வேரலை மேய்ந்த வேழம்3

Velam3

வேரலை மேய்ந்த வேழம்3

3 வேரலை மேய்ந்த வேழம்!!

பணம் கொட்ற மரம் , நீ என் தேவதை, உன் அழகுக்கு கோவிலே கட்டி கும்பிடலாம்டி என்று காலையிலேயே போதையை போட்டுவிட்டு அவள் மீது ரூபாய் நோட்டுகளை வீசி அழகு பார்த்த கேசவன் செயலில் எப்போதும் போல் இன்றும் வேரல் அருவருக்கத்தான் செய்தாள் ... 

எதிரே இருக்கும் பெண்ணை பெண்ணாக மதிக்க வேண்டாம் மனைவியாக கொண்டாட வேண்டாம் ஆனால் சக மனுசியாக பாவித்து நடத்தலாமே ... ஒரு நேரம் அடித்தாலும் ஒரு நேரமாவது அணைக்கலாமே அன்புக்கு ஏங்கி ஏங்கி தாயும் மகளும் அன்பு என்றால் என்ன என்று தெரியாதே தனித்து விடப்பட்ட வேடந்தாங்கல் பறவைகளாக மாறிவிட்டனர்..

கல்யாணம் கட்டி கொடுத்ததோடு பெற்றவர்கள் கடமை அவர்கள் குலத்தில் முடிந்து போனது.. சாகும் நிலை வந்தாலும் பெற்றவர்களிடம் வரக்கூடாது..

"அம்மா அந்த ஆள் என்ன குடிச்சுட்டு நெதமும் அடிக்கிறாரும்மா வலி தாங்க முடியல ... 

தங்கள் கிராமத்திற்கு போஸ்ட் போட போகும் போஸ்ட்மேன் நம்பரில் தான் எல்லோரும் தொலைவில் இருந்து பேசுவார்கள் எப்படியோ அவன் இல்லாத நேரமாக பார்த்து பக்கத்து வீட்டு பெண்ணிடம் சொல்லி திருமணம் முடிந்த புதிதில் தன் தாய்க்கு அழைப்பு விடுத்து விட்டாள்..

பின்னே ரணம் தாங்க முடியவில்லையே பகலில் உடல் நோவு பட்டது இரவு அவள் அங்கம் நோவு பட்டது 

கூசி சிலிர்த்தது இல்லை 

காதலின் அடிச்சுவடு அறிந்தது இல்லை 

அணைப்பில் இதம் அறிந்தது இல்லை 

ஆனால் இதற்கு பெயர் திருமண வாழ்க்கை என்று வாழ கட்டாயபடுத்த பட்டது கூட வன்முறை தானே...

தாலி கட்டி விட்டேன் என்று அனுமதி இல்லாது அவளை தொடுவதும் கற்பழிப்பு தானே .. 

17 வயதில் நடந்த திருமணம் வன்முறை என்று கூட தெரியாத பெண் அவள் ..

திருமணம் முடிந்த கையோடு சென்னையில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று கேசவன் அவளை அழைத்துக் கொண்டு வந்து இங்கே தள்ளியதுதான் அவன் செய்த சாதனை... 

சரி புருஷன் என்றால் முன்ன பின்ன இருப்பானோ என்று அவளும் சகிக்கத்தான் பார்த்தாள் முடியவில்லை....

எனக்கு வலிக்குது விட்டிருங்க என்று ஓட போனவன் தலைமுடியை இழுத்து தரையில் அவளை போட்டவன் அவள் சங்கில் மிதித்து 

"நான் என்ன பொம்பளையே பார்க்காதவன்னு நினைச்சியா 18 வயசிலேயே பெரிய பெரிய பொம்பள கூட போனவதான் நான்... எனக்கு உன் உடம்பு ஒன்னும் தேவையே இல்லை, புள்ள பெக்கலன்னா நான் ஆம்பள கிடையாதுன்னு நம்ம ஊர் சொல்லிடும் அதுக்காக அழுது ஒப்பாரி வைக்கிற உன்னை தொட வேண்டியது இருக்கு என்று அருவருப்பாய் ஒரு தொடக்கம்...

காலையிலேயே எப்படியாவது இந்த நரகத்திலிருந்து தப்பித்து விட மாட்டோமா என்று தாயின் மடி தேட...

என்னடி விசேஷமா அழுற எல்லாரும் காலம் காலமா இப்படித்தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம் வாய மூடிக்கிட்டு கட... நீ இப்படி அழுதது மட்டும் ஊராருக்கு தெரிஞ்சது .. நீ ஒழுக்கம் கெட்டவன்னு ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவாங்க.. அவன் அடிச்சு கொன்னா கூட இந்த ஊர் பக்கம் வந்து தொலைச்சுராத 

"அம்மா வலி தாங்க முடியலம்மா" கிடு கிடுவென்று கால் நடுங்க நின்றாள் ...

"வலிய பொருத்துக்க பழகுறதுதான் பொம்பள, சும்மா எல்லாத்துக்கும் அழுது தொலைக்காதே... 

