வேரலை மேய்ந்த வேழம் 16
Veral16

16 வேரலை மேய்ந்த வேழம் !!
"சார் எங்க இருக்கீங்க...
பாத்ரூமில் இருந்து ஜிப்பை போட்டுக்கொண்டு வெளியே வந்தான் தீத்தன்.. அவனை பார்க்காது முகத்தை திருப்பிக் கொண்டவள் செயலில் சிரித்தவன்
"என்ன, எதுக்கு இவ்வளவு அவசரமா ஓடி வந்து இருக்க
அது, பேப்பர்ல டிவியில எல்லாம் உங்களை தான் காட்டுகிறான் .... இன்னும் வேரல், அவன் பக்கம் திரும்பவில்லை..
" ஜிப் எல்லாம் போட்டாச்சு திரும்பு "என்றதும் அவன் பக்கம் திரும்பியவள் முகம் முழுக்க கலவரமாக இருந்தது..
" இப்ப சொல்லு என்ன பிரச்சனை?
"டிவில உங்க போட்டோவையும் என் போட்டோவையும் போட்டு உங்களுக்கும் எனக்கும் ஏதோ தப்பான உறவு இருக்கிறதா அசிங்க அசிங்கமா பேசிக்கிறாங்க..." அழுது விடுவேன் என்ற நிலையில் நின்றாள்..
ஓஹோ !! இந்த நல்ல காரியத்தை பண்ணினது எவன்டா என்று நினைத்தாலும் முகத்தை சாதாரணமாக வைத்தபடி
"அவங்களுக்கு வேற வேலை இல்ல விடு அந்த மஞ்சள் கலர் ஃபைலை எடுத்துக்கொடு
"சார் உங்ககிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன் வெளியே போக முடியல, எல்லாரும் என்ன ஒரு மாதிரி அருவருப்பா பார்க்கிறாங்க.. அதோட நம்ம ஆபீஸ் வாசல்ல நிறைய டிவிகாரங்க குவிஞ்சு இருக்காங்க..
ஓஓஓ என்ன செய்ய சொல்ற
'வந்து எல்லாரும் முன்னாடியும் எனக்கும் உங்களுக்கும் எதுவும் இல்லன்னு சொல்லுங்க சார்...
"எதுக்கு சொல்லணும் ?
"ஒரு பொம்பள புள்ளைய வச்சுக்கிட்டு நான் படுற பாடு அந்த கடவுளுக்கே பாவமா இல்ல போல இருக்கு, நாளைக்கு என் புள்ள வளர்ந்து இதெல்லாம் பார்த்தா என்ன காரி துப்பாது ... வாங்க சார் என்று அவன் முன்னே பரிதவிக்க ..
"சரி அந்த கோட் எடு,"
"ம்ம்
"இந்த ஷர்ட்க்கு அது நல்லா இருக்குமா இது நல்லா இருக்குமா ???
எதையாவது ஒன்னு போடுங்க சார்" ,
"அங்க வந்து என்ன சொல்லணும்??
உண்மைய சொல்லுங்க சார் , உங்களுக்கும் எனக்கும் இடையில எதுவுமே இல்லன்னு நீங்க சொன்னா அத்தோட எல்லாரும் வாயை மூடிடுவாங்க , நானும் நிம்மதியா இருப்பேன்"
"ஓஓஓஓ, நல்லா இருக்கேனா ?என்று கோட்டை போட்டுக் கொண்டவன்; கண்ணாடியில் அவள் அருகே நின்று பார்த்தான் ...
நல்லா தான் இருக்கீங்க சார் ,வாங்க என்று அவன் முன்னால் வேரல் வீறுகொண்டு நடந்து போக ஆரம்பித்தாள்.. அவளை ஊமையாக பார்த்து சிரித்துக் கொண்டே தீத்தன் அவள் பின்னால் போனான
கூட்டத்தை பார்த்ததும் தானாக பெண்புலி பதுங்கி அவன் முதுகுக்கு பின்னால் வந்துவிட்டது
சார் நான் சொன்னது மாதிரி எல்லாத்தையும் சொல்லிடுங்க .."
