அலெக்ஸ் 24

Alex24

அலெக்ஸ் 24

24 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!! 

யாமனி தகப்பன் வீட்டுக்கு வந்ததே.. அவன் மீது வரும் இந்த உணர்வும் பரிதவிப்பும் சிலிர்ப்பும் அரிய வகை நோயோ, இல்லை இதுதான் எல்லாரும் கூறும் காதலா என்று அறியத்தான் வந்தது ..

இது காதல் தானா இல்லை பிடித்தமா என்று பிரிவின் மூலம் அறியத்தான் வந்தாள் ... வீம்பாக செள்திரியை பிடித்து வைத்து காதல் தொல்லை செய்தவள் ஆயிற்றே, இதுவும் அதில் ஒன்றோ என்று நினைத்தவள்... செளத்திரியை பிரிந்து இயற்கையாக வாழ பழகி விட்டாள் ஒருவேளை இவன் மீதும் காதல் இல்லை என்றால் பிரிவு என்னை அசைக்காது , அப்படி எந்த நெருடலும் இல்லாது என்னால் வாழ முடியும் என்றால் அவன் பிள்ளையை பெத்து கொடுத்து விட்டு வெளிநாடு போய்விட வேண்டியதுதான் என்று இலகுவாக நினைத்து வந்தவளுக்கு, இந்த பிரிவு ஏங்க வைத்தது , பிரிவு காதலிக்க வைத்தது பிரிவு தேட வைத்தது பிரிவு அவன் பைத்தியம் ஆக்கியே விட்டது ... 

"மசக்கையா இருக்குற பொண்டாட்டிய தனியா விட எனக்கும் மனசு இல்லதான்... ஏன் இத்தனை நாள் என்னை வந்து பார்க்கல, என் மேல இவனுக்கு பிரியமே இல்லையான்னு உன் மனசு கேள்வி கேட்காம இருக்காது என்றவன் அவள் வாயை கழுவி துடைத்து விட்டு தண்ணீரை எடுத்து கையில் கொடுத்தான்..

எல்லா செக்கப்புக்கும் நீங்க ஹாஸ்பிட்டல் வருவீங்க ஐ நோ நான் பார்த்து இருக்கேன் என்ற மனைவியை அதிர்ந்து பார்த்தான் ...அவளோ உதட்டை சுளித்து 

"மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்க சார் டாக்ட்டர் ரூமுக்குள்ள உங்க ஜவ்வாது மணம் வீசும் போதே தெரியும் ... 

"ப்ச் ஆமால்ல , 

"என் டிரைவருக்கு மாசம் மாசம் சுளையா காசு கொடுத்து என்ன வேவு பார்த்தது தெரியும் 

"அம்மாடி அறிவாளி ஆமா உன் டிரைவரை எங்க 

"வேலையை விட்டு தூக்கிட்டேன் 

"ஏன் ?

"பின்ன உங்ககிட்ட காசு வாங்கிட்டு இன்னைக்கு வேவு பார்த்தவன் நாளைக்கு எவன்கிட்டையாவது காசு வாங்கிட்டு என்ன போட்டு தள்ளிட்டா என்ன பண்றது?" தோளை உலுக்கினாள் 

"ஹாஹா பாவம்டி அவர் பிள்ளை குட்டி காரன்"

"என் விஷயத்துல நான் எப்பவும் செல்பிஷ் தான் ...

"அப்போ நான் உன்ன வேவு பார்க்கல ,நீதான் என்ன வேவு பார்த்து இருக்க 

"ம்ம் அப்படியும் சொல்லலாம்...வெள்ளிகிழமை கோவிலுக்கு போகும் போது வளையல் கடை பக்கம் நிப்பீங்க"

"அட ஆமா, அதையும் பார்த்து இருக்கியா ??

