வேரலை மேய்ந்த வேழம் 4

Velam4

வேரலை மேய்ந்த வேழம் 4

4 வேரலை மேய்ந்த வேழம் !!

தீர்த்தன் பகல் முழுவதும் வேலை செய்து அலுத்து போய் இரவு அவன் வீட்டில் உள்ள சூடான நீர்வீழ்ச்சியில் குளித்து ஆசுவாசமடைந்தவன் படுக்கையில் வந்து அப்படியே விழுந்தான்.. விழுந்தவன் கைகள் தன் ரகசிய போனை தேடியது உதட்டில் சிறிய புன்னகையோடு எடுத்து அம்மு என்ற நம்பருக்கு தட்டினான்,. 

இந்த தொழிலுக்கு அவள் நிர்பந்திக்கப்பட்டாளா இல்லை அவளே விரும்பி இந்த தொழிலுக்கு வந்தாளா ? இதெல்லாம் அவனுக்கு தேவை இல்லாத வினாக்கள்.. ஆனால், இந்த தனிமை அலைச்சல், வேலையில் உண்டான தலை குடைச்சல் இது எல்லாம் அவள் குரல் கேட்டால் அப்படியே புஸ் என்று போய்விடுகிறது... அவனுடைய அழுத்தம் நிறைந்த வாழ்க்கை பக்கத்தில் அதன் அழுத்தத்தை குறைக்க வந்த தேவதை தான் இந்த அம்மு..

வேரல் ம்ம் போட்டாலே போதும், அவன் குளுமை அடைந்து விடுவான், குரலால் ஒருவரை ஈர்க்க முடியுமா அவள் பேச்சில் மட்டுமல்ல போடும் ம் கூட அவனை ரசிக்க வைத்தது ... 

அவள் எப்பேர்ப்பட்டவள் என்ன செய்கிறாள்? இது எல்லாம் அவனுக்கு இப்போது வரை தேவையில்லாதது .. ஒரு பொருளை தன் தேவைக்காக வாங்கி வைத்திருக்கிறான்.. இப்போது வரை அதனால் பிரச்சனை இல்லை பிறகு பார்த்துக் கொள்ளலாம் , அவ்வளவு சீக்கிரத்தில் அவனை அவள் கண்டுபிடித்த விட முடியாது அது அவனுக்கே தெரியும் பல அழைப்புகள் போன பிறகு... போனை எடுத்து காதில் வைத்தாள் 

ஹலோ ...சார் 

"என்ன பண்ணிட்டு இருந்த

"சார் பின்னாடி வேலையா இருந்தேன்... அதான் போனை எடுக்க தாமதம் ஆயிடுச்சு மன்னிச்சிக்கோங்க "பூ போல வேரல் குரல் வந்தது..

கணவன் அடித்த அடியில் முதுகெல்லாம் வலித்தது கதவை திறக்க பத்து நிமிடம் லேட் ஆகிவிட்டது.. என்று போதையில் வந்தவன் இவள் முதுகுத்தோலை பிய்த்து எடுத்து விட்டான்.. 

இப்போதுதான் அதற்கு எண்ணெய் தேய்த்து பிள்ளையை தூங்க வைத்து விட்டு வந்து பார்த்தால் தீத்யனிடம் இருநது இங்கே பல அழைப்புகள் ... 

"அய்யோ மணி 12 ஆயிருக்கே, போன் போட்டு எடுக்கலைன்னா இந்த சார் வேற என்ன திட்டுமே என்று பயந்து கொண்டே தான் போனை எடுத்து ஏதோ ஒரு காரணத்தை சொல்ல ..

"அம்மு உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு ஏதாவது பிரச்சனையா? அழுது ஓய்ந்த அவள் குரல் சற்று கரகரப்பாக வர .. அவள் குரலில் உள்ள வித்தியாசத்தை கூட அறிய ஒருவன் உண்டா??

