வேரலை மேய்ந்த வேழம்11

Veral11

வேரலை மேய்ந்த வேழம்11

11 வேரலை மேய்ந்த வேழம் !!

எந்த பஸ் நம்ம இடத்துக்கு போகும்னு தெரியலையே பாப்பா" ...

நட்டு நடு இரவு தீத்தன் கம்பெனி வாசலில் இருந்த பேருந்து நிலையத்தில் கையை பிசைந்து கொண்டு மகளை தூக்கி வைத்துபடி வேரல் நின்றாள் ..

அவன் ஒத்தை போடு போட்டதில் பயந்து போய் உட்கார்ந்து கொண்டாள்.. ராத்திரியானா எனக்கு எப்படி பஸ் புடிச்சு வீட்டுக்கு போகணும்னு தெரியாது என்று தீத்தன் தன்மையாக பேசி இருந்தால் சொல்லி இருப்பாள்... ஆணிடம் அடங்கி அடி வாங்கியே வாழ்ந்த பெண் அல்லவா தீத்தன் கத்தவும் நத்தை ஓட்டுக்குள் பதுங்கி விட்டாள்...

வேலைகளை முடித்துவிட்டு காரை எடுத்து கொண்டு தீத்தன் வெளியே வர, அந்த இரவில் மகளை கையில் வைத்த படி போகும் பேருந்தை திருதிருவென விழியோடு பார்த்து கொண்டிருந்த வேரலை கண்டு தலையில் அடித்தான்..

"இவ இன்னும் போகாம இங்க என்ன பண்றா... என்று அவள் அருகே காரை மெல்ல ஒட்டி கொண்டு நிறுத்த...

"தம்பி இந்த வண்டி ____ போகுமா??" என்று ஒரு கஞ்சா ஆசாமியிடம் போய் கேட்க ..அவன் பல்லை காட்டி அவளை பார்க்க ... 

கடவுளே!! இது வேறையா" என்று விலகி வந்து கூட்டம் இருக்கும் பக்கமாக நிற்க போக, அவள் அருகே வந்து ப்ரேக் போட்டு காரை நிறுத்திய தீத்தன் கார ஜன்னல் மட்டும் திறந்து 

ஏய் ஏய் என்று அழைக்க குனிந்து பார்த்தாள், காரில் டிரைவர் சீட்டில் தீத்தன் இருந்தான்..

"சார் நீங்களா? என்ன சார்" 

"இன்னும் போகல 

"ம்ஹூம் பஸ் வரல 

"பஸ் வரலையா பத்து நிமிசத்துக்கு ஒன்னு உன் ரூட் வழியா போகுமே "

"அப்படியா??? ரொம்ப நேரமா இங்க தான் சார் நிக்கிறேன் , எனக்கு வாசிக்க தெரியாதா அதான் பஸ் எதுன்னு தெரியல.. காலையில நடந்தே வந்துட்டேன், ராத்திரி தனியா போக கொஞ்சம் பயமா இருக்கு... அதான் பஸ்ல போகலாம்னு நினைச்சேன் நீங்க போங்க சார் , நான் பார்த்துக்கிறேன் 

என்ன பார்த்துப்ப போற பஸ்சை எல்லாம் பார்த்துட்டு நிப்ப அதான, அறிவு இல்லை, ஏழு மணிக்கு, எனக்கு பஸ்ல போக தெரியாது நடந்து தான் போகணும்னு வந்து கேக்குறதுக்கு என்ன? வாயில கொழுக்கட்டையா வச்சிருந்த.. ஹான் .. 

இது என்னடா வம்பா போச்சு , கேட்கதானே செஞ்சேன்

ஹான் என்ன சொன்ன ?

"ம்ஹூம் ஒன்னும் சொல்லல சார், நாய் மாதிரி கத்தி மூலையில உட்கார வச்சுட்டு இப்போ இதுக்கும் திட்டுறாரே, முதலாளினாலே அப்படித்தான் இருக்கும் போல இருக்கு... அவருக்கு ஏத்தாப்ப பேசுறார்.. சரி பரவால்ல இவ்ளோ பெரிய மனுஷன் நின்னு என்ன ஏதுன்னு கேட்கிறதே பெருசு என்று நினைத்துக் கொண்டவள்..

"என் மேல தான தப்பு, பரவால்ல சார் உங்களுக்கு எதுக்கு சிரமம் நீங்க போங்க நான் எப்படியாவது வீடு போய் சேர்ந்திடுறேன்..

