வேரலை மேய்ந்த வேழம்15
Velam15

15 வேரலை மேய்ந்த வேழம்!!
காலையில ஒரு மீட்டிங் இருந்தது, அதை அட்டென்ட் பண்ணிட்டு வர லேட் ஆயிடுச்சு .. ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கியா என்று இறங்கி வந்த தீத்தன் அவள் தோளில் தூங்கிக் கொண்டிருந்த நிலாவை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு, பின் இருக்கையில் படுக்க வைத்தவன் ... மீண்டும் போய் காரை எடுக்க ..
இது எல்லாம் இவர்களுக்கு இடையே மிக சகஜமானது, வேலையில்லாத நேரம் நிலாவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு போவது, ஐஸ்கிரீம் தின்ன நடு இரவு ரவுண்ட் போவது என்று அவர்கள் இருவரும் பண்ணும் அய்சாட்டியங்கள் சில நேரம் பயத்தை கொடுத்தாலும்.. பல நேரம் மகள் முகத்தில் இருக்கும் சிரிப்பை கண்டு பயம் கூட நீங்கி போகும்...
நீயும் வரியா என்று முதல் நாள் கேட்க இல்லை என்று அவள் தலையாட்ட
"வந்துடாத அதைத்தான் சொல்ல வந்தேன், ஏன்னா தெருவுல உள்ளவங்க எல்லாம் உனக்கு ஏகப்பட்ட பட்டம் கட்டிடுவாங்க... ஏன்னா நீ ஊருக்காக தான வாழ்ந்துட்டு இருக்க , உனக்காக வாழலல்ல .. சோ வர வேண்டாம்... நான் நிலாவை மட்டும் கூட்டிட்டு போறேன் என்று அவள் கையில் இருந்து வெடுக்கென நிலாவை மட்டும் இழுத்துக் கொண்டு போய்விட்டான்... ஊர் என்ன சொல்லும் உலகம் என்ன சொல்லும் என்றே யோசித்து யோசித்து அவளுக்கு என்ன வேண்டும் என்றே யோசிக்க மறந்து போன பேதை கண்டு எரிச்சல் தான் வந்தது
வயசு என்ன ஆகுது , அதுக்குள்ள கிழவி ரேஞ்ச்சுல வாழ்க்கை முடிஞ்சிடுச்சு போல பேசுறா இவளை கரை சேர்த்துட்டா கண்ணை மூடிடுருவேன் சார் என்று ஒரு நாள் காரில் போகும் போது வாயை திறந்து விட நேரே லாரி மீது கொண்டு காரை விட போய்விட
அய்யோ அய்யோ சார் சார் என்று வேரல் அலர
நிலாவை நான் கரை சேர்த்துடுறேன் நீ போய் சேரு உலகத்துக்கு பாரமா எதுக்கு வாழ்ந்துட்டு இருக்க நானே கொன்னுடுறேன் என்ற தீத்தனை பீதியாக பார்க்க அவனோ கார் அலைக்கழித்ததில் பயந்து போய் அவன் தோளில் அழுத்தி வைத்திருந்த அவள் கையை உதட்டை பிதுக்கி பார்க்க
மன்னிச்சுடுங்க சார் என்று உடனே எடுத்துக் கொள்ள
அதை சட்டையை கசக்கி பிடிக்கும் போது யோசிச்சு இருக்கணும் என்ன பார்க்க பெரிய கிளைன்ட் வர்றான் சட்டையை பிடிச்சு கசக்கி வச்சிருக்க என்னவோ காருக்குள்ள முத்தம் கொடுத்துக்கிட்ட மாதிரி இருக்கு என் சட்டையை பார்த்தா
அப்படியா இருக்கு
அப்படித்தான் இருக்கு சட்டையில உள்ள கசங்கலை ஒழுங்கு மரியாதையா ஆபிஸ் போறதுக்குள்ள எடுத்து விடு ..
ம்ம் என்று ஆபிஸ் போகும் வரை அவன் சட்டை கசங்கலை நீவி நீவி பார்க்க இவனோ அவள் கை படும் போதைக்கு கண் சொக்கினான்...
