வேரலை மேய்ந்த லேழம்2

Velam2

வேரலை மேய்ந்த லேழம்2

2 வேரலை மேய்ந்த வேழம்!! 

தீத்தன் போனை வைக்க போனவன் அவள் பதட்ட குரலில் படுக்கையை விட்டு எழும்பி மெல்ல அடி மேல் அடி வைத்து ஆளுயர கண்ணாடி முன்னே நின்றான் ... 

ஆறடி படுக்கட்டு வண்ண திருமேனி, முறுக்கேறி நின்ற உடல்.. பணம் பின்னே ஓடிய காலத்தில் உடலையும் உள்ளத்தையும் பேணி பாதுக்காக்க கட்ட பிரம்மச்சாரி ஆகி போனான் ..  

அழகு பணம் இளமை அத்தனையும் கொண்டவன் இந்த தீத்தன் ... 

அவன் கண் அசைத்தால் கூடி கூலாவ பல பெண்கள் வரலாம் ஆனால் முயற்சி செய்ய விருப்பம் இல்லை ... 

தாய் பெரிய செல்வந்த குடும்பம் , அவன் பிறந்ததும் இறந்து விட்டார் , தகப்பன் வேறு திருமணம் முடித்து லண்டனில் செட்டிலாகி விட்டார் இவன் தனியாக தாயின் தாய் வீட்டில தங்கி படித்து ஆளாகி ... இதோ சுற்றி சுற்றி செல்வம் உண்டு .. அவன் துணையாக இருந்த பாட்டியும் இறந்த பிறகு தான் எனக்கு யாரும் இல்லை என்பதை உணர்ந்தான்.. 

சில மாதமாக தனிமை போக்க சுற்றுலா , பார்ட்டி பப் என்று போனான் அப்போதும் அவனை சுற்றி உள்ள வெறுமை போக மறுக்க ... இரவு தூக்கமும் பறிபோகவே யோசனை முடிச்சு விழுந்தது... தனிமை கொல்லும் என்று அறிந்தவன் தானே .. 

தன் தனிமைக்கு ஏதோ துணை உடலும் உள்ளமும் கேட்கிறது என்று புரிந்து கொண்டான் .. கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா?? திருமணம் என்ற யோசனை முகம் சுளிக்க வைத்தது ... பெண்ணோடு இரவுகளை கொண்டாடி பெயர் கெட விருப்பம் இல்லை .... அவன் கட்டி வைத்திருக்கும் கோட்டை இடிந்து விடும் ... என்ன செய்ய இரவு தூக்கம் வராது போனை நோண்டி கொண்டிருந்த அவன் போனுக்கு அறியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது .. 

சார் நீங்க கேட்ட மாதிரி கைபடாத பொண்ணு ஒன்னு இருக்கு, வந்தா முடிச்சிடலாம்.. பொண்ண பார்த்து காசு கொடுங்க போதும் என்ற கேசவன் குரல் அது..

மனைவியை விற்க ஆளை தேடி பிடித்தவன் போன் நம்பரை வாங்கி போட, ஒரு நம்பர் மாறுதலாகி விட அது தீத்தன் போனுக்கு தவறுதலாக வந்து விட்டது .... 

சில தவறுகள் சிலர் வாழ்க்கையையே மாற்ற போகும் சாவிகளே... 

ப்ச் ராங்க் நம்பர் என போனை வைக்க போக

"சார் பேசி பாருங்க பொண்ணு கிளி போல இருப்பா, கிராமத்து பொண்ணு காசுக்காக எல்லாம் இதுக்கு வரல .... தாய்க்கு உடம்பு முடியல சிகிச்சைக்கு காசு வேணும்னு கேட்டாங்க .. வேற வழி இல்லாம தான் வர்றாங்க கண்டிப்பா நீங்க யாரு என்னன்னு வெளிய கசியாது"

"ராங்க் நம்பர்னு சொல்லிட்டு இருக்கேன் போனை வை மேன் இவன் வேற" என்று எரிச்சலில் தீத்தன் கத்தி விட்டு போனை வைத்துவிட மீண்டும் அழைப்பு ...

