒவ்வொரு நொடியும் அவன் அசைந்து இதழமுதம் உறிந்தெடுக்க அதற்கு தாளமாக அவளது சங்குகழுத்து ஒவ்வொரு உறிதலுக்கும் ஏறியிறங்கி

லயம் அமைத்தது...

மொத்தமாக அவளது ஆடைகளை களைந்தெறித்தவன், முழுதாய் பெண்ணுடலை முதன்முறையாக பார்க்க,

அவனது கண்களின் ரசனையே மாறியது,

அப்படியே ஆடையற்ற அவளை தன்னோடு அணைத்தவன், துணியற்ற இரு சிற்பங்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது, அவளது தொடைகளின் இடைவெளியில் தன் கால்களை நூழைத்து கன்னியவளின் பெண்மையில் தன்னைத்தேடினான்...

உணர்வின் உச்சம்பெற்று அவள் பெண்மைக்குள் தன்னை இறக்கினான், அந்த ஒரு கணப்பொழுது உயிர்வலியில் உயிரேங்கித்துடித்து, கண்கள் சிவந்து ,தானக கண்ணீர் வடிய துடித்துப்போனாள்..

அவளது உணர்வு பிரதிபலிப்பைக் கண்டவன் பதறி, அதேநிலையில் இருந்தே தேற்றினான். அவளது தேகமெங்கும் நடுக்கத்தின் அலைகள் பரவ, அவன் தன்னை மெதுமெதுவாக அசைத்து, இசைத்து அவளது உயிருக்குள் இறங்கியவனின் தேகமெங்கும் சுகவுணர்வு, அவனது ஆண்மைக்கான செயலல்லவா...

இன்னும் இன்னும் அவளுள் இறங்கி இருவுடலும், இருவுயிரும் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தன.

ஒவ்வொரு அசைவிற்கும் முத்தமிட்டு முத்தமிட்டு அவளின் பெண்மைக்குள் இருக்கும் பொக்கிஷத்தை களவாடி, சொர்க்கத்தை தொட்டுமீண்டனர் இருவரும்.

எல்லாம் முடித்து எழுந்தவன் அவளை எழுப்ப, இன்னும் உறவின்நிலைத் தாளாது நடுங்கியது.

அவளது தேக உதறளைக் கண்டவன்,

மீண்டுமாக அவளைத் தனக்குள் கொண்டுவந்து, முதுகை வருடி, முடியை மெதுவாக கேதிவிட்டவன்.

மென்மையாக " மொசக்குட்டி, என்ன பயந்திட்டியா, முதல்ல இப்படித்தான் இருக்கும் மெதுவா சரியாகிவிடும்" என்ற அவளது கண்களில் முத்தம் வைத்து,வா குளிச்சிரு என அவளை சமாதானப்படுத்தியவனுக்குத் தெரியும்,

உறவின் இறுதி நேரத்தில் கொஞ்சம் திமிறி நடந்தது, அது இயற்கை, மாற்ற முடியாது. எனக்காக படைக்கப்பட்டவள், அப்போ கண்டிப்பா எனைத்தாங்கும் சக்தியும் வரணும். இனி சிறுபிள்ளையென்று விடமுடியாது.

மெதுவாக அவளை எழுப்பி குளித்து வந்து படுத்தனர்.

இப்போதும் பெண்ணவளின் உடல் இன்னும் நடுக்கத்தில் அதிர்ந்தது.

தன் மடியில் இருத்தி கன்னம், உதடு, கழுத்து என்று கிடைத்த இடமெல்லாம காட்டுமுத்தம் வைத்து அவளை சிறிது சமன்படுத்தினான்.

" மொசக்குட்டி" இதைக்கேட்டதும் நிலாத் திரும்பி அவன் கண்களைப் பார்க்க அழகான கவிதையான நேரங்கள் அது.

அது நம்மவூருப்பக்கம் முயலை இபபடித்தான சொல்லுவோம். நீயும் அப்படித்தான் பார்த்த, முதல் நாளே யாருடா இந்த மொசக்குட்டி நம்மள வச்சக்கண் வாங்கம பாக்குது நினைச்சேன்.

உனக்கு அந்தபேருதான் சரியா இருக்கும்.

"என் செல்ல மொசக்குட்டி" என்று அவளது கன்னத்தில் ஈரமுத்தம் வைத்தவன்

வா தூங்குவோம் என்று தனது கைவளைவிலயே வைத்து தூங்கினான்.

நல்லபசி உணர்வில் புரண்டுப்படுத்த கதிர், மெதுவாக எழும்பியவன் நிலாவைப் பார்க்க அவள் இன்னும் தூக்கத்தில்.

எழும்பியவன் மணியைப் பார்க்க அது மதியம் இரண்டு மணி. இனி சமைச்சு சாப்பிடமுடியாது என்றுணர்ந்தவன் கிளம்பி வெளியே சென்று உணவு வாங்கி வந்தவன் நிலாவை எழுப்ப மெதுவாக எழும்பியவளின் முகம் லேசாக வீங்கியிருக்க அயர்ந்திருந்தாள்.

அவளது கழுத்தை தொட்டுப் பார்த்தவன் ஜுரம் ஒன்னுமில்லை ஆனாலும் ஒருமாதிரி அப்படியே உற்சாகமில்லாமல் இருந்தாள்.

"நிலாம்மா" என்றதும் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள், அவளது கைப்பிடித்து தூக்கி நிற்த்தியவன் " போய் பிரஸ்ஸாகிட்டுவா, சாப்பிடலாம்" மெதுவாக நடந்து சென்றவளைப் பார்த்தவனுக்கு மனது உறத்தியது, அவசரப்பட்டுட்டமோ என.

எப்படி இருந்தாலும் இந்த நாளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் அது இன்னைக்கு முடிந்தது அவ்வளவுதான் கல்யாணமும் செய்தாச்சு, வாழ்க்கையையும் தொடங்கியச்சு, இனி அடுத்தது என்ன சிந்தனையில் இருக்கவும், நிலா வெளியவந்தாள்.

கீழ சாப்பாட்டு மேஜையில் எல்லாம் எடுத்துவைத்தவன் ஒரே தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்து அவளுக்கும் ஊட்டிவிட்டான்.

அவனையே பார்த்திருக்க, அவனும் கண்களால் என்னவென்று கேட்க,

அவன் ஊட்டிவிடுறதை கைகாண்பித்தாள்.

இதெல்லாம ஒன்றுமில்லாததுபோல அவளுக்கு சாப்பாடு ஊட்டுவதிலயே கவனமாக இருந்தான். 

பின் தானும் சாப்பிட்டு முன்னறையில் வந்து உட்காரவும், அவளை அருகே அமர்த்தி

"லேடி டாக்டர் யாருக்கிட்டயாவது போவோமா" என அவளது விழிப்பார்த்துக் கேட்க.

நிலாவிற்கோ ஆச்சர்யம் ஆம்பலாய் கண்களை விரித்தவள், வெட்கம்மேலிட வேண்டாமென்று தலையாட்டினாள். 

ஏற்கனவே அவன் உள்ளமெல்லாம் அவளே, நிறைந்திருந்தாள் இப்போது உடலிலும் அவளே..

தொடங்கியாகிட்டு இனி தொடர்வதுதானே முறை நிலாவை காலையில் தூக்கியதுப்போல இப்போதும் தூக்கிக்கொண்டு படியேற அவளது முகம் இப்போது கொஞ்சம் சந்தோசத்திற்கு மாறியது. அறைக்குள் சென்று இறக்கிவிட எத்தனிக்க, அவளோ நன்றாக சாய்ந்து அவன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு இறங்க மறுக்க. 

