வேரலை மேய்ந்த வேழம்21

Veral21

வேரலை மேய்ந்த வேழம்21

21 வேரலை மேய்ந்த வேழம் !!

இதோ தீத்தன் அவளுக்கு முறைப்படி தாலி கட்டி மனைவியாக்கி தன் வீட்டுக்கு அழைத்து வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது ,  

அடுத்த நாள் குட்டி ஆபரேசன் நிலாவுக்கு நடந்தது ... 

நீ இங்க உட்கார் நான் டாக்டர் ரூமுக்கு அவளை கூட்டிட்டு போயிட்டு வர்றேன் என்று தீத்தன் போக இவள் பயந்து கையை பிசைந்தபடி காத்திருக்க 

"ஆபரேசன் முடிஞ்சு என்று தீத்தன் வெளியே வர

"ஹான் ....அதுக்குள்ளவா ?

ம்ம் ,நீ பயப்படுவல்ல அதான் சொல்லல நானும் கூடத்தான் இருந்தேன் 

"ஓஓஓ பாப்பா நல்லா இருக்காளா 

"ம்ம் உன்ன விட என் பொண்ணு ப்ரேவ் சமத்தா இருந்தா இப்ப மயக்கத்துல இருக்கா. நாலு நாள்ல காயம் ஆறிடும் அப்பறம் நடக்க சப்போர்ட் தருவாங்க 

ஓஓஓ 

உட்கார் .. காப்பி வாங்கிட்டு வர்றேன் ..

ம்ம் அவளை எங்கேயும் ஓடவில்லை 

சார் நீங்க ஏன் சார் அங்கேயும் இங்கேயும் ஓட்டிக்கிட்டு இருக்கீங்க நீங்க கையை அசைச்சா பத்து பேர் செய்வாங்களே என்று ஒருவர் கேட்க 

புருசங்கிற அந்தஸ்தும் அப்பாங்கிற அந்தஸ்தும் வேலை இல்லை அது ஆத்மார்த்தமான உறவு , அதுல நான் பங்கா இருக்க விரும்பல உயிரா இருக்க விரும்புறேன் ,சோ என் மகளுக்கு கடமையா செய்ய விரும்பல ... எல்லாத்தையும் நானே செய்யணும்னு நினைக்கிறேன் ... என்றவன் உயரிய எண்ணம் குனிந்து இருந்த அவளை அண்ணாந்து அவனை பிரமிக்க பார்க்க வைத்தது ... கொஞ்சம் கொஞ்சமாக அவள் உறவு ஊனத்தை நிமிர செய்து கொண்டிருந்தான் .. 

அவனே தன் மகளை தன்னோடு அறையில் வைத்து கொண்டான் .. 

மாத்திரை மருந்து நேரத்துக்கு பாத்து கொடுக்கணும் அம்மு... சோ என்,ரூம்ல நிலா இருக்கட்டும் நீயும் வேணும்னா இங்க வர்றியா 

ம்ஹூம் வேகமாக மறுத்து மண்டையை ஆட்ட 

போ போ கிடைக்கும் போது உனக்கு இருக்கு பக்கத்து அறையில் இருந்தாலும் வாசலில் நின்று மகளை பார்த்து கொண்டே தான் நிற்பாள்.. 

இரவு தூங்காது மகளுக்கு மருந்து கொடுக்க, அவள் காலை தடவி கொடுக்க என்று தீத்தன் நிலாவை கவனிக்க ..ஒரு நேரம் அவன் தூங்குவது போலவே இல்லை .... அவளால் கூட இந்த அளவு பார்த்து கொள்ள முடியுமா சந்தேகம்தான் .... 

இனி பிரச்சனை இல்லை தண்ணீ பட்டாலும் ஒன்னும் ஆகாது காயம் நல்லா ஆறி இருக்கு 

அப்பா அப்போ நீச்சல் பண்ணலாமா அவன் கழுத்தில் தொங்கி கொண்ட மகளை உப்பு முட்டை தூக்கி கொண்டு போன தீத்தனை தன்னை அறியாது பாத்தபடி நின்றாள் வேரல் ...  

இரண்டு மாதமும் அவளை அவள் போக்கில் விட்டு விட்டான்... தொல்லை செய்யவே இல்லை அவ்வளவு ஏன் அவள் அறைக்குள் கூட போய் பார்க்கவில்லை..

