வேரலை மேய்ந்த வேழம்13
Velam13

13 வேரலை மேய்ந்த வேழம் !!
சார்
சார்
சொல்லு நிலா
இது கண்ணாடியா இதுல பார்த்தா கலர் கலரா தெரியுமா என்று நிலா அவன் கண்ணாடியை அவள் எடுக்க போக
"நிலா என்ன இது சும்மா இரு , உனக்கு அடி காணாது , கேட்காம அடுத்தவங்க பொருளை எடுக்கிறது என்ன பழக்கம் ஹான் என்று வேரல் மகள் கையில் ஒரு அடி போட
நான் அடுத்தவனா ??என்று இவனுக்கு சுர் என்று வர
"ப்ச் அவ குழந்தை எதுக்கு திட்டுற ... கண்ணாடி வழியே பின்னால் அவன் பார்வை அவளை தீயாட சுட்டது...
இல்லை சார் அது
எனக்கு எல்லாம் தெரியும் , பிள்ளையை திட்டுற வேலை வச்சிக்காத, இந்தா பேபி நீயே வச்சுக்க என்று தாய் திட்டில் உதட்டை பிதுக்கிய குழந்தை தலையை தடவியவன்
வேண்டாம் சார்
"அவ கிடக்கிறா மடச்சி, நீ வாங்கிக்க ப்ச் குழந்தை கண்ணில் அவனே போட்டு விட ...
"ஐ அம்மா அழகா இருக்கா ??என்று குழந்தை துள்ளி கொண்டு தாயை பார்க்க
ம்ம் என்றவள் அமைதியாக அவர்கள் போடும் அரட்டையை பார்த்து கொண்டிருந்தாள்... தீத்தனோ மகளோடு பேசி கொண்டே கண்ணாடியில் தெரியும் அவள் முகத்தையும் தன் முகத்தையும் ரசித்தவன்
செம மேட்சா இருக்கே, போனை எடுத்து அவளுக்கு தெரியாது மூவரையும் சேர்த்து ஒரு போட்டோவும் எடுத்து கொண்டான்..
ஒரே நாளில் மகள் முகத்தில் அவள் இத்தனை நாள் காண தவம் கிடந்த அழகிய புன்னகையை கொண்டு வந்திருந்தான் நாயகன் ...
தன் தாயை தவிர இந்த உலகத்தில் அவளுக்கு வேறு நாதியே இருந்தது இல்லை...
அம்மா அம்மா என்று எங்கே போனாலும் தவழ்ந்து தவழ்ந்து தன் தாயின் காலை வந்து பிடித்துக் கொள்ளும்... நிலாவிற்காக தானே எத்தனை ரணங்களையும் சகித்துக் கொண்டு கிடந்தது ... மகள் கலகலத்து சத்தம் வர சிரிப்பாள் என்பதே இப்போதுதான் அவளுக்கு தெரிகிறது... தன்னையும் மீறி கன்னத்தில் கை வைத்து தன் மகளை ரசித்துக் கொண்டிருந்தாள்... சிரிப்பை கொடுத்தவனையும் பார்க்க மறக்கவில்லை... அவன் தெய்வமாகத்தான் தெரிந்தான் ..
இப்போ வேகமா போவோமா? பாலத்து மேல போலாமா வானத்துல பறக்குற மாதிரி இருக்கா என்று வேகத்தை கூட்டி குறைத்து என்று நிலாவோடு பொழுது போக்கிக் கொண்டு இருந்தான்...
"சார் வேலைக்கு நேரம் ஆகுதே," பத்து நிமிடத்தில் போகும் ஆபிஸூக்கு ரெண்டு மணி நேரமாக சுற்றினர்..
இன்னும் கொஞ்சம் போங்க சார் என்று நிலா ஆசைப்பட அவனும் அவளுக்கு அலுக்கும் வரை வண்டியை ஓட்ட ..
நீயா முதலாளி ?
இல்லை சார்
நீயா சம்பளம் கொடுக்கிற?
இல்லை சார்
நீயா இலாபம் பார்க்கிற?
இல்லை சார்
நீயா கம்பெனி நடத்துற ?
இல்லை சார் நீங்க எப்ப வேணும்னாலும் ஆபிஸ் போகலாம்.. அது உங்க இஷ்டம் தான் தெரியாம வாயை திறந்துட்டேன் ...ஆபிஸ் வந்தா எழுப்பி விடுங்க
ஏன் உனக்கே எழும்ப தெரியாதா...
