வேரல் 28 நாளை இரவு கதை நீக்கப்படும்
Veral28

28 வேரலை மேய்ந்த வேழம் !!
நிலா மேஜர் ஆப்ரேஷனுக்கு பிறகு இப்போது தான் மகளை வெளியே அழைத்துச் செல்கிறான்... நிலாவுக்கு ஆபரேஷன் செய்து முடித்து நடை பயிற்சி செய்ய மூன்று மருத்துவர்கள் கூடவே இருந்தனர்.. ஆனாலும் இவன் 4:00 மணிக்கு டான் என்று வீட்டில் இருப்பான்
'சார் உங்களுக்கு எதுக்கு சிரமம் நாங்களே ப்ராக்டிஸ் கொடுக்கிறோம்
'என் பெண்ணை பார்த்துக்க எனக்கு என்ன சிரமம், உங்களைவிட என்கிட்ட தான் அவ கம்ஃபர்டபிலா ஃபீல் ஆவா, சோ ஐ கேரி ஹேர்: என்று அவனே தான் மகளை தூக்கிக் கொண்டு போய் கார்டனில் நடக்க வைப்பான்..
"அப்பா வலிக்குது என்று நிலா முதலில் அழுது கரைய பக்கத்தில் உட்கார்ந்து வேரல் மகள் வலி தாங்காமல் கண்ணீர் வடிக்க
"உள்ள போடி
"அவளுக்கு வலிக்குது போல நிலாப்பா "
"வலிக்கத்தான் செய்யும் ,பிராக்டிஸ் பண்ணாம இருந்தா மறுபடியும் சதை எலும்பை சுத்தி சதை மூடிடும்னு சொல்லி தானே அனுப்பி இருக்காங்க அவளை நான் பார்த்துக்கிறேன், நீ ஒப்பாரி வைக்காம உள்ள போ ...
"நிலாப்பா அது
"உன்னை உள்ள போன்னு சொன்னேன் என்று அவன் குரலை உயர்த்தவும்...
"இது என் பிள்ளையும் தான்னு அடிக்கடி சசொல்லிக்கோங்க நிலாப்பா , சும்மா என்னையே திட்ட வேண்டியது என்றவள் வெளியே குரல் வராமல் அவனை திட்ட
"என்ன சொன்ன உன் புள்ளையா? ஏய் உன்கிட்ட தாண்டி கேட்கிறேன், என்னவோ வாய்க்குள்ள புலம்புறியே வாயைத் திறந்து சொல்லு
"எதுக்கு சொல்லிட்டு உங்ககிட்ட வாங்கி கட்டவா ஒன்னும் தேவையில்லை , நீங்களே உங்க புள்ளையை நடக்க வச்சு கூட்டிட்டு வாங்க.. நான் நைட்டு டின்னர் ரெடி பண்றேன்...என்று வேரல் நடக்க ஆரம்பிக்க
"பாருடா உன் அம்மாக்காரியை இங்கிலீஷ்ல எல்லாம் பிச்சு உதறுறா "
"ஆமாப்பா, டிவி பார்த்து எல்லாரும் சமையல் கத்துப்பாங்க உன் பொண்டாட்டி இங்கிலீஷ் கத்துக்கிறா.. உன் அப்பா எவ்வளவு அழகா இங்கிலீஷ் பேசுறாங்க, நமக்கு அந்த அளவுக்கு பேச தெரியலனாலும் ஒன்னு இரண்டாவது பேச பழகுவோம்னு, இப்ப எல்லாம் நோட் போட்டு எழுதி பழகுறாங்கன்னா பாத்துக்கோங்களேன்.."
"திருந்திடுவா போல இருக்கே, எனக்கே டப் கொடுப்பா போல என்ற தீத்தன் சட்டென்று மகளை இறக்கிவிட்டு விட
அப்பா என்று பயந்து அலறிய மகளை இடையோடு "கைவிட்டு தூக்கி அணைத்து பிடித்துக் கொண்டவன்
"அப்பா உன்ன விட்டுடுவேன்னு நினைக்கிறாயா நிலா ?
"ம்ஹூம்
"உன்னை வலிக்க வச்சுடுவேன்னு நினைக்கிறியா நிலா
"இல்லை என்று தலையாட்ட
"பின்ன என்ன நட என்று ஒவ்வொரு அடியாக நடக்க வைக்க ..
