வேரலை மேய்ந்த வேழம்22

Velam22

வேரலை மேய்ந்த வேழம்22

22 வேரலை மேய்ந்த வேழம் !!

என்ன சொல்லணும்? சோபாவில் உட்கார்ந்து நகத்தை கடித்து கொண்டிருந்த மனைவியை ஆபிஸ்  பைலை புரட்டி கொண்டே தீத்தன் தலையை தூக்கி  பார்த்தான்... 

"இவங்களை மிரட்டி மரியாதை வாங்கி தந்துடுவீங்க ஆனா எல்லா இடத்திலும் எனக்கான  மரியாதையை வாங்க முடியாது ,எங்க போனாலும்  என் பழைய வாழ்க்கை பின்னாடி தொடரும் .."

"பின்னாடி பேசுற நாய்க்கு எல்லாம் நான் மரியாதை குடுக்கிறது இல்லை நீயும் கொடுக்காத "

"ஆனா உண்மை அதுதான்...  நீங்க என்ன பண்ணினாலும் எதுவும் மாறாது  நான் எச்சி 

ஏய்இஇஇஇஇஇ" என்றவன் கையில் இருந்த பைல் பறந்து வந்து அவள் முகத்தில் விழுந்தது ..அவள் அரண்டு போய்  தொண்டை ஏற இறங்க தீத்தனை பார்க்க 

"அவ்வளவுதான் சொல்லிட்டேன் . .. நானும் கோவப்பட கூடாது ,  வருத்த படுத்த கூடாதுன்னு பொறுத்து பொறுத்து போனா ஓவராதான்டி போயிட்டு இருக்க , என்னடி மாறாது , என்ன மாறாது?? எல்லாத்தையும்  மாத்தி காட்டுறேன்... என் மேல காதல் வர வைக்கிறேன் , காதலால ஒரு குழந்தையை உருவாக்கி காட்டுறேன்,  இன்னைக்கு வேண்டாம்னு சொல்ற நீ என்ன தாண்டி எதையும் யோசிக்க விடாம பண்றேன் ... நான் நெனைச்சதை நடத்தி காட்டுறேன் ... நான்தான் உன் புருசன்னு ஆயிரம் தடவை நீ சொல்லி உன் மரமண்டை உள்ள ஏத்து ... ச்சை என்ன ?? 

கோவபட்டாலும் எதை மாத்தினாலும் நான் உங்களுக்கு கருப்பு புள்ளி தான் .... 

ஓஓஓ அப்போ நான் உன் கழுத்தில கட்டின தாலியை அத்து வீசிட்டு போடி ... அவள் தொண்டை ஏற இறங்க அவனை பார்க்க 

"நான் வேண்டாம்ல,  இந்த லைப் வேண்டாம்ல... என் காதல் வேண்டாம்ல,  என் அணைப்பு வேண்டாம்ல,  அப்போ நான் கட்டுன தாலியை தூக்கி ஏறிஞ்சுட்டு வெளிய போடி 

"ஹான் 

"என்ன ஹான் ... பத்து எண்ணுவேன் முடிவு எடு ... 

"நானா உலகமா?  

உன் வாழ்க்கையா ஊர் பேசுற பேச்சா 

உன் மக சந்தோசமா,  இல்லை இதுக உனக்கு கொடுக்கிற பட்டமா ?

மகிழ்ச்சியா துக்கமா 

சாய்ஸ் இஸ் யுவர்ஸ் , முடிவு எடு ..

போனாலும் ஓகே இருந்தாலும் ஓகே ..பத்து எண்ணும் போது தாலியை அத்து என் முகத்தில வீசினா .... என் உயிர் உள்ள வரை உன்ன திரும்பி பார்க்க மாட்டேன் ..பத்து எண்ணி முடிக்கும் போது அந்த  தாலி உன் கழுத்துல தொங்கினா என் உயிர் உள்ளவரை உன்னையும் நம்ம மகளையும் விட மாட்டேன் ..என்ற தீத்தன் அவளை நிதானமாக பார்த்து கொண்டே 

ஒன்னு 

ரெண்டு  ,______ எட்டு , ஒன்பது ...

ப....த்து 

வேரலோ எச்சில் விழுங்க தாலியை பிடித்து கொண்டே அவனை பார்க்க...

ம்ம் கழட்டு 

தாலியை கழட்ட கையை கொண்டு போனவள் கண்ணை மூடினாள்  கழட்ட மனம் வரவில்லையே!!

