வேரலை மேய்ந்த வேழம் 23
Suja

23 வேரலை மேய்ந்த வேழம் !!
எங்க கிளம்பிட்டு இருக்க ??
வேலையில் கவனமாக இருந்தவன் லேப்டாப் பார்த்து கொண்டே கதவை திறக்க போன மனைவிக்கு குரல்ல கொடுக்க
"24 மணிநேரமும் என்ன அவர் தலை மேலேயே வச்சிக்கிட்டு இருக்கணும் போல" என்று அவள் முனங்கினாள்...
"வச்சிக்கிட்டாலும் தப்பு இல்லேன்னு நினைக்கிறேன், எங்க போறன்னு கேட்டேன், பதில் இன்னும வரல அவன் கைகள் என்னவோ வேலையாகத்தான் இருந்தது கண்ணும் அவளை பார்க்க வில்லை ...
"நான் உதட்டை அசைச்சா கூட தெரியும் போல"
"என்னடி பதில இல்லை,தீத்தன் தலையை மட்டும் தூக்கி அவளை பார்க்க
என் மகளை "அவன் பார்வையில் கண்டனம் உடனே காரசாரமாக வர
"ம்க்கும் உங்க மகளை கூப்பிட போறேன் அவன் ஆயிரம் முறை அவளை பார்த்தாள் , இவள் நூறு முறையாவது அவனுக்கு தெரியாது அவனை பார்க்க பழகி விட்டாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம் ..
மணி நாலு ஆகிடுச்சா ? வேகமாக மணியை பார்த்தான் ...
அது ஆகி பத்து நிமிசம் ஆகுது ,அதான் நிலாவை கூப்பிட கிளம்புறேன்... "
"ஷட் மணியை பார்க்கல, என்று தீத்தன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு கார் சாவியை எடுக்க
"நீங்க எங்க வர்றீங்க ?
"என்ன கேள்வி இது ,என் மகளை பிக்கப் பண்ண வர்றேன் ..
"ப்ச் நீங்க எதுக்குன்னு கேட்டேன்.. ரெண்டு நடை நடந்தா நானே போய் அழைச்சிட்டு வந்துருவேன்.. அதுக்காக நீங்க வேலையெல்லாம் விட்டுட்டு போய் கூட்டிட்டு வரணுமா?
"நான் உழைக்கிறது, சம்பாதிக்கிறது கோடி கோடியா சேர்த்து வைக்கிறது , எல்லாம் உங்களுக்காகதான்... இந்த பணத்தை சேக்குறதுக்காக உங்களை எல்லாம் தனியா விட்டுட்டு சேர்த்து என்ன பிரயோஜனம் ... உன்னையும் என் மகளையும் பார்த்துக்கிறது கடமையில்லை அதுவும் காதல் தான் ... வேரல் கண்கள் அங்கும் இங்கும் உருளாது தீத்தன் கண்ணை பார்த்தாள்....
கம்பீரம் ,பணம், பதவி படிப்பு அத்தனையும் உள்ளவன் ஆனால், ஒரு நாள் கூட அவளிடம் அதை பற்றி அலட்டி கொண்டதே இல்லை.. அவன் குணங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவளை இழுத்து இழுத்து இதோ எப்போது அவன் கரை சேர்ந்தால் தெரியாது .. மகளை தன் பக்கம் இழுத்தான் இப்போது அவளும் தானாக அவன் புறம் போய் விட்டாள்...
அப்பா எங்கடி ??ஆள காணல என மகளை விட அவள்தான் தேடும் நிலைக்கு சிறுது நாளாக மாறி விட்டாள்... இது அபத்தமோ என்று அவளுக்கு சங்கடம் வர , கண்ணாடியில் தெரிந்த அவன் கட்டிய தாலி அவனை தேட இனி உனக்கு உரிமை உண்டு என்று கூறியது ... முதல் வாழ்க்கைக்கு துரோகம் பண்ணி இவனை தேர்ந்தெடுக்க வில்லையே, உயிர் போற நிலையில் மறு ஜனனம் எடுத்து இருக்கிறாள் ... இதில் அவள் பிழை எதுவும் இல்லையே .. பலவாறு யோசித்து விட்டாள்.. ஆனால் அத்தனையும் தீத்தன் பாதம் வந்தே சரணடைந்தது...
தனி அறையாக இருந்தாலும் அவன் எழும்பியதும் ஓடி வருவது அவள் முகம் தேடி தான் ..
