அலெக்ஸ் 23
Alex23

23 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
ரோஜாவனம் நடுவே உள்ள ஊஞ்சலில் யாமினி உட்கார்ந்து இருந்து நிலாவை ரசித்து கொண்டிருந்தாள்..
காதல் வந்தால் ரசனைகள் எல்லாம் மாறி போகுமா?
ஆம் மாறுமே!!
என் ஆடம்பரம் பார் என்று நண்பர்கள் பட்டாளத்தோடு சுற்றி வருவதும், தன் ஆடம்பரத்தை கடை பரப்புவதும் இதுதான் அவளுடைய ரசனையாய் இருந்தது.. எங்கே அவள் தனிபட்ட வாழ்க்கை தாய் தகப்பன் பிரிவு பற்றி பேசி அவளை பலம் இழக்க வைப்பார்களோ? உனக்கு அப்பா மட்டும் தானா அம்மா இல்லையா, அம்மா என்ன ஆனாங்க.. ஏன் உங்க அப்பா டைவர்ஸ் பண்ணினார் அம்மா மோசமா, அப்பா மோசமா என்று விவாத பொருள் அவள் குடும்பம் ஆவதை தடுக்கவே பந்தா பகட்டு பணத்தை அள்ளி போட்டு அவளுக்கு ஜால்ரா தட்டும் ஆட்களை மட்டும் கூட வைத்திருந்நாள் அப்படியே மாறியும் போனாள்..
ஆனால், இப்போது சில நாட்களாக அவளுடைய ரசனைகள் அத்தனையும் முற்றிலுமாக மாறிப்போனது...
இயற்கையை ரசிக்கிறாள், பாடல்களை கேட்கிறாள், அவ்வளவு ஏன் கடவுள் இருக்கிறாரா என்ன என்று எள்ளனாக பேசும் அவள் , அடிக்கடி கோவிலுக்கு போகிறாள்... தொடை தெரிய ஆடையில் தான் என் சுதந்திரம் என்று சொல்லித் திரிந்தவள், அவன் பார்த்த அங்கம் இனி யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அங்கம் மறைக்கும் ஆடைகளை தேர்ந்தெடுத்து போடுகிறாள்.. தலை விரித்துப் போட்டு மொழி தெரியாத பாடலுக்கு பேயாட்டம் ஆடிய அவள் இன்று மெல்லிசை பாடல்களை கேட்டு தாளம் போடுகிறாள்.. நிறைய நேரம் தனியாக இருக்க விரும்புகிறாள், அந்த தனிமையில் கணவன் முகம் தேடி அலைந்திருக்கிறாள் , அவனோடு சிறிது நாட்களே என்றாலும் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து சிரித்தும் இருக்கிறாள் கோபத்தில் முறைத்தும் இருக்கிறாள்... மொத்தத்தில் அவள் அவளாக இல்லை என்றாலும் இந்த மாற்றம் அவளுக்கு பிடித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை ....
இதுதான் காதல் என்றால் அவளுக்கும் காதல் நோய் கனநாளாக முற்றி விட்டது ..
இப்போது கூட தூக்கம் கண்ணை சொக்க வைத்தாலும் கணவன் எப்போது வருவான் என்று காத்திருப்பது எல்லாம் புதிதிலும் புதிது.. யாருக்காகவும் எதற்காகவும் வளைந்து போக விரும்பாதவள்... தனக்காக, தன் காதலுக்காக தன் வாழ்க்கைக்காக சற்று வளைய பிரயத்தனம் படுகிறாள்.
கேட் திறக்கும் சத்தம் கேட்டு மனது குத்தாட்டம் போட்டாலும் திரும்பிப் பார்த்தால் அவள் கௌரவம் என்ன ஆவது..
எனக்காகவா காத்திருந்தாய் என்று கணவன் எள்ளல் சிரிப்பு சிரித்து வைப்பானே, யாமனி வேகமாக தன் பக்கத்தில் இருந்த நாவல் புத்தகத்தை எடுத்து திறந்து வைத்துக் கொண்டாள்
அவன் காலனி சத்தம் அருகே கேட்டு தன்னை தேடி வருவானா இல்ல அக்கா என்று அக்காவை தேடி போவானா தகப்பன் ரத்தம் அல்லவா தன்னைத்தான் தன் கணவன் முதலில் தேட வேண்டும் என்ற ஆசை இவளுக்கும் அப்படியே உண்டு ...