"அறிவு இல்லை வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்ல..

"மன்னிச்சிக்கோங்க சார் நம்பர் மாறி போச்சு கிராக்கின்னு நினைச்சு உங்களுக்கு போனை போட்டுட்டேன் .. அவர் நம்பர் வேற அங்கேயே பேசிக்கிறேன் .... 

ம்ம் என போனை வைக்க போனவனுக்கு என்னவோ நெஞ்சை பண்ணியது 

"நான் வேண்டாம்னு சொன்னா எவனோ ஒருத்தன் அவளை பணத்துக்காக வேசி ஆக்கி விடுவானோ பாவம் தாயின் சிகிச்சைக்காக இதை கூட செய்ய துணிந்த பெண்ணை அப்படியே விட அவனுக்கு முடியாது 

ஹேய் ஹேய் மேன் 

சார் 

"ம்க்கும் அந்த ஆளுக்கு போனை போடாத , அந்த பெண்ணை நானே வாங்கிக்கிறேன் 

"சார் ...

"நீ யாரு எங்க இருக்க ? 

"அது வந்து என்று கேசவன் மென்று முழுங்கி ஆன்லைனில் நடக்கும் விபசாரம் பற்றி கூறி 

"இதுல பேசினா ஒரு அமவுண்ட், மத்துக்கு ஒரு அமவுண்ட் ...உங்களுக்கு எது சார் வேணும் பேச்சு மட்டுமா இல்லை ரெண்டுமா? முதல்ல நான் சொல்ற நம்பருக்கு அட்வான்ஸ் போட்டு விடுங்க .. அப்பதான் நம்பி இறங்க முடியும் சார் ....

"ப்ச் நம்பரை சொல்லு போட்டு விடுறேன் 

"ம்ம் அவன் சொன்ன நம்பருக்கு ப்ரைவேட் அக்கவுண்ட் மூலம் உடனே ஐம்பதாயிரம் ரூபாய் ஏற..

அய்யோ அய்யோ சுளையா பணம் வந்திருக்கு என்று கேசவன் குதித்தான்... 

"சார் எப்ப வர்றீங்க ...

"பேசினா போதும் நாளைக்கு நைட் அந்த பொண்ணுக்கிட்ட பேச ஏற்பாடு பண்ணு 

"ஓகே சார் 

"எக்காரணம் கொண்டும் நான் யார் என்னன்னு தேட முயற்சி எடுக்க கூடாது அப்படி எதாவது தோண்ட நினைச்ச எடம் பெருசு சத்தம் இல்லாம உன் கதையை முடிக்க சொல்லிடுவேன் 

"எடம் பெருசுன்னு நீங்க சொல்லி தான் தெரியணுமா..நீங்க கிடைச்சது என் பாக்கியம் சார் நான் கண்ட வேலை பார்க்க மாட்டேன் நீங்க பயப்பட வேண்டாம் சார் .... 

"ம்ம் , என்கூட காண்ட்ராக்ட் முடியும் வரை அவளை வேறு யாருக்கும் 

"விலை பேச மாட்டேன் சார், இது வாங்கின காசு மேல சத்தியம் ஆனா என்று கேசவன் இழுக்க 

"வாரம் ஒருமுறை ஐம்பதாயிரம் ரூபாய் போட்டு விடுறேன் ... 

"நன்றி சார் நன்றி ஐயாயிரம் கேட்க நினைத்த அவனுக்கு ஐம்பதாயிரம் சொல்லவும் மயக்கமே வந்தது 

"கைவசம் செம தொழில் கிடைச்சிருச்சு, இனி இந்த சிறுக்கியை ஊருல வி்ட்டே நான் கோடீஸ்வரன் ஆக போறேன் "என்று கொக்ரித்து சிரித்தான் மனிதன் இல்லாத மிருகன்.. 

"என்ன பண்ணிட்டு இருக்கேன் என்று போனை யோசனையாக பார்த்து கொண்டிருந்த தீத்தன்  

"நான் போய் ஒரு கால் கேர்ள் ப்ச் ச்சே அவ இன்னும் அந்த தப்பு பண்ணல தப்பா பேச கூடாது... இந்த நாய் சொல்றது நம்புறியா..