குட்மார்னிங் அம்மு காப்பி என அவனே கொண்டு வந்து நீட்டுவது எல்லாம் எவ்வகை நேசமோ தெரியவில்லை
அய்யோ பல்லு கூட விளக்கல என்று இவள் நெளிவாள்
ஆடு மாடு எல்லாம் பல்லா விளக்குது , பெட் காப்பி இப்படி குடிச்சாதான்டி டேஸ்ட் அவள் மிடறு விழுங்கி குடிப்பதை ரசிப்பான் ரசனைக்காரன்...
ஹார்ம் பனியன் திட்டு திட்டாக உடல் வனப்பு, டவுசரில் நின்று உடற்பயிற்சி செய்யும் அவன் அழகை இவளே வாய் பிளந்து பார்த்து இருக்கிறாள்.... தன்னையும் குனிந்து பார்த்து கொள்வாள் என்ன தான் ஆடைகள் தேர்ந்தெடுத்து அவன் கொடுத்து இருந்தாலும் அவள் என்னவோ சுமாராக இருப்பது போலத்தான் தெரியும் போதாக்குறைக்கு அவள் வாழ்க்கை ஓட்டையில் கிழிந்து போய் கையில் ஐந்து வயது பிள்ளையோடு நிற்பவள்... அவனுக்கு இணை என்று எப்படி தன்னை தேர்ந்தெடுத்தான்
புரியாத புதிர் தான் கேட்டும் விட்டாள் ...
அவள் பால்கனி முன் நின்று தம்புல்ஸ் பண்ணி கொண்டிருந்தவன் நெற்றியில் வடிந்த வியர்வையை துடைக்க துணி தேட , இவள் வெற்று கப்பை வைத்து வி்ட்டு டவலை நீட்ட...
"துடைச்சு விடுறது மேடம்
ம்ம் துடைச்சு விடுவாங்க, அய்யோ பாவம்னு கொடுத்தேன் வேண்டாம்னா போங்க ...
"சரி சரி கொடு வியர்வையை அவன் துடைத்தபடி நிற்க
எதுக்கு என்ன தேர்தெடுத்தீங்க ??
"ஹான் புரியல
"நான்தான் வேணும்னு ஏன் இவ்வளவு மெனக்கெட்டு எடுத்தீங்க, இந்த கல்யாணத்தால ஊர்ல உங்களுக்கு கெட்ட பேர் தெரியுமா??
"ஏன் தீத்தன் பேர் அவங்களுக்கு பிடிக்கலையாமா?
"ப்ச் விளையாடாதீங்க , பதில் சொல்லுங்க உங்களை மோசமானவர் போல பேசுறாங்க தெரியுமா ...
"என் வாழ்க்கையை அவங்களா வாழ போறாங்க நான்தான வாழ போறேன் ..
"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை மன்னா என்றவள் முந்தானை சேலையை தீததன் பிடித்து இழுக்க ..
ஆவ் ஊஊஊஊஊஊ என்ன பண்றீங்க ? நெளிந்தாலும் விலகாதே நின்றாள் ...
பதில் சொல்லணும்னா உன்ன கட்டி புடிச்சு என் கைக்குள்ள வச்சிக்கிட்டுதான் சொல்வேன் பரவாயில்லையா
எனக்கு பதிலே வேண்டாம் விடுங்க அவன் அகண்ட கைக்குள் வேரல் நெளிந்தபடி இப்போது விலக எத்தனிக்க.. எத்தன் விடுவானா? அவள் முதுகோடு முகம் புதைத்து தன் வியர்வை வாசத்தை அவள் உடலெங்கும் பூச செய்தபடி முன்னால் இருந்த திண்டில் அவளை முன் பக்கமாக சாய்த்து தீத்தன் அவளை பின் இருந்து அணைத்து கொண்டே ...
உலகம் ஆயிரம் சொன்னாலும், அவ்வளவு ஏன் என்னோட அத்தனை சொத்தும் அழிஞ்சாலும் நீயா உன் ஆஸ்தி அந்தஸ்த்தான்னு கடவுள் கேட்டாலும் நான் என்ன சொல்வேன் தெரியுமா? ..
என்ன சொல்லுவீங்க? அவள் திரும்பி அண்ணாந்து தீத்தனை ஆர்வமாக பார்க்க
"நீயும் நம்ம பாப்பாவும் போதும்னு சொல்வேன்
":அதான் ஏன் ?
