வேரலை மேய்ந்த வேழம் 19
Veral18

19 வேரலை மேய்ந்த வேழம் !!
ரத்தம் கக்கி கிடந்த கேசவனை தீத்தன் ஆட்கள் வந்து இழுத்து கொண்டு போக
___ தா என்னை அடிச்சு போட்டு, அவன் கூட படுக்க போறியா. புளுத்து தான்டி சாக போற , உன்னையும் உன் பிள்ளையையும் கொல்லாம விட மாட்டேன் என்று கத்தி கொண்டே கேசவன் தரையில் இழுப்பட்டு கொண்டிருந்தான்...
இருவரும் உயிர் பிழைத்தோம் என்ற நிலையில் தாயும் மகளும் நடுங்கி போய் நிலாவை கட்டிக்கொண்டு வேரல் அமர்ந்திருக்க அவள் உடல் இன்னும் கிடுகிடுவென ஆடியது...
அம்மு என வேக எட்டில் ஓடி வந்த தீத்தன் அவள் அருகே குத்த வைத்து அமர்ந்து தன் கர்சீப்பை எடுத்து அவள் நெற்றியில் கட்டு போட்டு விட்டவன்...
நிலாம்மா என்றதும் அவன் கைக்குள் அடைக்கலம் ஆன பிள்ளையை அணைத்து தூக்கி கொண்டு தீத்தன் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்க ...
பிரம்மை பிடித்தவள் போல இருந்த வேரல் , தீத்தன் மகளை தூக்கி கொண்டு போகவும் அதிர்வு நீங்க அவன் பின்னால் ஓடி வந்தாள் ...
சார் நிலாவை தூக்கிட்டு எங்க போறீங்க ?பதில் இல்லை காரை நோக்கி அவன் நடக்க ஆரம்பித்தான் ...
கரும்பு தோட்டத்திற்குள் யானை புகுந்து முழுக்க சேதம் பண்ணுவது போல ஏனோ தானோவாக போய்க்கொண்டிருந்த அவள் வாழ்க்கை முழுவதையும் உள்ளே நுழைந்து கபளீகரம் பண்ணி விட்டான் இந்த தீத்தன் ... அத்தோடு விட்டானா? திடீரென்று குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே நடக்க ஆரம்பிக்க....
அவள் வீட்டு வாசலில் தான் மொத்த கூட்டமும் ஆ என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது... இவளுக்கு யார் முகத்தையும் பார்க்க முடியாத அளவு மானம் போய் நின்றாள் ....
புருஷன் அடித்து உதைத்து இவளை வேசி போல பேசி அவள் மானத்தை கடை பரப்பி விட்டான், அவன்தான் அத்தனைக்கும் சுழி போட்டது என சொன்னால் நம்பவா போகிறார்கள்..
யாரிடம் போய் தன் நிலைமையை எடுத்துக் கூற அத்தனை பேரும் அவளை கண்ணாலும் உதட்டாலும் அருவருப்பாக பேசியும் பார்த்தும் வைக்க .. இப்போது அத்தனை பேர் பார்வையும் உள்ளே நுழைந்த வாட்டசாட்டமான தீத்தன் மீது.. ஆனால் அவளைப் பேசிய நாவுகள் எதுவும் இவனை பேச முடியாதே மௌனமாக நின்றது..
ராபின் "
"எஸ் சார் என்று ஒரு தடியன் ஓடி வந்து அவன் முன்னால் தின்றான்
இனிமே , அந்த நாய் இந்த பக்கம் வந்தான் என்கிட்ட கேட்கணும்னு தேவையே இல்லை ஆள முடிச்சிடு கேசை நான் பாத்துக்குறேன்...
இப்படி ஒருத்தன் உசுரோட இருக்கணும்னு அவசியமே இல்லை..
"ஓகே சார்
"அன்ட் , எவனாவது என் பொண்டாட்டிய தப்பா பேசினான் அவனுக்கும் அதையே செஞ்சிடு அத்தனை பேர் கேட்கத்தான் அவன் சிங்கம் போல கர்ஜித்தான்..
பொண்டாட்டியா?? இது என்னடா புது கதையா இருக்கு என்று வாயைப் பிளந்தவர்கள் கூட மௌனமாகத்தான் கிசுகிசுத்துக் கொண்டு நின்றனர்.. சத்தம் அவன் காதுக்கு போய் போட்டு தள்ளி விட்டு போய்விட்டால்..
"சார் நிலாவ எங்க கூட்டிட்டு போறீங்க??" காரின் முன் இருக்கையில் நிலவை உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டிருந்தான் தீத்தன் ..