மகளும் அவனும் அடிக்காத லூட்டி இல்லை.. உயிர் கொடுத்தால் மட்டும் தகப்பன் இல்லை உறவை கொடுத்தால் மட்டும் அவனுக்கு பெயர் அப்பா இல்லை.. பிள்ளைக்கு உறுதுணையாக இருப்பவன் தான் தகப்பன் உண்மையான நேசத்தை கொடுப்பவனுக்கு பெயர் தான் அப்பா என்றால் நிலாவை பொறுத்தவரை இவனை தன் தகப்பனாக ஏற்றுக் கொள்வதில் எள்ளளவும் தயக்கமில்லை.. அவனுக்கு அப்பா அந்தஸ்து கொடுக்க அவளுக்கும் இப்போது எல்லாம் சங்கடம் இல்லை 

அப்பா என்று அவனை அழைக்காதே என இவளால் சொல்ல முடியவில்லை என்பதைவிட , அப்பா என சொல்லிவிட்டு போகட்டுமே அதில் என்ன தவறு அதற்கான அத்தனை தகுதியும் அவனிடம் உண்டு என்று மெளனமாக அவர்கள் ஒட்டுதலை பார்க்க ஆரம்பித்தாள் ... 

ப்பா சூப்பரா இருக்கு, இன்னும் வேகமா என்ற மகள் குரலில் படுக்கையில் உட்கார்ந்து பூவை கட்டிக் கொண்டிருந்த வேரல் , பூவை வைத்துவிட்டு ஜன்னல் அருகே போய் நிற்க ..

அந்த மாட மாளிகையில் கீழே இருந்த நீச்சல் குளத்தில் தீத்தன் வெற்றுடலாய் நீந்திக் கொண்டிருக்க , அவன் கை வளைவில் நிலாவும் நீந்திக் கொண்டு கிடந்தாள் மகளை பத்திரமாக அவன் கைவளைவில் வைத்திருந்தான்.. அவனோடு நிலா இருக்கும் பொழுது இவளுக்கு மகள் பற்றிய பயமே வருவதில்லை ,

"ப்ச், காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்க ... அப்படி என்னதான் அவர் கொடுக்கிறாரோ, அப்பா அப்பான்னு மொத்தமா அவர் பக்கம் சாய்ஞ்சுட்டா தன்னை நிலா தேடுவது குறைந்துவிட்டது என்பதை விட பாசத்தை தகப்பனுக்கும் தாய்க்கும் பங்கு போட்டு கொடுத்து விட்டால் என்பதுதான் உண்மை. அதை அவளும் ஏற்று கொண்டாள் ..

"அம்மா நீ மதியம் அள்ளி தந்தல்ல ராத்திரி அப்பா அள்ளி தரட்டும் அப்பா இன்னைக்கு உங்க கூட படுத்துக்குறேன் நாளைக்கு அம்மாகூட என்று நிலாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு இணக்கம் அதிகம் ஆகிவிட்டது... இவள் எதற்கும் தடை விதிக்கவில்லை , இவள் தடை போட்டால் அவன் கேட்கவும் மாட்டான் அது வேறு விஷயம் ... என் புள்ளையை நான் என் கூட படுக்க வைப்பேன் , நீ யாருடி கேட்க என்று கேட்டு வைப்பான்.. தெரியுமே விதண்டாவாதம் பிடித்தவன்..  

"இங்கதான நீச்சல் அடிச்சுட்டு இருந்தாங்க அதுக்குள்ள எங்க போனாங்க, மீதி பூவை தொடுத்து விட்டு வந்து வேரல் மீண்டும் எட்டிப் பார்க்க இருவரையும் காணவில்லை.. 

"எங்கேயும் போகலடி உன் பின்னாடி தான் நிற்கிறேன் "என்ற தீத்தன் குரல் தன் பின்னால் கேட்டதும் அவள் பதறி கையில் தொடுத்து வைத்திருந்த பூச்சரத்தை கீழே விட்டுவிட போக...

தீத்தனோ, சட்டென்று அதை தன் கை கொண்டு பிடித்து உள்ளங்கையில் பூ சரத்தை வாங்கிக் கொண்டவன்..