அவளது கண்கள் கிறக்கத்திலிருக்க புரிந்தவன் அப்படியே அவளோடு சேர்ந்தே கட்டிலில் சரிந்தான்.

"மொசக்குட்டி, வேண்டாம் உனக்கு கஷ்டமாயிருக்கும், என்றதும் இல்லையெனத் தலையைசைத்தும்,

மறுபடியுமாக முதலிலிருந்தே கதிர் தொடங்க, மீண்டுமாக அவளோடு இணைய, மனையாளுக்கு தாம்பத்தியத்தின் அச்சரம் விளங்கியது. 

தம்பத்தயப்பாடம் அவளுக்கு இன்னும் தெளிவாக புரிய தொடர்ந்து கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

மாலைப்பொழுதில் நல்லத்தூக்கத்தில் அவனது போனின் சத்தம் கேட்க எடுத்துப் பார்த்தவன் அம்மா என்றதும் அழைப்பை ஏற்று பேசினான்.

"காலையிலயே வந்திட்டோம்மா, நல்லத்தூங்கிட்டோம், சரி அப்பா எப்படியிருக்காங்க, கவனமா பார்த்துக்காங்க" என்று வைத்தான்.

கதிர் கட்டிலில் வந்து அமர்ந்தவன் மனையாளைத்தான் பார்த்திருந்தான்.

இவளுக்கு நான் என்ன செய்தேன்னு இவள் என்னை இவ்வளவு நேசிக்கிறாள்.

‘மொசக்குட்டி, வாழ்க்கையே வேண்டாம்னு இருந்தவனது, வாழ்க்கையில மட்டுமா? நெஞ்சுக்குள்ளும், உயிருக்குள்ளும் நுழைந்துவிட்டாள்’ என்று அயர்ந்து தூங்கும் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அத்தியாயம்-9

கதிர்- நிலா இருவரும் தங்களது குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியதும்,கதிருக்கு ஒரு நிறைவான சந்தோசம், அவனது முகத்தில் எப்போதும் புன்னகை தவழ்ந்தது .

காலையில் சீக்கிரமாக எழும்பியவன் மனையாளைப் பார்க்க, அவள் நேற்றிரவு நிகழ்வின் பலனாக நல்ல நித்திரையில்.

குளித்துவிட்டு சமையலறைக்கு போனவன் காபி போட்டு அறைக்குள் கொண்டுவந்து அவளை எழுப்ப...

குட்மார்னிங் மாம்ஸ் என்றவள் காபி எடுக்கப்போக...பிரஷ் பண்ணாம காபி சாப்பிடுற சுத்தமேயில்லை போ என்று விரட்டவும், பிரஷ் செய்து வந்தவள் காபியை கையில் வைத்துக்கொண்டு பால்கனியில் கீழே அமர்ந்து ரசித்து குடிக்க ஆரம்பித்தாள், அவளது அருகில் வந்து அமர்ந்தான், அவளது கேசத்தை ஒதுக்கிவிடவும் அவள் திரும்பி பார்த்து தலைசாய்த்து சிரித்தாள். 

இந்தப் புன்னகைதான் இன்னும் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கு என்ற சிந்தனையோடு, அவளது முகத்தை தனது வலதுகையால் திருப்பியவன் சட்டென்று 

அந்த புன்னைகைமயமான உதடுகளை காபியோடு சேர்த்து சுவைக்கத் தொடங்கியவன், முத்தத்தில் கண்கள் கிறங்க லயித்திருந்தாள்.. 

இந்த மூன்று நாள் முற்றிலும் வேறான கதிரைப் பார்க்கிறாள், இவன் முற்றிலும் புதியவன், எவ்வளவு காதலோடு இருக்கின்றான் என்னிடம் என்ற சிந்தையிலயே அவளும் கண்களை மூடி அவனை உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.

மெதுவாக அவளை விடுத்தவன் காபி ரொம்ப சுவையா இருக்கு என்று அவளது உதட்டினை விரல்களால் தொட்டுக் தடவினான்.

அவளைத்தூக்கித் தன் மடியினில் வைத்துக்கொண்டு "மொசக்குட்டி இன்னும் ஐஞ்சு நாளில் காலேஜ் திறந்திரும்.."

அவன் சொல்லிமுடிக்கும் முன்பே அவள்

" நான் வரமாட்டேன். நான் படிக்கலை, படிப்பை நிறுத்தப்போறேன்" என்றதும்தான்...

அவளை மடியிலிருந்து இறக்கிவிட்டான்,

நிலாவோ என்னவென்று பார்க்க...

முகத்தில் கோபத்தின் சாயல்" எத்தனைப்பேரு படிக்கமுடியாம கஷ்டப்படுறாங்க, உனக்கு அது சுலபமாக கிடைச்சவுடனே அதனோட மதிப்புத் தெரியலை, நான் எப்படிப் படிச்சேன் தெரியுமா?" என்று கேட்டதும்,

நிலா தலையை தெரியாது என்று ஆட்டவும்.

வயல் வேலைக்குப்போயிட்டு வந்து படிச்சேன். நீ என்னடானா படிக்கலைனு சொல்ற...ஹான்...

"அப்போ நீங்க என்ன சொல்ல வந்தீங்க" என பரிதாபமாக முழித்தாள்.

"சொலவந்ததை முழுசாக் கேளு, உன்ன நானே கூட்டிட்டுப்போயிடுவேன் காலேஜ்க்கு. ஆன வீட்ல வேலையெல்லாம் பார்க்க கஷ்டமா இருக்கும், அதுதான் வேலைக்கு ஆள்வைக்கணும் அத சொல்லத்தொடங்கினா, நீ படிப்ப பாதியில நிறுத்துறனு சொல்ற"

"அப்படியா"

" ஆமா, சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் தனித்தனியா ஏற்பாடு பண்ணவா எப்படி என அவளிடம் கேட்க அவள் சொன்ன பதிலில் எரிச்சலடைந்தான்.

" எங்க வீட்ல எல்லாத்துக்கும் தனித்தனியா ஆட்கள் வருவாங்க, சமையலுக்கு ஒரு அம்மா வருவாங்க, அம்மா பக்கத்துல நின்னுப் பாரத்துப்பாங்க".

"என்னது எங்கவீடா, அப்போ இது யாரு வீடு என் வீடா" என்றவனது கோபம் புரிந்தது அவளுக்கு.

"அது எப்பவும் சொல்றமாதிரி வந்துட்டு, சாரி " என்க.

"தென்னவன் வீட்ல என்ன பண்றாங்கனு நான் கேட்கலே, என் வீட்ல என்னப் பண்ணலாம்னு என் மனைவிக்கிட்டு ஆலோசனைக்கேட்டேன், இங்க நிலாவும் கதிரும் மட்டும்தான் வரணும் சரியா..

என்ன முடிவு நீயே சொல்லு"

அவளுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை சமையல் நான் செய்திடுவேன், வீட்டுவேலைக்கு ஆள் பாருங்க போதும் என்றாள்.

"ச்ச், சமையல் வேலை செய்திட்டு எப்போ படிப்ப, எப்படி ரெடியாகுவ அது சரியா வராது"

"இல்ல நான் சமாளிச்சிருவேன்"

லேசாக சிரித்தவன் "நம்ம இரண்டுபேருக்கும் கல்யாணத்திற்கு பேசறாங்கனு தெரிஞ்சு உன்கிட்ட வந்து பேசினேன் ஞாபகமிருக்கா" என்று அவளைப்பார்க்க..