"ம்ம் அவன் தேடி தேடி வந்து காதல் செய்ததில் வந்த நேச பித்தம் தானே இது ....அவள் காணவில்லை என்று அவன் அவளை பார்க்க,ஒளிந்து ஒளிந்து நின்றிருக்க... அவள் அத்தனையும் கணக்கு பண்ணி இருக்கிறாள் ஆச்சரியம் தான் வந்தது 

சிலர் கூடவே இருக்கும் போது அதோட அருமை தெரியாது கொடி, ஆனா, விட்டு விலகி இருக்கும் போது தான் அவங்கள நம்ம எந்த அளவுக்கு ஆழமா நேசிச்சு இருக்கோம்னு புரியும் அந்த புரிதல் உனக்கு வந்துட்டாலே எல்லாம் சரியாயிடும்னு நினைச்சு தான் உனக்கு தெரியாம பாரததுடடு போனேன்..  

"அப்போ நான் தான் பிரச்சனை , நான் தான் தப்பு பண்ணுனேன்னு சொல்ல வர்றீங்களா மிஸ்டர் நெப்ஸ் "யாமனி புருவத்தை ஏற்றி இறக்கிய மனைவி உதட்டில் பச்சக் என்று முத்தம் வைத்தவன் 

"பஜாரி பொண்டாட்டி வெளியே வர்றா போல இருக்கே..."

"ஓஓஓ அப்போ சமத்தா பொண்டாட்டி பார்த்து கட்டு போ என்று அவன் அடிக்க போன அவள் கையை பிடித்து இச் வைத்தவன்...

சமத்து பொண்டாட்டி எல்லாம் வேண்டாம் நீயே போதும்டி.... 

"ப்ச் வேண்டாம் வேண்டாம் விடுங்க 

"எடுத்தோம் கவிழ்த்தோம்னு கல்யாணம் தான் கட்டிட்டோம் , அதேபோல பிரிஞ்சிட்டா அப்புறம் சேர எத்தனை வருஷம் ஆகுமோ தெரியாது ...ஆனா, அந்த நரக வாழ்க்கை நான் கண்ணு முன்ன என் அக்கா மூலமாக பார்த்து இருக்கேன்... உன் அப்பாவுக்காக எவ்வளவு அழுது இருப்பான்னு எனக்கு தெரியும்... அதே கஷ்டத்தை நீயும் நானும் அனுபவிச்சிட கூடாதுன்னா, ஒரே ஒரு குட்டி பிரிவு இரண்டு பேருக்கும் நம்ம மேல இருக்கிற காதல உணர வைக்கும்னா அதுக்காக பல்ல கடிச்சுக்கிட்டு இத்தனை மாசம் காத்திருந்ததுல தப்பு இல்லன்னு தோணுச்சு.. மன்னிச்சிடு இந்த மாதிரி சூழ்நிலையில் உன்னை விட்டுட்டு நான் போயிருக்கக் கூடாது," என்று அவள் வீங்கிய கால்களை எடுத்து தன் தொடையில் வைத்து தடவி கொடுத்தான்.. அவன் முன் உச்சி முடியை கோதிவிட தூக்கிய கைகளை கடினப்பட்டு இறுக்கிக் கொண்டாள் ...

அவன் வாயைத் திறந்து மனதை திறந்து சொல்லத் துணிந்து விட்டான் ஆனால் அவளுக்கு துணிவில்லை உன்னை நான் காதலிக்கிறேன் என்று கத்தி சொன்னால் எங்கே அவள் இத்தனை நாள் கட்டி வைத்திருந்த திமிர் என்னும் மாடமாளிகை இடிந்து கீழே விழுந்து விடுமோ என்று பயம்..

ஆனால் அவளும் சொல்லும் இரவு இன்று என தெரியாதே .. மிகுந்த சந்தோசத்தில் கணவன் நெஞ்சில் சாய்ந்து யாமினி 

உங்களை காதலிக்கிறேன்னு சொல்ல போற நாள் ரொம்ப ஸ்பெசலா இருக்கணும் அந்த நாளை நாம ரெண்டு பேரும் மறக்க கூடாது மாமா என்று தூங்கி கொண்டிருந்த நெப்போலியன் முகத்தை பார்த்தாள்...

