வேரலை மேய்ந்த வேழம் 7

Velam7

வேரலை மேய்ந்த வேழம் 7

7 வேரலை மேய்ந்த வேழம் !! 

சார் நான் சொல்றதை கேட்டுட்டு இருக்கீங்களா?  

என்ன சொன்ன அம்மு ... பிரத்யேக அழைப்பு தானாக வந்து நாவில் ஒட்டி கொண்டது... இனி எப்போதும் அவள் அவனின் அம்முதான் ..

இனி உலகமே அவனை எதிர்த்து நின்றாலும் . ஏன் அவளே மறுத்து நின்றாலும், அவளை அவன் விட்டுக் கொடுக்கப் போவதில்லை ... களங்கப்பட போகிறானா? பட்டு விட்டுப் போகிறான்! அசிங்கப்படுத்த போகிறார்களா, அசிங்கப்படுத்தி விட்டுப் போகட்டும் .. கள்ளக்காதல் என்று மீடியாக்கள் அவன் பெயரை அசிங்கப்படுத்துமா , படுத்து விட்டுப் போகட்டும் ..ஆனால் , இந்த தீத்தன் தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டான்.. இனி அவனின் துணை அவள் என்று 

"சொல்லு அம்மு நான் வேற வேலையா இருந்தேன் கவனிக்கல .. இருந்த தடுமாற்றங்கள் எல்லாம் போய் மீண்டும் அந்த கம்பீரக் குரல் வந்தது 

"இல்ல சார் எனக்கு சங்கடமா இருக்கு, இப்படி ஒரு தொழில் பண்ணி தான் சம்பாதிக்கணுமான்னு அவமானமாயிருக்கு , இத்தோட முடிச்சுக்கலாம் உங்ககிட்ட சொல்லாம நிறுத்த எனக்கு மனசு வரல 

ஓஓ

அதான் உங்ககிட்ட சொல்லிட்டு, இன்னையோட பேசறத நிறுத்திடலாமேன்னு நினைத்து போன் போட்டேன்... வேரல் அவன் கண்டிப்பாக தன் நிலைமையை புரிந்து கொள்வான் என்று நினைத்து அவன் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்க ..

"என்ன நெனச்சிட்டு இருக்க , உன்கிட்ட பேசறதுக்காக எத்தனை லட்ச ரூபாய் கொட்டி கொடுத்திருக்கேன்னு தெரியுமா என்றவன் கோபமான பேச்சில் அதிர்ந்து போய் போனை இறுக்கிப் பிடிக்க ...

"எங்க அந்த புரோக்கர் நாய, அவன்தானே உன்னை எனக்கு ரெடி பண்ணி தந்தது, அவன வர சொல்லு அவன்கிட்ட பேசுகிறேன் ... நீ ஏற்பாடு பண்ணி கொடுத்த பொண்ணு ஜகா வாங்குது என்னால பேச முடியாதுன்னு சொல்லுது, அப்போ காச திருப்பி கொடுன்னு அவன் கழுத்தையே புடிக்கிறேன்... 

அய்யய்யோ!! அந்த மனுஷன் கிட்ட இந்த விஷயம் போச்சுன்னா என்ன குறை உயிரா ஆக்கிடுவானே.. 

ஒரு வாரமாக கேசவனை பார்க்கவே இல்லை தாயும் பிள்ளையும் அவன் இல்லாது நிம்மதியாக இருக்கின்றனர் ... அவனுக்கு தெரியாமல் தான் இவனிடம் தான் நினைத்ததை சொல்ல நினைத்தாள் இவன் அவனிடம் பேசினால் இவள் சோலி முடிந்தது ... கையில் வெட்டியவன் கழுத்தில் வெட்டுவானே.. ஈரக்குலை நடுங்கியது 

"ராத்திரி ஆனா எனக்கு பேசுறதுக்கு பொண்ணு வேணும் உன்ன என்ன படுக்கவா கூப்பிட்டேன் இல்ல தானே..

"என்ன சார் இப்படி எல்லாம் பேசுறீங்க..

"இப்படி எல்லாம் பேசி இருக்கணும்னு நினைக்க வைக்கிறடி டிசென்டா பேசினதுனால நான் நல்லவன்னு நினைச்சுக்கிட்டியா... நான் தர லோக்கலா இறங்கினேன்னு வச்சுக்கோ, தாங்காது.."

