புதன் இரவு கதை நீக்கப்படும் அலெக்ஸ் 27
Alex27

27 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
ஐயோ வயசு கெட்ட காலத்துல ஹனிமூன் கூட்டிட்டு வரேன்னு சொல்லி கூட்டிட்டு வந்து, இப்படி குளிர்ல பல்லு கிடு கிடுக்க நிக்க வச்சுருக்காரு, ஏதாவது சொன்னா புருஷனுக்காக இது கூட செய்ய மாட்டியா அப்படின்னு இதுக்கும் சண்டைக்கு வருவார், இந்த மனுஷன் காதலுக்கு அளவே இல்லாம போச்சு சாகப் போற காலத்துல தேன்நிலவு ஒரு கேடா" என்ன ஸ்ரீதேவி குளிரில் நடுங்கிய படி கூற
"என்னடி முணுமுணுத்துக்கிட்டு நிக்கிற , ரெண்டு காபி கப்போடு பால்கனி கதவை திறந்து கொண்டு நல்லபெருமாள் உள்ளே வந்தார்.... புதுக்கல்யாணம் முடிந்தது போல ஜோரில் அலைந்தார் ... மருமகன் மகள் கண்ணுக்கு தெரியாது பல காதல் காட்சி, தெரிந்து சில காதல் காட்சி என்று ஸ்ரீதேவிக்கு வெட்கம் வர வைத்து விடுகிறார்
"டேடி உங்க மருமகனை விட நீங்கதான் காதல்ல பட்டையை கிளப்புறீங்க மனைவி பின்னே சுத்தும் தகப்பனை யாமினி கிண்டல் செய்ய
"ம்ம் நீயும் காதல் செய்ய ஒத்துழைப்பு கொடுக்கணும்டி என்ன மட்டும் குறை சொல்லாத, என்று நெப்போலியன் உள்ளே வர.. உதட்டை சுளித்த மனைவிக்கு அவனும் உதட்டை சுளித்து காட்ட இருவர் உதட்டிலும் காதல் காயம் இருந்தது ...
ஊடலுக்கும் கூடலுக்கும் பத்து பொருத்தம் உண்டு என்று அறிந்த இளம் தம்பதிகள் அல்லவா ஊடலும் கூடலும் தான் அவர்கள் காதல் அதில் இன்பமும் கண்டு சொக்கி கிடக்கிறார்கள்..
"எப்பா போதும்டா இனி வாழ்ற வரை அவ முகம் பார்த்து வாழ்ந்தா போதும் என்ற முற்றும் துறந்த காதல் நிலை முதுமை காதல் என்று இரு ஜோடிகளும் விதவிதமாக காதலை காட்டினர்...
நாளைக்கு ஹனிமூன் போக ரெண்டு டிக்கெட் என்று நல்லபெருமாள் இரவு மனைவி கையில் டிக்கெட்டை கொடுக்க..விவரம் புரியாத ஸ்ரீதேவி
"ஆமாங்க ரெண்டு பேரையும் அனுப்பி விடுங்க, இவன் இங்க இருந்தா தோட்டம் மாடுன்னு சுத்துவான்.... அங்க போயி கொஞ்சம் உல்லாசமாக இருந்துட்டு வரட்டும்.. டிரான்பஸ் ஆகி மதுரைக்கே வந்து விட்டார் .. மனைவியோடு நெப்போலியன் கதை பேசினாலே ஆகாது இடையில் வந்து அதே எடுத்து தா,இது வேணும் என்று மனைவியை இழுத்து கொண்டு போனால் தான் நிம்மதியாக இருப்பார்..
ம்க்கும், அவங்களுக்கு தேவைன்னா அவங்க போவாங்க,
"அப்ப இது யாருக்கு அத்தான் ?
"உனக்கும் எனக்கும்டி" என்ற கணவனை ஸ்ரீதேவி பாவமாக திரும்பிப் பார்க்க..
"நீ பாவமா பார்த்தாலும் , எந்த கதையும் நடக்காது என் கூட வருவியா மாட்டியா ..
"ஏன் வரலைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க
"தனியா போயிட்டு வருவேன், சொல்லு வர்றியா இல்லையா ..
