குரோத கொள்முதல் அழகே 2

Kurotham2

குரோத கொள்முதல் அழகே 2

2 குரோத கொள்முதல் அழகா !!

வாஞ்சி அண்ணன் வாஞ்சி அண்ணன் என்று கதவு தட்டப்பட படுக்கையில் குறுக்கே கிடந்த அவன் எஃகு உடல் அசைந்தது 

விடியல்ல தான் தூங்குனார் , எதுக்கு இப்ப எழுப்பிட்டு இருக்க என்று கொண்டை போட்டபடி குளியலறை கதவை திறந்து கொண்டு ஒரு பெண் வெளியே வர ... உள்ளே நுழைந்தவனோ தலையை குனிந்தபடி 

அர்ஜெண்ட் மேட்டர் அக்கா அதான் அண்ணனை கூட்டிட்டு போக வந்தேன் 

"ம்க்கும் அவர் அண்ணன் நான் அக்காவா? ராத்திரி முழுக்க உங்க அண்ணன் இங்கிட்டு என்றவள் வாயை பொத்தி கொண்டாள் உடலை நெட்டி முறித்து எழும்பிய அவனை கண்டு ....

"என்னடா ? அப்பெண் நீட்டிய பக்கெட்டில் முகத்தை கழுவி டவலில் துடைத்தவன் எழும்பி கருப்பு வேட்டியை கட்ட ஆரம்பிக்க.... அப்பெண் அவனுக்கு தேவையான அனைத்தும் எடுத்து கொடுக்க 

"ராத்திரி வருவீங்களா என்று சிணுங்கலாக கேட்க .... கட்டு பணத்தை எடுத்து நீட்டியவன் 

"உன் மகளுக்கு பீஸ் கட்ட பணம் வேணும்னு ராத்திரி கேட்ட நியாபகம் என்றதும் அவன் நீட்டிய பணத்தை அப்பெண் வாங்கி ஜாக்கெட் உள்ளே திணித்து கொண்டு 

"ஹிஹி காரியத்துல கண்ணால இருந்தாலும் நான் பேசுறதை கேட்டு இருக்கீங்க போல 

"பின்ன பொண்ணு சோக்குல சுத்தி நடக்கிறது கவனிக்காம இருக்கிற தொம்பை பயலா நானு படுத்ததுக்கு காசு இருக்கு .... தூங்கும் போதுகூட நாலாபக்கமும் என்ன நடக்குதுன்னு மூளைக்கு தெரியும் என்கிட்ட எவளும் எதையும் புடுங்கி தள்ள முடியாது...

" ஹிஹி உங்களை பத்தி எனக்கு தெரியாதா , இன்னைக்கும் வர்றீங்களா ?அவளை ஏற இறங்க பார்த்தவன் ..மேஜை மீது சல்லாபம் செய்ய இடையூறாக இருந்த நகைகளை வைத்திருக்க அதை சரிபார்த்து மாட்டியபடியே...

"விட்டா பொண்டாட்டி மாதிரி ஆகிடுவ போல படுக்கிற தாசி நியாபகம் வந்தா வருவேன் ... உனக்கும் எனக்கும் உள்ள சம்மந்தம் கட்டிலோட முடிஞ்சு , ஒழுங்கா உன் புருசன் கூட வாழ்ற சோலியை பாரு .... "

"ம்க்கும் அவன் எங்க குடிச்சிட்டு குப்பற கிடக்கானோ? என்று அவள் புலம்புவது கேட்காத வேகத்தில் அவ்வீட்டை விட்டு வெளியேறினான் வஞ்சக மூர்த்தி...

"வாஞ்சி அண்ணன் வாஞ்சி அண்ணன் 

"வஞ்சகமூர்த்தி அந்த பெண் வீட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தபடி வெளியே வர ... 

"நம்ம வக்கீல் வாசன் அம்மா ஐசியுல இருக்கு 

"ஓஓஓ என்னவாம் ?? 

"தெரில அதான் போய் பார்ப்போமா வேண்டாமான்னு கேட்க வந்தேன் 

"நம்ம கால்மாட்டுல கிடக்கிற பய ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுவோம்... என்று நீளநீள எட்டு வைத்து தோள் வரை புரண்ட பிடறி முடியை கையால் கோதி விட்டபடி இன்னொரு கையால் சிகரெட்டை இழுத்து கொண்டே போய் வண்டியில் தாவி ஏறினான் வஞ்சகன்....