என்ன சார் கசங்கல் போகவே மாட்டைக்கு
அது கிரஸ் சர்ட் நீ எவ்வளவு தேய்ச்சாலும் போகாது என்றுவிட்டு போனான்
அப்படின்னா
அப்படித்தான்னு அர்த்தம் குழம்பி போய் பார்க்கும் அவள் பார்வைக்கு தீவிர ரசிகன் குழப்பி விட்டே வேடிக்கை பார்ப்பான்...
அம்மா கடல் அப்படி இருந்தது கால்நனைக்க சூப்பரா இருந்துச்சு என்று கடற்கரை போய் விட்டு இரவு மகள் கடற்கரை பற்றி பேச... ஒருநாள் கூட கடலையே பார்க்காதவளுக்கு ஆசையாகவும் இருந்தது .. ஆனால் அவனோடு போகவும் மனம் இல்லை என்பதை விட பயம்.. அதுவும் அடுத்த நாள் போயே போனது ...
"அம்மா நாங்க பீச் போறோம்... இன்னைக்கு ஃபோட்ல கூட்டிட்டு போறேன்னு சார் சொல்லி இருக்காங்க மகள் ஆசையை கிளப்பிட
"ஓஓஓ
"சுண்டல் திண்ணுட்டு அவர் கூட ஜாலியா சுத்த போறேன்
"நானும் வரவான்னு கேளேன் .... என்று மகளிடம் தூது போக
"சார் அம்மாவும் வரட்டுமா ?
"அவளுக்கு வேலை இருக்கும் இவன் வேண்டுமென வெட்ட
"இல்லை சார் வேலை முடிஞ்சு சும்மாதான் இருக்கேன் .... வா வான்னா வர மாட்டா தெரியும்ல தோசையை திருப்பி போட்டு காரியம் சாதிப்பான்....
"வேற சேலை மாத்திட்டு வர லேட்டாகும்
"அப்போ இப்படியே வரவா?
"ப்ச் அப்போ உன் இஷ்டம்" என்றவன் மனது குத்தாட்டம் போட்டது அவள் அறிவாளா அவளுக்காக வாழ ஆசை வர வைப்பது தான் முதல் அம்பு , தன்னையே அவள் பரிசோதிக்க ஆரம்பித்து விட்டாள் அவன் காதலை கண்டிப்பா பரிசீலனை செய்ய ஆரம்பித்து விடுவாள் ..
நிலாவை அலையில் நனைய வைக்க இவள் ஒதுங்கியே நின்று கடலை ரசிக்க...
அலை பெரிய மேடம் வந்திருக்காங்கன்னு உன் பக்கம் வராது, நீதான் அது பக்கம் போகணும் வந்து நில்லு "என்று அவள் கையை இழுத்து தன் அருகே விட ..முதலில் தயங்கி அதன் பிறகு அய்யடா என்று தலையில் கை வைக்க வைத்து விட்டாள்
சார் சார் குளிக்கவா..
"ப்ச் நைட் டைம் வேணாம்
"அப்போ இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போவோமே
"வேரல் டைம் ஆச்சு
இன்னும் கொஞ்ச நேரம்
"வந்து தொலை" என்று குண்டுகட்டாக தூக்காத குறையாக தூக்கி காரில் போட்டான் ....
அவர் கூட போற நான் கூப்பிட்டா என்ன பார்க்க கூட வர மறுக்கிற என்று நைட் டிகே கேட்க ... எந்த நம்பிக்கையில அவர் கூட போன ?
எல்லா குழந்தையும் எந்த நம்பிக்கையில அப்பா கையை பிடிக்குது சார் "
"என்னது அப்பாவா? இவளால அப்பா ஆகலாம்னு பார்த்தா கொழுப்பை பாரு அப்பாவாம்ல....
"ஓஓஓ அப்போ எங்க கூப்பிட்டாலும் போவியா
"எங்க போனாலும் என்ன பாதுகாப்பா கூட்டிட்டு வருவார்னு நம்பிக்கை இருக்கு... என்றவள் பதிலுக்கு தானாக மீசையை முறுக்கினான்...
இப்படியே இவர்கள் கண்ணாம்பூச்சி வாழ்க்கை போய்க் கொண்டிருக்க..
அவன் மறைத்து வைத்த காதலுக்கு கண்டம் வந்தது ...
