வேரலை மேய்ந்த வேழம் 9

Veram9

வேரலை மேய்ந்த வேழம் 9

9 வேரலை மேய்ந்த வேழம் !!

வேரல் ஆபிஸ் வாசலில் நின்று ஆபிஸை அண்ணாந்து பார்த்தாள்.... நிம்மதி மூச்சு தானாக வந்தது 

பத்து பைசாவுக்கு லாயக்கு இல்லாத நாயே என்று சொல்லி சொல்லி முடம் ஆன பெண் மனதில் சிறகு முளைத்தது 

"இனி எப்படியாவது பிள்ளையை காப்பாத்தி புடுவேன் , எசமான் நல்லா இருக்கணும் ,என் கோலத்தையும் பார்த்து வேலை தந்த அவன் முதல் பார்வையிலேயே உயர்ந்து நின்றான் .. 

"எவ்வளவு பெரிய ஆபீஸ்ல வேலை பார்க்கிற மனுஷன்... என்ன உட்கார வச்சு மதிச்சி பேசி எனக்கு என்ன தேவைன்னு பார்த்து செய்றார், அதோட எம் பிள்ளைக்கு தங்க இடமும் தந்து இருக்கார்,, கடவுள் அவர் நினைச்சதெல்லாம் செய்யணும் இதே போல டிகே சாரும் என் நிலைமையை புரிஞ்சுகிட்டா எப்படி இருக்கும்? ஆபிஸ் வாசலில் நின்று மகளுக்கு பிஸ்கட் வாங்கி தின்ன கொடுத்து கொண்டே யோசித்தபடி நின்ற அவளை தன் தனி அறையில் உள்ள கண்ணாடி ஜன்னல் வழியாக ஒருவன் பார்த்து கொண்டே நின்றான் 

அவள் முகத்தில் இருந்த நிம்மதி எப்போது மகிழ்ச்சியாக மாறும் அது எப்போது சிரிப்பாக மாறும் இது எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் ... என்று நினைத்து கொண்ட தீத்தன் அவள் அவ்விடம் விட்டு நகரும் வரை கண்ணை திருப்பாது வேரல் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசித்தான்....காலில் செருப்பு இல்லாது நடந்து போகும் அவளை பெருமூச்சு விட்டு பார்த்தவன் 

"இதுதான் நீ கஷ்ட படுற கடைசி நாளா இருக்கணும் அம்மு இனி உன்ன மொத்தமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு என்று அவளுக்கு சுற்றி தன் காதல் வேலியை போட்டு வைத்தான்.. 

போன கேசவன் அப்படியே செத்துப் போய் விட்டான் என்ற செய்தி இவள் காதுக்கு வந்தால் உண்மையாகவே ஆனந்தக் கண்ணீர்தான் வரும்... அவனோடு வாழ்ந்த வாழ்க்கையில் துன்பத்தை பார்த்ததினால் மட்டும் அவள் அப்படி நினைக்கவில்லை.. குறைந்தபட்ச மனுசி என்ற முறையில் கூட அவளையும் அவள் பிள்ளையையும் நடத்தியது கிடையாது..நிலா காலை உடைத்து மகளை ஊனமாக்கிவிட்டு, குற்ற உணர்ச்சியே இல்லாமல் மீண்டும் மீண்டும் காயப்படுத்தும் இவன் செத்தொழிந்தால் பிள்ளையாவது காயப்படாமல் வாழுமே என்ற விருப்பம் தான்..

கையில் வைத்திருந்த 2000 ரூபாய் நோட்டை மூக்கில் வைத்து நுகர்ந்து நுகர்ந்து பணத்தின் வாசனையை பார்த்தாள்

"அம்மாடி எவ்வளவு ரூபா, என்னை நம்பி தந்து விட்டிருக்கிறார் முதல்ல வேலைக்கு போறதுக்கு நல்லதா ஒரு சேலை எடுக்கணும் ..வேண்டாம், பாப்பாவுக்கு தான் உடுப்பு இல்ல பாப்பாவுக்கு ஒரு ரெண்டு துணி எடுத்துபோமா... துணி கடைக்குள் நுழைந்தவளுக்கு பணத்தை செலவழிக்கவும் மனமில்லை ஆனால் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்த பிறகு அப்படியே நாளைக்கு வேலைக்கு போய் நிற்கவும் மனம் இல்லை.. 

ஆளுக்கு ஒரு ஆடை எடுக்க நினைக்க ஜாக்பாட் அடித்தது போல ஒருவன் ஓடி வந்து

"வாங்க மேடம் உட்காருங்க என்ன வேணும் ? அப்போதுதான் தூங்கி முழித்த மகள் கண்ணை உருட்டி தாயை பார்க்க ...