"நீங்க கூப்பிட்டா சுடுகாடா இருந்தாலும் வர்றேன் போதுமா என்று சொன்ன மனைவியின் பதில் நிரம்ப பிடித்துப் போக , பின்னால் இருந்து கட்டி அணைத்துக் கொண்டவர்..
"தேவி
"ம்ம்
"தேவி
"ம்ம், ரொம்ப இழந்துட்டோம்டி
"ஆமா
"இனி நிறைய வாழணும்னு ஆசையா இருக்கு தேவி..
"இதுதான் கண் கட்டப்பிறகு சூரிய நமஸ்காரம்ன்னு சொல்றது போல இருக்கு அத்தான்"..
"இல்லையே கண்ணெல்லாம் சரியாத்தானே இருக்கு என்றவர் இந்த வயதிலும் மனைவியை தேடி துளைக்க தயாராக இருக்கும் ஏவுகணையை பற்றி சொல்ல ..
சீசீ பேத்தி வந்தாச்சு... என்று கணவன் நெஞ்சில் கை வைத்து அடித்த ஸ்ரீதேவி..
"நல்ல வேளை கர்ப்பப்பை எடுத்தாங்க, இல்ல நீங்க பண்ற வேலைக்கு உங்க பொண்ணுக்கு இன்னொரு தங்கச்சி பாப்பா வந்துருவா...
"எனக்கும் இப்ப அந்த ஒத்த கவலை தான் ஒரு பையன் பெக்க முடியாம போச்சே... சரி அதுக்கு என்ன உன் தம்பியை போனா போகதுன்னு பிள்ளையா பார்க்கிறேன் ... என்றவர் மீசையை இழுத்து தன் அருகே கொண்டு வந்த ஸ்ரீதேவி
"இந்த பக்குவம் ரெண்டு பேருக்கும் அப்போ இருந்திருந்தா இவ்வளவு வருசம் வீணா போய் இருக்காதுல்ல அத்தான்
"ப்ச் அதை ஏன்டி நியாபக படுத்துற" என்ற கணவன் முகம் மாற வயது மறந்து துள்ளி தன் மீது ஏறிய மனைவிக்கு புழுதி பறக்க புரவி ஓட்டம் சொல்லி கொடுத்தார்...
விவாகரத்து தான் முடிவு என்றால் தாராளமாக செய்ய உரிமை உண்டு , ஆனால் குழந்தைகளில் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு முடிவு எடுப்பது பெரியவர்கள் வாழ்க்கைக்கும் சிறியவர்கள் வாழ்க்கைக்கும் நம்மை பயக்கும்.. பெற்றவர்கள் மனமுறிவில் பிள்ளைகள் மனநிம்மதியும் இருக்கிறது என்பதை அறிந்து பல முறை யோசித்து மனவிலக்கு செய்வது நலம்!!
"அம்மா கோவிலுக்கு போறேன் .... பாப்பாவை பார்த்துக்க... நல்லபெருமாள் சட்டைக்கு பட்டன் போட்டு கொண்டிருந்த ஸ்ரீதேவி
"இருடி உன் புருசன் வயக்காடு போயிருக்கான் வந்ததும் துணைக்கு அவனை கூட்டிட்டு போ
"எனக்கு என்ன பயம் தேவைன்னா நான் போவேன் அவர் எதுக்கு ? என் சுதந்திரத்தில உன் தம்பி கூட மூக்கை நுழைக்க கூடாது "
"என்னங்க அத்தான் தீடீர் திடீர்னு பேயா மாறிடுறா
"எதாவது சண்டை போட்டு இருப்பான்; பதிலுக்கு பதில் பண்ணுவா
"ம்க்கும் உங்க பொண்ண பத்தி உங்களுக்கு தான் தெரியுது ....
"யாருக்கோ ஒருத்தருக்கு தெரிஞ்சா போதாது நீ பாப்பாவை பார்த்துக்க மதியம் சாப்பிட எதாவது வாங்கிட்டு வர்றேன் வேலை செய்யாத முட்டு வலிக்குன்னு சொன்னீயே "
"அடே அப்பா கரிசனை தான் , நேத்து முட்டு வலிக்க வச்சது அய்யாதான் என்று சிரித்த மனைவியை கிள்ளி சிவக்க வைத்து விட்டு வெளியே வர நகத்தை கடித்து கொண்டு யாமினி நின்றாள்..
