வேரலை மேய்ந்த வேழம்14

Veral14

வேரலை மேய்ந்த வேழம்14

14 வேரலை மேய்ந்த வேழம் !! 

காட்டன் சேலையில் ஆபிஸ் முழுக்க சுற்றி வருவது நம்ம வேரலா? என்று ஆச்சரியப்படும் அளவு மாற்றம் அவன் கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது 

"ராபின் அண்ணன் கிளீன் பண்ற அக்கா வரல என்னன்னு பாருங்க சார் வந்தா கோவம் வரும்...

சரிங்க மேடம் பார்க்கிறேன் ...

"அக்கா சார் ரூம் டேபுள்ல உள்ள பூ காஞ்சு போச்சு வேற வாங்கிட்டு வாங்க 

"சரிங்க மேடம் "

"சத்தம் குறைவா வச்சி பாட்டு கேளுங்க சாருக்கு சத்தம் வந்தா ஆகாது" என்று அவன் வருகைக்கு ஆபிஸை தயார் செய்து கொண்டு நின்றாள் வேரல் ... காலை ஏதோ மீட்டிங் முடித்து விட்டு பரபரப்பாக தீத்தன் உள்ளே நுழைந்தான்.... 

ஈவினிங் மீட்டிங் இருக்கு நீயும் வா என்றவன் தலையை தட்டினான்

 "என்ன நிலா உன் அம்மா பேஸ் டல்லா இருக்கு 

"அதுவா வயித்து வலியாம் என்று குழந்தை காலையில் அவன் காதில் கிசுகிசுக்க 

"வேண்டாம் நீ ஆபிஸ்ல இரு .... என்று ஆபிஸில் இறக்கி விட்டவன் ராபினை அழைத்து 

"அவளுக்கு இளநீ ஜூஸ்னு ஒரு மணிநேரத்துக்கு ஒன்னு வாங்கி கொடு ,வேரல் "

ஹான் சார் 

"வேலை எதுவும் இல்லை மீட்டிங் நான் போயிக்கிறேன், நீஆபிஸ் ரெஸ்ட் ரூம்ல ரெஸ்ட் எடு 

இல்ல அது அவன் பார்வை அழுத்தமாக படிய 

சரி சார் என்று ரெஸ்ட் ரூமில் அவன் படுக்கை மீது தூங்கும் உரிமை அவளுக்கு கிடைத்தது ஏன் என்று இன்னும் அவள் அறிய வில்லை... 

உள்ளே வந்தவன் பையை அவள் ஓடி வந்து வாசலில் வாங்கி கொள்ள 

ப்ச் உன்ன ரெஸ்ட் தான எடுக்க சொன்னேன் ...

இல்லை சார் இவ்வளவு நேரம் தூங்க தான் செஞ்சேன் .... தன் உபாதை அறிந்து விட்டான் என்று கண்டுகொண்டவளுக்கு தயக்கமும் அதே சமயம் அவன் மீது மதிப்பும் கூடி போனது 

எவளுக்கும் வராததா, உனக்கு மட்டும் தான் அதிசயமா வருதோ? என்று வயிற்றில் ஓங்கி மிதித்த கேசவன் எங்கே , ஓய்வு எடு என்ற இவன் எங்கே?? 

இதோ வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஓடியே விட்டது..போன கேசவன் திரும்பி வரவேவில்லை என்ற நிம்மதியே இருவருக்கும் இப்போது பெரிய வரம் ... 

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னவன் சமைச்சுட்டு வர்றதுக்கு 5000 ரூபாய், ஓவர் டைம் பாக்குறதுக்கு 5000 , என் கூட வேற பிரான்ச் வர்றதுக்கு 3000 என்று அவனாக ஒரு கணக்கை போட்டு முதல் மாதமே வேரல் கை நிறைய காசை கொடுக்க.... அவளோ இவ்வளவு பணத்தை ஒருசேர பார்த்தவள் பதறிப் போனவளாக

"இல்ல சார் எனக்கு பத்தாயிரம் ரூபாயே போதும் என்றவள் பதட்டம் இன்னும் அவளை பிடிக்க வைத்தது... பணத்தைக் கூட வேண்டாம் என்று சொல்ல பெரிய மனது வேண்டுமே ..

