வேரலை மேய்ந்த வேழம் 6
Velam6

6 வேரலை மேய்ந்த வேழம் !!
ஆயிற்று ஒரு வாரம் ஆகி விட்டது வேரலோடு பேசி... தீத்தன் இருக்கும் இடத்திற்கு அவர்கள் இருவரையும் ஒன்றுமில்லாமல் ஆக்க ஒரு நொடி போதும் ... ஆனால் திரும்பிப் பார்த்த அவள் நலிந்த உருவமும், காய்ந்த உதடுகளும் பொலிவு இல்லாத கண்களும் நடுங்கிய விரல்களும், பசியில் சொருகி நின்ற கண்களும் , வறுமையில் வாடிய தேரல் உடலும் பிள்ளையை அந்த நிலையிலும் தூக்கி வைத்திருந்த அவள் தாய்மையும் தன்னை ஏமாற்ற தன் பணத்தை அபகரிக்க , புருஷனும் மனைவியும் தன்னை பயன்படுத்தினார்கள் என்று பழி போட அவனால் முடியவில்லை....
அவள் பார்த்த பார்வையில் அவள் மீது தவறு இருக்காது என்பது நூறு சதவிகிதம் அவனுக்கு தெரிந்தது ... அவள் யார் என்ன என்று தெரிந்த பின்பு இனிமேல் பேசினால் தவறு என்று நினைத்து அவனும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இரவை கழிக்க பார்க்க ....
ஆனால் நடந்ததோ வேறு ,
இரவு 12 மணி ஆனால் அவளோடு பேசிய ஞாபகங்கள் மண்டையை வண்டாக குடையச் செய்ய ... தீத்தன் உணர்வு தாக்கம் தாங்க முடியாது , வண்டியை எடுத்துக்கொண்டு ஆள் அரவம்ம் இல்லாத ரோட்டில் ஹை ஸ்பீடில் சுற்ற ஆரம்பித்தான்...
சற்று தளர்ந்து இருந்த அவன் இறுக்கம் மறுபடியும் இரண்டு மடங்காக வந்து ஒட்டிக்கொண்டது.... எதற்கெடுத்தாலும் கோபம் யாரையாவது குத்தி குதற வேண்டும் போல் எரிச்சல்... ஏன் என்றே தெரியாமல் கத்தினான்.. வேலையை சரியாக செய்தாலும் திட்டு விழுந்தது, சரியாக செய்யவில்லை என்றாலும் திட்டு விழுந்தது மேஜையில் அடுக்கி வைத்திருக்கும் பைல்களை எல்லாம் தூக்கி வீசி தன் கோபத்தை தனக்கு கீழ் வேலை பார்க்கும் நபர்களிடம் காட்டினான..
ஏசி ஜில் என்று அவன் அலுவலக அறையில் ஓடிக்கொண்டிருக்க கணினியை ஒரு கையில் தட்டிக்கொண்டே இன்னொரு கையில் பைலை புரட்டிக் கொண்டிருந்தான் தீத்தன்
சார் அவன் பிஏ உள்ளே வர ..
என்ன வேணும் ?
"மதியம் லஞ்சுக்கு டைம் ஆயிடுச்சு, அதான் ஞாபகப்படுத்த
" ஒரு நேரம் சாப்பிடலைன்னா நான் ஒன்னும் செத்துப் போயிட மாட்டேன், பசிக்குதுன்னா சொல்ல மாட்டேனா , எதுக்கு இப்ப தேவை இல்லாம உள்ள வந்து என்ன தொல்லை பண்ணிட்டு இருக்க.. வெளிய போ" என்று கத்திவிட்டு டையை கழட்டி தூர வீசிவிட்டு சாய்வு நாற்காலியில் அப்படியே சாய்ந்து கண்களை மூடினான்
பசியில்லை தூக்கம் இல்லை நிம்மதி இல்லை இதுதானா காதல் நோய் !! அப்படி என்றால் அவனுக்கு நோய் முற்றி விட்டது ...
வந்த முதல் காதலும் தோற்று அல்லவா போய் விட்டது ..
ஒருத்தியோடு பேசின பேச்சு தன்னை மொத்தமாக உருக்குலைக்குமா... அவனை குலைத்துவிட்டது அத்தனைக்கும் அவளோடு காதலாக பேசியது இல்லை, காமமாக பிதற்றியது இல்லை... உனக்கு என்ன பிடிக்கும் எனக்கு என்ன பிடிக்கும் அவ்வளவுதான் அதற்கே கிறுக்கி பிடித்து நின்றான் ..
