வேரலை மேய்ந்த வேழம்12
Velam12

12 வேரழை மேய்ந்த வேழம் !
எல்லா காலையும் இன்னைக்கு என்ன எல்லாம் அனுபவிக்க போறோமோ என்று தாயும் மகளும் பயந்து கொண்டே விடியலை எதிர்நோக்கி காத்திருப்பார்கள்... ஆனால் இன்று தான் உண்மையாகவே அவர்களுக்கு உதயம் ஆகி இருக்கிறது போலிருக்கிறது..
காலையிலேயே படுக்கையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த தாயின் முகத்தில் முத்தம் வைத்த நிலா
அம்மா"
"ம்ம்
""அம்மா" எப்போதும் கனவில் கூட கேசவன் வந்து அரக்கன் போல அவளை அடித்து உதைப்பது தான் வரும் ஆனால் நேற்று வேரலுக்கு வந்த கனவு வித்தியாசமானது ...
கேசவன் வேரலை அடிக்க ஓட, இவள் அவனுக்கு பயந்து மகளை தூக்கி கொண்டே கடற்கரை மணலில் கால் புதைய பின்னால் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஓடினாள்
"எங்கடி ஓடுர நில்லு, கையில கிடைச்ச செத்த என்று எட்டி பிடிக்கும் தூரத்தில் அவன் வந்து விட , தீடீரென புழுதி பறக்க ஒரு வெள்ளை நிற குதிரை ஓடி வந்தது ... அதன் மீது முகம் மறைத்த சல்லடை துணி , கண்கள் மீண்டும் தீ பிழம்பாக எரிந்து நின்றது.. நீள உடல், ராஜ உடையில் ஒருவன் குதிரை மீது அமர்ந்து அதை லாவகமாக இயக்கி அவளே நோக்கி பாய்ந்து வந்து ஓடி வந்தவன், அவளை ஒரு கையால் தூக்க , இவள் பதறி நிலாவை நிலத்தில் விட்டுவிட , இன்னொரு கை கொண்டு பிள்ளையை தூக்கி எடுத்து தன் மடியில் வைத்து கொண்ட அவன் அவளை கை கொண்டு பிடிக்க வந்த கேசவன் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி போட்டுவிட்டு...
"இவ என் பிரின்சஸ், இது என் லிட்டில் பிரின்சஸ் இனி இவங்க எனக்கு சொந்தம் , பக்கத்துல வந்த கொன்னு போட்டுட்டு போயிடுவேன், மைண்ட் இட்"
"நான் இருக்கேன்டி "என்றவன் குரல் எங்கோ கேட்டு ஆறுதல் அடைந்த குரல் ,அவளை இடையோடு அழுத்தி பிடித்து பாதுகாப்பாக அவன் நெஞ்சில் சாய்த்து கொண்டு அந்த குதிரை பறந்து போக, வேரல் அவன் யார்?? என்று பார்க்க திரும்பி பார்த்தவளை என்னடி என்று புருவம் உயர்த்திஅவன் நோக்க அவள் கைகள் அவன் முகம் மறைத்த சல்லடை துணியை நீக்க போக
அம்மா அம்மா எழும்பு" என்று மகள் உசுப்புய் ஒலியில் திடுக்கிட்டு முழித்தாள்...
ச்சை கனவா ? ஆனா அந்த கண்ணை எங்கேயோ பார்த்து இருக்கேனே , அதோட அந்த குரல் எங்க எங்க ம்ஹும் நியாபகம் வர மறுத்தது..
அம்மா சூரியன் வந்துடுச்சு வேலைக்கு கிளம்பலையா ..
ஹான்
"என்னம்மா இன்னைக்குற் கனவுல அந்தாள் வந்தானா ??
"ம்ஹூம் இன்னைக்கு ஒரு ராஜா வந்தார் உன்னையும் என்னையும் காப்பாத்தி குதிரை மேல தூக்கி வச்சிக்கிட்டு பறந்து போனார் .... அந்த கண்ணை எங்கேயோ பார்த்து இருக்கேனே"
"பிறகு யோசிங்க, வேலைக்கு போகணும்ல சீக்கிரம் கிளம்புங்கம்மா...