பழைய வாழ்க்கை மிரட்டியது 

தூக்கம் இல்லாத துக்கம் சுமந்த நெஞ்சு இப்போது எல்லாம் இவன் அருகே இளைப்பாறுகிறது..

சிரிப்பை காணாத மகளும் அவளும் சிரிக்க கற்று கொள்கின்றனர்

செத்தால் கூட அனாதை போல செத்து கிடந்து இருப்பாள் 

ஆனால் அவளை தூக்கி அன்பால் குளிப்பாட்டி தன் மடியில் வைத்து  கொஞ்சுகிறான்....  அவள் கன்னத்தில் அவன் ஸ்பரிசம் தொட்டது அவள் பதறி கண்ணை திறக்க போக

அம்மு  அவன் உதடு அவள் கன்னத்தை வருடியது

ம்ம் 

ஒரு நிமிடம் இறுக கண்ணை மூடிக்க  

ஹான் 

முடிவு எடுக்க முடில தான?

ம்ம் ஆமோதிப்பாக தலையாட்டினாள் 

நத்திங்,  அப்படியே ரிலாக்ஸ் பண்ணு,  முடிவை இந்த அமைதியும்,  இந்த மூடிய கண்களும் உனக்கு சொல்லும் உன் எதிர்காலம் எப்படி வேணும்னு யோசி ... அதுல நான் வரலைன்னா , சத்தியமா ஐயம் நாட் டிஸ்ட்ர்பிங் யூ....  ஒரு ப்ரெண்டா கடைசி வரை இருந்துக்கிறேன்...  பட் , அதுல என் பிம்பம் வந்துச்சுன்னா ... நீ  நான் நம்ம பாப்பான்னு ஒரு குடும்ப அமைப்பு உனக்கு வந்தா,   என்ன செலக்ட் பண்ணு .. கடந்த காலமா? எதிர்காலமா, எது வேணும்னு  யோசி நான் உன் முன்னாடி தான் இருக்கேன் அவள் கன்னத்தை வருடி கொடுத்த தீத்தன் சோபாவில் போய் அமர்ந்தவன் 

இப்ப இறந்த காலம் யோசி

ம்ம் வேரல் மூடிய கண் முன்னே அவள் இருண்ட காலம் வர பழைய காலங்கள் பயமுறுத்தியது பதறினாள் நடுங்கினாள்,  உடல் தடதடவென ஆடியது ... 

ம்ஹூம் இனி அவள் அப்படி ஒரு நாளை பார்க்கவே விரும்ப வில்லை மறுப்பதாக தலையாட்டினாள்..

நவ் எதிர்காலம் யோசி, 

ம்ம் 

என்ன தெரியுதுடி ஆர்வமாக அவள் முகம் பார்த்தான் 

என்ன அதிசயம் ?!!!

தீத்தன் வந்து நின்றானே!! 

அவளை  ஒரு கையில் அணைத்து தூக்கியவன் மகளையும் இன்னொரு கையில் தூக்கி வைத்திருந்தான் ,அவள் மேலிட்ட வயிறு கண்டு பதறி அவள் கண்ணை திறந்து விட்டவள்...  முகத்தில் பதட்டத்தில் முத்து முத்து வியர்வை துளிகள் அவள் அருகே நெருங்கி அமர்ந்த தீத்தன் அவள் முகத்தில் வடிந்த வியர்வையை கர்சீப் எடுத்து துடைத்து கொண்டே , 

என்ன மிஸல் தீத்தன் ரொமான்ஸ் காட்சியில நான் வந்தேனா இல்லை நேரா பெட்ரூம் காட்சியா ஹான் என்று கேலியாக அவளை பார்த்து சிரிக்க 

அவள் கண்ணை உருட்டினாள் ... 

அப்போ உண்மையா வந்தேனாடி. 

ம்ஹூம் என்று பொய் பேசியது பெண் கிளி...

அப்போ நான் வரல 

வ...ரல பொய் சொல்ல தெரியாத கிள்ளை தடுமாறி மாட்டி கொள்ள 

சரி சரி  பையன் நடந்தானோ, 

இல்லையே வயித்துக்குள்ள தான் இருந்தது  என்றவள் நாக்கை கடிக்க 

ஹாஹா என்று சிரித்து விட்ட தீத்தன் விட்டு வெடுக்கென்று எழும்பி கொண்டவள் 

யாரும் வரல எதுவும் வரல , சும்மா எதாவது சொல்லி குழப்பிக்கிட்டு நான் காத்து வாங்க போறேன்... தப்பித்து ஓட பார்க்க  மெலிதான புன்னகையை கொடுத்த தீத்தன் 

உன்கூட மல்லு கட்டி தொண்டை  வரண்டு போச்சுடி,  போறது போற , ஒரு காப்பி சுக்கு  தட்டி எடுத்துட்டு வா என்றதும் வேரல் அடித்து புரண்டு ஓடி போக 

ஓய் எனக்காகவா அந்த தாலியை போட்டிருக்க 

ம்வூம் என் மகளுக்காக...