"பாப்பாவுக்கு உடுப்பு எடுக்க வந்திருக்கோம் அய்யா 200 ருபாய்க்குள்ள ரெண்டு உடும்பு தாங்க..

"இன்னக்கி இந்த கடை தொடங்கி பத்து வருஷம் ஆயிடுச்சு மேடம் சோ ஏழு மணிக்கு உள்ள கடைக்கு நீ எடுக்க வர்றவங்களுக்கு எல்லாருக்கும் 5000 ரூபாய்க்கு டிரஸ் ஃப்ரீ ... இலவசம் ..நீங்க எவ்வளவு வேணாலும் எடுங்க" என்று கடைக்காரர் கூற ...

வேரல் வாயை பிளந்தாள் அவரோ தீத்தன் பிஏவுக்கு டன் என கை அசைக்க தீத்தனுக்கு உடனே செய்தி போனது... அவள் நடக்கும் பாதை எங்கும் முள்ளை நீக்கி மலர் தூவ ஆரம்பித்து விட்டான் 

"இதுதான் தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு போடறதுன்னு அர்த்தமோ?? இத்தனை நாளும் ஒண்ணுமே கிடைக்காம கிடந்தோம்... யார் முகத்துல முழிச்சேனோ தெரியல.. இன்னிக்கி எல்லாமே நல்லதா நடக்குதே பாப்பா... நாம நெறைய புது உடுப்பு போட போறோம் ... குழந்தை போல சிரித்தாள்.. 

திருமணம் முடிந்து வரும் பொழுது நாலு சேலையோடு வந்தாள்... பிள்ளை பிறந்ததும் பக்கத்தில் உள்ளவர்கள் ஆடை எடுத்துக் கொடுத்தார்கள் அவ்வளவுதான் இன்று வரை அவள் உபயோகப்படுத்தும் ஆடைகள்..

 அக்கம் பக்கத்தவர்கள் தன் பிள்ளைகளுக்கு உபயோகப்படுத்தும் ஆடை சிறிதாகி விட்டால் நிலாவுக்கு கொடுப்பார்கள் அதை புதுத்துணி போல சந்தோஷமாக வாங்கி மகளுக்கு போட்டுக் கொள்வாள் புது ஆடை எல்லாம் இன்று வரை யோசித்ததே இல்லை... முதல் முறையாக 5000 ரூபாய்க்கு ஆடை என்றதும் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனவள்..

"நிலா உனக்கு என்ன வேணுமோ எடு 

காசு கேக்க மாட்டாங்களா அம்மா "

அதான் அவரே சொல்லிட்டாருல்ல , 5000 ரூபாய்க்கு எடுக்கலாமாம் நிறைய எடுத்துக்கலாம்....

"ம்ம் 

"நாளையிலிருந்து அம்மா வேலைக்கு போறேன் இனிமே உனக்கு ஒரு கவலையும் வராம அம்மா பாத்துக்குறேன் ..."

"அப்போ அந்த ஆளு இனிமே நம்ம வீட்டுக்கு வர மாட்டாராமாம்மா... மகள் ஆசையாக கேட்க..

"ம்ம் கடவுள்கிட்ட நான் கேட்கிறது அது ஒன்னு தான் நிலா, அந்த மனுஷன் இனிமே நம்ம வீட்டுக்குள்ள மட்டும் இல்ல நம்ம வாழ்க்கைக்குள்ளையும் வரக்கூடாதுன்னு ..

"போன இடத்துல லாரி மோதி செத்துட்டா எப்படி இருக்கும் ம்மா ...என்ற மகள் ஆசை உண்மையாக நடந்தால் எப்படி இருக்கும் .... அவளுக்கும் அந்த ஆசை இருந்தது போல்..

"அதுக்கும் ஏதாவது வழி பண்ணுவார், இனி நமக்கு நல்லதே நடக்கும் தாயும் மகளும் பல வருடங்களுக்குப் பிறகு சிரித்து பேசி ஆடைகளை எடுத்துக் கொண்டவர்கள் கையில் வைத்திருந்த பணத்தில் வீட்டிற்கு தேவையான காய்கறி மளிகை சாமானை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.. 

வீட்டு வாசலில் கவுன்சிலர் அந்த தெருவில் பெரிய மனிதர்கள் எல்லாரும் நின்று கொண்டிருந்தார்கள்,,, இவள் வீட்டை எலும்புகூடு போல உடைத்து போட்டிருந்தார்கள் இவள் பயந்து போய் 

"என்ன அக்கா என்ன ஆச்சு எல்லாரும் எதுக்கு நம்ம வீட்டை சுத்தி இருக்காங்க.. என் வீட்டை ஏன் உடைச்சு போட்டிருக்காங்க

"அட வேரல் , உனக்கு விஷயமே தெரியாதா?