"என்னடி உன் மகளுக்கு என்னவாம் "என்ற தகப்பன் குரல்... அங்கிருந்தாவது ஏதாவது உபயம் வருமா என்று ஆர்வமாக வேரல் காத்திருக்க 

"அதுங்க , மருமகன் அப்படி இப்படி இருக்காருன்னு காலையிலேயே ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கா..

"ஏது அவன் ஆம்பள என்ன வேணும்னாலும் செய்வான் 

"சொல்லிட்டேங்க

"ம்ம் இங்க பாரு ஒழுங்கு மரியாதையா வாழ சொல்லு ஆம்பள அப்படித்தான் இருப்பான்.. பொறுத்து பொத்திகிட்டு போக சொல்லு இல்ல அப்படியே பொணமா போயிடனும்... கட்டிக் கொடுக்க மட்டும் தான் முடியும் , இவள தலையில் தூக்கி வைத்து சீர் எல்லாம் பார்க்க முடியாது" என்று முடித்து விட ..

போனை வைக்கிறேன் என்று கூட சொல்லாமல் வேரல் போனை வைத்து விட்டாள்... அன்றிலிருந்து இன்று வரை தன் மகள் இருக்கிறாளா இல்லையா என்று பார்க்காத பெற்றவர்கள்... நான் உயிரோடு தான் இருக்கிறேன் எனக்கு ஒரு பிள்ளை பிறந்திருக்கிறது என்று சொல்லாத மகள் இப்படித்தான் அவள் வாழ்க்கை ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது ....

சரி அடித்தாலும் உதைத்தாலும் கொன்றாலும் வேறு ஒரு ஆண் அவர்கள் வாழ்க்கைக்குள் இதுவரை நுழைந்ததில்லை என்று நிம்மதிப்பட்டு கொண்டிருந்தவள் நிம்மதியில் மண்ணள்ளி லோடு லோடாக போட்டுவிட்டு, பணத்தை தன் மீது போடும் அவனை திட்டுவதற்கு அடிப்பதற்கு வழியில்லாமலேயே வளைந்து நெளிந்து, குனிந்து இதோ தரை மட்டமாக மாறிவிட்டாள் .... தனக்கு கொடுத்த பலத்தை அவளை அடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தும் கேசவன் ... ஆண் என்றாலே அவளுக்கு ஒரு ஒவ்வாமை ஒட்டிக்கொண்டது...

"பாரு நூறு ரூபா , நல்லா செலவு பண்ணு .... என்று ஒரு நோட்டை அவள் முகத்தில் வீசினான்... 

"ஐயோ எவ்வளவு பணம் உன் கிட்ட பேசுறதுக்கு இவ்வளவு பணம் தர்றாருன்னா உன் கூட படுக்கறதுக்கு எவ்வளவு பணம் தருவார்... இங்க பாரு பேசமாட்டேன் அப்படின்னு முகத்த முகத்தை தூக்காத, நல்லா வளஞ்சு நெளிஞ்சு குனிஞ்சு நைஸா பேசு.... அப்பதான் உன் கூட படுக்கணும்னு அவனுக்கு ஆசை வரும், ஆசை வந்தா தானே லட்ச லட்சமா பணம் தருவார் புரியுதா?

"என்ன விடுங்க இது எல்லாம் என்னால பண்ண முடியாது என்று திக்கி திணறி மறுப்பை தெரிவித்தவள் வாங்கிய அடி மறக்க முடியுமா... 

"நீ அந்த சார் கூட பேசினா தான் உன் மகளுக்கு ஒரு நேரம் சோறு இல்லை பட்னியா கிடங்க என்று அத்தனை பொருளையும் உடைத்து போட்ட கேசவன் இருவரையும் வீட்டுக்குள் போட்டு பூட்ட 

"ஏன் கேசவா இப்படி பண்ற பாவம் புள்ளைங்க என்ற பக்கத்து வீட்டு பெண்ணை அருவருப்பாக பார்த்தவன் 

"சரி அவளை அனுப்பிட்டு உன்ன வச்சிக்கிறேன் வர்றியா "

"ச்சை 

"அப்போ மூடிட்டு போடி ,என் பொண்டாட்டி பிள்ளை அடிப்பேன் உதைப்பேன் என்ன வேணும்னாலும் செய்வேன் எவளாவது வழக்கு பிடிக்க வந்தீங்க அவரவர் புருசனை வச்சி விளக்கு புடிக்க வச்சிடுவேன்... எவளாவது என் விஷயத்துல தலையை விட்டீங்க அத்தனை பேர் மானமும் காத்துல போகும் வீடு குதிச்சு சீரழிச்சு புடுவேன் என்று விரலில் கஞ்சாவை நசுக்கி வாயில் தினித்த அவனிடம் யாராவது அருகே போக முடியுமா ? 