தட் மீன் புரியல மகளுக்கான்னா...

உங்ககூட இருந்தா அவ சந்தோசமா இருப்பா அதனால ? 

எப்படியோ அப்போ என் கூட வாழ்க்கை முழுக்க ஓட்ட போற .... 

காப்பி என்று அவன் மேஜையில் வைத்து வி்ட்டு வேரல் மறுபடியும் போய் சோபாவில் அமர்ந்து, வி்ட்ட நகத்தை கடிக்க ஆரம்பிக்க,  அவன் கேலி புன்னகை அவளை துரத்த  முகத்தை உர் என்று  திருப்பி உட்கார்ந்து கொண்டாள்...

பெரிய வெற்றி அல்லவா இது ..அவனோடு எதிர்காலம் குறித்த யோசனை வருகிறது என்றாலே அவன் காதல் சரியாக இலக்கு பார்த்து பாய்ந்து விட்டது என்றுதானே அர்த்தம் ...

இரவு மகளோடு வேரல் தன் அறையில் படுத்து தூங்கி கொண்டிருக்க எங்கே தூங்க? பல யோசனையில் முழித்து தான் கிடந்தாள் ஆனால் கண்கள் மூடி கிடந்தது 

அப்பா கால்ல கொசு கடிக்குது சொரிஞ்சு விடுங்க தூக்கத்திலேயே நிலா அவள் கையை எடுத்து கொசு கடிக்கும் இடத்தை காட்டினாள்... தூக்கத்தில் கூட அப்பா புராணம் பாடும் மகளை கண்டு அவளுக்கு சிரிப்பு கூட வந்து விட்டது.. ஆக மகளை செல்லம் கொடுத்து கெடுத்து இருக்கிறார் புரிந்தது ...

எனக்கு அதோட டிடெயில் வேணும் என்ற தீத்தன் குரல் அவன் அறை பால்கனி வழியாக இவள் காதுக்கு வர எட்டி மணியை பார்த்தாள்,இரவு ஒன்று 

இன்னும்  தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கார்? என்று யோசனையாக மகள் காலை தூக்கி படுக்கையில் போட்டவள்,   பிள்ளைக்கு தலையணை வைத்து விட்டு தன் அறை பால்கனி பக்கம் போக

எனக்கு தெரியாது நிலா மட்டும் தான் என்னோட குழந்தை ,  சோ எனக்கு  குழந்தை பிறக்காம இருக்க ஆப்பரேஷன் பண்ணிக்கலாம்னு யோசிக்கிறேன் எத்தனை நாள் ரெஸ்ட் எடுக்கணும்.. இந்த விஷயம் வேரலுக்கு எப்பவும் தெரிய கூடாது , சோ யூஏ வரும் போது அங்க வச்சே ஆபரேசன் பண்ணிட்டு சத்தம் இல்லாம இங்க வந்திடுறேன் அங்கு  என்ன சொல்ல பட்டதோ ?

ஹாஹா என்ன அப்பான்னு கூப்பிட நிலா இருக்கா போதும் டாக்டர்.... என் மனைவிக்கு ஒரு பிஞ்ச் கூட  எதிர்காலம் குறிச்சு பயம் வர கூடாது,  இன்னொரு குழந்தை வந்தா  எங்க நிலாவை ரெண்டாவதா ஒதுக்கிடுவேனோன்னு அவ நினைச்சா கூட அது என்னோட அன்புல உண்டான பெரிய பிழை ஆகிடும் ... சோ இப்பவும் , எப்பவும் எனக்கு நிலா மட்டும் தான் மக அமைதியாக  கேட்டு கொண்டிருந்த வேரலுக்கு தன்னை மீறி கண்ணீர் அரும்பியது..