மாடி கிச்சனிலிருந்து வேலை செய்து கொண்டே வேரல் அவர்கள் இருவரும் நடை பழகுவதை கண்கள் கலங்க பார்த்தாள்
தெய்வம் அவளுக்கு ஏதாவது கொடுத்ததா தெரியாது.. ஆனால் , இந்த தெய்வம் அவள் காணாததை காண ஏங்கியதை கொடுத்துக் கொண்டே இருக்கிறது ..
தாம்பத்தியம் என்றால் இடைகள் மட்டும் சேர்வது என்றால் அங்கே தாலியும் , தாம்பத்தியமே தோற்றுப் போய்விடும்..
தாம்பத்தியம் என்பது இதயம் சேர்வது, தாம்பத்தியம் என்பது விருப்பங்கள் சேர்வது தாம்பத்தியம் என்பது ஒருவர் ஒருவரை சுமப்பது என்றால் அவளும் இந்த தாம்பத்தியத்தில் வெற்றி அடைந்து விட்டாள் அடைய வைத்து விட்டான்...
நிலா அவன் ரத்தமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இறுதி மூச்சு உள்ளவரை நிலா அவன் மகளாகத்தான் இருப்பாள் என்பதில் எள்ளளவும் அவளுக்கு சந்தேகம் இல்லை... இவளை அடைவதற்காக குழந்தையிடம் பாசத்தை பொய்யாக அவன் காட்டி நடிக்கவில்லை... அந்த குழந்தையிடம் காட்டிய பாசத்தில்தான் இவளே மயங்கி விட்டாள்
குழந்தையை இவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்கிறான் என்றால் என்னை எவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்வான் என்று அன்று சறுக்கியது தானே இன்றுவரை எழும்ப மனமில்லாமல் சறுக்கியே கிடக்கிறாள்
சிந்தனையின்வூடே தேனீர் மணக்க மணக்க அவனுக்கு பிடித்தது போல் தயாராகிவிட்டது.. கூடவே மகளுக்கு பிடித்தது போல் பிரெஞ்ச் ப்ரைஸ், கெச்சாப் எடுப்பதற்காக மேல் உள்ள ரேக்கை அவள் எட்டி திறக்க போக , முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்க... அவள் இடையில் இறுக்கமான அவன் விரல்கள் பதிந்தது ...
நிலாப்பா
"இப்போ எடுடி என்று தீத்தன் அவளை தூக்கி செல்ப் உயரத்திற்கு காட்ட ...
எடுத்துட்டேன் நிலாப்பா , இறக்கி விடுங்க.. இதுதான் சாக்குன்னு தூக்கியே வச்சிக்க வேண்டியது என்று வேரல் குசும்பாக உதட்டை சுளிக்க
"குள்ளச்சி இப்ப எல்லாம் உனக்கு வாய் ஓவரா நீளுது... ஆனா உயர மட்டும் கூடவே மாட்டேங்குறியேடி என்றவன் வியர்வையோடு அவள் கழுத்தில் முகத்தை புதைத்து விளையாட
"இப்படி நீங்க குனிஞ்சு நின்னு என்கிட்ட சேட்ட பண்றது புடிச்சிருக்கு, அதனாலதான் வளரவே மாட்டேங்குறேன்.. இப்படியே இருந்துக்குறேன் என்று அவனை அண்ணாந்து பார்க்க ... அவளை தூக்கி திண்டில் உட்கார வைத்த தீத்தன்
ஆனா எனக்கு உன் உயரம் பத்தலையேடி
ஏன் , எதுக்கு நல்லா தானே இருக்கு
உங்க நெஞ்சுக்கு உங்க நெஞ்ச உரசிக்கிட்டே நான் நிக்கும்போது எனக்கு அவ்வளவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா ??
"உனக்கு பாதுகாப்பா இருக்கும்டி... ஆனா , எனக்கு அப்பப்ப கிளுகிளுப்பு மிஸ் ஆகி போகுதே
"ஏன்" என்று அவள் அறியாத பார்வை பார்க்க அவள் காது பக்கத்தில் தன் மீசை முடியால் உரசிய தீத்தன்
நின்னுக்கிட்டே ஒரு ட்ரெயல் பார்க்க ஆசை.. ஆனா உன் ஹயிட் பிராப்ளம் அத செயல்முறை படுத்த விடமாட்டேங்குதே என்றவன் பேச்சின் சாராம்சம் புரிந்து குப்பென சிவந்து போனவள்.. அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி
சீசீ போங்க எப்ப பாத்தாலும் இதே நினைப்புதான் நின்னுக்கிட்டே பண்ணினாலும் அப்படித்தான இருக்கும்...தாம்பத்திய சுகம் எது என்று நேசம் கொண்ட ஒருவன் மனதையும் உடலையும் தொட்டால்தான் அறிய முடியும் போல .. பயந்த இரவுகள் போய் கள்ளத்தனமாக காதலிக்கும் இரவுகளை கற்று கொடுத்து விட்டான் .... அனைத்தும் முடிந்து அவன் மீது காலை போட்டு ஆட்டி கொண்டு விடிய விடிய வார கடைசி நாள் பேசும் கதைக்காக இருவரும் காத்திருப்பர்....