பார்ட்டி பப் என்னும் மகள் உதடுகள் வயல் நாற்று களை என்று மாறி போனது அவனுக்கு மதிய உணவு கொண்டு போவது அவன் ஊரில் இல்லாத நேரம் வயலில் போய் வேடிக்கை பார்ப்பது சம்பளம் கொடுப்பது , அங்கே உள்ளவர்களோடு பேசி சிரிப்பது என்று கிராமத்து மருமகளாகவே மாறி போன மகள் காதல் விஷயத்தில் இன்னும் அகராதி பிடித்தவள் தான் ..
"என்ன கண்ணா உன் புருஷன் என்ன பண்ணி தொலைச்சான்..
"கோவிலுக்கு போகலாம்னு கேட்டேன் டேடி ..
"என்ன சொன்னான்
"வயக்காடு வரை போயிட்டு வர்றேன்னு சொன்னார்
எவ்வளவு பெரிய தப்பு "
"தப்பு தான டேடி
"ஆமா என் பொண்ணு கூப்பிட்டும் மாட்டேன்னு சொன்னா தப்புதான்
"அதான் நானே தனியா போயிக்கிறேன் நீ வேண்டாம் போடான்னு சொல்லிட்டேன்...
"அப்போ இதுக்கு கண்டிப்பா டைவர்ஸ் பண்ணணுமே கண்ணா ...
"ஆமால்ல கேட்டு கொண்டிருந்த ஸ்ரீதேவிக்கு பகீர் என்றது
"ஆமாடா வக்கீல் வர சொல்றேன் டைவர்ஸ் பண்ணிடு
"ம்ம் என்று விட்டு போகும் மகளை பார்த்து சிரித்தார்...
"ஏன் அத்தான் இப்படி சொல்லி கொடுக்கிறீங்க
"பொறுத்து இருந்து பார் என்று விட்டு போய்விட்டார்..
கோவிலில் சிடுசிடுவென காரை வி்ட்டு யாமினி இறங்க அவளுக்கு முன்னே வந்து நெப்போலியன் பைக் நின்றது... முன்னே புல் கட்டு இருந்தது ... வேலையை முடித்தும் முடிக்காதும் ஓடி வந்திருந்தான்...
"என்ன ?
"கோவிலுக்கு போகணும்னு சொன்னல்ல அதான் ஓடி வந்தேன் எப்படியும் நீ எனக்காக காத்திருக்க மாட்டேன்னு தெரியுமே, அதான் நேரடியா இங்கேயே வந்தாச்சு
"ப்ச் ஒன்னும் வேண்டாம் நான் போறேன் ..ஆஆஆஆஆஆ இறக்கி விடுங்க நெப்ஸ்மாமா என்று கத்திய மனைவியை கையில் ஏந்தி கொண்டவன்...
"என் பொண்டாட்டி கால் சூடுல படலாமா...
"போ நீ வேண்டாம் டைவர்ஸ் பண்ண போறேன்
"பண்ணிக்கடி ஆனா மறுபடியும் கல்யாணம் கட்டிக்கலாம்...
"அதுக்கு எதுக்கு டைவர்ஸ் பண்ணணும்
"அதான் சொல்றேன் ஜென்மம் முழுக்க உனக்கு நான் வேணுமோ வேண்டாமோ ,நெப்போலியனுக்கு இந்த அல்லிக்கொடி வேணுமே
"போ மாமா இந்த பேர் சொல்லாத ...
"எனக்கு இதுதான் பிடிச்சு இருக்கு ..நான் வச்ச பேர்ல .. என்றவன் கழுத்தில் கையை போட்டு கட்டி கொண்ட யாமினி முகம் சாந்தமாக மாறி விட்டது ...
"நல்லா பேரா வைக்க கூடாதா பட்டிக்காட்டு பேர் அதை வேற சொல்லி கூப்பிடு
"ஏன் அந்த நேரத்தில சொல்லும் போது பிடிக்கலையா கிசுகிசுக்க
"அது என்றவள் காதில் புருசன் கிசுகிசுக்க... அவன் காலரை இழுத்து அவளும் ஏதோ குனுங்க..