கார் அந்த மருத்துவமனை உள்ளே நுழைந்தது பிரபல ரவுடி , கட்டபஞ்சாயத்து, கொலை வெட்டு குத்து அத்தனையும் தவணை முறையில் சில்லறை முறையில் செய்யும் கும்பலின் தலைவன் வஞ்சகமூர்த்தி!!! அவனை கண்டதும் மருத்துவமனை அமைதியாகிவிட சரட்சரட் என்று அவன் செருப்பு சத்தம் மட்டும் தான் அந்த காரிடரில் கேட்டது .... ஐசியு வாசலில் அவனுக்கு வரவு செலவு பார்க்கும் வக்கீல் வாசன் தலையை பிடித்தபடி இருக்க 

"வாசு சார் வாஞ்சி அண்ணன் வந்திருக்கு "என்றதும் வாசு சட்டென ஓடி வந்து வாஞ்சி கையை பிடித்து கொண்டு

"அண்ணன் அம்மாவுக்கு "

"என்ன ஆச்சு ...

"ஹாட் அட்டாக் ...

"ஓஓஓ இப்ப தேவையிலையா 

"ம்ம் பயப்பட ஒன்னும் இல்லைன்னு சொன்னாங்க ..

"ரைட் ரைட் எப்பவும் போற உசுருதானப்பா அதுக்கு இவ்வளவு பதட்டம் கூடாது, டேய் இசக்கி எவ்வளவு பில்லுன்னு பார்த்து கட்டிரு 

"அய்யோ அண்ணன் அதெல்லாம் வேண்டாம் என்று வாசு மறுக்க 

"அவங்க உனக்கு மட்டுமா அம்மா, எனக்கும் தான் அம்மா மாதிரி விடுப்பா விடுப்பா, நான் கட்ட கூடாதா??" என்றதும் வாசு வாஞ்சி பெருந்தன்மை கண்டு மெச்சி கொள்ள ..அவன் தங்கை பள்ளி யூனிபார்மில் அழுது கொண்டு உள்ளே வர 

"இது என் தங்கச்சி அண்ணன் ... 

"நம்ம தங்கச்சின்னு சொல்லுப்பா உனக்கு தங்கச்சின்னா எனக்கும் தங்கச்சி போல, பார்த்துக்க நாளைக்கு வர்றேன் என்று காதை குடைந்து கொண்ட வஞ்சகன் வந்து காரில் அமர்ந்தான்..

அவன் பாம்பா விழுதா விஷமா என்று அவன்தான் சொல்ல வேண்டும் ரத்த கறை படிந்தது அவன் கை மட்டுமா இதயமுமா? என்று இனிதான் தெரியும் ... 

"அண்ணன் இன்னைக்கு வக்கீல் வாசுவுக்கு கல்யாணம் நீங்க என்னன்னா ருக்கு வீட்டை விட்டு வர்ற ஐடியா இல்லாம சுத்திட்டு இருக்கீங்க .. 

"ராத்திரி செம போதை ஏத்திட்டா இப்பதான் கண்ணை திறக்கிறேன், இந்த பொம்பளைங்களை படைச்சதே என் ஆசைக்கு தான் போல , எப்பா எம்புட்டு சுகம் வச்சிருக்காளுக" என்று சட்டையை மாட்டியபடி வஞ்சகன் குளித்து கிளம்பி, வாசு எடுத்து கொடுத்த பட்டு வேட்டி சட்டையில் மினுமினுவென கிளம்பி கல்யாண மண்டபம் வந்து இறங்கினான் 

இருபது பேர் புடைசூழ வஞ்சகமூர்த்தி மணமேடை நோக்கி வர, மணமகன் வாசு சிரித்த முகமாக

வாங்க அண்ணன் ..

"இருக்கட்டும் இருக்கட்டும் 

"சாப்பிட்டுட்டு தான் அண்ணன் போகணும் 

"சாப்பிட்டிரலாம் சாப்பிட்டிரலாம் என்றவன் மேடை மேல் கையை கட்டி கொண்டு நிற்க 

"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என்றதும் மஞ்சள் நிற மடிசார் அணிந்து நளினமாக இருபது வயது பெண் நால்வர் நடுவே அழகாக வெள்ளி கொலுசு ஜல் ஜல் என்று ஜதி பாட நடந்து வர... போனை பார்த்து கொண்டு நின்ற வஞ்சகன் காதில் பெண்ணின் கொலுசு சத்தம் கேட்டு , சட்டென பெண் போதை ஏற கண்ணை தூக்கி பார்க்க, அங்கே மணப்பெண்ணாக இருபது வயது பொக்கிஷா தலை குனிந்தபடி வந்து கொண்டிருக்க... 

