குரோத கொள்முதல் அழகே 1
Kurotham1
1 குரோத கொள்முதல் அழகே !!
இதன் முதல் பாகம் மூப்பு அடையா யட்சகா !!
கொட்டும் மழையில் அந்த நடு இரவு போலீஸ் ஸ்டேசன் வாசலில் ரத்தம் வடியும் கத்தியோடு வெறித்த கண்ணோடு வைர மூக்குத்தியில் குருதி வடிய , முகம் எங்கும் தெறித்த ரத்த கறையோடு எங்கோ வெறித்தபடி நின்ற அவளை, இயற்கை அழைப்பு அடிக்க நடு இரவு வெளியே வந்த கான்ஸ்டபிள் இருட்டில் நின்ற உருவத்தை கண்டுவிட்டு சற்று பயந்தபடி
"யாரும்மா நீ ? சார் சார் இஇஇஇ என்று கத்தவும் உள்ளிருந்து அத்தனை பேரும் வெளியே வந்து வெளிச்சத்தை படரவிட்டு, ரத்த துளிகள் நடுவே கண்களை உருட்டிய அப்பெண்ணை அடையாளம் தெரிந்தும், தெரியாமலும் யோசனையாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு
"நீ என்று அவளை கேட்க .... ரத்தம் வடிந்த கத்தியை தூக்கி காட்டியவள்
வஞ்சகமூர்த்தி வப்பாட்டி என்றதும் எஸ்ஐ அருகே திரும்பி
"யாருய்யா வஞ்சக மூர்த்தி? என்கவுண்டர் பண்ண மேலிடத்துல இருந்து ஆர்டர் வந்ததே அந்த ரவுடிப்பயலா "
"ஆமா சார் அவன் வப்பாட்டி தான் இது
"என்னய்யா இவளும் ரவுடியா, கையில ரத்தம் வடியுற கத்தியோட வந்து நிக்குது "
"நீங்க புதுசுல்ல அதான் விவரம் பத்தல, ஆளை நல்லா உத்து பாருங்க "என்றதும் எஸ்ஐ எதிரே இருந்த பெண்ணை ஊத்து பார்க்க கொழுக்மொழுக் உடல் வாகு , வைர கம்மல் வைர டாலர் செயின் என்று நடமாடும் தங்க வைர கடை போல இருந்தாள் .. அத்தோட அவள் அழகு ஆஹா உலக அழகியும் சற்று மண்டியிடத்தான் வேண்டும் அவள் முன்னே ... அப்படி ஒரு பேரழகி அவள் !!
நல்லா உடம்பை வித்து வைரமா மின்னுறா போல என்று எஸ்ஐ நக்கலாக சிரிக்க
எந்த ஊர்க்காரி ?
______ரம் என்று கான்ஸ்டபிள் கிசுகிசுப்பாக
"எது ??அவர் சற்று அதிர கேட்க
"ம்ம் மாமி வகையறா "
"அந்த மலைமாடுக்கிட்ட இந்த மாமி எப்படிய்யா போய் மாட்டிச்சு "
"அது பெரிய கதை , வஞ்சகமூர்த்தி ஆயிரம் சின்ன வீடு வச்சிருந்தாலும் இவதான் ஸ்பெஷல், எங்க போனாலும் உப்புமூட்டை போல இவளைத்தான் தூக்கிட்டு சுத்துவான் ...
ம்ம் மச்சம் இருக்கு மஜாவா இருக்கான் , அரசியல்வாதி பினாமி, ரவுடி எல்லாம் வாழ்றான் நாம இப்படி கொசுக்கடியில மாச சம்பளத்துக்கு நாய்படாத பாடு படுறோம்" என்று பெரூமூச்சு விட
"இப்ப எதுக்கு வந்து நிக்குதுன்னு கேளுங்க சார் கையில வேற கத்தி இருக்கு ...
"அட ஆமால்ல
"ஏம்மா ஏய் இங்க எதுக்கு வந்து நிக்கிற" என்று பெண் போலீஸ் அவளை உலுக்க பதறி திடுக்கிட்டு எதிரே இருந்த அத்தனை பேரையும் பார்த்தவள்
"என்ன ஆச்சு எதுக்கு இந்த நேரம் இங்க வந்து நிக்கிற ?ஹான்
"கொ.....லை .... கொலை ப.....ண்...ணி.....ட்.....டேன் என்று கத்தியை கிடுகிடுவென நடுங்கிய குரலோடு கூறிகொண்டே அவள் நீட்ட
"கொலையை யாரை ?