"பூ வாங்கிட்டேன்..உள்ளே இருக்கு எடு என்று பாக்கெட் காட்ட அதில் இருந்த வாழை இலையில் கட்டிய பூவை யாமனி எடுத்து அவன் கையில் கொடுக்க அவளை இறக்கி பாதம் சுடாது தன் பாதம் மீது விட்டவன் பூவை அவள் தலையில் சொருகி விட பச்சக் முத்தம் வைத்த மனைவி செயலில் அதிர்ந்தவன்
"ஏய் கோவில்டி
"ஆனாலும் நீங்க என் புருசன் கொடுக்க உரிமை இருக்கா இல்லையா? அவள் கேட்ட தோரணையில் அடுத்த சண்டை வர போகுது அலர்ட் ஆகிடு ஆறுமுகம் என்று சமிக்கை தெரிய
எப்ப வேணும்னாலும் தரலாம் என்று வெள்ளை கொடி பறக்க விட்டு விட்டான்..
"கண்ணா உன் புருசனை டிவோர்ஸ் பண்ண நல்ல வக்கீலா கூட்டிட்டு வந்திருக்கேன் என்று உள்ளே புருசன் கைவளைவில் வந்து நின்ற மகளை பார்த்து நல்ல பெருமாள் கூற
எவன்டா அது என் புருசனை டைவர்ஸ் பண்ண சொல்றது என்று யாமினி துப்பாக்கியை தேட
"என் பொஞ்சாதியை விவகாரத்து பண்ணி கூட்டிட்டு போக எவனுக்குடா தில்லு இருக்கு ஒத்தைக்கு ஒத்தை வாடா என்று என்று அருவாளை நெப்போலியன் தூக்க
டேய் டேய் இருடா உன் மாமா சும்மா சொன்னார் ...
"உன் புருசன்ங்கிறதால பொழைச்சார் என்னையும் அவளையும் பிரிக்க பார்த்தீங்க அவ்வளவு தான் என்று நெப்போலியன் முடிக்க...
"என் துப்பாக்கியை எங்க மாமா என்று உள்ளிருந்து யாமனி குரல் வர நெப்போலியன் திருதிருவென முழிக்க..
என் துப்பாக்கியை எங்க ??
"பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வந்தா அதை தூக்கி சுட வர்ற கோவத்துல சுட்டு தொலைச்சிட்டா என்ன பண்ண நான்தான் ஏய் ஏய் ...
எப்படி என் பொருளை தொடலாம் எங்க அந்த வக்கீலை இப்பவே உங்களை டைவர்ஸ் பண்றேன் ஐ ஹேட் யூ சொன்ன மனைவியை துள்ள துடிக்க தூக்கி கொண்டு போய் அறையில் போட ....
அய்ய என்ன அத்தான் வெளிய கேட்கிற மாதிரி ச்சீ என்று உள்ளிருந்து வரும் இச் மொச் குரலில் ஸ்ரீதேவி குலைய
நீயும் வா நாமளும் போட்டா போட்டி போடலாம் என்று மனைவியை தூக்க போக ஸ்ரீதேவி புருசன் கைக்கு தப்பித்து ஓடி விட்டார்...
எல்லா பெண்ணின் திமிரும் கர்வம் இல்லை ,
வலியை மறைக்க போடும் முகமூடியாக கூட இருக்கலாம்
இனி வலி வேண்டாம் உறவுகள் வேண்டாம் என்று தன்னை காத்து கொள்ள திமிர் என்ற கேடயத்தை கையாளும் பெண்ணாக கூட இருக்கலாம் ...அதை அறிந்த ஒருவன் கிடைத்தால் அந்த திமிரை கூட ரசிப்பான்
அவன் அவளை அறிந்த ஒருவன் அவனுக்கு மட்டுமே அந்த திமிர் கூட அடிபணியும்...
நெப்போலியனின் அல்லிக்கொடியாக படர்ந்து விட்ட அவளையும் அவள் திமிரையும் கடைசி வரை காதலிப்பான்...
நன்றி !
வாழ்க வளமுடன் !!
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்நாடு !!