"நம்பல பட் எதோ ஒன்னு அவளை காப்பாத்த சொல்லுதே இவன் என்ன என்ன செஞ்சிட போறான் ... நாளைக்கு அவகிட்ட பேசினா உண்மையா பொய்யா புரிஞ்சுட போகுது ...என்று அத்தோடு அதை மறந்து விட, அடுத்த நாள் கேசவன் தான் போனை போட்டு 

"சார் பொண்ணு ரெடி என்ற பின்னே

யார் எந்த பொண்ணு என்று தன் அறையை திறந்து கொண்டு உள்ளே வந்தான் 

"சார் அதான் நேத்து பேச காசு தந்தீங்களே...

"ஓஓஓஓ நியாபகம் வந்தவனாக

" கொடு கலைப்பு தாண்டி அவள் குரல் கேட்க ஏதோ ஒரு ஆர்வம் கண்ணில் .... 

அவள் குரல் கேட்ட அந்த நொடி அறையில் சுற்றி இருந்த சுவர் கூட கலகலத்து சிரித்தது போல் ஒரு மாயை .... 

அவனை சுற்றி இருந்த சீனச் பெருஞ்சுவர் போல உருவாக்கப்பட்டிருந்த தனிமை , அவள் ஒற்றை வார்த்தையில் சுக்குநூறாகிப் போனது போல தோன்ற .. ஆர்வமாக அவள் குரல் கேட்க தீத்தன் காதில் ஃபோனை இடுக்கினான்.. 

கண்ணாடி முன்னால் தன் ஆறடி உருவத்தை முன்னும் பின்னும் பார்த்தான்... திடீரென முகத்தில் இருந்த சோர்வு அத்தனையும் நீங்கி முகம் பிரகாசமாய் ஜொலித்தது... தன் படிக்கட்டு தேகத்தை மறைத்திருந்த பச்சை நிற கோட்டை கழட்டி படுக்கையில் வீசியவன் , உள்ளே போட்டு இருந்த சட்டையை கழட்டி கொண்டே

ஹலோ இருக்கியா போயிட்டியா?? என்று கடினமான குரலில் பேச்சு வந்தது .. மெலிதாக பேச வேண்டிய இடத்தில் அவன் இல்லை, எப்போதும் அதை இதை செய் என்று ஏவக்கூடிய அதிகாரி அவன்... அதில் பெண்களும் அடக்கம்... பெண்களையும் இப்படியேதான் வேலை வாங்கி இருக்கிறான் எனவே இவளிடம் எப்படி பேச வேண்டும் என்ற நேக்குப்போக்கு அவனுக்கு தெரியவில்லை.. அவன் நின்று ஒரு பெண்ணிடம் நேரத்தை செலவழித்து பேசுகிறான் என்பதே பிரமிப்புதான் 

தீத்தன் இண்டஸ்ட்ரி தண்ணீர் பேக்டரி , உப்பு நீரை தண்ணீராக மாற்றும் ஃபேக்டரி, உப்பளம் ஏகப்பட்ட சரக்கு கப்பல் என்று தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையும் இந்த வயதில் உருவாக்கிய இளம் தொழில் அதிபர்... இந்தியாவில் தீத்தன் இண்டஸ்ட்ரி என்று சொன்னால் தெரியாத ஆட்களே இருக்க முடியாது... தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மூளையும் உழைப்பும் கொண்டவன்.. 25 வயதில் கையில் எடுத்த தொழில் ஏழு வருடத்தில் உச்சாணிக்கொம்பில் வந்து நிற்கிறான்.. இந்த ஏழு வருடத்தில் எங்கும் நிற்கவில்லை , எதற்காகவும் நின்று திரும்பி பார்க்கவில்லை... இப்போது தான் அவன் இளைப்பாறவே விரும்புகிறான் .. அதன் பிறகு தான் திரும்பிப் பார்த்தான்... எல்லாவற்றையும் சாதித்த அவன் வாழ்க்கையில் என்னவோ தோற்றுப் போன உணர்வு தான் மீதி இருந்தது .. 