"ஏன் , போற வழியில எவனாவது உன்னை தூக்கிட்டு போய் ஏதாவது பண்ணுனா.. பழி யாரு மேல விழும்... என் மேல விழும் .. வந்து வண்டியில ஏறு , கொண்டு போய் விட்டுட்டு போறேன் .... இனிமே டெய்லி இவளை லேட்டாதான் அனுப்பணும் அப்பதான் போகும் போதும் அவ கூடையே போகலாம் ; ஐடியா கிடைத்த மகிழ்ச்சியில் உதட்டை சுளித்து அவளை பார்க்க அவளோ அரண்டு போய் ..

"ஏதே உங்க வண்டியிலேயா.. 

"காலையில் வேலைக்கு கிளம்பி வரும் பொழுதே தெருவில் உள்ள அத்தனை பெண்களும் கூடி நின்று குசுகுசு என்று ஏதோ இவள் தவறு செய்ய கிளம்பியது போலவே பேசினார்கள்.... இவன் வண்டியில் போய் இறங்கினால் அவள் கதி அத்தோடு இதெல்லாம் கேசவன் காதுக்கு போனால் அவள் நிலை ?அய்யய்யோ!! அடி வாங்க தெம்பு இல்லை உள்ளமே பதறியது...

"இல்லை சார் நான் ஆட்டோ புடிச்சு என்று வார்த்தையை இழுத்தாள் 

"மயிறு , பகல்ல பசுமாடே கண்ணுக்கு தெரியாதாம், இதுல ராத்திரி எருமை மாட்டு மேல ஏறி ஊர்வலம் போயிடுவாளாம் வந்து ஏறு... அவள் இன்னும் கையை பிசைந்து கொண்டு நிற்க

ஊப்ஸ்இஇஇ என்னதான் உன் பிரச்சனை?

"இல்ல என் தெரு கொஞ்சம் மோசம்... ஒரு ஆம்பள கூட கண்ட நேரத்தில் போய் இறங்குனா கண்ட மாதிரி பேசுவாங்க..

"ஓஹோ!! அதுக்காக என்ன பொண்ணு வேஷம் போட சொல்றியா ?

"அய்யயோ !!இல்லை சார் நானே போயிக்கிறேன் என்றவளை நாடியை சொரிந்து கொண்டே பார்த்தவன் 

"என்கிட்ட என்ன வேலைக்கு சேர்ந்து இருக்க ?

"அது ஏதோ ஹான் வலதுகை வேலை ,

" ஊப்ஸ் இவளோட முடியல, என்று முனங்கி விட்டு 

அதே, நான் எங்க போனாலும் என் கூட வந்து எனக்கு தேவையானது செய்யணும் அதான உன் வேலை "

"ம்ம் அதான் 

அப்போ, நான் வேற ஏதாவது பிரான்ஜூக்கு போனா என் கார் பின்னாடி ஓடியே வந்து காபி போட்டு குடுப்பியோ.. அவள் வேகமாக இல்லை என்று தலையாட்ட 

எப்படி இருந்தாலும் என் கார்ல ஏறி என் கூட தான வந்தாகணும் 

ஆமா இல்ல என்று அவள் ஆமோதிப்பாக தலையாட்ட...

 "அப்போ, இப்பவே வந்து பழகு  

"அம்மா போகலாம்மா பயமா இருக்கு" என்று மகள் கிசுகிசுக்க.. அவளுக்கும் அவன் சொன்னது புரிந்தது 

கெட்டதை மட்டுமே பேசும் ஊருக்கு மத்தியில் அவள் என்ன செய்தாலும் கெட்டவள் பெயர்தான் வாங்கப் போகிறாள்.. அத்தோடு இதுதான் வேலை என்று ஆகிவிட்டது அவனோடு எல்லா இடமும் போக வேண்டும் எல்லாவற்றிற்கும் தயங்கி மறுத்து பேசினால் இந்த வேலையில் நீடிக்க முடியாது என்று நினைத்தவள் 

ம்ம் சரி சார் வேரல் கார் கதவை திறக்க முடியாது தடுமாற.. அவள் தன் வண்டியில் வரப் போகிறாள் என்ற என்ற எண்ணமே தீத்தனை ஏதோ செய்ய தலையை கோதிக் கொண்டு வண்டியில் இருந்து இறங்கி வந்தவன் அவள் வெகு அருகில் நின்று கார் கதவை திறந்து கொடுக்க , அவனை மிரண்ட கண்ணோடு பார்க்கும் நிலாவை பார்த்து புருவத்தை தூக்கி இறக்கியவன் ... அந்த குட்டி கன்னத்தில் மெல்ல வருட... 