ம்ஹூம் வேலை தேடி போயிட்டு இப்ப தான் வர்றேன் என்ன ஆச்சு அக்கா "

இந்த குடிசை வீட்டை எல்லாம் ஒரே ராத்திரிக்குள்ள ஓட்டு வீடா மாத்துறதுக்கு ஏதோ ஒரு பெரிய மனுஷன் கோடிக்கணக்கில பணம் கொடுத்து இருக்காராம்..

அப்படியா ??!!

"ராத்திரியோட ராத்திரியா வீட்டை பூசி சரி பண்ணி கொடுக்க சொல்லி இருக்காரு போல இருக்கு...

"ஹான்

"ம்ம் அதோட இங்க வர்ற சாக்கடை எல்லாத்தையும் கிளீன் பண்ண, வேற தனியா ஒரு டீம் வருதாம்.. என்ன நடந்ததோ தெரியல.. கடவுள் நமக்கு கருணை காட்ட ஆரம்பிச்சுட்டாரு வேரல் என்று அக்கம் பக்கத்தவர்கள் எல்லோரும் ஆச்சரியமாக பரபரப்பாக வேலை நடக்கும் குடிசைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.... முதல் குடிசை இவளுடைய குடிசை தான் மறுசீராய்வு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது....வீட்டு வாசலில் குடிநீர் வேறு ... 

சிதைந்த அவள் குடிசை மட்டும் இல்லை அவள் வாழ்க்கையையும் சரி செய்ய தீத்தன் தீயாக வேலை செய்து கொண்டிருந்தானே... 

புது வீட்டில் முதல்முறையாக சந்தோசத்தில் தூக்கம் வராது தாயும் மகளும் கதை பேசிக்கொண்டு கிடந்தார்கள் 

அம்மா எனக்கு சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு தேவதை கதை சொல்லுவ இல்ல ..

ம்ம் 

"தேவதைக்கு நாம இருக்கிற இடம் தெரியாம சுத்திக்கிட்டு இருக்கு நாம இருக்கிற இடம் தெரிஞ்சா, உடனே வந்து எல்லா கஷ்டத்தையும் ஒரே நாள்ல நீக்கி போட்டுருவோம்னு சொல்லி இருக்கல்ல தேவதை நாம இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சுட்டு போலம்மா

ஆமா, அப்படித்தான் நினைக்கிறேன் நிலா , தேவதை நம்மள தேடி வந்துடுச்சு போல ..

ஆம் ஆண் தேவதை !போனில் அவர்களோடு ஐக்கியமாக வந்து விட்டான்.. இவ்வளவு நேரம் இருந்த மன நிம்மதி சற்று தொலைந்தது போல் திடுக்கிட்டு முழித்த வேரல் போனை எச்சில் விழுங்கி பார்க்க குழந்தை தாயின் இடையில் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு தூக்கத்திற்கு கண்ணை சொக்க ஆரம்பித்துவிட்டது ... மீண்டும் அவனின் அழைப்பு போனை எடுத்து காதில் வைத்தாள்..

போன் எடுக்க எவ்வளவு நேரம்டி ...

அவ்வளவு வேலையையும் ஒரே ஆளாக செய்து களைத்து வீட்டிற்குள் வந்த தீத்தன் முதல் வேலையாக அவளுக்குத்தான் அழைப்பு விடுத்துக் கொண்டு சட்டையை கழட்டினான்... காதில் போனை சரித்து வைத்துக் கொண்டவன் சட்டையை ஒரு கையால் கழட்டிக்கொண்டு நின்றான்...

சூறாவளி சுற்றுப்பயணம் போல ஒரே நாளில் அவளுக்கு என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்துவிட்டான..

இப்போதைக்கு அவளுக்கு அடிப்படையாக என்னென்ன தேவையோ அதை செய்து கொடுத்தான் ....

"அம்மு இருக்கியா ?

"இருக்கேன் சார் உற்சாக குரல் வந்தது ....  

"என்ன மேடம் குரல் குஷியா இருக்கு 

சார் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்..

"ரெண்டு கூட சொல்லலாம

"ப்ச் விளையாடாதீங்க சார் பேச விடுங்க

"சரி என்ன விஷயம்டி..

"அதுவா எனக்கு வேலை கிடைச்சிருக்கு

ஓஹோ என்ன வேலை ? அவளிடம் பதில் இல்லை..

"ம்ம் அப்போ வேலை கிடைச்சதும் என்ன விட்டுட்டு ஓடிடலாம் பாக்குற போல இருக்கு ... 

"அது 

"நான் கொடுத்த பணத்துக்கு பேசித்தான் ஆகணும் நேத்தே சொல்லிட்டேனே..

"ஆமா சார் நானும் பேச மாட்டேன்னு சொல்லலையே ஆனா ஒரே ஒரு நிபந்தனை...