"ம்ம் பேஷா சொல்லிடலாம், நீ என் பக்கத்திலேயே நில்லு
நான் எதுக்கு சார் நீங்க பேசுங்க,
"நீ தான் இதுல சம்பந்தப்பட்டவ, உன்னையும் வச்சுக்கிட்டு பேசினா தான் சரியா இருக்கும்..
நாலாபுறம் தலையாட்டிய அவள் கையை உரிமையாக பிடித்து இழுத்துக் கொண்டு வந்து கூடியிருந்த கூட்டத்தின் முன்னால் நிப்பாட்டினான்..
"ம்ம் என்ன விஷயம்? "
"சார் நீங்க எல்லாரும் திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு ஆள் கல்யாணம் முடிஞ்ச ஒரு பொண்ணோட அதுவும் பிள்ளை இருக்கிற ஒரு பொண்ணோட தவறான உறவு வச்சிருக்கிறதா எல்லாரும் பேசிக்கிறாங்க... அதோட நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி ஒன்னா சேர்த்து சுத்துறதாகவும் அதிகாரப்பூர்வமா நிறைய ஆதாரங்கள் கிடைச்சிருக்கு, இத பத்தி தான் இன்னைக்கு முழுக்க நியூஸ் .."
தொழிலதிபர் தீத்தன் திருமணமான ஒரு பெண்ணோடு உறவு வைத்துள்ளாரா என்பதுதான் கொட்டை எழுத்தில் இன்று வந்த செய்தி ..வேரல் தன் முகம் தெரியாமல் அவன் முதுகின் பின்னால் மறைய போக ... அவளை இழுத்து தன் அருகே அணைத்தது போல் விட்டவன்...
"நல்லா பக்கத்துல நின்னு அப்பதான் முகம் சரியா தெரியும்...
எதுக்கு ஏன் முகம் தெரியணும் என்று அவள் புரியாது அவனை அண்ணாந்து பார்க்க
"அது கடைசியா புரியும்
"சார் எங்களுக்கெல்லாம் நீங்க இந்த மாதிரி ஆள் கிடையாதுன்னு தெரியும், நீங்களே உங்க வாயால இதெல்லாம் உண்மை கிடையாது, அவங்க என்னோட செக்ரட்டரி மட்டும்தான்னு சொல்லிட்டீங்கன்னா ஊர் வாயில மூடி போட்டுரலாம் என்று ஒருவர் கூற..
"எதுக்கு நான் அப்படி சொல்லணும் என்றானே பார்க்கலாம்
சார்
"நீங்க எல்லாரும் சொல்ற மாதிரி, இது உண்மைதான்.. எனக்கும் அவளுக்கும் இடையில இருக்கிறது கள்ள உறவு எல்லாம் கிடையாது காதல்!! பக்கத்தில் நின்று கொண்டிருந்த வேரல் அவன் எங்க ரெண்டு பேருக்கும் இடையில் எதுவும் இல்லை என்று சொல்லுவான் என்று நப்பாசையாக காத்துக் கொண்டிருக்க ... அவனோ காதல் என்று முடித்துவிட ...பேஎன்று அவனை அண்ணாந்து பார்ப்பது அவள் முறை ஆகி போனதை ... தீத்தன், அவளை தோளோடு அனைத்து நெருக்கமாக விட்டுக் கொண்டவன் ...
அவளை நான் காதலிக்கிறேன், காதலிப்பேன் காதலிச்சுட்டே இருப்பேன்,
அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு சார்
ஓஓஓ தெரியாதே, என்றவன் நக்கலாக உதட்டை வளைத்து விட்டு ...