என்ன பேசினாலும் திட்டுனா எப்படி?
"நீ திட்டுற மாதிரியே பேசுறேன்னு அர்த்தம் ஊரை வேடிக்கை பார், எப்போ தோணுதோ அப்போ கொண்டு போய் ஆபீஸ்ல விடுவேன்,என்றதும் நிலா கிளுக்கி சிரிக்க அவனை முறைக்க முடியாது மகளை முறைத்து விட்டு
நமக்கு என்ன வந்தது , என்று கையை கட்டி கொண்டு சாய்ந்து அமர்ந்து கொண்டாள்...
வண்டி டிராஃபிக்கில் நிற்க , சிறுவர்கள் பலூனை கொண்டு வந்து ஜன்னலைத்தட்ட சார் பலூன் என்று நிலா அவன் தோளை தட்ட...
"வேரல் அந்த கோட் பாக்கெட் உள்ள கேஸ் வச்சிருப்பேன் எடுத்துக் கொடு" என்ற தலையை திருப்பி வேரலை பார்க்க ... ரோட்டை ஆஆ என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள்.. தோளில் தட்ட
ஹான் என்ன சார் கேட்டீங்க
"கனவு எதுவும் கண்டுட்டு இருக்கியா கோட்ல பணம் வச்சிருக்கேன் எடுத்து கொடுன்னு சொன்னேன்..
ம்ம் கோட்டை தடவி பணத்தை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு மீண்டும் கன்னத்தில் கை வைக்க போக ... அவனுடைய ஆண்மை ததும்பும் நறுமணம் அவள் கையில் ஒட்டிக் கொண்டது... சட்டென்று பதறி தன் சேலையில் அந்த நறுமணத்தை துடைத்துவிட்டு மீண்டும் முகர்ந்து பார்க்க... இனி அவன் வாசனை மட்டும் இல்ல அவனும் அவளை விட்டு நகர மாட்டான் என்று அவளுக்கு தெரியாதே ...
நிலாவுக்கு கை நிறைய பலூனை வாங்கி கொடுக்க..
"சார் அம்மா இதுக்கும் திட்டுமே" என்று நிலா அவன் காதில் கிசுகிசுக்க
"அவ ஏதாவது திட்டினா, என்கிட்ட சொல்லிக் கொடு ஒரு பிடி பிடிச்சிடலாம்
"ம்ம , நான் இங்க வந்து உட்கார்ந்துக்கவா என்று முன் சீட்டை காட்ட ..
"இனிமே இது உன் இடம்தான் ஓடிவா" என்று அவளை வேரல் அனுமதியே இல்லாமல் பிடுங்கி , முன் சீட்டில் உட்கார வைத்து சீட் பெல்ட் போட
"சார் சாய்ஞ்சு விழுந்துட கூடாது
"அவள பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு
"ஹான்
"அதாவது கார்ல இருக்கும் போது அவளை பாத்துக்க வேண்டியது என் பொறுப்புன்னு சொன்னேன் ... உன் வேலையை நீ பார்" போனா போகுது என்று ஆபிஸ் வந்து சேர்ந்தார்கள்...
"வேரல் கோட் எடுத்து கையில வச்சிக்க போகும் போது எடுத்துட்டு வா "
ம்ம் சரி சார் காரை வி்ட்டு இறங்கி வேரல் மகளை தூக்க போக அவளுக்கு முன்னே தீத்தன் நிலாவை குனிந்து தூக்கி கொண்டவன்.
நான் கொண்டு போய் நிலாவை விட்டுட்டு சில இன்ஸ்ட்ரெக்சன் சொல்லிட்டு வர்றேன், நீ சாப்பாடு எடுத்துட்டு வந்தியா?
ஆமா சார்
என் ரெஸ்ட் ரூம் எங்கேன்னு பிஏக்கிட்ட கேட்டுட்டு போய் எல்லாத்தையும் எடுத்து வை வர்றேன்
ம்ம்...
விட்டுட்டு வந்து சாப்பிடுறேன்
"ம்ம்
"உனக்கு ம்ம் தவிர வேற எதுவும் தெரியாதா
"ம்ம் ம்ஹூம்... தெரியும் சார்..