சிறிது நேரம் எந்த சத்தமும் இல்லை
இவருக்கு அக்கா தான் பெருசு, இவங்க எல்லாம் எதுக்கு பொண்டாட்டி கட்டுறான் போயிட்டான் அப்படியே அக்கா பின்னாடி போ போ.. ஐ ஹேட் யூ என்று முணுமுணுத்துக் கொண்டு நாவல் புத்தகத்தை கீழே வைத்தவள் தலையை தூக்கி பார்க்க .. அவளை பார்த்தபடி நெப்போலியன் நின்று கொண்டு இருந்தான் ..
அய் என்று மனதிற்குள் புன்னகை தன்னை மீறி அரும்பியது ..
அவன் தலையைக் கோதி கொண்டே , இங்க என்ன பண்ற என்று நெப்போலியன் ஆழமாக தன் மனைவியை பார்க்க
"ம்க்கும் சும்மா , அம்மா சாப்பாடு டைனிங் டேபிள்ல எடுத்து வச்சிருக்கேன்னு சொன்னாங்க எடுத்துப் போட்டு சாப்பிட்டுக்கோங்க.."
"அப்படி என்ன பெரிய வேலை , வந்து பரிமாறலாமே என்று அவனும் நடந்து வந்து ஊஞ்சலில் இன்னொரு பக்கம் அமர ... இருவருக்குமே ஒரே ஆசை வந்தது
தன் தோளில் மனைவியை சாய வைத்துக்கொண்டு இந்த ஊஞ்சலில் ஆடினால் எப்படி இருக்கும் என்று அவனும் அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவன் கையோடு கைகோர்த்துக்கொண்டு , இந்த நிலவை ரசித்தால் எப்படி இருக்கும் என்று அவளும் ஒரே ரசனையில் ஆட்கொண்டு கிடந்தனர்...
"குத்தகை பணம் ஒருத்தன் தர வேண்டி இருந்தது அதான் வாங்கிட்டு வந்தேன்
"ம்ம்
"இந்தா இதுல ரெண்டு லட்சம் இருக்கு ..செலவுக்கு வச்சிக்க என்று அவள் கையில் கொடுத்தான்
"எதுக்கு ?
"நீ இன்னும் என் மனைவின்னு நினைச்சு தான் தந்தேன் , இல்லை நான் நல்லபெருமாள் மகன்னா. கீழ வச்சிடு ஒன்னும் பிரச்சனை இல்லை
"இவ்வளவு பணத்துக்கு எனக்கு செலவு இல்லேன்னு கூட அர்த்தம் இருக்கலாம் ....
ஏன் கடைத்தெரு தோழிக கூட எல்லாம் போறது இல்லையா மனைவி தோழிகள் அருகேயே போகாது வனவாசம் இருக்கிறாள் என்று அறிந்தான்
போக விருப்பம் இல்லை
ஏன் ?
விருப்பங்கள் மாறி இருக்கலாம் போல போக தோணல போகல ஏன் பப் பார் போகவா கேள்வியாக மனைவி அவனை திரும்பி பார்க்க
"அய்யடா உதட்டை பிடிச்சு கடிச்சு வச்சிடலாம் போல இருக்கே" பார் முழுதாக குடும்ப இஸ்திரியாக மாறி இருக்கும் உன் மனைவியை பார் என்பது போலத்தான் அனைத்திலும் மாற்றம் அதுவே இதுக்காக அவக்கிட்ட தோற்கலாம்... என்று கிறுகிறுக்க வைத்தாள்...
"ஏதோ உங்களுக்கு தேவை இருக்குன்னு அம்மா சொன்னாங்க ...