ஏன்யா அவனுக்கு நேரப்போக்கே கொலை பண்றதுதான், இது என்னய்யா கொலை பண்ணிட்டேன்னு ஒத்த கொலைக்கு நடுங்கி போய் வந்து நிக்குது என்று கேட்டுகொண்டே அந்த கத்தியை கைதடம் அழியாது எஸ் வாங்க
உங்கிட்ட தான் கேட்கிறோம் யாரை கொலை பண்ணின? அவள் எச்சில் விழுங்க ....
இப்ப சொல்ல போறியா இல்லையா என்றதும் பதறி திடுக்கிட்டவள்
வஞ்சக மூர்த்தியை ... என்று நடுங்கிய உதடுகள் பெயரை உச்சரித்தது..
யாரை??? அத்தனை பேரும் அதிர்வாக அவளை பார்த்தபடி கேட்க
ரவுடி வஞ்சக மூர்த்தியை!!
ஏதே அத்தனை பேர் கண்களும் அப்பட்டமாக அதிர்ந்தது
பின்னே, எட்டு ஊரை நடுங்க வைக்கும் வஞ்சகமூர்த்தி ஆயிரம் போலீஸ் படை வந்தும் அஞ்சாமல் திமிரும் காளை ஒருவனை அறுத்து போட்டு விட்டு வந்த அவளை பதறாது எப்படி பார்க்க ..
எப்படி ,ஏன் அவன் வப்பாட்டி தான நீ? என்ன நடந்துச்சு
"ராத்திரி வழக்கம் போல ஆத்துக்கு வந்தார், செத்த நாழி சரக்கு குடிச்சார், அப்பறம் அப்பறம் என்று அவள் தலையை குனிந்தபடி
எப்பவும் போல என்னோட தப்பா ஆஆஆஆ அப்பறம் மடியில வந்து படுத்துண்டு
"நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் குண்டூஸ் அதுக்கு காரணம் நீதான்டி ஹக் இஇஇஇஇஇஇஇஇ போதையில் அவள் கலந்து வைத்த மயக்க மருந்தில் அசைய முடியாது அவள் மடியில் கிடந்து புலம்பிய அவன் கழுத்தை நரநரவென்று அறுத்து போட்டுவிட்டாள்... சொன்னவள் கண்ணில் இப்போது பயம் இல்லை .... திருப்தியான பார்வை
"எதுவும் கனவு கண்டு புலம்புதாய்யா, இத்தனை பேர் நாயா அவளை பிடிக்க அல்லாடுறோம், இவ என்னன்னா கொன்னுட்டேன்னு அசால்டா சொல்றா" என்று அத்தனை பேரும் சம்பவ இடத்துக்கு விரைய
அங்கே கசங்கிய படுக்கை மீது மல்லிகை மலர்கள் கொட்டி கிடக்க, அதன் அருகே கட்டு கட்டாக பணம் அறை எங்கும் சிதறி கிடக்க , நகை நட்டு கால் கை எங்கும் வீசி எறிந்து கிடக்க ... படுக்கை மீது மல்லாக்க கைலி, வெள்ளை உள் பனியினில் கழுத்தில் பெரிய பெரிய தங்க சங்கலி கையில் பெரிய கைசெயின் கழுத்து வரை புரண்ட கேசம் , ஆறடிக்கும் கூடிய உயரத்தில் உருக்கி எடுத்த இரும்புச் சிலை போல மாமிச மலையை உருட்டி போட்டது போல கண்கள் நிலைகுத்த கிடந்தான்
வஞ்சக மூர்த்தி!!!
போலீஸ் அவன் கழுத்து செயினை நகட்டி பார்க்க ரத்தம் பீறிட்டு வந்து படுக்கையை நனைத்தது ... நேர்த்தியான கொலை , அவன் எப்படி செய்வானோ அப்படியே அவனை கொன்று போட்டிருந்தாள் அவனின் படுக்கையை இரவு பகலாக அலங்கரித்த அழகி!!