"ம்ம் கொஞ்சம் காய்ச்சல் ...

"வாட் பீவரா, எப்போ இருந்து

"நேத்துல இருந்து 

"நேத்து நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்த

"ஆமா சார் போன வச்ச பிறகுதான் காய்ச்சல் அதிகமாகி போச்சு .."

"ஹாஸ்பிட்டல் போனியா அம்மு 

"ஹாஸ்பிட்டல்லா??" அவள் வாயை பிளந்தாள்.. பத்து ரூபாய் மாத்திரைக்கு அவளிடம் வழி கிடையாது எங்கிருந்து மருத்துவமனை எல்லாம் போக.. அதை எல்லாம் விட இந்த குழந்தையை பெற்று எடுக்கவே அவள் கணவனுக்கு அவளை மருத்துவமனை அழைத்துச் செல்ல நேரமில்லை வீட்டிலேயே வலி எடுத்து ஒத்தையாக பிள்ளையை பெத்து; அருகே உள்ள அக்கம் பக்கத்தவர் வந்து அவள் தொப்புள்கொடியை வெட்டி , அவள் உயிரை பிழைக்க வைத்ததே பெரிய பாடு , இதில் காய்ச்சலுக்கு எல்லாம் மருத்துவமனை போவார்களா என்று அவளுக்கே வேடிக்கையாக இருந்தது..

"உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் அம்மு ஹாஸ்பிட்டல் போனியா... மாத்திரை சாப்பிட்டியா? அவன் அக்கறையான பேச்சில் கண்களை விரித்து அப்படியே கேட்டுக் கொண்டிருந்தாள்... 

"போட்டேன் சார்..

"சாப்டியா

"ம்ம் ஆச்சு நீங்க சாப்டீங்களா சார் ? 

"யா, நைட் ஒரு பார்ட்டி போயிட்டு அப்படியே டின்னர் முடிச்சிட்டு தான் வந்தேன்.. கொஞ்சம் லேட் ஆயிடுச்சு தூங்குற நேரத்துல டிஸ்டர்ப் பண்றேனா என்றவன் கண்ணாடி முன்னே தன் மெல்லிய தாடியை தடவி பார்த்தான் .. இப்படி ஆசுவாசமாக நின்று தன்னை ரசிக்க தன்னை பற்றி யோசிக்க எல்லாம் அவனுக்கு நேரம் இருந்ததே இல்லை ....

காலையில் தொடங்கினால் இரவு வரை இயந்திரகதியான வாழ்க்கை பணத்தின் பின்னாடியே ஓடி ஓடி ஓய்ந்து அப்பாடா என்று படுக்கையில் வந்து படுத்ததும் தூக்கம் வருமா அது கூட சண்டித்தனம் பண்ண மன அமைதி கேட்டு இருதயம் துடிக்க, அதற்கு வரமாக வந்தவள் தானே இவள் !!

இவளிடம் பேசி முடித்து போனை வைத்துவிட்டு படுத்தால் எப்படி தூங்குகிறான் என்று தெரியாது காலை வரை நிம்மதியான தூக்கம்.. அதன் பிறகு வேலையை செய்ய அவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறது ...

இது எல்லாம் வேரல் பேச்சால் தான் சாத்தியம் என்பதை அவனும் கண்கூடாக இந்த ஒரு மாதமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்..

" பாவம் உடம்பு சரியில்லன்னு சொல்றா தூங்கு என்று சொல்லலாமா??" என்று அவன் மனம் சொன்னாலும் அவளோடு பேசாமல் அய்யய்யோ எனக்கு தூக்கம் வராதே என்று தீத்தன் சற்று பதற..

