வேரல் 10
Veral10

10 வேரலை மேய்ந்த வேழம்!!
வேலைக்கு வர்ற நேரமா இது?
எஃகு குரலில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் சேரில் உட்கார்ந்து வேரலை முறைத்த படி பார்த்துக் கொண்டிருந்த தீத்தனை பார்த்து எச்சில் விழுங்கினாள்....
"உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன், வேலைக்கு வர்ற நேரமா இது???
"அது குழந்தையை அங்க விட்டுட்டு வரும்போது குழந்தை ஒரே அழுகை சார் ...அவளை எங்கேயும் விட்டுட்டு
"உன் சொந்த கதை எனக்கு தேவையில்லை சூடா காபி போட்டு எடுத்துட்டு வா ...
"ம்ம்
"மேஜை மேல ரூபா வச்சிருக்கேன் எடுத்துட்டு போயி ரெண்டு இட்லி வாங்கிட்டு வா...
"சார் காபி போட்டு தரணுமா, இல்ல இட்லி வாங்கிட்டு வரணுமா வேரல் அந்த அறையில் ஒரு ஓரத்தில் தன் கூடையை வைத்துவிட்டு இடையில் சேலையை சொருவினாள் ...
லேப்டாப்பில் கவனமாக இருந்த தீத்தன் ஓரக்கண்ணால் உள்ளே வந்த வேரலை மேலிருந்து கீழ் வரை ஸ்கேன் செய்யாமல் இருப்பானா ... சொல்லப்போனால் இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் வரவே இல்லை... எப்போது விடியும் எப்போது அவளை பார்க்கலாம் என்று காத்தே கிடந்தவன் எட்டு மணிக்கே வந்து ஆபீஸில் உட்கார்ந்து இருக்க... அவளோ ஆடி அசைந்து ஒன்பது மணிக்கு உள்ளே வர , கொஞ்சம் கோபமாகத்தான் இருந்தது...
"ஓவரா தாண்டி போற, அது சரி நான் என்ன அவளோட காதலனா இல்ல புருஷனா என்ன பாக்குறதுக்கு ஓடி வர ..ஆனா, ஒரு நாள் என்னை பார்க்க என்ன தேடி ஓடி வர வைக்கிறேன் பாரு என்று வாசலையே பார்த்தபடி அவளுக்காக காத்திருந்தான்..
"மஞ்சள் நிற சேலை அதற்கு பழைய ஜாக்கெட் அதுவும் தொளதொள வென்று கிடந்தது வேறு யார் ஜாக்கெட்டோ என்பது அளவு வைத்து தெரிந்தது..
"அக்கா வேலைக்கு சேர்ந்து இருக்கேன் , உங்ககிட்ட பழைய ரவுக்கை இருந்தா தர்றியலா,, பெரிய கம்பெனி அதோட முதலாளிக்கு காப்பி போட்டு கொடுக்கிற வேலை வேற , கிழிஞ்ச சட்டையோட நின்னா நல்லா இருக்காதுல்ல நம்ம மூக்காயி அக்கா கிட்டதான் தைக்க கொடுத்து இருக்கேன் வர ரெண்டு நாள் ஆகுமாம்
ம்ம் வேலை புது சேலை , கையில காசு கலக்கல் தான் போ என்னடி உன் புருசனை விரட்டி விட்டுட்டு புது புருசன் எதுவும் பிடிச்சிட்டியா என்றவளை பாவமாக பார்த்த வேரல் தன் குடிசை நோக்கி நடக்க ஆரம்பிக்க
அவகிட்ட போய் ஏன் வேரல் கேட்ட , இந்தா இது என் மக ரவிக்கை என்று இன்னொரு பெண் வந்து கொடுத்து விட்டு போனது ...
"ஒரு வாய் சோறு தின்னா கூட தப்பா பேசறாங்க...அந்த ஆள் வேற வந்து என்ன செய்ய போறானோ தெரியல ,என்ன அடி வாங்கினாலும் சரிதான் வேலையை மட்டும் விட்டிர கூடாது ... எப்படியாவது பிள்ளையை கரை சேர்த்துபுடணும் அவள் ஆசை எல்லாம் பிள்ளை வாழ வேண்டும் என்பதில் தான், அவள் வாழ வேண்டும் என்று நினைவே இல்லை....
