வேரலை மேய்ந்த வேழம் 5
Velam5

5 வேரலை மேய்ந்த வேழம் !!
என்னால இந்த கேவலமான வேலையை பார்க்க முடியாது, என்ன அடிச்சு கொல்லுங்க இல்லை ரெண்டு பேரையும் விஷம் வச்சு கொன்னு போடுங்க .. ஆனா இனிமே இப்படி ஒரு கீழ்த்தரமான வேலை நான் செய்ய மாட்டேன்... அவர் கூட ஒவ்வொரு நேரம் பேசும் போது என் உடம்பெல்லாம் அருவருப்பா இருக்கு என்று கேசவன் நீட்டிய போனை தூக்கி போட்டு உடைத்தாள்..
கசமுசா பேசுவோம் என்ற தீத்தன் பேச்சில் இவளுக்கு அல்லுவிட என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கேசவனை எதிர்த்து நிற்க
உடைந்து போன போனை எச்சில் விழுங்கி பார்த்துக் கொண்டு உக்கரத்தில் நின்ற கேசவனை என்ன வேண்டுமானாலும் செய் என்பது போல் அவள் நோக்கியபடி நிற்க...
"நாய எவ்வளவு திமிர் இருந்தா போனை தூக்கிப்போட்டு உடைப்ப மூணு வேளை, சோறு தின்னதும் கொழுப்பு வந்துடுச்சோ
என்ன விடுங்க இல்லை போலிஸ்ல பிடிச்சு கொடுத்துடுவேன் ஆஆஆஆஆஆஆ அவள் உச்சி முடியை பிடித்து ஆட்டியவன்
போலீஸ் ஸ்டேஷனுக்கு போவியோ .. உன்ன எதுவும் செய்ய மாட்டேன்டி.. எங்க அடிச்சா நீ என் வழிக்கு வருவேன்னு எனக்கு தெரியாது என்று கூரையில் சொருகி வைத்திருந்த அருவாளை தூக்கிக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த நிலா கழுத்தை நோக்கி கேசவன் அருவாளை ஓங்க
அய்யோ விடு என் பிள்ளையை என்று கேசவன் காலை கட்டி கொண்டு அவன் தொடையில் கடித்த வேரல்
எம்புள்ளைய விடு இல்ல கொலை நடக்கும் பாத்துக்கோ என்று அவள் பிள்ளைக்காக போராட எப்படி தடுத்தும் பிள்ளையின் கையில் ஒரு கீறல் விழத்தான் செய்து விட்டது ... அத்தோடு இவளுக்கு மிதியும் அடியும் பல கிடைக்க..
இனிமே நான் சொல்றத செய்யல இன்னைக்கு கையில வெட்டுனேன் நாளைக்கு அவ கழுத்துல வெட்டி கொன்னுட்டு நான் நெனச்சத செய்வேன்.. ஒழுங்கு மரியாதையா எல்லாத்தையும் பொத்திகிட்டு நான் சொல்றத செய்யுற... நான் உன் பொண்டாட்டி பத்தினி ஒருத்தனுக்கு தான் முந்தி விரிப்பேன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்னு வையி.. நான் போடுற கஞ்சாவுல ரெண்டு துண்ட உன் வாயில போட்டு உன் சுயநினைவு இல்லாமலேயே 10 பேருக்கு பங்கு போட்டு சம்பாதிச்சுட்டு போயிட்டே இருப்பேன் பாத்துக்கோ... என்கிட்ட மனசாட்சி அன்பு , நேசம் இது எதையும் எதிர்பார்க்காத என்ன பொறுத்த வரைக்கும் பொண்டாட்டி நான் சொன்னா என்கூடயும் படுக்கணும் எவன் கூடையும் படுக்கணும்.. இல்லை இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும் என்று மயங்கி கிடந்த நிலாவை மகளை தாண்டி கேசவன் வெளியே போக .. வெறித்து பார்த்த வேரல் மகள் அசைவு இல்லாது கிடக்கவும் பதறி போனவள்
அய்யோ அம்மாடி நிலா தங்கம் என்று வேரல் மூச்சு பேச்சு இல்லாது கிடந்த மகளை தூக்கி மடியில் போட்டு கொண்டு அழுதவள் பிள்ளையை தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்து
காமாட்சி அக்கா பாப்பாவை வெட்டிட்டான் அந்தாளு கொஞ்சம் ஆஸ்பத்திரி வரை வாங்களேன்..
