வேரல்24

வேரல் 24

வேரல்24

24 வேரலை மேய்ந்த வேழம் !!

தன் தோளில் சாய்ந்து கிடந்த மனைவியை குனிந்து பார்த்தான் நிறைய அவள் செயலில் மாற்றம் வந்து விட்டது... 

இப்போதெல்லாம் செயலில் நிறைய சர்ப்ரைஸ் பண்ணுகிறாள் .. அவள் மாற்றம் அவனுக்கு நன்றாக தெரிந்தாலும் கண்டுகொள்ளாத பாவனை செய்வான்... மறுபடியும் நத்தை ஓட்டுக்குள் ஓடிர கூடாதே என்று அவளை இலகுவாக விட்டுவிடுவான் இப்போது சில நாளாக அவள் ஒட்டுதல் கூடுகிறது .. அதில் உச்சம் நேற்று நடந்தது ... 

ஏங்க கடைக்கு ஏதும் போறிங்களா என்று மாலை ஆபிசில் நின்றவன் காதில் கிசுகிசுக்க 

இல்ல என்ன ஆச்சு ? எதுவும் வேணுமா?  

"மாச விலக்கு ஆகி போச்சு, அது வேணும் வாங்கிட்டு வாங்க என்று கேட்டிகிறாள் என்றால் உரிமை பட்ட ஆணிடம் மட்டுமே கேட்க முடியும் .. இப்போது உரிமையாக தோள் சாய்ந்து அவள் மனம் தெளிவாக எடுத்துரைக்க ஆரம்பித்து விட்டவள் 

நிலாப்பா 

ம்ம் 

நல்ல பாட்டா போட்டு விடுங்க ... அவனுக்கே கட்டளை வர அதையும் அவன் சிரம் தாழ்ந்து செய்தான்...

ஒரு பாடலை முனுமுனுத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்தாள் வேரல் .. அவள் செய்கைகளை ஓரக் கண்ணால் ஒன்று விடாமல் சொட்டு சொட்டாக பருகிக் கொண்டு இருந்தான் ...

இத்தனை நாள் இருந்த குழப்பம் அவள் முகத்தில் இல்லை .... 

அது ஏன் அங்க இருக்கு நிலாப்பா...

இது என்ன? 

இவங்க ஏன் அங்க போறாங்க நிலாப்பா 

அந்த கார் எங்க போகுது 

இது என்ன கடை நிலாப்பா என்று வழி நெடுக அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் அவனுக்கு காதல் கணங்கள் தான் ... சலிக்காது பேசினாள் பதில் சொன்னான்... இப்படியே இருவரும் மகள் படிக்கும் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள் ....நிலாவை , ப்ளே ஸகூலில் சேர்தது விட்டிருக்கிறான்.. மறற பிள்ளையோடு பேசி பழக வேண்டுமே ... 

நிலாவோ கடைசி கல் பெஞ்சில் அமர்ந்து இருந்தாள் ஊன்று கோல் வைத்து நடக்கும் அளவு தீத்தன் அவளை தேத்தி விட்டான் ஒரு வருடம் கழித்து அறுவைசிகிச்சை செய்யலாம் அது வரை இப்படி நடக்கட்டும் என்று கூறி இருக்கிறார்கள்.. 

இத்தனை நாள் இடையில் சுமந்த பிள்ளையை ஊன்றுகோல் உதவியோடு முதல் முதல் நடக்கும் போது ஓஓஓ என்று வேரல் அழுதே விட்டாள்...

ப்ச ஏன்டி ..

இது எல்லாம் நடக்கும்னு நான் கனவுல கூட நெனைச்சு பாக்கல என் புள்ளை நடக்குது ம்ஹூம் நம்ம புள்ள நடக்குது" என்று உணர்ச்சி வசத்தில் துடித்த அவளை மெல்ல அணைத்து கொண்டவன் அணைப்பில் அன்றே அடங்கி விட்டாள் 

பாரு துள்ளி குதிச்சு நம்ம மக ஓடுவா"

நிஜமா ஓடுவாளா ??