ரத்தத்தை கண்டாலே மூக்கை மூடும் அவளிடம் இப்படி ஒரு ரெளத்திரமா?? இப்படி ஒரு மூர்க்கமா?? ஆச்சர்யபட்டு போயினர் ...
உன் பேர் என்னம்மா? என்று எஸ்ஐ அவளை திரும்பி பார்த்து கேட்க
வஞ்சக மூர்த்தி வப்பாட்டி என்று அவள் முனக
ப்ச் உன் பேர் ?
"என்ன ஊர்ல எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாள் ... "கொஞ்சும் குரல் இதுதானோ?? பெண்ணுக்கே உரிய அத்தனை அம்சமும் கொண்டவள் ஆனால் இருந்து என்ன பயன் கொலைகாரி ஆக்கிவிட்டானே மாபாதகன்!! இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தானே!!!
"சரிம்மா உனக்குன்னு ஒரு தனிப்பேர் இருக்கும்ல அது என்ன ? அவள் பெயரே மறந்து போனாளே பேக்க பேக்க முழிக்க ...
"உனக்கு வேற பேர் இருக்கும்ல அது என்ன ?
"அது அது குண்டூஸ்
"ஊப்ஸ் சார் கொலை பண்ணினதுல அரண்டு போய் இருக்கு போல ... பக்கத்துல விசாரிப்போம் என்று அங்கே கூடி நின்றவர்கள் நோக்கி திரும்பி
"பெருமானே!! இன்னும் என்ன அபச்சாரம் எல்லாம் பார்க்க போறோமோ" என்று அத்தனை பேரும் மூக்கை மூடி வாயில் அடிக்க ...
"அந்த பொண்ணு பேர் என்ன ?
"பொக்கிஷா!! இதோ இங்க செத்துக்கிடக்கானே இவனுக்கு வப்பாட்டியா
அதெல்லாம் கேட்கல.. பேர் என்னன்னு தான் கேட்டேன்
பொக்கிஷா வயசு 22...
எத்தனை வருசமா இவன் இங்க வந்து போறான்... ரெகுலரா வருவானா , வந்தா எத்தனை மணிக்கு வருவான்
இப்ப ரெண்டு வருசமா தான் வர்றான்" ...
"எப்ப வருவான் ?
"ராவு குடிச்சிட்டு ஒரு கூட்டமே வரும், நல்ல போதையில இவன் மட்டும் உள்ள போவான் மத்தவங்க வெளிய காவல் நிப்பாங்க ...
ஓஓஓஓஓ ...
"நேத்து ராத்திரி எதாவது சத்தம் வந்ததா
"வழக்கத்துக்கு மாறா நேத்து இவன் மட்டும் தனியா வந்தான் ...
சரி போதும்
"கான்ஸ்டபிள் பாடியை டிஸ்போஸ் பண்ணுங்க என்றதும் நாலு பேர் சேர்ந்தும் அவனை தூக்க முடியாது போனது அவன் வலிமை சொன்னது .. உயிருள்ள போது ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிய உடல் இன்று ஆடி அடங்கி அசைவு இல்லாது கிடந்தது...
எவனாலும் அசைக்க முடியாத ஒருவனை வெகு இலகுவாக கொன்றுவிட்டு சேரில் உட்கார்ந்து அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் பொக்கிஷா!!
உண்மையாவே நீதான கொன்னியா "
"ம்ம், நான்தான் சொன்னேனே கொன்னுட்டேன்னு.... என்றவள் கைவிலங்குக்காக கைநீட்ட, அவள் கையில் விலங்கை மாட்டி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர் ....
வஞ்சகமாக அவள் வாழ்க்கையை நாசாமாக்கிய அவனை அவளும் குரோதம் கொண்டு ரத்தத்தை கொள்முதல் செய்து விட்டாள் !!
போலீஸ் ஜீப் அந்த அக்கிரகாரத்தை விட்டு அவளை ஏற்றிக் கொண்டு மெல்ல நகர, அவள் வண்டி முன்னே கருப்பு நிற ஊர்தியில் அவன் உடலும் ஏற்றப்பட்டு பொக்கிஷா வண்டி முன்னே நகர இரு வண்டியும் ஒன்றுபோல சாலையில் செல்ல ஆரம்பிக்க...