 என்ன தேடின போல இருக்கு...

"இல்ல நிலாவை காணல அதான் தேடிட்டு இருந்தேன 

"அப்போ நீ என்ன தேடலை... அவள் இல்லை என்று மறுத்து தலையாட்ட..

"சரி ஓகே, போய் காபி போட்டு கொண்டு வா இரண்டு மாதமும் அவளிடம் எந்த வேலையும் சொல்லாதவன்...இன்று , திடீரென அவள் அறைக்குள் வந்து காபி போட்டு கொண்டு வா என்று நிற்க... அவள் யோசனையாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்க ...

 என்ன ?

இல்லை கோமதி அக்காக்கிட்ட சொல்லவா .. 

"நான் கோமதி அக்காவை கல்யாணம் பண்ணலையே.... உன்னத்தான கல்யாணம் பண்ணி இருக்கேன், அப்போ உன்கிட்ட தான கேடக முடியும்

"அது வந்து 

"உன்ன பொம்மை பொண்டாட்டியா கல்யாணம் கட்டி கூட்டிட்டு வரல.. எனக்கும், என் மகளுக்கும் என்ன தேவை ஏது தேவைன்னு அப்பப்ப பார்த்து செய்..சற்று அதிகாரமாகவே அவன் குரல் வந்தது இன்னும் அவள் தெளியா பார்வை பார்த்து வைக்க 

ரெண்டு மாசம் ஆயிடுச்சுல்ல, வீடெல்லாம் பழகிடுச்சா... அவள் ஆமென தலையாட்ட 

வீடு புடுச்சு இருக்கா ?

ம்ம் 

சமையல் ஒத்துக்குதா ?

ம்ம் 

தோட்டம் உனக்கு ஓகேவா?

ம்ம் 

அவ்வளவுதான் , இதுதான் உன் வீடு, மண்டையில ஏத்திக்கிட்டியா ?அவள் அமைதியாக தலை குனிந்து நிற்க

"நீ பதில் சொல்லனாலும் இதுதான் உன் வீடு.. பிக்ஸ் ஆகிக்க, வேற வழி இல்ல...உன்ன விடுறதாவும் இல்ல, ஒழுங்கா கீழே போய் எனக்கு காபி போட்டு கொண்டு வா .... காலையில லைட்டா ஏதாவது டிபன் பண்ணு , மதியம் சாப்பாடு வீட்ல உள்ளவங்க செஞ்சு வச்சிடுவாங்க நம்ம வேலைக்கு போயிட்டு மதியம் வீட்ல வந்து சாப்பிட்டு , குட்டி ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் ஆபீஸ் போலாம் ....

ஹான் , நான் எதுக்கு வேலைக்கு... நான் வரல 

"ஓ கல்யாணம் முடிஞ்சா வேலைக்கு வரக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் போட்டு இருக்கீங்களா மேடம் ... நீ வீட்ல இருந்தா எனக்கு தேவையானத யாருடி அங்க செஞ்சு தருவா.. ம்ம் திரும்பு "என்று அவள் அனுமதியே கேட்காமல் அவளை திருப்பி விட்டவன்.... கையில் வைத்திருந்த மலரை அவள் முடியில் சொருகி விட்டவன்... 

குங்குமம் வவைக்கலயா? 

ம்ஹூம் 

ஏன் ..

இல்லை அது தீத்தன் கை நீட்டி குங்குமத்தை எடுத்தவன் அவள் நெற்றி வகுட்டில் வைத்து விட்டவன் 

டெய்லி ஒரு தடவையாவது நானே வச்சி விட ட்ரை பண்றேன்... தாலியை காட்டு அங்கேயும் வச்சி விடுறேன்.. ரெண்டு மாதமாக உள்ளே பதுங்கி கிடந்த வைர தாலியை அவள் கை வைத்து எடுக்கவே நடுங்க, அவனே உள்ளே கைவிட்டு இழுத்து வெளியே தொங்க போட்டவன் .. 

அதை என் மறைச்சு வச்சிருக்க, நான் என்ன உன் கள்ள புருஷனா? 

ம்ஹூம் 

பின்ன என்ன தூக்கி வெளிய போடு அப்ப தான் நான் உன் புருஷன்னு நினைப்பு வரும் ... அதிலும் குங்குமம் வைத்துவிட

இன்னும் அவள் தலை நிமிர்ந்து தீத்தனை பார்த்தாள் இல்லை... 