நிலா மெதுவாக எழும்பியவள் அப்படியா! எப்போ மாம்ஸ் பேசினோம்?

எனக்கு நியபாகமில்லை... என்று சொல்லிவிட்டு படபடவெனக் கீழே இறங்கி சென்றுவிட்டாள்.

“அவள் செல்லவும் எப்படியும் என்கிட்டதான நீ வந்தாகனும், அப்போ இருக்கு” என்றான்.

நிலா காலை சாப்பாடு செய்துவைத்துவிட்டு, கதிரை அழைக்க சாப்பிட வந்து அமர்ந்தவனுக்கு பரிமாற நின்றிருக்க, அவளது கையைப்பிடித்து தன்னருகில் இருத்தியவன், இருக்குறது இரண்டுப்பேரு அதுல நான் தனியா நீ தனியா சாப்பிடனுமா?

இருவரும் சாப்பிட்டு முடிக்கவும், போனில் அழைப்பு எடுத்துப்பேச அது இலக்கியா என்றதும் தன் தங்கையிடம் நலம் விசாரித்துப் பேசிக்கொண்டிருக்க, அவளோ மெதுவாக வெளியே சென்றமர்ந்தவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள.

பேசிமுடித்து வந்தவன் நிலாவிடம் "நிலா, இலக்கியா நம்ம எப்போ அந்த ஹனிமூன் கோவா ட்ரிப்ஸ் போறோம்னு கேட்கிறா, 

இப்போ போகலாமா” என்று கிறக்கத்தில் கேட்க, அவள் பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

மயக்கம்போய் இப்போ அவனுக்கு கோபம். எதுவாகயிருந்தாலும் எனக்கு பதில் சொல்லிட்டுப்போகாம இது என்ன பழக்கம் என்று நினைத்தன். 

தன்னுடையக் கல்லூரி வேலையை கீழே முன்னறையில் வைத்துச் செய்துக்கொண்டிருக்க, அவனுக்கு டீ போட்டு கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனாள்.

அரைமணிநேரம் கழித்துவந்து பார்த்தாள் டீயை அவன் தொடவேயில்லை அப்படியே இருப்பதைப்பார்த்து.

" டீ ஏன் குடிக்கலை"

அந்தநேரக் கோபத்தில் சென்றவளுக்கு எதுக்காக என்ற காரணமும், அந்த நிகழ்வே மறந்து அவனிடம் பேச...

அவனோ எதுவும் பேசாமல் அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மறுபடியும் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

நிலா ஏன் ஒன்னுமே பேசலை என்ற சிந்தனையில் கப்பை எடுத்துக்கொண்டுப் போக...

இவன் அவளது குழம்பிய முகத்தைப்பார்த்து, 

திரும்பிவரட்டும் என்றிருந்தான்.

மறுபடியும் டீ எடுத்துவந்தவள் வைத்துவிட்டு அங்கயே அமர்ந்துக்கொண்டாள்.

அவன் அவளை சட்டை செய்யவேயில்லை என்றதும்...

அவனது லேப்டாப்பை எடுத்து தனது மடியில் வைத்துக்கொண்டு, அவனை முறைத்துப்பார்க்க,

உன் முறைப்பு என்னை ஒன்றுஞ்செய்யாது என்ற ரீதியில் கால்நீட்டி சோபாவில் சாய்ந்து படுத்துக்கொண்டான்...

கொஞ்சநேரம் பார்த்திருந்தவள் எழும்பி அவனருகில் வந்தவள் அப்படியே அவன் மீதே கவிழ்ந்துப்படுத்துக்கொண்டாள்.

கதிர் இதை எதிர்பார்க்கவில்லை, நிலா எதுவும் பேசுவாள் என்று நினைத்திருக்க, இவளென்ன நம்மமேல வந்துப்படுத்துகிட்டா, கொஞ்சம் அசைந்தாலும் இருவரும் கீழே விழும் நிலை.

"மொசக்குட்டி எந்திருடி" 

அவள் அவன் சொன்னது காதில் விழாதவாறுப் படுத்திருக்கவும், என்னடி பிரச்சனை உனக்கு என்க..

நிலா தலையைத்தூக்கி அண்ணார்ந்துப் பார்த்து அந்தக் கேள்வியை நான் கேட்கனும், ஏன் டீ தந்தும் குடிக்கல, என்ன முறைச்சிப் பார்த்தீங்க...உங்களுக்கு என்னப் பிரச்சனை.

கதிர் சொன்னான் நான் ஹனிமூன் பத்திக்கேட்டன் அதுக்கு ஒன்னு சரின்னு சொல்லிருக்கனும், இல்லனா வேண்டாம்னு சொல்லிருக்கனும் அமைதியா போனா என்ன அர்த்தம். என்னோட வார்த்தையை மதிக்கலனுதான அர்த்தம்.

ஐயோ, அது இலக்கியா அண்ணிக்கிட்ட பேசிட்டு என்கிட்ட கேட்கவும் கொஞ்சமா வருத்தம், அதுதான் அமைதியாக போனேன்...

நம்ம வேறயெங்காயாவது போகலாமா? என்றவளிடம் கதிர் அது சரிவராது அதுவேற குடும்பத்துல பிரச்சனையாகும், அவ தந்த கிப்ட்ல போகலைன்னா எங்கயும் போகவேண்டாம் என முடிவாகச் சொன்னவன், கீழ இறங்கு வேலை செய்யனும்.

நிலா மெதுவாக மெதுவாக நகர்ந்து இறங்க முற்பட அது கதிருக்குத்தான் அவஸ்தையாகப் போனது.

அவள் இறங்கவும் "இப்படியே என்னை உசுப்பேத்திக்கிட்டேயிரு அப்புறம் வேலைக்குலாம் போகமுடியாது எப்பவும் நம்ம கட்டில்லதான் இருக்க வேண்டியதுதான்" என்று கண்ணடித்தவனைப் பார்த்து...

ஏன் கட்டிலுக்குப் போகணும் எனக்கு இந்த சோபாக்கூட ஓகேதான் என்றவள் அழகு காட்டிவிட்டு போக முற்பட.

சமையல் வேற அசைவம் செய்ய முடியுமா, இரண்டு நாளும் வெளியே சாப்பிட்டு ஒரு மாதிரி இருக்கு என்று கதிர் கேட்கவும்

சரி எனத் தலையாட்டியவள் நீங்க வாங்கிட்டு வாங்க செய்து தார்றேன் என்றவள் சமையலறைக்குச் செல்ல அவன் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

சமயலுக்குத் தேவையானதை எடுத்துவைத்துக் கொண்டடிருந்தவளுக்கு, இப்போது போனில் அழைப்பு வரவும் எடுத்துப் பார்க்க சித்ராதான் அழைத்திருந்தார். அழைப்பை எடுத்து பேசவும் சித்ரா பேசினார் எப்படிம்மா இருக்க, இரண்டுபேரும் எப்படி இருக்கீங்க என்று கேட்டுவிட்டு, பின் மெதுவாக இலக்கியா எதுவும் பேசியிருந்தா மனசுல எதுவும் வச்சிக்காத சரியா, அவளுக்கு அவ அண்ணன் மேல ரொம்ப பாசம் அதைவிட அவங்கண்ணன் வாழ்கை இப்படியாகிப்போச்சே என்று வருத்தம், அதனால உன்கிட்ட எதுவும் சொல்லிருப்பா குடும்பத்துக்குள்ள மனஸ்தாபம் வச்சிருக்க கூடாதும்மா...