ம்ம் ஓடுவா பாரு "

நீங்க அதையும் செய்வீங்க எனக்கு நம்பிக்கை இருக்கு என்றவளுக்கு தன் விருப்பத்தை நிறைவேற்றும் அவனுக்கு என்ன செய்ய என்று அன்று புரியவில்லை ஆனால் , இன்று புரிந்திருக்கும்... 

அவன் காதலுக்கு பதில் காதல் கொடுத்தால் போதும் அவ்வளவே அவன் பேராசை!!

என் மக என்ன பண்றா? என்று தீத்தன் நிலா அருகே போய் அமர அவள் முகம் பொலிவு இல்லாது இருந்தது 

என மக ஏன் டல்லா இருக்கா , அப்பா மேல கோவமா?

ம்ஹூம் 

"பின்ன என்ன ஆச்சு தகப்பன் பார்த்ததும் ஓ என்று அழுது விட 

"என் பிள்ளையை யார் என்ன சொன்னா? ..

"என்ன டான்ஸ்ல சேக்கல அப்பா "என்று உதட்டை பிதுக்கிட டீச்சரை கண்ணால் முறைத்தான்

பள்ளியில் கலைநிகழ்ச்சி அவள் நிலை கருதி அவளை மட்டும் டான்சிஸ் சேர்க்காது விட்டிருக்க... 

என் பொண்ணு பாடுற பாட்டுக்கு தான் அவங்க ஆடணும் இல்லை டொனேசன் கேட்டு இனிமே டிகே ஆபிசுக்கு வர கூடாதுன்னு உங்க கரஸ்பாண்டர் கிட்ட சொல்லிடுங்க... சிறுது நேரத்தில் நிலா சிரித்த முகமாக தகப்பன் நோக்கி நடந்து வந்தவள் 

"அப்பா நான் பாட போறேன் என்றவள் தகப்பன் கன்னத்தில் இச் வைக்க வேரலும் ஆசையாக அவனை பார்த்து கொண்டு நின்றதை அவன்தான் கவனிக்க வில்லை .... 

"என் பொண்ணு ஹேப்பின்னா அப்பாவும் ஹேப்பி 

"நான் டபுள் ஹேப்பி ... நான்தான் முன் சீட் அப்பா 

"நான் தான் முன்ன உட்கார்வேன் என்று கார் கதவை பிடித்து கொண்டு சண்டை போடும் மகளையும் மனைவியையும் தூரத்தில் போன் பேசி கொண்டே பார்த்து ரசித்த தீத்தன் 

என்னடி பிள்ளைக்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்க என்று அவள் அருகே வந்து போனை நகட்டி வைத்தபடி தீத்தன் கிசுகிசுக்க ... தன் அருகே நின்ற அவனை அண்ணாந்து பார்த்த வேரல் காலை ஊன்றி 

எனக்கு தெரியாது நான்தான் உங்ககூட இருப்பேன் முன் சீட் எனக்கா உங்க மகளுக்கா? முகத்தை சுருக்கி அவளும் கிசுகிசுக்க..இந்த சண்டை கூட கிளுகிளுக்க வைத்தது அவனை ... 

சொல்லுங்க நிலாப்பா, முன் சீட் எனக்கு தான?  

அப்பா இது எப்பவும் எனக்கு தான்னு சொல்லி இருக்கிங்க தான ?

போடி இந்த வாட்டி எனக்கு 

இல்லை அது எப்பவும் எனக்கு 

எனக்கு வேணும் என்று அவள் உதட்டை பிதுக்க

எனக்கும் முன் சீட்தான் வேணும் அப்பா என்று மகளும் உதட்டை பிதுக்க ..