"தாலி கட்டுனா அதுக்கு பேரு கல்யாணமில்லை.. இதோ அவளோட பர்த் சர்டிபிகேட், 17 வயசுல அவள கட்டாயப்படுத்தி அந்த தாலிய கட்டி இருக்காங்க அதுக்கு பேர் கல்யாணமா?
"சரி சார் ஆனா குழந்தை இருக்கே , இவங்க சம்மதம் சொல்லாமலா குழந்தை வந்துச்சு
"குழந்தை பெத்துக்க பொண்ணோட சம்மதம் என்னைக்கும் தேவைப்பட்டது இல்லை... அவ விரும்பினாலும் இல்லைனாலும் ஆண் தன்னுடைய ஆதிக்கத்த காட்டிட்டுதான் போவான்.. அப்படி நடந்த அசம்பாவிதம் தான் அந்த குழந்தை.
"இப்ப என்ன சொல்ல வரீங்க சார்
"அதுக்கு பேரு கல்யாணமும் இல்லை அவளுக்கு நடந்ததுக்கு பேரு தாம்பத்தியமும் இல்லை வன்முறை நடந்திருக்கு , அதுல இருந்து அவளை மீட்டு எடுக்க நினைக்கிறேன்.. இது அவளுக்கே தெரியாது ... இப்போ இத்தனை பேர் முன்னாடி தான் சொல்றேன் எஸ் நான் அவளை லவ் பண்றேன்.. அவளை கல்யாணம் கட்டிக்க ஆசைப்படுறேன், அவளோட குழந்தையை என்னோட குழந்தையா ஏத்துக்க விரும்புறேன் , இவதான் என்னோட சட்டபூர்வமான மனைவின்னு அத்தனை பேரும் முன்னாடியும் பிரகடனப்படுத்துறேன் ..இதை மீறி என்ன எழுதணுமோ பேசணுமோ பேசிக்கோங்க.. ஐ டோன்ட் கேர்.. பட் , இவதான் என்னோட மனைவி போதுமா... வேற ஏதாவது டிடெயில் வேணுமா?
வேணும்னா கேளுங்க தாராளமா சொல்றேன் "
"சார் உங்களுக்கு பணம் இல்லையா ,படிப்பு இல்லையா வசதி இல்லையா ஏன் இப்படி ஒரு எச்சில் இலை மேல ஆசைப்படுறீங்க என்று ஒருத்தி அருவருப்பாய் கேள்வி கேட்க
உன் பேர் என்ன ??
மிஸ் வர்ணிகா"
"உன் மேல நாய் சுச்சா அடிச்சிட்டு போயிடுது, அதை கழுவிட்டு போவியா இல்ல அப்படியே போவியா
சார் கன்றாவி மேல பட்டா கழுவிட்டு தானே போக முடியும் "
"அதேதான் சில கல்யாண வாழ்க்கை கன்றாவி ஆகிப்போச்சுன்னா , அதை பிடிச்சுக்கிட்டு தொங்குறதுல வேலை இல்ல .. கழுவி போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கிறது தான் நல்லது...
அடுத்த வேலைன்னா அடுத்த புருஷன் பிடிக்கிறதா சார் என்று அதற்கும் அவள் குதர்க்கமாய் கேட்க
உன் பிரச்சனை என்ன?
"சார் புருஷன் தப்பு பண்றான்னு, உடனே அவனை வெட்டி விட்டுட்டு அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆனா அந்த பொண்ணுக்கு பேர் என்ன சார்..
