வேரலை மேய்ந்த வேழம் 17

Velam17

வேரலை மேய்ந்த வேழம் 17

17 வேரலை மேய்ந்த வேழம் !! 

"அம்மா 

"ம்ம் 

"ஏன் சார் வந்து விடல

"அவர் வேலேயா இருக்கார் 

"என்ன வேலையா இருந்தாலும் நம்மள கூட்டிட்டு வருவாரே ஏன் வரல 

ப்ச் தெரில 

அம்மா 

என்னடி ?

நம்ம தெருவுல எல்லாரும் உன்னையே பாத்துட்டு இருக்காங்க ஏன்? இடுப்பில் உட்கார்ந்து இருந்த மகள் தாயை அனைவரும் பார்த்து ஒரு மாதிரி கேலி செய்து சிரிப்பதும் பேசுவதுமாக இருக்கவும் தாயிடம் கேட்க ... செய்தி இங்கேயும் காட்டு தீயாக பரவி விட்டது புரிய அவளுக்கு யாரையும் தலை நிமிர்ந்து பார்க்க முடியாது..

சும்மா இரு வீட்டுக்கு போயிடலாம் என்று தலையை குனிந்தபடி  வீட்டு வாசலில் வந்து நிற்க ... வீடு திறந்து கிடந்தது 

அம்மா வீடு திறந்து கிடக்கு"

ஆமா ,  அதான் தெரியல யாரு வந்திருக்கான்னு தெரியலையே.."

இவள் வாழ்க்கையை மட்டும் கடவுள் யார் யார் கையிலே கொடுத்து பொம்மையாக வைத்து விளையாடுகிறான் என்று புரிந்தது. அன்று கணவன் என்ற பெயரில் வந்தவன்  அவளை உயிர் இல்லாத பொம்மையாக்கினான் , இன்று காதலன் என்று ஒருவன் வந்து நின்று அவளை பொம்மையாக்குகிறான்.. 

இந்த ஊரைவிட்டே காலி பண்ணி போய் விட வேண்டியது தான் என்று முடிவெடுத்து விட்டு தான் பொருட்களை எடுப்பதற்காக இங்கே வந்தாள்...ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுகிறேன் என்ற தொடர் இவளுக்கு தான் சால பொருந்தும் போலும்,   இன்னும் ஓடி முடிக்கவில்லை... 

இனி இங்கே இருந்தால் அவளுக்கு பின்னால் தாசி பட்டம் கொடுப்பவர்கள், அவளை  தாசியாகவே மாற்றிவிட நினைத்து வக்கிரம் பிடித்த ஆண்கள் வீட்டு வாசலில் தவமாய் தவம் கிடைப்பார்கள்.. வீட்டுக்கு நல்லவன் என்று அலைந்த ஆண்கள் சிலர் அவளை இப்போது பார்க்கும் பார்வையே வேறு இனி வசதி வா என்று கையை பிடித்து இழுப்பான் தேவையா? 

இவர்கள் பார்வையிலேயே படாத ஒரு பூமிக்கு போக முடிந்தால் போய்விடுவாள்,   கையில் இருக்கும் காசை கொண்டு எங்கேயாவது தாய்க்கும்,  மகளுக்கும் அடைக்கலம் கிடைக்குமா என்று உலகத்தின் ஏதாவது ஒரு எல்லைக்கு ஓடிவிட நினைத்து வந்தவளுக்கு  உள்ளே இருந்தவனை பார்த்து ஈர கொலை நடுங்கி போனது

இவனா??

ஆம் , கேசவன் கயித்து கட்டிலில்  மல்லாக்க படுத்து கிடந்து காலை ஆட்டிக் கொண்டு,  அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் தன் மீது போட்டுக்கொண்டு ஒரு  கையில் கஞ்சா,  இன்னொரு பக்கத்தில் குவாட்டர் என்று உல்லாசமாக படுத்து கிடந்தான்..