நிலாவும் கேசவன் ஆடி விட்டுப் போன கோர தாண்டவத்திலிருந்து இன்னும் வெளியே வரவில்லை , அப்படியே ரோட்டை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் எத்தனை நாள் தான் பதறிப் பதிரறி வாழ ..குழந்தை பிஞ்சு அல்லவா நடுங்கியே போனது...
சார்,என் குழந்தை
ஷட் அப்இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ கூட்டை விட்டு பறவைகள் அவன் அலறிய அலறலில் தெறித்து ஓடியது இவள் ஜெர்க்ஆகி நிற்க
"அது என்னடி என் குழந்தை என் குழந்தைங்கிற, இனிமே இதுதான் என் குழந்தையும் ... என்றான் அழுத்தமான வார்த்தையில்
ஹான்
"ம்ம் , இட்ஸ் மை பேபி .. புரியுதா? ...
ம்ம்
என் குழந்தைக்கு ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட்க்கு டாக்டர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன் கூட்டிட்டு போறேன்... போதுமா விளக்கம்
நீங்க என் வாழ்க்கையில செஞ்சது எல்லாத்துக்கும் நன்றி இத்தோட எங்களை விட்டுடுங்க சார்... காப்பாத்த வர மாட்டானா என ஏங்கிய நெஞ்சா இது வஞ்சகமாக மீண்டும் பேச ஆரம்பிக்க ,அவள் கண்ணில் தெரிந்த கலவரம் படிக்க அறியாதவனா?
"ஓகே விட்டா என்ன பண்ண போறீங்க மேடம் ?
"நானும் என் குழந்தையும்
"மறுபடி சொல்லு நீயும் ??பல்லை கடித்தான்.. விட்டு பிடிக்கலாம் என நினைத்தான் ,ஆனால் இவளை இவள் போக்கில் விட்டால் இனி பிடிக்க முடியாது என்று தெரிந்து விட்டது கொத்தாக தூக்கிட வேழம் அடி போட்டு விட்டது...
"நானும் நிலாவும் எங்கேயாவது
"எங்க போக போற ...
அது
"அந்த நிலாவுக்கே போனாலும், அங்கேயும் நான் வருவேன்... உன்னை விடுறதா ஐடியாவே இல்ல... 10 மணிக்கு அப்பாயின்மென்ட் இருக்கு , உன்கிட்ட பேசி என்னால எனர்ஜியை வேஸ்ட் பண்ண முடியாது... உன்கூட பேசினா டென்ஷன் ஆகும் , இல்லைன்னா எரிச்சல் ஆகும் .. தயவு செஞ்சு வழியை விட்டு நகண்டு நில்லு... நான் ஹாஸ்பிட்டல் போகணும்...
"முடியாது சார் நிலாவை என்கிட்ட கொடுங்க
"அப்படியா சரி, அவளே என் கூட வர்றேன்னு சொல்லிட்டா அம்மையார் என்ன செய்யப் போறீங்களா?
"அப்படி எல்லாம் என் மக சொல்ல மாட்டா..
"ஓஹோ என்றவன் நிலாவின் பக்கமாக திரும்பி அமர்ந்து அவள் தலையை தடவி கொடுத்து
"அது யாரு??? என்று வேரலை நோக்கி கையை காட்ட குழந்தை மலங்க மலங்க முழிக்க ... தீத்தன் நிலாவை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டவன் பாதுகாப்பாக அவளை அணைத்துக் கொண்டு..
"இப்ப சொல்லு, அது யாரு ? அவன் கையணைப்பில் இருந்த பயமெல்லாம் நீங்கி போனதுவோ..
"அம்மா என்றது
"சரி நான் யாரு ???
சார்
"ம்ஹூம், உன் மனசுல எனக்கு ஒரு இடம் வச்சிருக்க தான குட்டி அந்த இடம் எதுன்னு கேட்டேன் என்ன எப்படி கூப்பிட பாப்பாவுக்கு பிடிக்கும்
"அது ஊஊஊ
"நான் இருக்கேன் சொல்லு என்று நிலாவின் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசியபடி தீத்தன் கேட்க
அப்பாஆஆஆ என்றதும் கர்வமாக புருவத்தை தூக்கி வேரலை பார்த்து நக்கலாக சிரித்தான்....
சாதித்து காட்டி விட்டானே ... இதை விட, அவன் தூய அன்புக்கு வெகுமதி ஏதேனும் உண்டோ??!
கேட்டியா பேரல் , நான் அப்பாவாம் இப்ப என்ன செய்ய போற அவள் அதிர்ந்த பார்வையை அசட்டை செய்யாமல்...