உனக்கு முன் சீட் தன்றேன்டி நீ எனக்கு என்ன தருவ என்று கிசுகிசுப்பாக லஞ்சம் கேட்ட கணவனை ஓரப்பார்வை பார்த்த வேரல் 

என்ன வேணும்?

உதடு ரொம்ப காஞ்சு இருக்கு ..

அதுக்கு ?

பொண்டாட்டி மேடம் மனசு வச்சு "

மனசு வச்சு

"மனம் இறங்கி அதை சப்பி எடுத்தா உன் புருசன் ஹேப்பி முன் சீட் உனக்கு .... அவன் கோரிக்கை கேட்டு அவளுக்கு முகம் சிவந்து போக ...

"முன் சீட்டை கொடுங்க அப்பறம் பார்க்கலாம் எப்போதும் போல அவன் கிண்டல் பேச அவளிடம் இப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்காது தீத்தன் தான் அதிர்ந்து போனான்

"ஏய் ஏய் என்ன சொன்ன ? 

என்ன சொன்னேன் சீட்டை எனக்கு கொடுத்தா முத்தா தர்றேன்னு சொன்னேன் அவளும் கிசுகிசுக்க 

கண்டிப்பா தருவியாடி "

"ம்ம் , த...ர்....றே...ன் என்றவள் அவன் முகத்தை பார்க்காது முகத்தை திருப்பி கொண்டாலும் அவள் காது மடல் கூட சிவந்து நின்று அவள் வெட்கத்தை காட்டி கொடுக்க...

யா ஹூ பாஸ் ஆகிடுவ போலையே மிஸ்டர் தீத்தன் என்று வாய்விட்டே முனங்க அவளுக்கு வெட்கம் கொண்ட முகத்தை எதை கொண்டு மறைக்க என்று தெரியவில்லை... 

தீத்தன் விசில் அடித்து கொண்டே முன் சீட்டை அவளுக்கு கொடுக்க 

அப்போ நான் என்று மகள் அழ தயார் ஆக ... சிறுது நேரத்தில் மகள் அவன் மடியில் உக்கார்ந்து இருக்க வேரல் முன் சீட்டில் உர்ரென்று உட்கார்ந்து அவனையும் மகளையும் முறைக்க ...

"உன் அம்மா எதுக்கு முறைக்கிறா நிலா

"வயித்தெரிச்சல் தான் அப்பா" என்று நிலா சிரிக்க 

"ஹாஹா இருக்கும் இருக்கும் என்னடி உன் பிரச்சனை ... நீதான முன் சீட் கேட்ட நீ கேட்டது தந்தாச்சு நான் கேட்டது ஒழுங்கா தந்துடு 

ம்க்கும் இது கள்ள ஆட்டம் , ஒன்னும் கிடையாது என்று இறங்கி போக போனவளை இழுத்து காரில் சாய்த்த தீத்தன் 

"நிலா நீ போ, அப்பா அம்மாக்கிட்ட கடனை பைசல் பண்ணிட்டு வர்றேன் 

"ஓகே அப்பா ...தர மாட்டேன்னு சொன்னாலும் விடாதீங்க என்று அவள் உள்ளே போக 

"பார்த்தியா சிபாரிசை கொடுடி .... அவளே வாயை திறந்த பிறகு இனி அவன் ஏன் ஒதுங்கி நிற்க போகிறான் 

"அஸ்கு புஸ்கு "என்று அவனை நெஞ்சில் குத்தி ஓங்கி தள்ளி விட்டு ஓடிய மனைவியை ரசித்தபடி அவன் வாசலில் நின்று கொள்ள..

"சீசீ பார்க்கிறது பாரு பச்சை புள்ள போல என்று சிவந்து போன வேரல் உள்ளிருந்து தலையை விட்டு அவனை தேடிட 

என்ன அவர் பின்னாடி வந்து வம்பு பண்ணல என்று ஏக்கமாக அவனை தேடினாள் ...  