"நான் தந்தா ஏன் எதுக்குன்னு இன்னொரு தடவை கேட்காதே.... எனக்கு எப்ப காபி வேணும் டீ வேணும்னு பாத்து போட்டு தந்தா மட்டும் போதாது, எனக்கு எப்போ கோபம் வரும்னு புரிஞ்சுகிட்டு நடந்துக்க ...

"சார் காசு எடுத்து பத்திரமா கூடையில வச்சுக்கிட்டேன் என்று வேரல் அவசரமாக பணத்தை எடுத்து வைத்து விட்டு வந்து நிற்க.. இவனுக்கு மெலிதாக மின்னல் போல் ஒரு சிரிப்பு மின்னி மறைந்தது... பல சமயங்களில் அவளைக் கொஞ்சினால் ஆகவே செய்யாது மிரட்டியே காரியம் சாதிப்பான்.. 

காலையில் மட்டும் இட்லி, பூரி என்று அவனுக்காக பார்த்து பார்த்து செய்து கொண்டு வருபவள் , மதியம் கஞ்சி கருவாடு என எதையாவது ஒப்பேற்ற கொண்டு வருவாள்... இதை அவன் கவனிக்காமல் இருந்தது இல்லை

அதான் சம்பாதிக்கிறல்ல நல்ல சாப்பாடு கொண்டுட்டு வந்தா என்ன... துட்டெல்லாம் என்ன செய்வ என்று அவன் கேட்டே விட

"இல்ல சார் பாப்பாவுக்கு காலை எப்படியாவது சரி பண்ணனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்... நீங்க கொடுக்கிற காசை அப்படியே சேர்த்து வச்சா பாப்பாவை ஆஸ்பத்திரில பார்த்து அவ காலை சரி பண்ணிடலாம்ல , அதான் என்று வேரல் தலையை சொரிய..

"ஓஓஓ அவ்ளோ பெரிய மனுஷியா ஆயிட்டியா, முதல்ல சாப்பிட்டு உன்னை தேத்து "

"எனக்கு என்ன சார் உங்க புண்ணியத்துல மூணு வேளை சாப்பிடுறேனே "

"கிழிச்ச, ஓங்கி காத்தடிச்சா, ரெண்டா உடைஞ்சு கிடப்ப போல இருக்கு ... 

"அதெல்லாம் நல்லா சாப்பிட தான் செய்வேன் சார் 

" நீ சாப்பிடுறதை தான் பார்த்து இருக்கேனே , குருவி கூட உன்னை விட அதிகமா சாப்பிடும்.."

"என்ன பார்த்தா என் மக காலை எப்படி சரி செய்ய சார் எனக்கு இதுவே போதும் என் மகளை 

"ஸ்ஊஊ கிழவி போல பேசாத , உன் மகளுக்கு காலை சரி பண்றது பத்தி நான் பார்த்துக்கிறேன் நீ உன்ன பாரு போதும் "

சார் 

"இன்னும் நீ கிளம்பலையா 

கிளம்பிட்டேன் 

"ஏய் 

"எ.ன்ன சார் வேணும் ? 

"இனிமே மதியம் எனக்கும் சேர்த்து சமைச்சுட்டு வா மதியமா சமைச்சிட்டு வர்ற என்று முடித்து விட...

ஹான் ம்ம் அவன் பேச்சுக்கு மறுப்பே பேச முடியாதே... கடவுள் படம் அருகே இவன் படத்தையும் மாட்டி வைக்கலாமா யோசனையில் தாயும் மகளும் இருக்கின்றனர், அவள் வாழ்க்கையில் கடவுள் செய்யாதது கூட அவன் செய்து கொண்டிருந்தான்.... 

காலையில் ஒரு வெரைட்டி மதியம் ஒரு வெரைட்டி என்று அவனுக்கு செய்து கொண்டு வருவதில் அவளும் சாப்பிட்டு இப்போதெல்லாம் ஆள் மினுமினுப்பாக தான் அலைகிறாள் ..இத்தனை நாள் பஞ்சத்தில் அடிபட்ட உடல் போல் இருந்தவள் இப்போது எல்லாம் வனப்பு கூடி புசுபுசுக்கென்று அவன் கண்ணை கிளறத்தான் செய்கிறாள்... 