"இதே செயல ஆண் செஞ்சா அதுக்கு பேரு என்ன ஒரு பெண் சரியில்லன்னு , அந்த பெண்ணை விட்டுட்டு ஆண் இன்னொரு கல்யாணம் பண்ணுனா அதை என்ன சொல்லுவீங்க
"மறுமணம்
"ம்ம் அதை பொண்ணு செஞ்சா தப்பா? திருமணத்தில எதை வேணாலும் தாங்கலாம் அடிக்கிறான் உதைக்கிறான் இது எல்லாம் காமன் ஃபேக்ட்.. இதெல்லாம் கூட ஒரு பெண்ணால சகிக்க முடியும் ... அவளையே விற்கத் துணிஞ்சவனை சகிக்கணுமா ஒரு குழந்தையோட காலை உடச்சவன சகிச்சுக்கிட்டு வாழனுமா ..நீ வாழ் என் அம்மு வாழணும்னு அவசியம் இல்லை, அவளுக்கு நான் இருக்கேன் "
"சார் இதுக்காக நீங்க அனுதாபப் படலாம் , அதுக்காக உங்க தகுதிக்கு சமமே இல்லாத ஒரு பொண்ணோட வாழ்க்கையை நடத்தலான்னு நினைக்கிறது ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் நீங்க தப்பான முன் உதாரம் கொடுக்குறது போல ஆகிடாதா!?
"தப்பான முன் உதாரணமா இருந்தா இருந்துட்டு போகட்டுமே பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மீட்டு எடுக்கிறது தப்புன்னா, வாழ்க்கையே போதுன்னு வெறுத்த ஒரு பெண்ணை வாழ தூண்டுவது தப்புன்னா, அந்த தப்பை நான் பண்றதா இருந்துட்டு போகட்டும் .... "
"என்னோட தனிப்பட்ட வாழ்க்கையில எனக்கு பிடிச்சதை செய்ய எனக்கு உரிமை உண்டு. அதக் கேட்க யாருக்கும் ரைட்ஸ் கிடையாது... இன்னைக்கு உங்ககிட்ட எல்லாம் பதில் சொல்றதுக்கு காரணம் இனி என் மனைவியை பத்தி ஒரு வார்த்தை எவனும் பேசக்கூடாதுங்கிற காரணத்துக்காகதான் என்றவன் இன்னும் பேச முடியாமல் அதிர்ந்து போய் நின்ற அவளை திரும்பி பார்த்தவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் அவள் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறை சட்டென்று அறுத்து கூட்டத்தின் நடுவே வீசிவிட... அவளோ கல்லாக சமைந்து நின்றாள்..
அவளுக்கு நடந்த பொம்ம கல்யாணத்துக்கு இன்னைக்கு முடிவு கட்டிட்டேன்... உன் கழுத்தை சுற்றின பாம்பை நசுக்கிட்டேன்... யூ ஆர் மைன் ...என்று அத்தனை பேர் நடுவிலும் அவள் நெற்றியில் முத்தம் வைத்து விட விக்கித்து நின்றவள் உடல் இறுகி போனது ..
எப்ப சார் கல்யாணம் அந்தக் கூட்டத்தின் நடுவே தகுதியற்ற தாலி மிதிபட்டு கொண்டு கிடந்தது....
என் மனைவி என் காதலை அக்சப்ட் பண்ணிய பிறகு "
வாழ்த்துக்கள் டிகே சார் ....
"நன்றி, மிஸஸ் டிகேக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்க "
"வாழ்த்துகள் மிஸஸ் டிகே" என்று கூட்டம் கத்த
டிகேவா?? என்றவள் இன்னும் உச்சகட்ட அதிர்வோடு அவனை உதடு நடுங்க பார்க்க
"ஐ லவ் யூ அம்மு என்றவன் அவள் பக்கம் மலர் கொத்தை நீட்டினான்... வேரலோ அழுது கொண்டே உள்ளே ஓடி விட பெருமூச்சு விட்ட தீத்தன் அவளை தேடி உள்ளே வந்தான் ....
குப்பை கூடைக்கு பக்கத்தில் முழங்கால் போட்டு அமர்ந்து முகத்தை முழங்காலில் மூடிக்கொண்டு ஏங்கி ஏங்கி அழுதபடி இருந்த அவளை பார்த்தவனுக்கு நெஞ்சு அடைத்தது
அம்மு என்றவனை கலவரத்தோடு எட்டிப் பார்த்தவள்
"நீங்கதான் டிகேயா?? என்று கேட்ட ஆம் என தலையாட்டினான்
"ஏன் இப்படி எல்லாம் சொன்னீங்க ...