ஹான் அரண்டு முழித்தாள்...அவனோ உதட்டுக்குள் சிரிப்பை அடக்கினான்... 

"ஐயோ பாவம் சின்ன பொண்ணுன்னு நினைச்சு நான் அடக்க ஒடுக்கமா பேசினா.. காசயும் வாங்கிட்டு அப்படியே ஓட பார்க்கிறியா? 

"இல்லை சார் என் நிலைமையைதான் சொன்னேன்..

" என்ன நிலைமை இதெல்லாம் நீ காச வாங்குறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும் இல்ல முதல் நாள் பேசுனல்ல, அப்பவே பேசி இருக்கணும் ... அப்ப எல்லாம் விட்டுட்டு , ஒரு மாசம் கழிச்சு சார் எனக்கு இந்த வேலை பிடிக்கலைன்னா நான் எங்கடி போவேன் ?? வேரல் பேக்க பேக்க முளித்தாள்... 

"சார் நான் என்ன சொல்றேன்னா?

" நீ எதுவுமே சொல்ல வேண்டாம், ஒன்னு நான் கொடுத்த காசுக்கு வேலை செய் ..இல்ல, நான் கொடுத்த காசை நாளைக்கு அந்த புரோக்கர் நாய கொண்டு வந்து தர சொல்.. 

எது 

"ம்ம, காச தரப் போறியா இல்ல தந்த காசுக்கு வேலை செய்ய போறியா "நகத்தை கடித்துக் கொண்டே நின்றவள்

பேசவே செய்றேன் சார்.. அந்த ஆளு கிட்ட நீங்க எதுவும் சொல்லிட மாட்டீங்களே..

நீ பேசினா நான் ஏன் அந்த நாய் கூட பேச போறேன்

"அப்போ நான் பேசுறேன் சார்

"குட் இப்பதான் வேலை முடிச்சு வந்தேன் , குளிச்சிட்டு ஒரு அரை மணி நேரம் கழிச்சு போன் போடுறேன் 

சார் இது பக்கத்து வீட்டு அக்கா போன் அந்த போன் உடைஞ்சு போச்சு 

நாளைக்கு யார்க்கிட்டேயாவது கொடுத்து போன சரி பண்ணி வை , அதுக்கும் சேர்த்து காசு கொடுத்துடுறேன் இப்போ போய் படுத்து தூங்கு சாப்டியாடி ?

"ஆச்சு சார் நீங்க?

"இனிமேதான்... 

"இன்னும் சாப்பிடலையா 

"ம்ம் , என்னன்னு தெரியல ஒரு வாரமா பசி இல்ல இப்பதான் பசிக்கிற மாதிரி இருக்கு போய் சாப்பிட்டு தூங்குறேன்... நீயும் போய் தூங்கு .... 

"சரி சார் அப்ப வைக்கவா 

"ஏய் இரு இரு

"என்ன சார் 

"இச் ஐ லவ் யூ அதை சொல்ல தான் கூப்பிட்டேன் , வை 

"ஹான் அப்படின்னா ? 

"உன்ன காதல் பண்றேன்னு அர்த்தம் 

"காதலா ஆஆஆஆஆ??!!!!!

இச் இச் நாளையில இருந்து நீயும் காதல் பண்ணு, இப்ப போனை வச்சிட்டு தூங்க ஓடு "என்று சிரித்தவன் அவள் முகம் போகும் போக்கை நினைத்து சிரித்து கொண்டே போனை வைத்தவனுக்கு மனம் லேசாகி போன உணர்வு ... 

தேவையில்லாத இடத்துல மாட்டி விட்டுட்டு இந்த நாய் எங்கேயோ போயிட்டான்... அவர் பேசுறத பாத்தா என்ன விட மாட்டார் போல இருக்கே, நாளைக்கும் பேசுவார் போல... இப்ப நான் என்ன பண்றது..இந்த சோகத்தை எவன்கிட்ட போய் சொல்லன்னு கூட தெரியலையே கடவுளே, என்ன எப்படியாவது இந்த இரண்டு ஆம்பளைங்க கிட்ட இருந்து காப்பாத்தி விடு தெய்வமே ... என் புள்ளையும் , நானும் எங்கேயாவது போய் பிழைச்சிக்கிறோம் எப்படியாவது காப்பாற்று கடவுளே என்று புலம்பிக்கொண்டே பாயில் அரை வயிரோடு தூங்கும் பிள்ளையின் பக்கம் சரிந்து படுக்க..