ஆனால் அவள் கழுத்தில் கிடக்கும் அந்த மஞ்சள் தாலியை பார்க்கும் பொழுதுதான் கடுப்பாகி போய் அவளை ரசிக்காமல் தலையை திருப்பிக் கொள்வான்... 

இதை என்னத்துக்கு கழுத்துல போட்டு இருக்கா அதை பார்த்தாவே கடுப்பாகுது 'என்று பல்லை கடிப்பான் .. 

இரவு டி.கே சார் வேற விடாது லவ் பண்ணு லவ் பண்ணு என்ற டார்ச்சர் பண்ண, சும்மா இருங்க சார் விளையாடிகிட்டே இருக்காதீங்க உங்க வீட்ல சொல்லி நல்ல பொண்ணா பாருங்க இல்ல உங்களுக்கு நல்ல பொண்ணா பாத்து நான் கல்யாணம் கட்டி வைக்கிறேன்"

" உன்னை கட்டிக்கிறேன்னு சொன்னா நீ என்னடி எனக்கு பொண்ணு பாத்து தரேன்னு சொல்ற, சரி அதை பிறகு பார்க்கலாம்.. ஆமா உன் முதலாளி இன்னைக்கு என்ன செஞ்சாரு முதலாளி புராணமா பாடுவ இன்னைக்கு சத்தமே இல்லை...

"எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார், தெருவுல எல்லாரும் என்ன தப்பு தப்பா பேசுறாங்க இனிமே ஆட்டோவில் வந்துடுறேன் சார்னு சொன்னா அப்படித்தான் கூட்டிட்டு போவேன்னு சொல்றார்.. மகளுக்கு வெளிநாட்டில் இருந்து ஏதோ டாக்டர் வர சொல்லி இருக்காராம் அவள் குரலில் மீ மகிழ்ச்சி தெரிந்தது.. 

ஓஓஓ எதுக்கு 

அவ கால சரி பண்றதுக்கு , 

"நல்லது தானே.. சந்தோஷம்னு வாய பொத்திக்கிட்டு அவரை தர்றதெல்லாம் வாங்க வேண்டியது தானே "

"எனக்கு ஒரு மாதிரி இருக்கு டிகே சார், யார்கிட்டயும் வாங்கி பழக்கம் இல்லையா .. இவர் அள்ளி அள்ளித் தரும்போது பயமா இருக்கு , இன்னும் ஒரே ஒரு உதவி மட்டும் கேட்கலாம்னு இருக்கேன் 

"என்ன ராத்திரியானா ஒரு ஆம்பள பிசாசு எனக்கு போன் போட்டு தொல்லை பண்ணுது, அவனுக்கு காசு கொடுத்து எப்படியாவது என் வாழ்க்கையை விட்டு விலகி விடுங்கன்னு சொல்ல போறியா என்றதும் அவள் கலகலவென சிரித்து விட  

முதல்ல அப்படியும் யோசிச்சேன்.. ஆனா, உங்களால ஒரு தொல்லையும் இல்லை.. அதைவிட நாள் முழுக்க இருக்கிற அழுத்தத்தை உங்ககிட்ட சொன்னா கொஞ்சம் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்குது அதனால பொழைச்சு போங்க? எனக்கு எப்பவும் நீங்க நண்பர் மட்டும் தான் என்று தினமும் சிறிது நேரம் இன்று முழுவதும் நடந்ததை பேசுவாள்

அதில் முக்கால்வாசி என் முதலாளி என் முதலாளி அப்படி செஞ்சார் இப்படி செஞ்சாரு என்று அவன் புராணம் தான் இருக்கும் ... டி.கேவாக அவள் நெஞ்சில் இடம் பிடித்தானோ இல்லையோ தீத்தனாக இடம் பிடித்தான்.. ஆனால் இரண்டு பேருமே அவள் காதலனாக இடம் பிடிக்கவில்லை என்பதுதான் கோடிடப்பட வேண்டிய ஒன்று

புது கல்யாணம் முடிஞ்சவ மாதிரி முகத்துல பாலிஷ பாத்தியா?? தீத்தன் காருக்காக வீட்டின் முன்னால் வேரல் காத்து நின்றாள்...  