"அப்போ தூங்க போறியா 

இல்ல சார் பேசுங்க 

" இப்போ எங்க தூங்க உடல் வலி குறைந்த பிறகு தான் தூங்க முடியும்.. இவரோட பேசாம போனை வச்சிட்டா அதுக்கும் அடி விழும் ஏதாவது நாலு வார்த்தை இவர்கிட்ட பேசிடுவோம் ... இவர் கூட சொன்னா கேட்பார் அந்த மனுஷன் சொன்னா கேக்க மாட்டானே என்ற பயம் தான் அவளுக்கு

"ஓஓஓ அப்போ தூங்குற வரை பேசிட்டு இருக்கலாமா

"சரி சார் மகள் படுக்கையில் சிணுங்க அருகே போதையில் கிடந்த கேசவன் எழும்பி இவளை ஏதோ கெட்ட வார்த்தை போட போக ... இவள் கையில் ஃபோனோடு இருக்க

"சாரா என்ற சத்தம் இல்லாமல் கேட்டான்.. ஆம் என்று வேரல் தலையாட்ட இளித்தவன் 

"நீ பேசு பேசிட்டே இரு, நான் இவளை பார்த்துக்கிறேன் வெளியே போய் பேசு என்று சொன்னவனை எரிச்சலாக பார்த்துக் கொண்டு வேரல் போனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள்

நிசப்தமாக கிடந்த தெருவில் திண்ணையில் போய் அக்கடா என்று உட்கார்ந்தாள்... இவன் பேசுவதற்கு பதில் சொன்னால் மட்டும் போதும் ஒரு நாள் பிள்ளைக்கு வயிறார சாப்பாடு, பாதுகாப்பும் கிடைக்கும் ... இதற்காக என்னவெல்லாம் ஒரு பெண் செய்ய வேண்டியது இருக்கிறது... 

இவனோடு இந்த கதை முடியும் என்று மட்டும் அவளுக்கு நம்பிக்கை இல்லை... பேச்சோடு முடியுமா இல்லை கண்ட வேலையையும் செய்ய வைப்பார்களா அவளுக்கு பயந்து பயந்தே காய்ச்சல் வந்துவிடும் போல் இருந்தது... 

ஆனால் ஒன்று , இந்த நாள் வரை தீத்தனிடம் இருந்து தவறான ஒரு பேச்சும் நடத்தையும் வந்ததில்லை... அதுவரை அவளுக்கு நிம்மதி இயல்பாக பேசுவான், அவளைப் பற்றி தெரிந்து கொள்ள முற்படுவான்.. தன்னைப் பற்றி சிலது மறைத்து பலதை கூறுவான், இரண்டு மணி நேரம் பேசிய பிறகு 

ஓகே குட் நைட் அம்மு நாளைக்கு பாக்கலாம்" என்று டீசன்டாக போனை கட் பண்ணி வைத்து விடுவான்.. 

"அவ்வளவுதானா, இதுக்கா இவ்வளவு பணம் தர்றார் இதைத்தான் யாருகிட்ட வேணும்னாலும் பேசலாமே எதுக்கு இவ்வளவு பணம் கொடுத்து என்கிட்ட பேசுறார் , ப்ச் ஒண்ணுமே புரியல சாமி, பணம் இருக்கிறவங்க என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க போல இருக்கு.... ஆனா இவர் நல்லவர் தான் என்று அவனுக்கு சான்று கொடுத்து விட்டாள்.. ஆண்களே இப்படித்தான் என நினைத்தவளுக்கு மாற்றாக ஒருவன் வந்து நின்றான்.... 

சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கவா? தீத்தன் படுக்கையில் போய் பொத்தென்று படுத்தான் .. அவன் கொடுக்கும் லட்சக்கணக்கான பணத்திற்கு இவளுடைய இந்த பேச்சு போதும் என்று நினைத்தவனுக்கு இப்போதெல்லாம் இவள் முகம் எப்படி இருக்கும் என்று பார்க்க வினோத ஆசை ..