அவனை சுற்றி பணம் இருக்கிறது பதவி இருக்கிறது அவன் சொடுக்கு போட்டால் அவன் காலடியில் வந்து விழ அதிகாரிகள் பலர் காத்திருக்கின்றார்கள்.. ஆனால், என்னவோ ஒன்று குறைந்தது அவன் தனிமைக்கு துணையாக ஒரு துணை இல்லை... அதுவே மனதை இன்னும் கடினமாக்க.. இதோ இனி இந்த ஒரு குரல் போதும் என்று அதற்கு விடையாக வந்தால் இந்த வேரல்...

"ஹலோ இருக்கியா ?தீத்தன் எஃகு குரல் வர 

"இருக்கேன்னு சொல்லு சிறுக்கி" என்று கேசவன் வேரல் காலை மிதிக்க 

"ஆஆஆ இருக்கேன் சார் என்று வலியோடு கூடிய குரலில் பதில் வர...

"ஒரு பத்து நிமிசம் லைன்ல வெயிட் பண்ணு நான் பாத் பண்ணிட்டு ம்ஹூம் குளிச்சிட்டு வர்றேன் .... 

"ம்ம் அவன் அவசரமாக டவலை தூக்கி கொண்டு குளியலறை ஓடினான் ...

வேரலோ போனை வைத்து கொண்டு பேய் முழி முழித்தாள் ...

"இங்க பாரு அவர் பணம் காய்ச்சும் மரம் , அவருக்கு நீ கல்யாணமானவ , உனக்கு ஒரு பிள்ளை இருக்கு நீ கெழவின்னு எல்லாம் தெரியாது .... அவரை பொறுத்த வரை நீ ஆம்பள கைபடாத புது ரோஜா, தாய் மருத்துவ செலவுக்காக இந்த தொழிலுக்கு வந்திருக்கேன்னு புழுவி இருக்கேன் .... உண்மையை சொல்றேன்னு அவர்கிட்ட ஏதாவது வாய தொறந்தேன்னு வையி, உன்னை எதுவும் செய்ய மாட்டேன்.. நீ பெத்து போட்டு இருக்கியே அந்த குட்டி சாத்தான்.. அத இல்லாம ஆக்கிடுவேன்..

ம்ஹூம் 

"அது , என் புத்தி உனக்கு தெரியும்ல என்ற கேசவன் பேச்சில் நடுநடுங்கி போனவள்

"இதெல்லாம் வேண்டாமே 

"உன்கிட்ட எது சரி எது தப்புன்னு நான் கேட்கல, அவன் கூட அவனுக்கு புடிச்ச மாதிரி பேசுற .. வாரம் வாரம் ஐம்பதாயிரம் ரூபாய், என் அக்கவுண்ட்ல வந்து விழுந்தாதான் உங்க ரெண்டு பேருக்கும் இனிமேல் நாளைல இருந்து ஒருவேளை சாப்பாடாவது போடுவேன்... நீ அவன் கூட பேசாம முரண்டு பிடிச்சாலோ, இல்ல உண்மைய சொல்லி தப்பிக்க பாத்தாலோ, எங்கேயாவது பிள்ளையை தூக்கிட்டு ஓடிப் போகலாம்னு நினைச்சாலோ.. அப்புறம் இந்த கேசவனோட அகோர தாண்டவத்தை நீ பார்க்க வேண்டியது இருக்கும் ... பணத்துக்காக பொண்டாட்டிய கூட்டிக் கொடுக்கவே துணிச்ச நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்... 

அவள் போனை வைத்துக் கொண்டே ஏங்கி ஏங்கி அழ

"மூச், வாய மூடு அழுது ஒப்பாரி வைக்காத நல்லா மினுக்கி தேன் ஒழுக அவர் கூட பேசு, நீ கேட்டா கோடி ரூபா கூட கொடுக்கிற மாதிரி அவர நம்ப வை தேவைப்பட்டா என்ன வேணும்னாலும் செய் புரியுதா புரியுதான்னு கேட்டேன்" என்று அவன் அதட்டிய அதட்டலில் வேரல் தானாக தலையாட்டினாள்...

