வேரல் 8

Veral8

வேரல் 8

8 வேரலை மேய்ந்த வேழம் !! 

ஒத்தமரம் இல்ல ஆனா காத்து எவ்வளவு குளுகுளுன்னு அடிக்குது, இதுதான் குளுகுளுப் பெட்டியா என்று அறை எங்கும் போடப்பட்டிருந்த ஏசியை ஆ என்று வாயை பிளந்து வேரல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

வயிறு நிறைந்த மகிழ்ச்சியில் நிலா அவள் மடியிலேயே படுத்து தூங்கி விட, சிறிது நேரம் அவளும் அங்கு உள்ள வித்தியாசமான அமைப்புகளை எல்லாம் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவள் ... யாரும் அவளை கவனிக்கவில்லை என்றதும் சாய்வாக அமர்ந்து கொண்டவள் பிள்ளையை ஒரு கையில் அணைத்து பிடித்துக் கொண்டு தலை சாய்க்க... எப்படி தூங்கினால் என்றே தெரியாமல் அவன் கோட்டைக்குள் வந்த நிம்மதியில் தூங்கி விட்டாளோ.... குட்டி குறட்டை போட்டு வேற தூங்க ஆரம்பித்து விட்டாள்

சென்னையில் இன்னொரு கிளை அலுவலகத்தில் மீட்டிங் நடத்திக் கொண்டிருந்த தீத்தன் தன் அலுவலகத்திற்குள் வேரல் வந்துவிட்டதை பிஏ மூலம் அறிந்தவன்... மீட்டிங்கை அப்படியே இடையில் நிறுத்திவிட்டு தன் காரை ஜெட் வேகத்தில் ஓட்டிக்கொண்டு வேரல் இருக்கும் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் ....வேக வேக எட்டுக்கள் போட்டு மிடுக்காக நடந்து கண்ணாடி கதவை திறந்து கொண்டு உள்ளே வர , ஹாலில் அவன் அழகியும் குட்டி தேவதையும் குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருந்தனர்..

வரவேற்பு அறையில் நின்று கொண்டிருந்த பெண் இவனை கண்டதும் பதறி எழும்பி அவனுக்கு வணக்கம் செலுத்த போக , அவள் பதட்டத்தில் முன்னால் இருந்த மலர் ஜாடி ஒன்று கைபட்டு தரையில் விழுந்து சத்தத்தை எழுப்ப பார்க்க..

ஷட் என ஒரே எட்டில் ஓடிப்போய் அந்த மலர் ஜாடியை தரையில் விழுந்து உடைந்து சத்தத்தை எழுப்பாதபடி தீத்தன் அதை தன் பறந்த உள்ளங்கையில் பிடித்துக் கொண்டு... அந்த பெண்ணை தீயாக முறைத்தவன்... அவள் மன்னிப்பிற்காக வாயை திறக்கும் முன், தன் வாயில் விரல் வைத்து ..

மூச்சு வரக்கூடாது எல்லாரும் காலி பண்ணுங்க என்று அங்கே உலாவிக் கொண்டிருந்த அத்தனை பேரையும் இடம் மாற்றி விட்டவன் .... அடி மீது அடி வைத்து தன் தேவதை இருக்கும் இடம் நோக்கி நடந்தான் .. 

தூங்கிக் கொண்டிருந்த இருவருக்கும் முன்னால் சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கன்னத்தில் கை வைத்து அவளை ரசிக்க ஆரம்பித்தான் ...

குளிர்ந்த காற்றில் அவளுடைய பறந்த முடி இன்னும் பறந்து கொண்டு இருந்தது, அவ்வப்போது உதட்டை சுளித்தாள்... தூக்கத்தில் கூட தன் குழந்தையை விட்டு விடாமல் கவ்வி பிடித்திருந்தாள்... குழந்தை நகரும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து கொண்டே இருக்க 

என்ன உண்டு இவளிடம்? எதுவும் இல்லை!! எலும்பும் தோலுமான ஒரு உருவம் , படிப்பு இல்லை கவர்ச்சி இல்லை, வசதி இல்லை ஆண்களை திரும்பிப் பார்க்க வைக்கும் ஆடை இல்லை, காலில் செருப்பு இல்லை.. உடலில் ஒரு பொட்டு நகையில்லை புடவையில் கிழியாத இடமே இல்லை பிச்சைக்காரி போல் இருந்த அவளை யாராவது ரசிப்பார்களா???  

இல்லை 

ஆனால் 

அவன் ரசித்தானே!! ...