"பேசினா வாய்ல எதாவது சுளுக்கு வந்துடுமா
"இல்ல சார்
"ஒழுங்கா பேசி பழகு ...
"சரி சார்
சுத்தம் இவளை திருத்த நான் ஐஞ்சு நேரம் சோறு திங்கணும் போல என்று புலம்பி கொண்டு தீத்தன் நிலாவை அழைத்து கொண்டு போக
பேசுவியா பேசுவியான்னு அந்தாளு வாய் மேலேயே மிதிச்சார் ,இவர் பேசு பேசுன்னு திட்டுறார் ஒவ்வொரு ஆம்பளையும் ஒவ்வொரு ரகம் போல என்று போகும் மகளுக்கு கைகாட்டி கொண்டு நின்றவள் கையில் வைத்திருந்த அவன் கோட்டில் போன் அதிர
அய்யயோ போனை சார் வச்சிட்டு போயிட்டாரே எதுவும் முக்கியமான போனா இருந்தா என்று வேரல் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தாள்..
பிசியோதெரபி டெய்லி மஸ்ட்.. அவ என்ன கேட்டாலும் சாப்பிட கொடுக்கணும், அழ விட கூடாது ... ஒழுங்கா பாத்துக்கல தொலைச்சுடுவேன்.... என்று நிலாவை பார்த்து கொள்ள போட்டிருந்த பணியாளர்களுக்கு சிலதை சொல்லி கொண்டு நின்றவன் சாக்லெட் கையில் சாறு வடிய தின்று கொண்டிருந்த நிலா வாயை துடைத்து கையை துடைத்து அவள் கழண்டு கிடந்த ஜடையை சரி செய்து கொண்டிருக்க வாசலில் வந்து நின்றவள் பார்வை மகளை தாண்டி அவனை ஒரு விசை அழுத்தமாக பார்த்தது ....
"கால்ல செருப்பு அழுத்தது என்று நிலா அவன் சட்டை காலரை இழுத்து கூற ,
"ஓஓஓ கழட்டிடடவா
"ம்ம் என்றதும் தீத்தன் குத்த வைத்து உட்கார்ந்து நிலா செருப்பை கழட்ட போக.. அவன் செருப்பை கழட்டுவதா?? வேரல் பதறி போய் ஓடி வந்து
"சார்,நீங்க போய் அவ செருப்பை கழட்டக்கிட்டு" என்று அவன் கையை பிடித்து தடுக்க போக அவளை அண்ணாந்து பார்த்த தீத்தன்
"உன்ன என்ன சொன்னேன் ??
"இல்லை போன் அடிச்சது அதான்
"அந்த போனை எடுத்து பேசலைன்னா என் உயிர் போயிடுமா ??"
"இல்லை .... எதுவும் முக்கியமானதா இருக்குமேன்னு" என்று இழுத்தாள்
"என்னோட பெர்சனல் லைப் தான் முக்கியம் , மத்தது எல்லாம் நெக்ஸ்ட் தான் அவளுக்கு எப்படியும் புரியாது என்று சலித்துக் கொண்டவன் ..
"அங்க நில்லு வர்றேன்
"செருப்பை நான் கழட்டி விடவா
"உனக்கு ஒரு தடவை சொன்னா கேட்காதா காதுல எதாவது பிரச்னையா??" அவ்வளவு தான் காத தூரம் போய் நின்று கொள்ள பார்வை என்னவோ அவன் மீதுதான் ...நிலா காலை தூக்கி தன் க்ரீம் கலர் பேண்ட் மீது வைக்க பேண்ட் அழுக்காகியது... ஆனாலும் அவன் அதை கண்டுகொண்டது போல தெரியவில்லை.. பதமாக அவள் காலை செருப்பை விட்டு நகட்டி நைந்து கிடந்த காலை பிடித்து முத்தம் கொடுத்தவனுக்கு தொண்டை அடைக்க பிள்ளை பாதத்தில் முத்தம் வைத்தான்... தாயும் மகளும் இந்த நேசத்தை கண் சிமிட்டாது பார்த்தனர்...
எல்லாம் சரி பண்ணிடுவேன் சரியா?? என்று அவன் கூற குழந்தை புன்னகையோடு தலையசைக்க அங்கே நின்றவள் தலையும் தானாக சரி என்று அசைந்தது....
போகலாமா ??