என்று சிறிது பேசிவிட்டு வைக்கவும்,

நிலாவிற்கு யோசனை திடீர்னு எப்படி அத்தைக்கு அண்ணிப்பேசினது தெரிஞ்சது என்று.

அவள் யோசிக்கும்போதே அடுத்ததும் அழைப்புவர இப்போது அது புது நம்பர்லயிருந்து, யாராக இருக்கும் என்று எடுத்துப் பேச "நிலா நான் இலக்கியா பேசுறேன், எப்படி இருக்க என்று கேட்டுவிட்டு கொஞ்சம் பேசியவள், இறுதியாக" சாரி நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன் எதோ கோபத்தில்"என்று வார்த்தகளை இழுக்க..

நிலா "எனக்கு வருத்தமெல்லாம் இல்லை.

பரவாயில்லை விடுங்க. குட்டிப்பையன் எப்படி இருக்கான்” என்று பேச்சை மாற்றியாள் இப்படியாக, சமாதான உடன்படிக்கையே பேசி முடிச்சிட்டாங்க போனில்.

அவளுக்கு இப்போது திட்டமாக தெரியும் நம்ம மீசைக்காரர் வெளியப்போனவங்க, வேலையாகத்தான் இருக்கனும். அவங்க தங்கை மேல நம்ம கோபமாயிருக்ககூடாதுனு நல்லெண்ணம்...ம்ம்ம்...

ஒன்றுமே நடவாததுப் போல எல்லாம் கொண்டுவந்து சமயலறையில் வைத்துவிட்டு வந்தவன், என்ன மொசக்குட்டி எங்கயும் தாவாம அமைதியாயிருக்க.. என்ன யோசனை என்று அவளிடம் வம்பிழுக்க.

நிலா அதுவா சாமாதான தூதுவர் வரட்டும்னு காத்திருந்தேன் என்றவள்...

ஆகமொத்தம் சமைக்கதுக்கு கறியெடுக்க வெளியப்போகலை... தங்கச்சிக்கும் மனைவிக்கும் இடையில சமாதானம்பேச போயிருக்கீங்க என்ன?

ஆனாலும் நீ ரெம்ப புத்திசாலிதான். கண்டுபிடிச்சிட்ட.

பேச்சை மாத்தாதிங்க அவங்க என்ன நினைப்பாங்க இதுக்குள்ள உங்க இரண்டுபேருக்கும் இடையில பிரச்சனையைக் கொண்டு வர்றேன்னு நினைச்சிருப்பாங்க, ஏற்கனவே என்ன அவங்களுக்கு பிடிக்காமயிருக்கு என்று வருத்தப்பட்டாள்.

கதிர் அவளதருகில் வந்து அவ பேசினத அன்றைக்கு நானும் கேட்டேன், அவளுக்கும் தெரியும், நீ எதுக்கு சுணங்குற, போய் சமையல் பண்ணு என்று அவளது கன்னத்தில் தட்டினான்.

சமையல் செய்யத்தொடங்கியதும் மனதிலிருந்த விசனமெல்லாம் ஒதுக்கிவைத்தாள். 

சீக்கிரமா முடித்து எல்லாம் மேசையில் எடுத்து வைத்துவிட்டு கணவனை அழைக்க வந்து பார்த்தவனுக்கு ஆச்சரயம்.

எப்படி இவ்வளவு சீக்கிரமா முடிச்ச?

"அது செய்து பழகிடுச்சு" என்றதும், அவன் ஆச்சர்யமாக "கல்யாணம் பேசி ஒரு மாசத்துலயே எல்லாம் கத்துக்கிட்டியா"...

ஒரு மாசத்துல எப்படி முடியும், கிட்டதட்ட நாலு வருசமா, குக்கிங்க் கிளாஸ்லாம் போயிருக்கேன். எல்லாம் சமையலும் செய்வேன்...

சாப்பிட எல்லாம் தயாராக எடுத்து வைத்துக்கொண்டு பேசினாள் பதினெட்டு வயசலயிருந்து இது எனக்குப் பிடிக்கும்,

அதுவுமில்லாமல் நம்மக் கல்யாணம் அப்போ நடக்குறமாதிரி இருந்தது அதனாலதான்.

கதிருக்கு அதிர்ச்சி அப்பவேவா, நம்மக் கல்யாணமா யாரு சொன்னா உனக்கு   

எனக்கு இது தெரியாதே?

ஓஓ..மணியரசு மாமா எல்லாம் ஏற்பாடு செய்தாங்க மாமா அத்தைக்கும் இதுல சம்மதம் அதனாலதான்.

கிட்ட நெருங்கி வந்து பதிணெட்டு வயசுல உனக்கு என்னத் தெரியும்னு இவங்கெல்லாம் கல்யாண ஏற்பாடு செய்தாங்க. நீ வேற அதுக்கு தயாராகியிருக்க... என்று கோபப்பட்டான். இந்தக் கல்யாணத்திற்கே உனக்கு வயசு பத்தாதுனு நான் தலைப்பாட அடிச்சிக்கிட்டேன் யாராவது கேட்டீங்களா.

அதுல நீ இருக்கத்தெரியுமா எவ்வளவு விளக்கம் சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, சம்மதம் சொல்லுங்கனு என்கிட்டயே சொன்னவதானா நீ..

கொஞ்சம் கோபமேறியது அவனுக்கு அவனிடம் நெருங்கி " இன்னும் பத்துவருசமானாலும் நீங்க வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க, நானும் அப்படித்தான்.எதுக்கு பத்து வருசத்தை வீணாக்கனும்.

இன்னும் பத்துவருசத்துல பாருங்க உங்க மீசையெல்லாம் நரைச்சிட்டுனா, அதை ஒரு காரணமா வச்சு கல்யாணம் வேண்டாம்னு சொன்னாலும் சொல்லுவீங்க.

எதுக்கு இந்த பிரச்சனையெல்லாம்னு தான் 

சம்மதம் சொல்ல சொன்னேன்...

அரைக்கிழவி வாய்ப்பேசறதுப்பாரு எல்லாத்துக்கும் காரணம் வச்சுக்கிட்டு.

என்கிட்ட கேட்கும்போது நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டனே! மணியரசு பெரியப்பாகிட்ட இது சரிவராதுனு...

நிலா சிரித்தாள் அவன் முறைத்துப்பார்க்கவும், எனக்கு என் கதிர் மாமாவதான் கல்யாணம் பண்ணிக்கனும், வேற யாரையும் பண்ணிக்கமாட்டேனு நானும் சொல்லிட்டனே! என்று பதில்கொடுத்ததும் அவனது கோபம் இருந்தயிடம் தெரியவில்லை.

அவளிடம் நெருங்கியவன் இவ்வளவு காதலா என்மீது என்று மனையாளை நெருங்கியவன் குனிந்து கன்னத்தில் முத்தமிடவும், அவள் மாம்ஸ் சாப்பிடுவோம் வாங்க என்க, அது அவனது காதில் ஏறவேயில்லை " கையைப்பிடித்து ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் வைத்தான் அவளை டேபிளில் தூக்கிவைத்து அவளது கால்களுக்கு இடையில் தன்னை நுழைத்து முத்தங்களின் வகைகளை அவளது கழுத்தில் தொடங்கி அவள் முழு மேனியில் பரீட்சித்துப் பார்த்தான்.

முத்தச்சத்தம் நின்று அது நிலாவின் முனங்கலாக மாறி அவளது கொலுசின் சத்தத்தில் முடிந்தது.