"மறுபடி சொல்லு நிலா நான் யாரு ?
"அப்பா அது அம்மா என்றது
"நல்லா கேட்டுக்கிட்டியா, நீ அம்மா, நான் அப்பாவாம் கேட்க செமையா இருக்குல்ல..
ப்ச், அவ குழந்தை சார், அவளுக்கு என்ன தெரியும்? பயம் போய் ஊடலுக்கு உதடு துடித்து நின்றாள் அதுதானே வேண்டும் ...
"உன் அளவுக்கு அவ ஒன்னும் முட்டாள் இல்ல அதனால தான் அப்பா யாருன்னு உடனே தெரிஞ்சுகிட்டா"
"சார் இதெல்லாம் அபத்தமா இல்ல..
"என்னடி அபத்தம் , புள்ள கொடுத்தா மட்டும் தகப்பன் கிடையாது, ஒரு பிள்ளைக்கு அன்பும் ஆதரவும் , அரவணைப்பும் கொடுக்குறவன் தான் உண்மையான அப்பா.. அப்படி பார்த்தா அவ மனசுல நான்தான் அவளோட அப்பாவை பதிஞ்சு இருக்கேன்.. நீ குறுக்க வராத , உனக்கு என் கூட வாழ புடிக்கலல்ல, என்ன கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலல்ல , அப்படியே ஓடிரு... ஆனா என் பிள்ளைக்கு செய்யாத , என் புள்ளைய பார்க்க வராதுன்னு சொல்றதுக்கு உனக்கு கூட உரிமை இல்லை... ஐயோ பாவமேன்னு தான் பாப்பாவை உன்கிட்ட விடுறதுக்கு நான் சம்மதம் சொல்றேன் ... இல்லன்னா பாப்பாவை தூக்கிட்டு நான் எப்பவோ இடத்தை காலி பண்ணி இருப்பேன்..
யார் பிள்ளையை யார் தூக்கிட்டு போறது என்பது போல் அவள் நின்றாலும் அவனை எதிர்த்துப் பேசவோ எதிர்த்து பேசவோ அவளால் முடியுமா என்ன ? வேரல் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு பாவமாக அவனையும் மடியில் சமத்தாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் மகளையும் பார்ப்பதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை..
"வழியை விட்டு நகர்றியா இல்ல நீயும் கூட வரியா?? ஏதாவது ஒரு முடிவை எடுத்து தொலைடி, எனக்கு நேரம் ஆகுது "கையை பிசைந்து கொண்டே நின்றவள் விறு விறுவென்று வந்து காரின் பின் கதவை திறக்க போக அதை திறக்காமல் சண்டித்தனம் செய்தவன்
"பின்னாடி கதவு ரிப்பேராகியிருக்கு திறக்காது, முன்னாடி கதவு மட்டும் தான் இனி திறக்கும் முன்னாடி வந்து உட்கார் "என்றான் வேண்டுமென வம்பு செய்தபடி ...
எங்கே பிள்ளையை தூக்கிக் கொண்டு போய் விடுவானோ என்ற பயத்தில் தான் அவனோடு போவதற்கு சம்மதம் சொல்லி முன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்
"புருஷன் சரியில்லன்னா புது புருஷன் பிடிப்பாளா என்னடி இதெல்லாம் கதையா இருக்கு ..
"பாவம் கேசவன் இவ குணம் தெரிஞ்சதுனால தான் அவளை இப்படி அடிமைப்படுத்தி வச்சி இருக்கான்..
"இப்படி புருசன் இருந்த போதே, புது புருஷன புடிச்சுகிட்டு எப்படி ஜோடியா போறான்னு பாருங்க..
"என்னத்த சொல்ல இப்ப கூட இவரோட குழந்தை தான் வயித்துல இருக்காம்.. அதை கலைக்க தான் போறாங்களாம்... அன்னைக்கு ஒரு நாள் ராத்திரி மழை பெய்யும் போது இவளை கொண்டு வந்து கார்ல நிப்பாட்டுனார் இல்ல ... அன்னைக்கு தான் சம்பவம் நடந்திருக்கும் போல இருக்கு...
"ம்ம் கேசவனுக்கு இந்த விஷயங்கள் தெரிஞ்சு இருக்கு ,ஆள வச்சு அவன மிரட்டி கட்டி வச்சிருந்தாங்களாம்...
"சொந்த பொண்டாட்டி இப்படி எல்லாம் செஞ்சா ஒரு புருஷனுக்கு கோபம் வராம இருக்குமா என்ன..