காதலுக்கு கண் மட்டுமில்லை, மூளையும் இல்லை போலும்... காதல் வந்து விட்டால் எல்லாம் மாறித்தான் போகிறது... 

தீத்தன் கண் சிமிட்டாமல் மேலிருந்து கீழ் வரை அவளை ரசித்தான்....மழலை முகம் மாறாதவள் கைகாலில் சூடு பட்ட தழும்பு, நெற்றியில் ஒரு நீள அடிபட்ட காயம் 

"எல்லாம் அந்த நாயாலதான் இருக்கும் தாலி கட்டினா என்ன பண்ணினாலும் சகிக்கணுமா? ச்சே இவளை சொல்லணும், அவளை விற்க துணிந்த பிறகு இனி கேசவனோடு விட்டு வைப்பது தவறு என்றுதான் தனியாக தூக்கி விட்டான் ... 

அவள் மடியில் படுத்து கிடக்கும் குழந்தையையும் ரசிக்காமல் இல்லை... எப்படி அதை வெறுக்க முடியும்... அப்படியே அவள் ஜாடையில் அல்லவா அந்த குழந்தை கிடந்தது.... பலவாறு யோசித்து விட்டான் இது சரி வருமா வராதா என்று .. சரி வருமோ வராதோ ஆனால் இவளை இனி விட்டுவிடக்கூடாது என்று முடிவு எடுத்து விட்டானே .... 

அந்த சாந்தமான முகம் ,அவள் நிம்மதியாய் தூங்கும் தூக்கம் இடை இடையே சிரிக்கும் அவள் உதடுகள் இதையெல்லாம் பார்த்த பிறகு அவனுக்கு முடிவெடுக்க தயக்கமில்லை.... வேரல் நன்றாக தூங்கி கண்களை முழிக்க போக ... சட்டென்று எழும்பிய தீத்தன்

இப்போதைக்கு நான் யாருன்னு அவளுக்கு தெரியவே வேண்டாம்... டிஸ்ட்டென்ஸ் மெயின்டெயின் பண்ணுவோம்.... முதல்ல அவளை சேப் பண்ணிட்டு அப்புறம் நம்ம சேட்டையை வச்சிப்போம் "என்று எழும்பி வேகமாக தன் அறைக்குள் போய் மறைந்து கொண்டான்...

"ப்ச் , இவ்வளவு நேரம் தூங்கவா செஞ்சேன் ..கேவலம் , வேலைக்கு தேடி வந்த இடத்துல இப்படி தூங்கி வழிந்தா , கூட்டிப் பெருக்குற வேலை கூட தர மாட்டாங்க.. அறிவே இல்ல எப்படி தூங்கி தொலைச்சேன்னே தெரியலையே வேரல் பதறி எழும்பி பார்க்க... அப்போது எப்படி அத்தனை பேரும் சத்தம் இல்லாமல் வேலை செய்து கொண்டிருந்தார்களோ இப்பவும் அதேபோல அவளை சுற்றி அத்தனை பேரும் வேலை செய்து கொண்டுதான் இருந்தார்கள்.?

"முழிச்சிட்டீங்களா மேடம் நீங்க முழிச்சதும் சார் உங்களை வந்து பார்க்க சொன்னாரு...

எந்த சார் அக்கா , எங்க போய் பாக்கணும் குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டாள்..

இடது பக்கம் போயி அங்க பெரிய கண்ணாடி ரூம் இருக்கும் அதை வெளியே நின்னு தட்டுங்க வாங்க சொன்னதும் போங்க "

"ஓஓஓ சரி அக்கா என்று கால்கள் தெத்த தெத்த அவர் கைக்காட்டிய அறை நோக்கி ஓடினாள்

மிஸ்டர் தீத்தன் எம்பிஏ .. சிஎம் ஆப் தீத்தன் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயர் பலகையில் அவன் நாமம் விளங்க ....

டொக் டொக் என தட்டி விட்டு அவன் அறை முன்னே நகத்தைக் கடித்துக் கொண்டு வேரல் நிற்க 

"ம்க்கும் தன் ஆளுமை குரலை கனைத்து கடுமையாக மாற்றி கொண்டான் . தன் குரலை எளிதில் கண்டுபிடிக்க முடியாத படி சரிசெய்து கொண்டு 

"யா உள்ள வா.... என்றதும் பஞ்சு விரல் கண்ணாடி கதவை அங்கேயும் இங்கேயும் இழுத்து வைக்க மெலிதாக புன்னகை செய்தவன், பிஏவுக்கு கட்டளை போட்டான் 

"கதவை திறக்க தெரியாம தடுமாறிட்டு இருக்கா கதவை திறந்து விடு , நாளையில இருந்து எல்லா டோரையும் அவ ஈசியா கேண்டில் பண்ற மாதிரி மாத்திடு என்ற முதலாளி கட்டளை கேட்டு அவன்தான் அதிர்ந்தான்.... 