"பார்ட்டி இருக்கு கொஞ்சம் நல்ல ரீச் சேரீயா கட்டிட்டு வா... அந்த பர்புள் டிசைனர் சேரி இருக்குல்ல அது கட்டிட்டு வா
" பார்ட்டிக்கு நான் ஏன் சார்?
" என் கல்யாண பார்ட்டி கிடையாது, நீ ஓடி ஒளிய ..
பிசினஸ் பார்ட்டி சோ நீயும் வரணும்னு உனக்கு தெரியாதா,
"சரி சார் வந்துடுறேன் அதுக்கு ஏன் என்னமோ பேசுறீங்க
"என்ன
"ம்ஹும் ராத்திரி ரொம்ப நேரம் ஆகுமோன்னு கேட்டேன் ?"
"ஏன் , இங்க உனக்கு வெட்டி முறிக்கிற வேலையா
"எது சொன்னாலும் திட்டுனா எப்படி... என்று முனங்கி கொண்டவள்
"எத்தனை மணிக்கு வரனும் சார்
"பத்து மணி மேல ஆயிடும் பாப்பாவையும் ரெடி பண்ணி வச்சிடு நானே வந்து கூட்டிட்டு போய்டுறேன் என்று தீத்தன் மாலை அவளை விட்டு விட்டுப் போக..
"வயலட் நிற காட்டன் புடவை கண்ணாடி வளையல் , கவரிங் கம்மல் ஒரு கவரிங் செயின் என்று சுமாராக கிளம்பி நின்றாள்... இதுவே அவளுக்கு நெளிய வைத்தது ....
அம்மா அழகா இருக்க "
ம்ம் ...
ரொம்ப அழகா இருக்க
சும்மா இருடி எனக்கு ஒரு மாதிரி இருக்கு ,ஒழுங்கா சேலை கட்டலைன்னா உன் சார் வேற திட்டுவார் அதான் இதை எல்லாம் போட வேண்டி இருக்கு ... மகளுக்கு அவன் வாங்கி கொடுத்த ஆடை தான் தேவதை போல இருந்தாள்...
"அம்மா சார் வந்தாச்சு என்று காரை வி்ட்டு இறங்கிய அவனுக்கு கையை நீட்ட வேரலை பார்த்து கொண்டே வந்து அவள் மகளை கை நீட்டி தூக்கியவன் அவள் சுமார் அழகில் கூட எச்சில் விழுங்கினான் ..
ஸ்ப்பா எத்தனை நாளைக்கு இந்த அவஸ்தையோ தெரிலையே பின் இருக்கையில் இருந்த அவளை லட்சம் முறை கண்ணால் களவாடி விட்டான் ...
சக முதலாளிகளோடு கால் மேல் கால் போட்டு தீத்தன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க, இவள் தனியாக கிடந்த சேரில் போய் தன் மகளோடு அமர்ந்து கொண்டாள் ...
தீத்தன் பேச்சு நடுவே பேரரை அழைத்து ஏதோ விரலாட்டி சொல்ல ... சுட சுட அவளுக்கு சாப்பாடு வந்து மேஜையில் உட்கார
"இல்ல சாரும் வரட்டும் சேர்ந்தே சாப்பிடறோம்னு சொல்லிடுங்க என்றதும் பேரர் அப்படியே அதை அவன் காதில் சொல்ல ..
ம்ம் சிறிய புன்னகையோடு சரி என்று தலையாட்டியவன் அவளை எட்டி பார்க்க... அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்
சாப்பிடலையா என்று இவன் கேட்க
"இல்ல சேர்ந்தே சாப்பிடலாம்" என்று அவளும் ஜாடையால் சொல்ல
ஓகே என்று கண்ணால் ஜதி காட்டியவன், பேசி முடித்துவிட்டு வேரல் அருகே வந்து கோர்ட்டை கொடுக்க... வேரல் அதை பவ்யமாக வாங்கி மடியில் போட்டுக் கொண்டாள்
ஏன் சாப்பிடல ??