"ம்ம் நானா இருந்திருந்தா, அவளை அந்த இடத்தில் வெட்டிக் கொன்னு போட்டிருப்பேன் கேசவனுக்கு விவரம் பத்தல, பொண்டாட்டியையும் விட்டுட்டு பிள்ளையையும் விட்டுட்டு இப்போ அடி வாங்கிட்டு போறான்..
"அதான் , இவர்கிட்ட பணம் இருக்கு, போதாக்குறைக்கு வாட்ட சாட்டமா இருக்கார்.. அதான் பணத்தையும் அழகையும் பார்த்ததும் மயங்கி அவன் பின்னாடி போறா போல இருக்கு..
"என்னதான் இருந்தாலும் புருஷனுக்கு துரோகம் பண்ணிட்டால்ல ... இவளை நான் இப்படி நினைக்கல .. இனிமே அவ கூட யாரும் சேரக்கூடாதுப்பா.. நமக்கு அவ குணம் வந்துரும் என்று கார் நகர நகர அவள் காதில் பிறர் பேச்சுக்கள் விழ.. அவளுக்கு உதடு துடிக்க அழுகை வர உதட்டை கடித்து அதை நிறுத்த கனபாடு பட்டாள்
யார் இவன்??
அவள் வாழ்க்கையில் வண்ணங்களையும் கொடுத்து நிம்மதியையும் கொடுத்து இதோ அவமானங்களையும் கொடுத்திருக்கிறான்.. ஆனால் அத்தனையிலும் அவளோடவே இருப்பேன் என்று அடம் பிடிக்கிறான் .... அவளுக்கு மட்டுமா அவமானம்... ஒரு தெருவுக்கு தெரிகிறதே என்று அவளுக்கு கூசுகிறது , நாடு முழுக்க அவன் பேச்சு தான் அவனோ நெஞ்சை நிமிர்த்தி கொண்டு ஆமாடா அவதான் எனக்கு எல்லாம் என்று நிற்கிறான்...
என்னிடம் என்ன இருக்கிறது? என்று என்னையும் என் பிள்ளையையும் தூக்கி தோளிலும் தலையிலும் சுமக்கிறான் புரியவில்லை... திரும்பி அவனை பார்த்தாள்..
அவள் பார்ப்பதற்காகவே தீத்தன் காத்துக் கொண்டிருந்தான் போலிருக்கிறது .. மடியில் மகளை வைத்து காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் தலையை திருப்பி அவளைப் பார்த்து என்ன என்றான்
எல்லாரும் என்ன" கையை நீட்டி தடுத்தவன்
"வாழ்க்கையில் நிறைய அழுதுட்ட, இனி அழுறதா இருந்தா என் லவ் டார்ச்சர் தாங்க முடியாமதான் நீ அழனும்... வேற ஏதாவது பேசு... அவன் அதை சொன்னான் , இவ இப்படி சொன்னான் எனக்கு அசிங்கமா போச்சுன்னு வாயைத் திறந்தேன்னு வை , கதவை திறந்து அப்படியே ஒரு மிதி, வெளியே தள்ளிவிட்டுடுவேன்.. நானும் , என் மகளும் ஜாலியா சுத்திட்டு மறுபடி வரும்போது மறுபடியும் தூக்கி உன்னை உள்ள போட்டு கூட்டிட்டு போயிடுவேன்... உனக்கு என்கிட்ட இருந்து விடுதலையே கிடைக்காது .. அதனால அழுறதை விட்டுட்டு ரோட்ட வேடிக்க பார்" என்று அவள் தலையை திருப்பி ரோடு பக்கமாக வைத்து விட்டவன்..
"அப்படித்தானே நிலா பாப்பா
"ஆமா அம்மா ஒரே அழுக்காச்சி என்ற மகளை மட்டுமே அவளால் முறைக்க முடிந்தது..
"குழந்தையை கொடுங்களேன் நான் வச்சுக்கிறேன்
"ஏன் என் மடியில இருக்கிறதுனால உனக்கு வயிறு காந்துதா ...
"எல்லாத்துக்கும் வள்ளுன்னு விழுந்தா எப்படி என்று முணுமுணுத்துக் கொண்டு அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்
"ஒரு வருஷத்துக்கு முன்னாடி இந்த ட்ரீட்மெண்ட் பார்த்திருந்தா கண்டிப்பா காலை பழைய நிலைமைக்கு கொண்டு வந்திருக்க முடியும் தீத்தன் பட் டூ லேட் "
"ஓஓஓஓ எதுவும் செய்ய முடியாதா??..