அம்மு
சொல்லுங்க சார் முதலில் தயக்கம் கொண்டு பேச மறுப்பவள் அதன் பிறகு அவன் நாகரிக பேச்சில் இயல்பாக பேச பழகி கொண்டாள்....
"காதல பத்தி என்ன நினைக்கிற அம்மு ? பீடிகையாக கடைசி இரவு அவன் பேசியது இப்போதும் காதுகளில் ஒலித்தது
"காதலா அப்படின்னா, அது இனிப்பா காரமா.. எந்த கடையில கிடைக்கும் , எங்க ஊர் கடையில் எல்லாம் காராசாவு முறுக்கு இது தான் இருக்கும்.. காதல் எல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்ல சார்" என்ற பெண்ணின் பேச்சில் தீத்தன் அதிர்ந்து போய்
"காதல்னா என்னனு தெரியாதா ??
"இல்ல சார் அப்படின்னா ???ஏதோ தப்பாக கேட்டு விட்டோமோ என்று அவள் தயக்கமாக அவன் பதிலுக்கு காத்திருந்தாள் ..
அவள் ஊரில் காதலுக்கு எல்லாம் இடமே இருந்ததில்லை பின்னே எப்படி அவளுக்கு காதல் என்று ஒன்று இருப்பது தெரியும் ...
காதல்னா திங்குற முறுக்கோ காரச்சேவோ கிடையாதுடி,,"
"ஓஓஓ அப்போ அது வேற பொருளா சார் ... சென்னை வந்து இந்த தெரு தாண்டியது இல்லை தாண்டினால் காலை வெட்டி விடுவான் கேசவன் பயபக்தி மனைவியே ஊர் உலகம் பத்தி ஒன்றும் தெரியாது ..
காதல்னா ஆணும் பெண்ணும் நேசிக்கிறது கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சு அதுக்கு பிறகு கல்யாணம் பண்ணிக்கிறது.."
"கல்யாணத்துக்கு முன்னாடி ஆம்பளையும் பொம்பளையும் ஒன்னா சேர்ந்து பேசுவாங்களா நேசிப்பாங்களா? ஐய்ய கண்றாவி, எங்க ஊர்ல எல்லாம் அப்படி பண்ணுனா ரெண்டு பேரையும் வெட்டி ஊர் நடுவில முக்கிடுவாங்க தெரியுமா..
"நீ எந்த உலகத்திலடி இருக்க , காதல்னா என்னென்னு கூட தெரியல...
யாராவது சொல்லித் தந்திருந்தாதானே சார் தெரியும்...
"அப்போ என்கிட்ட பேச மட்டும் சொல்லி தந்து இருக்காங்களா ...
"அது பணம் தரேன்னு சொன்னாங்க அதான் என்று அவள் தடுமாற ..
"ப்ச் , சரி சரி விடு ஒருவேளை நான் உன்ன கண்டுபிடிச்சு தேடி வந்தா என்ன செய்வடி
"அய்யய்யோ, அப்படியெல்லாம் வந்துடாதீங்க சார் முகம் பார்க்காம பேசினா மட்டும் போதும்னு சொன்னதுனால தான் இந்த வேலைக்கே நான் ஒத்துக்கிட்டேன் என்று அவள் குரலில் பதட்டம் கூடிக் கொண்டது...
அவமானப்பட பிள்ளையின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க அவள் கணவனுக்கு வேண்டுமென்றால் வருத்தம் இல்லாமல் இருக்கலாம் ..ஆனால் , அவளுக்கு இவனோடு பேசும் ஒவ்வொரு நாளும் உடல் முழுவதும் கூசியது கேவலமாக இருந்தது... இந்த விஷயம் அம்பலமானால் என் புள்ள வாழ்க்கையும் போயிடுமே, பொம்பள புள்ளையை பெத்து வச்சிருக்கேன் நல்ல இடத்துல கட்டி கூட கொடுக்க முடியாது என்று பிள்ளைக்காக எதிர்காலத்திற்காக பயந்து பயந்து தான் இவனோடு பேசுவாள்
"நீ இப்படி பயந்து சாகும்போதுதான் உன்ன பாக்கணும் போல இருக்குடி, ஒரு ஸ்ட்ராபெரி ஜூஸ் என்று கிச்சனில் கைகாட்டி விட்டு மேஜையில் வந்து அமர்ந்தான்
"சார் ஜூஸ் நல்லா இருக்கும்ல..