ஏன் இப்படி ஒரு ஆசை எல்லாம் வருகிறது என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாலும், அவள் குரல் கேட்கும் பொழுதெல்லாம் இந்த குரலுக்கு சொந்தமானவள் எப்படி இருப்பாள், எங்கே இருப்பாள் என்ற ஆசை வருவதை அவனால் தடுக்கவே முடியவில்லை ... பேச்சோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தவன் சிந்தை இப்போது அவளைப் பார்த்தால் போதும் என்ற அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருந்தது..

"கேளு 

"இல்ல கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே..

"ஹாஹா, அது நீ கேட்கிற கேள்வியை பொறுத்து இருக்கு அவன் சிரிப்பில் கண் வெட்டாது இருளை வெறித்தாள் 

அவள் என்று இறுதியாக சிரித்தாள் தெரியாது 

இனி அவள் இதழ் நகை காணுமா தெரியாது ...

"என்னடி எதுவும் கேட்கணும்னு கேட்ட சத்தமே இல்ல டீயா என்று அவள் மறைத்து போய் எச்சில் விழுங்க

"டிதான் இனிமே டி அடிக்கடி வரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, என்ன கேளு .... தலைக்கு தலையணை கொடுத்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டே எதிரே இருந்த கண்ணாடியில் தன் முகத்தில் வந்து போகும் பல சுவாரசியமான முகபாவனைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தீத்தன்.... 

அது வந்து அது வந்து 

ம்ம் அதை தாண்டு 

ஏன் சார் கல்யாணம் பண்ணிக்கலாம் தான 

"யாரை உன்னையா ?

"ஹான் அய்யய்யோ இல்ல சார் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டேன் ... அதுதான் அப்படி கேடுட்டுட்டேன்

"ஓஓஓஓ ... இன்ட்ரெஸ்ட் இல்லை கல்யாணம் பண்ணினா வர்றவளுக்கு நேரம் ஒதுக்கணும் பிள்ளை பிறந்தா அதை கேர் எடுத்துக்கணும் அதுக்கெல்லாம் நேரம் பற்றாக்குறை.. ஒரு பொறுப்பை எடுத்தா சரியா இருக்கணும் இல்லை எடுக்க கூடாது... 

ம்ம் 

"என்ன ம்ம் போட்டு முடிச்சிட்ட.

"இல்லை கல்யாணம் பண்றது பொறுப்பு கடமை போல பேசுறீங்களே அதான் யோசிச்சேன்

"பின்ன கல்யாணம் எதுக்கு சொல்லு 

"பிள்ளை பெக்க 

"ஹாஹா அது பொறுப்பு தான ...

"ம்ம் ஆனா குழந்தையை பார்த்துக்கிறது பொண்ணுங்க கடமை தான ? 

"அப்படி யார் சொன்னாடி... அவன் டி க்கு பழகி விட்டாள் 

"இல்லை சொன்னேன் "பிள்ளை நீதான பெத்த நீயே பாரு என்று உதைக்கும் கணவன் பேச்சுக்கும் இவன் பேச்சுக்கும் எத்தனை வித்யாசம் தீத்தன் தனித்துவ பேச்சை ரசித்தவள் தன் தலையில் தட்டி கொண்டு 

"ப்ச் அவிய வேற ஆம்பள, கணவனை தவிர வேறு ஆள் முகம் கூட ரசிக்க புடாது வேரல் இது தப்பு அவன்தான் கேடு கெட்ட வேலை செய்ய சொல்றான்னா நாமளும் தப்பு பண்ண கூடாது அவன் பேச்சுக்கு இழுபடும் தன் திடத்தை இழுத்து கட்டி போட்டாள்...

"நாம யாரு என்னனு தெரிஞ்சா இவுக கூட உதைக்கத்தான் செய்வாக, கல்யாணம் ஆகி ஒரு பிள்ளை பெத்தவன்னு உண்மை தெரிஞ்சா பேச கூட மாட்டாவ... வாங்கின காசுக்கு ம்ம் போட்டு வைப்போம் கடவுளே , இந்த பாவக்கணக்கை என் தலையில எழுது பொய் சொல்லி அவரை ஏமாத்திட்டு இருக்கேன் என்னைக்கு உண்மை தெரிய போவுதோ என்று அவன் பேச்சுக்கு வழக்கம் போல உம் போட...