"முடியாதுன்னு இல்ல ஆனா பெர்பெக்ட்டா கொண்டுவர முடியாது ... அதுவும் ,நாளைக்கு குட்டியா ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டியது இருக்கு ... பல வருஷம் கால அசைக்காமலே வச்சிருக்கறதுனால எலும்ப சுத்தி தசைகள் எல்லாம் வளர்ந்து எலும்ப அசைய விடாம வெச்சிருக்கு.. முதல்ல அந்த தசையை எல்லாம் நாம அகற்றணும்... அப்பதான் எலும்பு பிரீயா மூவ் ஆகுறதுக்கு நாம இடம் கொடுக்க முடியும் , சோ நாளைக்கு சாயங்காலமே நாம பஸ்ட் ஆபரேஷன் பண்ணிடலாம் தீத்தன்...
ஓஓஓஓ சரி "
என்ன சரி , நான் ஒருத்தி இங்க இருக்கேன் என்ற வேரல் சொல்ல நினைக்க முடியுமா என்ன?
ஆமா யாரு இவங்க தீத்தன்,
இது என்னோட பொண்ணு
பொண்ணா?? என்று அவனைப் பற்றி அறிந்தவர் வாயை பிளக்க
எஸ் இது என் பொண்ணு நிலா , அப்புறம் தூரத்தில் நின்று கொண்டிருந்த வேரலை அழைத்து தன் தோளோடு அணைத்து பிடித்து
"இது என் பொண்டாட்டி வேரல்தீத்தன்..
"கல்யாணம் ஆயிடுச்சா ??
"இல்ல இனிமேதான் கல்யாணம் ஆகப்போகுது அவர் புரியாமல் தலையை சொரிந்து கொண்டே நமக்கு எதுக்கு வம்பு என்று நிலாவின் காலை செக் செய்து விட்டு
"பாப்பா நடக்கிறதுக்கு ஆப்ரேசன் முடிஞ்சதும் இப்போதைக்கு சப்போர்ட் நட் போட்டு விடலாம் கொஞ்சம் எலும்பு சரியான பிறகு ஒரு குட்டி ஆபரேஷன் பண்ணிடலாம்... எலும்பு சேந்துடுச்சுன்னா நடக்கிறதுக்கு முடியும் ஆனா கொஞ்சம் ஏந்தி ஏந்தி நடப்பாங்க
"எப்படியோ என் பொண்ணு நடந்தா போதும், நடக்க முடியாம அவளை தூக்கிக்கிட்டு என் பொண்டாட்டி சுமக்கும் போது, அவ சுமையை எப்படியாவது குறைக்கணும்னு எனக்கு தோணிக்கிட்டே இருக்கும் அதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன்.. என் பொண்ணு நடந்துடுவாள்ல என்ற தீத்தனை கண் சிமிட்டாமல் தாயும் மகளும் பார்த்துக் கொண்டிருந்தனர்..
ஒருவன் காலை அடித்து உடைத்தான் இன்னொருவன் அந்த காலுக்காக கலங்குகிறான்..
பாப்பாவுக்கு கால் வந்துடும் ஹேப்பியா?? என்று குனிந்து நிலாவிடம் கேட்டபடி தீத்தன் அவளை தூக்க போக,நிலாவோ அவன் கழுத்தோடு கைவிட்டு இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து
"என் அப்பா கிடைச்சதுக்கு ஹேப்பி" என்று கூற நெற்றியோட நெற்றி மோதியவன்
"உன் அம்மாவுக்கு மட்டும் ஹேப்பி இல்ல போல இருக்கு "
"அம்மாவுக்கு இந்த அப்பாவை பத்தி தெரியல இந்த அப்பாவை பத்தி தெரிஞ்சா "
"அம்மாவும் இதே போல முத்தம் கொடுப்பாளா என்றவன் ஓரக்கண்ணால் அவளை பார்க்க.. சட்டென அவனை பாரத்து கொண்டு நின்ற வேரல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்
"முகத்தை முகத்தை திருப்புறியா இருடி எத்தனை நாளைக்குனு பாத்துக்கிறேன் , உன்னால என்ன அவாய்ட் பண்ணவே முடியாது... ஒன்னு என் பொண்டாட்டியா இரு , இல்ல என் கள்ள பொண்டாட்டியா இரு ... ஆனா எனக்கு பொண்டாட்டின்னா அது நீதான்.. போவோமா?? என்று அவள் இடையோடு இடித்து விட்டு மகளை தூக்கிக்கொண்டு வெளியே போக ...இவளும் அவன் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தாள்...
ஆனால் அவள் தனியாக நடக்கும் போது இருந்த பயம் அவனோடு நடக்கும் போது இல்லை என்பது மெய்யிலும் மெய்!!