ம்மாஆஆஆ என்று பயந்து தன் தாயின் தோளில் ஒளிந்து கொண்டது ..

"அப்படியே அம்மாக்காரிதான், பார்க்கிறது செய்யறது எல்லாம் பயந்து பயந்து முழிக்கிறதை பாரு... குழந்தையை தூக்கி கொஞ்ச வேண்டும் ஆசை வந்தது.. அப்படியே இன்னொரு கையில் தன் காதலியையும் தூக்கிக் கொள்ள தோன்றியது..

வேலை செய்து களைத்த அவள் உடலில் இருந்து வியர்வை மணம் வந்தது , ஆயுள் வரை அவன் சுவாசிக்க விரும்பும் நறுமணத் தைலமாக அது மனதில் பதிந்து போனது...

சங்கோஜமாக தாயும் மகளும் காரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ள.. ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டே தீத்தன் காரை ஓட்ட ஆரம்பித்தான்... அவன் கண்கள் முழுக்க பின்னால் இருந்த தன் ஜீவனின் மீது தான்...

காதில் ஹெட்போன் போட்டு கொண்டு பாடல் கேட்பது போல அவளை கண்டுகொள்ளவே செய்யாத பார்வையில் தீத்தன் காரை முன்னே பார்த்து ஒட்டி கொண்டிருந்தான் ஆனால் அவயம் முழுக்க பின்னால் உள்ளவர்கள் மீது தான் இருந்தது ...

"அம்மா 

"ம்ம் சொல்லு நிலா

"நாம நேத்து இதே போல ஒரு காரு ரோட்டுல பார்த்தோம்ல "

"அது வெள்ளை கலருடி 

"இல்லை கருப்பு தான் 

"வெள்ளைடி 

"கருப்பு அம்மா உனக்கு கண்ணே தெரில ...

"ப்ச் அப்படியா ... 

"ம்ம் இப்ப அதே போல கார்ல வர்றோம்... தேவதை தான் அனுப்பி விட்டிருக்கோ

"அப்படிதான் போல நாம தூரத்தில பார்த்து ரசிச்சது எல்லாம் பக்கத்துல வருது , நல்லது நடந்தா சரி

"அம்மா சாருக்கு நாம பேசுறது கேட்டிராம மெல்ல பேசுங்க

"காதுல செவுட்டு கருவி மாட்டி இருக்கார்ல, காது கேட்காது ...

"ஓஓஓ அது மாட்டினா காது கேட்காதா?  

"அப்படிதான்னு நினனக்கிறேன், அது மாட்டி இருக்கும் போது நான் கூப்பிட்டா கூட அவருக்கு கேட்காது அவர் பாட்டுக்கு வேலையை செஞ்சிட்டுதான் இருப்பார் 

"அப்போ நாம பேசலாம் அவருக்கு கேட்காது 

"ம்ம் 

"ஏதே லட்ச ரூபாய் ஹெட் போனை , அம்மாவும் மகளும் செவுட்டு மிஷின் ஆக்கிட்டாளுக, தாயும் மகளும் அரட்டை அடிப்பதை சின்ன புன்னகையோடு கேட்டு கொண்டே வந்தான் 

ஆமா உனக்கு அங்க என்ன சொல்லி தந்தாங்க நிலாம்மா "

"நடக்க சொல்லி தந்தாங்க, அப்புறம் உடைஞ்ச காலுக்கு மருந்து எல்லாம் போட்டு விட்டாங்க சாப்பாடு எல்லாம் விதவிதமா நிறைய தந்தாங்க அம்மா பசியே வர விடல... 

"அப்படியா ??"வேரலுக்கு கண்ணீர் கொட்டியது... இந்த நிம்மதி நிலைத்தால் கூட போதும் என்ற பேராசை தான் ...

அவள் தெரு எல்லை வர 

"சார் சார் என்று கத்தி அவனை அழைக்க ப்ரேக் போட்டு நிறுத்தி 

"இப்ப எதுக்கு காதுக்குள்ள ஒய்ன்னு கத்துன....

"இல்ல சார் இறங்க வேண்டிய இடம் வந்திருச்சு அதான் கத்துனேன் மன்னிச்சிடுங்க சார்

"இங்கேயே இறங்க போறியா? 