அவளிடம் இப்போது கண்ட செலவுகள் எல்லாம் கிடையாது ..ஏன் கரெண்ட் பில் இவ்வளவு வருது டேடி, வீட்டுக்கு ஏன் இத்தனை வேலைக்காரங்க, இதுக்கு ஏன் அவ்வளவு காசு ஆகுது டேடி வரவு செலவு கணவன் பார்ப்பது கண்டு இவளுக்கும் தோற்றி கொண்டதோ.. சுற்றி முற்றி கண்ணை திறந்து வீட்டு நிர்வாகம் பார்த்தாள் ... நெப்போலியன் ஸ்ரீதேவி தினமும் அதுக்கு இவ்வளவு ஆச்சு இந்த மாச சேமிப்பு என்று கணக்கு போடுவது கண்டு கண்ணை விரித்து அவர்கள் உலகம் பார்த்தாள் இப்போது அவளும் அதில் ஒர்றே சிக்கனமும் பெண்ணின் நால்வகை குணத்தில் ஒன்று என்று அறிந்தாள்
"இல்ல கண்ணா ஏசி போட்டுட்டு நீ மறந்து போயிடுவ
"யாரு நானா என்ற மகள் பார்வையில் பதறி
"நான் நான் அதான் கூடும் போல" அதன் பிறகு தான் யோசித்தாள்...
நம்ம என்னைக்கு ஏசியை ஆப் பண்ணி பழக்கம் அவள் உள்ளே வரும் போதே ஏசி ஓடும் வெளியே போகும் போது அதை கவனிப்பதே இல்லை கரெண்ட் பில் லகரத்தில் கட்டுவார்.. இப்போது எல்லாம் அதில் கவனம் வைக்கிறாள்...
"ரெண்டு பேருக்கு வேலை செய்ய ஏன் இத்தனை பேர் ரெண்டு பேர் போதும் மத்தவங்களை பேக்டரிக்கு மாத்துங்க, டெய்லி ஒரு டிபன் பண்ணினா போதும் எல்லாத்தையும் பண்ணி குப்பையில போடாதீங்க ...
"நீ எப்போ எது ஆசைபடுவ தெரியாதே கண்ணா சமைச்சு வைக்கட்டும் உனக்கு பிடிச்சதை சாப்பிட்டுக்கலாம்ல
"ப்ச் டேட் இதுக்காக நாலு விவசாயி கிடந்து சாகுறான் என்ற பெண்ணை குரப்பு ஏறி போய் நல்லபெருமாள் பார்த்தார்... அவளுக்கு சிந்தையோ வியர்வை வடிய அந்த வெயிலில் மண்வெட்டி பிடித்து விவசாயம் பண்ணும் கணவன் முகம் அன்றோ உணவை வீண் செய்யும் போது வருகிறது.
மொத்தத்தில் மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொடுத்து விட்டான் அவள் கணவன் ..
இந்த ஒன்றுககாகவே மருமகனுக்கு கோவில் கட்டலாம் என்று நல்லபெருமாள் கூட மெச்சி கொண்டார் ..
நீங்களே வச்சுக்கோங்க, தேவை இருக்குமே
"அது என்னைக்கு இல்லாம இருந்துச்சு பிள்ளைதாச்சிக்கு ஆசை இருக்கும்ல எதுனாலும் வாங்கிக்க...
அவள் ஆசையை அவன் புரிந்து கொள்வானா?
"எனக்கு என்ன ஆசை உலகத்துல எல்லாத்தையும் வாங்கி பார்த்துட்டேன் , எல்லாத்தையும் அனுபவிச்சிட்டேன், ஐயம் டேடி லிட்டில் பிரின்சஸ் எல்லாத்தையும் பார்த்தாச்சு ஊஊஊஊஊஊஊஊஊஊ என்றவள் உதடுகள் தானாக மூடி கொண்டது அவன் செயலில் அவளை இழுத்து தூக்கி தன் மடியில் உட்கார வைத்து இருந்தான் நெப்போலியன்...
"உலகத்துல எல்லாத்தையும் பார்த்து இருப்ப இப்படி புருசன் மடியில உட்கார்ந்து நிலவை ரசிச்சு இருக்கியா
"ம்ஹூம் என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்...
"இப்ப ரசி இது எல்லாம் கோடி கொடுத்தாலும் கிடைக்காது...
ஏன் நீங்க ரசிச்சு இருக்கீங்களா
"ரசிக்க பொண்டாட்டி இல்லையே, இப்பதான் கிடைச்சு இருக்கு ...அவள் தோளில் முகத்தை புதைத்தவன்..கணவன் கம்பீர மணம் நளதம் போல அவள் நாசி உள்ளே போக அம்மா கொழுந்து விட்டு எரிந்தது காதல் தீ
"கொடி
"ம்ம்
"என்ன தேடுனியா
"ம்ஹூம்
"நம்பிட்டேன் , உன் அறையில என் படம் எதுக்கு கிடக்குது ??