"ஏன் நீ குடிச்சது இல்லையா
"ம்ஹூம், அப்படியே நடந்து போகும்போது கடை தெருவுல பார்த்திருக்கேன் .. நல்லா இருக்கும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா குடிச்சது இல்ல நல்லா குளுகுளுன்னு இருக்குமோ? தீத்தனுக்கு ஒன்று தெரிந்தது... உலகத்தில் எதையுமே அவள் அனுபவித்தது இல்லை என்பது அவள் அறியாமை பேச்சில் புரிந்தது...
என் கூட வாடி இந்த உலகம் எவ்வளவு அழகானதுன்னு உன்ன என் கையில தூக்கி வச்சு சுத்தி காட்டுறேன் சொல்ல வாய்வரை வார்த்தை வந்தாலும்... இந்த கானல் காதலுக்கு ஆயுசு கம்மி!! அவன் உருவாக்கி வைத்திருக்கும் சாம்ராஜ்யத்திற்கு இவள் கருப்பு புள்ளியாக மாறிவிடக்கூடாது என்று அப்படியே தொண்டையில் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு ,தன் முன்னால் வைத்திருந்த ஜூஸை எடுத்து குடிக்க போனவனுக்கு ஏனோ இது அவளுக்கு எட்டா கனி என்று தெரிந்ததும் அவனுக்கும் அது பிடிக்காமல் போக அப்படியே தள்ளி வைத்துவிட்டு போன ஞாபகங்கள்..
அவள் ஒவ்வொரு பேச்சிலும் சந்தோஷத்தின் சாரல் இதுவரை அவள் வாழ்க்கையில் விழுந்ததே இல்லை என்பதை மட்டும் தீத்தன் அறிந்து கொண்டான்...
கண்ணை மூடி இருந்தவன் பெருமூச்சு விட்டு மீண்டும் கண்ணைத் திறந்து தன் வேலையில் கவனத்தை செலுத்த பார்க்க அய்யகோ!!முடியவில்லையே..
அவளை விட்டு விலக வேண்டும் ஒதுங்க வேண்டும் தகுதி இல்லாத இடத்தில் காலை வைக்க வேண்டாம் என்று பலவாறு தன் இருதயத்திற்கு சொல்லிக் கொண்டாலும்.. மூளையும் , சிந்தனையும் அவளைத் தேடித் தேடி ஓட ... கடிவாளம் போட முடியாது நெஞ்சை குத்திக் கொண்டான்... அவன் காதலுக்கு தகுதி அவள் ஒரு பெண்ணாக இருந்தால் போதும், இவளோ, வேறு ஒருவன் மனைவி அந்தஸ்தில், தாய் அந்தஸ்தில் இருப்பதால் தான் காத தூரம் ஓடினான் ..
தீத்தன் மன புழுக்கம் தாங்காது அலைந்து திரிந்து இரவு வந்து தன் படுக்கையில் சட்டை கூட மாற்றாமல் அப்படியே குப்புற விழுந்தான்
ஆவுச் ஊஊஊஊ நெஞ்சில் ஏதோ குத்த குனிந்து பார்க்க அவளோடு ரகசியம் பேசுவதற்காக வாங்கிய லட்ச ரூபாய் போன் பல்லை காட்டியது..
ப்ச் "அதை தூக்கி வீசப்போனவன், அதன் திரையில் மிஸ்டு கால் கிடக்க யோசனையாக தன் சுட்டு விரலால் திறந்து பார்த்தான்.. ஏதோ புதிய நம்பர்...
அவளிடம் மட்டும் தான் இந்த போனை வைத்து பேசுவான் ...
யார் நம்பர் இது?? நான் பேசுனத வச்சு யாராவது பிளாக் மெய்ல் பண்றதுக்காக போன் போட்டு இருப்பாங்களோ மே பி இருக்கலாம் என்று போனை அப்படியே தூக்கி அருகே போட்டுவிட்டு தீத்தன் படுக்கையில் தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்க... கிர் கிர் என்று போன் ஒலி எழுப்பியது ... பட்டென்று கண்களைத் திறந்தவன் தலையை திருப்பி போனை பார்க்க மீண்டும் அதே நம்பரில் இருந்து அழைப்பு ..