என்னய்யா இது இவன் கண்ணை மூடவே முடியல இன்னும் கண்களை திறந்தே வைத்திருந்த அவன் கண்ணை கான்ஸ்டபிள் மூட முயற்சி செய்ய முடியவே இல்லை .....
"அப்படியா விடுய்யா இனி அவன் என்ன கிளுகிளுப்பை பார்க்க போறான் ... அந்த கண்ணுல என்ன தெரிய போகுது , வாழும் வரை செம ஜாலியாதான் வாழ்ந்து இருக்கான் ... நல்லா நாட்டுக்கட்டை போல இருக்கா, கொடுத்து வச்சவன்" என்று தேக்கு மர தேகமாக கிடந்த அவன் உருவத்தை ஆணே ஆகிணும் ஒருமுறை ஏங்கித்தான் பார்த்தான்.. பின்னே பார்த்து பார்த்து செதுக்கி வைத்த வைரம் பாய்ந்த கட்டை ஆயிற்றே...
அந்த விடியற்காலை வெளுப்பில் அந்த வாகனம் சாலையில் சீறி கொண்டிருக்க போலீஸ் ஜீப்பில் தலை சாய்த்து இருந்த பொக்கிஷா கண்கள் கண்ணாடி ஜன்னல் வழி வந்த சூரிய வெளிச்சத்தை வெறித்த பார்வை பார்க்க.. அதே சமயம் திறந்து கிடந்த அவன் உயிரில்லா கண்ணிலும் சூரிய வெளிச்சம் பட... இதுவரை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை படமாக இருவர் கண்ணிலும் ஓட ஆரம்பித்தது...
அவன் கண்ணில் காட்சிகள் அழகாக , அவள் கண்ணில் காட்சிகள் அகோரமாக ஓடியதுவோ?!
இரண்டு வருடங்களுக்கு முன்பு !!
பெண்கள் சிறைச்சாலை இரும்பு கதவு டொக் டொக் என்று லத்தி கொண்டு தட்டப்பட்டது
சிந்தாமணி உன் மகன் உன்ன பார்க்க வந்து இருக்கான் போய் பார்த்துட்டு வா என்று காவலாளி நடுத்தர வயது பெண்ணை பேர் சொல்லி அழைக்க ... கண்ணில் திமிர் , உதட்டில் பெருமை முகத்தில் ஆணவம் என்று திரும்பினாள் சிந்தாமணி பின்னே வஞ்சக மூர்த்தியின் தாய் அல்லவா ?? அவனிடம் இருந்து இவளுக்கு திமிர் வந்ததா இவளிடம் இருந்து அவனுக்கு கேடுகெட்ட புத்தி வந்ததா ? மொத்தத்தில் குடும்பமே கழிசடை கூட்டம்தான்..
"ஹான், இதோ வந்துட்டான்ல என் மகன் என்னை பார்க்க வந்திருக்கான்ல, பாருங்கடி இன்னும் 10 நிமிஷத்துல, இந்த ஜெயில விட்டு வெளிய போயி என்ன உள்ள அனுப்புன, அவன் குடும்பத்தை இல்லாம ஆக்கல நான் சிந்தாமணி இல்ல ... நான் என்ன சொங்கிப்பய பிள்ளையா பெத்து வச்சிருக்கேன், சிங்கம் மாதிரி மகன் பெத்து வச்சிருக்கேன் , என்ன ஜெயிலுக்குள்ள கிடக்க விட்டுருவானா என்ன ? என்று பந்தாவாக வெளியே நகைக்கடையாக சுற்றி வந்த சிந்தாமணி, இன்றோ வெள்ளை புடவையில் ஜெயில் விசிட்டிங் ரூம் நோக்கி விறு விறுவென்று நடக்க ஆரம்பிக்க....