"எம்மாடியோவ்!!! யாருடா இவ என் கண்ணுல இதுநாள் வரை படவே இல்லை" என்று வாய்விட்டே வஞ்சகன் கண்ணில் போதை தெறிக்க அவளையே பார்க்க 

"ஊர்ல படிச்சிட்டு இருந்துச்சு போல, அம்மா சமீபத்தில இறந்து போச்சு, தகப்பனும் ஒரு தங்கச்சியும் இருக்கு, ஆளு மாமி ...

"ப்ச் யாரா இருந்தா என்ன பொண்ணுடா பொண்ணு கன்னத்துல போடு , பொண்ணுல பேதம் பார்க்க கூடாது" என்றவன் பார்வை சற்று உருண்டையாக குண்டு அழகியாக மூக்கில் புல்லாக்கு மினுங்க வந்தவளை மொய்த்து தள்ள 

"அண்ணன் அதுதான் மணப்பொண்ணு வாசுவோட மனைவி என்றவனை திரும்பி பார்த்து முறைத்த வஞ்சகன் 

"அழகானது எல்லாம் எனக்குதான் முதல்ல சொந்தம்டா ...

"அண்ணன் ஏஏஏஏஏ என்று அவன் கூட்டம் அதிர வஞ்சகனோ கீழே கிடந்த தாலியை குனிந்து தூக்கி எடுத்து தன் பாக்கெட்டில் போட்டு கொண்டவனை அத்தனை பேரும் அதிர்ந்து பார்க்க 

மணமகன் அருகே வந்து அமர்ந்த பொக்கிஷா அப்போதுதான் தலையை தூக்கி தன் அருகே நின்ற வஞ்சகனை முதல் முதலாக பார்த்தாள் 

"அண்ணன் என்னாச்சு என்று வாசு பதட்டமாக கேட்க 

"ரிலாக்ஸ் ரிலாக்ஸ் தம்பி , பதறாத....

"எதுக்கு அண்ணன் தாலியை எடுத்தீங்க ? 

"அதுவா தம்பி , அண்ணனுக்கு உன் வருங்கால பொண்டாட்டியை புடிச்சி போச்சு , உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி, இனி எனக்கும்தான் பொண்டாட்டி !! நீ என்ன பண்ற ஒரு 90 நாள் அவளை எனக்கு பொண்டாட்டியா ப்ச் ப்ச் வப்பாட்டியா அனுப்பி வை, ஆசை தீர்ந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்... அப்பறம் நீ கல்யாணம் பண்ணிக்க என்ன நான் சொல்றது ? என்றான் லேகுவாக சட்டையை முறுக்கி விட்டபடி.. 

"டேய்இஇஇஇஇஇஇஇ என்று வாசு கோவத்தில் அவன் சட்டையை பிடிக்க ... அவன் நெற்றியில் பத்து துப்பாக்கிகள் குறிபார்த்து வெடிக்க காத்திருக்க , திருமண மண்டபமே கப்சிப் 

"அமைதி அமைதி !! அமைதியோ அமைதி !! என்னடா பொசுக்குன்னு துப்பாக்கியை நீட்டுறீங்க, பாரு பய பயந்துட்டான், நம்ம பயடா அவன் , விடுங்க விடுங்க என்றதும் துப்பாக்கியை அனைவரும் கீழே நகர்த்த 

"தம்பி , பேச்சு பேச்சாதான் இருக்கணும்... அது என்ன சட்டையை பிடிக்கிற வேலை பாரு சட்டை கசங்கி போச்சு என்று தன் சட்டை மீது இருந்த வாசு கையை உதறி விட்ட வஞ்சகன்... 

"வக்கீல் தம்பி, நம்ம பயலுக முரட்டு பயலுக உனக்கு தெரியாதது இல்லையே.... மூணே மாசம்தான தம்பி அண்ணன் அவளை வச்சிக்கிறேன் ... நீ என் தோப்பு வீட்டை வச்சிக்க 

"டேய்இஇஇஇஇஇ 

"அது பத்தாதா அப்போ டவுண்ல கிடக்கிற கடையை வச்சிக்க, இந்த தங்க சிலைக்கு எதை வேணுமானாலும் எழுதி குடுக்கலாம் என்றவன் பார்வை மாலை நடுவே பதுங்கிய மான்குட்டியை பல் குறுகுறுக்க பார்த்தது... 