ட்ரையல் பண்ணாம நீயே முடிவு சொல்லக்கூடாதுடி இன்னைக்கு ராத்திரி அதையும் ட்ரை பண்ணி பாத்துட்டு அதுக்கு பிறகு நீ இதை சொல்லு...
"அதை ராத்திரி பார்ப்போம் உங்க மகளுக்கு ட்ரெயினிங் முடிச்சாச்சா" என்று தேநீர் கோப்பையை அவன் கையில் நீட்ட
"என் மகளுக்கு டிரைனிங் முடிச்சாச்சு, உன் மகனுக்கு புவா கொடுத்தாச்சா...
"அய்யய்யோ மறந்துட்டேனே , கோபத்துல அப்படியே அப்பா மாதிரி எழும்பினா ஆன்னு காது கிழிய கத்துவானே அவள் சொல்லி வாயை மூடவில்லை அவன் மகன் ஆ என்று படுக்கையில் கத்தி கூப்பாடு போட ஆரம்பிக்க...
"இருடா அம்மா வருவாங்க , அதுக்கு ஏன் இப்படி அழுகிற என்று நிலாவின் சமாதான பேச்சும் வந்து கொண்டிருந்தது ...
தமக்கை முதல் தாய் என்று சொல்வார்கள் அதே போல வேதாந்த்தை பெற்றது வேண்டுமானால் வேரலாக இருக்கலாம் ஆனால் அவனை வளர்ப்பது நிலா தான்..
என் தம்பி என் தம்பி என்று வாய்க்கு வாய் அவனை அழைக்கும் பொழுது அப்பாடா என்று இருவருக்குமே நிம்மதியாக இருக்கும்..
எங்கே இவர்களுக்கு என்று ஒரு குழந்தை வந்துவிட்டால் நிலா தூரம் போய் விடுவாளோ என்று பயந்து தான் தீத்தன் குழந்தை வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான்..
"அப்பா அம்மாவுக்கு தம்பி பாப்பா பிறக்கவே செய்யாதா என்று அவளே வந்து தீத்தன் மடியில் உட்கார்ந்து கொண்டு கேட்க..
"ஏன் பாப்பா
"எல்லாருக்கும் தம்பி பாப்பா இருக்கு ,எனக்கு தம்பி பாப்பா இருக்குன்னு சொல்லி பெருமை பேசுறாங்க, எனக்கு மட்டும் இல்லையே "என்று ஏக்கமாக மகள் பார்க்க அவன் யோசனையாக மனைவியை பார்க்க மனைவியும் காலால் நிலத்தை சுரண்ட இருவருக்குமே விருப்பம் அது என்றால் கொடுப்பதில் பஞ்சம் வைப்பானா என்ன?? அடுத்த பத்தாவது மாதத்தில் வேரல் கையில் அவன் மகன் துள்ளி விளையாடினான்...
"நைட் ஆபீஸ் பார்ட்டி இருக்குடி... பிள்ளைங்கள ரெடி பண்ணி உட்காரு 10 மணிக்கு வந்து கூட்டிட்டு போறேன்
"பார்ட்டிக்கு நீங்க மட்டும் தனியா போங்க நிலாப்பா , எங்களையும் ஏன் புடிச்சுக்கிட்டு எங்க போனாலும் இழுத்துக்கிட்டே போறீங்க ,
"பின்ன , இவ்வளவு அழகான பொண்டாட்டிய கட்டினது எதுக்குடி?? பாருடா, என் பொண்டாட்டிய எவ்வளவு மேட்ட்சா இருக்கான்னு எல்லார் கிட்டேயும் காட்டுறதுக்கு தாண்டி , வீட்டுக்குள்ளேயே குட்டி போடலாம்னு பாக்குறியா ஒழுங்கு மரியாதையா என்கூட வா ...
