வேரலை மேய்ந்த வேழம்27
Velam28

27 வேரலை மேய்ந்த வேழம் !!
தன் எதிரே கையில் பலகார பார்சலோடு நின்ற கேசவனை ஒரு நிமிடம் அதிர்ந்து போய் பார்த்தாள் வேரல்
"வேரலு எப்படி இருக்க , உனக்கு என்ன நீ நல்லாத்தான் இருப்ப, என்னதான் அந்த ஆளு கால கைய ஒடச்சு அனுப்பிட்டான் ... எப்படியோ தப்பி பிழைச்சு ஓடி வந்து இருக்கேன்"... என்றவன் பாவமான முகத்தோடு
"வேரலு நான் திருந்திட்டேன், உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன் மன்னிச்சிடு ... என்று அவள் அருகே கேசவன் வந்து வேரல் கையைப் பிடிக்க போக ..சட்டென பின்னால் நகர்ந்து நின்றாள்...
" நம்பு வேரல் நான் இப்ப எல்லாம் குடிக்கிறது இல்ல கஞ்சா எதுவும் போடுறது இல்ல, இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டேன், உன்ன அடிக்க மாட்டேன் நிலாவை பத்திரமா பார்த்துக்கிறேன் என் கூட வந்துடு வேரல் நிலாவை கொண்டுட்டு வந்துடு... நாம நம்ம ஊருக்கே போயிடலாம் .... இனிமே உன் கிட்ட தப்பா நடந்துக்க மாட்டேன்... உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன், ஏதாவது வேலைக்கு போய் உன்னையும் குழந்தையையும் காப்பாத்துறேன் உன்ன தப்பான தொழில் பார்க்க சொல்ல மாட்டேன் அசிங்கமா பேச மாட்டேன் , என்ன மன்னிச்சிடு " என்று நீலிக்கண்ணிர் வடித்து அவள் காலில் விழுந்து கேசவன் மன்னிப்பு கேட்க ....
மரக்கட்டை போல நின்று கொண்டிருந்தாள் வேரல் ...
இது என்னடா திருப்பம் , திடீரென்று வரும் புயல் என்றுதான் நினைக்கத் தோன்றியது...
என்ன நீ எவ்வளவு நேசித்து இருந்தா, நான் கொடுத்த வலியெல்லாம் தாங்கிக்கிட்டு என்கூட கிடந்திருப்பே,. உன்னை போய் நான் பணத்துக்காக விற்க பாத்துட்டேனே, எனக்கு மன்னிப்பே கிடையாது என்ன மன்னிச்சிடு... உன் கால கழுவி தண்ணி குடிச்சா கூட நான் செஞ்ச பாவமெல்லாம் தீராது ... இனிமே உன்ன நான் எதுக்காகவும் ஏங்க விடமாட்டேன் உன்னையும் குழந்தையையும் பத்திரமா பாத்துக்கறதுக்காகவே உயிரை கையில பிடிச்சுட்டு ஓடி வந்து இருக்கேன்... என்ன நம்பு வேரல் என்று அவன் அழுது கொண்டே வேரலை கேசவன் அண்ணாந்து பார்த்தான் ...
அவளோ உணர்ச்சி மொத்தமும் துடைத்த முகத்தோடு குனிந்து தன் காலில் விழுந்து கதறும் கேசவனே பார்த்துக்கொண்டே நின்றாள்
எத்தனை நாள் என்னையும் என் பிள்ளையையும் விட்டிரு, நாங்க எங்கேயாவது ஓடிடுகிறோம் என்று அவன் காலை பிடித்துக் கொண்டு கெஞ்சி இருப்பாள்.. எட்டி எட்டி அவள் மார்பிலே மிதித்து வலிக்க வைத்தானே அதுதான் அவள் கண் முன்னால் வந்தது.... அவன் அழுகை கண்ணீர் பேச்சு எதுவும் அவள் நெஞ்சுக்குள் போனது போல் தெரியவில்லை ... எது நேசம் என்று கண்ணால் கண்ட பின்பு பொய் நடிப்பு மாய்மாலம் எல்லாம் உடனே தெரிந்து விடுமே ...தீத்தன் அவளை பார்க்கும் பார்வையில் மொத்தமும் நேசம் கொட்டி கிடக்கும் , இந்த கேசவன் கண்ணில் இருந்த நடிப்பு அவள் அறியாது இல்லை...
"ராவு ஊருக்கு டிக்கெட் எடுத்துட்டு வந்து இருக்கேன், அங்க போய் நடந்தது எல்லாம் மறந்துட்டு சந்தோஷமா வாழலாம் என்று மீண்டும் எழும்பி அவளை அணைக்க போக... சட்டென பதறி நகர்ந்து கொண்டவள்.,.