"நீதானே உண்மைய சொல்ல சொன்ன.. உண்மையை சொன்னேன், உன்னை காதலிக்கிறேன்னு உண்மையை சொன்னேன்
"சார் என்று அவள் வாயை திறக்க போக..
"பெர்சனல் பேசுறதா இருந்தா ரூமுக்குள்ள வா எல்லாரும் வேடிக்கை பாக்குறாங்க நம்மாள வேலை கெட கூடாது, கம் இன்சைட் என்று தீத்தன் விறு விறுவென்று அவன் அறைக்குள் போக இவளும் துடைக்க துடைக்க வந்த கண்ணீரை தன் சேலையில் துடைத்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள்
நுழைந்த அடுத்த நொடி அவன் பாதுகாப்பான நெஞ்சுக்குள் இவள் பதுங்கி இருந்தாள்.. உள்ளே வந்த அவள் கையை இழுத்து தன் நெஞ்சில் அவளை அணைத்து பிடித்துக் கொண்டவன்..
"அங்க சொன்னது எல்லாம் உண்மை ஐ லவ் யூ, ஐ லவ் யூ மட்டும்தான்... இப்ப சண்டை போடு "என்று அவளை விலக்கி விட... அமைதியாக உடல் நடுங்க உதடு துடிக்க அவளை பார்த்தவள்
"உங்க பெருந்தன்மை பார்த்து கைதட்டலாம் சந்தோஷப்படலாம் ஆனா, உங்க கூட எல்லாம் வாழ முடியாது சார் "
"ஏன்?
"ஏன்னா கடந்து வந்த பாதை எனக்கு மட்டும் தான் சார் தெரியும், அந்த கல்யாணம் சட்டப்படி செல்லாது அதுக்கு பேரு கல்யாணமே இல்லை வன்முறை அப்படின்னு நீங்க ஆயிரம் சொன்னாலும் ... நான் அவன் தொட்ட அசிங்கம் தானே சார்.. நான் எச்சி இலைதான் .. அவன் தூக்கி போட்ட குப்பை தான் சார் ... என்னை தூக்கி வச்சி உங்கள் அசிங்கப்படுத்திக்காதீங்க "
"அம்மு என்று அவன் அவளை தொட போக...
"என்ன தொட்டு நீங்களும் அசிங்கமாகிடாதீங்க சார் நானும் என் பொண்ணும் பார்த்த அபூர்வமான அன்பான ஆண் நீங்க... என்ன கட்டாயப்படுத்தி, கஷ்டப்படுத்தி நீங்களும் எல்லா ஆம்பள போல தான்னு நிரூபிச்சுடாதீங்க.... நீங்க எப்பவும் எங்க மனசுல உயர்ந்த இடத்தில் தான் இருப்பீங்க தயவுசெஞ்சு எங்க வாழ்க்கையை விட்டு ... ம்ஹூம், எங்களை விட்டுடுங்க, இனிமே நான் இங்க வேலைக்கு வரல... என் பாட்டை நான் பாத்துக்குறேன்" என்று அவன் அனுமதியும் கேட்கவில்லை பதிலும் கேட்கவில்லை... வேரல் கதறி அழுதபடி வெளியே ஓடிப் போய்விட்டாள்
கண்ணாடி ஜன்னல் வழியே தீத்தன் கீழே பார்க்க மகளை தூக்கிக் கொண்டு வியர்க்க வியர்க்க ஓடும் அவளை தலையை தடவிக் கொண்டே பார்த்தான்
அவ்வளவு சீக்கிரமாக முதல் திருமண வாழ்க்கையில் விழுந்த கீறலை சரி செய்ய முடியுமா என்ன? காத்திருந்து தான் சரி செய்ய வேண்டும் பெருமூச்சு விட்டபடி போகும் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு நின்றான் ...