அந்த இடைவெளியில் பெண்கள் எல்லோரும் அவள் ஆடை அலங்காரத்தை பற்றி கேலி செய்து சிரித்தனர் 

போன வாரம் எங்கோ போய்விட்டு வந்த தீத்தன் கை நிறைய கவரை நிலா கையில் கொடுத்தான் 

"என்ன சார் இது 

"பெங்களூர் போயிருத்தேன்ல அதான் உனக்கு ட்ரெஸ் பொம்மை எல்லாம் வாங்கிட்டு வந்தேன் 

"ஓஓஓ அம்மா இங்க பாரு நல்லா இருக்கா 

"ம்ம் , 

"இந்தா இது உனக்கு என்று கவர் வந்து அவள் மடியில் விழ.. வேண்டாம் என்றால் கிழி விழும் எதுக்கு வம்பு என்று திறந்து பார்க்க காட்டன் புடவைகள் பலது இருக்க 

"சார் 

"எல்லா பிஏவுக்கும் எடுத்து கொடுக்கிறதுதான் ஆள் பாதி ஆடை பாதி என்கூட வரும் போது என் பிஏ டிசென்டா இருக்கணும்னு நினைப்பேன் 

அதெல்லாம் சரிதான் பிஏவுக்கு புடவை கூடவா எடுத்து குடுப்பாங்க 

"நான் எடுத்து கொடுப்பேன் நாளையில இருந்து கட்டிட்டு வா .... 

"ம்ம் ஜாக்கெட் தைக்க கொடுக்கணும் என்று மகளிடம் அவள் கூற 

"அதுல இருக்கு ,அளவு சரியா இருக்கான்னு மட்டும் பார்த்துக்க அளவு சரியா தான் இருக்கும் என்று இறங்கி போன அவனை நெளிந்தபடி பார்த்தாள் 

"பிஏவுக்கு ஜாக்கெட் கூட எடுத்து கொடுக்கிறது என் வழக்கம் தான் "என்று அவன் சத்தம் வேற 

"நான் எதுவும் கேட்கவே இல்லை சார் நாளைக்கு போட்டுட்டு வர்றேன் முடித்து விட உல்லாசமாக விசில் அடித்தான் 

"இவ அமைதியா வாங்குவான்னு தெரிஞ்சு இருந்தா பூவும் வாங்கிட்டு வந்து இருக்கலாமோ, ப்ச் அது கொஞ்சம் ஓவரா இருக்கும்..என்று தோளை உலுக்கி கொண்டவன் தினம் தினம் தான் எடுத்து கொடுத்த சேலையை கட்டி கொண்டு வரும் அவளை நிறைய ரசித்து மனப்பெட்டகம் உள்ளே சேமித்து வைக்கவும் மறக்க வில்லை, அவன் போனில் அவளுக்கு தெரியாது போட்டோ எடுத்து சேமிக்கவும் மறக்கவில்லை ... 

அவன் கருப்பு நிற ஜகுவார் அந்த குட்டி தெருவில் மெதுவாக ஊர்ந்து வந்தது... குழாய் அடியில் நின்ற பெண்கள் எல்லாம்

ஆத்தாடி வந்துட்டார் என்று அறக்க பறக்க கலைந்து ஓடிவிட்டனர் ..

"அது என்னவோ அவளை வம்பு பேசும் நபர்கள் எல்லாம் படாத பாடு படுகிறார்கள், அதை அவளும் பார்க்க தான் செய்கிறாள்.. 

"நேத்து தான் என்ன திட்டிச்சு அந்த பொண்ணு, இன்னைக்கு வேலை போயிடுச்சு போல" என்று எதேச்சையாக அவனிடம் கூற 

"போக வச்சது நான்தான என்றான் தோளை உலுக்கியபடி 

"சார் ஏன் எதுக்கு ??"

பின்ன உன்ன பத்தி காஸிப் பேசினா ஓகே, என்னையும்ல உன்கூட வச்சி பேசுறாங்க அது பிடிக்கல அதான் ....

ஓஓஓஓ அவன் சொல்லுவது எல்லாத்தையும் அப்படியா என நம்பும் தத்தி காதலியை கட்டி அணைத்து இச் கொடுக்கும் நாளை தேடி காத்திருக்கிறான் .

அவசரத்தில் அவளை காதலிக்க வில்லை 

ஆயுள் வரை அவளே வேண்டும் என்று காதலிக்க தொடங்கியவன் 

ஆயுள் வரை அவளை தொடரத்தான் செய்வான்..