இவனா என்று அவள் அதிர

அய்யய்யோ !!இந்தாள் மறுபடியும் ஏம்மா  வந்தான் அடிச்சு கொல்லுவானே" என்று மகள் பயந்தே அலற... வாசலில் கேட்ட சத்தத்தில் போதையில் தள்ளாடிய தன் கண்களை திறந்து பார்த்தவன்

"அட அட தேவதையே வாடி வா.... பெரிய ஆளுக்கு வப்பாட்டியா மாறிட்ட போல இருக்கு, ம்ம் புது சேலை செருப்பு ரோஜாப்பூ ரவிக்கை,  ம்ம் பிராமாதம் "என்று அவளை சுற்றி சுற்றி வந்தான்.... இவள் எச்சில் விழுங்கினாள் அவன் பார்க்கும் பார்வையில் உடலே அருவருத்தது.... 

"என்னடி  தாலியை எங்க ???....  கழுத்தில் கை விட்டு தடவினாள்... அது இல்லை இருந்தும் இதுவரை பயன் இல்லையே... அதான் கழுத்தில் ஏதோ பாரம் குறைந்தது போல இருந்ததோ என்று யோசித்தாள்,,  பயன் இல்லாத தாலியை அகற்றினால் பாதி பாரம் குறையும் என்றால் பயன் இல்லாத பந்தத்தை அகற்றி விட்டால் முழு பாரமும் நீங்கி போகும் என தீத்தன் சொன்னால் புரிய மறுக்கிறாளே.. 

அழகு ,ஆடம்பரம் பணம் வசதி ஆஹா ஆஹா கண் கொள்ளாக்காட்சி என்று கேசவன் பல்லை இளித்தபடி

"சரி என்ன கொண்டு வந்திருக்க, எவ்வளவு கொடுத்தான் உன் புது புருசன் "என்று  அவள் கையில் வைத்திருந்த கூடையை பிடுங்கி உள்ளே பார்க்க..  ஒன்றும் இல்லை..

"நாளைக்கு நகையா வாங்கிட்டு வா , ஆனா, உன்னை நான் என்னவோ நினைச்சேன்டி பத்தினி வேஷம்  போடுறாளே,  என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான் பாய் விரிப்பா,  மத்தவனுக்கு எல்லாம் விரிக்க மாட்டன்னு முதல்ல நான் கூட உன்னை சாதாரணமா நினைச்சேன்டி .. ஆனா இன்னைக்கு பேப்பர் நியூஸ் எல்லாத்துலேயும் ஒன்னையும் அவனையும் வச்சு பார்க்கும்போது ... அப்படியே மனசெல்லாம் குளுகுளுனு இருந்தது .... இனி கள்ளா கட்டிடுவோம்ல 

ச்சீ என்று தான் அவளுக்கு தோன்றியது , நேத்து வரை ஆண் எல்லாம் இப்படிதான் என பொது கருத்து உண்டு.. ஆனால்,  தீத்தனை பார்த்த பிறகு இப்படியும் ஒரு ஆண் இருக்க முடியுமா?  இப்படியும் இருக்காங்களா என்று பிரமிக்க வைக்க... ஆனால் எதிரே நின்ற இவனோ ஆணாக மட்டும் இல்லை மனித ஜந்துவாக தெரியவில்லை 

பரவாயில்லையே அவன் கூட பேசி மயக்கி,  அவன் ஆபீஸ்லயே சேர்ந்து .. இப்போ அவனுக்கு மன்மத ராணியாகிட்ட போல இருக்கு ... அத்தோட இவதான் என் பொண்டாட்டி இவ தான் எனக்கு எல்லாமேன்னு  அந்த பெரிய மனுஷனே சொல்ற அளவுக்கு மயக்கி இருக்க. உன்ன கொண்டாட வார்த்தையே இல்லை  அப்படி என்னத்தடி  காட்டி மயக்கின... அவள் அமைதியாக நிற்க

 எல்லாம் நடந்துருச்சா இல்ல இன்னும் பேச்சுலதான் இருக்கா என்று அவன் நாராசமாக பேசும் பேச்சில் வேரல்  முகத்தை சுளிக்க ...