இப்படி உன்ன தலை நிறைய பூவோட, நான் கட்டின தாலியோட பார்க்கும் போது, ஒரு மாதிரி கிக்கா தான்டி இருக்கு... நல்லா இருக்கு என்று அதை ரசிக்க வேறு செய்தான் .. இவளுக்கு கண்ணோடு கண் பார்த்து அவனோடு பேசவே சங்கடமாக இருந்தது.. தலைகீழாக வாழ்க்கை மாறி போய் கிடந்தது 

அன்று மண் வீடு 

இன்று மாளிகை வீடு 

அன்று பசி

இன்று தங்க பஸ்பம்

அன்று கண்ணீர் 

இன்று காதல் 

அன்று ஒரு சொட்டு பாசத்துக்கு ஏங்கினாள் 

இன்று கொட்டி கொடுக்கும் காதலோடு இவன் நிற்கிறான் ..

ஆனால் ஒன்று மாறவில்லை 

அன்றும் போராடினாள் 

இன்றும் இவன் காதலோடு போராடுகிறாள் 

ஆனால் அன்று வலித்தது 

இன்று புரியாது இதயம் தவித்தது ....

மித மிஞ்சி கிடைக்கும் அவன் அழகிய அன்பில் அரண்டு போய் நின்றாள்... 

சரி வேலைக்கு கிளம்பு , பிறகு வந்து உன் புருசனை ஆற அமர சைட் அடி 

"நான் எங்கேயும் வரல நான் இங்கேயே இருக்கேன்... வேணும்னா நானே சமைச்சு

"நீ ஒன்னும் புடுங்க வேண்டாம், வேலைக்கு கிளம்புன்னு சொன்னேன்.... இங்க எல்லாத்தையும் பாத்துக்க ஆள் இருக்கு , என்ன பாத்துக்கிறதுக்கு தான் ஆள் இல்ல 

"அப்போ அதுக்கு தான் கல்யாணம் கட்டினீங்களா?

"என்ன பாத்துக்குறதுக்கு கல்யாணம் தான் கட்டணும்னா, வேற யார வேணும்னாலும் கல்யாணம் கட்டி இருப்பேன்.. என்ன காதலோட பாத்துக்க நான் காதலோட ஒருத்தியை ரசிக்கிறதுக்குததான் உன்ன கல்யாணம் கட்டிகிட்டேன் ... சோ இதுல காதலும் இருக்கு தேவையும் இருக்கு 50 50 .... 

ஹான்

"ம்ம் வேற எவளையோ, கல்யாணம் கட்டி கஷ்டப்பட்டு நம்மள பத்தி புரிய வைக்கிறதுக்கு .. என்ன பத்தி தெரிஞ்ச நீ மனைவியா வந்தா பிரச்சனை ஓவர்ல" என்று தீத்தன் கண்ணைச் சிமிட்டினான்... 

நான்

"காப்பி இன்னும் வரல மேடம் 

என்னால 

காப்பி காப்பி 

நான் சொல்றதை 

காப்பி காப்பி 

ப்ச் என்று எரிச்சலாக முகத்தை சுளித்து கொண்டு போன அவளை விசிலடித்து அழைத்த தீத்தன் 

டிபனையும் ரெடி பண்ணி வை, குளிச்சிட்டு வர்றேன் மிஸஸ் தீத்தன்... 

அடியேய் முதுகு தேய்ச்சி விட வர்றியா ... பதில் இல்லாமல் ஏதோ முணுமுணுக்க வேரல் கீழே போய்விட...

என்ன சொல்லி இருப்பா? என்று நாடியை தட்டி யோசிக்க 

பிரம்பை வச்சி நாலு வெளு வேணும்னா வெளுக்கிறேன்னு அம்மா சொல்லிட்டு போகுது என்று நிலா கட்டை பிடித்து தாங்கி தாங்கி நடந்து வர 

ஹாஹா அப்படியா சொன்னா ?