கதவை திறங்க என்று உள்ளே கிடந்து கதறும் அவளை பார்க்க பாவமாக இருந்தாலும் யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அமைதியா வேடிக்கை தான் பார்த்து விட்டு கடந்தனர்

பல மணி நேரம் ஜன்னல் அருகேயே மகளை இடையில் வைத்து கொண்டு வேரல் வெளியே யாராவது வந்து தனக்கு உதவி செய்வார்களா என்று காத்து நிற்க 

ம்ஹும் 

"அம்மா ரொம்ப பசிக்குது.... என்று நிலா தாய் முகம் பார்க்க .... திண்ணையில் உட்கார்ந்து பிரியாணியை தின்று கொண்டே கேஷுவலாக குடித்து கொண்டிருந்த கேசவனை அழைத்தாள் 

"பாப்பாவுக்கு பசிக்குதாம் 

"சாக சொல்லு ... அவன் கூட பேசுறேன்னு சொல்லு டெய்லி சாப்பாடு இல்லை பட்னியா கிடங்க.... என்று தின்று முடித்து ஏப்பம் விட்டு விட்டு பணத்தை எண்ணிய கேசவன் நெஞ்சில் மிதிக்க பலம் இருந்தால் நெஞ்சில் மிதித்து தரையோடு தரையாக மாற்றி விடுவாள்...

அம்மா என்று பிள்ளை மறுபடியும் அழைக்க ... பிள்ளை காலை உடைத்த அன்று அக்கம் பக்கத்தவர்,

இவனை எல்லாம் போலீஸ்ல புடிச்சு கொடு அவங்க போடற போட்ல தான் உன் புருஷன் சரியா ஆவான் என்றதும் ஒரு நம்பிக்கையில் கேசவன் போதையில் கிடக்கும் நேரமாக பார்த்து போலீஸ் ஸ்டேஷனும் போய் பார்த்து விட்டாள்

ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது .. இந்த இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன் போனது தவறு என்று அவள் கையைப் பிடித்து ஒருவன் அத்துமீற பார்க்க பிழைத்தால் போதும் சாமி என்று ஓடி வந்து விட்டாள்.. தெரியாத பேய்க்கு தெரிந்த இந்த காட்டேரி பரவாயில்லை என்று கிடக்கிறாள்

இவ்வளவு ரணத்திலையும் தன் பிள்ளைக்காக வாழ்ந்து விட வேண்டும் என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள.. பிள்ளை பசியில் தாயை சுரண்டி கொண்டே இருக்க... இந்த வத்திய மார்பை அறுத்து எறிந்து விடலாமா இல்லை தன்னை அறுத்து புள்ளைக்கு பசியாத்தி விடலாமா என்று துடித்த அவள் துடிப்பை யார் தான் கண்டு கொள்ளப் போகிறார்கள்..... பெருமூச்சு விட்டவள்... 

அவரோட நிதமும் பேசுறேன் என் பிள்ளைக்கு பசிக்குது என்று ஈன ஸ்வரத்தில் வேரல் குரல் வர கதவை திறந்து இட்லி பார்சலை உள்ளே போட ஓடி போய் எடுத்து மகள் கையில் அதை கொடுக்க போக அவள் கையை காலால் தடுத்த கேசவன் 

ம்ம் என்று போனை கையில் கொடுக்க எச்சில் விழுங்கி அதை வாங்கி கொண்டவள் 

பாப்பா சாப்பிட்டு முடிச்சதும் பேசுறேன் 

ம்ம் என்றவன் திண்ணையில் போய் அமர ...

இரவு நிலவு வானில் வந்தால் நேற்று வரை ரசித்தாள் இப்போது எல்லாம் பீதி கிளம்பியது 12 மணிக்கு மலரவன் போனில் வந்து விடுவானே...

கீர் கீர் என்று போன் அடிக்க கேசவன் பார்த்த பார்வையில் அவள் கைகள் போனை எடுத்து ஆன் செய்ய 

ஹலோ 

ம்ம் 

"பேசுவோமா ? 

ம்ம் தீத்தன் மெல்ல பேச்சை ஆரம்பிக்க அவளுக்கு பதில் சொல்வது ஒன்றும் சிரமமாக இல்லை ....

"வேரல் வேலி வேர்க்கோட் பலவின் 

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யார தறிந்திசி னோரே சாரல் 

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறுது காமமோ பெரிதே "

(குறுந்தொகை பாடல் )"

குறுந்தொகையின் பாடல் வரிகள் இவை ,

வேரல் என்பது மூங்கில் வகை, பலா மரத்தில் வேர் பலாக்கள் காய்த்து கனிந்த தொங்க, வேரல் மூங்கில் கொண்டு வேலி அடைத்துள்ளார்கள்.. வேழம் வந்து இந்த வேரலை மேய்ந்து விட்டு பலாவை சுவைத்து செல்கிறது..

தலைவன் தேடி தலைவி காதல் நோயால் வாடி வதங்குகிறாள், சீக்கிரமாய் வந்து அவள் பிணி தீர்த்து , அவள் வலி நீக்கி அவளை திருமணம் செய்து கொண்டு போய் உன்னோடு வைத்துக்கொள் , அப்போதுதான் அவள் பிழைப்பாள் என்று தலைவியின் தோழி கூறுவது போன்ற கூற்று இது!!

திருமணம் என்ற வன்முறையில் சிக்கித் தவிக்கும் வேரலை இந்த வேழம் வந்து காப்பாற்றுமா அவள் காதலை மேய்ந்து கொள்ளுமா?