"என்னவோ இல்லாதது பொல்லாதது  சொன்ன  மாதிரி முகத்தை சுளிக்கிற ... நான் வப்பாட்டியா பேச மட்டும் செய்யின்னு சொன்னேன் நீ வப்பாட்டியா  அவன் கூட வாழ்ந்துட்ட போல  ,  என்ன வயித்துல பிள்ளை எதுவும் உண்டாகிட்டியா?

"ப்ச் 

"சரி  அது ஒரு உன் பாடு, புள்ள உண்டானா நமக்கு டபுள் லாபம் இதையும் பேரம் பேசி அவன்கிட்ட இருந்து  கறந்துடலாம் ... வா வா நாம அடுத்த திட்டம் தீட்டலாம் என்று அவள் கையை இழுக்க...  அவன் கையில் இருந்து தன் கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள் ...

"சரிதான் போடி பெரியவனுக்கு முந்தி விரிச்ச உடனே நீ பெரிய இவன்னு நினைப்பு இவனுக்கு எத்தனை நாளைக்கு வப்பாட்டியா இருக்க போற இந்த அழகும் மினுக்கலும் இருக்கிற வரைக்கும் தான் .. அதுக்கு பிறகு உன்ன  விட்டுட்டு இன்னொருத்தியை பிடிச்சுட்டு போயிடுவான்...  அதனால அவன் உன் மேல மயக்கத்துல கிடக்கும் போதே என்னத்த எல்லாம் சுருட்டனுமோ,  அவ்வளவையும் நம்ம சுருட்டி டுவோம் என்ன சொல்ற .... இனிமே உன்ன விட்டு நான் எங்கேயும் போறதாயிலலை...  இங்கேயேதான் இருக்க போறேன் .. உனக்கு மாமா வேலை பார்க்கிறது மட்டும்தான் இனி என்னோட வேலை .... அவனுக்கு தேவையானப்ப அவன் கூட போயிட்டு காசு வாங்கிட்டு வா...  அப்படியே இங்க ஒன்னு ரெண்டு பேரை பார்த்து வச்சிட்டேன்னு வச்சுக்கோ,  இங்க ரெண்டு கிராக்கின்னு நாம செட்டில்.. பெரிய வீடு பங்களா காருன்னு  ஆஹா ஓஹோன்னு வாழலாம் கஸ்டமர் உன் போட்டோ கேட்டான்,  சேலை கழட்டிட்டு நில்லு ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்று கேசவன் வேரல் சேலை மீது கைவைக்க அவன்  கன்னம்  தீ பற்றி எரிந்தது ....

இத்தனை நாள் பொறுத்து பொறுத்து போனவள் இன்று பொங்கி எழுந்து விட்டாள, அருவருப்பாய் பேசும் இந்த ஜந்துவை அடித்தால் உயிர் போகுமா போய்விட்டு போகட்டும் என்று துணிந்த போனவள் அவன் கன்னத்தில் இடியாக அடியை இறக்க...

"நாய யாரடி அடிச்ச "அவ்வளவுதான் கேசவன் அவள் தலைமுடியை பிடித்து ஆட்டி,  காலால் அவள் வயிற்றில் எட்டி உதைக்க 

"அம்மா ஆஆஆஆஆ பிள்ளையை சுமந்து கொண்டு நின்ற வேரல் போய் சுவற்றில் மோதி கீழே விழ..

"நாயே பணக்காரன் கூட படுத்ததும் என் தேவை உனக்கு இல்லன்னு நெனச்சுட்டியோ...  என்னையே கைநீட்டி அடிக்கிற .. அவன்,  என்னன்னா அவ மேல உன் நிழல் பட்டுச்சுன்னா ஒன்ன கொன்னுடுவேன்னு  என்ன மிரட்டுறான? என் வீட்டுக்கு வர அவன் இந்த தெருவுல காவலுக்கு விட்டிருக்க பத்து பேரு தாண்டி வர வேண்டி இருக்கு.. 