"நமக்குள்ள என்ன போட்டி சொல்லு ... நீ தின்னுட்டு நான் தின்னா என்ன ? நான் தின்னுட்டு நீ தின்னா என்ன, பசி ஆறினா போதாது, விவரம் தெரியாத பிள்ளையா இருக்கியேப்பா" என்று வஞ்சகன் கசங்கிய தன் சட்டையை நீவி சுருக்கு எடுத்து கொண்டே கூற 

"உங்களை நான் எவ்வளவு நம்பினேன்,. இப்படி பேசறீங்களே உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றீங்களே" என்று வாசு நடுங்கிய குரலோடு வஞ்சகனை பார்க்க  

"அட பாவத்தை !!உன்ன பார்க்க கஷ்டமாதான் இருக்கு ... உன் மேல அண்ணனுக்கு மரியாதையும் இருக்கு, அதான் 3 மாசத்துல அவளை திருப்பி அனுப்புறேன்னு சொல்றேன்... மறுத்தா என்ன நடக்கும்னு தெரியுமே, அதெல்லாம் நீ சூதானாமா இருப்ப .... தாலி எங்கிட்டதான் பத்திரமா இருக்கு ... பதறாதப்பா,கல்யாணத்துக்கு நீ பண்ணின செலவு எல்லாம் இசக்கி பைசல் பண்ணிடுவான், நீ போய் ரெஸ்ட் எடு தம்பி ... என்றவன் பார்வை மாலையை கசக்கி பிடித்து பயந்து போய் பார்த்த பொக்கிஷா பக்கம் மீண்டும் திரும்ப, சட்டென வெள்ளி கொலுசு போட்ட அவள் கால்களை புடவை உள்ளே இழுத்து கொள்ள ...

அட அட இந்த காலுக்கு வெள்ளிக்கொலுசா, தப்பு தப்பு இந்த அழகான காலை இன்னும் அழகாக்க நான் போடுறேன் பாரு தங்க கொலுசு .. நீ இருக்க வேண்டிய இடம் இதுவா ... இது !! என்று தன் தொடையை தட்டி காட்டியவன்.. 

"குண்டு குண்டுன்னு மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்காளே உன் பேர் என்ன ? என்று ரசனையாக அவள் செழித்த அழகை சேலை மேலே ரசித்த படி வஞ்சகன் கேட்க.... அவளோ கண்ணை கண்ணை உருட்டி மிரண்டு போய் பார்த்திட... 

"பொக்கிஷாவாம்ணே, இதோ கட்டவுட்ல இருக்கு என்றதும் அதை திரும்பி பார்த்தவன் .... 

"சவத்தை என்ன ஜோடி பொருத்தம் இது , நீயும் நானும் நின்னா எவ்வளவு அழகா இருக்கும் போகட்டும் போகட்டும் எங்க போக போற.. டேய் வரிசையில புது வப்பாட்டி சேர்ந்து இருக்கு, இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் சரக்கு பார்ட்டிதான்.... என்று சிரித்தவன்... அவள் பக்கம் குனிய பதறி போய் பொக்கிஷா பின்னால் நகர ...

இன்னையில இருந்து வஞ்சகமூர்ர்தி புது வப்பாட்டி இவதான் ... இனி இவ என் பொக்கிஷம்.. யார் மூச்சு காத்தாவது இவ மேல பட்டுச்சு என்றவன் முறைத்த முறைப்பில் கூட்டம் தெறித்து ஓட .... அவள் அருகே குத்த வைத்து அமர்ந்த வஞ்சகன் ... 

மூணு மாசத்துக்கு என்ன உன் புருசன் மாதிரின்னு நெனைச்சிக்க , சங்கடம் இருக்காது.... அப்பறம் நானே உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் முன்னாடி நின்னு அத்தனை செலவும் பண்ணி ஜாம் ஜாம்னு நடத்தி வைக்கிறேன்... அதுக்கு பிறகு உன் மேல என் நிழல் கூட படாது, இது சத்தியம் சரியா? வரட்டா அழகு வப்பாட்டி!!!" என்று அவள் கன்னத்தில் முத்தத்தை கொடுக்க போக அவள் பதறி முகத்தை திருப்ப போகவும்... சட்டென அவள் தாடையை அழுத்தி தன் பக்கம் திருப்பிய வஞ்சகன் அத்தனை பேர் முன்னாலும் அவள் உதட்டில் பச்சக் என்று அழுத்தி வைத்து விட்டு எழும்பியவன்... வக்கிரமாக சிரித்தான்...

பெண்ணின் சாபத்தை வாங்குபவன் கடவுள் என்றாலும் அதற்கு கணக்கு கொடுத்தே தீர வேண்டும் ... வஞ்சகம் செய்யும் இந்த வஞ்சகனுக்கு என்ன தீர்ப்பு கடவுள் எழுதி இருக்கிறாரோ??