அய்யா வஞ்சகமூர்த்தி வந்துட்டியா, நீ வருவேன்னு எனக்கு தெரியும் ... அந்த ஜெயிலர்கிட்ட ரெண்டு முட்டை எக்ஸ்ட்ரா தர சொன்னதுக்கு , வாய் மேலே அடிச்சிட்டாய்யா, அவ கையை உடைச்சு அடுப்புக்குள்ள வைடா "முதுகை காட்டி நின்று கொண்டிருந்த தன் மகனுக்கு கட்டளை போட்டுக் கொண்டே சிந்தாமணி வர.., தலையை திருப்பி வந்த தன் தாயை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தான் வஞ்சகமூர்த்தி!!!
திருக்கி வானம் நோக்கி விட்ட அவன் மீசை கூட இதுவரை தலை தாழ்ந்தது இல்லை என்பது போல இரண்டு பக்கமும் முறுக்கி விட்ட கம்பீர மீசை ஒன்று போதும் அவன் காட்டழகன் என்று வர்ணிக்க...
"கிழவி கிழவி, உன் வாயில தான் கொல்லிக்கட்டையை சொருகணும் கிழவி... அதான் அவன் பெட்டியில வச்சிருந்த கோடி ரூபாய் பணத்த எடுத்து தந்தேன்ல வாய மூடிக்கிட்டு சும்மா இருக்காம, நான் கொலை கேஸ்ல ஜெயிலுக்கு போன நேரத்துல பெரிய இவ மாதிரி அருவாளும் கையுமா அவனை தேடி போயிருக்க... நல்லா உள்ள கிடந்து சாவு கிழவி, ரெண்டு வருஷமும் உள்ளதான் கிடக்குற உன்ன ஜாமீனோ இல்ல, இனிமே வந்து எவனும் பாக்க கூட மாட்டோம்... அத சொல்லிட்டு போகத்தான் வந்தேன்... மீறி வெளிய வர பார்த்தா பாடை கட்டிடுடுவேன் ஜாக்கிரதை" என்று புருவம் நடுவே வெட்டுப்பட்ட கீறல் துடிக்க, ரெட்டை காதிலும் வைர கடுக்கன் மினுங்க ,நெஞ்சில் இருக்கும் காட்டுமுடி கருப்பு சட்டை வழியே வியர்வையில் நனைய அவன் சிறுத்தை கண்கள் தாயை பார்வையில் பொசுக்கியது...
"டேய் உன்ன பத்து மாசம் நொந்து பெத்து எடுத்த தாய்டா நான்" என்று சிந்தாமணி மகனை முறைக்க
"தூ தேரிக்க, வாயில போட்டுருவேன் வாயில போட்டுடுவேன் கிழவி" என்று தாயை கம்பிக்கு நடுவே குத்துவது போல் கையை உள்ளே நீட்டி அடிக்க போக... சிந்தாமணி பின்னால் நகந்து கொண்டாள்... இல்லை இரண்டு பல்லை உடைத்து எடுத்து இருப்பான்.. ஏற்கனவே இவன் உடைத்ததில் நான்கு பல் ஒட்டுப்பல், மகனிடம் அடி வாங்கி பல்லை தெறிக்க விட்ட சிந்தாமணிக்கு சற்று இவனைக் கண்டால் பயம்தான்...
"அது, அந்த பயம் இருக்கட்டும், என் முன்னாடி சத்தம் ஒசந்தது சங்கு மேலேயே நாலு சொருகு சொருகி உன் போட்டோவுக்கு பூமாலை போட்டு விட்டுருவேன் ஜாக்கிரதை, கொத்து சாவியை எங்க வச்சிருக்க , வீட்டு பத்திரத்தை எல்லாம் எங்க, வட்டி பணத்தை எல்லாம் வாங்கி எந்த பெட்டியில வச்சிருக்க...
"தெரியாது
"தெரியாதா, சொல்லல இங்கேயே உன்னை கொன்டுவேன்" என்று வஞ்சகமூர்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாய் சங்கை நோக்கி கையை கொண்டு போக
"எப்பா எப்பா மூர்த்தி, யாருக்கும் தெரியாம தான் உன்னை உள்ள விட்ருக்கேன், தயவு செஞ்சு என் வேலைக்கு உலை வெச்சிடாதப்பா "என்று கான்ஸ்டபிள் வந்து வஞ்சகமூர்த்தி கையை பிடித்துக் கொள்ள...கிழவி உசுர் தப்பித்தது,..