ப்ச் வாழ்க்கை முழுக்க உன் புருசனை பாக்கலாம் படுத்து தூங்குடி நீ இல்லாம நான் நல்லா தூங்கவே இல்லை நீயும் எப்படியும் தூங்கி இருக்க மாட்ட தூங்கு என்று கண்ணை மூடி கொண்டே அவளை இழுத்து படுக்க வைக்க ..

இத்தனை வருடம் அடக்கி வைத்த பல உணர்வு குவியலில் தூங்காதே முழித்து கிடந்தாள்

எளிதாக விவாகரத்து என்று தாயும் தந்தையும் பிரிந்து விட்டனர் பருவ வயதில் வலிகளை கூட பரிமாற ஆள் இல்லாது பல்லை கடித்த நியாபகம் அப்பாவுக்கு வலிக்கும் என்று வெளியே உணர்வுகளை காட்டாது அலைந்தது இவன் தானே நேசிப்பான் என்று செளத்ரியை சுற்றி வர அவன் தந்த ஏமாற்றம்.... அத்தனைக்கும் மருந்தாக வந்த மாமனை பார்த்தவள் உடலில் ஏதோ ரத்தம் தாறுமாறாக ஓட ஆரம்பிக்க 

ம்மா ஆஆஆஆஆஆஆ தீடீரென அவள் உடல் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது ... தன் மீது கிடந்த அவளின் அசாதாரண அசைவில் பதறி முழித்த நெப்போலியன்.. துடித்து போனான் நுரை பொங்க கண்கள் சொருகி துள்ளிய மனைவி கண்டு ... 

"அய்யோ அக்கா ஓடியா என்ன நெப்போலியன் அலறலில் நல்லபெருமாள், ஸ்ரீதேவி இறங்கி ஓடி வர ..

கண்கள் சொருகிக்கொண்டு படுக்கையில் வெட்டி வெட்டி கோழி போல துடித்துக் கொண்டு இருந்த மனைவியை தன் நெஞ்சோடு பிடித்து வைத்துக்கொண்டு கொடி என்று அவன் அலறிய அலறல் கொஞ்சமாக நஞ்சமா?

யாமினியை தொடையோடு தூக்கிக் கொண்டவன் மருத்துவமனை வரும் வரை அவளை விடவே இல்லை .... பெண் மருத்துவர் சொன்ன செய்தியை கேட்டு மூவரும் இடிந்து போய் சுயநினைவு இல்லாமல் கிடந்த யாமினியை பார்த்துக் கொண்டிருந்தனர்..

பல வருஷமா அவளுக்குள்ள இருந்த அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் இன்னைக்கு வெடிச்சு சிதறிடிச்சு , முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றோம் யாரையாவது ஒருத்தர காப்பாத்த முடியுதான்னு பார்ப்போம் என்று கையை விரித்த மருத்துவர் முன்னே கைகூப்பி நின்ற மூவரையும் பார்க்க பரிதாபமாக தான் இருந்தது..

"எப்படியாவது என் பொண்ண காப்பாத்தி கொடுங்க டாக்டர் என்று நல்லபெருமாள் தன் வயது மறந்து கை கூப்பி நிற்க 

"என் புள்ளையை பறி கொடுக்கவா, நான் இடையில் வந்து சேர்ந்தேன் .... கடவுளே!!! என் உசுர எடுத்துக்கிட்டு என் புள்ள உசுர கொடு என்று ஸ்ரீதேவி அழ ..