ஆள் அண்டா பிறவியாக எப்போதும் அவன் முதுகு பின்னால் மறையும் மனைவியை வா வந்து தான் ஆகணும் என்று கூட்டத்தோட நிறுத்தி பேச வைப்பான்..
எனக்கு அவங்கள மாதிரி எல்லாம் இங்கிலீஷ் பேச வரல என்று சினுங்க மனைவிக்கு தலையில் ஒரு கொட்டு வைத்து
"இங்கிலீஷ் பேசணும்னு அவசியம் இல்ல, நீ பேசினா போதும் பேசு , எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு சொல்றது ஒன்னும் அருவருப்போ அசிங்கமோ கிடையாது.. அவங்களுக்கு தெரியுது உனக்கு தெரியல உனக்கு தெரியணும் என்கிற அவசியமும் கிடையாது .. அதையும் மீறி யாராவது உன்னை கிண்டல் பண்ணுனா, உன் புருஷன் நான் எதுக்கு இருக்கேன் என்று சொன்னவன் பேச்சில்தான் அவள் வெட்டப்பட்ட தன்னம்பிக்கை முளைத்துக் கொண்டிருக்கிறது ...
பார்ட்டி முடிந்து நிலாவை பின்னால் படுக்க வைத்து விட்டு மகனை மடியில் வைத்த படி வேரல் அவன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்க .. கார் மிதமாக சென்னை சாலையில் ஓடிக் கொண்டிருந்தது..
திடீரென்று அங்கே போலீசார் சூழ்ந்து கொள்ள
"சார் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க , ஒரு சின்ன பிரச்சனை அது முடிஞ்ச பிறகு நீங்க போங்க" என்று காவலர் வந்து கூறவும் காரை ஓரமாக நிறுத்தி விட்டு தீத்தன் ஃபோனை குனிந்து பார்த்துக் கொண்டிருக்க இவள் எப்போதும் போல வேடிக்கை பார்க்க ...
கஞ்சா சப்ளை , பொண்ணுங்கள வச்சு தொழில் பண்ணி இருப்பான் போல இருக்கு, சின்ன பிள்ளைங்கள கூட விட்டு வைக்கல இன்னைக்கு போலீஸ்ல மாட்டிக்கிட்டான்... இனி காலத்துக்கும் ஜெயில்தான் என்று அருகே பைக்கில் நின்ற நபர் பேசுவது கேட்டது
போலீசார் ஒருவனை இழுத்துக் கொண்டு வர... அவன் பின்னே பல ஆண்களும் பெண்களும் கஞ்சா போதையில் தடுமாறிக் கொண்டு வந்தனர்.. இவளுக்கு பார்த்த அந்த காட்சியில் ஒரு நிமிடம் திடுக்கென்று ஆகிப்போனது.. பின்னே அங்கே முதல் ஆளாக கஞ்சாவில் தள்ளாடிக் கொண்டு வந்தது கேசவனாயிற்றே.. அவன்தான் அந்த கூட்டத்துக்கு தலைவனும்...
"போடா நாயே போய் வண்டியில ஏறு என்று அவனை அடித்து வண்டியின் உள்ளே தள்ளி ஜீப் போக ... போனை பார்த்தபடி இருந்த தீத்தன் தோளில் ஏதோ சாய்வது உணர்ந்து திரும்பி பார்க்க அவன் கையோடு கைவிட்டு வேரல் சாய்ந்து கொள்ள
"என்னடி தீடீர்ன்னு மூட் வந்து இருக்கு
இச் என்று அவன் கன்னத்தில் முத்தம் வைக்க
"அட டபுள் ட்ரீட்டா , என்னடி எதுக்கு திடீர்னு முத்தம் எல்லா தர்ற..
"எதுக்கோ என்றவள் மீ்ண்டும் அவன் உதட்டில் இச் வைக்க
"இது எதுக்கு
"அதுக்கு
"அதுக்குன்னா ??
"அதுக்குதான்
"ப்ச் எதுக்குடி ..
"இந்த வேழம் வேரலை மொத்தமா மேஞ்சுக்கிட்டதுக்கு..
"பைத்தியம் முத்திடுச்சு போல
"ம்ம் தீத்தன் பைத்தியம் முத்திடுச்சு என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் கண்ணீர் அவன் தோளை நனைக்க
"ஏய் என்னாச்சுடி
ஆனந்த கண்ணீர் ..