நீ என்னன்னா அவன் இருக்கிற பவுசுல என்னையே அடிக்கிறியா.... அவன் அடித்த அடியில் வேரல் மண்டை உடைந்து ரத்தம் போக அதை கை கொண்டு பிடித்து கொண்டாள் 

ஆக இத்தனை நாள் இந்த வெறிநாய் தொல்லை இல்லாமல் இருக்கவும் அவன்தான் காரணமா ஏன் ஏன் ஏன் என் மேல இந்த கரிசனை ??

கரிசனை இல்லைடி காதல் என்று அவன் சொன்னது காதில் கேட்டது ..  

நான் வாழ்ற வாழ்க்கைக்கு காதல் ஓரு கேடா என்று சிரிக்க தான் தோணியது 

"இங்க பாரு நான் இல்லாம அவன் கூட நீ எப்படி மேயப் போறேன்னு பாத்துக்கிறேன் ...ஒன்னு என்னையும் கூட வச்சுக்கிட்டு எனக்கும் தேவையானதை செஞ்சுகிட்டு, அவன் கூட போ என்ன கழட்டி விட்டுட்டு நீ மட்டும் ஊர் மேயலாம்னு நெனச்ச உன்ன கொன்னே போட்டுடுவேன் ஜாக்கிரதை..

"தூதூ  நீ எல்லாம் ஒரு ஆம்பளையா தாலி கட்டினா நீ புருசனா??...

ஏய் 

"என்ன பொண்ணா கூட மதிக்காத உனக்கு எல்லாம் எதுக்குடா ஆம்பளைங்கிற பேரு,  நான் எவன் கூடையும் போயிட்டு போறேன்...  இல்ல ஊரே  மேஞ்சிட்டு போறேன் ... ஆனா இனிமே உன் கூட ஒரு வாழ்க்கை எனக்கு கிடையவே கிடையாது .... 17 வயசு பிள்ளையை ஏமாத்தி கூட்டிட்டு வந்தேன்னு  என்ன கட்டாயபடுத்தி களங்கப்படுத்தின்னு போலீஸ்ல புகார் கொடுத்தேன், அவங்க செய்வாங்க விதவிதமா உனக்கு முறை ,கொடுக்கவா?? நாயகன் உலகம் கற்று கொடுத்து விட்டான், துணிந்து அடித்தாள் 

ஓஹோ, அந்த அளவு தெளிவு வந்துட்டா என்ன கேசவன் கஞ்சாவை கசக்கி உதட்டில வைத்து கொண்டே அவளை குரூரமான பார்வை பார்க்க 

என்ன விட்டிரு உன் குறுக்கே வரல,  நீ என்னவும் பண்ணு எப்படியோ நாசமா போ ... நானும் என் பிள்ளையும்...  அய்யோ அய்யோ ,என் புள்ளையை விடு"  தரையில் கிடந்த நிலாவை  தலைகீழாக தூக்கி பிடித்த கேசவன் 

"சொல்லு நீயும் உன் புள்ளையும், என்ன விட்டுட்டு ஓடிடலாம்னு பாக்குறீங்களா... 

"என் புள்ள 

"நீ பொன் முட்டையிடுற வாத்துடி...  உன் அழகை வச்சு  இந்த உலகத்தையே விலை பேசலாம்னு நான் காத்துகிட்டு இருந்தா , என்ன விட்டுட்டு தனியா போய் சொகுசா வாழலாம்னு நினைக்கிறியா? வாழ்ந்தா எனக்கு பொண்டாட்டியா,  ஊருக்கெல்லாம் வப்பாட்டியா வாழு ,  இல்ல மொத்தமா நீங்க ரெண்டு பேரும் போய் சாவுங்க நீங்க இல்லன்னா நான் ஒன்னும் அழுது செத்துட மாட்டேன்

"நாயே  என் பிள்ளையை விடுடா "என்று வேரல் ம் ஓடி வந்து அவன் கையில் இருந்து பிள்ளையை பிடுங்க பார்க்க 