"இப்ப போங்க மேடம் என்று கதவை திறந்து அவளை உள்ளே அனுப்ப ...

"ஸ்ப்பா என்னா குளுரு வெளியே விட நாலு மடங்கு குளிர் அவன் அறையில் இருக்க, அவள் உடலில் மயிர்கள் கூசி சிலிர்க்க தீத்தன் விரல் ஏசி அளவை குறைத்தது.... 

 "சார் சார் "லேப்டாப் முன்னே முகத்துல மறைத்தது போல உட்கார்ந்து இருந்து அவளை கவனித்து கொண்டிருந்த தீத்தன் இரண்டு முறை அவள் அழைப்புக்கு பின்னே லேப்டாப்பை நகட்டி விட்டு நிமிர....அவள் தலை தூக்கி அவனை பார்க்கவே பயந்தாள்...

யா என்ன வேணும்.... எளிதாக அவன் குரலை கண்டுபிடிக்க முடியாத ஒரு குரலில் பேசினான்...

"இங்க வேலை கிடைக்கும்னு சொன்னாங்க அதான் தேடி வந்தேனுங்க, ஏதாவது வேலை இருந்தா கொடுக்க முடியுமா சார்.. என்ன வேலை வேணும்னாலும் செய்வேன்...

"ஓஹோ , எனக்கு பொண்டாட்டி வேலை தான் ஃப்ரீயா இருக்கு செய்றியா?? என்றவன் கேலி கேள்விக் கேட்டு வேரல் அதிர்ந்து போய் நிமிர்ந்து தீத்தனை பார்க்க ...அவனும் அவளை உதட்டை குவித்து கொண்டே பார்க்க... கண்ணும் கண்ணும் மோதிக்கொண்டது நேர்கொண்ட பார்வையில் அவன் அவளை பார்க்க, அவளோ பயந்து மிரண்டு போய் அவன் உருவத்தை முதன் முதலில் கண்ணில் உள்வாங்கினாள் 

"சார்இஇ

"பின்ன , என்ன வேலை வேணும்னாலும் செய்வேன்னா, நான் இப்படித்தான் குதர்க்கமாக கேள்வி கேட்பேன்... தெளிவா பேசணும் புரியுதா?? 

"ம்ம் என் தகுதிக்கு எதாவது வேலை கொடுங்க சார் 

"என்ன படிச்சிருக்க 

"அது , படிக்கல சார் , 

"ஓஓ ஆமா இந்த குழந்தை யாரோடது?

"என்னோட குழந்தை தான் சார் 

"புருஷன் சரியில்ல பொழப்புக்கு வழியில்லை , பட்டினியா எத்தனை நாள் கிடக்க ... அதான் வேலை தேடி வந்தேன்.. உங்க கம்பெனில வேலை இருக்குன்னு சொன்னாங்க, தெரியாம உள்ள வந்துட்டேன்" அவன் தோரணைக்கும் பேசும் பேச்சுக்கும் கண்டிப்பாக வேலை கிடைக்காது என்று புரிந்து நகர பார்க்க...

"ஹலோ பொண்ணு 

"ஹான் 

"வேலை கேட்டு வந்துட்டு திரும்பி போனா என்ன அர்த்தம்.. உக்காரு.

"சார்

"உட்காருன்னு சொன்னேன் ம்ம் என்ற அவன் அதிகார தொனியில் வேரல் அரண்டு முழிக்க, தன் முன்னால் கிடந்த குஷன் இருக்கையை கை காட்டி

சிட்டவுன் , உட்கார்

ம்ம் பதறிப் போய் பொத்தென்று அதில் அமர்ந்து கொண்டாள்

ஆத்தாடி !!இவர் பேச்சும் பார்வையும் பயமால்ல இருக்கு, வந்திருக்கக் கூடாதோ, அவன் தோரணை பார்க்கும் விதம் பேச்சு மிடுக்கு எல்லாம் கிடுகிடுக்க வைத்தது மெய்...

டீ போட தெரியுமா? 