ஆமா 

ரொம்ப ஓவராத்தான போறோமோ, போவோம் இந்த தீத்தனை எவன் கேள்வி கேட்க முடியும், என் பொண்டாட்டி கேட்கலாம் பட் இப்போதைக்கு அவ வாயை திறக்க மாட்டாளே அப்படியே விட்டிருவேனா என்ன ? தொல்லை பண்ணியே செட்டில் ஆகிடுவேன் உல்லாசமாக குளித்து இறங்கி வர .... கிச்சன் உள்ளே அவள் தலை தெரிந்தது 

யப்பா, செட் ஆகிட்டா திருப்தி புன்னகை.. மனைவியாக அவளை பழக்க ஆரம்பித்தான்....

இட்லி வைக்கவா சார்? உள்ளிருந்து வேரல் வேலையாள் கையில் உணவை கொடுத்து அனுப்பி விட .. 

மேடம் பாத்துப்பாங்க எல்லாரும் கிளம்புங்க என்று இவன் அத்தனை பேரையும் நகட்டி விட்டான்... வேற வழி மகளுக்கும் அவனுக்கும் சாப்பாடு வைப்பது அவள் முறையாக போனது ... நீயும் உட்கார்ந்து சாப்பிடு என்று அருகே இழுத்து அமர வைத்தவன் அவளுக்கும் உணவை வைக்க அவள் எடுத்து உண்ண ஆரம்பிக்க 

அம்மு இட்லி வை 

எச்சில் கை என்று அவள் தடுமாற அவள் பக்கம் சாய்ந்து அமர்த்த தீத்தன் 

எச்சிலுக்கு சங்கட பட்டா லிப் கிஸ் எப்படிடி பண்ண ? உன் ஜீரா வடியுற உதட்டை எப்படி கடிச்சு தின்ன லவ்வுல கவுச்சை தான் பெஸ்ட் என்றவன் கையிலிருந்து தன் கையை வெடுக்கென்று இழுத்து கொள்ள....  

பசிக்குதுடி வை... அவனை முறைக்கவும் முடியாது நேசிக்கவும் முடியாது திணறியவள் தட்டில் இருந்து ஒரு இட்லியை எடுத்து தன் தட்டில் போட்டு அவன் தின்ன ஆரம்பித்து விட்டான் ... 

இனி இதுதான் நிதர்சனம் புரிஞ்சிக்க என்று எழும்பி போக பெருமூச்சு விட்டவள் இருவர் கையும் பட்ட அதே உணவை தின்று விட்டு அவனோடு நடந்தாள் ... 

குட் மார்னிங் சார், குட் மார்னிங் சார் என்று ஆபிஸ் உள்ளே மனைவியோடு நுழைந்த தீத்தனுக்கு பணியாளர்கள் வணக்கம் சொல்ல , இவள் அவன் பின்னே செம்மறி ஆடு போல தலையை குனிந்து கொண்டே நடக்க 

கீழே எதாவது புதையல் கிடக்கா என்னத்த தேடிட்டே வர்ற...

 "எதுக்கு எடுத்தாலும் கிண்டல் பண்றார் என்று முனங்கி கொண்டு 

"என்ன பண்ணணும் சொல்லுங்க பண்றேன் ...

அது தலையை நிமிர்ந்து நட ... சும்மா தரைக்குள்ள கொண்டு முகத்தை வைக்காத 

"ம்ம் தலையை நிமிர்ந்தவளுக்கு அத்தனை பேரும் அவளை ஒருமாதிரி பார்க்கவும் மீண்டும் தலையை கவிழ்ந்து கொண்டாள் 

ஹாலில் போய் நின்ற தீத்தன் அவளை தன் அருகே விட்டு தோளோடு அணைத்து பிடித்து 

"இது என் வொய்ப் வேரல் தீத்தன் 

"தெரியும் சார் குரல் வர 

"எனக்கு கொடுக்கிற அத்தனை மரியாதையும் என்னோட பாதி என் மனைவிக்கும் கொடுத்து ஆகணும் 

"ஓகே சார் 

இப்ப சொல்லுங்க குட் மார்னிங் மேடம்னு என்றதும் அத்தனை பேரும் அவளுக்கு காலை வணக்கம் வைக்க சங்கடமாக நெளிந்து கொண்டே தலையாட்டினாள்... 

எங்கே ஒரு காதல் சுயமரியாதையை மீட்டு தருகிறதோ, அதுவே மெய்யான காதல் ....