சில கேள்விக்கு பதில் இல்லை அம்மு .. சிலர் அழகை பார்த்து லவ் பண்ணுவாங்க , சிலர் மனசு பார்த்து லவ் பண்ணுவாங்க,
நீங்க என் குரலை கேட்டு விழுந்துட்டீங்களா?
ம்ஹும் ,நான் உன் குரலை கேட்டு லவ்வுல விழல
பின்ன?
அதுல இருந்த சொல்லல முடியாத வலி, அது என்ன தூங்க விட்டது இல்லை... அதுல இருந்த நடுக்கம் உன்ன பார்க்க தூண்டிச்சு, நீ யார் உனக்கு என்ன பிரச்சனை அதை தீர்த்து வச்சே தீரணும்னு எனக்குள்ள ஆதங்கத்தை கொண்டு வந்தது ....
இதை இரக்கம் கருணைன்னு கூட சொல்லலாமே...
ம்ஹூம் ஆயிரம் பேர் என் முன்னாடி கஷ்டப்பட்டுட்டு இருக்கான் எல்லோருக்கும் உதவி பண்றேனா என்ன ...
ஆமால்ல என்று அவள் வாயை பிளக்க ..
உன்கிட்ட தீத்தன் மயங்க காரணமே இந்த மெல்லினம் தான்டி ... பாவமா பார்க்கிற பார் ஒரு பார்வை சான்சே இல்லை .... என்றவன் இறுக்கும் கூட
பதில் போதும் நான் போறேன்..
ஹாஹா ஒன்னும் பண்ண மாட்டேன்டி , கொஞ்ச நேரம் இப்படியே இரு ...
வேண்டாம் குளிக்க போறேன் ...
சரி போ என்று அவன் கையை எடுத்து விட இத்தனை நேரம் உண்டான பாதுகாப்பு, தீடீரென அறுந்து விழுந்தது போல உணர்வு ... மெல்ல மெல்ல அவனை கண் தேடியது , இதயம் தேடியது.. தேடல் தானே காதலில் முதல் உந்து சக்தி ... இடைவெளி குறைய நெருக்கம் தானாக கூட ஆரம்பித்தது
"மல்லிகை பூ வேணும்னு பாப்பா கிட்ட கேட்டியாம் இதுவாடி மல்லிகை" என்று முல்லை பூவை நீட்டிய கணவனை முறைக்க கற்று கொண்டாள்
"இது முல்லை மல்லிகை பூ கூட தெரில உன் அப்பாவுக்கு பேச்சு மட்டும் மதுரை வரை போகும்" என்று முகத்தை சுளிக்க கற்று கொண்டாள்...
"காலையில வெறும் நெத்தியோட போகாதீங்க நில்லுங்க குங்குமம் எடுத்துட்டு வர்றேன்" என்று அவனை தொட கற்று கொண்டாள்
"கையில எடுத்தா சட்டையில படும்டி வேண்டாம் ,, கை கழுவணும் ப்ளா ப்ளா...
"ப்ச் குனிங்க என்று மகள் கையால் அவன் நெற்றிப் ரெண்டு நாள் வைத்து விட்டாள் ...
"போம்மா நீயே வை" என்று மகள் சடைய, இப்போது எல்லாம் அவளே வைத்து விடும் அளவு இணக்கம் ... அதுவும் குங்குமம் வைத்து குனிந்து நிற்கும் அவன் நெற்றி முடியை ஒதுக்கி ஊதி உதிரி குங்குமம் ஊதும் அவள் செயலுக்காகவே நாத்திகன் பக்தன் ஆகி போனான்... கடவுளா அப்படின்னா?? நாம உழைச்சா சோறு இதுல கடவுள் எங்க இருந்து வந்தார்? என பேசும் தீத்தன் வெள்ளிக்கிழமை மனைவியை அழைத்து கொண்டு கோவில் கோவிலாக போகிறான் என்பது அவளுக்கு தெரிந்து மெலிதாக புன்னகை வந்தது
உங்களுக்கு வேலை இருந்தா வர வேண்டாம் நானும் நிலாவும் போறோமே"
"அங்க இருக்கிற கடவுளுக்காக எல்லாம் வரல , உனக்காக வர்றேன் வருவேன் தட்ஸ் இட் ... எந்த அன்பில் ஈகோ இல்லையோ அது என்றாவது ஒரு நாள் ஜெயித்தே தீரும் அவன் ஏற்றத்தாழ்வு இல்லாத நடத்தையில் வேரல் மனம் அவன் பக்கம் குரங்காக தாவியே விட்டதுவோ??