அம்மா காப்பாத்து நம்ம சார வர சொல்லுங்க என்று நிலா அழுது கொண்டே அவன் கையில் தொங்க 

"சாரா?? ரெண்டு பேரையும் மயக்கி வச்சிருக்கானோ பணத்த பாத்ததும் அந்த பக்கம் சாய்ந்துட்டியோ 

"ஆமாய்யா உன்ன நம்பி வந்தவளை கூட்டி கொடுக்கிற உன்ன விட , உன் ஈனப் புத்திய விட,  அவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் இந்த ஊருக்கே ராஜாவா  இருந்தாலும், ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளுடைய  நிழல கூட தொடாம தள்ளி இருந்து, அவளுக்கு என்ன தேவை ஏது தேவைன்னு பார்த்து பார்த்து செஞ்சாரு பாரு..  அந்த மனுஷன் பத்தி பேசுற உரிமை கூட உனக்கு கிடையாது...  அவர் பேர கூட உன் வாயால சொல்லாத அதுக்கு கூட உனக்கு அருகதை இல்லை.... நீ செஞ்ச எல்லா கெட்டதுலையும் ஒரு நல்லது என்ன தெரியுமா?ஃஅந்த மனுஷன் கூட என்ன கூட்டி கொடுக்கணும்னு நினைச்சு பாரு அதுதான்....  நான் இப்படி எல்லாம் சொல்றது தப்புதான்,  ஆனா சொல்றேன் .. இந்த உலகத்துல ஒரு ஆம்பள உண்டுன்னா  அது டி.கே சார்தான்...  நீ என்னடா சொல்றது அவன் கூட போன்னு ...  நான் சொல்றேன் நாய..  அவர் என்ன காலம் முழுக்க வப்பாட்டியா வச்சுக்கிட்டாலும் அவர் கூடவே வாழவும்,  வப்பாட்டியா இருக்கவும் எனக்கு சம்மதம்தான் உன் கூட இருந்து ஊருக்கே பாய் விரிக்கிறதுக்கு...  கள்ள பொண்டாட்டிங்கிற பேர்ல , அவர் கூட நிம்மதியா நாலு வாய் சோறு தின்னாலும் போதுய்யா,  நீ கெளம்பு இனிமே என் புள்ள கிட்டயும் என்கிட்டயும் வந்துராத ... வந்த அருவாமனையை எடுத்து கழுத்த கரகரன்னு அறுத்து கொன்னுடுவேன்...

மனதார இவ்வார்த்தைகள் வந்ததோ இல்லையோ ஆனால் தன்னை இந்த தெருநாயிடம் இருந்து காப்பாத்த ஒருவனால் முடியும் என்றால் அது தீத்தன் என அறிந்தே அவன் பெயரை தனக்கு பாதுகாப்பாக  முன்னால் நிறுத்தி கொண்டாள்..

பாதுகாப்பு தந்தவன் காதலை தர மாட்டானா என்ன ?

18 வேரலை மேய்ந்த வேழம் !!

என்ன சொன்ன ?

தாலி கட்டிட்டேன்னு உன் கூட விபச்சாரம் பண்ணினேன்னு சொன்னேன் புரியல , என் பிள்ளைக்காக பல்லை கடிச்சிக்கிட்டு நீ தந்த உடல் வலி மன வலி எல்லாத்தையும் தூங்கினேன் இதுக்கு பேர் தான் கல்யாணம் னா அப்படி ஒரு கல்யாணம வாழ்க்கையே எனக்கு வேண்டாம்டா.... என்னை மதிக்கிற என் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கிற என் பிள்ளைக்காக உயிரை கொடுக்கிற அவர் காதலுக்காக அவருக்காக நான் களங்கப்படவும் தயார் தான் போதுமா ..ஆமா  நான் அவளுக்கு கூத்தியாதான்  ... என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்க அவரை தாண்டி என்னையும் என் பிள்ளையையும் தொட என்ன எங்க மயிரை கூட நீ தொட முடியாது ... முடிஞ்சா தொட்டு பார் நாயை உன் கறியை நரிக்கு படையல் போட்டுடுவார் பார்க்கிறியா பார்க்கிறியா என்றவள் பத்ரகாளி போல நின்றாள் ... 