ம்ம் சரி சார் ... அவள் தடுமாற்றமாக அவன் பேண்ட்டில் பட்ட அழுக்கை பார்க்க
என்ன ?
இல்லை அழுக்கு சார்...
ஓஓஓ போன் வந்ததுதுல்ல அதை கொடுத்துட்டு இதை துடைச்சு விடு என்று டஸ்யூவை அவள் கையில் கொடுத்து விட்டு போனை வாங்கி காதில் வைக்க
நானா என்று அவள் அதிர்ந்தாலும் போனில் பிசியாகி விட்ட அவனிடம் என்ன சொல்வது புரியவில்லை ... அழுக்கான பேண்ட் வேறு அவளை ஏதோ செய்ய ..வேரல் குனிந்து நின்று அவன் பேண்டை துடைத்து விட ஆரம்பிக்க , போனில் பேசி கொண்டிருந்த தீத்தன் தன் தொடையில் அவள் விரல் பட்டு கூச சட்டென்று குனிந்து பார்த்தான் ... காரியமே கண்ணாக அவள் துடைத்து விட... அவன் கைகள் அவள் தலையை தடவி விட போக
சார் முடிச்சிட்டேன் என்று வேரல் அண்ணாந்து பார்க்கவும்
ப்ச் என்று தன் கையை இறுக்கி கொண்டான்
இனிமே எல்லா போனையும் என்கிட்ட கொடுக்க கூடாது போன் வந்தா எடுத்து பேசு"
"நானா
நானா நானான்னா வேற எவளை கூட்டிட்டு வந்து இதை செய்ய சொல்ற, நீதான வலது கை
"ம்ம்
"வலது கைன்னா பொண்டாட்டி மாதிரி
"பொண்டாட்டியா அவள் வாயை பிளக்க
"ப்ச் பொண்டாட்டி மாதிரின்னு உனக்கு புரிய சொன்னேன் .. உன்ன மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்தா கிழிஞ்சு தான் போகும்... எனக்கு எல்லாம் நீதான் செய்யணும் புரியுதா ?
ம்ம் அறை வந்து சேரவும் வரிசையாக போன் வந்து சாட
எல்லாத்தையும் அட்டன் பண்ணு முக்கியம்னா மட்டும் எங்கிட்ட கொடு
கடவுளே என்னத்த பேசன்னு தெரியலயே என்று அவளுக்கு அல்லு விட
ஏன் யார் நீங்க என்ன விஷயம்னு கூட பேச வராதா ??
"வரும் ஆனாஆஆஆஆஆ தீத்தன் போனை அட்டென் பண்ணி லவுட் ஸ்பீக்கரில் போட்டு அவள் காதில் வைத்து விட்டு போய் மேஜையில் அமர்ந்து விட
தத்த தத்த என்று தந்தி அடித்தவள்
சார் இருக்காங்களா நான் அன்னை இல்லம் டோனேசனுக்காக கேட்டிருந்தேன் அவள் அவனை
பார்க்க சாப்பிடுவது போல கை காட்டியவன் இப்ப வேண்டாம் என்று சாடை செய்ய ..
சார் வேலையா இருக்காங்க ? என்றவள் பேச்சை மெய்மறந்து பார்த்தான் ..
மதியம் தான் சாரு ஓய்வு ஆவார், அப்போ பேசுறீங்களா??
ஓஓஓ அப்படியா
ம்ம்
சரிம்மா அப்போ பேசுறேன்
ம்ம் சரிங்க சார் ...
நீங்க யாரும்மா?
நான் சாரோட என்று அவனை நோக்கி என்ன சொல்லணும் என்பது போல பார்க்க
பிஏ என்று உதட்டை அசைத்தான்
ஹான் பிஏ பிஏ சார் ...
ஓகேம்மா பிறகு பேசுறேன் என்று வைக்க
"அய்யா சார் நானே பேசிட்டேனே" என்று குழந்தை போல குதித்த அவள் உற்சாகம் அவனுக்கும் ஒட்டி கொண்டது..
அவளையே ஒரு தாலியால் இழந்து விட்டாள்
பேச்சு, சுதந்திரம் , சிரிப்பு பயம் இல்லாத உலகம் எல்லாவற்றையும் மீட்டு கொடுப்பதுதான் அவன் அழகிய காதல் தர போகும் பரிசு..
விலை மதிப்பு இல்லாத காதல் பரிசு !!