"அந்த போதை ஆசாமிக்கிட்ட யாரு ஏச்சு வாங்க ... வேற யாராவது கூட்டிட்டு போ வேரல்" என்று அப்பெண் உள்ளே போக
"பாட்டி
"போன மாசம் உனக்கு பேச போய் என் காதை அடிச்சே உன் புருசன் உடைச்சான், உங்க குடும்ப சங்கதி எனக்கு ஏம்ப்பா என்று அதுவும் ஓட ...
"யக்கா.... நீங்க உதவ வேண்டாம் எங்கன ஆஸ்பத்திரி இருக்குன்னு மட்டும் சொல்லுங்களேன் புருசன் தெருவையே நடுங்க வைப்பான் தெரியுமே அவளை காப்பாத்த கடவுளுக்கே நேரம் இல்லை இவர்களை குறை சொல்லி எதற்கு ?...
பணம் வச்சிருக்கியா ?
"ம்ஹூம் .
"இந்தா நேரா போய் இடது பக்கம் திரும்பு கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வரும் போய் பாரு என்று பக்கத்து வீட்டு பெண் நூறு ரூபாயை அவள் கையில் கொடுத்து அனுப்ப .... நிலாவை தூக்கி கொண்டு அந்த மருத்துவமனை நோக்கி ஓடினாள் ..
ரத்தம் நிறைய போய் இருக்கு , ரெண்டு நாள் வச்சி பார்த்துட்டு போங்க மருத்துவர் நிலா கைக்கு கட்டு போட்டு ஊசி போட்டபடி கூற
சரிங்க அய்யா .... என்று அங்கே கிடைத்த இடத்தில் சுருண்டு கொண்டாள்.... கையில் வைத்திருந்த நூறு ரூபாயில் மகளுக்கு பசியாத்தி விட்டு பசியில் வேரல் கிடந்தாள்
இரவு வேலை முடித்து வந்த தீத்தன் முதல் வேலையாக வேரலிடம் மட்டும் பேச வாங்கிய போனை எடுத்து அவள் நம்பருக்கு அழைக்க ஸ்விட்ச் ஆப் என்று வர கண்ணை சுருக்கினான்
"சரி சார்ஜ் இல்லாம இருக்கும் , குளிச்சிட்டு வந்து பேசுவோம் என்று குளித்து விட்டு மீண்டும் போட அதே போல எடுக்க ஆள் இல்லை கேசவன் நம்பரை தேடி போட
வேரல் எங்க ?
"அந்த சிறுக்கி எங்க போய் செத்து தொலைஞ்சாளோ, நீங்க உம் சொல்லுங்க எசமான் உங்களுக்கு அழகான பொண்ணு நான் ரெடி பண்ணி தர்றேன்
" வெர் இஸ் வேரல் அவளை எங்கன்னு கேட்டேன் கோவமாக தீத்தன் குரல் வந்தது
அவ எவன் கூட போனாளோ, வீட்டுல இல்லை போதையில் உளறி கொண்டு இருந்தான்
"ஸ்டாப் த நான்சென்ஸ் டாக் வேரல் நைட்டுக்குள்ள பேசல உன்ன தொலைச்சு கட்டிடுவேன் ராஸ்கல் போதையில சலம்பிட்டா இருக்க எங்க அவளை??
"அய்யோ சார் அவளைத்தான் தேடிட்டு இருக்கேன் கண்டுபிடிச்சதும் போன் போட சொல்றேன்
ம்ம் குறுக்கும் நெடுக்குமாக இரவு முழுக்க தீத்தன் அலைந்தான் கேசவன் மனைவி பிள்ளையை தேடி தெரு முழுக்க அலைய
:எங்க போனான்னு தெரில கேசவா
"அம்மாம் பெரிய பொம்பள காணாம போயிருக்கா நீங்க எல்லாரும் புடுங்கிட்டா இருந்திங்க அவ கிடைக்காம போகட்டும் அத்தனை பேரையும் உண்டு இல்லைன்னு ஆக்கி புடுறேன்" என்று திட்டி விட்டு போக
"இவன் என்ன லூசா அவன் பொண்டாட்டிய காணலைன்னு நம்மள திட்டிட்டு போறான்
"நல்லவேளை ஆஸ்பத்திரி போனது சொல்லலை இல்லை அவளை அங்கேயும் போய் அடிச்சு வைப்பான் ... பாவம் அவ அமைதிக்கும் அழகுக்கும் இப்படி ஒரு புருசன் கிட்ட அடிபாடு பட்டு சாகணும்னு இருக்கு .. பிள்ளையும்ல அடியும் மிதியும் வாங்குது இவனுக்கு ஒரு கேடு வர மாட்டைக்கே" என்று அத்தனை பேரும் வருந்த தான் முடிந்தது அவளுக்கு வழி அமைத்து கொடுக்க முடியவில்லை...