ம்ம் போடுவேன் சார் 

காப்பி 

ம்ம் ... டையை கழட்டி விட்டவன் அவளை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே 

ரைட் பிள்ளையை அந்த சோபாவுல கிடத்திட்டு வா 

எ...துக்கு அவள் பதற ஊமையாக சிரித்தவன் 

"சேம்புள் காட்டு ஒரு காப்பி போட்டு எடுத்துட்டு வா ...

"ம்ம் பிள்ளையை சோபாவில் கிடத்தியவள் சுற்றி சுற்றி அடுப்பை தேட அவள் அருகே எட்டு வைத்து வந்து சிறுது இடைவெளியில் நின்ற தீத்தன் 

என்ன தேடிட்டு இருக்க?? அவன் குரலை அருகாமையில் கேட்ட வேரல் பயந்து திரும்ப, வெகு அருகே ஆனால் இடிக்காத தூரத்தில் அவளை குனிந்து பார்த்தபடி தீத்தன் நின்றான் 

ரொம்ப குட்டியோண்டு இருக்கா, காத்து அடிச்சா பறந்து போய் பேன்ல ஒட்டிப்பா போல , எப்படி தான் ஒரு பிள்ளையை பெத்து வளர்த்தாளோ தெரில என்று முணுமுணுக்க...

இல்லை அடுப்பு தேடிட்டு இருக்கேன் சார்" திண்டில் இருந்த கரெண்ட் அடுப்பை ஆன் செய்து கொடுத்தவன் 

"இதுல தான் போடணும் போடு 

"ம்ம் தட்டு தடுமாறி கையில் கொட்டி அதை சேலையில் துடைத்து என்று எப்படியோ ஒரு காப்பியை கிடுகிடுத்த கையோடு அவன் முன் நீட்ட அவள் விரலை தொட்டு தீத்தன் வாங்க போக நாசுக்காக வேரல் தன் விரலை அவன் தொடாதது போல கப்பை நீட்டினாள் ...

காப்பியை ஆழ சுவாசித்து உதட்டில் வைத்தான் 

முதல் முத்தம் மட்டுமா தித்திக்க வைக்கும்?! காதல் வந்தால் முதல் தேனீர் கூட தித்திக்கத்தான் வைக்கும் 

ம்ம் பெர்பெக்ட் !!

"நல்லா இருக்குதுங்களா ??ஆர்வமாக அவன் முகம் பார்த்தாள் 

"யா குட்... 

"ம்ம் தலையாட்டி அவன் குடிக்கும் வரை அவன் கண் காட்டும் பாவனைகளை பார்த்து கொண்டாள்...

"இந்தா" குடித்த டம்பளரை அவள் புறம் நீட்ட அதை வாங்கி சிங்கிள் கழுவி துடைத்து ரேக்கில் வைத்து விட்டு கையை புடவையில் துடைத்தபடி அவன் முன் வந்து நின்றாள்...

"வேலைஏஏஏஏ அவள் இழுக்க...

"வேலையை தொடங்கியாச்சே 

சார் 

"இப்ப என்ன செஞ்ச??

"காப்பி போட்டு கொடுத்தேனுங்க சார் 

"ம்ம் அதுதான் உன் வேலை 

"ஹான் ... 

"என் ரூம்ல ஒரு மூலையில இருந்துக்க, நான் எப்போ காப்பி டீ கேட்கிறோனோ அப்போ போட்டு கொடு சாப்பாடு தர்றது என்ன பார்த்துக்கிறது இதுதான் உன் வேலை "

"இப்படி ஒரு வேலையா????" கூட்டி பெருக்க வந்தவளுக்கு கெளரவ பட்டம் கொடுத்தான் .. ஒரு கணவனை பார்த்துக்கிறது போல பாத்துக்க என சொல்லாது சொல்லி விட்டான் ...

ரெண்டு மூணு பிராஞ்ச் போவேன் ;அங்கேயும் என் கூட வந்து இதே போல காப்பி டீ போட்டு தரணும் எனக்கு வேற சாப்பாடு எல்லாம் ஒத்துக்காது அவளிடம் நேக்காக தான் காரியத்தை சாதிக்க வேண்டும் ... பைலை பார்த்து கொண்டே அவன் பேச 

"சரியா வருமா என்று அவள் தலையை சொரிந்து கொண்டே யோசிக்க 

"மாசம் பத்தாயிரம் ரூபாய் வாங்கிக்க.... ஓவர் கருணை காட்டினா ,அவளுக்கு சந்தேகம் வந்து ஓடி விடுவாள் அலர்ட்டாக இருந்தான் 

பத்தாயிரம் ரூபாயா??? விரலை நீட்டி மடக்கி பார்த்தவள் 

"ஏஏஏ அப்பா அவ்வளவு பெரிய சம்பளமா சார்?? 