இரிட்டேட்டிங் , இதையே பொழைப்பா வச்சிருக்காங்க போல இருக்கு , நல்லா வசதியானவன் கிடைச்சா பொண்ணுங்கள விட்டு பேச வச்சு பிளாக் மெயில் பண்ணி , காசு புடுங்குற கூட்டமாக இருக்கும்னு நினைக்கிறேன் இவளை பார்த்தா தப்பானவ போலவே தெரியல , எல்லாம் இவ புருஷனால வந்த வினையா இருக்கும் தப்பு செய்ய சொன்னா ஓங்கி மண்டையில ரெண்டு போடு போட்டுட்டு பிள்ளையை தூக்கிட்டு ஓடிப் போகாம, இவளும் இந்த தேவையில்லாத வேலையில கால வெச்சிருக்கா.. நல்லவேளை என்கிட்ட வந்து மாட்டினா இல்ல அவ நிலைமை என்று புலம்பிக்கொண்டே மீண்டும் அடிக்கும் போனை எடுத்தவன்...
எவனா இருந்தாலும் பரவாயில்லை பார்த்துக்கிறேன் என்று போனை ஆன் செய்து காதில் வைக்க
ஹலோ டிகே சார் இருக்கீங்களா?? என்ற வேரல் குரல் கேட்டு சப்த நாடி ஒடுங்கிப் போய் தீத்தன் எழும்பி அமர்ந்தான் அங்கே அவன் அம்மு அல்லவா பேசியது
ஹலோ ஹலோ டிகே சார் இருக்கீங்களா?.
ம்ம் தானாக உம் போட்டான்
" சார் நல்லா இருக்கீங்களா... உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே ஒரு வாரமா நீங்க ஃபோனே போடல நல்லா தானே இருக்கீங்க , எதுவும் பிரச்சனை இல்லல
"நல்லா தான் இருக்கேன்" தனக்காக அவள் பதறுவது பிடித்ததோ தானாக பதில் வந்தது...
"அப்பா !! மன்னிச்சிடுங்க சார் ஃபோன் உடைஞ்சு போச்சு அதான் போன் பேசல, கோவமா இருக்கீங்களா சார் .... போனே போடல, நான் நிதமும் நீங்க போன் போடுவீங்கன்னு காத்துக்கிட்டே இருந்தேன்... எப்படியாவது இந்த செய்தியை சொல்லிடனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் ... ஆனா நீங்க போனே போடலையே சார் அதான் உடம்புக்கு எதுவும் முடியலையோன்னு நினைச்சு பயந்து பக்கத்து வீட்டு அக்கா கிட்ட உங்க நம்பருக்கு போன் போட சொல்லி கேட்டு போன் போட்டேன்... ரொம்ப வேலையோ?
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்த பிறகு உடைந்து கிடந்த போனை பார்த்த அவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது... தவறு செய்வது அத்தனையும் கணவனும் அவளும், இதில் மூன்றாம் நபரான தீத்தன் என்ன செய்தான்.. பாவம் தானே பேசுவதற்காக இவ்வளவு பணத்தையும் கொடுத்துவிட்டு அவளை அசிங்கமாக அருவருக்க தக்க பேச்சுகளை பேச கூட உரிமை வாங்கி இருந்தாலும் டீசன்டாக பேசிய அவனை ஏமாற்றுவது மட்டுமல்ல இப்படி மரியாதை இல்லாத செயலை செய்வதும் தவறு என்று பட்டது..
தனக்காக காத்திருக்க வைப்பது தவறு என்று புரிந்தது..ஃபோன் போட்டு உண்மையை சொல்லி விடுவோமா என்று யோசித்தவளுக்கு இவ்வளவு பணத்தை கொடுக்கிறார் என்றால் கண்டிப்பாக பணக்காரனாகத்தான் இருக்க வேண்டும்..என்ன ஏமாத்திட்டியா என்று பிள்ளையையும் என்னையும் ஏதாவது பண்ணிட்டா சின்ன நரி கிட்ட இருந்து புலிகிட்ட மாட்டிக்கிட்டா என்ன பண்றது என்று உண்மையை சொல்ல வேறு பயம்.. ஆனால், எப்படியாவது அவனிடம் இதெல்லாம் வேண்டாம் சார் என்ன விட்டுடுங்க என்று சொல்லி பார்த்து விடலாம் என்று தான் போனை போட்டாள்
ஏதும் வேலை விஷயமா வெளியூர் போயிட்டீங்களா சார்
ஆமா வேலை விஷயமா வெளியே போய் இருந்தேன்..