நல்ல பசியில் எழுந்து இருவரும் சாப்பிட அமர்ந்து ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி உணவை ஊட்டிக்கொண்டு சாப்பிட்டு முடிக்க நான்கு மணியானது.

சாப்பிட்டு முடித்துவிட்டு அவன் முன்னறையில் டீவியில் எதோ கருத்து மோதல்களை பார்த்துக்கொண்டிருந்தான்.

எல்லாம் எடுத்துவைத்துவிட்டு வந்தவள் கணவனின் அருகில் அமர...

கதிர் "நம்ம வெளியே எங்கயாவது போகலாமா, மூணு நாளா வீட்டுக்குள்ளவே இருக்கோம்"

"பீச் போகலாமா என்று கேட்டுவிட்டு இல்ல சினிமா போகலாம்" என பல யோசனை ஒரே நேரத்தில்..

"முதல்ல கிளம்பு"

சரி என்று உண்மையாகவே முயல் போல வேகமாக ஓடினாள்.

குளித்துவிட்டு துண்டோடு வெளிய வந்தவன் கண்டது டாப்ஸ் தலைவழியாக போட்டுக்கொண்டு கீழ இழுக்கமுடியாமல் தடுமாறி திணறிக் கொண்டிருந்தவளைத்தான்.

அப்படியே அருகில் வந்து அவனது குளிர்ந்த கரங்களை அவளது இடுப்பில் வைக்க, வெடுக்கென்று துள்ளி சிறிது தள்ளி நின்றவளை, மறுபடியுமாக தொட 

"மாம்ஸ் ஏற்கனவே டாப்ஸ் போடமுடியலனு கடுப்புல இருக்கேன் நீங்க வேற"

போடமுடியலன்னா ஏன் கஷ்டப்பட்டு போடுற, என்று கழட்டிவிட்டான்.

இப்போது அரைகுறை ஆடையில் நிலா நிற்க, இன்னுமாக அவளிடம் நெருங்கியவன்"வெளியப்போகணுமா இப்படியே இருந்திடலாமா? ம்ம்ம...

சொல்லு மொசகுட்டி ....

அவள் எங்கே வாய்த்திறக்கும் மனநிலையில் இருந்தாள், அவனது குளிர்ந்த தேகம் அவளின் பெண்மையை சூடேற்ற ...

அப்படியே குனிந்து அவளது கழுத்தில் வாசம் பிடிக்க, அவளோ மாயவனின் தோள்களை பிடித்துகொள்ள மறுபடியும் அவளது பெண்மையின் முன்னழகில் தனக்கு என்னக்கிடைக்கும் என்று தனது நாவினால் துளாவிக்கொண்டிருந்தான், அவளுக்கோ இளமை நரம்புகளின் செயல்கள் உச்சத்திற்கு செல்ல,

தன் பற்களால் கீழுதட்டைக்கடித்து அவனது தலையை பின்னோடி கைக்கோர்த்து அழுத்திப்பிடித்திருந்தாள்...

அவனது வளர்த்திக்கு இந்தநிலை கழுத்து வலிக்க மெதுவாக நகர்ந்து கட்டிலில் சரிந்து அவளது மேனியில் படர்ந்தான்...

இருந்த அரைகுறை ஆடையும் கதிரின் கைங்கரியத்தால் உடலில் இருந்து விடைப்பெற்றிருந்தது...

அவன் பெண்ணவளின் மேனியில் மயங்கி கிடக்க..

திடீரென்று போனின் சத்தம் எங்கோ கேட்க..இருவரும் அதை எடுக்கும் நிலையில் இல்லை...

மீண்டும் மீண்டும் போன் அடிக்க...

அது நிலாவின் போன் சத்தம், இவ்வளவு நேரம் போன் அடிக்குது என்னனு பார்க்குறேன் என்க...

அவனது செயல் பாதியில் தடைபட்ட கோபம்...பேசாம இருடி..

ப்ளிஸ் மாம்ஸ் யாருனு பாருங்க,எதாவது அவசரமா இருக்கப்போகுது ...

எழும்பிப்போய் எடுத்து வந்து அவளது கைகளில் கொடுக்க அது நிலாவின் அம்மா ஜோதியின் அழைப்பு.

அவள் போனைப்பார்த்திருக்க அவனோ கைகளால் மனையாளை சீண்டிக்கொண்டிருந்தான்.

மறுபடியும் அழைப்பு வர தனது கைகளால் கணவனது செயலைத் தடுத்தவள்..

"சொல்லுங்கம்மா எப்படி இருக்கீங்க” எனறு கேட்டதும்..அவர் சொன்னபதிலில்...

என்னம்மா சொல்றீங்க.. என்று அதிர்ந்து கேட்க..அடுத்து அவர்மட்டுந்தான் பேசினார். 

நிலாவின் கண்களில் கண்ணீர் தன்னையறியாமல் வர...

போனை வைத்துவிட்டு அப்படியே பேசாது அமைதியாக இருந்தாள்...

அத்தியாயம்-10

நிலா அழுதுக்கொண்டிருக்கவும், அவளது கண்ணீரைப் பார்த்து, பதறியெழுந்தவன்,

அவளை முகத்தை தாங்கி என்னடாச்சு...என்றுகேட்டான்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்துவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள். அவள் அழுகிறாள் என்று உடல் குலுங்குவதிலிருந்தே தெரிந்தது.

"நிலா"

அவன் அழைத்ததிலயே அவனுக்கு கோபமென்று புரிந்தாலும் என்னவென்று

அவனிடம் சொல்ல, அமைதியாக படுத்திருந்தாள் அவன் கோபத்தில் 

"நிலானி"

இப்பொழுது மெதுவாக திரும்பியவளிடம் கேட்டான் "உங்கம்மா என்ன சொன்னாங்கனு இப்படி அழற, வீட்ல எதுவும் பிரச்சனையா, இல்ல உங்கப்பாவுக்கு உடம்பு எதுவும் சரியில்லையா"

" இல்லை" என்று தலையசைத்தாள். 

என்ன பிரச்சனைனு சொன்னாத்தானத் தெரியும், அழுதுக்கிட்டிருந்தா, எல்லாம் சரியாகிடுமா?

அழுதுக்கொண்டிருந்தவளிடமிருந்து எந்தவிதமான பதிலையும் அவனால் வாங்கமுடியவில்லை.

கோபம் தலைக்கேறியவன் அருகிருந்த சேரைத் தள்ளிவிட்டு பால்கனியில் போய் நின்றுக்கொண்டான்.

நிலாவிற்கோ பயம் விசயத்தை சொன்னாலும் இதற்குமேல் கோபம் வரும், ஏற்கனவே செல்போனிற்கு நேர்ந்தகதிதான் தெரியுமே என்றுதான் சொல்லாமல் அழுதுக்கொண்டிருந்தாள்...

கொஞ்சம் நிதானத்திற்குவந்தவன்...

அந்தக்குடும்பத்துல என்ன நடந்தா எனக்கென்ன, யாருக்கும் எதுநடந்தா நமெக்கென்ன...

அது நமக்குத் தேவையில்லாத ஆணி...என்று நினைத்துக்கொண்டே திரும்பி மனைவியைப் பார்க்க.

நிலாவோ கண்களில் கண்ணீரோடு தலையணையில் சாய்ந்திருந்தாள்...

இவ அழறதைத்தான் தாங்கமுடியலை, என்னசெய்யவென்று 

வாசல் நிலையில் சாய்ந்து நின்றவன், வாயில் அகப்பட்ட மீசைமுடியை தன் பற்களால் லேசாக கடித்துகொண்டே யோசித்து நின்றான்...