அவனும் கண்ணை சுருக்கி அவள் தைரியத்தை கண்டு  சற்று யோசிக்க.... 

"அவ்வளவு திமிர் உனக்கு வந்துடுச்சா அப்போ உன் மகளை உன் காதலுக்கு ம்ஹூம் உன் கள்ள காதலுக்கு காவு வாங்கிட வேண்டியதுதான் என்ற கேசவன் பேச்சில் பயந்து போனவள் சட்டென கண் எதிரே தெரிந்த அருவாளை எடுத்து இறுக்கி பிடித்து கொண்டவள் 

"எ.ன் மக மேல கை வச்ச??"

என்னடி பண்ணுவ..  வேரல் தன் கையில் வைத்திருந்த அருவாளை அவனை நோக்கி வீசப்போக சிரித்துக்கொண்ட கேசவன் 

"எங்க வீசு  பாப்போம் ? அவள் கைகள் ஆடியது கொலைகாரி பட்டம் வாங்கிவிடலாம் ஒரு நிமிடம் நிதானம் இழந்து விட்டால்,  அவன் கையில் தொங்கும் குழந்தையின் நிலை கால் இல்லாத குழந்தைக்கு அவளும் இல்லை என்றால் அதன் நிலை நெஞ்சுக்குலுங்க... அருவாளை அவள் கைகள் விட்டுவிட..

"இவ்வளவு ஆன பிறகு இனிமேலும் உன்ன உயிரோட விடுவேன்னு நினைச்சியா என்ற கேசவன் அவளையும்  ஒரு கையால் பிடித்து குடிசை உள்ளே தள்ளியவன்....  கையில் மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு வெளியே போய் குடிசை கதவை அடைக்க..

"என்ன செய்யப் போற விடு ,எங்களை விடு என்று இவள் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிபோய் கதவை தட்ட .. 

செத்து ஓழி நாய, எனக்கு உதவாத நீயும் உன் உடம்பும் எதுக்கு அழிஞ்சு கரிக்கட்டை ஆகட்டும்,  உன்ன கேவலப்படுத்தி அதை வச்சே பரிதாபத்தை ஏற்படுத்தி இன்னொரு கல்யாணம் பண்ணி அவளை வச்சி வியாபாரம் பண்ணி நான் நினைச்சதை சாதிக்கல என் பேரு பேர் கேசவன் இல்லடி என்றவன்  வீட்டின் கூரை  மீது மண்ணெண்ணையை ஊற்றிட

"எப்பா ஏய் என்ன பண்ற என்று சுற்றத்தார் கூடி விட 

"ஐயா நான் தப்பானவன்தான் ஆனா என் பொண்டாட்டிக்கு இதுவரைக்கும் நான் துரோகம் பண்ணினது இல்ல...  ஆனா அவ,  நாம் போன கேப்புல பணக்காரனா பிடிச்சு படுக்கையை பங்கு போட்டுகிட்டதும் இல்லாம .. அவன் கூட தான் இருப்பேன் வப்பாட்டியா இருந்தாலும் அவன் தர்ற பணமும் சுகம் தான் வேணும்னு புருஷன் கிட்டயே வாயக்கூசாமா சொல்றா..  இப்படி ஒரு பொண்டாட்டிய உயிரோட விட்டா நான் ஆம்பளையா என்று கேட்டுக்கொண்டே மீதி வீட்டின்   மீதும் மண்ணெண்ணையை உற்ற... 

"எப்பா அதுக்கு தீ வைப்பியா ???

"யாராவது பக்கத்துல வந்தீங்க நானும் தீயை வச்சிக்கிட்டு கிட்ட வர்றவங்க மேல விழுந்துடுவேன் ஜாக்கிரதை என்று மிரட்ட எவன் அருகே வருவான் ... 

அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவரும் காப்பாற்ற வரவில்லை...