"அப்போ ஒழுங்கா கஜானா சாவி எல்லாம் எங்க இருக்குன்னு அந்த கிழவி கிட்ட கேட்டு சொல்லு
"அன்பு கொடுக்கத் தெரிந்தால் தானே எடுக்க முடியும் ... தாயாக பெத்து போட்டதோடு சரி, அவன் தானாக வளர்ந்த காட்டுப்பூ !! அன்பா வாட் இஸ் திஸ் அது எந்த கடை ப்ராப்பர்ட்டி என்று கேட்கும் முரடன்!!
சொல்றியா இல்ல இங்கேயே சாவடிக்கவா சிந்தாமணியின் கொத்து முடி வஞ்சகமூர்த்தி கையில் அகப்பட்டு விட , அதை பிடித்து ஆட்டு ஆட்டு என்று மாவாட்டி விட்டான்
ஆஆஆஆ வலி தாங்க முடியாத சிந்தாமணி
ஸ்டோர் ரூம்ல மேல இருக்கிற தகர பெட்டிக்குள்ள இருக்குடா முடிய விடுடா,
போடுற மாதிரி போட்டா தான் வாயைத் திறக்கிற பெத்தாளாம்ல, பெத்தா... நல்லா ஊர்ல போற விருந்தாளிக்கு எல்லாம் பிள்ளைய பெத்து போட்டுக்கிட்டு பத்தினி ___ போல பேசிகிட்டு திரிய வேண்டியது ... ஏதோ உன் கர்ப்பப்பையில பத்து மாசம் ஸ்டே பண்ணின பாவத்துக்கு, உன்னை எல்லாம் பொறுத்துக்கிட்டு இருக்கேன்... இல்ல நடக்க பழகுறதுக்கு முன்னவே உன்னை கொன்னு மொத கொலைக்கு ட்ரையல் பார்த்திருப்பேன் அன்டர்ஸ்டண்ட் என்று திட்டிக்கொண்டே வாசல் நோக்கி போக...
டேய் தண்டமா போற தடிப்பயலே, போறதுதான் போற , உன் தங்கச்சியையாவது ஒழுங்கா பாத்துக்கடா" என்ற சிந்தாமணி கத்த .. போன ஸ்பீடில் நடந்து வந்து அந்த கம்பியில் ஒரு மிதி மிதிக்க கம்பி நான்கு துண்டாக வளைந்து இருக்கும்
யாருக்கு யார் தங்கச்சி எல்லாரும் எனக்கு தங்கச்சி ஆயிட முடியுமா, இல்ல உன் வயித்துல பிறந்த பாவத்துக்கு, என் சொத்துல பங்கு கொடுக்க முடியுமா? பாத்துகிட்டே இரு ஒருநாள் உன்னையும் அவளையும் ஒன்னா கொன்னு ஒரே குழியில போட்டு முக்கல, நான் வஞ்சகமூர்த்தி இல்ல.. என்று தன் மீசையை முறுக்கி வானம் நோக்கி விட்டுகொண்டு கருப்பு வேட்டியை ஏத்தி கட்டியபடி வெளியே போனவன் நோக்கி சூரிய பகவான் சுள்ளென நெருப்பைக் கக்க ... சன்னை பார்த்து அவன் முறைத்த முறைப்பில் சூரியன் மேகத்திற்குள் ஒளிந்து கொண்டது...
கருப்புச்சட்டை கருப்பு வேட்டியும்தான் அவன் நிரந்தர ஆடை அலங்காரம் ..... அந்த கருப்பு ஆடைக்கும் அவன் கழுத்தில் கையில் விரல்களில் கிடக்கும் தங்க ஆபரணங்களுக்கும் அட அட!! என்னா அழகுடா!!! என்று உச்சிக்கொட்டலாம்... கம்பீரமும் தோரணயையும் வீரமும் அவனோடு பிறந்த சொத்து, ஆனால் அந்த அழகை வர்ணிக்கும் அளவு ரசிக்கும் அளவு செயல்கள் இல்லாத வஞ்சகமான ஒருத்தன்...
வஞ்சத்தில் கூட வீழாதவன், மஞ்சத்தில் வீழந்தான் என்று சரித்திரம் அவன் பெயரை பொறிக்கும் நாள் நெருங்கிறதோ!??