"ஏன் வேண்டாமா என் வாட்ச்மேன் கூட மாசம் 30 ஆயிரம் வாங்குவான், நீ புதுசுல்ல அதான் கம்மி அந்த பச்சை பைலை நகட்டி வை ;அவள் கை பக்கம் இருந்த பைலை நகட்டி அவன் புறம் வைத்தவள் தூங்கும் மகளை தயக்கமாக பார்க்க ...

"குழந்தையை என்ன பண்ண போற?

தெரிலயே சார் ஒரு வேகத்துல வேலைக்கு வந்துட்டேன் ஆனா பாப்பாவை வச்சிக்கிட்டு அது வேற ஒரு கால் அவளுக்கு வராது" என்று வேரல் கையை பிசைய 

"ஓஓஓ குழந்தை பேரு என்ன ??

"நிலா ... 

"என் ஆபீஸ் ஸ்டாஃப்க்காக பக்கத்திலேயே குழந்தைகளுக்கு கவனிக்கிறதுக்கான இடம் இருக்கு காலைல இருந்து அங்க கொண்டு வந்து குழந்தையை விட்டுடு

"குழந்தையை தனியாக விடணுமா

" உன் குழந்தையை ஒன்னும் யாரும் கடிச்சு தின்னுட மாட்டாங்க ... பெரிய பெரிய ஸ்டாப்போட பிள்ளைங்க கூட அங்க தான் இருக்காங்க. நல்லா பாத்துப்பாங்க மூணு நேரம் சாப்பாடு, ஏசி ரூம் படிக்கவும் வைப்பாங்க, நீ வேலை முடிஞ்சு போகும்போது குழந்தையை கூட்டிட்டு போகலாம்

அப்படியா?? வேலையும் கொடுத்து இதையும் செய்வாங்களா வாயை பிளந்தாள் .. இத்தனை நாள் நரகத்தை பார்த்த கண்கள் சொர்க்கத்தை பார்க்க அதற்கும் மிரளத்தான் செய்தாள்... ஆனாலும் பிள்ளைக்கு மூணு நேரம் சோறு குடுப்பாங்க என்றதும் பெற்ற உள்ளம் நிம்மதி பட்டது .. 

அவள் முகத்தில் வந்து போன நிம்மதியை எத்தனை கோடி ரூபாய் அவன் சம்பாதித்தாலும் பெற்று விட முடியாது ..

ரொம்ப நன்றி சார்,

"இந்தா இதுல ரெண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் இருக்கு என்று மேஜையில் பணத்தை அவள் புறம் தள்ளினான்.. அவளிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறானோ அத்தனை அளவு அவள் நம்பிக்கை பெற முடியும் அதன் பிறகே காதலை பெற முடியும் என அறிந்தே ஒவ்வொரு செயலையும் செய்தான்..

அட்வான்ஸூன்னா ?? 

ப்ச் வேலைக்கு சேர முன் பணம், இதை வச்சி வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கிக்க...

ம்ம் பணத்தை எடுத்து கண்ணில் ஒத்தி கொண்ட வேரலுக்கு வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது 

எப்படியோ வேலை கிடைச்சிருச்சு இனி டிகே சாரை சரிகட்டினா போதும் .... தன்னை ஒருவன் இஞ்ச் இஞ்சாக ரசிப்பது அறியாது வேரல் குழந்தையை தூக்கி கொண்டு உற்சாகத்தை சிறிய இதழ் சிரிப்பில் வெளிக்காட்டி 

நாளைக்கு வேலைக்கு வந்திடுறேன் சார் "

"ம்ம் 

"வர்றேன் சார் என்றவள் சிறுது தூரம் போய் 

"சார் என்றதும் அவன் எட்டி பார்க்க 

"நன்றி என்று சல்யூட் அடித்தாள்... அவன் அறை வாசலில் இருக்கும் வாட்ச்மேன் அவனை கண்டதும் சல்யூட் அடித்ததை கண்டவள் அது போலசெய்ய.... மெலிதான புன்னகையை பதிலுக்கு கொடுத்தவன் பெருமூச்சு விட்டான் ... 

இனி அவளை தீண்டும் தென்றல் கூட அவளை வலிக்க வைக்க இயலாது .... அந்த தென்றலையும் சிறை பிடித்து விடுவான் இவ் வேழம்...