அம்மா பசிக்குது என்று நிலா உருள

"பேதியில போறவன், கஞ்சா போட்டா வீட்ல உள்ள சட்டி பானையை எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைச்சுடுகிறான்.. ஒரு பருக்க அரிசி இல்ல, புள்ள எத்தனை நாளைக்கு தான் பசியோட கிடக்கும்... என்று வேரல் கண்ணீரை துடைத்துக் கொண்டு வேதனையில் பிள்ளையை எப்படியோ தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள்.. இரவு முழுவதும் கண்களை வெறித்து கிடந்தாள்...

குழந்தையை ஆயுதம் வைத்து தாக்கியதால் தெருவில் உள்ளவர்கள் போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று குடித்துவிட்டு அன்று இரவு குடிசை முன்பு மனைவி , பிள்ளையை காணாது கேசவன் தகராறு பண்ணவும்... அத்தனை பேரும் சேர்ந்து போலீசில் புகார் கொடுப்பதாக அவனை மிரட்ட பயந்து ஓடிப் போனவன்.. அங்கும் இங்குமாக சுற்றி போதையில் திரிய ...

திடீரென்று அவன் முன்னால் ஒரு ஆடம்பரக் கார் வந்து நின்றது... அதிலிருந்து வேகமாக இரண்டு பேர் இறங்கி வந்து போனை அவன் கையில் கொடுக்க... அவன் அரண்டு மிரண்டு முழிக்க 

"சார் பேசுறார் பேசு என்றதும் காதில் போனை வாங்கி வைத்து 

"நான் எதுவும் செய்யல சார், குழந்தை விளையாடும் போது கால் தவறி கீழே விழுந்து, அருவாள்ல வெட்டிக்கிட்டு... என்னை தூக்கி உள்ள போட்டுடாதீங்க சார் என்று கேசவன் தானாக உளர ஆரம்பிக்க ...

"டேய் பொறம்போக்கு நாயே , உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும்டா,எச்சை 

"சார் நீங்களா... நானே உங்களுக்கு போன் போடணும்னு நெனச்சேன் சார்.. அந்த சண்டாள சிறுக்கி போனை தூக்கிப் போட்டு உடைச்சிட்டா சார் அதனால தான் பயந்து ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன்... தப்பா நினைக்காதீங்க சார் எப்படியாவது அவளை வழிக்கு கொண்டு வந்து

யூ ____ ர் நீ ஒன்னும் செய்ய வேண்டாம்... இனிமே அவ பக்கத்துல உன் மூச்சு காத்து பட்டுச்சு ஜெயிலுக்குள்ள போக மாட்ட , மொத்தமா உன் கதையை முடிச்சுடுவேன்"

" என்ன சார் பேசுறீங்க,. ஒன்னும் புரியலையே

"ஒரு பொண்ண விலைக்கு விக்க பார்த்து இருக்க , பிள்ளைய பேரம் பேசி இருக்க, அத்தோட குழந்தையை கொல்றதுக்கு ரெண்டு தடவ ட்ரை பண்ணி இருக்க.. இது அத்தனைக்கும் ஆதாரம் இருக்கு இனிமே நீ அந்த குடிசை பக்கம் போனேன்னு வை... உன் ஆத்தாக்காரிக்கிட்ட குடிச்ச பால் கக்குற அளவுக்கு அடிச்சு தூக்கி வெளியே போட்டுடுவேன் ...

என்ன சார் மிரட்டுறீங்களா??? .... 

அப்படித்தான்டா, அப்படியே வச்சுக்கோ.

இனிமேல் வேரல் என்னோடவ...

"சார் அவ என் பொண்டாட்டி; காசுக்காக பேச விட்டா மொத்தமா தூக்கிட்டு போயிடுவீங்க போல ..