திரும்பவும் மனதுக் கேட்காமல் திரும்பியவன் மனைவின் அருகில் சென்று என்னத்தான்டி பிரச்சனை, இப்படி அழுதுக்கரைஞ்சா எப்படி, எதுவாயிருந்தாலும் சொன்னா கொஞ்சம் வருத்தம் குறையும் அப்படியில்லையா அழாத கொன்றுவேன் , மனுஷனை கடுப்பேத்திக்கிட்டு என்றதும்.

மெதுவாக தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, நான் சொன்னா நீங்க கோபப்படக்கூடாது என்று கேட்டு அவனோடு பதிலுக்காக காத்திருந்தாள்...

விசயத்தை சொல்லுடினா என்னவோ பேசிக்கிட்டு என அதட்டவும்...

"அது நித்யாக்காவ ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க" என்று நிலா சொன்னதும்.

என்ன அடுத்தபிள்ளைய இதுக்குள்ள ரெடிபண்ணிட்டானா அந்த வெள்ளைப்பன்னி...

பிரசவத்திற்கு சேர்த்ததற்கா இவ்வளவு அழுகை, உங்கக்காகூட இவ்வளவு அழுதிற்கமாட்டா என்று நக்கலாக சிரித்துக்கொண்டே கேட்க...

நிலா அவசரமாக இல்லை அதுக்காக ஹாஸ்பிட்டல் போகல என்றவள், பதில் சொன்னாள்... பிரசவத்திற்காக சேர்க்கலை, அவங்கவீட்ல பிரச்சனைனு விசம் எதோ சாப்பிட்டுட்டாப் போல, அதுக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க, அம்மாவும், மாமாவும் அங்க இருக்காங்களாம், சித்தார்த் அம்மாவக் கொண்டுவிட்டுட்டுப் போயிட்டானாம்.

அவங்க மாமியார் ரொம்ப பிரச்சனை செய்திருப்பாங்கப்போல, பாப்பாவும் அம்மாகிட்டாதான் இருக்கா என சொல்லிவிட்டு மீண்டும் அழத்தொடங்கினாள்.

இப்போது கதிருக்கு எதுவும் சொல்லத்தோன்றவில்லை அமைதியாகப் பார்த்திருந்தவன் சிறிது நேரங்கடந்துப் பேசத்தொடங்கினான்

"ஆமா உண்மையிலயே உங்கக்கா விசம் குடிச்சிருப்பானு நீ நினைக்கிறியா, உன்னால இத நம்பமுடியுதா " என சிரித்தான்.

சட்டெனத்திரும்பி கணவனை பார்க்க அவளது பார்வையின் அர்த்தத்தை புரிந்தவன், “கஷ்டப்படும்போது எள்ளல் கூடாதுதான்...

நான் அப்படிப்பட்டவனில்லை, வேதநாயகத்தின் மகன் அடுத்தவங்க துன்பத்துல தோள்க்கொடுத்துதான் பழக்கம்.

உங்கக்கா அவங்க மாமியார் விட்டை மிரட்டுறதுக்கும், அவங்கமேல எதாவது சொல்லி தனிக்குடித்தனத்துக்காக வெளியவரதுக்கும் இந்த நாடகம் போட்டிருப்பா. பாரு இதுதான் உண்மையாக இருக்கும், அவளாவது உயிரைவிடுறதாவது, மத்தவங்க உயிரைத்தான் எடுப்பா இதுக்குத்தான் இந்த அழுகையா?

அப்படியே அவ உண்மையிலயே மனக்கஷ்டத்துல, வாழப்பிடிக்காமா இந்த தற்கொலை முயற்சி செய்திருந்தானா, ரெம்ப நல்லது. அவ வாழறதுக்கே தகுதியில்லாதவள்.

ஒன்னுத் தெரியுமா நாம நல்லது செய்தா நல்லதும், கெட்டது செய்தாக் கெட்டதுதான் நம்மக்கிட்டத் திரும்பி வரும்..இதுதான் இயற்கை...

உங்கக்கா செய்த பாவத்திற்கு இதுக்கூட கிடைக்கலைன்னா எப்படி?

அவளால ஒரு பாவப்பட்ட மனுஷன் ஒரு மாசம் உயிரோட எழுந்து வருவாரா மாட்டாரானு தவிச்சத்சவிப்பு இன்னும் இங்கயிருக்கு எனத் தன் நெஞ்சை சுட்டிக்காட்டினான்...

அதுலயும் எங்கப்பா ஆஸ்பத்திரியில் இருக்கும் போது நான் இருந்த இடமிருக்கே, சாகுறவரைக்கும் மறக்கமாட்டேன்...

ஒரு குடும்பத்தையே உருக்குலைத்தவளுக்கு இது பத்தாது...

இது அவ செய்த செயலுக்கான வினை, நம்ம ஒன்னும் செய்யமுடியாது” என்று தோளைக்குலுக்கிவிட்டு கீழப்போயிட்டான்..

சிறிது நேரங்கழித்து அவளுக்கு நேராக காபி கப்பை நீட்டினான். அவள் நிமிர்ந்து அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்...

ம்ம்.காபி குடி..

அழுததிலத் தொண்டை வலிக்கும் குடி ...

அவள் கப்பைக் கையில் வாங்கியதும் அவன் பால்கனியில் நின்று தூரத்தில் மாலைமயங்கும் அந்தக்காட்சியை ரசித்துக்கொண்டே அருந்திக்கொண்டிருந்தான்...

அவளோ விசயத்தை சொன்னதுக்கே இந்தப்பேச்சு.. அவளைப்பார்க்க போகணும்னு கேட்டா அவ்வளவுதான், என்ற யோசனையோடு குடிக்காமலயே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்...

அங்கியிருந்து திரும்பிப் பார்க்காமலயே காபியைக் குடி கையில வச்சிட்டு என்னைப் பார்க்காத என்றதும் படபடவென்று காபியை அருந்தினாள்...

அவன் தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு கீழே சென்றவன் தனது வேலையில் மூழ்கிவிட லேசாக பசிக்கவும் 

அதை மூடிவைத்துவிட்டு மணியைப் பார்க்க அது ஒன்பதை தாண்டியிருந்தது தனதறைக்கு வர மனைவியோ தலணையிலயே சாய்ந்து அப்படியே தூங்கியிருந்தாள்.

அவளைப்பார்க்க பாவமக இருந்தது.

சிறிதுநாள் தெரிந்தவன் என்றதுக்கே, எனக்காக அப்படித்துடித்தாள், சொந்த அக்காவிற்கு எனும்போது வலிக்கத்தான் செய்யும்...

கீழேச்சென்று மதியம் சமைத்ததை சூடுசெய்து சாப்பாட்டை எடுத்து தட்டில் எடுத்துவைத்துக்கொண்டு வந்தவன், அவளை எழுப்பவும் பதறி எழ 

ஹேய்...நான்தான் என்னாச்சு.. என்ன நியாபகம் உங்கப்பாவீட்டிற்குப் போயிட்டுதா?

எழும்பு முகத்தைக் கழுவிட்டுவந்து சாப்பிடு வா.. வா..

முகத்தைக் கழுவிவந்தவளுக்கு அவனே ஊட்டிவிடவும், கொஞ்சம் வாங்கியவள் வேண்டாம் என்க முறைத்துப்பார்த்தான்.

உண்மையிலயே பசியில்லை...

ஒருமாதிரி இருக்கு நான் படுத்துக்கட்டுமா ?

ஐஞ்சு நிமிஷம் இருந்திட்டு படு ..என்றவன் தான் சாப்பிட ஆரம்பித்தான் அதற்குள்ளாகவே மறுபடியும் தூங்கிவிட்டாள்...