எ...ன்....ன பண்ற ? என்று தீத்தன் அவளை தனதாக்கி கொண்டானோ அப்போதே அவள் புனிதம் ஆகி போனாள் இவன் தொட்டு மீண்டும் தீட்டுபட விரும்பவில்லை...
வேரல் வா போகலாம் "
"நான் எங்கேயும் வரல " என்றாள் வரண்டு போன குரலில் ஆனால் பயமில்லாமல் தெளிவாக வந்தது அவள் குரல்
"பயப்படாத நம்ம ஊருக்கு போயிட்டா நம்ம ஆட்கள் பத்தி உனக்கு தெரியும் இல்ல, அவங்களையெல்லாம் தாண்டி நம்மள யாரும் எதுவும் செய்ய முடியாது....
"ப்ச் வரல
"புரியுது அவன்கூட அப்படி இப்படி ஆகி போச்சா விடு , நான் தானே இதுக்கெல்லாம் காரணம் ஏதோ நடந்தது நடந்துட்டு போகட்டும், இனி நான் உன் கூடவே இருப்பேன் என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் வேரல் வா என் கூட வந்துரு என்று அவள் கையை பிடித்து இழுத்தான் அவளை அவசரமாக அழைத்துக் கொண்டு போவதில் கேசவன் தீவிரமாக இருந்தான்..
பின்ன, லட்ச ரூபாய்க்கு அவளை பேரம் பேசி வைத்து விட்டு அல்லவா வந்து இருக்கிறான் , தீத்தன் இவள் பக்கமே அவனை விடாது அணை போட்டு வைத்திருக்க கஞ்சா பெண் என்று மனம் போல அலைந்தவன்... பெண்களை விற்கும் வேலையையும் செய்ய ஆரம்பித்து விட்டான் ... குடும்ப பொண்ணு வேணும் எத்தனை லட்சம்னாலும் தர்றேன் என்று கிழவன் ஒருவன் விலை பேச , இவள் நியாபகம் அப்போதுதான் வந்தது நேரே தீத்தன் கண்ணை மறைத்து அவளை ஏமாற்றி அழைத்து போக எண்ணம் அன்றாவது ஏமாந்து இருப்பாள் இப்போது தீத்தனின் காதல் தீயே அவள் ..
"வா வேரல்
"ச்சை வரமாட்டேன்னு சொல்றேன்ல கைய விடு அவன் பிடித்த கையை வேகமாக உதறிவிட்டாள்...தன் முந்தானை எடுத்து அவன் பிடித்த கையை பரபரவென்று தேயித்து அவன் ரேகை கூட இல்லாதது போல் துடைத்துக் கொண்டாள்
"என் மேல உனக்கு கோவம்னு தெரியும் ...ஆனா அதெல்லாம் தாண்டி என் மேல உனக்கு காதல் இருக்கும்னு எனக்கு தெரியும் , அந்த கோபத்தை எப்படி குறைக்கணும்னு எனக்கு தெரியும் நீ வா எல்லாம் சரியாயிடும் என்றவனை எரிச்சலாக பார்த்தவள் ... அவன் நின்ற வழியை விட்டு நகர்ந்து கோவிலுக்குள் நடக்க ஆரம்பிக்க... மீண்டும் அவளை மறைத்தது போல் வந்து நின்ற கேசவன்..
"உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன் வேரல் என்கூட வா ....
"ப்ச் என்ன அழுது ஒப்பாரி வச்சு நல்லவன் வேஷம் போட்டு மறுபடியும் என்னை ஏமாத்தி கூட்டிகிட்டு போயி எவனுக்காவது விக்கலாம்னு நினைக்கிறியா ... யார்கிட்டயாவது அட்வான்ஸ் பணம் வாங்கிட்டு வந்துட்டியா" என்று கையை கட்டிக் கொண்டு கேட்ட வேரலை அவன் யோசனையாக பார்க்க....
"உன் நடிப்பை கண்டு ஏமாற நான் ஒன்னும் ஏமாளி இல்ல, இதோ இந்த தாலி ஏறுறதுக்கு முன்னாடி நீ இதே மாதிரி வந்து பேசி இருந்தா, நான் உண்மையா உன் நடிப்பை பார்த்து நானும் ஏமாந்து மறுபடியும் உன் பின்னாடி வந்திருக்கத்தான் செய்வேன்.. ஏன்னா , எனக்கு அப்பதான் காதல்னாலே என்னன்னு தெரியாதே.. ஆனா, இப்போ அவர் கண்ணுல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கான காதலை பார்த்த பிறகு ... உன் கண்ணில் இருக்கிறது அத்தனையும் போலி , நடிப்பு என்ன ஏதோ சொல்லி தூக்கிட்டு போய் என்னவோ பண்ண போறன்னு போலி கண்ணீர் உள்ள வன்மம் கொட்டி கிடக்கிறது தெரியாதுன்னு நினைச்சியா , ஹான் , அவர் கண்ணில் பார்த்த அந்த காதலை வேற எந்த கண்ணுலையும் நான் பார்த்ததும் இல்லை , அந்த காதல அடையாளம் தெரிஞ்சுக்க முடியாத அளவு நான் பைத்தியக்காரியும் இல்லை .. அதனால உன் நடிப்ப இத்தோடு நிப்பாட்டிடு "என்று பத்ரகாளி போல் கண்ணை விரித்து பேசிய அவள் முற்றும் முழுதாக தீத்தனின் மனைவியாக மாறி நின்றாள்..