"பொண்டாட்டியா யூ மீன் வொய்ப் ??அப்படின்னா அர்த்தம் தெரியுமாடா நாயே , அவளை குழந்தை திருமணம் பண்ணி இருக்க... 17 வயது பொண்ணை வலுக்கட்டயமா தூக்கிட்டு வந்து வாழ்ந்து இருக்க, ம்ஹூம் கொடுமை பண்ணி அவளை வற்புறுத்தி பிள்ளை பெத்து இருக்க , இப்படி உன் மேல அலிகேசன் ஏகப்பட்டது இருக்கு, ராசா ... நான் நினைச்சேன் நீ செத்த .... கேசவன் எச்சில் விழுங்க 

உன் கல்யாணத்தையே சட்டப்படி செல்லாதுன்னு ஆக்கி உன்ன அக்யூஸ்ட் ஆக்க ரெண்டு நிமிடம் போதும் ...

இனி அவ நிழல் மேல கூட உன் விரல் படக்கூடாது பட்டுச்சு ...

என்ன சார் மிரட்டீங்களா... அவ பத்தினி நான் சாக சொன்னா கூட சாவா தெரியுமா? ..தீத்தன் பல்லை கடித்தான்..

இதுதானே இந்த கரப்பான் பூச்சியை விட காரணம் இத்தனை நடந்த பிறகும் அவள் அடிமைப்பட்டு கிடக்கிறாள் என்றால் புரிதல் அவளிடமே இல்லை என அவனுக்கு தெரிந்தது.. புரியவைக்க முயற்சி செய்யாது இவன் மீது கை வைத்தால் அவள் வெறுப்பை சம்பாதிக்க வேண்டுமே..

அது என்கிட்ட பணத்த வாங்கிட்டு, அவளை என் கூட பேச வைக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சுருக்கணும்டா நாய.

இனிமே அவ என்னோட பிராப்பர்ட்டி , ஒழுங்கா ஒதுங்கி இரு.. அவகிட்ட வாலாட்டனும்னு நெனச்ச வால ஒட்ட நறுக்கிடுவேன் ராஸ்கல்... என் பாதுகாப்பை மீறி அந்த தெருப்பக்கம் போன கால உடைச்சிருவேன் .. என்று தீத்தன் போனை வைத்தான் 

கேசவன் அந்த தெரு பக்கம் போகாத படி இரண்டு அடியாட்களை அந்த தெருவில் போட்டு வைத்து விட்டான்.... முழுநேரமும் அவளுக்கு பாதுகாப்புக்கு ஆளை நிறுத்தி வைத்தான்.... 

காணாமல் போன புருஷனுக்காக இரண்டு நாள் காத்திருந்தாள் வேரல் .. வாரத்தில் ஒரு நாளாவது நூறு ரூபாயை கொடுத்து காய்கறி சாமான் வாங்கிக்கோ என்று கொடுப்பான்.. அதில் தான் குடும்பம் ஓடியது, இப்போது கையில் நயா பைசாவும் இல்லை, குழந்தை வேறு பசி பசி என்றது ஆனால் இவ்வளவு கொடுமையிலும் ஒரு நிம்மதி..

இந்த கொடுமைக்காரன் நிழல் படாமல் இருக்கிறோம் என்று சந்தோஷம் வராமல் இல்லை காலையில் குடிசை கதவை அவள் திறக்க திண்ணையில் போன் ஒன்று இருந்தது...

யாரோ தெரியல காலையிலேயே இந்த போன வச்சுட்டு போனாங்க உன் கிட்ட கொடுத்திட சொன்னாங்க என்று பக்கத்து வீட்டு பெண் கூற 

ஓஓஓ நேத்து உடைஞ்ச போனை சரிசெய்ய கொடுத்தேன் அக்கா அதுவா இருக்கும் 

யார் கொடுத்து அனுப்பி இருப்பார்கள் என்று வேரலுக்கு தெரிந்தது.. சத்தமில்லாமல் அதை எடுத்து உள்ளே வைத்துக் கொண்டாள் 

ஒருவேளை சார் தான் அவன ஏதாவது செஞ்சு இருப்பாரோ நிம்மதியாகவும் இருந்தது... அதே சமயம் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று பயமாகவும் இருந்தது.... இப்படியே இருந்தால் சரி வராது வயித்து பாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று யோசித்தவள்... 

வேரல் குழந்தையையும் இடையில் இடுக்கி கொண்டு அந்தத் தெருவை தாண்டி வேலைக்காக அலைய ஆரம்பித்தாள் 

அண்ணே ஏதாவது வேலை கிடைக்குமா? தெரு எல்லையில் டீக்கடையில் நின்ற அந்த நபரோ அவளை கண்களை சுருக்கி கையில் இருந்த போனை குனிந்து பார்க்க... அதில் அவள் உருவம் தான் வந்திருந்தது....