என்னடி என்னையா தேடுற ??அவள் பின்னே அவன் குரல் கேட்டு அவள் பதறி நகர போக.... சட்டென இடையோடு அவன் சூடான விரல் அவள் சேலை யதாண்டி இடையில் எதேச்சையாக பதிய அவனுக்கு எடுக்க தோணாது அவளை பார்த்தபடி நிற்க ..அவளும் எடு என்று சொல்லாது அவனையே பார்க்க... அவள் கைகள் அவன் காலரை பிடித்து இழுக்க 

புரியல என்ன சொல்ல வர்றடி ?? அவன் கிசுகிசுப்பாக அவளை இன்னும் நெருங்கி நிற்க...கண்ணை மூடி கொண்டவள் உதடும் அவன் உதடும் இஞ்ச் இடைவெளியில் ஒருவர் மூச்சு மோதும் தொலைவில் இதோ இணைந்து கவ்வி கொள்ளும் என்ற நிலையில்... அவன் பார்வை அவளை அகலாது பார்த்தது, அவளோ நடுங்கி போய் கிடுகிடுவென ஆடிய உடலோடு வியர்த்து வடிய ... அவள் உதட்டில் விரல் வைத்து தடவியவன் செயலில் அவள் கண்ணை திறந்து ஆசுவாசமாக பார்த்தாள் 

அவனை ஏற்று கொள்ள துணிந்து விட்டாள் ஆனால் அவனோடு அந்தரங்கம் அதுதான் சற்று சற்றே பயம் கொடுத்தது .... 

ஒன்னும் அவசரம் இல்ல அம்மு

ஹான் அவள் மலங்க முழிக்க 

ஒரு நாள் எந்த தயக்கமும் இல்லாம நீ உன்ன தருவ அதுதான் என் காதலுக்கு வெற்றி, அன்னைக்கு உன் புருசனா உன் டிகேவா நான் உன்ன மொத்தமா எடுத்துப்பேன்டி.... அன்னைக்கு இந்த கிடுகிடுப்பு, பயம் எதுவும் இல்லாம என் கண்ணை பார்ப்ப.. நான் தொடுற ஒவ்வொரு தொடுகையும் பயத்தோட இல்லை, காதலோடு நீ அக்சப்ட் பண்ணணும் அதுவரை காத்திருப்பேன்.. அய்யோ என்னை கொடுக்கணுமேன்னு நிர்பந்தம் ஆகாத.. அது அது தானா நடக்கும் புரியுதா... அவள் உதட்டை வருடிய அவன் விரல் அதை பிதுக்கி தன் உதட்டோடு வைத்து தேய்க்க 

ம்ம் ...

ரொம்ப அழகா இருந்து சோதிக்கிறீங்க பொண்டாட்டி மேடம் , கொஞ்சம் அழகை குறைச்சிக்கோங்க

ஹான் எப்படி..

இப்படி என்று மாராப்பு விலகிய சேலையை எடுத்து விட 

அய்ய என்று ஓடியவள் வெட்கம் இப்போதைக்கு அவனுக்கு போதும் .... 

அவள் வேண்டாம் வேண்டாம் என்று ஓட ஓட காதலை அவன் துரத்தி துரத்தி கொடுத்தே அந்த காதல் எப்படி தான் இருக்கும் என்று பார்க்க ஆசை வர வைத்து விட்டானே ....  

காதல் தந்தவன் , அவனோடு வாழ ஆசை தந்தான்... இதோ ஊர் உலகம் என்ன சொன்னாலும் பரவாயில்லை... எனக்கு பிடிச்சு இருக்கு , இது என் வாழ்க்கை , எங்கள் விருப்பம் யாரும் இதற்குத் தீர்ப்பு வழங்க தேவையில்லை ... அவனை முழுதாக தன் கணவனாக ஏற்று கொள்ள அவள் தயார் ஆகி விட்டாள் ... 

உலகத்தை எதிர்த்து போராட அவன் இருந்தால் போதும் அதையும் ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று துணிந்து விட்டாள்...