கேசவன்  நெருப்பு பெட்டியை பற்ற வைத்து , நெருப்பை குடிசையின் மீது கேசவன் வீசினான்...

"அச்சோ

"அய்யோ 

"கடவுளே என்று கூட்டம் பதற

அவன்  வீசிய நெருப்பு குச்சி  வீட்டை அடைய ஒரு மைக்ரோ செகன்ட் தான் பாக்கி தீக்குச்சி தஞ்சமானது என்னவோ காற்றாக சீறி வந்து குறுக்கே நின்ற தீத்தன் கைகளில் தான் ...

இடையில் கை வைத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி தன்னை தேற்றி கொண்டு நின்றான் தலைவியின் தலைவன்.... 

கேசவன் ஜெர்க் ஆகி எதிரே ஆறடி உயரத்தில் அய்யனார் சிலை போல பல்லை கடித்துக் கொண்டு முகம் முழுவதும் ரௌத்திரம் பொங்க அவனைக் கையால் வெட்டி பிளந்து விடும் கோபத்தில் நின்ற அவனைப் பார்த்து சற்று பதறினாலும்...

யூஊஊஊஊஊஊஊ என்றவன் ஓங்கி மிதித்த மிதியில் கேசவன் பல்டி அடித்து போய் கூட்டம் நடுவில் விழ...

"எவ்வளவு தைரியம் இருந்தா, மறுபடி வந்து இருப்ப உன்ன"என்று மீண்டும் அவனை மிதிக்க 

"நீ யாருடா,  என் வீட்டு விஷயத்துல தலையிட தள்ளிப்போ இது என் வீட்டு விஷயம்..லொக்    லொக் என நெஞ்சை தடவி கொண்டு கேசவன் இரும... 

"எதுடா உன் வீட்டு விஷயம்,  உள்ள இருக்கிறது என் உசுருடா...  தாலி கட்டுனா பெரிய புடுங்கியா நீ ,  எப்போ அவ கழுத்துல கிடந்த தாலி இறங்கிச்சோ  அப்பவே நீ அவ வாழ்க்கையை விட்டு நிரந்தரமா போயிட்ட..  இனி அவ என் ராணிடா!!  நிலா என் இளவரசி டா,  இது என் குடும்பம்டா!!  என்று கத்தியவன்

"என் குடும்பத்து மேல கை வைக்கவே இனி பதறணும்டா என்றவன் எட்டி கேசவன் நெஞ்சிலையே மிதிக்க...அவன் வாயிலிருந்து  ரத்தம் பீறிட்டது 

ராஸ்கல் எவ்வளவு நெஞ்சு அழுத்தம்  இருந்தா அவங்கள கொல்ல பார்ப்ப என்று  கண்மண் தெரியாது கேசவன் மூச்சே எடுக்க முடியாத அளவு  தீத்தன் அத்தனை இடத்திலேயே மிதி மிதி என்று மிதித்து போட்டவன் ....  

"இவன  தெரு உள்ள விட கூடாதுன்னு சொன்னேன்தான எப்படி மிஸ் பண்ணுனீங்க ஹான் 

"சாரி சார் 

"சாரி சார் என்று பத்து பேரும் ஓடி வந்து அவன் முன் நிற்க 

இடியட்ஸ் நான்,மட்டும் வரலைன்னா என் பிள்ளைங்க நிலைமை" தொண்டை  கரகரத்து தீத்தன் குரல் வந்தது ... நல்லவேளை அவளுக்கே தெரியாது வீட்டின் கூரை மீது சிசிடிவி வைத்திருந்தான் கோவித்து கொண்டு  போன வேரல் என்ன செய்கிறாள் என பார்க்க  சிசிடிவி ஆன் பண்ணி ரிவர்ஸ் பண்ணி பார்க்க ... கேசவன் உள்ளே போவது தெரிந்து கண்ணை சுருக்கிய தீத்தன் உடனே காரை எடுத்து கொண்டு  ஓடி வந்து விட்டான் ....இல்லை அவள் இருந்த இடமும் இருந்திருக்காது...  அவனும் இருந்திருக்க மாட்டானே  , அவர்கள் போய் அவன நடைபிணமாக வாழ்ந்து எதற்கு ?? 