அவனுக்கு முதுகு காட்டி நின்று வேரல் காப்பியை போட்டு கொண்டு நின்றாள்.. தீத்தன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு தலைக்கு கைகொடுத்து அமர்ந்த படி அவளை பார்வையால் இதயம் உள்ளே இழுத்து கொண்டிருந்தான்...
இவ்வளவு தூள் போடணும், இவ்வளவு சக்கரை போடணும் ம்ம் இப்ப சரியா இருக்கு , அவனுக்கு போட்ட காப்பியை லைட்டாக தொட்டு சுவை வேறு பார்த்து கொண்டாள் ....
சார் இந்தாங்க என்று நீட்ட ...அதை வாங்கி மிடறு மிடறாக தீத்தன் விழுங்கினான்..அவளோ இன்னும் நகராது பயபக்தியாக அவனுக்கு எதிரே நிற்க ...
என்ன ?
இல்லை கடையில இட்லி வாங்கிட்டு வர சொன்னீங்களே நேத்து வேற சாப்பாடு உடம்புக்கு ஒத்து வராதுன்னு சொன்னீங்களே..
"அந்த அளவு தெரிஞ்ச மேடம் , காலையில முன்னரே வந்து எதாவது செஞ்சு தந்து இருக்கணும் ..
"மன்னிச்சுடுங்க சார் , நாளையில இருந்து முன்னகூட்டி வந்திடுறேன்
"ஒன்னும் தேவையில்லை நீ வரும் போது எனக்கும் சேர்த்து சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வந்திடு
"என் வீட்டு சாப்பாடா?? அவள் வாயை பிளக்க
"ஏன் என்னாச்சு?
"இல்லை அது
"அதுக்கும் சேர்த்து காசு வாங்கிக்க, மெனு ப்ச் என்ன செய்யணும்னு டெய்லி என்கிட்ட வாங்கிட்டு போயிடு ....
"
ம்ம் சரி சார்
"இப்போ போய் இட்லியை வாங்கிட்டு வா ... ரோட் பார்த்து கிராஸ் பண்ணு
"ம்ம்
"மீதி காசை எண்ணி வாங்கிட்டு வா ..
"ம்ம் என்று தலையாட்டி வி்ட்டு வீர நடை போட்டு, படி வழியாக இறங்கி ஓடியவளை தலையில் அடித்து பார்த்தான்
"பக்கத்திலேயே லிப்ட் இருக்கு மாங்கு மாங்குன்னு இறங்கி ஓடுறா.... எதுவுமே தெரிலயே.. என்று யோசித்து கொண்டே தீத்தன் ஜன்னல் அருகே போய் நின்று பரபரப்பாக இருந்த சாலையின் தத்தைக்க புத்தைக்க போட்ட காதலியை நெற்றியை சுருக்கி பார்த்தான் ...
அய்யய்யோ!! இது என்ன இம்புட்டு கார் வந்திட்டே இருக்கு , எப்போ ரோட்டை கடந்து போய் இட்லியை வாங்க... வேரல் அங்கும் இங்குமாக வளைந்து நெளிந்து சாரை பாம்பாக போய், எப்படியோ இரண்டு இட்லியை வாங்கி கொண்டு வந்து சேர்ந்தாள்..
பக்குவமாக அவன் மனைவி போல் தீத்தன் அருகே நின்று தட்டில் இட்லி வைத்தவள் ...
சார் சாம்பாரா சட்னியா ?
காப்பியை தொட்டு நக்கி டேஸ்ட் பண்ணின மாத்ரி ரெண்டையும் டேஸ்ட் பண்ணிட்டு எது நல்லா இருக்கோ அதை ஊத்து "
ம்ம் அது" என்றவள் நாக்கை கடித்து கொண்டே
பார்த்துட்டார் போல, இனிமே கவனமாதான் வேலை செய்யணும்" சார் முகம் சுளிக்கிற மாதிரி கூறுகெட்ட வேலை பார்க்க கூடாது... என்று தன்னை தானே திட்டி கொண்டு..