இவங்க தெருவை தாண்டினா இன்பார்ம் மீ என்று தீத்தன்தான் வேரல் புகைப்படம் அனுப்பி வைத்திருந்தான்....

"சார் வேலை கேட்டு வந்து இருக்காங்க "என்று இவன் ரிப்ளை செய்ய... மீட்டிங்கில் பேசி கொண்டிருந்த தீத்தன் பர்சனல் போனில் மெசேஜ் வரவும் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டு போனை பார்த்தான் ... கண்டிப்பாக கேசவன் சிறையை விட்டு அவளை காப்பாற்றி விட்டால், தன்னிடம் அவளை வர வைத்து விடலாம் என தெரிந்து தானே தீத்தன் காயை நகர்த்தியது... 

என்னோட ஆபீஸ் அட்ரஸ் சொல்லி அனுப்பி விடு..

"ஓகே சார் 

"இதோ இந்த விசிட்டிங் கார்டுல இருக்கிற கம்பெனிக்கு போங்க மேடம் , 

"வேலை கிடைக்குமா அண்ணா 

"ம்ம் அங்க நிறைய வேலை இருக்கும் ஏதாவது வேலை தருவாங்க என்று கையில் பணத்தையும் கொடுத்து விசிட்டிங் கார்டையும் கொடுக்க...

"ரொம்ப நன்றிங்க அண்ணா பணம் எல்லாம் வேண்டாம்..

"இல்லம்மா வச்சுக்கோங்க குழந்தை முகத்துல பசி தெரியுது குழந்தைக்கு ஏதாவது சாப்பிட வாங்கி கொடுங்க என்றதும் வேரலுக்கு கண்ணீர் குபுகுபுவென்று வடிந்துவிட்டது... 

வேலை கிடைக்கவில்லை என்றால் பிச்சையாவது எடுத்து விட வேண்டியது தான் என்ற நிலையில் தான் அவளும் நின்றாள், வயிற்றை வயிற்றை பிடிக்கும் பிள்ளையை பார்த்து அவளுக்கே விம்மி வெடித்தது .. தப்பு செய்வதை விட பிச்சை எடுப்பது ஒன்றும் பாவம் இல்லையே ... 

மாங்கு மாங்கு என்று ஒவ்வொருவரிடமாக அந்த அட்ரஸை காட்டி எப்படியோ வந்து தீத்தன் கண்ணாடி அலுவலகம் முன்னால் வந்து நின்றாள் 

கால்கடுக்க நடந்து வந்தே தொண்டை வரண்டு போனது...

சார் இங்க வேலை கிடைக்கும்னு சொன்னாங்க ஏதாவது வேலை கிடைக்குமா? பளபளக்கும் கண்ணாடி அலுவலகத்தில் தனக்கு எங்கே வேலை கிடைக்கப் போகிறது நாயை விரட்டுவது போல் விரட்ட போகிறார்கள் என்று சங்கடமாக நெளிந்தாள் 

"உள்ள வாங்க மேடம் அந்த சேர்ல உட்காருங்க சார் வருவாரு ,வந்ததும் சொல்றேன்" என்று ஒரு பெண் வந்து அவளை வரவேற்பு அறையில் உள்ள இருக்கையில் அமர வைத்து காஃபி பிஸ்கட் என்று உபசரிக்க ... குழந்தை ஆளாய் பறந்து அதை தின்ன வேரல் சேரில் நுனியில் அமர்ந்து கொண்டு , அங்கே நவநாகரீகமாக சுற்றும் நபர்களை அரண்டு போய் பார்த்தாள் 

 பெருக்கி கூட்டுற வேலை கிடைச்சா கூட போதும் எப்படியாவது அந்த அரக்கன் கிட்ட இருந்து தப்பிச்சிடலாம் அவன் இல்லாத இந்த நேரத்தில் எங்கேயாவது ஓடி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு மித மிஞ்சி இருந்தது..

சுதந்திர தேசம் உள்ளே காலை வைத்து விட்டாள் இனி அவள் அவன் பட்டத்து ராணியாக மணிமகுடம் சூடாது போவாளோ??