சார் நாங்க பார்த்த்துக்கிறோம், முதல்ல  நீங்க மேடத்தை  போய் பாருங்க  ,மேடம் ரொம்ப பயந்திருப்பாங்க.. 

ம்ம் என்று உறுமியவன் வேகமாக ஓடி வந்து கதவை திறக்க.. 

கண்ணை இறுக்க மூடி கொண்டு நிலாவை தன் நெஞ்சு உள்ளே அணைத்து பிடித்து கொண்டு வேரல பயத்தில் நடுங்கி போய் உட்கார்ந்திருந்த அவர்கள் இருவரையும் பார்த்து அவனுக்கும் கூட கண்ணில் கண்ணீர் துளி மினுங்கியது....

ஒரு ஆண் அதீதமாக நேசிக்கும் போதுதான் கண்ணீர் விடுவான் ... 

அவனும் அதீத நேசம் வைத்து விட்டான் ... 

அவளுக்கு வலிக்கிறதோ இல்லையோ அவனுக்கு வலிக்கிறது அது அவளுக்கு புரிந்தால் கூட போதும் .... அடி மீது அடி வைத்து அவள் அருகே தீத்தன் போக ... காலடி ஓசையை இருவரும் கேட்டனர் ...ஆனால் கண்ணை திறக்க பயம் , தீ எரிகிறதோ சாக போகிறோமோ, வலிக்குமோ காப்பாத்த யாரும் இல்லையோ?  அவ்வளவு தானா இந்த உலகில் வாழ  புல்பூண்டுக்கு கூட உரிமை உண்டு எனக்கும் என் பிள்ளைக்கும் இடம் இல்லையா அப்படி ஒரு ஈனப்பிறவியா நான் என்று அவள் குமுறி தன் பிள்ளையை இன்னும் இறுக்க.. 

அம்மா பயமா இருக்கு அம்மா சாரை வரை சொல்லு சாரை வர சொல்லுங்க அம்மா சாரை வர சொல்லுங்க என்று மந்திரம் போல  நிலா கூற அவள் வெளியே கேட்கும் குரலில் கூறினாள் ஆனால் யாரும் அறியா ஒன்று 

டிகே சார் வாங்க சார் பயமா இருக்கு ,உங்க பேபி சாக போகுது அவளையாவது வந்து  காப்பாத்தி கூட்டிட்டு போய் வளர்த்திக்கோங்க .. சார் உங்களை பாரசத பிறகு தான் என் பொண்ணுக்கு ஒருத்தர் இருக்கார்னு நம்பிக்கையே வந்திருக்கு .. எனக்கு வாழ ஆசை இல்லை ஆனா அவளுக்கு வாழ ஆசை இருக்கு அதை கொடுத்தது நீங்க இந்த உலகத்தோட இன்னொரு கோணத்தை அவளுக்கு காட்டி இருக்கிறது நீங்க , அவ வாழணும் அவ வாழணும் அவ சாக கூடாது வாங்க சார் வாங்க சார் 

அம்மு ஊஊஊஊஊஊஊ 

நிலாம்மா ஆஆஆஆஆஆஆ என்ற குரல் கேட்டதும் தான் தாமதம் சட்டென ஒரு பெருமூச்சு அவளுள் புறப்பட 

வந்துட்டாரா ஆஆஆஆ எங்கள காப்பாத்த வந்துட்டாரா என்று பரபரப்பாக கண்ணை திறக்க அவளை கொண்டாட பிறந்த கோமான் தலைவிக்காக படைக்கப்பட்ட தலைவன் அவ்வேழம் கனிவாக காதலாக கருணையாக அவளை பாரததபடி நின்றது ....

இதற்கு பெயர் காதல் இல்லை என்றால்,  எதற்கு பெயரும் காதல் இல்லை !!