"எனக்கு அவ போதும் ஒரு தகப்பனா நான் இத சொல்லக்கூடாது ஆனா எனக்கு என் பொண்டாட்டி போதும் டாக்டரம்மா, அவளை மட்டும் எப்படியாவது காப்பாத்தி கொடுத்துடுங்க என்றவன் முதல்முறையாக தன் மனைவிக்காக அழுதானோ.. அவன் கடினமான முகத்தில் இருந்து ஒரு துளி கண்ணீர் வந்து, கீழே படுத்து கிடந்த யாமினி உதட்டில் விழ .. தளர்ந்துபோன அவள் கண்கள் திறந்து பார்த்தது, தன்னை சுற்றி இருந்த குடும்பத்தை கண்டு மெலிதாக சிரித்தாள்.. தனக்காக அழ மூன்று பேரை சம்பாதித்துவிட்டாள்... 

அம்மாடி

"கண்ணா 

"கொடி என்று மூவரும் அவளை பரிதவிக்க பார்க்க..

யாமனியோ நெப்போலியனை கைநீட்டி அருகே வர அழைத்தாள்

நெப்போலியன் குழந்தை போல ஓடிவந்து அவள் முகத்தோடு முகம் வைத்து குனிந்து நிற்க..

மறுபடியும் திரும்பி வருவேனான்னு தெரியாது"

"அப்படி எல்லாம் சொல்லாதடி, என் அழகு குட்டி என் செல்ல ராட்சசி , உனக்கு ஒன்னும் ஆகாது,.. திமிர் பிடிச்ச ராட்சசியாவே திரும்பி வந்துடு... 

"ம்ம், இப்பதான் வாழ ஆசைப்பட்டேன் இதுதான் வாழ்க்கைன்னு புரிஞ்சுகிட்டு, உங்க கூட கைகோர்த்து தோள் சாய்ஞ்சு வாழணும்னு நினைச்சுக்கிட்டு உங்க நெஞ்சில சாஞ்சேன்.. ஆனா நான் நிறைய பாவம் செஞ்சுருக்கேன் போல இருக்கு, அதனால தான் எனக்கு எதுவுமே கிடைக்காதுன்னு கடவுள் எழுதி வச்சிருக்கான் போல... அன்னைக்கு அம்மா இல்லாத ஒரு வாழ்க்கை.. இன்னைக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாம சாகப் போறேன் என்றவள் உதட்டில் கை வைத்து மூடிய நெப்போலியன் ...

வாழ்ந்தா சேர்ந்து வாழ்வோம் இல்ல கல்லறையில பக்கத்துல சேர்ந்து படுத்துக்குவோம் என்றவன் கையை இறுக்கி பிடித்துக் கொண்டவள் கை குளிர்ந்து கிடந்தது ..

இவனோடு வாழும் பாக்கியம் இல்லாமல் போய்விடுமோ என்றவள் கண்ணில் கண்ணீர் முளைக்க , நெப்போலியன் சட்டென்று அவள் கண்ணை துடைத்து விட்டவன் .. 

இந்த திமிர் பிடிச்ச ராட்சசி தான் எனக்கு வேணும் உன் அழகே உன் திமிர்தான், அந்த திமிரோட என்கிட்ட வா , நீ அழுது என்னையும் உடைச்சுடாத , உன் கண்ணீரை பார்க்கக்கூடிய சக்தி எனக்கு இல்லடி எனக்கு நீ போதும் என்றவன் கழுத்தை இழுத்துப் பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தவள்

ஐ லவ் யூ நெப்ஸ் என்று வரண்ட இதழில் வலி புன்னகையோடு கூற ...

மறுபடியும் நான் திரும்பி வர கூடாதுன்னு வேண்டிக்கோங்க என்றவள் உதட்டை வளைத்து சிரித்து கொண்டே 

மறுபடி வந்தேன் உங்களை காதல் பண்ணியே டார்ச்சர் பண்ணுவேன்..

காத்திருக்கேன் உன் காதல் இம்சைக்கு ஓடிவா என்ற அவனை விட்டு அவளுடைய தேகம் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணாடி அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டது...

இம்சிக்க பிறந்தவள் ஆயிற்றே அவ்வளவு எளிதில் போய்விடுவாளா? 

காதல் இம்சை செய்ய மீண்டு வந்தாள் நெப்போலியன் அல்லிக்கொடி!!