"வேரல்
"ஒரு தாலிய கட்டுனதுக்காக நாய் போல கட்டி போட்டு என்னை இத்தனை வருஷம் சித்திரவதை பண்ணுனியே நானும் இதுதான் கல்யாண வாழ்க்கை போலன்னு, நெனச்சு நெனச்சுதான் உன் கூட அடங்கி நீ கொடுத்த அடி எல்லாம் வாங்கிட்டு ஊமையாகி கிடந்தேன். ஆனா, இப்போது தானே எனக்கு தெரியுது .. உன் கூட வாழ்ந்ததுக்கு பேர் வாழ்க்கை நரகம் மட்டும் தான்னு ...அதுக்கு பேரு திருமணமும் இல்லை, காதலும் இல்லை கல்யாணங்கிற பேர்ல உன் இச்சையை தீர்த்துக்க என்ன கொண்டு வந்து வச்சி இருந்திருக்க, உன்னோட கோபம், இயலாமை தேவைக்காக என்ன கொடுமைப்படுத்தி வைத்திருக்கிறது பேர் வாழ்க்கை ... அதையும் சகிச்சுக்கிட்டு வாழ்ந்தேன் பாரு என்னதான் செருப்பால அடிக்கணும்.... இனிமே உன்னோட இந்த நடிப்பு பேச்சு இதுக்கெல்லாம் மயங்குவேன், பயப்படுவேன்னு மட்டும் நீ நினைக்காத ... ஏன்னா, அன்னைக்கு வேணும்னா நான் சாதா வேரலாஇருந்திருக்கலாம் ஆனா என்னைக்கு உன் முன்னாடி நிக்கிறது சாதாரண வேரல் கிடையாது.., தீத்தனோட வேரல் , கிழிச்சிடுவேன், நெஞ்சில் இருந்து கீழ வரைக்கும் விரலை விட்டே கிழிச்சு எரிஞ்சிடுவேன்.... என்ன இன்னொரு தடவ தொட்டு பேசின, தொட்டு பேசின கை இருக்காது ஜாக்கிரதை" என்று சத்தம் இல்லாமல் பல்லிடுக்கில் பேசினாலும் , அவள் பேச்சில் அவ்வளவு தெளிவும் , தைரியமும் என்னடா செஞ்சுடுவ என்ற தெனாவட்டும் இருந்தது.
"என்னோட ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நாளும் அவருக்கானது மட்டும்தான்.. அந்த நேரத்துல உன்னை நினைக்கிறதும் உன் கூட வாழ்ந்ததை யோசிச்சு பாக்கிறதும் கூட அவருக்கு நான் செய்ற துரோகம் ... கடைசி வரைக்கும் நான் இனி அவரோட மனைவி மட்டும் தான் , நிலா அவரோட மக மட்டும் தான் இது நான் அவர் காதலுக்கு கொடுக்கிற மொத்த பரிசு ... உன் கூட நின்னு பேசுற இந்த நேரம் கூட எனக்கு வீணானதுதான் ... சும்மா இங்க நின்னு ஒப்பாரி வைக்காம, வேற ஏதாவது உருப்படியா போய் பண்ணு ... இனிமேலும் உன் நடிப்பை பார்த்து பயந்து பின்னாடி வருவேன்னு கனவு கோட்டை கட்டாத,
"என்னடி அவன் பெரிய பணக்காரன்னு அவன் பின்னாடி போயிட்டியோ?