"அட ஆமால்ல
"ம்ம் , சீக்கரம் போவோம், அங்க ரொம்ப ஜாலியா இருக்கும் காலைல வந்து அங்கேயே சாப்பிட்டுக்க சொல்லி இருக்காங்க... பூஸ்ட் எல்லாம் தருவேன்னு சொல்லி இருக்காங்க, அதனால எனக்கு வீட்ல எந்த சாப்பாடு வேண்டாம் என்று பெரிய மனுஷி போல் சொன்ன மகளை நெட்டி முறித்த வேரல்
அப்படியா, இனிமே கடவுளுக்கு நன்றி சொல்றியோ இல்லையோ நம்ம முதலாளிக்கு காலையில முழிச்சதும் கடவுள் கிட்ட வேண்டிக்க சரியா??
"ஆமாம்மா அந்த கடவுளை விட நம்ம முதலாளி தான்
நமக்கு பெரியவர்.... எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு கார்ல எல்லாம் கொண்டு வந்து வீட்ல விட்டுட்டு போனாருல, நல்ல மனுஷன் இல்லம்மா..
"ம்ம் பெரிய மனுசன்னு செயல்ல காட்டுறார் ஆனா வாய்தான் , வண்டு போல குடைஞ்சு எடுத்துடுவார் என்று சிரித்துக் கொண்டே மகளை குளிப்பாட்டி உடை அணிவித்து திண்ணையில் அமர வைத்தவள்...
நேற்று இரவு காரை விட்டு இறங்கும்பொழுது அவன் கேட்ட கேள்வி திடீரென்று மண்டையில் உதித்தது...
"உனக்கு மீன் குழம்பு வைக்க தெரியுமா...
"ஆமா சார் நல்லா வைப்பேன்
"ஓஓ என்ற தீத்தன் தன் பாக்கெட்டை தடவி நூறு ரூபாயை எடுத்து அவள் கையில் கொடுத்தவன்..
"நாளைக்கு காலையில இட்லியும் மீன் குழம்பு வேணும் சாப்பிடணும் போல தோணுது ... வச்சுக் கொண்டு வந்துடு என்று வீட்டில் இறக்கி விட்டது ஞாபகம் வர ... அருகே இருந்த மீன் மார்க்கெட்டில் மீனை வாங்கிக் கொண்டு ஓடி வந்து வீட்டு வாசலில் உட்கார்ந்து கழுவிக் கொண்டிருக்க
"வாழ்ந்தா இவள மாதிரி வாழனும்டி, ஒரே நாள்ல குபேரன் பார்வையில் பட்டுட்டா போல" பக்கத்தில் குழாய் அடியில் நின்ற பெண்களின் பேச்சு அவள் காதில் விழுந்தது..
"பின்ன கார்ல வந்து இறக்கி விடுவது என்ன , ஒரே நாள்ல புது சேலை , புது சட்டைன்னு மினுக்கிறது என்ன
"அதான பார்த்தியா , சோத்துக்கே வழியில்லாதவளுக்கு பவுசை பாரேன்
"ம்ம் திண்ணையில கிடந்தவனுக்கு திடீர்னு கல்யாணம்ங்குற மாதிரி ,இத்தனை நாளா ஓரமா கிடந்தா, உடம்ப காட்டி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா போல இருக்கு ... நாக்கில் நரம்பு இல்லாமல் பேசும் மனிதர்களுக்காக அவள் தான் தலை குனிய வேண்டியது இருந்தது.. யார் பேச்சையும் காதில் கேட்காதவளாக
"நான் சரியா இருக்கேன் சரியா இருப்பேன்" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், மீனை உரசி கழுவி பக்குவமாக மீன் குழம்பை வைத்து இட்லியையும் அவித்து அவனுக்கு இருந்ததிலேயே நல்ல டிபன் பாக்ஸ் ஒன்றில் அடைத்துக் கொண்டு இருவருமாக நடக்க ஆரம்பிக்க
"அம்மா
"ம்ம் சொல்லு நிலா
"நேத்து மாதிரி அந்த சார் வண்டியில வந்து கூட்டிட்டு போனா எப்படி இருக்கும் ??