மன்னிச்சிடுங்க சார் ... இனிமே அப்படி செய்ய மாட்டேன்.... இரண்டையும் தனிதனி கிண்ணத்தில் ஊற்றி சிறுது தன் கையில் விட்டு சுவை பார்த்து கொண்டவள் ...
சாம்பார் பழசு சட்னி தான் புதுசா இருக்கு அதையே ஊத்தவா?
ம்ம் கை கழுவிட்டு வர்றேன் எடுத்து வை என்று தீத்தன் எழும்ப இவள் பதறி, அவன் நிழல் படாத படி நகர்ந்து நின்று கொண்டாள் ..
கேடு கெட்ட ஆண்களின் கையில் கசக்கப்பட்டு தூக்கி ஏறியப்படும் பெண்களுக்கு தான் தெரியும், ஒவ்வொரு ஆணையும் கடக்கும் போதும் பயம் தொற்றி கொள்ளும் என்று .... தீத்தன் முகத்தை கழுவி துடைத்தபடி ரெஸ்ட் ரூம் கதவை திறக்க .. ஏசி உள்ளே முகத்தை வைத்து ஜில் காற்று வாங்கி கொண்டு நின்ற அவள் செயலில் அப்படியே வாசலில் சாய்ந்து நின்று கொண்டான்...
உள்ள யாராவது இருக்கீங்களா... எப்படி இது வழியே ஜில் காத்து வருது .... நல்லா குளுகுளுன்னு காத்துலேயே இருந்து தான் சார் நிறமா இருக்கார் போல .. உள்ளே தலையை விட்டு காற்றை வாங்குவதும் குளிரில் கன்னத்தை கை வைத்து பொத்தி கொள்வதும் என்று குழந்தை போல என்ன?? குழந்தை தான் !! விளையாடிய அவளை சிறுது நேரம் நின்று சத்தமில்லாது ரசித்தான் ..
விளையாடி முடிச்சிட்டேன்னா வந்து சாப்பாடு போடு பசிக்குது.. என்றவன் குரலில் திடுக்கிட்டு ஓடி வந்தவள் அவனுக்கு தள்ளி நின்று சாப்பாடு வைத்து , அவன் சாப்பிட சாப்பிட என்ன வேண்டும் என்று வைக்கும் அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இட்லியை பிய்த்து வாயில் வைத்தான்..
"சார்
"போய் அங்க உட்கார் தேவைன்னா கூப்பிடுறேன்
"ம்ம் தலையாட்டி விட்டு அவன் காட்டிய இடத்தில் தரையில் அமர போக
"ப்ச் சேர்ல போய் உட்கார் அதான் உன் டேபிள் ....
"இல்லை சார் காப்பி போட்டு தர்ற எனக்கு இந்த இடம் போதும் ..
"இடியட் மாதிரி பேசாத உனக்கு சேர் தர முடியாத அளவு நான் ஒன்னும் கஞ்சன் இல்லை ..அதோட உனக்கு பேர் சர்வண்ட் இல்லை ,பிஏ ..ப்ச் ஒரு மயிரும் புரியாம முழிக்கிறத பாரு என்று தலையில் அடித்தவன்
"பிஏன்னா என்னோட வலது கை போலன்னு அர்த்தம் புரியுதா ?
ஓஓஓஓ சரி சார்
என்ன புரியுது
"உங்க வலது கை நான், இடது கை இனி தான் வருவாங்களா சார் ??
"தாயே!! நீ போய் அந்த மூலையில உட்கார் மண்டை காய வைக்காத போ "
"எதுக்கு கோவப்படுறார்னு தெரிலயே .... அய்யா நான் சாரோட வலது கை என்று சந்தோசம் வேறு பட்டு கொண்டு அவள் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டவள், அவனையே பார்த்து கொண்டு இருக்க அதை கவனித்த தீத்தன்
"என்ன எதுக்கு பாத்துட்டு இருக்க ..