ஆணோ பெண்ணோ, புத்திர பாக்கியம் வேண்டாம் என்று  ஒருத்தருக்காக அதை இழக்கிறார்கள் என்றால் அந்த அன்பு பொய்யாக இருக்குமா?? பால்கனியில் நின்று பேசினால் கண்ணாடி அமைப்பு வழியே இங்கே கேட்காது என்று தான் அவளுக்கு  மறைந்து நின்று பேசினான்...  ஆனால் அந்த கண்ணாடி தடுப்பை நிலா நகட்டி விட்டிருக்க அவன் நேசம் எதுவரை செல்லும் என சாட்சி கூறியது தென்றல்.... 

ஓஓஓ நீங்க வர ஒரு மாசம் ஆகுமா ??ஓகே வாங்க நான் பண்ணிக்கிறேன்  என்று போனை வைத்து விட்டு வீடியோவை ஆன் பண்ண  .... 

நிலா  அடிவாங்குவ ஆஆஆ காட்டு உன் அப்பா நல்லா கெடுத்து வச்சிருக்கார், நல்லா சேட்டை பண்ற என்ற அவள் குரல் கேட்டு,  வேரல் சத்தம் இல்லாது இருட்டில் நின்று அவனை எட்டி பார்க்க வீடியோவில் மாலை மகளுக்கு சோறு ஊட்டி கொண்டே பேசி கொண்டு இருந்த அவளை எடுத்து வைத்த வீடியோவை போட்டு ரசித்து கொண்டு நின்றான் தீத்தன் 

அடியேய் உன்ன அவ்வளவு பிடிக்கும்டி , எப்போடி  லவ் பண்ற போற நீயும் உன் மகளும் வாழ்ற பூமியில எனக்கு கொஞ்சோண்டு இடம் தாடி , அது போதும்  என்று ஜூம் பண்ணி வைத்திருந்த வேரல் உதட்டில் இச் வைக்க உடல் சிலிர்த்து தடுமாறி போனவள் கை பட்டு அழகு பூந்தொட்டி விழுந்து உருள...

யார் யார் என்றவன் குரல் கேட்டு வேரல் குடுகுடுவென ஓடி வந்து படுக்கையில் படுத்து கொண்டாலும் அவள் உடலில் உண்டான சிலிர்ப்பு அடங்கவே இல்லை ....  

க்ரீச் கதவு திறக்கப்பட,  இவளுக்கு இதயம்  எம்பி குதித்தது 

அச்சோ நான் பார்த்தது பார்த்து இருப்பாரோ?  இப்படிதான் தினமும் என் படத்துக்கு முத்தம் கொடுக்கிறாரா.. அடிக்கடி அந்த தேய்க்கிற போன் பெட்டியை உத்து உத்து பார்க்கிறது இதுக்குதானா  எத்தனை முத்தம் கொடுத்தாரோ தெரிலையே ... 

முத்தம் கொடுத்தது தப்பா இல்லை அதுல முத்தம் கொடுத்தது தப்பா 

ரெண்டுமே தப்பு தான் எப்படி இப்படி எல்லாம் பண்ணலாம் என்று நினைத்தவளுக்கு இடையில் குறுகுறுப்பு அவன் விரல்தான் ...

என்ன வேணும் என்று அவள் பதறி எழும்பிட 

ஏய் ஏய் ரிலாக்ஸ்டி எதுக்கு பேய் மாதிரி அலறுற...

என்ன பண்றீங்க?  

ப்ச் குழந்தை இல்லாம தூக்கம் வரல அதான் தூக்கிட்டு போக வந்தேன் ... தூக்கத்தில டிஸ்டர்ப் பண்ணிட்டேனா அம்மு ?

ஆமா அதான் அம்புட்டு இடம் இருக்குல்ல இடுப்புக்குள்ள கையை விட்டு தூக்கினா எழும்ப மாட்டாங்களா? 

ஆண் தொட்டால்  உடல் நடுங்கும்,  சிலிர்க்கும் என்பதை அவன் தொட்ட பிறகு தான உணர தொடங்குறாள்..  இடை வழியே அவன் கையை விடவும் அவன்  கையில் உள்ள ரோமங்கள் அவள் வெற்று இடையை உரசி போய் ஏற்கனவே உணர்வு குவியலில் கிடந்த அவள் உள்ளம் இன்னும்  பீறிட்டு கத்தியது அவன் கண் பாத்து பேச புது தயக்கம் வர தலையை குனிந்து கொண்டே பேசினாள்...