"பாப்பா நம்ம இடம் எப்பவும் மறக்க கூடாது, அவர் செய்றார்னு நாம எல்லாத்தையும் அவர்கிட்டேயே எதிர்பார்க்க கூடாது புரியுதா, அவர் நம்மள பத்தி என்ன நினைப்பார் ? மகள் முகம் பிரகாசமாக கையை ஆட்டி யாரிடமோ நிலா பேச ...
"யார்கிட்ட கையை காட்டுறா" என்று வேரல் திரும்பி பார்க்க தீத்தன் கார்தான் அவர்கள் அருகே உரசி கொண்டு நின்றது... அவள் அருகே ஒதுக்கி கொண்டு வந்து வண்டியை நிப்பாட்டினான்.. இனி அவன் புல் டைம் ஜாப்பே லவ்வாங்கி பண்ணுவதுதானே... இவளை உசார் பண்ணியே தீரணும் என்று தீயாக வேலை செய்தான்..
அம்மா நம்ம சார் வந்தாச்சு....
ப்ச் வேற வேலையை வந்திருப்பார் நிதமும் எல்லாம் நம்மள அவர் வண்டியில கூட்டிட்டு போக மாட்டார் கூட்டிட்டு போனாலும் போக கூடாது ...
போம்மா என்னை தூக்கிட்டு எவ்வளவு தூரம் தான் நீ நடப்ப , பேசாம சார் கூடவே போகலாம் ... அன்று மகளை வயிற்றில் சுமந்தாள் கால் உடைந்த பின்பு இடையில் சுமக்கிறாள் அவள் பாரம் மகள் மட்டுமே அறிவாள்...
நிலாஆஆஆஆ
சரிம்மா .... என்று அவள் முகத்தை சுருக்கி காரை பார்க்க... கார் ஜன்னலை திறந்தான் தீத்தன்...
இரவு அவளோடு ரகளை பண்ணி பேசும் தீத்தன் காலை கடுகடு சுக்கான் சட்டிதான்... அது என்னவோ வேலைக்கு வந்து விட்டால் கடுமை சூழ்ந்த முகமாக மாறிவிடும் .. அவளுக்கு தன்னை பற்றி புரிய வேண்டுமே எல்லா நேரமும் அவளை கொஞ்சி தோளில் சுமந்தால் ஒரு நாள் அவளுக்கும் அலுத்து விடும் , அவனுக்கும் அலுத்து விடலாம்... அவன் இயல்பை அவள் கற்று கொள்ளட்டும் ... காலை இப்படி தான் இருப்பேன் ராத்திரி அப்படித்தான் இருப்பேன், ரெண்டையும் பழகிக்க என்று இருமுகம் அதை தெளிவாக அவளுக்கு புரிய வைக்க பார்க்கிறான்...
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டாலே காதலில் நிலைத்து நிற்பது எளிது...
தீத்தன் நேர்த்தியான ஆடையில் மின்னினான்.. அதுவும் தேடி தேடி அவளுக்காக அணிந்து கொண்டு வந்திருந்தான்... பச்சை நிற சட்டை க்ரீம்
கலர் பேண்ட் போட்டிருந்தான்... பின் இருக்கையில் க்ரீம் கலர் கோட் கிடந்தது , கூலர்ஸை கழட்டி தலை மீது வைத்தவன் ..