ஒரு மாதமாக நன்றாக தூங்கி இறுக்கம் தளர்ந்து இருந்த தீத்தன், ஒரே நாளில் மண்டைக்காய்ந்து போனான்..
இரவு முழுவதும் தூங்காமல் ஃபோனை ஃபோனை பார்த்துக் கொண்டே இருந்தான் வேரல் போன் போடுவாளா? கேசவனிடமிருந்து ஏதாவது அப்டேட் வருமா என்று பார்த்தவனுக்கு... இரவு முடிந்து பகல் வந்ததும் தான் தெரிந்தது, இரவு முழுவதும் ஒரு கண்ணுக்கு தூங்காமல் வேரல் ஞாபகத்திலேயே இருந்திருக்கிறோம் என்று ..
சரி இன்று போன் போடுவாள் என்று நம்பி வேலைக்கு ஏனோ தானோவாக கிளம்பி போனவனுக்கு அங்கேயும் அவள் ஞாபகமே தன்னை வேறு எதுவும் செய்ய விடாமல் தடுக்க ...அங்கிருந்து மீண்டும் கேசவனுக்கு அழைக்க கேசவன் போனும் சுவிட்ச் ஆஃப்...
இன்று இரவு காத்திருக்க என்றும் அழைப்பு இல்லை எதற்கும் பதறி பழக்கம் இல்லாத தீத்தன் சற்று பதட்டமாகவே கண்ணைச் சுருக்கினான்... காலையில் கழுத்தை சுற்றி இருந்த டையின் இறுக்கத்தை சரி செய்து கொண்டே எழும்பி ஆபிஸ் அறை ஜன்னலோரம் போய் நின்றவன் யோசனையாக நாடியை தடவிக் கொண்டே நின்றான்
அம்முவுக்க் என்ன ஆச்சு , எதுவும் உடம்பு முடியலையோ இவன் ஏன் போனை எடுக்க மாட்டைக்கிறான் ஒருவேளை காசு பத்தலன்னு வேற யாருக்கும் அவளை??? நினைத்து பார்க்கவே என்னவோ செய்ய அதற்கு மேல் மறைந்து இருந்து கணணாம்பூச்சி விளையாட அவனுக்கு மனம் வரவில்லை அவளை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இப்போது...
தீத்தன் தன் பிஏவை அழைக்க ..பிஏ உள்ளே ஓடி வந்தார் கால் ஹிஸ்டரியில் வேரலோடு பேசும் நம்பரை எடுத்து நீட்டியவன்
இந்த ரெண்டு நம்பரும் எங்க உள்ளது, எந்த ஏரியா இப்போ எங்க இருக்காங்கன்னு, எனக்கு இன்னும் அரை மணி நேரத்துல தெரியணும்..
அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இப்போது அவள் நலமாக தான் இருக்கிறாளா என்பதை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவளைத் தேடி ஆட்களை அனுப்பினான்
கிடைத்தாளா??
ஆம் கிடைத்தாள்!!!
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் இருக்கும் இடம் கிடைத்தது
சார் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல உடம்பு முடியலன்னு இருக்காங்க போல இருக்கு...
"வாட்" பிஏ மொட்டையாக வந்து பதிலை கூற
அவன் ஜகுவார் கார் அந்த அரசு மருத்துவமனை நோக்கி பாய்ந்தது..
"குழந்தையை நல்லா பாத்துக்கோங்க உடம்புல சத்தே இல்லை இன்னும் ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் வந்து கட்டு மாத்திக்கோங்க" என்ற நர்சுக்கு ..இடையில் குழந்தையை சுமந்து கொண்டு தலையாட்டிய வேரல்
"ரொம்ப நன்றி டாக்டர் அம்மா
" நான் டாக்டர் இல்லை நர்ஸ்.. அதற்கே அவளுக்கு வித்தியாசம் தெரியவில்லை... இதுதான் மருத்துவமனையா இன்றுதான் அவள் பார்க்கிறாள்..
"இந்த சீட்ல உங்க விலாசம் எழுதி கொடுங்க ..
"எனக்கு எழுத படிக்க தெரியாதுங்க அம்மா.. நான் சொல்ல சொல்ல எழுதுக்கிக்கோங்க
"ம்ம் சரி உங்க பாப்பா பேரு என்ன ?