ஆஆஆவ் கொட்டாவி விட்டான் 

தூக்கம் வந்துடுச்சா சார் 

ம்ம் லைட்டா உனக்கு ?

எனக்கும் அது என்ன ஹான் லைட்டா வருது என்ற அவள் தத்தை மொழி கேட்டு உதட்டை விரித்து சிரித்த தீத்தன்..  

அம்மாஊஊஊஊ என்ற நிலா முழித்து அழுது கொண்டே ஓடி வர 

அச்சோ என்று மகள் வாயை பொத்தி மடியில் வைத்து கொண்டு 

சரி சார் வைக்கிறேன் ...

குழந்தை குரல் வந்த மாதிரி இருக்கு யார் அம்மு? 

அதுவா பக்கத்து வீட்டு குழந்தை சார் தொண்டை ஏற இறங்க பொய் கூற 

இந்நேரம் உன்கூட என்ன செய்யுது" 

"அதுவா அவங்க அம்மா திருவிழா போறாங்க அதான் என்கிட்ட விட்டுட்டு போறாங்க ... மகளை தட்டி கொண்டே பொய் சொல்லி தன் குட்டை மறைக்க..

"ஓஓஓஓ சரி அம்மு நாளைக்கு நைட் பேசுறேன் நிறைய பேசணும்..

"ம்ம் பேசலாம் சார் 

"நாளைக்கு கொஞ்சம் டீப்பா பேசலாம்னு இருக்கேன் 

"அப்படின்னா சார்..

"ப்ச் அதான் இன்னைக்கு கல்யாணம் பத்தி பேசினோம்ல நாளைக்கு பிள்ளை எப்படி வரும் அதுக்கு என்ன செய்யணும்னு அதை பத்தி பேசலாம் " அவன் உல்லாசமாக விசில் அடித்து கொண்டு கூற 

ஹான் இவள் வாயை பிளந்தவள் மூடவே இல்லை 

நாளைக்கு நைட் கசமுசா பேசலாம் ஓகேவாடி 

ஹான்

"ஓகேவான்னு கேட்டேன் அவன் கிசுகிசுக்க 

"ம்ம் ம்ஹூம் ம்ம் என்றவள் தடுமாற்றம் பிடித்து போக இச் என்று முதல் அச்சாரம் வைத்து அவளை இன்னும் கண்ணை விரிய வைத்தான் தீத்தன்.... அவனே சுயம் கடந்து கட்டுபடுத்த முடியாத பேச்சுக்கு அவள் புறம் சாய்ந்து போனான் 

ஆனால் அவள் திருமணம் ஆன பெண் 

ஒரு பெண் குழந்தைக்கு தாய் என்ற உண்மை அறிந்தாள் இடையில் உண்டான நேசம் என்ன ஆகும்? 

ஒரு வாரத்தில் அவள் யார் என்ற உண்மை அவன் கண்ணுக்கு முன் புலப்பட போவது தெரியாது அவளோடே பேசிய பேச்சில தலையணையை கட்டி கொண்டு உருண்டான் தீத்தன்.. 

எப்படி சாரை சமாளிக்க என்று நகத்தை கடித்து கொண்டு மடியில் சிறுது நேரத்தில் பிள்ளை முதுகில் விரல் தடம் போட்டு அனுப்பிய கணவன் செயலில் கதிகலங்கி போய் நின்றாள் ...

எந்த பக்கம் போனாலும் ஆபத்துதான் ... 

இவள் பற்றிய உண்மை அறிந்தால் வேழம் அவளை மிதித்து கொன்று விடுமோ?? 

உன்னையை யானை வச்சி ரெண்டு மிதி மிதிச்சா சரியா இருக்கும் அதான ??