"ஹாய் பேபி என்று நிலாவை பார்த்து கையாட்ட
"வணக்கம் சார் என்று நிலா சல்யூட் அடிக்க
"சோ ஹூயூட் ... உன் பேர் என்ன சொன்ன வேரலா பேரலா? என்று குளித்த ஜடை போட்டு பச்சை நிற சேலையில் நின்ற வேரலை பார்வையால் வருடி கொண்டே வேண்டுமென வம்பு இழுக்க
வேரல்சார் "
"ம்ம் யா வேரல், நேத்து சொல்ல மறந்துட்டேன் , இனி டெய்லி காலையிலேயும் நானே பிக்கப் பண்ணிக்கிறேன்
"இல்லை சார் நான்
"பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் பின்னாடி ஏறி உட்கார் .... முடித்து விட்டான் ...
"ம்ம் சரி சார்
"அம்மா சொன்னேன்ல சார் ரொம்ப நல்லவர்ம்மா நம்மள நடக்க விட மாட்டார், வாங்க வந்து ஏறுங்க மகள் வேறு தொல்லை செய்ய.. வேரல் காரில் ஏறி உட்கார..இத்தனை தூரம் நடந்து வந்ததில் அவள் முகத்தில் சிறு வியர்வை துளி அரும்பி இருக்க தீத்தன் டிஷ்யூ பேப்பரை தூக்கி அவள் புறம் நீட்டியவன்
ம்ம் ..
"நன்றி சார் என்று மடித்து அவள் உள்ளே வைக்க
"ப்ச் , அதை வச்சி முகத்தை தொடைன்னு தந்தேன்
"அய்யோ அம்மா மானத்தை வாங்காத... இதுக்கு பேர் டிஸ்யூ முகம் துடைக்கிறது ,நேத்து மிஸ் கத்து தந்தாங்க
"எனக்கு என்டி தெரியும் இது முகத்தை துடைக்கிறதுன்னு... முன்ன பின்ன செத்தா தான சுடுகாடு தெரியும் ...
"தெரியலன்னா சார் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கம்மா...நம்ம சார் எல்லாம் சொல்லி தருவார்.... நேற்று அவனை பார்க்கும் போது இருந்த பயம் நிலாவுக்கு இன்று இல்லை.... இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி பக்கம் வந்து சீட்டை பிடித்தபடி தாய் மடியில அமர்ந்து கொண்ட நிலாவை கண்ணாடி வழியாக தீத்தன் பார்த்தான் சிறுது நேரம் அமைதியாக இருந்த நிலா
சார்
"சார் என்று அவனை சுரண்ட போனில் பேசி கொண்டிருந்த தீத்தன் போனை வைத்து விட்டு
"ம்ம் யா , சொல்லு பேபி..
"இது என்னது என்று கிப்ட் பாக்ஸை கை காட்ட
"ஓஓஓ இதுவா உனக்கு தான் வாங்கிட்டு வந்தேன்
எனக்கா ??
"ம்ம் நேத்து புதுசா ஒரு பேபி வந்திருக்குன்னு பிஏ சொன்னாங்க எப்பவும் புதுசா வந்த பேபிக்கு எதாவது வாங்கிட்டு வருவேன்.. சோ இது உனக்கு தான் ..
அம்மா வாங்கிக்கவா ....தாயை எட்டி பார்த்தாள்
"அவ எதுவும் சொல்ல மாட்டா வாங்கிக்க என்று குழந்தைக்கு கொடுக்க அதை திறந்து பார்த்தாள் ஏகப்பட்ட சாக்லெட்... குஷியாகி போன நிலா தாய் பக்கமே திரும்பாது அவனிடம் கதை விட ஆரம்பித்து விட்டாள் ... அவனும் நிலாவும் பேசுவதை வேரல் தான் ஆச்சரியமாக பார்த்து கொண்டு வந்தாள்..
அவளை ஏற்று கொள்ளுவது காதல் என்றால், அவளுக்காக நிலாவையும் மேற்போக்காக ஏற்று கொள்ள நினைக்காது ஒரு தகப்பனாக முயற்சி செய்வது பேரன்பின் உச்சம் அல்லவா ?!
அவன் பேரன்பை புரிந்து கொள்வாளா??