மாற்றம் நல்லதுக்கு எனில்
மாற்றத்தை வரவேற்பதில் தவறு இல்லயே !!
இந்த சட்டை நல்லாவே இல்லை என்று அவன் சட்டையை குறை கண்டுபிடித்து அதையும் சொல்லும் அளவு நெருக்கம் வந்து விட்டது ..
"சட்டை நல்லா இல்ல மாத்துங்க
"ஓஓஓ கபோர்ட்ல நீயே பார்த்து எடுத்துட்டு வா ஒரு கால் இருக்கு என பேசும் அவனை ஓரக்கண்ணால் ரசித்து கொண்டே போய் தன் சேலை கலரில் சட்டை எடுத்து கொண்டு வந்து அவனுக்கு நீட்டும் அளவு தேறி விட்டாள் ..
அன்பு தேடி ஓடி அலைந்த வாழ்க்கையில்
ஒருவன் அன்பை பூரணமாக கொட்டி கொடுக்க
உதாசீனம் செய்ய அவள் என்ன முட்டாளா??
நானே பாப்பாவை கூட்டி வர்றேன் உங்களுக்கு ஏன் சிரமம் அதோட ஏதோ மீட்டிங் இருக்கு சொன்னீங்களே என்று இவள் இழுக்க
எனக்கு வேலை எல்லாம் இரண்டாவதுதான் நீங்க ரெண்டு பேரும் தான் முதல்ல , அப்படி நட்டம் வருதா வந்துட்டு போகட்டும் நோ ப்ராப்ளம் போதுமா போலாமா என்றவன் அவளுக்கு முன்னால் நடக்க
இன்னைக்கு ஒரு நாள் கூட்டிட்டு வர முடியும்.
என்னாலும் கூட்டிட்டு வர முடியுமா? நீங்க வந்து பழகிட்டா உங்க மக தினமும் இதையே எதிர்பார்த்தா என்ன செய்வீங்க... அவனோடு ஒட்டியே நடக்கிறாள் அதை அவன் கவனிக்கிறானா தெரியாது ..
"அவ ஆசை அதுதான்னா காலம் முழுக்க என் புள்ளையை சுமக்க எனக்கு என்ன வலிக்கவா செய்யும் , சுமந்துட்டு போறேன்டி, ஏன் உனக்கு பொறாமை ஏதாவது லைட்டா எட்டி பாக்குதா என்று தலையை திருப்பி பார்க்க ...
"எனக்கு என்ன பொறாமை, தூக்கி சுமக்கணும்னு ஆசை இருந்தா ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா நானும் வருவேன் என்றவளை நின்று அவன் கண்ணைச் சுருக்கி பார்க்க
"எனக்கும் நேரம் போகும்ல்ல என்னையும் கூட்டிட்டு போங்க அப்படியே ஐஸ்கிரீம் ஒன்னு வாங்கி கொடுங்க "என்று ஓடி வந்து அவன் கையை பிடித்து கொண்டு உரிமையாக கேட்ட மனைவியை கண்ணசைக்காமல் பார்ப்பது அவன் முறையானது
உன்னை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டேன் என்பதை அவள் செயல்சொல்லாமல் சொல்ல அவள் கையை இறுக பற்றி கொண்டான்..
"என்ன வாங்க , என்று அவனுக்கு முன்னே அவள் நடக்க இவன்தான் அவள் பின்னால் அமைதியாக நடக்க வேண்டியதாய் போனது ...
"அத்தான் அந்த குளுகுளுப் பெட்டியை கொஞ்சம் கூட்டி வைங்க ..
"அத்தானா? அடுத்த ஆச்சர்யம்
"ஏன் நல்லா இல்லையா நம்ம கம்யூட்டர் பெட்டி தட்டுமே அந்த ரேசன் அக்கா அவன் காது பக்கம் குனிந்து பேசியது அந்நியோனியத்தின் முதல் படி ...