கதிருக்கு என்ன சொல்லனுத்தெரியல நித்யாவாப் பார்க்க நிலாவை அனுப்பக்கூடாது என்றுதான் நினைத்திருந்தான்... இப்போது மனைவி அத நினைச்சே அழறது அவனுக்கும் வேதனையா இருந்தது...

பெருமூச்சொன்று விட்டவன் எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு வந்து படுத்துக்கொண்டான்...

ச்ச... எவ்வளவு சந்தோசமா ஆரம்பித்த நாள் இப்படி ஆகிட்டுதே என்று யோசனையோடு படுத்திருந்தவன்...அப்படியே தூங்கிவிட்டான்.

நல்லத் தூக்கத்தில் அவனது கை இழுக்கப்படவும் யோசனையோடே லேசாகத் கண்ணைத்திறந்துப் பார்க்க... அவனின் மனையாள்தான் அவனுக்குள்ளாக வருவதற்கு மெதுவாக அவன் விழித்துவிடக்கூடாதென்று, கையைத் தூக்கி முயற்சி செய்ய...அதைப்பார்த்தவனுக்கு முகங்கொள்ளாப் புன்னகையுடன் அப்படியே ஆக்டோபஸ் போல அவளைத் தனக்குள் இழுத்துக்கொண்டான்.

அவளது அருகாமை அவனுக்கும் அவனின் அருகாமை அவளுக்கும் தேவையாகயிருக்க உடல்கள் இரண்டும் இப்போது ஒட்டிக்கொண்டது...

விடியலில் கதிர்தான் முதலில் எழும்பி நிலாவைப் பார்க்க நல்லத்தூக்கம்.

இவதான் இனி காலேஜ் போகும்போது 

எனக்கு காலையிலயே சமையல் செய்து தர்றதா சபதம்போட்டா...ஹய்யோ இவளை எழுப்பதுக்கே நான் போராடனும்போல என்றவன் கீழே சமையலறையில் நின்றிருந்தவன் சத்தங்கேட்டுத்திரும்பிப் பார்க்க மனைவி நின்றிருக்கவும், அவளது முகத்தைப்பார்க்க எப்போதும் இருக்கும் உற்சாகமும், புன்னகையுமில்லை...

அவனருகில் அவனோடு ஒட்டிக்கொண்டு நிற்க... சட்டென்று தூக்கி சமயலறை மேடையில் அமரவைத்திருந்தான்...

அவள் கன்னத்தை தடவிக்கொண்டு அவளது கண்களைத்தான் பார்த்திருந்தான்...

நிலாவினால் யாரையும் வெறுக்கவோ, சண்டைப்போடவோ முடியாது.

நேசிக்கத்தெரியும் அவர்களுக்காக யோசிக்கத்தெரியும். அதுதான் அவள் பலமும், அவளது பலவீனமும்.

உனக்காக நீ அங்கப்போக சம்மதிக்கிறேன் நான்கூட வருவேன் வெளிய நிற்பேன்..ஐஞ்சு நிமிஷத்திலப் பார்த்திட்டு வந்திடனும்...இல்லனா? நான் கிளம்பி வந்திடுவேன் நீ உங்கவீட்டுக்கே போயிடனும் நிரந்தரமா...

இதைக்கேட்டு ஒரு நிமிடம் அப்படியே விக்கித்துப்போனாள்...

நம்ம உங்கவீட்டு விருந்துக்குப் போயிட்டு வரும்போது அங்க எல்லாருக்கிட்டையும் என்ன சொல்லிட்டு வந்த, அவங்க யாரும் வேண்டாம்னு சொல்லிட்டு வந்ததான...

அப்படியே இரு அதுதான் நம்மா குடும்ப வாழ்க்கைக்கு நல்லது

முக்கியமா உங்கக்கா காத்துக்கூட உன் மேலப்படடாமல் பார்த்துக்கோ..அது விசம் ... உன்னையும் பாதிக்கும் பாத்துக்கோ..

( இந்த வார்த்தையை கவனமா நிலாக் கேட்டிருந்தாள் பின்நாட்களில் வரும் பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாம்)

ஒன்றுமே பேசாமல் அறைக்குள் வந்துவிட்டாள். இருவரும் தயாராகி கிளம்பி வந்தாகிற்று, காலையில் அவனும் சாப்பிடவில்லை அவளுக்கும் பசியில்லை.

மருத்துவமனைக்கு வந்து சேர, அதற்குள்ளாக மணியரசும் வந்திருந்தார். விசயம் கேள்விப்பட்டு இரவே பஸ் ஏறி வந்திருந்தார்.

நிலா மெதுவாக சென்று தன் தாயிடம் விசாரிக்க, அவர் அழுதே தீர்த்துவிட்டார்.

கதிர் மாப்பிள்ளைக்கும் அவங்க குடும்பத்திற்கும் இவ செய்த பாவந்தான் வாழ்க்கை இப்படி இருக்கு.

முதல்ல இரண்டு வருசமா குழந்தையில்லைனு பிரச்சனை, இப்போ மாமியாருகூட சண்டை, இவ எப்படி வாழப்போறாளோ இதுல ஒரு பெண்பிள்ளையை வேற பெத்துவச்சிருக்கா..

நிலா அங்கு ஓரமாக ஒதுங்கிநிற்கும் நித்யாவின் கணவரைப் பார்க்க ஓய்ந்துப்போய் நின்றிருந்தான்..சுயசிந்தையில்லாத கோவேறுக் கழுதை என்று நினைத்தவள் நித்யாவை உள்ளே சென்று பார்த்துவிட்டு

ஜோதியிடம் சீக்கிரம் கிளம்பனும் என்று வந்துவிட்டாள்...

அதற்குள்ளாக ஜோதியை அழைத்துப் போக நிலாவின் அண்ணன் சித்தார்த் வந்தான், அவனை வெளியில் நின்ற கதிர் ஒரு ஏளனப்பார்வை பார்த்தான் இந்த தங்கைக்காதான என்னை என்னவெல்லாம் செஞ்சீங்க தப்பு பண்ணாத ஒருத்தனை எப்படிலாம பாடாய்படுத்தினீங்க...அதுக்கு காலம் கொடுத்ததைப் பார் என்று அர்த்தம் பொதிந்திருந்தது...

மணியரசு கதிரும்,நிலாவும் நிற்குமிடத்திற்கு வந்தார். அவர்மேல் மரியாதை உண்டு ஆனல் பேசமாட்டான்...

அப்பாவின் நண்பர் தனக்கு படிப்பிற்கும் கஷ்டக்காலத்தில் உதவியவர். அதைவிட தன் தங்கைக்கும் தனக்கும் நல்லதே நினைத்து செய்பவர்...ஒரு விசயத்துல தப்பாகிவிட்டது அது அவரின் தவறுமில்லை...

மணியரசு பேசினார் “நம்ம என்னதான் முட்டி மோதினாலும் அவங்கவங்களுக்கு என்ன கிடைக்கனும்னு இருக்கோ அதுதான் கிடைக்கும்போல...

எவ்வளவு செய்தும் எங்கவந்து படுக்க வைச்சிருக்கு அவளை” என்று தலையில் அடித்துக்கொண்டார்...

நிலா மணியரசுவிடம் பேசிவிட்டுக் கிளம்பவும், அவனுக்கு ஏன்னென்று சொல்லத் தெரியாதக் கோபம் அதை வண்டியில் காட்ட அது பறந்தது. அவளுக்குத்தான் பயம் அவனை இறுகப்பிடித்துக்கொண்டாள்.