"ஓஓஓ , மன்னிச்சிடுங்க சார் நீங்க போன் போட்டா மட்டும் தான் பேசணும்னு கடுமையா சொல்லி இருக்கீங்க அதையும் மீறி நான் போன் போட்டுட்டேன்னு தப்பா நினைக்காதீங்க... என்ன ஆச்சுன்னு பதறி போன் போட்டுட்டேன்...
"பரவால்ல" உண்மையாகவே அவள் தன்னை தேடினாளா, இல்லை கேசவன் போனை கொடுத்து பேச வைத்தானா..ஏதோ ஒன்று , ஒரு வாரம் இருந்த சமநிலையில்லாத மனநிலை அவள் பேசிய பேச்சில் சமமானது... இறுகிப்போய் கிடந்த உடலும் மனமும் இளகிப் போக அவளோடு பேசவே கூடாது ஒதுக்கி வைத்து விட வேண்டும் ஒதுங்கி போய்விட வேண்டும் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருந்த மன்னவன் அவள் ஒற்றைப் பேச்சில் சரணடைந்து சரணாகதி ஆகிவிட்டான்....
சார் இருக்கீங்களா ..
ம்ம் இருக்கேன் சொல்லு என்ற தீத்தன் தன் அபிஷியல் போனை எடுத்து இவள் பற்றிய விவரங்களை உடனே தனக்கு ஒன்று விடாமல் அனுப்புமாறு பிஏவுக்கு மெசேஜ் செய்துவிட்டு சாய்ந்து அமர்ந்தான்...
" சார் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்காதீங்க... இந்த வேலையில என்ன சேர்க்கும் போது இதோட வீரியம் தெரியல. இப்ப எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார் , இனிமே நாம ரெண்டு பேரும் பேச வேண்டாமே சார்.
உங்களுக்கு பேச்சுத் துணைக்கு ஆள் வேணும்னா வேற யார் கூடயாவது பேசுறீங்களா.. எனக்கு ஒவ்வொரு நாளும் கெதக் கெதக்குன்னு பயமா இருக்கு , மாட்டிகிட்டா அசிங்கமாகி போகும் சார்" வேரல் எப்படியோ நினைத்ததை தட்டு தடுமாறி கேட்டுவிட்டாள்
ஆனால் தீத்தன் பக்கத்திலிருந்து பதிலே வரவில்லை நீள நீள பெருமூச்சுகள் மட்டும்தான் வந்து கொண்டிருந்தது... காரணம் இன்னொரு மொபைலில் அவள் பற்றிய விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது..
அவள் பட்ட பட்டுக் கொண்டிருக்கும் வேதனை, மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்து மரண வேதனை அனுபவிக்க வைத்துக் கொண்டிருக்கும் கேசவனின் செயல், பிள்ளையின் காலை உடைத்து இருவரையும் ஆயுள் கைதியாக வீட்டில் அடைத்து போட்டு குறை வயிறு கஞ்சி கூட ஊத்தாமல் பட்டினியும், அடியும் உதையும் என்று வாங்கும் வேரல் வாழ்க்கை அந்த ஆறடி ஆண்மகனை அசையாமல் நிற்க வைத்தது ..
ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட ஏதோ சண்டை நடந்திருக்கும் போல இருக்கு சார், குழந்தையை அருவாள கொண்டு வெட்டி ரத்தமா போய் இருக்கு இவங்க தூக்கிக்கிட்டு ஹாஸ்பிட்டல் போய் இருக்காங்க பக்கத்து வீட்டுக்காரங்க சொல்றாங்க இவன்கிட்ட இருந்து அந்த பொண்ண யாராலையும் காப்பாத்த முடியாது, பக்கத்துல போனா நம்மளையும் அசிங்கப்படுத்துவான்னு எல்லாரும் ஒதுங்கி போறாங்க போல இருக்கு...
ஓகே நான் பாத்துக்குறேன் என்று பதில் அனுப்பியவன் நேராக நிமிர்ந்து அமர்ந்தான்... அந்த நிமிர்ப்பு சொன்னது அவன் முடிவெடுத்து விட்டான் என்று ...
இனி அவள் அவன் சொத்து, இது கள்ளக்காதல் என்றால் ஆம் அவன் கள்ளக்காதலன் தான், அவள் கள்ளக்காதலி தான்...
சில பொருத்தமான இதயங்கள் கண்டு கொள்ள தாமதமாவதால் கள்ளக்காதல் ஆகிவிடுகின்றனவோ??