ப்ச் நேத்து அந்த பக்கம் தான படுத்து இருந்த அந்த நினைப்புல இங்கே கைவிட்டேன் .. அது உன் இடுப்புன்னு தெரியாது ,ச்சை அது உன் இடுப்புன்னு தெரிஞ்சிருந்தா கூட கொஞ்ச நேரம் கையை வச்சிருப்பேனே என்றவன் குட்டி விளக்கை போட  அவள் முகத்தில்  உண்டான புது சிவப்பு அவளை பேரழகியாக காட்டியது ...சேலை நலுங்கி தலை முடி கலைந்து ஒப்பனை இல்லாத அவள் அழகே அவன் உன்மத்தம் கொண்டு போதை ஏற போதுமானதாக இருக்கிறது ... அவன்  அவளை பார்த்து கொண்டே அருகே வர 

என்ன ?

ஸ்ஊஊஆஆ பாப்பா முழிச்சிட போறாடி

எ...து...க்கு அவன் அவள் படுக்கை மீது கை வைத்து வேரல் அருகே வந்தவன் மூச்சு முட்டும் தூரம் வந்து  அவள் நெற்றி பொட்டு இடம் மாறி உதட்டு பக்கம் ஒட்டி இருக்க ...அதை விரல் கொண்டு எடுக்க கண்ணை இறுக மூடி கொண்டாள்..  ஆனால் குழப்பம் இல்லை நடுக்கம் இல்லை ,தயக்கம் இல்லை அவன் அருகாமையை அனுபவிக்க தொடங்கிய அழகிய முக பாவம் மட்டுமே ... 

உடல் குளிர்ந்தது 

முகம் சிவந்தது 

விரல் போர்வையை கசக்கியது 

கால்கள் பின்னியது 

உதடு வியர்க்க 

அவனோ நிறுத்தி நிதானமாக அவள் உதட்டை தடவியும் தடவாதும் அந்த  பொட்டை நகட்டி நெற்றியில் வைக்க...  குட்டி நிமிடம் தான் ஆனால் மரண ஜீவ காதல் போராட்டம் இருவருக்கும்...

இவளுக்கே இப்படி என்றால் அவளை, நிஜத்தில் காதலித்து கனவில்  மனைவியாக தாலி கட்டிய நாளில் இருந்து வாழ ஆரம்பித்து இருக்கும் அவனுக்கு எவ்வளவு அவஸ்த்தை இருக்கும் ....என்று அவன் தாலி வேரல் கழுத்தில் ஏறியதோ பயம் இல்லாது அவளோடு வாழ ஆரம்பித்து விட்டானே இப்படி நடுங்கி போய் அவன் தொடுகையில் சுருண்ட அவள் இதழ் மென்மைக்கே மெழுகு ஒன்று உருக ஊற்றெடுக்க... 

ம்ஹூம் தொட்டேன் அரண்டு சுவர் ஏறி குதிச்சு ஓடி போனாலும் போயிடுவா , ஆக்க பொறுத்தவனுக்கு ஆள பொறுக்கல கதையா ஆகிட கூடாது என்று நினைத்த தீத்தன் அவளை விட்டு நகர்ந்தவன்..

ஓய் என்று அழைக்க திடுக்கிட்டு கண்ணை திறந்து  பார்த்தாள் அவன் மகளை தூக்கி தோளில் போட்டு கொண்டு நின்றான்... 

ஊப் இன்னும் அவன் அருகாமை தந்த கிளர்ச்சி குறைந்த பாடில்லை..  அவை அருவருப்பு தரவில்லை அச்சம் தரவில்லை , ரணம் தரவில்லை,  வலி தரவில்லை மாறாக ஏதோ ஒன்றை தந்தது ... 

என் மகளை அங்க படுக்க போட்டுக்கிறேன்

ம்ம் 

உன் லிப் செம அழகுடி இச் என்று அவன் காற்றில் முத்தம் ஒன்றை பறக்க விட்டு விட்டு போக இவளுக்கு குப்பென்று சிவக்கும் முகத்தை எங்கு கொண்டு மறைக்க என்று தெரியாது வெட்கத்தில் முகத்தை மூடினாள் 

ஆனால் இரவு முழுவதும் அவன் தந்த அருகாமையில் அவளும் 

அவள் தரும் அவஸ்தை தாளாது அவனும் தூங்காது கிடந்தனர் ... 

அவனோட எதிர்காலம் பச்சை பசேல் என்று இருக்கும் வேரலுக்கு நன்றாக தெரிகிறது 

ஆனால் பயம் !!

உலகத்துக்கும் பயம் ,இவனோடு வாழவும் பயம் அவ்வளவு தான் அவள் தயக்கம் ... மற்றபடி இந்த திருமணம்  அவளுக்கு எந்த சங்கடத்தையும் கொடுக்கவில்லை....