"இதுதான் நீ உன் சாக்கடை புத்தி , அது என்னைக்கும் எப்பவும் மாறாது.. ஆமா அவர் பணக்காரர் தான் எதுல தெரியுமா? பணத்துல இல்ல குணத்துல பொண்டாட்டின்னா படுக்கைய பங்கு போட்டுக்க மட்டும் தான் நினைக்கிற உன்ன போலன்னு அவரை நினைச்சியா... இன்னைக்கு நான் சிரிக்கிறேன், இன்னைக்கு நான் சந்தோஷமா தூங்குறேன், இன்னைக்கு நான் நிம்மதியா இருக்கேன், இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் அவர் ஒருத்தர் தான் ... அவர் கொடுத்த காதல் எனக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கு ... அவர் கொடுத்த காதல் எனக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கு , அவர் கொடுக்கிற அன்பு எனக்கு நிம்மதியை கொடுக்குது , இதெல்லாம் சாக்கடை உனக்கு புரியாது புரிய வைக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை ... அப்பறம் இன்னொன்னு சொல்றேன் காதுக்குள்ள கேட்டுட்டு போ என்று தன் வயிற்றை ஆசையாக தடவிக் கொண்டவள்
"இதுல அவரோட குழந்தை இல்ல இல்ல எங்களோட குழந்தை வளருது ,உன்ன மாதிரி சதையை கீறி வலியை கொடுத்து உண்டான தாம்பத்திய வாழ்க்கை கிடையாது .. அவர் தந்த முத்தத்துல சிலிர்த்து, அவர் தந்த அணைப்புல மயங்கி ஒவ்வொரு நாளும் அவர் காதல்ல கிறங்கி உண்டான குழந்தை.... இதுக்கெல்லாம் அர்த்தம் கூட உனக்கு தெரியாது, இப்போ எதுக்கு இதெல்லாம் உன்கிட்ட சொல்றேன் தெரியுமா இனிமே என் முன்னாடி கூட வந்திராத... வந்த என் புருஷனோட முதல் வேட்டை நீயா தான் இருக்கும்... உயிர் பிச்சை போடுறேன் போய் சேர் , இப்போ வழியை விட்டு தள்ளி நில்லு என்று திமிராக சொன்னவள் அதிர்ந்து நின்ற கேசவன் பார்வையை அசட்டை செய்தவளாக...
"உன்ன தாண்டா சொல்றேன் வழியை விட்டு தள்ளி நில்லு....
"என்ன தாண்டி நீ எப்படி வாழ்ந்திடுறேன்னு பார்க்கிறேன்..
"உன் கண்ணு முன்னாடியே நல்லா வாழ்வேன்டா ஏன்னா என் கூட இருக்கிறது வேழம் ... என்னை ஒரு நாளும் வேடன் கையில சிக்க விட மாட்டார் .. அவர் கைக்குள் இருக்கிற வரைக்கும் என்னை உன்னால ஒன்னும் பண்ண முடியாது, முடிஞ்சத பண்ணிக்கோ என்றவள் நினைத்தது எல்லாம் பேசி முடித்த திருப்தியில் திரும்பினாள் .. அங்கேயோ, தூணில் சாய்ந்து நின்று அவளை கைகள் கட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் வேழம் ....
நிலாப்பா உங்களை எங்கெல்லாம் தேடிட்டு இருந்தேன் எங்க போனீங்க?? போன் பேசிட்டு வர இவ்வளவு நேரமா ஹான் வர வர சேட்டை ஆகி போச்சு ரெண்டு பேருக்கும் என்று எதுவுமே நடக்காதது போல வேரல் அவன் கையைப் பிடித்துக் கொண்டு பேச ..
"நிலா பாப்பா பலூன் வேணும்னு சொன்னா அதான் கீழ போய் வாங்கி கொடுத்துட்டு வந்தேன்... யாரது??
"யாரோ எங்கேயோ பார்த்த உருவம் மாதிரி இருக்கு ஆனா நினைவில்ல நிலாப்பா, அப்படி யோசிச்சு அது யாருன்னு தெரிஞ்சுக்கிற அளவுக்கு முக்கியமானவனும் இல்ல போவோமா?? என்ற மனைவியை கொத்தாக தூக்கி கொண்ட தீத்தன் அமைதியாக அவளை அண்ணாந்து பார்க்க ... தன் நெற்றியில் உள்ள குங்குமத்தை அவன் நெற்றியில் குனிந்து அழுத்தி வைத்து விட்டவள் அவன் நாசியோடு நாசி மோதி
"திருந்திட்டேன்னு வந்து சொன்னாலும் எனக்கு அவன் வேண்டாம் எனக்கு நீங்க போதும் நீங்க மட்டும் போதும்
ஏன்
ஏன்னா நானும் உங்கள காதலிக்க ஆரம்பிச்சுட்டேனே "
"இது உண்மையா என்று வயிற்றை அவன் விரல் தடவ
"ம்ஹூம் உண்மையாக்க என் புருசனுக்கு எப்போ நேரம் வரும் ..
"நிலாவுக்கு ஓகேன்னா பெத்துக்கலாம் , என்ற புருசனை எப்படி விட்டுவிட்டு போக எப்படி விட்டு கொடுக்க முடியும்.... எதிரே நின்ற ஆசாமியை இருவரும் கண்டு கொள்ளவே இல்லை ....
காலை சுற்றியது கருநாகம் என்றால் அதை நசுக்கி போட்டு விட்டு போவதில் தவறு இல்லை..