ரேஸ்மாடி உதடும் உதடும் இடிக்கும் தூரத்தில் இருவரும் அவளும் நகர வில்லை அவனும் நகரும் சிந்தையில் இல்லை
ம்ம் அதான் அதான் , அவங்க அவங்க புருசனை அத்தான்னு சொல்வாங்களாம்.. நல்லா இருக்குல்ல அவன் கையை பிடித்து இழுத்து கொண்டே கிசுகிசுக்க ... கீறல் போட்டது மூங்கில் மரம் ஒன்று ... பேச்சு வாக்கில் அவள் உதடு ஈரமாக அவன் கன்னம் தொட்டு போக
ஸ்ப்பா பன்னீர் புஷ்பம் போல அவள் உதடு தந்த ஒத்தடம் வேழத்தில் தும்பிக்கை உயர பார்க்க அடக்க பெரும்பாடு பட்டான் ..
ஓஓஓஓஓ தங்க நிற புடவை சிகப்பு நிற ஜாக்கெட் தாலி மட்டும் தான் ,காதில் வைர தோடு அது வைரம் என்று கூட தெரியாத மனைவி அறியாமை இன்னும் பிடிக்கும்...
"எந்த வளையல் கடையில வாங்குனீங்க கல்லு பளீச்னு இருக்கு, எம்புட்டு பைசா " என்று வைர கம்மல் நீட்டிய தீத்தன் கையில் மறுப்பே இல்லாது வாங்கி மாட்டி கொண்டாள்.. அதன் விலை கோடியை தொடும் விலை உயர்ந்த வைரக்கல் அது என்று தீததன் சொன்னால்
அய்யோ ஆத்தா என மயங்கி விழுந்து கிடப்பாள் எதற்கு வம்பு என்று நினைத்தவன்
பிள்ளையார் கோவில் போற வழியில ஒரு கடையில வாங்கினேன் நூறு ரூபாய் போட்டான்
"ஏ அப்பா ஒத்த கல்லுக்கு நூறு ரூபாயா?? பேரம் பேசி வாங்க தெரியாதா என்று கண்டனம் வர
"சாரிங்க மேடம் இனி பேரம் பேசி வாங்கிறேன்
"காசு போச்சு நாம என்ன சும்மாவா சம்பாரிக்கிறோம் ரா பகலா கண்ணு முழிச்சு உழைக்கிறீங்க கவனமா இருங்க "என்று சலித்து கொண்டு போன அவள் பின்னே அவன் மனமும் அல்லவா பறி போனது ... தன் அருகே நின்ற அவள் அழகை ரசிக்க இனி அவனுக்கு மட்டும் தான் உரிமை நினைவே தித்திக்க வைத்தது ,
அத்தான்
ஹான் தடுமாறி முழித்தான்..
"உங்ககிட்ட தான் கேட்கிறேன் அத்தான்னு கூப்பிடவா, அப்படி கூப்பிடவா வேண்டாமா ?
என்ன தீடீர் முறை எல்லாம்
"இல்லை எங்கேயாவது நீங்க நின்னா ஏங்க ஏங்கன்னு கூப்பிட வேண்டி இருக்கு அதான் " என்று வேரல் இழுக்க ...
"வேற எதாவது ட்ரை பண்ணேன் அவ ,அவ புருசனை கூப்பிடுறா நீ எதாவது யுனிக்கா தனித்துவமா யோசியேன்... உன் புருசனுக்கு நீயே பேர் வச்சாதான நல்லா இருக்கும் "
"ஆமால்ல " என்று நாடி தட்டி யோசிக்க ஆரம்பித்தவள்
இதுவா அதுவா இது அது என்று அவள் மாமா மச்சான் என்னங்க ஏங்க என பல அடைமொழி சொல்ல ..
ப்ச் வேண்டாம் வேண்டாம், வேற வேற என்றவனை சலிப்பாக பார்த்த வேரல்
"என்ன நீங்க எது சொன்னாலும் வேண்டாம்னா எப்படி ஹான் ...
"புதுசா யோசின்னு அர்த்தம் "
"ப்ச் புதுசான்னா, வேணும்னா நிலாப்பான்னு கூப்பிடவா? "
"வாவ் ஊஊஊஊ நல்லா இருக்கே ...
"ம்ம் அப்போ இன்னையில இருந்து நீங்க எனக்கு மட்டும் நிலாப்பா சரியா ?
டபுள் ஓகேடி என்றவனுக்கு உதடு நிறைய புன்னகை... அதை அப்படியே அவள் கன்னத்தில் காட்ட நினைத்து தீத்தன் அவள் கன்னத்தில் இச் வைக்க எப்போதும் நடுங்கும் மனைவி இன்று அவன் தோளில் சாய்ந்து கொள்ள அவன் கொண்ட உவகைக்கு அளவு இல்லை ...