"சாயங்காலம் தான் சீனி கிழங்கு சாப்பிட்டேன் சார். அதான் பசிக்கவே இல்ல... சரி உங்க கூடவே சேர்ந்து சாப்பிடலாம்னு காத்துட்டு இருந்தோம்... எப்படியும் நீங்க தனியாளா உட்கார்ந்துதான சாப்பிடணும் அதான் "
"சார் சாப்பிட வாங்களேன் சேர்த்து சாப்பிடலாம் என்று கிளைண்ட் அழைக்க
"இல்ல என் பிரின்சஸ் காத்துட்டு இருக்கா, அவளோட சாப்பிட்டுக்கிறேன் என்று அவனுக்கு கை ஆட்டிய நிலாவை காட்ட கண்ணோ அவன் இளவரசியை தான் பார்த்தது ...
எனக்காக காத்திருக்கா என்பதே இருப்பு கொள்ள வில்லை ஓடி வந்து விட்டான்
அவனோடு போக வர அவன் வேலைகளை செய்ய என்று அவன் அருகாமைக்கு சங்கடமில்லாமல் முழுதாக பழகி விட்டாள் அவ்வளவு தான் ... அதை தாண்டி காதல் எல்லாம் அந்த பக்கி யோசிக்கவே செய்யாது ..
தீத்தன் அவள் அருகே வந்து உட்கார...
சார் எனக்கு தோசை மட்டும் போதும்
ப்ச் அதை சாப்பிட எதுக்கு இவ்வளவு தூரம் வரணும் ... இதெல்லாம் நல்லா இருக்கும் சாப்பிடு என்று அவளுக்கு வித்தியாசமான சாப்பாட்டை தட்டில் எடுத்து வைத்து கொடுத்தான் சாப்பிடும் முறையையும் சொல்லிக் கொடுத்து
"இப்படி சாப்பிடு செம டேஸ்டா இருக்கும் இது என்னோட ஃபேவரைட்...
"நிலாவுக்கு சாப்பாடு அள்ளி கொடுத்துட்டு சாப்பிடவா "
"ப்ச் , அவளை இன்னும் நீ சின்ன புள்ளன்னு நினைச்சுகிட்டு இருக்க . வயசு நாலு ஆகுது பாப்பாவே சாப்பிடுவா பாப்பா சாப்பிடு ..
அவளுக்கும் சாப்பிட கொடுத்துவிட்டு அவனும் சாப்பிட ஆரம்பித்தான்...
அவர்கள் யாரையும் பார்க்கவில்லை , ஆனால் அங்கே சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியாதே...
தீடீரென மழை வெளுத்து வாங்க
'சீக்கிரம் நட காருக்கு போயிடலாம்
ம்ம் கால் தெத்த அவன் பின்னால் ஓடிய வேரல் கால்கள் தடுக்கி முன்னால் நடந்து கொண்டிருந்த தீத்தன் மீது சாய
ஏய் ஏய் என்று திரும்பி அவளை இடையோடு பிடித்து நிறுத்த அந்த இருட்டில் பளீர் பளீர் என்று ப்ளாஷ் அடித்தது
பார்த்து வர மாட்டியா தன் மீது வந்து மோதிய அவள் நெருக்கத்தில் எப்போடா இதுக்கு விடிவு காலம் வரும் என்று தீத்தனுக்கு தோன்றி விட்டது ...
"இல்லை சார் சகதி அதான் .. என்றவளை பொறுமையாக நகர்த்தி விட்டவன்...
"பொறுமையா வா" என்று நடந்த தீத்தன் முகம் சிவந்து போய் இருந்தது அவள் இடையை தொட்ட கைகளும் அவளை இவ்வளவு நெருக்கமாக அணைத்ததில் எழும்பும் ஆண்மையை அடக்க முடியாது முகத்தை திருப்பி கொண்டான்
எதாவது முடிவு பண்ணியே ஆகணும் எத்தனை நாளைக்கு இவளை யாரோ போல கடக்க என்றவன் எதுவும் செய்யாமலே அதற்கான விடியல் தொடங்கியது
வேரலை அணைத்து பிடித்தது போல தீத்தன் நிற்க அந்த செய்தி தான் பிசினஸ் மெக்கசின் எங்கும் , தொலைக்காட்சிகளும் அதை விட்டு வைக்காது ஒலிபரப்ப..
அவனுக்கு இது சுக செய்தி
அவளுக்கு இது துக்க செய்தியே...