இந்த அவல நிலை எதிரிக்கு கூட வரக்கூடாது கடவுளே என்று தான் நினைத்தாள்... கால் வயிறு சாப்பாடு ஆனாலும் மானத்தோடு சாப்பிட வேண்டும் என்று நினைத்தது தவறா.. அதிலும் , மண்ணள்ளிப் போட கணவன் என்று சாபமாக வந்தவன் எதையோ செய்கிறானே.. பதை பதைக்க போனை கிடுகிடுத்த கையோடு வைத்துக் கொண்டு இருக்க.. அங்கே ஹலோ என்ற தீத்தன் குரல் வேகமாக வந்தது

பேசு நான் வெளியே போயி இருக்கேன்" என்று கஞ்சாவை கசக்கி வாயில் போட்டுக் கொண்டே கேசவன் வெளியே போக ..

ஹலோ

இங்கதான் இருக்கேன் சார் ,"

உன் பேரு வயசு சொன்ன , என்ன பண்ற ?

சும்மாதான் வீட்டுல இருக்கேன்" ... 

"உன் அம்மா நல்லா இருக்காங்களா? 

"ஹாங்

"உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த புரோக்கர் நாய் சொல்லுச்சு, உண்மையா பொய்யா என்று அவன் புருவத்தை தடவிக் கொண்டே போய் படுக்கையில் படுத்தான்..

"ஹான் நல்லா இருக்காங்க சார்....

"அப்புறம் 22 வயசுன்னு சொன்னான்.. உண்மைதானா இல்ல கல்யாணம் ஆகி பிள்ளை இருக்கிற கிழவியா? ஏன்னா இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாதே... காச புடுங்கிட்டு கிழவியை என் பக்கத்துல தள்ளிவிட்டுறக்கூடாதுல என்றதும் பதறிப் போனவள்

"இல்ல சார் இல்ல சார் 22 வயசுதான் மகளை தட்டி கொடுத்து கொண்டே பாயில் உட்கார்ந்தாள்... எல்லாம் மகளுக்காக என மனதை தேற்றி கொள்ளுவதை தவிர வேறு வழி இல்லை...

குரலை பார்த்தா அப்படித்தான் இருக்கு ஆள பாத்தா தானே தெரியும் ..

"ஆளும் அப்படித்தான் இருப்பேன் சார்...  

"அப்படியா? என்றவன் மெல்ல அவளிடம் பேச பழகினான் 

யாரிடமும் சுதந்திரமாக பேசாத தீத்தன், ஏதோ ஒரு முகம் தெரியாத பெண்ணிடம் பேசி தன் இறுக்கம் தளர்த்தினான் ...

அவளோ அய்யோ தப்பான வழியில் போக வைக்கிறானே எப்படி தப்பிக்க என்று தெரியாது இறுகி போய் தீத்தன் பேச்சுக்கு ம்ம் போட்டு கொண்டு கண்ணை உருட்டி கொண்டு கிடந்தாள்..

"ஓகே குட் நைட் தூக்கம் வருது" என்று கொட்டாவியோடு தீததன் குரல் வர 

"யப்பா , சரி சார் நான் வைக்கிறேன் என்று உடனே வச்சிட்டா ....

போனை தூக்கி படுக்கையில் போட்டவன் குப்புற விழ .. அவன் காது முழுக்க நிறைந்து இருந்தது வேரல் குரல் மட்டுமே.. தாயின் தாலாட்டுப் பாடல் குழந்தைக்கு தூக்கம் கொடுப்பது போல அவள் குரல் அவன் கண்ணுக்கு தூக்கத்தை கொடுக்க நிம்மதியாக தூங்கிட 

மனம் முழுக்க என் வாழ்க்கை என்ன ஆக போகுதோ என்று பிள்ளையை இறுக்கி பிடித்து கொண்டு தூங்காது கிடந்தாள் வேரல் ...