போகின்ற வழியில் வண்டியை ஹோட்டலில் நிறுத்தியவன், நிலாவைப் பார்த்து இப்போவாவது என்னையும் கொஞ்சமா நினைச்சு பார்த்தா நல்லயிருக்கும் என்று கோபத்தில் உள்ளே சென்று அமர்ந்துவிட்டான்.

அவனதுக்கோபம் நியாயமானதுதான். ஆனாலும் இரத்தப்பாசம் கொஞ்சம் பெருசுதான்.

தேவையானதை வாங்கி அவன் சாப்பிட்டதை வைத்து கதிருக்கு நல்லப்பசியென்று அப்போதுதான் உணர்ந்தாள். தப்பு பண்ணிட்டமோ நித்யா நியாபகத்துல இவரைக் கவனிக்காம வந்துட்டமே என்று வருத்தப்பட்டாள்...

வீட்டிற்கு வந்தும் கதிரிடம் ஒரு அந்நியத்தன்மை தெரிந்தது, நிலா அவனது முகத்தை ஏறிட்டுப் பார்க்க அதில் எந்த உணர்வின் பிரதிபலிப்புமில்லை.

தனக்குள்ளே இப்போது நொந்துக்கொண்டாள்...

கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அவனின் விலகல் தொடர்ந்தது, நிலாதான் பயமும் தவிப்புமாக இருந்தாள்.

காலேஜ்க்கு செல்லும் நாளும் வர அலாரம் வைத்து எழும்பியவள் கணவனுக்கு முன்பாக எழுந்து சமையலறையில் அங்கும் இங்கும் அலைந்து மும்முரமாக வேலைச் செய்துக்கொண்டிருந்தாள்...

கதிர் எழும்பி வரும்போது காலைச் சாப்பாடு தயார் செய்து முடித்திருந்தாள்.

வெளியில் வீட்டை சுற்றிக்கொஞ்சம் நடந்தவன் உள்ளே காபி போடப்போகும்போது அவள் அவனுக்கு ஏற்கனவே வச்சிருந்த டீயைக்கொடுக்க அவன் வாங்காமல் அடுப்பை பற்றவைத்து காபிபோடவும் இடுப்பில் கைவைத்து அவனைப்பார்த்து முறைத்து நின்றாள்...

நான் தான் டீ போட்டுவச்சிருக்கனே அப்புறம் எதுக்கு காபி என்று அவனிடம் சண்டைக்குச் செல்ல... அவனுக்கு கோபமெல்லாம் காணமால் போயிருந்தது

அதனால் லேசாக சிரித்தவண்ணமாக நிற்க...

அவனைத்தள்ளிவிட முயற்சிக்க..எங்கமுடியும்? முடியவில்லை என்றதும்.

அடுப்பிற்கும் அவனுக்கும் இடையில் போய் நின்றாள் அவன் இருக்கும் வளர்த்திக்கு அதுஎப்படி மறைக்க முடியும்...

அவளுக்கு எரிச்சல் வந்தது அவளுக்கு ஏதுவான உயரத்தில் அவன் நெஞ்சினில் கடித்துவைக்க...ஆஆஆஆ...கடிக்காதடி இராட்சஷி... என் மனைவிக்கூட வாய்க்காப்பி குடிக்கனும்னு காபி போடுறேன்டி...விடுடி என்று நிலாவை இழுக்க...

வாயத்திறந்தபடி நின்றாள்....வாய்க்காப்பியா என்று வாய்விட்டுக் கேட்க...

ஆமா அவளுக்கு காபிதான் பிடிக்கும்..எனக்கு அவக்குடிக்குற காபித்தான் பிடிக்கும் என்று கண்ணடித்துச் சொல்லவும், கணவன் சமாதானமாகப் பேசியதே போதும் என்று நினைத்து, ஏன் வாய்டீ குடிக்ககூடாதா என்றதும், அதுக்கப்புறமும் கதிர் காபிபோடுவானா என்ன?  

மனைவியுடன் சேர்ந்து எதோ ஒரு வாய்டீ குடிச்சு உற்சாகமான மனநிலையில் கிளம்பி கல்லுரிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தனர்...

காரில் போகும்போது முன்பக்கம் அவனருகில் அமர்ந்திருந்தவளிட்ம் "மொசக்குட்டி போன வருடம் வரைக்கும் நீ வெறும் மாணவி மட்டுந்தான், இப்போ அப்படி இல்ல ஆரன்கதிர் பேராசிரியரோட மனைவி. உன் குரங்குச் சேட்டையெல்லாம் கொஞ்சம் மூட்டைக்கட்டிவை சரியா ...

முக்கியமா கிளாஸ்க்குள்ள வாலுத்தனம் பண்றதை... ஏன்னா இந்த வருசம் நான்தான் உங்க கிளாஸ் இன்சார்ஜ்...”

நீங்களா! என விழிவிரித்தவள்...என்ன வீட்டிலக்கொண்டுவிடுங்க நான் வரலை...

கதிர் சேட்டைப் பண்ணமாட்டேனு வாயிலயிருந்து வருதாப்பாரு ...என்று முறைத்தான்...

கார் உள்ளே நுழையவும் கதிரின் உடல்மொழி முற்றிலுமாக மாறியது.

மனைவி இறங்கியதும் அவளிடம் கண்ணைக் காண்பித்து போ என்று சொன்னவன். இறங்கி நடந்தவனது நடையே சொன்னது அவனது கம்பீரமும்,அவனது தலையசைப்பும், தூரமாக நின்று பார்த்திருந்த நிலா அவனது ஒவ்வொரு அசைவையும் ரசித்துக்

கொண்டிருந்தவளின் முதுகில் அடிவிழவும் திரும்பி பார்க்க அவளது தோழி இனியா நின்றிருந்தாள்.

என்னடி உங்க மாம்ஸ்ஸ இன்னும் சைட் அடிக்கறத விடலையா?

“சைட் அடிக்கிற முழு உரிமையோட வந்திருக்கேனாக்கும்” என்று கழுத்தை சுட்டிக்காட்டி ... சந்தோசப்பட்டாள்.

“ஆஆஆ...என்னடி லீவிற்கு போயிட்டு வர்ற கேப்ல கல்யாணம் முடிச்சிட்டு வந்திருக்க...வேதியியலு உன்கிட்ட கவுந்திருச்சா?” என ஆச்சர்யப்பட..

இல்லயில்ல..வேதியலுக்கிட்ட நான் கவுந்திட்டதுனாலதான் நானும் இந்தப்பக்கம் வந்தேன்...

இல்லனா இந்த ரசாயனத்த எவனாவது படிப்பான என பேச்சும் சிரிப்புமாக வகுப்பிற்குள் நுழைந்தனர்.

சிறிது நேரத்தில் கதிர் உள்ளே நுழைந்து அந்த வருடத்திற்கான எல்லாவிதமான பாடங்களையும் அது சம்மந்தமாக விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கவும்...

நிலாவோ கதிரை வைத்தக்கண் வாங்கமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இனியா"அதுதான் லைசென்ஸ் வாங்கியாச்சே அதுக்குப்புறமும் ஏன் இந்த சைட்டடிக்குற வேலை உனக்கு" என்றதும்...

"போடி மாம்ஸ்ஸ இப்படி பார்க்குறதுலயும் ஒரு கிக் இருக்குத் தெரியுமா” என ரசனையோட சொல்லவும் ...

"நிலானி, இனியா" என்று கதிர் அழைக்கவும் சரியாக இருந்தது...