"புருசன் போட்டோ பார்த்தா புருசன் போல பிள்ளை பிறக்கும்னு மம்மி சொன்னா "
"ஓஹோ புருசன் போல எதுக்கு பிள்ளை பெக்கணுமாம்... கிடுக்குப்பிடி கேள்வி கேட்க ..
"அது ஊஊஊஊ திணறலோடு அவள் திரும்ப ஆசையாக அவள் உதட்டை பார்த்த கணவனுக்கு அவளே உதட்டை உரசி கொடுத்து விட
கீச் கீச் என்று உதட்டை மாறி மாறி ஆசையாக உறிஞ்சும் இருவர் முத்த சத்தம் தான் கேட்டது அவன் கழுத்தை கட்டி கொண்டு கிடைத்த இதழை விடாது அவள் விழுங்க.. இது மட்டும் தான் இப்போதைக்கு என்று அறிந்த அவன், அவள் சோர்வு அடையும் வரை நாவையும் தள்ளி கொடுத்து முத்தத்தில் நேரத்தை கடத்தி அவள் மூச்சு திணறவும் உதட்டை விட்டான்..
சிறுது நேரம் அவன் நெஞ்சில் இளைப்பாறும் மனைவி வயிற்றை தடவி கொடுத்து கொண்டே இருந்தான்
கொடி
ம்ம்
" உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்தேன் ..
ஓஓஓ ஆர்வம் இல்லாத பார்வை தான் மனைவியிடம் வந்தது ஆனால் கண்கள் ஆளாய் பறந்தது அவன் பரிசுக்கு..
தன் முதுகு பக்கம் இருந்து நெப்போலியன் ஒரு கவரை எடுத்து நீட்ட
"என்னது ..
"பிரிச்சு பாரு ...
"நீங்களே காட்டுங்க என்றதும் அவன் திறந்து காட்ட சேலை இருந்தது
என்னைக்காவது நான் முழுசா அலெக்சாண்டரின் அல்லிக்கொடிதான்னு உனக்கு தோணும் போது இதை கட்டிக்க....
சாப்பாடு வைக்கவா பேச்சை மாத்தி சேலை கவரை கையோடு எடுத்து கொண்டது கள்ளப்பெண்..அதை ரசித்து கொண்டே
உனக்கு சிரமம் இல்லைன்னா வை, இல்ல நான் எடுத்து போட்டு சாப்பிட்டுக்கிறேன்...
நீதான் என் எதிர்காலம் என்று சொல்ல இருவருக்கும் முடியவில்லை... அவன் காதலிக்கிறான் என்று அவளுக்கு தெரியும் அவளும் அவனை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்து விட்டாள் என்று இவனுக்கு தெரியும் ஆனால் அதை அவரவர் வாயால் கேட்க ஆசை ...
தழுக்கி குலுக்கி அவன் முன்னே நைட்டியில் நடந்து போகும் மனைவியை இப்போது எதுவும் செய்ய முடியாது பிள்ளை பிறந்த பிறகு இந்த அழகை தின்போம் என்று உடலில் ஓடிய நரம்புகளுக்கு கட்டளை இட்டவன்.. வெறும் பார்வையோடு ஆசையை நிறுத்தி வைத்தான்...
தனக்கு தட்டு தடுமாறி உணவை பரிமாறும் மனைவி கையை இழுத்து அருகே அமர்த்தினான்..
"சாப்பிட்டியா ?
"ம்ம்
"சாப்பிட்டிருக்க மாட்ட நான் வரணும்னு தானே காத்திருந்த...ஆஆஆ காட்டு என்று பிய்த்து அவள் வாயில் ஊட்ட மறுக்காது வாங்கி கொண்டாள்.. அவள் கண்கள் காதலை நிறைவாக காட்டியது... உனக்காக அப்படி மாறிட்டேன் இப்படி மாறினேன் தெரியுமா என்று தம்பட்டம் அடிக்காது அவள் காதலை மாற்றத்தின் வழி காட்டியது அழகோ அழகு!!