"இல்லை சார் உங்களை பார்த்துக்கிட்டு இருந்தா தான உங்களுக்கு எப்போ என்ன தேவைன்னு அறிய முடியும். நீங்க வேலையை பாருங்க என்று மீண்டும் அவனை பார்க்க தொடங்கி விட ... அவள் பார்வையில் தடுமாறத்தான் செய்தது ஆண் உடல்...
சிறிது நேரத்தில் வேலைப்பளு தலை மேல் வந்து ஏறிக்கொள்ள, அவன் தொண்டையை செருமும் போது தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுத்தாள்.. அவன் நெட்டி முறிக்கும் பொழுது காப்பியை போட்டுக் கொண்டு ஓடி வந்தாள்.. மொத்தத்தில் அவன் அசைவு ஒவ்வொன்றையும் ஒரே நாளில் கற்றுக் கொண்டாள் வித்தகி...
"சார் வீட்டுக்கு கிளம்பவா?? இன்னும் லேப்டாப் உள்ளே தலையை விட்டு கொண்டு கிடந்த அவன் அருகே நெளிந்தபடி வந்து நின்றாள் வேரல்.. மணி இரவு ஏழு பிள்ளை எவ்வளவு நேரம் தான் தாய் இல்லாமல் கிடக்கும் ...
ப்ச் மணி ஏழுதான ஆகுது அதுக்குள்ள என்ன ? போய் உட்காரு...
இல்ல
போய் உட்காருன்னு சொன்னேன்..." போட்ட போட்டால் எதிரே கிடந்த சேரில் முட்டி மோதி விழுந்து போய் மூலையில் உட்கார்ந்து கொண்டாள்....
ஸ்ப்பா என்று உடலை வளைத்து தீத்தன் எழும்ப கண்ணை உருட்டி கொண்டு அவன் அழகி அதே இடத்தில் உட்கார்ந்து அவனை பார்த்து கொண்டிருக்க
ஷட்!! இவளை எப்படி மறந்து தொலைச்சேன் மணியை பார்த்தான் பத்து தாண்டி இருந்தது
ஓஓ காட்!! புறா முட்டை கண்ணை விரிச்சு பார்க்கிறத பாரு, சார் லேட்டாகி போச்சுன்னு சொன்னா என்ன இவளை வச்சிக்கிட்டு கஷ்டம் டா என்று முனங்கியவன்...
"கிளம்பு
"ம்ம் சரி சார் என்று கூடையை தூக்கி கொண்டு மகளை வாங்க ஓடினாள்....
நைட் சாப்பாடு கொடுத்தாச்சு நிலாவுக்கு ,சமத்தா இருக்கா , நீங்க அவளை பத்தி கவலையே பட வேண்டாம் என்று அங்கிருந்த ஹேர்டேக்கர் கூற
"சரிங்க அக்கா ரொம்ப நன்றி
"தீத்தன் சாருக்கு நன்றி சொல்லுங்க , அவர் சொல்றார் நான் செய்றேன்...
"இப்படி முதலாளி எல்லாம் யாருக்கு அக்கா அமையும் மனுசன் நீடுழி வாழணும்.... என்று சொன்னவளுக்கு தெரியாதே அவன் கடைஞ்சு எடுத்த கருமி என்று... தனக்கும், தனக்கு சார்ந்த நபருக்கு மட்டும்தான் பர்ஸை திறப்பான்...
இரவோடு இரவாக நிலாவுக்கு ஹேர்டேக்கர் ரெடி பண்ணி அலுவலம் அருகே அறை ஏற்பாடு செய்து .. அங்கே வேலை பார்க்கும் நபர்களின் குழந்தையையும் சேர்க்க வைத்து அவளிடம் சொன்னதை மெய் என்று செட்டப் பண்ணி விட்டான்.. தான் கஷ்டப்பட்டு முதுகு வலிக்க சேர்த்த பணத்தை தேவையில்லாமல் தீத்தன் எப்போதும் செலவழிக்க மாட்டான்...
அவன் பணமும் சரி , நேரமும் சரி அவனுக்கு பிடித்தவர்களுக்காக மட்டும் தான் அவன் செலவழிப்பான், இப்போது இந்த உலகில் அவனுக்குப் பிடித்த ஒருத்தி அவன் காதலி !!