"அப்படி என்ன நடந்துச்சுன்னு சொன்னா நானும் ஹேப்பி ஆவேன்ல ...
வீதியோரம் வீசப்பட்ட மலர்மாலை நான்
கல்லறையில் பூத்த கருமலர் நான்
அதிலும் மணம் உண்டு என்று எனை
தூக்கி எடுத்த உன் நேயத்துக்கு நான் தரும் விலை என்ன தெரியுமா
என்ன?
"என் எல்லையில்லாத காதல் .... என்றவள் அவளே தலையை உயர்த்தி அவன் உதட்டை கவ்வி கொள்ள... அவன் கண்கள் தானாக மூடி கொண்டது அவள் தந்த முத்தத்தில்....
மேய்வது அவனாக இருப்பின் காலம் முழுக்க மேய்ந்து கொள்ள தன்னை கொடுப்பாள் அவள்..
ஒரு தாலி அவள் தலையில் அத்தனை பாரத்தையும் ஏற்றி வைத்தது ... ஒரு தாலி அவள் அத்தனை பாரத்தையும் இறக்கி வைத்தது ..
தாலியில் புனிதம் இல்லை , தாலி யார் கையால் கட்டப்படுகிறது அவர்கள் கொடுக்கும் நேசத்தால் தான் புனிதமாவதும் அவலமாவதும் ...
அவன் செய்த அத்தனை வன்முறைகளையும் தாங்கி தாங்கி அவள் பத்தினி பட்டம் வாங்க வேண்டும் என்றால் அப்படி ஒரு பட்டம் அவளுக்கு தேவையில்லை .. இவனோடு வாழ்வதை கள்ளக்காதல் என்று ஊர் சொல்லுமானால் இது கள்ளக்காதலாகவே கூட இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் இனி அவன் இல்லாது அவள் இல்லை..
நிம்மதியாக அவன் தோள் சாய்ந்து தூங்கும் மனைவியையும் தகப்பன் இருக்கிறான் பார்த்து கொள்வான் என்று பயம் இல்லாது தூங்கும் பிள்ளைகளையும் காரை ஓட்டி கொண்டே தீத்தன் பார்த்தான் போனை எடுத்து காதில் வைத்தவன்
"அவன் ஜெயிலை விட்டு வெளியே வரவே கூடாது, உள்ளேயே ஆளை வச்சி போட்டுற சொல்லு ராபின்.. என் மனைவி இன்னொரு முறை அவனை பார்க்க கூடாது பழசை நினைக்க கூடாது "
"ஓகே சார் பண்ணிட சொல்றேன்"
"ம்ம் என்றவன் தூக்கத்தில் வழுவி விழ போன மனைவியை ஒரு கையால் தாங்கி பிடித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தான்...
இறங்குடி வீடு வந்துடுச்சு ஒரு கையில் மகன், ஒரு கையில் மகள் என்று தூக்கி கொண்டு தீத்தன் இன்னும் சீட்டில் தூங்க இடம் தேடும் மனைவியை எழுப்ப
ம்ம் என்று இறங்கி அவனோடு நடந்தவள் .. மின்னல் போல ஒரு முத்தத்தை அவன் கன்னத்தில் வைத்து விட்டு போய் கதவை திறக்க
இது எதுக்குடி ?
"இதுவும் எதுக்கோ என்று கண்ணை சிமிட்ட
"கள்ளி முழிச்சு தான் கிடந்தியா
"லைட்டா" என்று கண்ணை சுருக்கி சொன்னவள் சல்யூட் அடித்து
"நன்றி டிகே..
"எதுக்கு?
"என்ன காதலிக்கிறதுக்கு
"இது பத்தாதே மிஸஸ் டிகே
"நின்னுட்டே ட்ரை பண்ணுவோம் டிகே என்றவள் குறும்பில் ஹாஹா என்று சிரித்தவன் சிரிப்பை ரசித்த மனைவியை பார்த்து
நான் ரெடி என்று கண்ணடிக்க
நானும் எப்பவோ ரெடி என்று அவளும் பதிலுக்கு கண்ணடித்து விட்டு ஓடிட
அவளை முழுதாக வென்று விட்ட மகழ்வில் தீத்தன் நிறைவாக புன்னகை செய்தான் ...
இனியும் அன்பால் அவளை வென்று கொண்டே இருப்பான் இந்த வேழம்..
நன்றி
வாழ்க வளமுடன் !
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்நாடு!