"ஓஹோ காசு கொடுத்த எனக்கே நிபந்தனையா சொல்லுங்க மேடம் கேட்டுக்குறேன் என்றான் குளியல் தொட்டியில் போய் படுத்துக்கொண்டு அவன் மீது சுடுநீர் அருவி போல விழ ஹெட்போனை போட்டுக்கொண்டு தொட்டியில் சாய்வாக அமர்ந்து அவளிடம் பேசுவதற்கு வாகாக உட்கார்ந்து கொண்டான்

"கோவப்படாதீங்க சார் நாம ரெண்டு பேரும் ஏன் நட்பா பேசக்கூடாது.... இவனை எதிர்க்க பயம் எதிர்க்கும் அளவு தப்பு ஒன்றும் அவன் செய்ததும் இல்லையே ...

"என்ன சொல்ல வர்ற 

"உங்களுக்கு பேச்சு துணைக்கு ஆள் வேணும் கொடுத்த காசுக்கு நான் பேசியும் ஆகணும் நாம ரெண்டு பேரும் எப்பவும் போலவே அதே மாதிரி எல்லை கோட்டுக்குள்ளயே பேசுனா எப்படி? நாசுக்காக பேசும் அவள் பேச்சில் சிரித்தவன்

"ஆக மொத்தம் என்கிட்ட உனக்கு காதல் பேச்சு பேச வராது, பேச மாட்ட அப்படித்தானே..

"ஹிஹி 

'சரி விடு எங்க போயிட போற, என்னைக்கா இருந்தாலும் மாட்ட தான் போற அப்ப பாத்துக்கிறேன் பிறகு வேலைக்கு சேர்ந்து இருக்கேன்னு சொன்னியே முதலாளி எப்படி இருக்காரு ... நல்லா பேசுறாரா நல்லா நடந்துக்கிறாரா ஆர்வமாக அவள் பதிலுக்கு காத்திருந்தான் .... 

"ஆமா சார் ரொம்ப நல்ல மனுஷன், என்ன கொஞ்சம் உங்கள போல நக்கல் தான் ஜாஸ்தியா இருக்கு ... பேச்சுக்கு பேச்சு நக்கல் பண்றார்.. மத்தபடி ஆளு நல்ல மாதிரியாத்தான் தெரியுது..

அப்போ இனிமே மேடத்தை கையிலேயே பிடிக்க முடியாது போல இருக்கே, எவ்வளவு சம்பளம் காலையிலிருந்து இப்போது வரை நடந்ததை ஒரே மூச்சாக சொல்லி முடித்தவள் 

உண்மையா ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் யாருகிட்டயாவது இதையெல்லாம் சொல்லி சந்தோஷப்படணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன் நீங்க போன் போட்டதும் எல்லாத்தையும் சொல்லிட்டேன், அவள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இடத்தில் அவன் இருக்கிறான் என்பதே அவனுடைய முதல் வெற்றி தான்..

"சரி நாளைக்கு காலைல வேலைக்கு போகணும்ல

"ம்ம் 

"போய் படுத்து தூங்கு 

"சரி சார் சாப்பிட்டீங்களா 

"இல்ல வேலை முடிச்சு இப்பதான் குளிச்சிட்டு இருக்கேன்

"குளிச்சு முடிச்சதும் சாப்பிட்டு தூங்குங்கசார்..

வேலை வேலைன்னு உடம்பைக் கெடுத்துக்காதீங்க

"சரிங்க மேடம் நீங்களும் இனிமே வேலைன்னு உடம்ப கெடுத்துக்காதீங்க, வேலை கிடைச்சிருச்சு புது முதலாளி கிடைச்சிருக்காருன்னு என்ன டீல விட்றாதடி 

"ச்சேசே இல்ல சார் நிதமும் உங்க கூட நான் பேசுறேன் 

இச் 

"சார் இஇஇஇ 

"நீ நட்பா பேசுடி , நான் காதலியா தான் உன்ன பார்பேன் ஐ லவ் யூ இச் என்று தீத்தன் போனை வைக்க 

"எல்லாம் சரியா தான்,பேசறார் இது தான் சரியில்லை, பேசி பேசி திருத்திடணும் அவருக்கு ஏத்த பொண்ணு வந்தா இந்த விளையாட்டு நிப்பாட்டிடுவார் என்று புலம்பி கொண்டே கண்ணை மூட கலர் கலர் கனவுகள்... 

காலை மகளை தயார் செய்து அவளுக்கும் தனக்கும் சாதமும் துவையலும் ரெடி செய்து கூடையில் வைத்து கொண்டு தீத்தன் கம்பெனி நோக்கி ஓடினாள்.... 

அவள் கண்ட கனவுகளுக்கு எல்லாம் வண்ணம் கொடுக்க அவன் தயார் அவள் தயாரா??