"நிலா
"பாப்பாவோட அம்மா பேரு
"வேரல்
"பாப்பாவோட அப்பா பேரு
"கேசவன்
"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? என்று அப்பெண் ஆச்சரியமாக சிறுத்த மேனியாக நின்ற வேரலை பார்க்க
"ம்ம் அஞ்சு வருஷம் ஆகுது .. இது என் குழந்தை தான் ...
"வேரல் எந்த ரூம்ல அட்மிட் ஆயிருக்காங்க" என்று மூக்கை அடைக்கும் மருந்து வாடகையில் கர்சிப் கொண்டு தன் முகத்தை பொத்திக்கொண்டு உள்ளே நுழைந்த தீத்தன் நுழைவு வாயிலில் கேட்டுக் கொண்டிருக்க...
தன் அருகே நின்ற ஒடிசலான பெண் குழந்தையை இடையில் வைத்துக் கொண்டு பேசியது; அத்தனை சத்தத்தின் மத்தியிலும் அவனை ஏதோ செய்ய சட்டென்று திரும்பிப் பார்த்தான்...
இந்த குரல் அவன் மறக்க முடியாத குரல் அல்லவா? எத்தனை லட்சம் பேர் இருந்தாலும் இந்த குரல் அவனை எப்போதும் ஈர்க்கும் அல்லவா ? எப்படி அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பான்... அதிர்ந்து போய் தீத்தன் திரும்பிப் பார்க்க...
சேலையில் ஒட்டுத்துணியா இல்லை ஒட்டுத்துணியில் ஒரு சேலையா என்பது போல் கந்தலாடையில் ஒரு அலங்கோல பெண் சிற்பமாக நின்றாள் அவன் நாயகி... இடையில் அவளைப் போலவே ஜாடையில் ஒரு குழந்தை ...
தீத்தன் இதுதான் வேரலா என்ற அதிர்ந்து போய் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க ... இன்னும் பேரதிர்ச்சி இருக்கிறது என்று அவள் வாய் மூலமாகவே...
நான் திருமணம் ஆனவள் எனக்கு குழந்தை இருக்கிறது என் கணவன் தான் கேசவன் என்பதைக் கூற கையில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் போன் தரையில் விழுந்து உடைய... அந்த சத்தத்தில் திரும்பிய அவளின் திருவுருவம் கண்டவன் அப்படியே நிற்க ...
வேரலோ கீழே குனிந்து அவன் தவறவிட்ட போனை எடுத்து அவன் பக்கத்தில் வைத்தவள்
கீழ தவற விட்டுட்டீங்களா சார்? பார்த்து வச்சிருக்கக் கூடாதா
தவறவிட்டது போனா அவன் இதயமா தெரியவில்லையே...
நான் நேசிக்க தொடங்கிய ஒரு பெண் இன்னொருவனின் மனைவி என்பதை ஜீரணிக்க முடியாமல், ஒரு குழந்தையின் தாயை நேசிக்க தொடங்கி விட்டேனோ?? அவளுக்காக இவ்வளவு துடித்து அவள் இருக்கும் இடம் தேடி ஓடிவரும் அளவு அவள் மீது எனக்கு என்ன அக்கறை... கேட்ட கேள்வி எதற்கும் பதில் இல்லை .. ஆனால் இனி இவள் எனதில்லை என்பது மட்டும் புரிய ... உடைந்த போனை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வந்த வழியே விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்து விட்டான் தீத்தன் ..
நல்ல வேளை அசம்பாவிதமும் அன்பு பரிமாறலும் அந்தரங்க பேச்சு எதுவும் தொடங்கவில்லை ஆரம்பத்திலேயே உண்மை அறிந்து விட்டான்.. அதுவரை சாலச் சிறந்தது,, இத்தோடு அவளை கை கழுவி விட்டு நாம் வந்த இடம் தெரியாமல் நம் வேலையை பார்க்க போய் விடுவோம் என்று தீத்தன் மனதில் உண்டான அவள் சலனத்தை அங்கேயே விட்டுவிட்டு தன் பாதையில் நகர்ந்து போய்விட்டான் ..
வாசல் வரை வந்த தென்றல் வாசலோடு போனது போல, அவள் வலிகளை குணமாக்க வந்த வசந்தம் இடையிலேயே போய்விட்டதோ??
தென்றலுக்கு லஞ்சம் கொடுத்தாவது திசை திருப்புவோம் ...