"ஆமா சார் இதுதான் என் தெரு... உள்ள உங்க கார் வந்துச்சுன்னா?அவள் இழுக்க 

" நான் என்ன உனக்கு கள்ள புருஷனா?? என்றவனை அவள் அரண்டு போய் பார்க்க

"சொல்லு நான் உன் கள்ள புருஷனா??

"ம்ஹூம் இல்ல என்று தலையாட்டினாள்

"பின்ன எதுக்கு பயப்படுற உனக்கும் எனக்கும் இடையில ஏதாவது கள்ள உறவு இருக்குதா? ... 

"ம்ஹூம் இல்ல இல்ல 

"நான் முதலாளி, நீ தொழிலாளி அவ்வளவு தானே எதுக்கு பயந்து சாகுற.. நீ இப்போ இங்க இறங்கினாதான் எவனாவது பார்த்துட்டு போய் பத்த வைப்பான் கேஷுவலா இருந்து தொலை.. 

ம்ம் 

எது உன் வீடு என்றதும் அவள் கைகள் தானாக வீட்டைக் காட்டியது.... வீட்டின் முன்னேயே காரை கொண்டு நிறுத்திய தீத்தன்.... அவள் இறங்கி கதவை மூடி

நன்றி சார் என்று முடிக்கும் முன் காரை இழுத்து கொண்டு போயே போய் விட்டான் 

"எப்பா மனுஷனுக்கு என்னா கோவம் வருது" என்று புலம்பி கொண்டவள், தன்னை யோசனையாக பார்க்கும் தெரு ஆட்களை கவனிக்காதது போல கதவை திறந்து உள்ளே போய் விட்டாள்... 

இரவு டிகே சார் போன் போடும் எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லணும் என்று நினைத்து கொண்டே வேலைகளை முடிக்க தீத்தன் போனில் வந்தான் 

"எங்க சார் அப்படி பண்ணினார் இப்படி பண்ணினார் என்று ஒரே அவன் புராணம் தான் 

ஓஹோ அப்போ எனக்கு முன்ன அவன் உன்ன கரெக்ட் பண்ணிடுவான் போலையேடி 

அய்ய என்ன பேசுறீங்க சார், அவர் என் கடவுள் மாதிரி 

அப்போ நான் யாரு? உனக்காக பணத்தை கொட்டி கொடுத்து இருக்கேன்டி 

நீங்க என் நண்பன் , அவர் என் சாமி.... 

நண்பன் காதலன் ஆக வாய்ப்பு உண்டாடி .. 

"சரி சார் தூக்கம் வருது 

"விவரமான கள்ளி !!" என்று சிரித்து கொண்டவன் அவளோடு இந்த நாள் முழுவதும் நடந்ததை நினைத்து கொண்டே படுக்கையில் சிரித்தபடி கிடந்தான்.... 

அவளைப் பொறுத்தவரை ஆண்கள் எல்லோரும் காயத்தை கொடுப்பவர்கள் என்று ஒரு பக்கத்து ஆண்களை மட்டுமே பார்த்து பழகி இருக்கிறாள்,

எனவே இன்னொரு ஆணை அவள் வாழ்க்கையில் மறுபடியும் சேர்த்துக் கொள்ள , காயப்பட அவள் விரும்ப மாட்டாள்

ஆக ,முதலில் ஆண்கள் எல்லோரும் அப்படி இல்லை எல்லா ஆண்களும் காயப்படுத்த மாட்டார்கள் ஆண்களில் இன்னொரு வகையான குணம் கொண்டவர்களும் உண்டு ,என்பதை அவள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் ... 

ஆண்களை ஏற்றுக் கொண்டால்தான் அவள் வாழ்க்கையில் இன்னொரு ஆணுக்கு அவள் இடம் கொடுப்பாள் 

வற்புறுத்தி பேசவைத்து விடலாம்,

வற்புறுத்தி அவளை தன்னோடு இருக்க வைத்து விடலாம், வற்புறுத்தி காதலை கூட கொடுத்து விடலாம்... ஆனால் வற்புறுத்தி அவளை வாழ வா என்று அழைக்க முடியாதே..

அப்படி அழைத்தால் வன்முறைப்படுத்தி அவளை காயப்படுத்திய அவனும் , வன்முறையாக அவளை எடுத்துக்கொண்ட இவனும் சமமாகி போவார்களே, 

அவன் கொடுக்கும் காதலை அவள் முதலில் உணர வேண்டும், அதை ரசிக்க வேண்டும் அணு அணுவாக அதை ருசிக்க வேண்டும் ... அதன் பிறகு தான் அவள் வாழ்க்கைக்குள் அவன் நுழையப் போகிறான்..